Thursday, May 5, 2011

கனிமொழி கைது ஒரு தயாநிதி சதியா?

குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்து இந்த சதி அரங்கேறப் போகிறது. நாளை மே ஆறாம்நாள், டில்லியில் சீ.பி.ஐ. நீதிமன்றத்தில், ஏற்கனவே குற்றப் பட்டிஹ்திரிகையில் சேர்க்கப்பட்ட கனிமொழியும், கலைஞர் காட்சி ஊடக மேலாண்மை இயக்குனர் சரத் குமார் ரெட்டியும், கைது செய்யப்படுவார்கள் என்பதும், அவர்களுக்காக வாதாட நியமிக்கப்படும் ராம்ஜெத்மாலினி எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு பிணை கிடைக்காது என்பதும், மன்னர் குடும்ப தலைவரான தலைவர் கலைஞருக்கு தெரிந்த செய்தியாக இருக்கிறது.

கனிமொழியின் மனச்சாட்சியிடம் பேசினால், தான் நேரடியாக எந்த பரிமாற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதையே அது சொல்கிறது. மூத்தாள் குற்றம் செய்தால் கேட்காது உலகம், ஆனால் இரண்டாம் மனைவி வீட்டு பிள்ளைகள் என்றால் இலகாரம்தான் என்பது தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இருந்து, நகரங்கள் வரை உலாவும் ஒருவித நிலப்பிரபுத்துவ பண்பாடு. அதனால்தான் மூத்தாள் வீட்டு பங்கு அறுபது விழுக்காடுஎன்றாலும், மூத்த்டால்தான் பண பரிமாற்ற நேரத்தில் இயக்குனராக இருந்தவர் என்பதும், இன்றும் கலைஞர் காட்சி ஊடக இயக்குனராக இருக்கிறார் என்பதும் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டாலும், மொத்தால் பிள்ளைகள் ஒருவர் துணை முதல்வர் என்றும், இன்னொருவர் மத்திய அமைச்சர் என்றும் இருப்பதால் அதை காரணம் காட்டி, சம்பந்தப்பட்ட சீ.பி.ஐ.அதிகார்களை ஒருவரால் தற்போதைக்கு இயக்க முடிகிறது என்று சொல்கிறது குடும்ப கணக்கு.

கனிமொழிக்கு நேரடியாக தொடர்பு இல்லையென்றாலும், ராசாத்திக்கு இருக்கிறதல்லவா என்று அந்த டில்லி வட்டாரங்கள் பதில் கேள்வியையும் கேட்கிறார்கள். ஆனால் பங்கு என்பது எல்லோருக்கும் அதாவது அண்ணன், தம்பி எல்லோருக்கும் போயுள்ளதே என்கிறது மறு தரப்பு. எது எப்படியோ இது குடும்பத்திற்குள்ளே இருந்து கொண்டே குழி பறிக்கும் செயல்தானே என்று அந்த தயாநிதி பற்றி அவர்கள் பேசுகிறர்கள். அப்படியானால் டில்லி திஹார் சிறையில் பங்களுக்கு தனி பிரிவு இருக்கிறதா என்றால் அதுவும் இருக்கிறது என்கிறார்கள். அன்கேவ் கனி இருந்தால், அதே இடம் மூத்தாளுகும் கிடைக்க வேண்டுமே என்று நியாயம் பேசுவோர் கேட்கிறார்கள்.

சரி.இது இரண்டவத்சு வெளியிடப்பட்ட குற்றப்பத்திரிகை அதாவது துணை குற்றப் பத்திரிக்கை எண்: ஒன்று என்றால், அடுத்து துணை குற்றப் பத்திரிக்கை எண்: இரண்டு எனபதில் என்ன வரும் என்று கேட்டோம். அதில் பணம் எடுத்துய் சென்றது வரும். சரி. அப்படியானால் ராஜா மூலம் வந்த கமிசன் பணம் வெளிநாடுகளுக்கு சென்றது பதிவு செய்ய்ப்படும். அதுவும் ஏற்கனவே குற்றப் பத்திரிகையில் உள்ளவர்களை பற்றியே மீண்டும் வரும். அத்தோடு சரியா? என்றால் இல்லை. 2001 ஆம் ஆண்டிலிருந்து .ச்பெக்டறம் விற்பனையில் முதலில் வருபவருக்கு, முதலில் கொடுத்தது என்ற அடிப்படையில் வேண்டிய நிறுவனங்களுக்கு கொடுத்து, அதற்கு பதில் கமிசன் வாங்கி கொண்டதும் வரும் என்றனர். அது என்ன? என்றால், அப்போது அமைச்சராக இருந்த அருண் ஷௌரியும், அடுத்து அமைச்சர்கா இருந்த தயாநிதியும் வருவார்கள் என்றனர். அதில் தயாநிதியின் சன் காட்சி ஊடக டீ.டி.எச்.க்கு, 765 கோடி பணம் கைமாறியது என்ற ஒரு குற்றச்சாட்டும் சேர்க்கப்படும் என்கிறர்கள்.

முதலில் தனது போட்டியாளரான கனிமொழியை ஒழித்து விடலாம் என்றும், பிறகு தனக்கு வருவதற்குள் குழப்பி விடலாம் என்றும் தயா நினைக்கலாம். ஆனால் அவரால் பாதிக்கப்பட்ட டாடா நிர்வாகம் எப்படி சும்மா இருக்கும்? அதுவும் இதே நியாயங்களின் அடிப்படையில் பழி வாங்காதா?

