Sunday, October 9, 2011

தலைவரிடம் "தலைமையை" அப்கரித்துவிட்ட "தனயன்".

திமுக என்ற கழகம் தனது "கட்சி கட்டுப்பாடு " என்ற சொற்களுக்காக அதிகமாகவே "பேசப்படும்" கட்சி. அந்த கட்சிக்குள் 'சமீப" காலமாக "குடும்பத்தின்" ஆதிக்கத்தை கொண்டு வந்து "கட்சி தொண்டனின்" மரியாதையை "கலைத்துக் கொண்டு" இருக்கிறார்கள் என்பதுதான் "கழகத்தொண்டர்களின்" புலம்பல். அப்படி நேரத்தில் "பரிதி" என்ற ஒரு பொறுப்புள்ள "தொண்டனின்" அல்லது "தலிவனின்" மரியாதை "தளபதி" என்று அழைக்கப்படும் தலைவரின் தனயனாலேயே அதாவது ஸ்டாலினாலேயே, 'பறிக்கப்பட்டுள்ளது" என்பது பகிரங்கமாக வெளியே வந்துவிட்டது.


ஸ்டாலினின் "சமீபத்திய" நடவடிக்கை எல்லாமே இப்படித்தானே இருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள். அதாவது "வட சென்னை" மாவட்ட செயலாளராக இருந்த "வி.எஸ்.பாபுவை" அவமானப்படுத்தி "அவர் பதிவியை" உதறி செல்ல காரணமாக இருந்ததும் ஸ்டாலின்தானே என்கிறார்கள். அதையே "சமூகம்" வேறு திசையில் சிந்தித்துக் கொண்டு இருக்கிறதே என்று உடன்பிறப்புக்கள் கேட்கும்போது "அதிர்ச்சியாக" இருக்கிறது. இப்போது "பரிதிக்கும்" அதே நிலை என்றால் எப்படி 'சகித்துகொள்வது" என்பதே உடன்பிறப்புகளில் பலரது "புலம்பல்". இந்த பரிதியின் "நிகழ்வு" ஒன்றை தெளிவுபடுத்தி உள்ளது. அதாவது "தலைவர் கலைஞருக்கு " தலைமை பொறுப்பில் "அதிகாரம்" இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதலில் "எழும்போர்ரில் மூன்று பேரை" தலிவர் சொல்லி, போது செயலாளர் "இடை நீக்கம்" செய்தார். இப்போது அவர்களை "மீண்டும்" செக்க "தலைவர்" ஒப்புதல் பெறப்படவில்லை.. போது செயல்லாரையும் 'அணுக வில்லை". ஸ்டாலின் "தன் விருப்பபடி" அறிவிக்கிறார் என்றால் "யாருக்கு" அதிகாரம் இருக்கிறது? இந்த கேள்வி கழகத்தினர் மத்தியில் அலை மோதுகிறது. "பேராசிரியர்" ஒரு பொம்மையா? என்றும் கேள்வி கேட்கிறார்கள். "என்னை ஏன்" ஸ்டாலின் சந்தித்தித்து ஏன் "கருத்தை" கேட்பதை "தவிர்த்தார்" என்று பரிதி கேட்பதில் "நியாயம்" இருக்கிறது என்கிறார்கள். இதுவரை "கழக் வரலாற்றில்" நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களை, "திரும்ப" எடுக்கும் போது அவர்கள் "வருந்தினார்கள்" என்று போடுவீர்களே? இப்போது எண்ண நடந்துவிட்டது? அவர்களுக்கு " நிபந்தனையற்ற மன்னிப்பு" வ்ழங்கி இருக்கிறீர்கள்? என்றும் கேட்கிறார்கள்.

ஏற்கனவே "பொதுக்குழு" கூட்டத்தில் "தளபதியின்" மரிமுக "காய் நகர்த்தள்கை" தலைவர் "சாமர்த்தியமாக" தவிர்த்து விட்டார். அதன்மூலம் "பல மாவட்ட செயலாளர்கள்" காப்பாற்றப்பட்டனர். இப்[போது "வட சென்னை" மாவட்ட செயலளராக 'சேகரை" நியமிக்கும்போதும், "பரிதியிடமோ" "பெராசிரியரிடமோ" ஒரு வார்த்தை கூட கேட்காதது ஏன் என்றும் கேட்கிறார்கள். எபப்டியோ, "கனிமொழி" வெளியே வருவதற்குள், "கழகத்தலைமை" பொறுப்பை முழுமையாக "தலைவர்" கையிலிருந்து "தளபதி" அப்ரித்து விடுவார் போலிருக்கிறதே? என்பதே கழக உடன் பிறப்புகளுக்கு இப்போதுள்ள "கவலை".

