Friday, May 6, 2011

அமெரிக்கா என்ன உலக போலிஸ்காரனா?

ஒசாமா பிளடேனை பாகிஸ்தானில் கண்டுபிடித்தால், அதுவும் முக்கிய இடத்தில் இருப்பது தெரிந்துவிட்டால், அதற்காக "பயங்கரவாதத்தை எதிர்க்கும்" போர் என்ற பெயரில் அங்கே திடீரென புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி, அதன்மூலம் "நிராயுதபாணியாக இருந்த" பின்லேடனை சுட்டு கொன்று, அதை தடுத்ததற்காக அவரது மகனான" குற்றம் சட்டப்படாடஹ்வரை"யும் ச்ட்டுகொன்று, மனைவியை காலில் சுட்டு, உடனே ஓடிவிடுவது எந்த விதியில், எந்த மனித உரிமை சட்டத்தில் ஏற்கப்படக்கூடியது? "பயங்கரவாதி" என்று அமெரிக்க சொன்னது எனபது தவிர அவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது?

ஏப்ரல் இருப்பதொன்பதாம் நாளே அமெரிக்க அதிபர் ஒபாமா எப்படி பின்லாடனை " கொல்வதற்கான" உத்தரவில் கையெழுத்து போட முடியும்? கூலப்பட்ட பிறகு உடலை எப்படி கடலில் தூக்கி எறிய முடியும்? இவையெல்லாம் எந்த உலக மனித உரிமை விதிகளில் வருகிறது? ஒரு போரில் கூட அதற்கே உரித்தான பல விதிகளும், சட்ட, திட்டங்களும் பின்பற்றப்பட வேண்டுமே? இங்கே அமெரிக்கா அடுத்த நாட்டு நிலத்திற்குள் நுழைந்து, இநத்தகைய அடாவடி செயலை செய்யலாம் என்றால், மாற்றார்களும் செய்வார்களே? உலகில் அராஜகத்தனத்தை கட்டவிழ்த்திவிட இதைவிட சிறந்த உதாரணம் ஒன்று உண்டா? இப்படி கேள்விகளை மனித உரிமை ஆர்வலர்களும், அமைப்புகளும் கேட்க மாட்டார்களா?

ஐ.பி.எல்.இன் அம்பாசடர் பங்குதான் கனிமொழிக்கா?

நமது நாட்டை உலுக்கி வரும் ஊழல்களை பட்டியலிடுங்கள் என்று குழந்தைகளிடம் கூறினால், அவர்கள் காட்சி ஊடகங்களில் தொடர்ந்து அம்பலப்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழலையும், ஆங்கில ஊடகங்களில் தொடர்ந்து சொல்லப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழலையும், எல்லோரும் மறந்துவிட்ட அதன்மூலம் மறைத்துவிட்ட ஐ.எஸ்.ஆர்.ஒ. ஏற்படுத்திய இரண்டு லட்சம் கோடி நட்ட ஊழலையும் சொல்வார்கள். அவர்களுக்கு நன்றாக டேஹ்ரிந்த ஐ.பி.எல். ஊழலை மறந்துவிடுவார்கள். ஏன் என்றால் அது அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு. ஆசையாக மட்டை பந்து விளையாட்டை ரசிக்கமுடியாமல் போய்விடுமோ என்று அந்த மேட்ச் பிக்சிங் ஊழலை மட்டும் மறந்துவிடுவார்கள்.

அத்தகைய ஐ.பி.எல் மட்டைபந்து ஆட்ட விளையாட்டை பிரபலப்ப் படுத்த ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒரு தூதுவரை அதாவது அம்பாசடரை அந்த ஆட்டத்தை ஏலம் எடுத்த நிறுவனம் முதலில் பிக்ஸ் செய்கிறது. பிறகுதான் அவர்கள் ஆட்ட விளையாட்டு வீரர்களின் பெயர்களை வெளியே அறிவித்து, அதன்மூலம் கொடிகளை களவாட, மேட்ச் பிக்ஸ் செய்கிறது. இது எல்லாமே அந்த மேலாளர்களுக்கு அத்துபடி. இது ஒரு பகிரங்க சூதாட்டம். அப்படித்தான் நமது சென்னையிலும் ஒரு சூதாட்டம் முதல்வர் பார்வையிலும், தலைமையிலும் நடந்து வந்தது போலும். அதுதான் சென்னை சங்கமம்.

