Thursday, August 18, 2011

நாடு தழுவிய மக்கள் ஐ.மு.கூ.ஆட்சியை அடிபணிய வைத்துள்ளனர்.

அன்னா ஹசாரே அறிவிக்கும் "பட்டினிப் போராட்டத்தை" அரசாங்க அனுமதி பெற்று, அரசாங்கம் சொல்லும் எண்ணிக்கைக்கு உட்பட்ட மக்கள்தான் கலந்து கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, அரசாங்கம் அதாவது டில்லி காவல்துறை சொல்லும் நாட்கள் மட்டுமே நடத்த வேண்டும் என்ற கட்டளைகளை மீறியதால், "கைது" செய்யப்பட்டார். அதை எதிர்த்து "நாடெங்கும் மக்கள் எதிர்ப்பு அலை" வீசியது. சென்னையிலும், தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் கூட, மக்கள் தெருவிற்கு வந்தனர். இது அன்னா ஹசாரே என்ற தனிநபருக்காக வந்த கூட்டமல்ல. மாறாக "ஊழலை எதிர்க்க வேண்டும்" என்ற உத்வேகத்திர்காக வந்த கூட்டம். முழுமையாக "பிற்போக்குத்தனம்" கொண்ட ஒருவர் என்று அவரது நெருக்கமானவர்களால் வர்ணிக்கப்பட்ட ஒரு மனிதர் அப்படி "கூட்டத்திற்கு" வந்திருந்தார். ஏன் என்று ஆராய்ந்தால், அவர் உட்பட ஒவ்வொரு மனிதனும் தனது "அறிவுக்கு" உட்பட்டு ஒவ்வொரு கருத்தை நம்புகின்றனர். ஆனால் அவர்களது இதயத்தில், " தாய்நாட்டு பற்றும், ஜனநாயக உணர்வும்" ஒவ்வொருவருக்கும் ததும்பிக்கொண்டு இருக்கிறது. அதனாதான் எல்லா மட்டங்களிலிருந்தும் மனிதர்கள் இந்த "ஊழல் எதிர்ப்பில்" கலந்துகொள்ள வருகிறார்கள்.

அப்படிப்பட்ட மக்கள் எழுச்சி, நாடெங்கும் வந்ததை தாங்கிக்கொள்ள முடியாத மத்திய ஆட்சியாளர்கள், " அன்னா ஹசாரே மக்கள் கூடிய ராமலீலா மைதானத்திலேயே" பட்டினி போராட்ட்டம் நடத்தட்டும் என்றும், மூன்று நாள்தான் அனுமதி எண்பதை, ஐந்து நாள், எழு நாள், பத்து நாள், கடைசியாக பதினைத்து நாள் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். எத்தனை மக்கள் வேண்டுமானாலும் கலந்து கொள்ளட்டும் என்று அறிவித்துள்ளனர். அதாவது இந்திய அரசியல் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள உரிமையான, யாரும் எங்கும், எப்போதும் போராடலாம் என்ற அடிப்படை உரிமையை அமைதியாக மறுதலித்து, தாங்கள் அனுமதி கொடுத்தால்தான், பட்டிப் போராட்டம் கூட நடத்த வேண்டும் எண்பதை "பதிவு" செய்வதில் ஆள்வோர் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் எழுச்சிக்கும் ஒரு " வடிகால்" என்பதாக அந்த பட்டினி போரை அனுமதித்துள்ளனர்.

ஆனால், சிதம்பரம் கூறிய " காவல்துறைக்கு கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறிய வார்த்தைகள் பொய்த்து விட்டன. அதேபோல பிரதமர் கூறியபடி, " உச்ச நீதிமன்றத்திற்கு" அன்னா ஆதரவாளர்கள் செல்வதால், டில்லி காவல்துறை, நீதிமன்றம் போய் "விடுதலை" உத்தரவு பெற்றனர் என்ற கூற்றை, மறுத்து சிதம்பரம் "தான்தான் இல்லை காவல்துறையிடம்" விடுதலை செய்ய ஆலோசனை வழங்கினேன் என்ற சொல் "பொய்யாகிவிட்டது". இது சிதம்பரம் போன்ற " கொடூரமான பாசிஸ்டுகளுக்கு" கிடைத்த பதிலடிதான்.