Thursday, May 12, 2011

விடுதலைப் புலிகள் தலைவர் படம் வைத்து வாக்குகேட்ட இயக்கம்.

தமிழ்நாட்டில் ஒரு மாத காலமாக் சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரைகள் செய்யப்பட்டன. ஒவ்வொரு கட்சியும் தங்களது பரப்புரைகளில், பல தலைவர்களது படங்களை போட்டு விளம்பரங்கள் செய்வதும், சுவரொட்டிகள் ஒட்டுவதுமாக இருந்தனர். அத்ய்தகைய கட்சிகளில், இயக்கங்களில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றும், அங்கீகரிக்கப்படாத ஆனால் பதிவு செய்யப்ப்பட்ட கட்சிகள் என்றும் தேர்ர்தலில் நின்றன. சில அமைப்புகள் பதிவு செய்யப்படாத நிலையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, தேவநாதன் யாதவ் தலைமையிலான," யாதவ் மகா சபா". அதனால் அவர்கள் ஜார்கண்டில் உள்ள ஜார்கண்ட் முக்தி மோர்சாவிடம் அவர்களது சின்னமான " வில் அம்பு" பெற்று அதையே தங்களது சின்னமாக பயன்படுத்தி தேர்தலில் நின்றனர்.

அதேசமயம் எல்லா கட்சிகளையும் போல அவர்களுக்கும், பல தலைவர்களின் படங்களை போட்டு விளம்பரம் செய்யவேண்டிய கட்டாயம் வந்தது. அதில் காமராஜ், அம்பேத்கர், காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், அழகு முத்து கோன், சுந்தரலிங்கம், என்று பல தலைவர்கள் படங்களை போடும்போது நினைவாக " தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் படத்தையும்" போட்டு விளம்பரங்கள் செய்தனர். சுவரொட்டிகளையும் "பிரபாகரன்" படத்துடன் ஒட்டினர். தமிழ்நாட்டில் நடந்த டேஹ்ர்தலில் இந்த ஒரே இயக்கம்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் படத்தை தாங்கள் நின்ற 53 தொகுதிகளிலும் ஒட்டி, விளம்பரப்படுத்தி பணி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இது தமிழின ஆரவல்ர்களால் பாராட்டப்[டுகிறது..

சிபிஎம் தலைமையில் மாறுதலை உருவாக்கும் தேர்தல் முடிவுகள்.

மேற்கு வங்கமும்,, கேரளாவும், சிபிஎம் மிற்கு பெரும் கோட்டைகள் என்று கருதப்படுகின்றன.ஆனால் அங்கெல்லாம் கட்சி எந்த நிலையில் உள்ளது என்பது வேறு விஷயம். சிபிஎம் இன் "அரசியல் தலைமை" குழுவில் [போலித் பீரோவில்] போது செயலாலரகா பிரகாஷ் கரந்த் வந்ததிலிருந்து அவருக்கும், புத்தாதேவ் தலைமையிலான் மேற்கு வணக்க அணிகளுக்கும் இடையேதான் பெரும் சர்ச்சையே எழும்பி வந்தது கரந்த் எடுத்த காங்கிரஸ் எதிரப்பு நிலைப்பாட்டை புத்தாதேவ் கும்பல் மறுத்து வ்ந்தது வகுப்புவாத பிஜேபிக்கு எதிராக கணிரசை அவ்வப்போது அனுசரணையாக பார்க்க வேண்டும் எனபது புத்தாதேவ் வழி. இதை இடது ஜனநாயக சக்திகளை திரட்டும் பிரகாஷ் கரந்த் மறுத்து வந்தார்.

இப்போது மேற்கு வங்கம் சிபிஎம்மை தூக்கி எரிவதால், புத்தாதேவ் வழி கடும் சர்ச்சைக்கு உள்ளாகும். அவரது குழுவினர் தனிமைப்படுவர். கரந்த் கைகள் ஓங்கும். கண்கிஅரசும் வேண்டாம், பிஜேபியும் வேண்டாம் எனபது கரந்த் வழி. அந்த வழி கட்சிக்குள் செல்வாக்கு பெரும். இது வணக்கம் தரும் பாடமாக் மாறும். அதேசமயம் கேரள இன்னொரு பாடத்தை தர வாய்ப்பை உருவாக்கி வருகிறது. அங்கே வி.எஸ்.அச்சுதனந்ததிற்கு கட்சிக்குள் ஆதரவு பெருகும். அவரது ஜென்ம விரோதியாக மாறிவிட்ட, கட்சியின் மாநில செயலாளர் பினராய் விஜயன் தனிமைப் படுத்தப்படுவார் அதுவும் கட்சியின் "அரசியல் தலைமைக்குழு " வில் சில மாற்றங்களை கொண்டு வரும்.