மூன்று கண்டங்களை கடக்க முனையும் முதல்வர்.

இப்போது தமிழக முதல்வருக்கு இதுவரை வாழ்க்கையில் சந்திக்காத இடர்பாடுகளை சந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. கூட்டணி கட்சியுடன் தேர்தலை சந்தித்து பிறகும் கூட, மத்திய கூட்டணி ஆட்சியிலேயே பெறும் துன்பங்களை ஒருசேர சந்திக்கிறார். தனது தலைமையிலான கட்சியில், அண்ணாவால் உருவாக்கப்பட்டு பல முறை தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து, மீண்டும் ஒரு சட்டப்பேரவை தேர்தலை சந்தித்துவிட்டு, இளைப்பாறும் நேரத்தில் இப்படி சோதனையா என்று எண்ணிப்பார்க்க வைக்கிறது. மத்திய அரசில் இருக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்புகளுடன் அங்கம் வகிக்கும் கட்சி திமுக.

திமு கழகம் என்பது ஒரு குடும்பம் என்று கலைஞர் சொல்லிவந்த நிலை மாறி, இப்போது தனது குடும்பமே கழகம் என்று கூறும் நிலையை அதாவது குடும்பத்திற்கான உயர் நிலையை அடைந்துவிட்ட காலம் இது. அத்தகைய காலத்திலும் மத்திய அமைச்சர்களில், தனது குடும்பத்தை சேர்ந்த மு.க. அழகிரி, தனது மருமகன் மாறன் மகன் தயாநிதி மாறன், ஆகியோரை அமைச்சர்களாக அமர்த்தி, கலைஞர் அழகு பார்க்கும் காலம் இது. அப்படிப்பட்ட காலத்திலேயே இப்படி ஒரு இன்னலா? அந்த காங்கிரஸ் தலைமையின் நேரடி வழிகாட்டலில் செயல்படும் மத்திய அரசின் இரும்புக் கரமான சீ.பி.ஐ. என்ற ஒரு ஆக்டோபாஸ் பிடியில் தங்கள் குடும்பமும், அதன்மூலம் கழகமும் சிக்கி விட்டதே என்று எண்ணி, எண்ணி, மாய்ந்துகொண்டு இருக்கும் நிலைக்கு கலைஞரை தள்ளியது எந்த சக்தி?

முதலில் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான ஆ.ராஜாவை ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டில் திஹார் சிறையில் அடைத்துவிட்டனர். அடுத்து மகள் கனிமொழியை சீ.பி.ஐ. தனது ச்பெக்டறம் வழக்கில், துணை குற்றப்பத்திரிகை என்று ஒன்றை உருவாக்கி அதில் சேர்த்துவிட்டனர். அந்த கனிமொழிக்கு மே ஆறாம் நாள் சீ.பி.ஐ. விசாரணை எனும் சமன் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்த நேரம் கனிமொழி கைது செய்யப்படுவாரா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக ஆகிவிட்டது. டில்லிக்கு கனிமொழியுடன் கழக எம்.பி..க்கள் டி.கே.எஸ்.இளங்கோவனும், டி.ஆர்.பாலுவும் சென்றுள்ளனர்.அடுத்து ராஜாத்தி அம்மாள், விஜயா தாயன்பன், மாநில அமைச்சர் பூங்கோதை ஆகியோருடன் மாநில உள்துறை செயலாளர் ஞானதேசிகனும் சென்றதாக ஒரு செய்தி. அது உண்மையானால் அதுகூட எதிர்காலத்தில் இன்னொரு குட்ரகுச்சாட்டாக எழுந்துவிடும். அரசு அதிகாரிகளை தனது குடும்ப பிரச்னைக்கு பயன்படுத்தினார் என்று கூட குற்றச்சாட்டு எழலாம்.

எப்படியோ இந்த முதல் கண்டமான மே ஆறாம் நாள் எனபதை கடக்கவேண்டுமே என்று கலைஞர் நினைக்கிறார். அடுத்து அதில் கைது செய்யப்பட்டாலோ, அல்லது பிணையில் வந்தாலோ, அடுத்து மே பன்னிரெண்டாம் நாள், அமுலாகக பிரிவு கனிமொழிக்கு நேரில் ஆஜராக சமன் அனுப்பியுள்ளது. அதில் என்ன நடக்குமோ என்பது இரண்டாம் கண்டம் என்று அவருக்கு படும். அதையும் அடுத்து மூன்றாம் கண்டம் மே பதிமூன்றாம் நாள் வெளிவரப்போகும் தேர்தல் முடிவுகள். அதில் தானும், தனது குடும்பமும் [ கட்சியும்] ஆட்சியை இழந்தால் உறுதியாக வழக்குகளில் பின்னப்பட்டு சிறைஎக வேண்டியிருக்கும் என்பதும் இன்னொரு புறம் மிரட்டிக் கொண்டு இருக்கிறது. ஆக இந்த பகுத்தறிவுவாதிக்கு, மூன்று கண்டங்களை இந்த மாதம் கடக்க செய்துள்ளது.