Monday, April 25, 2011

ஈழ அகதிகள் பட்டினி போர் மருத்துவமனையிலுமா?

ஈழ அகதிகள் பட்டினி போர் மருத்துவமனையிலுமா?
பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாம் என்ற பெயரில், தமிழக அரசு ஈழ அகதிகளை பிடித்து வைத்துள்ள சிறையில் கடந்த ஒருவாரத்திற்கு மேல், பட்டினி போர் நடத்தும் நாலு ஈழ அகதிகளை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலிஈட்டில் சென்னை பெரிய அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டால், அங்கும் அவர்கள் தங்களது சட்ட விரோத காவலை எத்ரித்து பட்டினிபோரை தொடர்கீறார்களே?

முத்துலட்சுமிக்கு உண்மையில் விடுதலை.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக காவல்துறை பொய் வழக்குகள் போட்டு தனது வெறியை ஆற்றிக்கொண்டது. அவர் சிறையில் முடக்கப்பட்டார். வீரப்பன் மறைவுக்கு பிறகும், அவரது பெயரை வைத்து மாணவி முத்துலட்சுமி சமூக, அரசியல் பயன்களை மேற்கொல்வாரோ என்று அஞ்சி நடுங்கிய ஆளும்வர்க்கம் அவரை சிறையில் போடுவதன் மூலம் மனித உரிமைகளை கொலை செய்தது.

ஆனால் வழக்கறிஞர்களது வாதங்களும், நீதியரசர்களின் துலாக்கோலும் முத்துலட்சுமியை கர்நாடகா ஆரசு போட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்தது. அதை ஆத்திரமடைந்த கர்நாடக காவல்துறை, தனது மனித உரிமை மீறலின் கூட்டாளியான தமிழக காவல்துறையிடம் கூறி நீ வந்து பிடி என்றது. இதேபோன்ற பொய் வழக்குகளை அதாவது வீரப்பன் மீது போடப்பட்ட னைத்து குற்றவியல் வழக்குகளையும், முத்துலட்சுமி மீதும் மனைவி என்ற காரணத்தால் போட்டு மீண்டும் சிறையில் தள்ளலாம் என்பது இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கும் உள்ள அவா.

அந்த முறையில் தமிழக காவல்துறை வரை கைது செய்ய, அதைவைத்து கர்நாடக காவலர்கள் அவரை பெங்களூர் சிறையிலேயே அடைத்துவிட்டனர்.இன்று கோபி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த கர்நாடக காவலதுறை மற்றும் தமிழக காவல்துறை முன்னால், நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு வந்தது. அதில் வழக்கறிஞர் பாப்பா மோகன் வாதிட்டார். கோபி நீதிமன்றம் முத்துலட்சுமிக்கு சிறை தேவை இல்லை என்று கூறி, அவரை வழக்குக்கு மே மாதம் வரும்படி பணித்து விடுதலை செய்தது. பெங்களூர் சிறையிலிருந்து வெளிவந்ததால், அந்த கோபி நீதிமன்ற உத்தரவை பெங்களூர் சிறையில் காட்டி பிறகுதான் விடுதலை செய்யமுடியும். ஆகவே அவர் நாளை [ 26 ஆம் நாள் ] கலை பெங்களூர் சிறையிலிருந்து காலை ஒன்பது மணி சுமாருக்கு விடுதலை ஆகிறார்.

புட்டபரத்திக்கே அல்வா கொடுத்த ஆசாமிகள்.

