Thursday, August 11, 2011

மரண தண்டனையில் "அரசியல் சதி" நடத்தும் ப.சிதம்பரம்?

மரண தண்டனையில் "அரசியல் சதி" நடத்தும் ப.சிதம்பரம்?
சிவகங்கை சீமான் "சின்னப்பையன் சிதம்பரம்" என்று கலைஞரால் ஒருமுறை வர்ணிக்கப்பட்டவர், வழமையாக "அறிவிக்கப்பட்ட மரணதண்டனைகளை" வைத்துக்கொண்டு "சித்து விளையாட்டு" விளையாடுவதில் கெட்டிக்காரர். ஏற்கனவே அவர் "அபசல்குறு"வின் மரணதண்டனையை "அமுல்படுத்தப்பாவ்கிறோம்" என்று அறிவித்து, அதன்மூலம் "பாகிஸ்தானை" தங்கள வழிக்கு கொண்டுவர மிரட்டியதில் "பிரபலமானவர்". பாகிஸ்தானுக்கும், அப்சல்குருவிற்கும் என்ன சம்பந்தம் என்று நாம் கேட்கலாம். உண்மைதான். எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் "இந்திய-பாகிஸ்தான்" விவகாரத்தில் அல்லது "சண்டையில்" தொடர்ந்து இரண்டு நாட்டு அரசாங்கமும், இதுபோன்ற " போட்டி" விளையாட்டுகளை, சாதாரணமாக "காய்" நகர்த்துவார்கள். இதே சிதம்பரம் ஏற்கனவே "பாகிஸ்தான்" அரசாங்கம், "இந்திய குடிமகனான சர்பஜத்சிங்" கிற்கு கொடுக்கப்பட்ட "மரணதண்டனையை" நிறைவேற்ற போகிறோம் என்று ஒரு "பூச்சாண்டி" காட்டியபோது, அடஹ்ர்கு பதிலடி கொடுப்பதாக காட்ட, "அப்சல்குரு"விற்கு தாங்கள் மரணதண்டனையை நிறைவேற்றப் போகிறோம் என்று கூறினார். அதன்பிறகு இரண்டு நாடுகளும் "சமாதானம்" ஆகி பேச்சுவார்த்தைக்கு வந்துவிட்டனர்.

அப்சல்குரு காஷ்மிர்காரர். அவரை "நாடாளுமன்ற கட்டிடம்" மேல் நடந்த "தாக்குதலில்" சம்பந்தப்பட்டவர் என்று இந்திய நீதிமன்றம் "தண்டனை" கொடுத்திருக்கிறது. அவரை "காஷ்மீர் சுதந்திரத்திற்கு" போராடுபவர்கள் ஆதரிப்பது புரிய முடியும். ஆனால் "காஷ்மீர்" பிரச்சனையை வைத்து அரசியல் நடத்தும் பாகிஸ்தான் அரசும், அதேபோல "காஷ்மீர் தேசிய இனப்பிரச்சனையை" முஸ்லிம் பிரச்சனை என்று " திரித்து" விளையாடும் அரசியல்வாதிகளும் "கையாள்வது" அசிங்கமானது. அப்படி கையாண்டு வருவதன் விளைவு "அபசல்குருவை" தூகிலடக்கூடாது என்பது "முஸ்லிம் "பிரச்சனை" போலவும், "சர்பஜத்சிங்கை" தூகிலடக்கூடாது என்பது "இந்து மத" பிரச்சனை போலவும் இந்த அரசியல்வாதிகள் அல்லது "ஆளும் வர்க்க" அரசியல்வாதிகள் ஆக்கிவிட்டார்கள் அதற்காகவே ஒரு ஆளும்வர்க்க கட்சியை இவர்கள் "இந்துமதவெறி" கட்சியாக தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த "பா..ஜ.க.".கட்சி எப்போதும் "சர்பஜத்சிங்" பக்கம் பேசும். டில்லி இமாம் போன்றவர்கள் எப்போதும், "அப்சல்குரு" பக்கம் பேசுவார்கள். ஆனால் இந்த "இரண்டு கும்பல்களுக்கும்" அந்த இரண்டு "மரண தண்டனை " விதிக்கப்பட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.


இப்படி ஆளும்வர்க்க கட்சிகள் நடத்தும் சித்து விளையாட்டில் நாம் எப்போதும் மாட்டிக்கொள்வது உண்டு. இப்போதும் "இரண்டு நாட்கள்" முன்பு "பாகிஸ்தான் அரசு" சர்பஜத்சிங் மரணதண்டனை விசயமாக ஒரு காய் நகர்த்தலை செய்தது. உடனே நமது "உள்துறையும்" அப்சல்குருவின் மரணதண்டனை விசயமாக "கருணை மனுவை" தள்ளுபடி செய்யச்சொல்லி "குடியரசு தலைவருக்கு" அறிக்கை அனுப்பியது. அதையொட்டியே, "ராஜீவ் கொலையில்" மரணதண்டனை வித்திக்கப்பட்ட " பேரறிவாளன், முருகன், சாந்தன்" ஆகியோருக்கும் "கருணை மனுக்களை" தள்ளுபடி செய்யச்சொல்லி "குடியரு தலைவருக்கு" உள்துறை அறிக்கை அனுப்பியதாக செய்தி வந்துள்ளது. அப்சல்குரு விஷயம் "பாகிஸ்தான்-இந்தியா" அரசுகளின் அடரசியல் பிரச்சனை என்றால், "ராஜீவ் கொலை மரணதண்டனை" என்பது எந்த அரசியல் பிரச்சனை என்று நாம் கேட்கவேண்டும். அதுவும் அப்படித்தான். இது, "மத்திய-மாநில" அரசுகளுக்குள் உள்ள அரசியல் பிரச்சனை. அதுவும் "சிதம்பரம்_ஜெயலலிதா" அரசியல் பிரச்சனை.அது எப்படி? என்று வினா எழலாம். ஜெயலலிதாவும், சிதம்பரமும் "ராஜீவ் கொலை" விசயத்தில் ஒரே கருத்தை கொண்டவர்கள்தானே? அவர்களுக்குள் அந்த விசயத்தில் எப்படி அரசியல் பிரச்சனை வரும்?