அச்சுதானந்த்ததிற்கு எதிராக, பினராய் விஜயனுக்கு ஆதரவாக இருக்கும்பளரும், இனி வி.எஸ்.ற்கு அதரவாக இறங்குவார்கள். அது சிபிஎம் இன் ஒட்டுமொத்த நிலைப்பாட்டை சற்று மாற்றி அமைக்க உதவலாம். அதன்மூலம் ஒரு புதிய சக்தியாக "மூன்றாவது அணி" எனபது வலுவாக உருவாகும்.


.. .

புத்தாதேவ் ஏன் விரட்டப்படுகிறார்?

மேற்கு வங்கத்தில், இடது சரிகள் ஆட்சி என்ற பெயரில் நடந்துவரும் புத்தாதேவின் சிபிஎம் ஆட்சிக்கு மக்கள் வழியனுப்பு விழா நடத்த தயாராகி விட்டார்கள். எல்லா ஊடக கருத்து கணிப்புகளிலும், தேர்தலுக்கு பின் எடுத்த கணிப்புகளிலும் அதவே மிகுந்து நிற்கிறது. கடுமையாக பாதிக்கப்பட்டு, புத்தாதேவ் ஆட்சி விரட்டப்படப் போகிறது என்பது பச்சையாக் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. ஏன் இந்த மாற்றம்? மேற்கு வங்க மக்கள் இடதுசாரி சிந்தனைகளிலிருந்து விடுதலை பெற்று விட்டார்களா? மம்தாவிற்கு வாக்களிப்பது என்பது, காங்கிரசை ஏற்ற்க்கொண்டதாக் பொருளா? முதலாளிகளுக்கு சாதகமாக் மக்கள் மேற்கு வங்கத்தில் போய்விட்டார்கள் என்று இந்த வரப்போகும் தேர்தல் முடிவை சொல்லலாமா?

அய்யா. சொல்லமுடியாது. ஏன் என்றால் முதலாளிகளுக்கு சாதகமாகத்தான் புத்தாதேவ் ஆட்சி புரிந்து வ்ந்தார்.அவரை விரட்டுவது முதலாளிகளுக்கு சாதகமானது என்று கூறுவது தவறு. முதலில் மேற்கு வணக்கத்தில் ஜோதிபாசு நடத்திவந்த சிபிஎம் ஆட்சி, அம்ன்னிக்கவும் இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி எனபது, முதலாளிகளுக்கு சாதகமாக த்தான் செயல்பட்டது அதாவது இங்கிலாந்து அம்ற்றும், பிர்லாவிற்கு சாதகமாக செயல்பட்டது என்பது நக்சல்பாரிகளின் விமர்சனம். ஆகேவே இந்த நாடாளுமன்ற இடதுசாரிகளை நாம் முதலாளிகளுக்கு எதிர்ப்பு என்று சொன்னால் உண்மையாக இருக்காது. அடுத்தூ புத்தாதேவ் ஆட்சியில்தான்"சிங்கூரும், நந்திகிராமும் நடந்தன" அந்த ஊர்களில் பசுமை நிலங்களை, விவசாயிகளின் விலை நிலங்களை அவர்களிடம் கேட்காமல் பன்னாட்டு நிறுவனகளுக்கு தாரை வார்க்க எண்ணி புத்தாதேவ் செய்த ஒப்பந்தம்தான் பெரும் போராட்டமாக வெடித்தது.


