Tuesday, October 4, 2011

மின்தடை யார் ஆட்சியில் "அதிகம்" என்று "சண்டை" போடுகிறார்களா?

கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவிற்கு இன்று "பதில்" கொடுத்துள்ளார். பதில் முழுக்க தங்களது திமுக ஆட்சியில் மின்தடை பற்றி செல்வி.ஜெயலலிதா "என்னவெல்லாம்" கூறினார் எனப்தைப்பற்றியே இருக்கிறது. முரசொலியில் "நீட்டி" முழக்கியுள்ளார். அதில் "கருணாநிதியும், ஆற்காடு வீராசாமியும்" எப்படியெல்லாம் "கையாலதார்களாக" இருந்தார்கள் என்று ஜெயலலிதா கொர்ரியுல்லத்தை சுட்டிக் காட்டியுள்ளார். உட்கார்ந்துகொண்டு, "டேஹ்டிப்பிடித்து" ஜெயலிதா சொன்னதையெல்லாம் "வரிச்ப்படுத்தி" நாள் தவறாமல் அந்த "செய்திகளை" மேற்கோள் காட்டி " கேள்வி கேட்பதில்" கருணாநிதிக்கு இணை கருணாநிதிதான்.

அவையெல்லாம் உண்மைதான். ஆனால் அதன்மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு "மின்தடை" குறையுமா? மின்தடை நீங்குமா? இதுதான் இப்போது கேள்வி. மின்வாரிய அதிகாரிகள் "முதல்வருக்கு" உண்மை தகவல்களை கொடுக்கிறார்களா? அதுவும் யாருக்கும் தெரியாது. ஏன் என்றால் கருணாநிதி காலத்தில்" ஓராண்டு மின்துறை தலிவராக இருந்த "வர்மா" என்பவர்த்ஜான் இப்போதும் இருக்கிறார். அவருக்கும், இப்போதைய மின்துறை அமைச்சர் "நத்தம் விஸ்வநாதனுக்கும்: அப்படி ஒரு நெருக்கம் என்கிறார்கள். அதாவது நத்தம் உடன் அதே அதிகாரி முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் ஒரு வருடம் இதே துறையில் "குப்பை" கொட்டியவராம். எபப்டியோ " சேர்வாருடன்தானே சேர்வார் சேர்வர்".

நமக்கு கிடைத்த தகவல்கள்படி, " காற்றாலை மின் உற்பத்தி" 3000 கிலோவாட் மற்றும் 4000 கிலோவாட் ௦௦௦அளவுக்கு "உற்பத்தி" ஆகும்போது, அதை "தமிழ்நாடு மின்வாரியம்" வாங்கி கொள்ள தாயாராயில்லை. ஆதாவது "தமிழ்நாடு மின்வாரியம்" 2000 ௦ கிலோவாட் மின்சாரத்தை மட்டும்தான் "சேமித்துவைக்கமுடியும்" என்று அப்போது கூறியிருந்தது. இது இன்றைய முதல்வர் "காதுக்கு" சென்றதா என்பது நமக்கு தெரியாது. இப்போது முதல்வர் தமிழ்நாட்டில் "காற்றாலை மின் உற்பத்தி" குறைவாகி உள்ளது என்று ஒரு "கணக்கு" காட்டுவதனால் நாம் இதை கூறவேண்டியுள்ளது.

வெளிச்சந்தைகளில் "மின்சாரம்" வாங்கப் போகிறோம் என்று முதல்வர் கூறியுள்ளார். ஏற்கனவே "தமிழ்ஜ்நாடு மின்வாரியம்" வெளிச் சந்தைகளில் "வாங்கிய' மின்சாரத்திற்கு 10000 கோடி ரூபாய் "கடன்" வைத்துள்ளது என்பது முதல்வருக்கு தெரியுமா ந நமக்கு தெரியாது. ஆகவே "அதிகாரிகள்" எழுதிக் கொடுப்பதை படிப்பது மாட்டும் போதாது. அதில் உண்மை "எவ்வளவு தூரம்" இருக்கிறது என்று "ஆய்வு" செய்ய ஒரு "வழிமுறை" இருக்க வேண்டும்.

பாலுக்கு காவலனும், பூனைக்கு தோழனும் சேர்ந்தால்??

"வறுமையின் எல்லைக்கோடு" எது என்ற "மதிப்பீட்டு" பிரச்சனையில், மன்மோகன் கும்பலைச் சேர்ந்த "திட்டக்குழு துனைத்தலைவர" அலுவாலியாவும், சோனியா கும்பலைச் சேர்ந்த "அருணா ராய், ஹர்ஷ் மந்திர், சக்சேனா ஆகியோரும் "குடுமி பிடிச் சண்டை" பொட்டுக் கொண்டு நின்றதையும், அதில் "மன்மோகன் சோனியா கட்டளைப்படி, அலுவாலியாவை" விட்டு விரட்டியதையும் "மட்டுமே"' பார்த்துவிட்டு, சோனியா மன்மோகனை "வென்றார்" என்று நாம் ''தப்புக் கணக்கு" போட்டுவிட்டோமா? இப்போது' ''மன்மோகன் உத்தரவுப்படி" மான்டெக்சிங் அலுவாலியா என்ற "முன்னாள் அய்.எம்.எப். அதிகாரி" தான்'' திட்டக்குழுதுனைத்தலைவராக இருந்தால்தான் " தொடர்ந்து"' உலக வங்கிக்கும், அனைத்து நாட்டு நிதியத்திற்கும் "சேவை" செய்யமுடியும் என்பதால், ஜெயராம் ரமேஷ் என்ற அந்த 'ஊராட்சி மேம்பாடு துறை அமைச்சரை" அதாவது ஒரு " முழு அரசியல்வாதியை" சந்தித்து பேசினார்.