சென்னை சங்கமத்திற்காக, "தமிழ் மையம்" என்ற நிறுவனம் பல கோடிகளை கையாண்டது. அதற்கு நன்கொடை கொடுத்த நிறுவனகள் பெரும்பாலும் " தொலை தொடர்பு அமைச்சகத்திடம்" ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு வரிசையில் நின்றவர்கள் எனபது இப்போது தெரியவந்துள்ளது. அதுவும் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறுவதற்கு முந்திய வாரம் இந்த "தமிழ் மையத்திற்கு" லட்சங்களை அள்ளி, அள்ளி தந்துள்ள அந்த நிறுவனகள் தமிழ் மீதோ, தமிழ் நாட்டு கிராமப்புற கலைகள் மீதோ பற்று கொண்டவர்கள் இல்லை எனபதும் தெரிய வ்ந்துள்ளது.

அந்த '[சென்னை சங்கமத்திற்கு" அம்பாசடர் போல, ஒரு 'செலிபெரிடி' நிலையை, கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு, "தமிழ் மையம்" கொடுத்துள்ளது. அந்த "பிரபலத்திற்கு" எவ்வளவு பணம் யாரிடம் வாங்கப்பட்டது என்பதோ, அதை அந்த நன்கொடையாளர்கள் ஏன் கொடுத்தார்கள் என்பதோ தெரிய எவ்ண்டிய அவசியம் இல்லை. அவருக்கு வேண்டியது எல்லாம் விளம்பரம்தான். அண்ணன் மு.க.அழகிரியும்,.அண்ணன் மு.க. ஸ்டாலினும், இன்னொருபுறம் தயாநிதியும் அப்பாவை பயன்படுத்தி பெரிய பதவிகளில் இருக்கும் போது, வீட்டிற்கு போனால் தொல்லை செய்யும் அம்மாவிற்கு சமாதானம் சொல்லவும், அதேசமயம் தனக்கு புகழ் சேரவும்," தமிழ் மையம்" நண்பர்கள் நல்ல உதவி செய்கிறார்கள் எனபது மட்டுமே அந்த பெண்ணுக்கு தெரிந்திருக்கும். இப்போது மாட்டிக்கொண்ட பின் எல்லாம் புரிந்திருக்கும். அல்லது அது ஒன்றும் தவிரில்லையே என்று அன்று புரிந்திருக்கும். இப்போது எல்லாமே தவறு போல என்று அறிந்திருக்கும்.

இது என்னவோ, ஐ.பி.எல். அம்பாசடராக இருக்கும் "பிரபலங்களுக்கு" ஒவ்வொரு விளையாட்டிலும் நடக்கும் " மேட்ச் பிக்சிங்" பற்றி தெரியாது என்று சொல்வதுபோல இருக்கிறதே?

ராம்ஜெத்மாலினி மறைமுகமாக தயாளுவை தாக்குகிறாரா?

என்னோவோ சீ.பி.ஐ. நீதிமன்றத்தில், ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து வாதாட ஆசைப்[பட்ட அந்த முதுபெரும் வழக்கறிஞரை, கலைஞ்மர் தல்யீட்டில் கனிமொழிக்காக வாதாட வைத்துவிட்டனர். ராம்ஜெத்மாலினி ஏற்கனவே சென்னையில் ஒருவர் மீது உள்ள வழக்கில் வாதாடி பிணை வாங்கி கொடுத்தவர். அந்த பிரபல வழக்கு, சென்னையில் பிரபல தாதாவாக உலாவிய அயோத்தியாகுப்பம் வீரமணியின் வழக்கு. இருபது ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நாள் பேச ஒரு லட்சம் வாங்கி, தமிழ்நாட்டின் பிரபல தாதாவை காப்பாற்றியவர் ராம்ஜெத்மாலினி. அதனால் அவரது வாதம் நியாயம் மட்டுமே என்று நம்மால் எடுத்துக்கொள்வது கடினம். அவர் வாத திறமை உள்ளவர் என்று வேண்டுமானால் எடுத்து கொள்ளலாம். இப்போது கனிமொழிகாகவும் அதையே திறம்பட செய்துள்ளார்.