"தயா கும்பலுக்குள்" குத்து வெட்டா?

திமுக வில் நடக்கும் "உட்பூசல்" பற்றி, "பரிதி" எகிறி "கட்சியின்" முக்கிய "துணைப் பொதுச்செயலாளர்" பொறுப்பை "தூக்கி எறிந்தது" பற்றி வெளியிடாத எடே இல்லை என்பது தமிழ்நாற்ற்டு நிலைமை. ஆனால் நடந்த அந்த "கதையை" மு.க.ஸ்டாலினுக்கும், பரிதிக்கும் நடக்கும் "மோதல்" என்று வர்ணிக்கும் ஏடுகள், அதை " அதற்கும் மேல்" போய் தேட "தயாரில்லை". ஆனால் நாம் தேடலாம். "பரிதி இளம்வழுதி" தொடக்கத்திலேயே "முரசொலி மாறனின்" விசுவாசி என்பதும், பிறகு அதுவே "தயாநிதி மாறனின்" விசவாசத்திற்கு அவரி இழுத்து சென்றது என்பதும் டேஹ்ரிய வேண்டிய முதல் செய்திகள். தலைவர் கலைஞரை "அப்பா", "அப்பா" என்று அழைத்து வந்த பரிதியே "இத்தனை நாள்" கழித்து "கழகத்தின்" முக்கிய பொறுப்பை தூக்கி எறிந்தார் என்பது "சாதாரண" செய்தி அல்ல.


அந்த அளவுக்கு அவரை இழுத்து சென்ற "சம்பவங்கள்" என்னென என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்திகள். உள்ளாட்சி தேர்தலில், பரிதி "குறைந்த பட்சம்" தஹ்னது தொகுதியான "எழும்பூர்" பகுதியில் "யார், யாருக்கு" மாநகராட்சி உறுப்பினர் வேட்பாளராக நிற்பதற்கான "கழக" வேட்பாளர் தகுதியை தரவேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் உண்டா? இல்லையா? தன்னையும், கழகத்தையும் மதிக்காமல், தனது முன்னால் வாகன ஓட்டுனரே இருந்தாலும், அவரை நிறுத்த வேண்டாம் என்று கூறியது தவறா? அடஹியும் திர்ஹாண்டி அந்த மனிதர், "தளபதியை" சந்தித்து வேட்பாளர் தகுதியை பேரா முயறார். அப்போது "முப்பெரும் விழா" நடந்தது. வழக்கம் போல பரிதி "அழகாக" பேசினார். தலைவர் அருகில் "கூப்பிட்டு" பாராட்டினார். எப்படி இருக்கே என்று தலைவர் வினவ, " என்னத்த சொல்றது அப்பா" என்று பரிதி இழுத்தார். சொல்லு என்று தலைவர் கூறியவுடன், "தான் எழுதிய கடிதத்தை"
கழகத் தலைமை கண்டுகொள்ளவில்லை என்று பரிதி புகார் வைத்தார். அதில் கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீது "நடவடிக்கை" கோரி இருந்ததை குறிப்பிட்டார்.

இது தலைவருக்கு "உரைத்து விட்டது". உடனே தலைமை கழகத்திற்கு சென்று, " பரிதி கடிதத்தை" எடுத்துவா என்று டி.கே.எஸ். இளங்கோவனிடம் உத்தரவிட்டார். அவரும் கொண்டு வந்தார். அதில் உள்ள "மூன்று போரையும்" உடனடியாக "இடைநீக்கம்" செய்து "முரசொலியில்" அறிவிக்க போதுசெயலாலரிடம் பணித்தார். அதற்கு பிறகு, "சம்பந்தப்பட்ட" மூவரும் "தளபதியை" தனைகளுக்கு வேண்டியவர்கள் மூலம் சந்தித்து "பரிதி" அப்ற்றி இல்லாததையும் பொல்லாததையும் பொட்டுக் கொடுத்தனர். அந்த பொட்டுக் கொடுத்த பட்டியலில், "ஜின்னா" முக்கிய பங்கு வ்கிக்கிறார். மாநகராட்சி உறுப்பினர் வேட்பாளர் கேட்டு வந்தவரிடம், உனக்குத்தான் "ஜின்னா" இருக்கிறாரே அவரிடம் போய் கேட்டுக் கொள் என்று பரிதி கூறியது உண்மைதான். ஆனால் அதுவே, "தளபதி" இடம் போய் பெற்றுக் கொள் என்று மருத்துவமனையில் இருந்த ஸ்டாலினை கூறியதாக ஸ்டாலினிடம் சின்ன பொட்டுக் கொடுத்துவிட்டார்.

