Tuesday, September 6, 2011

சம்பூர் அனல்மின் நிலையம் இந்திய அரசுக்கு கொடுக்கப்படும் லஞ்சமா?

இந்திய அரசும், அதன் கார்பரேட் முதலாளிகளும், "சீனாவிற்கு" இலங்கை சந்தையில் "முதல் பங்கா?" என்றும், " எங்களுக்கு கிடையாதா?" என்றும் சர்ச்சையை கிளப்பி வரும் காலத்தில், திருகோணமலை மாவட்டத்தில், முதூர் பகுதியில், "சம்பூர்" என்ற இடத்தில், இந்திய அரசுக்கு "அனல்மின் நிலையம்" கட்ட இலங்கை அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்சே ஒப்புக்கொண்டிருந்தார். அதுபோல ஒப்புக்கொண்டிருந்த பல ஒப்பந்தங்களை மகிந்தா அரசு செய்யவில்லை என்ற "வருத்தம்" டில்லிகாரர்களுக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. உதாரணமாக ௫௦௦௦௦ வீடுகளை "தமிழர் பகுதிகளில்" மீள் குடியேற்றத்திற்காக "கட்டித்தர" இந்திய அரசு சொல்லியிருந்தது. அதற்காக மன்னார்,திருகோணமலை, யாழ்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் "ஆயிரம்" வீடுகளை கட்டுவதற்கான "இடங்களை" இலங்கை அரசின் அந்தந்த மாவட்ட " அரசு பிரதிநிதிகள்" { govt .agents } அடையாளம் காட்டியிருந்தார்கள். அந்த இடங்கள் "காடுகளாக" இருந்க்கின்றன. வீடு கட்டித்தரும் நிறுவனம் அவற்றை " கண்ணிவெடிகள் "அப்புறப்படுத்தும் பணிகளை செய்துதான் வேலைகளை ஆரம்பிக்க முடியும். ஆனாலும் அதை செய்வதற்கான ஒப்பந்தத்தை "தனது அரசு" மூலம்ற்ற்ஹான் செய்யவேண்டும் என்று ராகபக்சே ".பிடிவாதமாக" இருப்பதால் இதுவரை இந்திய அரசால் தொடங்க முடியவில்லை.

இப்படி "சூழலில்" இப்போது அவசர அவசரமாக எதற்காக ராகபக்சே அரசு "சம்பூர்" அனல்மின் நிலையத்திற்கு இந்திய அரசுடன் "ஒப்பந்தம்" போடுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. வருகிற செப்டம்பர் 12 ஆம் நாள் முதல் அதாவது 13 ஆம் நாள் தொடங்கி, 30 ஆம் நாள் வரை, அரசு சாரா நிறுவங்களும், மேற்கத்தியத் அரசுகளும் "ஐ.நா. மனித உரிமை கவுன்சில்" முன்பு "இலங்கை அரசின்" தமிழினப் படுகொலையில் நடந்த " போர் குற்றங்களை" விசாரிக்க தொடங்குவார்கள் என்ற செய்திதான், ராஜபக்சேவை, இந்திய அரசிடம் " கெஞ்சியாவது" அவர்கள் உதவியுடன் மீண்டும் "ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில்" தங்கள் "தொலை" பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எண்ணுவது தெரிகிறது. அதனால் இந்த "சம்பூர்" அனல்மின் நிலையம் என்பது இந்திய அரசுக்கு இலங்கை அரசால் கொடுக்கப்படும் "லஞ்சம்" என்றே கொள்ளவேண்டும்.

இந்த லஞ்சத்தை பெறுகின்ற இந்திய அரசு இதன்மூலம், "திருகொனமாய் மூதூர்" பகுதி மக்களின் " மீள் குடியேற்றத்தை" நிராகரிகிறார்கள். அடுத்து "தமிழ்நாடு அரசின் சட்டமன்ற தீர்மானமான இலங்கைக்கு பொருளாதார தடை" என்ற கொள்கையை எதிர்த்து "தமிழ் நாட்டு மாக்களின் உணர்வுகல்க்கும், விருப்பத்திற்கும்" எதிராக மத்திய அரசு செயல்படுவதை படம் பிடித்து காட்டுகிறது.