Friday, June 10, 2011

திமுகவை விட்டு மன்னர் குடும்பம் விலக வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லையே?

திமுக ஒரு இலட்சியத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதாகத்தான் அண்ணாவால் அறிவிக்கப்பட்டது. அதை நம்பித் தான் தமிழ்நாட்டு மக்களும் அந்த திமுகவை இந்நாள் வரையில் ஆட்சிக்கு கொண்டுவருகிறார்கள். எதிர்கட்சியாக அல்லது எதிரி கட்சியாக ஆக்கினாலும் திமுகவை தமிழ்நாட்டு மக்கள் ஏதோ ஒரு லட்சியம் கொண்ட கட்சி என்பதாக எண்ணுகிறார்கள். அவரகளது எண்ணத்தில் மண் விழும்படி இப்போது கலைஞர் அந்த கட்சியை இழுத்துச் சென்றுள்ளார். இன்று அது அவரது " குடும்ப கட்சி" என்பதாக ஆகிவிட்டது.


அவர்களது குடும்பத்தினர் அவரது அறிவுரைப்படி செய்த " ஊழல்களால்" அந்த கழகம் இப்போது தோல்வி அடைந்தது மட்டுமின்றி, தலைமையில் உள்ள ஒவ்வொரு அமைச்சராக சிறைக்கு செல்லும் அளவு, திமுகவின் "மரியாதை" கேவலப்பட்ட்டு வருகிறது. இது உண்மையான "திமுக உடன்பிறப்புகள்" செரிக்க முடியாமல் திணறுகிறார்கள். அவர்கள் கழகத்தை தொடர்ந்து எடுத்துச் செல்ல தயாராய் இருக்கிறார்கள். கலைஞரும், அவரது குடும்பத்தாரும் கழகத்திலிருந்து விலகிக் கொண்டு, கழகத்தை " அண்ணாவின் உணமையான உடன்பிறப்புகள் " கைகளில் ஒப்படைக்க தயாரா? இதுவே அவர்களது வாதம்.