கனிமொழி, பணம் பெற்ற கலைஞர் காட்சி ஊடகத்தில், ஒரு போர்டு உறப்பினர்கூட இல்லை, போர்டு கூட்டங்களிலும் கலந்து கொண்டது இல்லை. எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து பட்டதும் இல்லை. அந்த ஊடகத்தின் பெரும்பான்மை பங்குதாரராகவும் இல்லை. அதனால் அவர் அந்த நிறுவனத்தில் வேகமாக செயல்பட்டார் என்ற சீ.இ.ஐ.யின் குற்றச்சாட்டில் எந்த நியாயமும் இல்லை. இத்தகைய ராம்ஜெத்மளினியின் வாதங்கள் சரிதான். அதேசமயம் அவை கலைஞர் காட்சி ஊடக நிறுவனத்தில், தயாளு அம்மையார் ஒரு போர்டு உறுப்பினர் எனபதையும், அவர் அங்குள்ள கூட்டங்களில் கலந்துகொண்டவர் என்பதற்கு கையெழுத்து போட்டுள்ளார் எனபதையும், தயாளு பெயரில் பெரும் பங்கு அந்த நிறுவனத்தில் இருக்கிறது என்பதும் மறைமுகமாக ராம்ஜெத்மாலினி சொல்வதுபோல இல்லையா

கனிமொழியை சிக்கவத்தவர் தமிழ்மையம் அருள்திருவா?

இன்றைக்கு வெளியாகி இருக்கும் செய்தி, எந்த சென்னை சகமத்தை கூறி கனிமொழி புகழை முதல்வர் கலிஞர் உயர்த்தி பிடித்தாரோ, அந்த சென்னை சங்கமத்தை நடத்திய " தமிழ் மையம்" தொடர்பானது. " தமிழ் மையம்" அலுவலகம் சீ.பி.ஐ. சோதனைக்கு உள்ளானபோது, அருள் திரு ஜகத் கஸ்பர் கூறியவை ஒவ்வொருவருக்கும் நினைவுக்கு வரும். இப்போது அதே ஏற்பாட்டில், பெரும் தொலை தொடர்பு நிறுவனங்கள், தமிழ் மீது பற்று கொண்டோ, தமிழ் கிராம கலைகள் மீது பற்று கொண்டோ அந்த சன்மான தொகைகளை கொடுத்ததாக கூறுவாரா? அல்லது ஸ்பெக்ட்ரம் உரிமத்தை அடுத்த வாரமே வாங்குவதற்காக வாரி, வாரி வழங்கினாரா என்பது அவரது விளக்கத்தில்தான் சொல்லவேண்டும். அதில் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் ஏதோ புகழ் வருகிறது என்பதற்காக, நண்பர்கள் ராஜா கூறிய ஏற்பாடுகளையும், ஜகத் கஸ்பர் செய்த ஏற்பாடுகளையும் ஏற்றக்கொண்ட கனிமொழி இன்று அவற்றில் சிக்கியுள்ளார்.


: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு முன்னால் சென்னையில் கனிமொழி தொடர்புடைய கலாசாரத் தொண்டு நிறுவனம் (என்ஜிஓ) ஒன்றுக்கு டெலிகாம் கம்பெனிகள் பல லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த பணப்பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கோரினார். இது குறித்து அடுத்த விசாரணை.யின்போது பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி இருவரும் கூறினர்.
தொலைதொடர்புத் துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தபோது 2008 ஜனவரி 10-ம் தேதி இந்த நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை பெற்றுள்ளன. அதற்கு 5 நாள்களுக்கு முன்பு சென்னை சங்கமம் கலாசார நிகழ்ச்சிக்காக அதை நடத்திய என்ஜிஓவுக்கு யூனிடெக் நிறுவனம் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. அதேநாளில், அதாவது 2008 ஜனவரி 5-ம் தேதி டாடா டெலி சர்வீசஸ் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளது. இந்த இரு பட்டுவாடாக்களும் காசோலை மூலமே நடந்துள்ளன.


யார் யாருக்கு லைசென்ஸ் கிடைக்கப்போகிறது என்று தகவல் சில நிறுவனங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. லைசென்ஸ் வழங்கப்படுவற்கு மூன்று நாள்களுக்கு முன் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் 25 லட்சம் ரூபாயும் ஷியாம் டெலிகாம் லிமிடெட் ஒரு லட்சம் ரூபாயும் சென்னை சங்கமத்துக்கு வழங்கியுள்ளன. இந்தப் பட்டுவாடாக்களும் காசோலை மூலமே நடந்துள்ளன அதன்மூலம் சிக்கியவர் யார்? சிக்க வைத்தவர்கள் யார்? என்பது உலகுக்கு புரியுமா? எல்லோரும் நாளது என்று எண்ணித்தான் செய்தனர்.ஆனால் அது சிக்கலில் கொண்டு போய் விட்டு விட்டது என்கிறீர்களா?

