Thursday, April 21, 2011

பறக்கும் பாலம் பறந்தே போச்சா?

கலைஞர் அரசு சென்னையை மையமாக வைத்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் மற்றும் இன்னபிற கார்பரேட் நிறுவனங்கள்தான் உதவியாக இருக்கும் என்ற ஆய்ந்த முடிவின்படி ஏற்பாடுகள் செய்தார். அவர் ஆண்ட கடைசி ஐந்தாண்டும் தமிழ்நாட்டை கார்பரேட்களின் நலனுக்கு என்ற வகையில் பிரித்து கொடுத்து, டில்லி தந்த வாய்ப்பில் காற்பறேட்களுக்கு உதவி செய்து அதில் தங்களுக்கு கிடைத்த உதவி தொகையான கமிஷனை மட்டுமே எடுத்துக்கொண்ட குடும்பம் எனும் நற்பெயரையும் கார்பரேட்களிடம் பெற்றுள்ளார்.

அப்படி செய்த பணிவிடைகளில் கிடைத்த சிறு உதவி தொகையை இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று அழைக்கிறார்கள்.அவ்வாறு செய்த உதவிகளில் ஒன்றுதான் சென்னையில் உள்ள வணிக துறைமுகத்தை பெரிதாக்குவதும், சிறு துறைமுகங்கள் என்ற பெயரில் தமிழ்நாடெங்கும் கடலோர மாவட்டங்களில் இதுபோன்ற சிறு துறைமுகங்களில் அந்நியநாட்டு ஒப்பந்தங்களை அளிப்பதில் மத்திய அரசுடம் சேந்து கொண்டு முடிவு செய்து அங்கும் மீனவர் வாழ்நிலையை கெடுக்க ஏற்பாடு செய்வதில் கெட்டிக்காரத்தனமான வேலையை வெற்றிகரமாக செய்துவிட்டார். இப்போது புரியாத மீனவர்கள் ஒருகட்டத்தில் இவை அனைத்துமே மீனவர்களை கடல்கரையை விட்டு வெளியேற்றி கரைகளை அந்நிய நாட்டு உடமையாக ஆக்கத்தான் என்பதை புரிந்துகொள்வார்கள்.

அந்த வரிசையில்தான் பறக்கும் மேம்பாலங்களும் வந்தன.அதாவது திட்டமிடப்பட்டன. ஒன்று போர் நினைவுதூனிலிருந்து மதுரவாயில் செல்லும் மேம்பாலம். அது அமிஜிகரை மக்கள் வீடுகளை இடிக்கும் மேம்பாலம். மக்கள் மத்தியில் பெறும் எதிர்ப்பு வந்தது. அடுத்து கலங்கரை விளக்கிலிருந்து, தென்சென்னையில் கொட்டிவாக்கம் வரையிலான பறக்கும் மேம்பாலம். இவை இரண்டுமே வணிக துறைமுகத்திலிருந்து வெளியே வரும் கார்பரேட் கண்டைனர்களை கொட்னுசெள்ள போடப்படும் என்பதுதான் கலைஞர் அய்யா அந்த பெரு முதலாளிகளுக்கு கொடுத்த வாக்குறுதி.

அதன்படி கீழே உள்ள மீனவர் குப்பங்கள் உடையட்டும். ஆனால் பன்னாட்டு நிறுவனகள் வாழவேண்டும் என்ற அரச குடும்பத்தின் ஆசை. இதை எதிர்த்து பல போராட்டங்கள். மீனவர்கள், சுற்றுப்புற சூழல்வாதிகள் நடத்தியும் கவலைப்படாத கலிஞர் அரசு இப்போது உயர்நீதமன்றம் முன்னால், அந்த திட்டம் பற்றி பரிசீலனையில்தான் இருக்கிறது, இன்னமும் நுடிவு செய்யவில்லை என்று பின்வாங்கியுள்ளார். மக்கள் எத்ரிப்பு தனக்கு எதிராக மக்களை வாக்களிக்க செய்துவிட்டது என்று உணர்ந்த பின்னால் அதற்கான காரணங்களை கண்டு பிடித்து, இனி தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்றால் இதுதான் வழி என பின்வாங்குகிறார்.
.