தளபதி ஸ்டாலினுக்கு " மண்டைக் கணம்" ஏறிவிட்டது என்கிறார்கள். அவர் உடனே "கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்ப்பட்ட மூவரையும்" மீண்டும் கழகத்தில் சேர்த்துக் கொள்ள "உத்தரவிட்டு" முரசொலியில் "வெளியிட" வைத்து விட்டார். இது முறையாக "பொதுசெயலாளர்" மூலம் வந்ததா? அல்லது "தலைவரின்" கவனத்துக்கு சென்று மீண்டும் வந்ததா? என்று கேள்வி கேட்க முடியாத சூழல் கழகத்தில் இப்போது நிலவி வருகிறது. அதனால் ச்டநினே "எல்லாம்" என்ற அளவில் "பரிதி" ஏன் பொறுப்பில் இருக்க வேண்டும்? அதுதவிர "பரிதி" தரப்பு இன்னமும் "வேதனையுட்ன்" சில செய்திகளை சொல்லுகிறார்கள். "துணைப் போறது செயலளாராக" இருந்த 'பரிதி" இன்று "பொருளாளராக" இருக்கும் ஸ்டாலினை சந்திக்க "மூன்று நாட்கள்" போய் வாசலில் "காத்திருந்தும்" சந்திக்க ஸ்டாலின் "தயாரில்லை" என்ற நிலைமை வந்த பிற்பாடுதான் தனது "பொறுப்பை " பரிதி தொஊக்கி எறிந்திருக்கிறார்.

இது பரிதிக்கு "மட்டும்" ஏற்பட்ட வமானம் அல்ல. கழகத்தின் "கட்டுப்பாடு விதிகளுக்கு" ஏற்பட்ட அவமானம். தளபதி ஏன் பரிதியை கூப்பிட்டு கேட்கவில்லை? தளபதி ஏன் "காத்திருந்த" பரிதியை "காணக்கூட" தயாராயில்லை. கழகம் "தளபதியின்" சொந்த "சொத்தா?". பரிதிக்கு 'சரியான" பொறுப்பு கொடுக்கப்படவில்லை என்று "எத்றிக் கட்சி" காட்சி ஊடகம் வரை கொண்டு செல்லப்பட்ட "விமர்சனத்திற்கு" பிறகுதானே தலைவர் பரிதிக்கு இந்த "பொறுப்பை" கொடுத்து அலங்காரம் பார்த்தார். அது ஒரு "சமூக" பியார்ச்ச்னையாகவும் ஆகிவிடாதா? அதன்மூலம் கழக்த்திற்கு "அவப்பெயர்" கூடாதா? திமுகவில் சென்னையில் ஏற்கனவே "தலித்" சமூகத்தை சேர்ந்த "ஊழியர்கள்தானே" அதிகமாக இருக்கின்றனர்? வர்கள் மத்தியில் இது "எதிர்ப்பை" கொடுக்காதா?

தயா கும்பலை சேர்ந்தவர்தானே "தளபதியும் ?".அதே "குழுவை" சேர்ந்த பரிதியையே "மதிக்காமல்" இருக்கிறாரே? இது கழகத்திற்குள் "தயாநிதி குழுவை" அவளு இழக்க செய்யாதா? இப்படி அக்ழகத்திற்குள் "பல" கேள்விகள் கேட்கப்பட "தொடங்கிவிட்டன".

ஒரே போடுபோட்டார் "ஜெ".. ஆடிப்போகுமா டில்லி?

இந்திய நாட்டின் வெளிவிவகார செயலாளர் "ரஞ்சன் மித்தாய்" சென்னை வந்தார். தனது "இலங்கை பயணத்திற்கு" முன்பு "தமிழக முதல்வரிடம்" அதுபற்றி "ஒரு கலந்துரையாடல்" செய்து விட்டு செல்ல வேண்டும் எனபது "தொடர்ந்து" கடைப்பிடிக்கப்படும் "ஒரு வழக்கமாக" இருப்பதாலோ, அல்லது இப்போது "இந்தியப் பிரதமர்" தமிழக முதல்வரிடம் "தனது கவுரவமிக்க " திட்டமான "கூடங்குளம் அணு உலை" விவகாரத்தில், "வசமாக" மக்கள் எதிர்ப்பு என்ற "ஆயுதத்தின் முன்னால்", சிக்கிக் கொண்டிருக்கிறார் என்பதாலோ, முதல்வர் ஜெ யை சந்தித்தார்.