அந்த "சந்திப்பு" மன்மோகன் மற்றும் சோனியா குழுக்களிடையே நடக்கும் "பனிப்போரை" முடிவுக்கு கொண்டுவருவதற்காக "ஏற்பாடு" செய்யப்பட்டது. அதில் அவர்கள் இருவருமே ஒரு "சமரசத்திற்கு" வந்தனர். அதன்படி,'''வறுமையின் எல்லைக்கோடு வரையறை"' ஒரு அளவுகோலாக, "சமூக நல்வாழ்வு திட்டங்களுக்கோ" அல்லது "உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கோ" எடுத்துக் கொள்ளப்படாது என்று "முடிவுக்கு" வந்துள்ளதாக "தெரிவித்தார்கள்". அதற்கு "என்ன"' பொருள்? அதாவது வ'ருமையின் எல்லைக்கோடு வரையறை" என்பது ஏற்கனவே "'திட்டக்குழு" சார்பாக .நீதிமன்றத்தில் கூறப்பட்ட அந்த "கிராமப்புறங்களுக்கு இருபத்தாறு ரூபாயும், நகர்புரன்குக்கு முப்பத்தி இரண்டு ரூபாயுமாக"''' தான் இருக்கும் என்று பொருள். ஏதே சமயம் அந்த வரையறையை இணைத்து நாங்கள் இனி "'சமூக நல்வாழ்வு திட்டங்களையும்" , "உணவு பதுகாப்பு திட்டங்களையும்" பார்க்க மாட்டோம் என்று இருவரும் சேர்ந்து " ஊடகவியலாளர்கள்"' கூட்டத்தில் சொல்லியுள்ளனர்.

இதன்மூலம் "மன்மோகனுக்கும்,,சோனியாவிற்கும்"'' உள்ள முரண்பாடு வேண்டுமானால் "நீங்கியதாக" தோற்றம் அளிக்கலாம். ஆனால் "உலக வங்கி" கூறிய "வறுமையின் எல்லைக்கோடு" என்ற் ஒன்றை "'இந்தியாவில்" இல்லாமல் செய்வதற்கான "முதல்படி" நிறைவேறியுள்ளது. அதாவது இதுவரையில் நமது நாட்டு மக்களின் "ஏழ்மையை" பதிவு செய்ய "ஒவ்வொருவர்" கைகளிலும் இருந்த அந்த "அடையாள அட்டை" பறிக்கப்படுகிறது. அதற்கு பதில்,"சாதி வாரி கணக்கெடுப்பு" நடத்தும் போது, உண்மையான "ஏழ்மையை" லவிட்டுக் கொள்ளலாம் என்று "சமாதானம்" சொல்லப்பட்டுள்ளது. அதுதான் "சமூக நல்வாழ்வு திட்டங்கள், உணவு பாதுகாப்பு திட்டங்கள்"ஆகியவற்றிற்கு அந்த சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் "வரையறை" வகுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அப்படியானால் "மன்மோகன் சோனியாவிடம் தோற்கவில்லை" என்றுதானே பொருள்? சரி.. அப்படியானால் "சோனியா மன்மோகனிடம் தோற்றுவிட்டாரா?" அதுவும் இல்லை. சோனியா நினைத்ததை அதாவது தான் "மக்களை கவரும்" திட்டங்கள் போடுவதை இந்த "புதிய வரையறை" நீக்க கூடாது என்பதை "சாதித்து" விட்டார். அப்படியானால் "தோற்றது" யார்? இந்த "இடம்" கவனமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. "தேசிய ஆலோசனை கவுன்சில்" என்ற பெயரில், சோனியாவை நம்பி வந்தார்களே மூன்று "சமூக ஆர்வலர்கள்" அதாவது "அருணாராயும், ஹர்ஷ்மந்திரும், saksenaavum" அந்த மூவரும் இந்த "ஆளும் வர்க்க" சூதாட்டத்தில் "தோற்றுப்போய்" விட்டார்கள்;.அதாவது "இந்திய மக்கள்" தோற்றுப்போய் விட்டார்கள்" என்று பொருள்.ஏன் என்றால் " பாலுக்கு காவலனான ஜெயராம் ரமேஷும், பூனைக்கு தோழனான அலுவாலியாவும்" சேர்ந்துகொண்டு "மக்களை" ஏமாற்றுகிறார்கள் அல்லவா?