Thursday, June 16, 2011

நுணலும் தினசரி தன் வாயால் கெடும்

நுணல் என்பது "தஹ்வைலையின்" ஒரு வகை. வயல்வெளிகளில், தவளைகள் வழக்கமாக் கால்வாய்களில் ஓடும். சிறிய வாய்களைக் கொண்ட குழிகளில், ஓட்டைகளில், பள்ளங்களில், அந்த தவளைகள் ஓடி ஒளிந்து கொள்ளும். பாம்புகள் தன்கள் இரையைத் தேடி அங்கே வரும். தவளைகள் பாம்புகளுக்கு நல்ல இரை. " நுணல்" என்ற தவளை வகை," குவா, குவா" என்று கத்தும். அப்படி கத்தும்போது, இரை தேடி அவரும் பாம்புகளுக்கு அவை இருக்கும் இடம் தெரிந்து விடும். அதனால் அந்த நுனல்கள் மாட்டிக்கொள்ளும். பாம்புகள் அவற்றை விழுங்கி விடும். இதைத்தான்" நுணலும் தன் வாயால் கெடும்" என்று கூறுவார்கள்.


பதவியை இழந்த பிறகு, தனது கழகத்தையும் எதிர்க்கட்சியாகக்கூட ஆக்காத நிலையில், திமுக தலைவர் கலைஞர் இப்போது தினசரி என்ன வேலை செய்வது என்பதில் திக்கு, முக்காடுகிறார். அதனால் வழமையாக தான் எழுதும் உடன்பிறப்புக்கான கடிதத்தில், பல செய்திகளை தீட்டி வருகிறார். ஆனால் ஒவ்வொரு நாளும் அவர் எழுதுவது, அவரையே வசமாக மாட்டிவிடுவதாக அமைந்துவிட்டது. உதாரணமாக "கச்சத்தீவு விவகாரத்தில், தான் எந்த தவறும் செய்யவில்லை" என்று நியாயப்படுத்த அவர் எடுத்திருக்கும் முயற்ச்சிகள், அவரையே அகல பாதாள பள்ளத்தில் கொண்டுபோய் தள்ளுவதாக அமைந்து விட்டது. கச்சத்தீவை தாரை வார்த்ததற்கு தன் மீது குற்றம் சாட்டும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பதில் சொல்வதாக கலைஞர் எழுதுகிறார்.

அப்போது "ஜெயலலிதா ஒருகாலத்தில் கூறிய சொற்களையெல்லாம்" இப்போது திருப்பி எடுத்தாண்டு அதன்மூலம் அவரும், தன்னைப் போலத்தான் கூறினார் என்று நியாபடுத்த முனைந்துள்ளார். அதில் ஒரு இடத்தில், " அனைத்துநாட்டு எல்லையைத் தாண்டி தங்களுக்கு தேவைப்படும் மீன்கள் கிடைப்பதால், அங்கே செல்லவதற்கு, தெரிந்தோ, தெரியாமலோ, மீனவர்கள் சென்று விடுகிறார்கள்" என்று ஜெயலலிதா சொன்னதாக மேற்கோள் காட்டிய கலைஞர், "அதேபோலத்தான் தானும் சொன்னதாக" தெரிவித்து, " வரம்பு மீறி மீனவர்கள் போகிறார்கள்" என்று கலைஞர் எழுதியுள்ளார். இப்படித்தான் சென்றமுறை, " பேராசை பிடித்து மீனவர்கள் எல்லை மீறுகிறார்கள்" என்று கலிஞர் எழுதி, மீனவர்களின் கோபத்திற்கு உள்ளானார். இப்போது இப்படி சொல்லி மீண்டும் மீனவர்களின் கோபத்திற்கு உள்ளாகிறார். ஆனால் அதற்கு ஜெயலலிதாவை தவறாக மேற்கோள் காட்டுகிறார். ஜெயலலிதா மீனவர்கள் செயலை நியாயப்படுத்தி பேசியிருந்ததை தான் மீனவர்களை தாக்கி பேச பயன்படுத்துகிறார். அது திருப்பி அடிக்கிறது.

மறுநாள், கேள்வியும் நானே, பதிலும் நானே என்ற பாணியில், முரசிளியில், உடன்பியாரப்புகளுக்கு எழுதும் கடிதத்தில், " பீம்சிங் இது என்ன புதுக்குழப்பம்" என்ற தஹ்ளைப்பில், " செம்மொழி நிறுவனம்" பற்றி எழுதுகிறார். அதில், "என்னவெல்லாம் ஊழல் நடந்துள்ளது" என்பதும், "நானூறு கோடி ரூபாயும் வீணாக செலவு செய்யப்பட்டது" என்ற உண்மையும் டேஹ்வையில்லாமல் அவரது எழுத்தின் எதிர் விளைவாக கிளப்பப்பட்டுள்ளது. இப்படித்தான் அவர் " நுணலும் தன் வாயால் கெடும்" என்ற பழமொழியை, " நுணலும் தினசரி தன் வாயால் கெடும்" என்று மாற்றி அமைத்துள்ளார்.