ஏற்கனவே "தனது சட்டமன்ற தீர்மானத்தை" அதாவது " இலங்கை அரசு மீது அனைத்து நாட்டு விசாரணை நடத்த அய்.நா.வை வலியுறுத்தும்படி" மத்திய அரசை கேட்டுக் கொண்ட "தீர்மானத்ததை" இதே பிரதமர் மன்மோகன் "நேரில் தானே சென்று" எடுத்து சொல்லியும் "கண்டுகொள்ளவே" இல்லை என்ற "கோபத்தில்" இருக்கும் தமிழக முதல்வர் "இந்த வாய்ப்பை" பயன்படுத்தி கொள்ள மாட்டாரா?. அது மட்டுமின்றி, "இலங்கை அரசு மீது பொருளாதார தடை" வித்திக்க இந்திய அரசை வலியுறுத்தி மன்மோகனிடம் "தான்" கேட்டுக் கொண்டும்கூட, "அதை மீறி " இலங்கைக்கு "கப்பல்" விடும் மன்மோகனை "ஒரு கை" பார்த்து விட எண்ண மாட்டாரா? அது மட்டுமின்றி, சென்ற முறை அந்த "சிவசங்கர மேனன்" இலங்கை செல்லும்போது, "தான் கேட்ட" எத்தனை தமிழர்களை "முகாம்களிலிருந்து" வெளியே அனுப்பியுள்ளனர் என்ற "பட்டியலை" இன்னமும் "தர வக்கில்லாத" இந்திய அரசை "நியாயமாக" பிடிக்க "சந்தர்ப்பம்" கிடைத்தால் விடுவாரா ஜெயலலிதா?

அதையும் தாண்டி, "தமிழக மீனவர்கள்" கொல்லப்படுவதையும், அடிக்கப்படுவதையும், விரட்டப்படுவதையும், "தொடர்ந்து" டில்லிக்காரர்களிடம் "சொல்லிவந்தும்கூட" செவி மடுக்காத நிலையில் டில்லி இருந்தால், அதை "கைகட்டி வாய் பொத்தி" பார்ஹ்துக் கொண்டு இருந்துவிட்டு, "பிரதமருக்கு கடிதம்" எழுத "அடுத்த தாள்" தேடும் "கருணாநிதியா" ஜெயலலிதா? அதனால்தான் " ரஞ்சன் மித்தாயிடம்" சூடாக "நியாயமான" கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதாவது "தமிழக மீனவர்களை கொள்ளும் இலங்கை கடல்படை" இந்திய எல்லைகளை மீறும் "பாகிஸ்த்தான் படையின்" அத்துமீறல்களுக்கு "ஒப்பானது" என்று "இந்தியா சார்பாக இலங்கையை எச்சரியுங்கள்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த "நேர்மை", இந்த "தைரியம்" இந்த "உண்மை" இதுவரை எந்த "முதல்வருக்காவது" வந்திருக்கிறதா? ஒரு மாநில முதல்வர் "மத்திய அரசின்" வெளிவிவகார கொள்கைகளில் "எப்படி" குறுக்கே பேசலாம் என்று "அடிமைத்தனமாக அமைதி காப்பதுதானே" இன்றுவரை இந்தியாவில் "தொடர்கிறது?".


சுட்டுக் கொள்ளப்படும், அடித்து விரட்டப்படும், "தமிழக மீனவர்களை, இந்திய குடிமக்கள்" என்று காணவேண்டும் என்ற "அறிவுரையையும்" இடையே கூரிஊஇல்லார் ஜெயலலிதா. இந்த "வெளிப்படையான நேர்மை" அல்லது "துணிவு" பாரம்பரிய அரசியல்வாதியும், மாநில சுயாட்சியின் "கதாநாயகனுமான" கருணாநிதிக்கு "வரவில்லையே" ஏன்?முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகளை "அடையாளம்" காண்பதற்காகத்தான் இந்த "நிகழ்வும்" நடந்ததோ? இந்திய மீனவர்களை "மிரட்டும் அல்லது அடிக்கும்" இலங்கை கடல்படை, "ஒரு ஆக்கிரமிப்பாளறது" வேலையை செய்கிறது என்று இந்திய அரசு எடுத்து கொள்ளவேண்டும் என்றும் அவரிடம் கூறியுள்ளார். இதுவே "போதும்" மகிந்தாவிற்கு அல்ல, அல்ல, மன்மோகனுக்கு என்று நாம் எண்ணவேண்டி உள்ளது.