ஆகவே மேற்கு வங்க அரசு மக்களுக்கு விரோதமாக செய்த அணித்து நடவடிக்கைகளும் இப்போது சேர்ந்து அடிக்கிறது. சிபிஎம் வழக்கமாக செய்யும் வன்முறையை திருணாமல் காங்கிரசிடமும் காட்டியபோது, அதற்கு பதிலடியை மாவோவாதிகள் கொடுத்தார்கள். திரினாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்கும் மக்கள் இடது சாரி எதிர்ப்பாளர்கள் என்றால் அவர்கள் ஏன் மாவோவாதிகளை ஆதரிப்பதாக சிபிஎம் புலம்பவேண்டும்? மாவோவாதிகள் திரினாமுல் காங்கிரசை ஆதரிக்கிறார்கள் என்று இடதுசாரிகள் ஏன் கலங்க வேண்டும்? ஆகவே இடது சாரி பேசிக்கொண்டு, முதலாளிகளுக்கு ஆதரவாக ஆட்சி நடத்தும் புத்தாதேவ் ஆட்சிக்கு எதிராக திரளும் வாக்குகள் நிச்சயமாக இடது சாரி கருத்துகளுக்கு எதிரான வாக்குகள் அல்ல.

மாவோவாதிகள் செல்வாக்கு உள்ள பகுதிகளில் எல்லாம் அதிகப்படியான வாக்குகுகள் பதிவாகி உள்ளன எண்பதை சில ஏடுகள், மக்கள் ஆயுதப் பாதை என்ற மாவோவாத பாதையிலிருந்து திரும்பி தேர்தல் ஜனநாயக பாடஹிக்கு வந்து விட்டார்கள் என்று எழுதுகிறார்கள். இது சிரிப்புக்கு உள்ளான ஒரு க்தை. மாவோவாதிகள் இந்த தேர்தலில், சிபிஎம் அம்ற்றும் நாடாளுமன்ற இடது சாரிகளை தோற்கடிக்க எவ்ண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். அதற்காக இருக்கும் ஒரே மாற்றான திரினாமுல் காங்கிரசுக்கு தானே போடுவார்கள்? இந்த உணமியை கூட புரியாதவர்கள் ஊடகங்களில் எழுதுகிறார்கள். இதே செயல்தந்திரத்தை ஆந்திராவில், நக்சல்பாரிகள், தெலுங்கே தேசம் கட்சிக்கு எதிராக ககிரசுக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்ததும், அதில் கூட்டணியாக இருந்த டி.ஆர்.எஸ். என்ற அமைப்பை ஆதரித்தார்கள், அதனால் அவர்களது செயல்தந்திரப்படி இப்போது, மாவோவாதிகள் சிபிஎம் மிற்கு தேர்தல் அரசியலிலும் சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்கள்.

தோற்றுப்போனவரா உள்துறை அமைச்சர்?

இன்று அதிமுக போதுச்ச்யலாளர் செல்வி.ஜெ.ஜெயலலிதா கொட்த்துள்ள அறிக்கை ஒரு உண்மையை பட்டவர்த்தனமாக்கி உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு அவர் வைத்துள்ள வேண்டுகோளில், இந்த முறை வாக்கு எண்ணிக்கை எண்ணப்படும்போது, சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது விடப்பட்ட ஒரு பிழையை சரிசெய்யும்படி கேட்டுள்ளார். அது சிவகங்கை நாடாளுமன்றத்திற்கான வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது ஏற்பட்ட கோளாறு. அதாவது இந்தியாவையே இப்போது ஆள்வதாக படம் காட்டிக்கொண்டு இருக்கும் ப.சிதம்பரத்தின் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட கோளாறு.


ப/சிதம்பரத்தை எதிர்த்து அப்போது சிவகனகை நாடாளுமன்ற தேர்தலில் 2009 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக போட்டிபோட்டது ராஜா கண்ணப்பன். அப்போது வாக்கு எண்ணிக்கையில் வழக்கம் போல, என்னும்போதே ஒவ்வொரு பாகத்திலும் எண்ணி முடிந்தவுடன், இரண்டு அல்லது போட்டியிடும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் தனகுள்ளு வந்த வாகுகளை குறித்துக் கொண்டே அவ்ருவார்கள். கடைசியாக அனைத்து பாகங்களின் வாக்குகளையும் சேர்த்து தேர்தல் அதிகாரி அதாவது வாக்கு எண்ணிக்கை அதிகாரி, தொகுத்து மொத்தம் குறிப்பிட்ட வேட்பாளர் எத்தனை வாக்குகள் வாங்கினார் என்று சொல்வார். எல்லா வேட்பாளர்களின் ஏஜெண்டுகளும் தாங்கள் குறித்துவைத்த எண்ணிக்கையையும் கூட்டி, சரி பார்ப்பார்கள். இந்த இடத்தில் சிதம்பரம் பெற்ற வாக்குகளை, கண்ணப்பனுக்கும், கண்ணப்பன் பெற்ற வாக்குகளை சிதம்பரத்திற்கும் கூட்டி பாத்து, சிதம்பரம் வெற்றி என்று அறிவித்து விட்டார்கள் என்பதே அந்த அம்மையார் இப்போது கூறியிருக்கும் குற்றச்சாட்டு. அந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்கிறார் ஜெயலலிதா.