புட்டபரத்தி சாய்பாபா மரணமடைந்தார். எல்லா மனிதர்களுக்கும் சம்பவிக்கும் ஒரு நிகழ்வுதான். ஆனால் ஆன்மீக நம்பிக்கை உள்ள உலகில், பல மக்களுக்கு மனது ரீதியாக ஆறுதலாக இருந்த ஒரு மனிதர் மரணமடைந்ததை அவர்கள் அக்கறையுடன் வருந்துவார்கள். அதனால் அவரகளது மனம் புண்படும் செய்திகளை இப்போது பேச வேண்டாம். ஆனால் அதேசமயம் ஆசாமிகள் யாரும் சாமிகளாக இருக்க முடியாது எனபதையும் சொல்லிவைப்போம். சரி. அவரது மறைவுக்குப்பின், 40000 கோடி என்று தொடங்கி, ஒன்றரை லட்சம் கோடி என்று அவரது சொத்து மதிப்பை அக்னக்கு சொல்கிறர்கள். இந்தியா ஏழைகள் உள்ள நாடு. அதனால் பணம் சேர்த்த யாரையும் பார்த்து நமக்கு இறக்கம் வருவதில்லை.

2007 ஆம் ஆண்டு சாய்பாபா சென்னை வந்தார்.அப்போது இங்குள்ள மன்னர் குடும்பத்துடன் ஐக்கியமானார். கலைஞர் குடும்பம் வாழும் கோபாலபுரம் சென்றார். தயாநிதிக்கும், தயாளுவுக்கும், ச்டநிக்கும், தங்க மோதிரத்தை வரவழைத்து கொடுத்தார். அங்கே நின்ற அமைச்சர் துரைமுருகன் எனக்கும் ஒன்று என்று ஓசியில் வருவதை என் விடவேண்டும் என்று கையை நீட்டினார். பகுத்தறிவு தந்தை பார்த்துக்கொண்டே இருந்தார்.அப்போது கிருஷ்ணா நதி நீர் வருவதற்கு கால்வாய் தோண்ட 200 கோடி தனது அறக்கட்டளையிலிருந்து கொடுத்தார். அந்த உறவில்தான் இப்போது முதல்வர் கலைஞர் வறுத்த செய்தி தருகிறார். தளபதி ஸ்டாலின் நேரில் சென்று மாலை வைக்கிறா இவையெல்லாமே நடந்த செய்திகள்.

ஆனால் உண்மையில் நடந்த செய்தி என்று ஒன்று சென்னையில் பவனி வருகிறது. அது அறிவாலயம் அருகே உள்ள ஆபத்ச்பெரி கல்யாணமண்டபம். அருகே "ஹில்டன் ஹோட்டல்" என்று ஒன்று பெரிதாக கட்டப்பட்டு வந்தது. அந்த கட்டிட வேலைகள் திடீரென அந்த ஆண்டில் நிறுத்தப்பட்டன. மாநகராட்சி தந்தி விதிகள் படி நிறுத்தியது என்றார்கள். அந்த ஹோட்டலின் பங்குதாரர்கள் பெறும் பங்கு உள்ள அறக்கட்டளையின் அதிபர் சாய்பாபாவிடம் முறையிட்டார்கள். அவரே நேரில் வந்தால்தான் தீர்க்க முடியும் என்றார்கள். விஷயம் ஆளும் மன்னர் குடும்பம் சம்பந்தப்பட்டது என்றார்கள். வந்தார் சாய்பாபா. இதுவரை செல்லாத அரசியல்வாதிகளிடம் அதுவும் நாத்திகம் பேசிவரும் பெரிய அரசியல்வாதி குடும்பத்திற்கே சென்றார். சாய்பாபா கலைஞர் இல்லம் தேடி வருவதா என்று எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். அப்போது செய்துகொண்ட ஒப்பந்தம்தான் தளபதிக்கு அந்த ஹில்டன் ஹோட்டலிலும் பங்கு கிடைத்தது. அதனாதான் இந்த உறவு என்று புதிதாக கூறுகிறார்கள். நாம் ஆளும் மன்னர்களையோ, ஆன்மிக சித்தர்கலையோ சந்தேகிக்காத மனிதர்கள் என்பதால் இந்த செய்தி நமக்கு எதற்கு என்று விலகியே இருக்கிறோம்..
.