Saturday, May 14, 2011

கலைஞரின் வாழ்நாள் சாதனை.

கலைஞர் கருணாநிதி, தனது வாழ்நாளில், தான் வாழும் நாளிலேயே, ஒரு மாபெரும் சாதனையை சாதித்துள்ளார். அண்ணாவால் தொடங்கப்பட்ட ஒரு மாபெரும் இயக்கமான " திராவிட முன்னேற்ற கழகத்தை" தனது வாழ்நாளிலேயே, கழகத்தின் வாழும் நாளிலேயே, ஒரு பெரும் இழுக்குக்கு உள்ளாகியுள்ளார். தானும் அரசியல் சாணக்கியத்தனத்தால் இந்திய அரசையே நிர்ப்பந்தம் செய்யும் அளவுக்கு " தகுதி" பெற்று இருக்கும் போதே, தனது கழகத்தை ஒரு குடும்பம் என்று வர்ணித்து வந்த கலைஞர் அதையே சற்றமாற்றி, தனது "குடும்பமே கழகம்" என்று நிரூபித்த காரணத்தால், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மாற்று சிந்தனைக்கு வித்திட்டு இருக்கிறார்.

அதன்மூலம், திமுக என்ற மாபெரும் இயக்கத்தை, தமிழ்நாட்டு மண்ணிலேயே, " சட்டப் பேரவையில் எதிர்க் கட்சி " தகுதி" யில்கூட இருக்க விடாமல் செய்த சாதனை அல்லவா செய்திருக்கிறார்? இது ஒரு " வாழ்நாள் சாதனையல்லவா?".

சாதி,மதங்களை தாண்டியது ஜெயலலிதாவின் வெற்றி.

தேர்தல் கட்சிகள் தாங்கள் வெற்றி பெறுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, அந்தந்த பகுதிகளில் செல்வாக்கு பெற்ற சாதிகளை சேர்ந்த வேட்பாளர்களையே அந்தந்த பகுதிகளில் நிறுத்துவார்கள். இது வழமையான ஒன்றுதான். இந்த நடைமுறையில் " சாதி மறுப்பு" பேசும் எந்த கட்சியும் மாற்றி சிந்திப்பதில்லை தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே " சாதி மறுப்பு " அதிகமாக பேசுவார்கள். பேசுபவர்கள் எல்லாம் செய்பவர்கள் இல்லை என்று நீங்கள் கூறலாம்.. ஆனால் தமிழ்நாட்டில் " அதிகம் பேசுகிறார்களே". எப்படி சொல்லாமல் இருப்பது?


அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் வழக்கமாக எல்லா தொகுதிகளைப் பற்றிய நிலைமையை கணிக்கும் போதும " அந்த சாதி வாக்குகள் இவர்களுக்கு" என்பதாக கணிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அப்படி எதுவுமே கணிக்க முடியாமல், எல்லா சாதிகளையும், மற்றும் எல்லா மதங்களையும் சேர்ந்தவர்கள் செல்வி.ஜெயலலிதாவிற்கு அதாவது அவர்களது கூட்டணிக்கு வாகளித்திருக்கிரார்கள். இது பல தொகுதிகளின் ஆய்வில் தெளிவாக தெரிகிற உண்மை. அதற்கு தாரணம் வேண்டும் என்றால், தென் மாவட்டங்களில் குறிப்பாக, விருதுநகர் மற்றும் தூத்திக்குடி மாவட்டங்களில், நாயுடு சாதி மக்கள் அதாவது கம்மா நாயுடு சாதி மக்கள், தேவர் சாதி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இந்த முறை, கோவில்பட்டி மற்றும் சாத்தூர் தொகுதிகளில், அதே கம்மா நாயுடு சாதி மக்கள், தேவர் சாதியை சேர்ந்த அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளார்கள்.


கோவில்பட்டியிலாவது நின்ற அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராசு, உள்ளூர்காரர். அவரை எதிர்த்து வேலை செய்தது, தேவர் சாதியில் அந்த பகுதியில் பிரபலமான கடம்பூர் ஜமீன் என்று அழைக்கப்படும் அதேகட்சியான அதிமுகவை சேர்ந்த கடம்பூர் மாணிக்க ராஜ்தான். அவர் ம.நடராசன் குழு என்பது வேறு விஷயம்.ஆனால் கம்மா நாயுடு மக்கள் கடம்பூர் ராஜுக்கு வாக்களித்து வெற்றிபர வைத்துள்ளார்கள். சாத்தூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் தேவர் என்பது மட்டுமல்ல, அவர் சிவகங்கையை சேர்ந்தவர், மதுரையில் வாழ்பவர், என்றாலும் அவருக்கு கம்மா ஆண்யுடு சாதி மக்களும் சேர்ந்து வாக்களித்து வெற்றிபெற வைத்துள்ளார்கள்.


அதேபோல " தேவேந்திர குல வேளாளர்கள்" குறிப்பாக தென்மாவட்டங்களில் "தேவர் சாதி" வேட்பாளர்களுக்கோ, அதேபோல "தேவர் சாதி" மக்கள், " தேவேந்திர குல வேலாலர்களுக்கோ" சம்மீப காலமாக உறுதியாக வாக்களிக்க மாட்டார்கள். இந்த முறை, "புதிய தமிழகம்" அதிமுக கூட்டணியில் சேர்ந்தவுடன், அவர்கள் இவர்களுக்கும், இவர்கள் அவர்களுக்கும் முழுமையாக வாக்களித்துள்ளார்கள். அதே மாதிரி, வடக்கு மாவட்டங்களில், வழமையாக " அதி திராவிடர்கள்" வன்னியர் சாதி" வேட்பாளர் களுக்கும், " வன்னியர் சாதி" மக்கள், " அதி திராவிடர் வேட்பாளர்களுக்கும்" வாக்களிக்க மாட்டார்கள். இந்த முறை, " பாமகவும், விசிகவும் சேர்ந்து நிரபதால், இருவரும் இருவருக்கும் வாக்களித்து, திமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பார்கள் என்ற கலைஞரின் தந்திரம் தோற்று, பதிலாக இரண்டு சாதி கட்சிகளின் வாக்குகளும், தேமுதிக என்ற விஜயகாந்த் கட்சிக்கும், அதிமுக விற்கும் விழுந்துள்ளது என்ற உண்மை, சாதிகளை தாண்டி மக்கள் சிந்தித்திருப்பதையே காட்டுகிறது.



இப்படியாக் தமிழ்நாட்டு மக்கள் ஜெயலலிதாவின் கூட்டணிக்கு அளித்துள்ள வாக்குகள், உள்ளபடியே " மன்னர் குடும்ப ஆட்சியை" வீழ்த்த வேண்டும் என்ற வெறியையே மக்கள் கொண்டிருததை காட்டுகிறது. அதற்கான அலை வீசியதையே தெளிவாக்குகிறது. இந்த அலைக்கு முன்னால் சாதியாவது, மதமாவது?