அதேபோல இப்போதும் நடந்து விடக்கூடாது.என்பதுதான் அவரது கோரிக்கை. இதில் சிதம்பரம் எப்படி வென்றார் எனபது நாட்டுக்கு தெரிய வந்துள்ளது. நம் பங்குக்கு நாமும் ஒரு உண்மையை சொல்லிவைப்போம். விடுதலை சிறுத்தை கட்சியின் ஒர்வே சட்டப் பேரவை உறுப்பினராக கடைசி வரை இருப்பவர் எழுத்தாளர் ரவிக்குமார். இவர் முதல்வர் கருணாநிதியின் செல்லப் பிள்ளை என்று பெயர் பெற்றவர். இவர் ஒரு சமயம் முதல்வர் களிஞரிடம், " இந்த சிதம்பரத்தை, தொற்றுப்ப்னவரை நீங்கள்தான் வெற்றிபெற வைத்தீர்கள். அவர் நமக்கு இப்போது தொல்லை கொடுத்து வருகிறார்" என்று கூறியிருக்கிறார். அதற்கு கலிஞர்," நான் இல்லப்பா. அது ஏன் பையன் செய்தது" என்று கூறினாராம். மதுரை பையன் தொலைபேசியில் பேச, தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சி தலைவர் எழுந்து நின்று போன் பேச, சரி அய்யா என்று கூறியவர், ஏற்காணவே தான் அறிவித்திருந்த கண்ணப்பன் வெற்றியை மாற்றிபோட்டு, சிதம்பரம் வெற்றி என்று கண்ணப்பனிடம் கூறிய கதையை ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.

எப்படியோ, நாட்டுக்கு பின்புற கதவு வழியாக, மக்களை சந்தித்து வாக்குகள் வாங்காத ஒருவர் பிரதமராக இருக்க, தேர்தலில் தோற்றுப்போன ஒருவர் உள்துறை அமைச்சராக இருக்கிறார் என்பது, " நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு" நல்ல பெயரைக் கொடுக்குமல்லவா?

ஒரு இளவரசர் உருவாக்கப்படுகிறார்.

ராகுல் காந்தி கைதானார். பெரிய செய்தியாக முதல் பக்கத்தை நாடு பூரா நிறைத்தது. அதுதானே அவர் எதிர்பார்த்தது. உத்திரப் பிரதேசத்தில், விவசாயிகள் போராடுகிறார்கள். எதற்காக? அரசு நிலநகளை கையகப்படுத்தும்போது, சதுர அடிக்கு 800 ரூபாய் வரை, கொடுக்கவேண்டும் என்று போராடுகிறார்கள்.நொய்டா டில்லி அருகே யமுனை நதிக்கரையில் உள்ள உத்திரப பிரதேச மாநிலப் பகுதி. எப்போதுமே நொய்டாவில் நடக்கும்எல்லா பிரச்சனைகளும், டில்லியின் பாதிப்புகளால் உருவானாலும், அது உத்திரப் பிரதேச அரசைத்தான் பாதிக்கும். " சிறப்பு பொருளாதார மண்டலம்" நொய்டாவில் தொடங்கி, செயல்படுத்த டில்லியின் அரச குடும்பங்கள் அதாவது ஆட்சியாளர்கள் எப்போதுமே விரும்புவர். அந்த அளவுக்கு அதிகமான வாய்ப்பும், வசதியும் நிறைந்த பகுதி அது.