ஜன லோக்பால் சட்டம் வந்தாலும், அமுலாக முடியுமா?

லோக்பால் மசோதா ஊழலை ஒழிக்க வருகிறது. சரி. நல்லதுதான். இல்லை. வரவில்லை. 42 ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு வராமல் அதை தடுத்துவிட்டார்கள். ஒ. அப்படியா.ஜனலோக்பால் சட்டமானாலும் அமுலாகுமா இப்போது அன்னா ஹசாரே எழுப்பிய நெருப்பில் அது புற்றுயிர் பெறும். நல்லதுதானே. அதற்கு ஆடஹரவாக மக்கள் நாடெங்கும் எழுச்சி பெற்றுள்ளனர் என்று ஊடகங்கள் மூலம் தெரிகிறது. அதுவும் நல்ல அறிகுறிதான். நாட்டிற்கு இப்போது பெரிய இடங்களில் நடக்கும் ஊழலையும் தடுக்க ஒரு சட்டம் வேண்டும் அல்லவா? ஆமாம், ஆமாம். கட்டாயமாக. அதை அன்னா ஹசாரே கொண்டுவருகிறார என கொள்ளலாமா? அவர் எப்படி ஆள் என்று தெரியவில்லையே? அவர் யாரை இருந்தாலும், எப்படிப் பட்டவராய் இருந்தாலும் கொண்டுவரும் ஜனலோக்பால் சட்டம் நல்லதுதானே? உண்மைதான்.

மக்கள் எழுச்சி மூலம், குடிமக்கள் சார்பாக பாதி பேர் மசோதா தயாரிப்பு குழுவில் இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு கடைசியாக ஏற்றுக்கொண்டு விட்டதே? ஆமாம், ஆமாம். அதில் இருக்கும் அப்பா சாந்தி பூஷன், மற்றும் மகன் பிரஷாந்த் பூஷன் பற்றி என்னவெல்லாமோ புகார்கள் வந்ததே? அவிஎல்லாம் இந்த அமரசிங் கிளப்பி விட்ட கதை என்கிறார்களே? இல்லாவிட்டாலும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் எந்த அவ்ழக்கிற்கும் பல லட்சம் ஒவ்வொரு அமர்வுக்கும் வாங்குபவர்கள்தானே? ஆனால் இந்த நாட்டின் மேட்டுகுடிகளுக்கு கூட, சமீபத்திய நாட்டின் அவமானம் ஊழல் குற்றங்களில்தான் என்ற கோபம் இருக்கிறதே? அதனால் அவர்களும் இதுபோன்ற மசோதா தாயரிக்க மனதார வருவார்கள்தானே? இருக்கும், இருக்கும்.

அப்படி ஒரு சட்டம் வந்துவிட்டால் இந்த மாபெரும் ஊழல்கள் நடக்காமல் இருந்துவிடுமா? அதுதானே தெரியவில்லை. சரி. நடந்துள்ள ஊழல்களின் பட்டியலிலிருந்து அதன் பண்பு என்ன என்று பார்ப்போம். அதாவது ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்குவதில் ஒரு கோடியே எழுபத்தாறு லட்சம் அரசுக்கு நட்டம் ஏற்படுத்தும் ஊழல். அதில் லாபம் பெற்றவர்கள் யார்? அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். அவர்கள்தான் இப்போது கமிசன் வாங்கியதற்காக,சிறை கம்பி எண்ணிக்கொண்டு இருக்காங்களே? முழு லாபத்தை பெற்றவர்கள் யார்? அது கார்போரேட்கள். அதாவது உலக பெரும் முதலாளிகள். அந்த முதலாளிகள் இங்கே நுழைய என்ன செய்தார்கள்? நீரா ராடியா போன்ற தனகளது வணிக தரகர்களை இறக்கி விட்டார்கள். அந்த நீரா ராடியா போன்றோர் அது பற்றி என்ன சொல்கிறர்கள்? அது வணிக தர்மம் என்கிறார்கள். அப்படியானால் அது யாருடைய வணிக தர்மம்?