இதற்கெல்லாம் இந்திய அரசும், இலங்கை அரசும் எண்ண பதில் சொல்வார்கள் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, " நமது மீனவர்களை துரத்துவதும் அடிப்பதும், இலங்கை மீனவர்கள் என்றால் அவர்களது நடமாட்டத்தை அறியாமலா இருகஈரார்கள் இலங்கை கடல்படை?" என்ற கேள்வியை கேட்டு அதன்மூலம் "இலங்கை கடல்படையின் தூண்டுதலில்தான் அந்த விரட்டல்கள்" நடக்கின்றன என்பதை எடுத்து சொல்லியுள்ளார். அதையும் தாண்டி, " சிறிய பாடுகளில் வந்து இலங்கையர் தாக்குகிறார்கள்" என்று நமது ராமேச்வரரம் மீனவர்கள் கூறும்போது, அந்த "சிறிய படகுகள் மீன்பிடிக்க நிற்கும அளவு அதிக டீசலை போட்டு வரமுடியாது" என்ற வாதத்தையும் முன்வைத்துள்ளார். அதாவது அவை மீன்பிடிக்க வந்த படகுகள் அல்ல என்ப்ர "வாதத்தையும்" அதனால் அவை "தாகும் எண்ணத்தோடு" வந்தவை என்ற விவாதத்தையும் அந்த சந்திப்பில் முன்வைத்துள்ளார்.

இந்த அளவுக்கு " ஒரு பிரச்சனையின்" ஆழத்தை ப்கவனம் எடுத்து புரிந்து கொண்டு, "அனைத்து நாட்டு" அளவில் இரு நாடுகளுக்குள் உள்ள "சர்ச்ச்சையில்" வாதங்களை முன்வைத்த முதல்வரை நாம் இதுவரை "கண்டதில்லை". அரசியல் என்றால் எண்ண என்றும், நேர்மையான அரசியல் எது என்றும், "இரு நட்பு நாடுகள்" என்ற டில்லியின் :கிளிப்பிள்ளை" சொற்களுக்கு "பதிலடி" எப்படி தரவேண்டும் என்றும், "மாநில சயாட்சி" என்பது வாய் கிழிய "கத்துவது" அல்ல என்றும், அது "நேர்மையான மாநில உரிமைகளை" விட்டுக் கொடுக்காமல் பேசுவது என்றும், "தமிழகமீனவர்களை" காப்பாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத கருணாநிதியால் "இந்த ஜெயலலிதாவின்" செயல்பாடுகளிளிருந்தாவது "கற்றுக் கொள்ள" முடியுமா? வெட்கம், மானம் இல்லாமல் இனியும் "அரசியல்" செய்ய "தயாராக" இருப்பாரா?

ஒரு மாநில மக்களின் உயிர் என்ற உண்மையான "உரிமைக்காக" இப்படி மத்திய அரசின் "அயோக்கியத்தனமான" மக்கள் விரோத, மீனவர் விரோத "போக்கை" தோலுரித்து "காட்டிய" இந்த முதல்வரின் சொற்கள், டில்லிகாரர்களை "கதிகலங்க" செய்திருக்கும் அல்லவா? இத்தோடு ஜெயலலிதா வர்கள் இன்னொன்றையும் "சேர்த்து" பேசவேண்டும். அதுதான்"மீனவர்களுக்கு" மீன் பிடிக்க எல்லை கிடையாது எனபது. அது மட்டுமின்றி, "இந்திய- இலங்கை இடையே உள்ள க்டலில்," எல்லை இருக்க முடியாது". அந்த அளவு "குறுகிய" கடல் அது. அது மட்டுமின்றி "முப்பது" ஆண்டுகளுக்கு முன்பு "இருபுறமுள்ள மீனவர்களும்" பரஸ்பரம் மீன் பிடித்து வந்த "கடல்" அது. இத்தகைய "உண்மையை" நோக்கி நமது "பயணம்" செல்லட்டும்.