டில்லியின் அரசியல்வாதிகளுக்கு நினைத்தால் நொய்டாவில் நல்லதும் செய்யமுடியும், கேட்டதும் செய்யமுடியும்.dilliyin அதிகாரிகளுக்கு நொய்டா ஒரு சொர்க்க பூமி. அங்கேதான் குழந்தைகளை கொலைகள் செய்த கொடூரக் காட்சிகளும் அரங்கேறியது. அப்போதும் மாயாவதி அரசுதான் பழியை சுமந்தது. நொய்டா டில்லியின் நிழலில் எல்லாவடரியும் அனுபவித்துக்கொள்ளும்.ஆனால் சட்டஒழுங்கு பிரச்சனை வந்துவிட்டால், பதில் சொல்ல வேண்டியது, உத்திரப் பிரதேச அரசு என்று ஆகிவிடும் உத்திரப் பிரதேசத்தின் தலைநகரில் இருந்து நோய்டாவை கவனிப்பதை விட, டில்லியில் உள்ளோர் நன்றாக கவனிக்க முடியும். அதனால் டில்லி அரசியல்வாதிகள் நொய்டாவில் விளையாடும் விளையாட்டு, உத்திரப் பிரதேச அரசின் ஆள்வோரால் எப்போதுமே தாக்குப் பிடிப்பது கடினம். இப்போதும் அப்படித்தான் நடந்துள்ளது.

மாயாவதி ஆட்சி ஒருபுறம் முலாயம்சிங் கூட்டத்தால் எதிர்க்கப்படுகிறார். மறுபுறம் காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கப்படுகிறது. தலைகீழாக நின்று பார்த்தாலும், உத்திரப் பிரதேச அரசியலில் காங்கிரஸ் கட்சி எழ முடிய வில்லை.இளவரசர் ராகுலை எப்படியாவது உத்திரப் பிரதேச மக்களிடம் செல்வாக்கு பேரா வைத்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலை பிரும்ம பிரயத்தனம் எடுக்கிறது. அதன் முதல் நாடகம்தான், ராகுல் தலித் மக்களின் வீடுகளில் போய் தங்கினார்.ஊடகங்கள் அதை பெரிதாக பெரு புரட்சியே நாட்டில் நடந்ததுபோல வெளிப்படுத்தினார்கள். தலித் வீட்டில் இந்த இளவரசர் போய் தங்கிவிட்டால் போதுமா? அதன்மூலம்தான் தலித் மக்களது வாழ்கையை பற்றி தெரிந்துகொள்ள போகிறார் என்றால், அதாவது அவர் மூலம் ஆள்வோர் தலித் மக்களது வாழ்கை பற்றி தெரிந்துகொள்ள கொள்ள போகிறார்கள் என்றால் , இதுவரை தெரியவில்லையா?.

அறுபத்தி இரண்டு ஆண்டு காங்கிரஸ் கட்சி, நாட்டையே ஆண்டபிறகு, அத்தனை ஆண்டுகளாக உத்திரப் பிரதேசத்தையும் ஆண்ட பிறகுதானே தலித் மக்களது நிலைமை இப்படி மொடமாக இருக்கிறது என்று மக்களுக்கு தெரியாதா? அதை இந்த பட்டத்து இளவரசர் போய் தங்கி பார்த்த பிறகுதான் தெரியவர வேண்டுமா? அது மக்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுனாலேதானே அவர்கள் காங்கிரசை தோற்கடித்துவிட்டு, மாயாவதியை கொண்டு வந்திருக்கிறார்கள்? தலித் மக்களுக்கு இந்த இளவரசர் ஏதாவது புதிய திட்டங்களை கொண்டுவந்து, அவர்களது வாழ்க்கை செப்பனடைய அத்தகைய மத்திய திட்டங்கள் மூலம் அறிமுகமாகி இருந்தால் கவனிப்பார்கள். வெறும் " தங்கியிருக்கும்" நாடகம் அந்த மக்களை ஏமாற்ற போதுமானதா? அந்த இரண்டு ஆண்டு நாடகத்திற்கு பிறகு, இளவரசருக்கு வழிகாட்டிகளாக உள்ள, பன்னாட்டு மூலதன நிறுவனகள் வேறு மாதிரி புதிதாக சிந்திக்க தொடங்கி உள்ளனர்.