இப்போது நடக்குமரசியலில், "கடந்தகால" அரசியல் விளையாடுகிறது. இப்போது "ஜெயலலிதா" உலகத் தமிழர்களால் பாராட்டப்படுகிறார். அதை "மத்தியஅரசோ" காங்கிரஸ் கட்சியோ விரும்பவில்லை. குறிப்பாக "ஜெயலலிதா" கான்க்கியர்ஸ் தலைமையை எதிர்த்து "காய்" நகர்த்துகிறார். அடஹ்ர்கு "தான் கேட்டும்" கீட அளவு "நிதியை" மத்திய அரசு கொடுக்கவில்லை என்பதே முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கு ஓடிக்கொண்டிருக்கும் " தமிழினப் பிரச்சனை" ஒரு தந்திரமாகக் கூட பயன்படத்தான் செய்யும். இந்த நேரத்தில், "உலகத் தமிழர்" மத்தியில் கருணாநிதியின் "தலைமை நாற்காலி" பறிக்கப்பட்டதாக ஒரு கருத்து இருக்கிறது. அந்த "நாற்காலியை" ஜெயலலிதா பறித்துக் கொள்ளக்கூடாது என்பதில் மத்திய அரசுக்கு அக்கறை உண்டு. அதை உள்துறை மூலம் தான் அவர்கள் செய்யவேண்டும். அதேநேரம் ஜெயலலிதா சிதம்பரத்திற்கு எதிராக கடுமையான போராட்டத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார். சிதம்பரமும் விடுவதாக இல்லை. சமீபத்தில் சென்னையில் கைது செய்யப்ப்பட்ட ஒரு திமுக முன்னால் எம்.எல்.ஏ. விடமிருந்து, அதாவது "சிதம்பரத்தின் முன்னால் பினாமி" இடமிருந்து, சிதம்பரம் சம்பந்தப்பட்ட பல " ரகசிய காணொளி குறுந்தகடுகள்" பிடிபட்டுள்ளன என்று கசிந்த செய்தி காரணமாக இருக்கலாம். இப்போது ஜெயலலிதாவிற்கு "பெருகி வரும்" தமிழின ஆதரவை உடைக்கவேண்டிய பொறுப்பு சிதம்பரத்திடம் உள்ளது.

கோத்தப்பாய் இந்த நேரம் பார்த்து உளறிக்கொட்டி, ஜெயலலிதாவின் புகழை "தமிழர்கள்" மத்தியில் உயர்த்திவிட்டான். அதை எப்படி உடைப்பது? "ராஜீவ் கொலையாளிகள்" என்று அறிவிக்கப்பட்டவர்கள் மேல் உள்ள "மரண தண்டனையை" இப்போது நிறைவேற்றப் போகிறோம் என்று கிளப்பி விட்டால், "தமிழின உணர்வாளர்கள்" ஜெயலலிதாவை பாராட்டும் வேலையை விட்டுவிட்டு, "ராஜிவ்கொலை" பற்றி பேசுவார்கள். அந்த சிக்கலில், "ராஜ்விகொலையை வைத்து " அரசியல் செய்வதில் சளைக்காத ஜெயலலிதா, "தமிழின உணர்வாலர்களிடமிருந்து" தனிமைப் படுவார். ஆகவே அந்த "ஆயுதத்தையும்" எடுக்க சிதம்பரம் துணிந்து விட்டார். ஆகவே இப்போது அதிகமாக பேசவேண்டியவர்கள், "மனித உரிமை" ஆர்வலர்கள்தான். "உலகப் போது மன்னிப்பு சபை" மற்றும் பி.யு.சீ.எல். ஆகிய பிரபல மனித உரிமை அமைப்புகள் "மரண தண்டனைக்கு" எதிராக "தொடையை" தட்டிக் கொண்டு போராடி வருகின்றன. "பேரறிவு, முருகன், சாந்தன்" பிரச்சனை வெறும் "தமிழினப்" பிரச்சனை அல்ல. அது "ஒரு மனித உரிமை "பிரச்சனை" சிதம்பரமே அரசியல் செய்யாதே. "மனிதர்களின் உயிர்களில்" உனது அரசியல் சதுரங்கத்தை ஆடாதே என்று நாம் குரல் எழுப்பவேண்டும்.