உலக பன்னாட்டு மூலதன நிருவங்கலான கார்போரேட்கள் ஒரு அவ்ங்கத்தை செய்ய, தங்களது போது தொடர்பு அதிகாரி மூலம், எந்தெந்த ஆட்களுக்கு எவ்வளவு தொகைகள் கொடுக்க வேண்டும் என்று திட்டமிடுகிரரகள். அப்படி திட்டமிடுவதும், அதற்கேற்ப கொடுப்பதும் அவர்களது தொழில் தர்மம் என்கிறார்கள். அவ்வாற்று அடித்து கூறும் கார்போறேட்களை உலகம் முழுவதும் இறக்கிவிட்டிருப்பதுதானே உலகமயமாக்கல் கொள்கை. அந்த கொள்கை இருக்கும் வரை, அந்த கொள்கையை இந்திய அரசு கடைப்பிடிக்கும் வரை, இந்த கார்பொரேட் வணிகம் கோடி கட்டி பறக்கும். அதற்கு ஏற்றார்போல முடிவு செய்யும் இடத்தில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளுக்கும், கமிசன்கள் போய்சேரும்.

அப்படியானால் இந்த ஜனலோக்பால் சட்டம் வந்தாலும் இத்தகைய ஊழலை ஒழிக்க முடியாதா? இந்த சட்டம் தீவிரமாக அமுலானால் என்னதான் செய்யமுடியும்? ஊழல் செய்த ஒரு அரசியல்வாதியை உள்ளே தள்ள முடியும். ஒரு அதிகாரியை உள்ளே தள்ளமுடியும். அப்புறம்? இன்னொரு அரசியல்வாதி அதே ஊழலை அதிக கமிசனுக்கு செய்வார். இன்னொரு அதிகாரி அதே ஊழலை அதிக கமிசனுக்கு செய்வார். அபப்டியானால் ஊழல் தொடர்வதை இந்த சட்டம் ஒன்றும் செய்ய முடியாதா? ஊழலை தங்களது தொழில் தர்மம் என்று கருதும் கார்போரேட்கள் இருக்கும்வரை ஊழல் தொடர்வதை வேடிக்கை பார்க்கத்தான் முடியும்.

அதற்கு வேறு வ்ழியே கிடையாதா? இந்த கார்போரேட்கள் வருவதற்கு முன்பு, இந்தியா எப்படி இருந்தது? இந்த அளவுக்கு ஊழல் இல்லாமல் இருந்தது. அப்போது பெரும் உதலாளிகள் இந்தியாவில் இல்லாமலா இருந்தார்கள்? இருந்தார்கள். ஆனால் வாய் அடக்கி கொண்டு இருக்கும் நிலை இருந்தது. அதற்கு என்ன சட்டம் உதவியது? "ஏகபோக வணிக கட்டுப்பாடு சட்டம்" [ monopoly Trade Restriction Act ] அதாவது எம்.ஆர்.டி.பி. என்ற சட்டம் இருந்தது. அந்த சட்டம் இப்போது எங்கே போனது? நரசிம்ம ராவ் ஆட்சியில் அமெரிக்க பொருளாதார கொள்கையான காட், டன்கள், மற்றும் உலகமயமாக்கலுக்கான, தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் ஆகியவை வந்த போது, மெல்ல, மெல்ல இந்திய அரசு அந்த எம்.ஆர்.டி.பி. சட்டத்தை இல்லாமல் செய்துவிட்டது.

அப்படி ஒரு கடும் சட்டம் வந்தால் நல்லதா? அதுபோல ஒரு " கார்பொரேட் வணிக கட்டுப்பாடு சட்டம்" கொண்டுவராமல், இந்த பெரும் மகா ஊழல்களை தடுக்க எந்த சாத்தியமும் இல்லை. அப்படி சட்டம் வந்தால்தான் ஊழலை செய்த கார்போறேட்களுக்கு அபராதாம் போட்டு, அவர்களை வணிகம் செய்யவிடாமல் தடை கொடுக்கலாம். இந்த உண்மை ஆனா ஹசறேக்கு தெரியாதா? அவர் அரசியல் பொருளாதாரம் பற்றிய அறிவு பெற்றவர் அல்ல. அதுமட்டுமின்றி அவர் கார்போஎட்களுக்கு எதிரான கொள்கை கொடவர்கா தெரியவில்லை. சரி. இந்த விவரம் சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன் வகையறாக்களுக்கு விளங்காதா? அவர்கள் தனகளது தொழிலில், தினசரி கார்போறேட்களை சார்ந்து இருப்பவர்கள். அப்படியானால் மறுபடி இந்த விவரத்தை பொதுமக்கள் தான் எடுக்க வேண்டுமா?