Saturday, April 30, 2011

கொழும்புக்கு சென்னை கொடுத்த பதிலடி.

இன்று ஏப்ரல் கடைசி நாளன்று, சென்னை தமிழ்நாடு சார்பாக , கொழும்புக்கு எதிராக திரண்டு வந்தது. அதாவது நாளை மே முதல் நாளன்று மஹிந்த ராஜபக்ஷே , ஐ.நா.வின் நிபுணர் குழு அறிககையை எத்ரித்து பெறும் பிணியை நடத்த இருப்பதாக செய்தி வந்தபோது, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு கொந்தளித்தது அதன் விளைவாக " நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம்" ஒரு பேரணியை ராஜபக்சேக்கு எதிராக, அவர் மீதானா ஐ.ந. நிபுணர் குழு முன்வைத்த ' போர்குற்றங்களை விசாரித்து தண்டிக்க வேண்டி, அகில உலக சமூகத்தை கேட்டுக்கொண்டு" ஒரு பேரணியை முந்திய நாளான ஏப்ரல் முப்பதிலேயே நடத்த திட்டமிட்டனர். தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்க, மீனவர் தலைவர் அமரர் ஜீவரத்தினம் மகள் டாக்டர் பானுமதி பாஸ்கர் துவக்க உரை நிகழ்த்த , பேரணி சரியாக குறிப்ப்பிட்ட நான்கு மணிக்கே, சென்னை கடற்கரை கண்ணகி சிலையிலிருந்து தொடங்கியது.

ஊர்வலத்தில் பல தமிழர் அமைப்புகள் கலந்துகொண்டாலும், சிறப்பு அம்சமாக, பல்வேறு மீனவர் அமைப்புகளும், மனித நேய மக்கள் கட்சி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய தௌஹித் ஜாமாத், போன்ற முஸ்லிம் தமிழர் அமைப்புகள் கலந்துகொண்டது முக்கிய செய்தியாகும். அது தவிர தமிழக மீனவர்கள், இந்தியா மட்டைபந்து விளையாட்டில் வெற்றி பெற்றதற்காக, சிங்கள கடல்படை வெறியர்களால் அன்று இரவே கொலை செய்யப்பட்டு அவரகளது உடல்கள் சின்ன, பின்னப்படுத்தப்பட்டு கடலில் எறியப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ராமேஸ்வரம்--தங்கச்சி மடத்தை சேர்ந்த நான்கு மீனவர்களான கொல்லப்பட்ட விட்சன், அன்தனிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகியோரது படங்களை மீனவ இளைஞர்கள் தூக்கி வர, அவற்றிக்கு பானுமதி பாஸ்கர் மாலை அணிவித்து மலர்கள் தூவ, மடர்வர்களும் மலர்கள் தூவிய காட்சி வந்திருந்த அனைவர் மனிதிலும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த ராஜபக்ஷே உருவம் அணிந்த ஒருவர் கைது செய்யப்பட்டு இழுத்துவரப்பட்டது சிறப்பாக இருந்தது. முஸ்லிம் அமைப்புகளின் கொடிகள், தமிழர் அமைப்புகள் கொடிகள், மற்றும் பல மீனவர் அமைப்புகளின் கொடிகள் அங்கே குவிந்து வந்தது முழு தமிழகமும் வந்தது போல இருந்தது. புதிய தமிழகம் கோடிகளுடன் கலந்து கொண்டது. நாம் தமிழர் அமைப்பு கோடிகளுடன் கலந்து கொண்டது. தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம், இந்திய மீனவர் சங்கம், அகில இந்திய பாரம்பர்ய மீனவர் சங்கம், தென்னிதிய மீனவர் பேரவை, போன்ற பல மீனவர் அமைப்புகளுடன், காஞ்சி மக்கள் மன்றம், காஞ்சி தமிழர் உலகம், ஆகியனவும், யாதவர் மஹாசபாவும், கட்டிட தொழிலாளர் சங்கமும், கலந்து கொண்டன. இறுதியில் ஒவ்வொரு அமைப்பை செர்ந்டஹ்வைர்களும் கண்டன உரை நிகழ்த்தினர். பெண்கள் அதிகம் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் ராகவேலு, அருள், பாண்டிமாதேவி, அஜிதா, ஆகியோரும் கலந்துகொண்டனர். தியாகு, டி.எஸ்.எஸ். மணி, விடுதலை ராஜேந்திரன், குணசீலன், தயாளன், மகேஷ், ரூபேஷ், கபடி மாறன், அயோத்தியா குப்பம் மக்கள், தமீம் அன்சாரி, எஸ்.எம்.பாகர், திரைப்பட இயக்குனர் கௌதமன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.