Thursday, July 28, 2011

தலித் கிறித்துவர்களுகாக அனைத்து கிறித்துவர்களும் நடத்தும் பட்டினி?

இன்று சென்னையில் "இந்திய கிறித்துவ மக்கள் கட்சி"சார்பாக ஒரு பட்டினிப்போர். இது டில்லியில் "அனைத்து ஆயர்களும் இணைந்து இன்று நடத்தும் கோரிக்கையை"வலியுறுத்த நடத்தப்பட்டது. கோரிக்கை புதிதல்ல. "தலித் கிறித்துவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் செக்க " வலியுறுத்தியே இரண்டு பட்டினிப் போர்களும் நடத்தப்பட்டன. இந்த கோரிக்கை ஐம்பது ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஏன் இன்னமும் மத்திய அரசு செவி சாய்க்க வில்லை? அதற்கும் அவர்கள் அளித்த "துண்டறிக்கை" பதில் சொல்கிறது. அல்லது விளக்கம் ஒன்றை கூறுகிறது. அல்லது பிரச்னையை புரிந்து கொள்வதற்கான விளக்கத்தை துனடரிக்கையில் வெளியிட்டுள்ளார்கள். அதுவே வேறு ஒரு விளக்கத்தை, அதாவது ஏன் சேர்க்கவில்லை என்ற நமது கேள்விக்கான விளக்கத்தை கூறுவதாக நமக்கு படுகிறது.அதாவது இந்திய அரசியல் சட்டம் முதலில் "இந்து தாழ்த்தப்பட்டோரையும், பிறகு சீக்கிய தாழ்த்தப்பட்டோரையும், பிறகு பவுத்த தாழ்த்தப்பட்டோரையும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்" சேர்த்துக்கொண்டது. ஆனால் ஆயிரம் முறை கத்தியும் "கிறித்துவ தாழத்தப்பட்டோரை" செர்த்த்டுக் கொள்ளவில்லை. ஏன்? ஏன்? ஏன்?

இந்த இடத்தில்தான் இந்திய அரசு இயந்திரத்தை பற்றி புரிந்து கொள்ளவேண்டும். இந்திய அரசியல் சட்டம் பற்றியும் புரிந்து கொள்ளவேண்டும். அரசியல் சட்டத்தில் "யார் இந்துக்கள்?" என்று தெளிவாக அவர்களது விளக்கத்தை கூறி இருக்கிறார்கள். "யார்,யார் முஸ்லிம் இல்லையோ, யார்,யார் கிறித்துவர் இல்லையோ, யார்,யார் பார்சி இல்லையோ, அவர்கள் எல்லாம் இந்துக்கள்". இதுதான் இந்திய அரசியல் சட்டம் கூறும் விளக்கம். அபப்டியானால் " மதம் அற்றவர்களாக" இருக்கும் மனிதர்கள், இந்துவா? "நாத்திகர்களாக" இருப்பவர்கள் இந்துகளா? இது கொடுமையாக இல்லையா? எனக்கு எந்த நம்பிக்கையும இல்லாத"ஒரு மதத்தில் என்னை" சேர்ப்பதற்கு இந்திய அரசியல் சட்டத்திற்கு என்ன உரிமை இருக்கிறது? அது எனது "தனி மனித உரிமையை" மீறுவது ஆகாதா? இப்படித்தான் இவர்கள் "தங்களது இந்து மதத்திற்கு" ஆள் சேர்க்க வேண்டுமா? அப்படியானால் இந்திய அரசு இயந்திரம் "மதசார்பற்றது " இல்லையா? இந்த கேள்விகள் எழ வேண்டும்.


பாகிஸ்தான் அரசை " ஒரு மதச் சார்பு ஆரசு" என்று எல்லோரும் கூறுகிறோம். அவர்களும் அவர்களது அரசியல் சட்டத்திலேயே நேர்மையாக" இஸ்லாம் சார்ந்தது" என்று எழுதி இருகிறார்கள். ஆனால் இந்திய அரசியல் சட்டத்தில் "இது ஒரு மதச் சார்பற்ற அரசு" என்று முகப்பிலேயே எழுதிவிட்டு, "இந்து மதத்தில் இல்லாதவர்களையும் " இந்து மதத்தில் சேர்க்கும் வேலையை ஒரு அரசியல் சட்டமே தனது விளக்கத்தின் மூலம் செய்யுமானால் "இது என்ன அரசியல் சட்டம்" இதுவும் மறைமுகமாக "ஒரு மதச் சார்பு அரசியல் சட்டம்தான்" . இப்படி பகிரங்கமாக் சொல்ல நமக்கு துணிவு வேண்டும். அதையும் தாண்டி, "இந்து மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு" என்றால் யாரும் இந்து மதத்தை விட்டு போககூடாது என்றும், மற்ற மதத்திற்கு சென்றவர்கள் இந்து மதத்திற்கு திரும்பி வரவேண்டும் என்றும் பொருள் இல்லையா?இது யார் செய்யும் அல்லது செய்ய வேண்டிய வேலை? இந்து மத சாமியார்கள் செய்ய வேண்டிய வேலை அல்லவா? அதை ஒரு அரசு இயந்திரம் செய்தால் அது "ஒரு மத சார்புதானே?"

இந்து மதத்திற்குள் " சீக்கிய மதத்தையும், பவுத்த மதத்தையும்" போட்டு திணித்து இந்த ஆளும் கூட்டம் சித்து விளையாட்டு நடத்துவது ஏன்? இந்திய "நிலவுடமை "சமுதாயத்தில் நில உறவுகளை, "சாதி கட்டுமானங்களால்" இருக்க கட்டிப் போட்டிருகிறார்கள்.அதனால் "ஆதிக்க சாதிகள்" நில உடமையாலர்கலகவும், தாழ்த்தப்பட்டோர் உழைக்கும் கூலிகளாகவும் இருக்கவேண்டும் என்பது அவர்களது "தர்மம்". அதுவே இந்து மத தர்மம். ஆளவே அவர்கள் நில உறவுகளை பாதுகாக்க "இந்து மதத்தை" பதுககிரர்கள். அதைவிட்டு தாழ்த்தப்பட்டோர் வெளிஎரே செல்ல விடாமல் இந்த இட ஒதுக்கீடு கொள்கைகளையும் பயன்படுத்துகிறார்கள். நிலவுடமை சமூகத்திற்கு எதிரான " உழுபவனுக்கே நிலம்" என்ற கொள்கை என்றைக்கு ஒரு புரட்சியின் மூல சாத்தியமாகிறதோ அன்று தான் இந்த "சாதி கட்டுமானம்" உசடையும்.அதுவரை "தலித் கிறித்துவர்களுக்கும்" இட ஒதுக்கீடு கொடு என்ற இந்த நியாயமான கோரிக்கையை நாம் நாடு முழுவதும் கொண்டு செல்வதும், அதற்கு செவி மடுகாத மத்திய அரசை நிர்பந்தம் செய்வது தேவை.