Thursday, September 29, 2011

"அன்னையர் முன்னணி" அறுதியிட்டது இன்று.

மூன்று தமிழர் உயிர் காக்கும் முயற்சியாக " மரண தண்டனை எதிர்ப்பு கூட்டமைப்பு" ஒழுங்கு செய்து வரும் "தொடர் பட்டினிப் போராட்டம்" இன்று பேராசிரியர் சரஸ்வதி தலைமையிலான "அன்னையர் முன்னணி"யால் நடத்தப்பட்டது. பேராசிரியரின் அழைப்பை ஏற்று, பல்வேறு பெண்கள் அமைப்புகளின் "பங்களிப்புடன்" சிறப்பாக நடைபெற்றது. அதில் "மக்கள் மன்றம்" ஒரு முக்கிய பங்களிப்பை, தனது "முப்பத்தைந்து பெண்களுடன்" செளுத்ஹ்டியது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மன்றத்தின், ஜெசி, மகேஷ், மகா, மேகலா, உமா,சிறுவன் பகத்சிங்,நாத்திகன், மற்றும் பல கிராமப்புற பெண்களுடன் "கலந்து" கொண்டது அனைவரையும் ஈர்த்தது.

கலந்துகொண்ட ஆர்வலர்கள், "பேச்சாளர்களாக" மாறி உரைகளை நிகழ்த்தினர். அமைப்பு சார தொழிலாளர் சங்கத்தின் கெத்சி, தனது தோழியர்கள் பத்து பேருடன் வந்து கலந்து கொண்டார். அற்புதம்மாள், பத்மா,மணிமேகலை, அகிலா, சரோஜா, அஜிதா, ஒவியா, கீதா போன்ற பெண் தலைவர்களும் கலந்து கொண்டு பேசினர். இடையில் அருகே இருந்த அரங்கில், "மரணதண்டனை" பற்றிய திரைப்படங்கள் திரையிடப்பட்டன. செங்கொடி இறுதி ஊர்வல திரைப்படமும் காண்பதற்கு "உருக்கமாக" காட்டப்பட்டது.

அன்னையர் முன்னணி "தொன்னூறின் " தொடக்கங்களில் தமிழ்நாட்டின் தெருக்களில் முழங்கிய முழக்கங்கள் நினைவுக்கு வந்தன.ஈழத்தின் விடுதலைப் போரில் "வீரச்சாவடைந்த" கண்மணிகளின் "தாயார்கள்" ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை கண்டு மிரளாமல் " தெருவுக்கு" வந்து போராடிய "நிகழ்வுகள்" , அன்னையர் முன்னணியின் "பதாகையின்" கீழ்தானே நடத்தப்பட்டன என்ற நினைவுகள் நமது நெஞ்சில் ஒலித்தது. "தமிழீழத் தேசியத் தலைவரின்" போர்த்தந்திரங்களுக்கு "வலுவூட்டும்", "ஒத்துழைக்கும்" "உதவி செய்யும்" செயல்தந்திரன்களை, "வெகுமக்கள்" அரங்கில், "வீரச்சாவடைந்த" மாவீரர்களின் தாயார்கள் "அன்னையர் முன்னணி" மூலம்தான் நடைமுறைப்படுத்தினார்கள்.இன்று சென்னையில் "பட்டினிப்போர்" நடத்தியது, "தமிழ்நாட்டு அன்னையர் முன்னணி". இந்த "சிருபோறியே" தமிழ்பெண்கள் மத்தியில் "பெரும் காட்டு தீயென" படரட்டும். தமிழ்ப்பெண்களின் வீர முழக்கங்களை இந்த நாடு கேட்க, "வீராங்கனைகளை" உருவாக்கட்டும்.