Sunday, September 25, 2011

பாவம், தனியாக நின்றாரம்மா....

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்தான் இப்போது "பரபரப்பு". அதில் திமுக தனித்து நிற்கும். இது முதல் அறிவிப்பு. விசிக வெளியே வந்து, பாமகவுடன் நிற்கும். இது முதல் அறிவிப்பு. திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்ற விசிக அறிவிப்பு. திராவிட கட்சிகள் வேண்டாம். இது பாமக அறிவிப்பு. விசிக கூட்டணியில் இன்னமும் இருப்பதாக கூறுகிறதே ஏன்றால், "கூட்டணியில் இருந்த கட்சிகளுடன்" தொகுதி உடன்பாடு செய்து கொள்ளலாம் என்ற கலைஞர் அறிவிப்பு. அது காங்கிரசுக்கும் "பொருந்துமா" என்றால், எல்லோருக்கும் பொருந்தும் என்ற கலைஞரின் மறு அறிவிப்பு. ஆனால் "தனித் தனியாக" ஒவ்வொரு கட்சியும் வேட்புமனு பரிசீலனை மற்றும், வேட்பாளர் தேர்வு முடித்து, மனுத்தாக்கலும் செய்து வருகின்றன.

காங்கிரஸ் "தனியாக". திமுக "தனியாக". அதிமுக கூட்டணியில் "தேமுதிக தனியாக". இப்படி எல்லோரும் "தனித் தனியாக" நின்றால் அவரவர் "பலம்" தெரிந்துவிடும் என்று மக்கள் "அங்கலாய்கிறார்கள்" தேமுதிக "வெளியேறியது" விஜயகாந்தின் "தவறா?" அதிமுக வில் "பல" கருத்துக்கள் உண்டு. சென்ற "சட்டமன்ற" தேர்தலில் தேமுதிகவை .சேர்த்தது "தவறா?" என்றால், "ஒரு புறம்" அது சரிதான் என்று வரும். அதற்காக தேமுதிக "உள்ளாட்சியில்" கேட்பதை எல்லாம் கொடுக்க அதிமுக தயாரில்லை. இப்போது "கழட்டி விட்டால்" தேமுதிக "சுழி" போட்டுவிடும். அதன்பிறகு "நாடாளுமன்ற தேர்தலில்" அதிக "தொகுதிகளை" கேட்காமல் ஒழுங்காக "குடுத்ததை" பெற்றுக்கொள்வார்கள். இப்படியும் அதிமுகவில் "விவேகமாக" செயந்தித்து இருப்பார்கள் அல்லவா?

எப்படியோ "ஒவ்வொரு" சிறு கட்சியும் "பெரிய" கட்சிகளின் "பிடியில்" இருந்து "தப்பித்து " வந்தாரம்மா. பாவம், "தனியாக" நின்றாரம்மா.