Saturday, October 8, 2011

வீடு கட்டுரீங்களா? இல்லையாடா?

இந்திய அரசு இலங்கையின் "வடக்கு-கிழக்கு' மாகாணங்களில் 50000 வீடுகளை கட்டித்தருகிறோம் என்று அறிவித்தார்கள்.அதற்காக வடக்கு மாகாணங்களில் "வவுனியா, யாழ்ப்பாணம்,மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு " ஆகிய மாவட்டங்களிலும், முதலில் "ஆயிரம்" வீடுகளை கட்டித் தருவோம் என்று கூறினர். ஆனால் அதற்கு "மகிந்தா" அரசு "மறைமுக தடை" போடுவது போல "தங்கள்" மூலம்தான் கட்டவேண்டும் என்று கூறிவந்தது. அதுவே அந்த வீடு கட்டும் வேலையை முடக்கி விட்டது. அதற்குள், வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார்,முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய வடக்கு மாவட்டங்களிலும், "திருகோணமலை" போன்ற கிழக்கு மாவட்டங்களிலும் அங்குள்ள "ஆரசு ஏஜெண்டுகள்" ஒவ்வொரு மாவட்டத்திலும் "ஆயிரம்" வீடுகள் கட்டுவதற்கான "நிலங்களை" அடையாளம் கண்டு, வீடு காட்டவரும் நிறுவனங்களிடம் காட்டிவிட்டனர். அந்த இடங்கள் "காடுகளாக" இருந்தன.

இப்போது இன்னொரு புதிய "ஆரசு சார நிறுவனம்" மூலம் இந்திய அரசு, "மன்னர் மாவட்டத்தில்" முசிறி பகுதியில், "நூறு" வீடுகளை கட்டி முடித்து விட்டது. அவை "ஐநூற்று இருபது" சதுர அடிகளை கொண்ட வீடுகளாக இருக்கின்றன. அவற்றில் "இரண்டு அறைகள்", ஒரு சமையல் அறை, ஒரு குளியலறை, ஒரு முன் தளம், ஆகியவை கொண்ட வீடுகளாக இருக்கின்றன. அதேபோல, "கிளிநொச்சி" மாவட்டத்திலும் "நூறு" வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை கட்டுவதற்கு, "தமிழ்நாட்டு பொறியியலாளர்கள்" அங்கு சென்றுள்ளனர். அவர்களை அங்குள்ள "வீடுகள்" கட்டும் இடம் அருகே காண முடிகிறது. இதுதான் இந்திய அரசு "கொடுத்த" வாக்குறுதியின் "செயல்பாடா? " என்று ஈழ மக்கள் "அதிர்ச்சி' அடைந்துள்ளனர்.