Thursday, July 14, 2011

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்.

16 --07 --2011 அன்று சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு, சென்னை அண்ணாசாலை- தேவநேயப் பாவாணர் அரங்கில்," விடுதலை பெற்ற தெற்கு சூடானும்,தமிழீழ விடுதலையும்" என்ற தலைப்பின் கீழ், தமிழக சட்டமன்றத்தில், "போர்குற்றவாளிகளை ஐ.நா. அவையில் அறிவிக்க டில்லி அரசை நிர்ப்பந்திக்கும்" தீர்மானத்திற்கு ஆதரவளித்த "ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறப்பினர்கள்" உரையாற்றுவார்கள். தமிழக சட்டமன்றத் தீர்மானத்தில், " போர்குற்றம் செய்த இலங்கையின் மீது பொருளாதார தடைவிதிக்க வலியுறுத்திய" மேற்கண்ட சட்டமன்ற கட்சித் தலைவர்கள், "ஈழத் தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வான" தமிழீழம் மலர வழிகாண வலியுறுத்துவார்கள். புதிய தமிழகம், இந்திய கம்யுனிஸ்ட் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சட்டமன்ற கட்சித் தலைவர்கள், "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மையம்" நடத்தும் கருத்தரங்கில் "தெற்கு சூடானின் வழியில் தமிழீழம்" என்ற விளக்க உரை நிகழ்த்துவார்கள்.

தேசிய இன விடுதலை வரலாற்றை சென்னை பல்கலைக் கழக பேராசிரியர் மணிவண்ணன் விவரிப்பார். பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்குவார்." யாழினி" என்ற குறும்படம் "தமிழீழ விடுதலைப் போரில்" கைம்பெண்களாக ஆக்கப்பட்ட ௮௦௦௦௦ தமிழ்ப்பெண்கள் உருவான நிலைமையை சித்தரிக்கிறது.ஐந்து மணிக்கு "யாழினி" குறும்படம் திரையிடப்படும். அதை அடுத்து கருத்தரங்கம் நடைபெறும்.