இப்போது உத்திரப் பிரதேச விவாசாயிகள் போராட்டத்தில் யாராவது, விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த கூடாது என்று குரல் கொடுக்கிறார்களா? பசுமை நிலங்களை எப்படி எடுக்கலாம் என்று தட்டி கேட்கிறார்களா? ராகுலும் அப்படிப்பட்ட கோரிக்கையை புதிதாக கிளப்ப தயாரா? சரி. அதுதான் இல்லை. நிலங்களை கையகப் படுத்தும் போது, கொடுக்க வேண்டிய நட்ட ஈட்டை, அதிகப்படுத்தி கொடுக்க மத்திய அரசு ஏதாவது சட்டத்தை கொண்டுவந்துள்ளதா? அப்படி உத்தேசமாவது இருக்கிறதா? இவையெல்லாம் இந்த அரச குடும்பம் ஆளும் மத்திய அரசு சம்பந்தப்பட்டவை ஆயிற்றே? அதை மக்களுக்கு தெரியவிடாமல் செய்வதில் இவர்களது கெட்டிக்காரத்தனம் இருக்கிறதா? அப்படியானால் ஆழமான கோரிக்கையை வைக்காத ராகுலின் கைது ஒரு நாடகம்தானே?


மாநில அரசு தனது வரையறைக்கு உட்பட்டு அதிக நட்ட ஏஅடு கொடுக்கும் சட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்தார்களா? ஆக்கபூர்வமான வழியில் விவசாயிகளுக்கு உதவ என்னினால்தானே இவர்கள் அப்படி செய்வார்கள்? விவசாயிகள் போராட்டம் காவல்துறையால் அடக்கப்பட்டபோது, மேலும் கொந்தளித்தது. அப்போது அஜித்சிங் வந்தார். அவர் காங்கிரஸ் ஆதரவுதான். விவசாயிகளின் போராட்டத்தை கலவரமாக ஆகியதற்கு பிரியங்காவின் கணவர் வதேராதான் கரணம் என்று ஊடகங்களில் செய்திவருகிறது. அதேபோல " ராகுல் ஏன் நொய்டா செல்லவில்லை என்று ஊடகங்களில் கேள்வி எழும்பியது. அஹையோட்டித்தான் அய்யா நேற்ற்யதிகாலை மோட்டார் சைக்கிளில் நொய்டா சென்றார். தர்ணா செய்தார். கைதானார். இந்த நாடகம் அவர்களுக்கு தேவைப்படுகிறது.

ஒரு அரசு தனக்கு அடுத்த தலைவர்களைவரை உருவாக்க என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு பல வரலாருகளிருக்கின்றன.ஒரு இளவரசரை உருவாக்க பல முயற்சிகள் செய்வார்கள். அவரது பெயரை மதிப்புள்ளவராக ஆக்குவதற்கும் பல முயற்சிகள செய்வார்கள். அதில் ஒன்றுதான் இந்த அதிகாளி மோட்டார் சைக்கிள் சவாரியும் கைதும். இதில் அவர்கள் சாதித்தது என்ன? ராகுலை ஒரு அக்கறையுள்ள, விவாசயிகள் மீது பற்றுள்ள அரசியல்வாதியாக காட்டி விட்டார்கள். அவரது இளமையை மோட்டார் சைக்கிள் மூலம் காட்டிவிட்டார்கள். அதற்காக ராகுல் ஏன் வரவில்லை என்று முந்திய நாளே ஊடகங்களில் கிளப்பி விவாதமாக்கி விட்டார்கள். இதன்மூலம் அவர் தலைமையிலான காங்கிரஸ் விவசாயிகளின் நண்பனாகி விடும் என்று நம்புகிறார்கள்.

இதற்காக் அவர்கள் சார்ந்திருப்பது, அனுபவம் உள்ள பன்னாட்டு நிறுவனகளின் ஆலோச்டனையை. விளம்பரம் செய்வதில் அரசியல்வாதிகளுக்கு எப்படி விளம்பரம் செயவது, அரசியல் பிரமுகர்களை எப்படி வளர்பப்து என்ற தேர்ச்சி உள்ள பன்னாட்டு விளம்பர் நிறுவனகளின் ஆலோசனைப்படி இந்த இளவரசர் உரூவாக்கப் படுகிறார். .