Saturday, April 16, 2011

ஐ.நா.வின் இலங்கை போர்குற்ற அறிக்கையில் புலிகளை குறை சொல்வது நியாயமா?

ஐ.நா.மகிந்தா அரசின் மனித உரிமை மீறல்களை, தனது நிபுணர் குழு அறிக்கை மூலம் கடுமையாக கண்டித்துள்ளது. அதில் அனைத்து நாட்டு மனித உரிமை தரங்களுக்கு கட்டுப்படாத இலங்கை என்பதை தெளிவாகவே சுட்டி காட்டுகிறார்கள். போது மக்களை போர் நேரத்தில் பாதுகாக்காத, அவர்கள் மீது குண்டுமழை பொழிந்த , போது மருத்துவமனைகளை தாக்கிய, மருந்துகளை மக்களுக்கு போகவிடாமல் தடுத்த, அனைத்து நாட்டு செஞ்சிலுவை சங்கம், ஐ.நா.வின் உதவி அமைப்புகள் ஆகியவற்றை செயல்பட விடாத, ஊடக சுதந்திரத்தை அனுமதிக்காத இலங்கை அரசின் கொடூரங்களை வரிசையாக அதில் பட்டியலிட்டுள்ளது. அதனால்தான் கோத்தபாயேவால் அந்த அறிககையை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதேசமயம் இருபுறம் உள்ள படைகளையும் குற்றம் சொன்னால்தான் தங்கள் அறிக்கை இருக்கும் சிக்கலான சூழலில் எடுபடும் என்று அந்த நிபுணர்கள் எண்ணினார்களோ என்னவோ. அவர்கள் புலிகள் பக்கத்திலும் மீறல்கள் நடந்ததாக சிலவற்றை பட்டியலிடுகிறார்கள்.

அதில் தமிழ் மக்களை பதுங்கு குழிகள் தோண்ட நிர்ப்பந்தப் படுத்தியது, சிறுவர் உட்பட அனிவரையும் ஆயுதபாணியாக்கியது போன்ற குற்றச்சாட்டுக்கள் போர் நேரத்தில் நடக்கின்ற சாதாரண நிகழ்வுகள் என்ற புரிதல் அந்த நிபுணர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை கேடயமாக புலிகள் பாவித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு நாம் பதில் சொல்லித்தான் ஆகவேணும். அங்கே அந்த அறிக்கையின்படியே அரசியல் தீர்வை உருவாக்க எந்த முயர்ச்சியும் செய்யாத இலங்கை அரசு, வன்னியில் போரை நடத்தி, அப்பாவி மக்கள் மீது விமான குண்டு வீச்சை நடத்தியது என்கிறார்கள்.தேசிய இனங்களுக்குள் இப்படி ஒரு போர் நடக்கும் சூழலில், கிழக்கிலிருந்து தனது படையை புலிகள் திரும்ப அழைத்த போதிலிருந்து அவர்கள் ஒரு தற்காப்பு போரைத்தான் நாத்தி வந்தார்கள். அப்போது மன்னார் மாவட்டத்தில் பேசாலை தேவாலய தாக்குதல் உட்பட, அப்பாவி பொதுமக்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதலால் மிரண்டுபோன தமிழ்மக்கள் கொத்து,கொத்தாக ஓடிபோய், தமிழர் படையுடன் உள்ள விடுதலை பகுதிக்குத்தான் செல்வார்கள். ஏன் என்றால் அது ஒரு இன ரீதியான போர். அதனால்தான் னைவரும் பாதுகாப்பு தேசி கிளிநொச்சி சென்றார்கள்.

மேகண்ட உண்மையை நாம்தான் உலகிற்கு எடுத்து சொல்லவேண்டும். அதனால் விடுதலை புலிகள் மக்களை கேடயமாக பாவிக்கவில்லை. மக்கள்தான் விடுதலை புளிகளிடம் அடைக்கலம் தேடினார்கள். அதாவது மக்கள்தான் புலிகளை தங்களுக்கான கேடயமாக பாவித்தார்கள்.நான் ஒவ்வொரு நாள் போர் நிகழ்வையும் காட்சி ஊடகம் மூலம் விவரித்து வந்தவன். அந்த 2008 அக்டோபர் முதல் 2009 மே வரை ஒவ்வொரு நாளும் என் நினைவுகளில் பதிந்து இப்போது நினைவுக்கு வருகின்றன.அதனால் அந்த இரண்டு லட்சம் உள்நாட்டு இடம் பெயர்ந்த தமிழர்களையும் சிங்கள ராணுவம் துரத்தியதால் அவர்கள் கிளிநொச்சிக்கு வந்ததும், பிறகு துரத்தியதால் மூன்றரை லட்சம் தமிழர்களும் முல்லைத்தீவுக்கு வந்ததும் பசுமரத்தாணி போல நினைவில் பதிந்துள்ளன. ஆகவே போரில் பின்னடைவு என்பதற்காக புலிகளை குறை சொல்ல நாம் அனுமதிக்க முடியாது.