Friday, April 15, 2011

பணம் கொடுத்தும், திருப்பி அடிக்கிறானே?

அய்யா. திமுக பணம் கொடுத்தது உய்னமைதான். அதை திமுககாரர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் வாதம் இப்போது வேறு. அதாவது தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு வெளிவந்த கருத்து கணிப்பில் எல்லாம் எங்கள் திமுக தோற்கும் என்று வந்தது உண்மைதான். ஆனால் நாங்கள் அதற்குபிறகு அனேகமாக எல்லா இடங்களிலும் பணம் கொடுத்துள்ளோமே? பணம் வாங்கியவர்கள் எப்படி எங்களுக்கு போடாமல் இருப்பார்கள்? இதுதான் இப்போது திமுகவின் வாதம்.

இன்னும் ஒருமாதம் இருக்கிறது வாக்கு எண்ணிக்கை நடக்க. அதற்குள் திமுக தோற்கும் என்ற நிலையை அவர்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்த தயாரில்லை. அல்லது அப்படி ஒப்புக்கொள்ள தயாரில்லை. அதற்காக சில தர்க்க வாதங்களை கிளப்பி விடுகிறார்கள். அதில் இதுவும் ஒன்று. திமுக செய்த நல்வாழ்வு திட்டங்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்கிறார்கள். அது என்ன நல்வாழ்வு திட்டம் என்று கேட்டால், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்கிறார்கள். அதுமட்டுமல்ல கலைஞட் காப்பீட்டு கழகம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல வண்ண தொலைக் காட்சி என்கிறார்கள். எழுபாதயிரம் ரூபாய்க்கு வீடு கட்டி கொடுத்து, குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றியமை என்கிறார்கள். இவைகள் எல்லாமே உண்மைதான். இவற்றிற்கு ஒரு பிரிவினர் அதாவது அதனால் லாபம் பெற்றோர் அதாவது வறுமையின் எல்லைகூட்டிற்கு கீழே உள்ளவர்களில் ஒரு பிரிவினர் வாக்கு போட்டிருக்க கூடும் என்பது உண்மைதான்.

ஆனால் அதுமட்டுமே இன்று தேர்தலை தீர்மாநித்திருக்குமா? நாங்கள் கொடுத்த பணத்திற்கு நன்றி காட்டமாட்டார்களா? என்று வினவுகிறார்கள். அதனால்தான் வாக்கு பதிவு இதுவரை இல்லாத அளவில் வரலாற்று காணாத அளவில் 77 விழுக்காட்டை தாண்டுகிறது என்கிறார்கள். புதிதாக வாக்காளர்களாக சேர்ந்துள்ள என்பது லட்சம் இளைஞர்கள் எங்கே போட்டிருப்பார்கள்? என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. உங்கள் தலைமை கொடுத்த பணம் முழுவதும் மக்களுக்கு பொய் சேர்ந்தததா? எவ்ன்றால் அவர்களிடமிருந்து பதில் இல்லை.

திமுக தொண்டர்கள் திமுக தலைமைக்கு முன்பு போல விசவாசமாக இருக்கிறார்களா? என்றால் பதில் இல்லை. அதனால் கொடுத்தனுப்பிய பணமும் முழுமையாக மக்களிடம் போயசெரவில்லை என்றால் அதற்கும் பதில் இல்லை. இலவசம் மற்றும் பணம் பற்றி மட்டுமே தேர்தலை சிந்திக்கிறார்கள். வழமையான அரசு எதிர்ப்பு உணர்வு பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. ஏறிவரும் விலைவாசி பாத்தித்த்டிருக்குமா என்றால் தெரிவதில்லை. எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள குறைகளை அதாவது அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளை பற்றி மட்டுமே சிந்த்த்டித்து வரும் ஹிமுக தொண்டரால் இன்றும் புரியப்போவது இல்லை.

பணம் கொடுத்தவர்களால பணம் வாங்கியவர்களின் வாக்குகளை பிசிறில்லாமல் உதய சூரியனுக்கு போடவைக்க முடியுமா என்றால் திமுக தொண்டர்கள் முழிக்கிறார்கள். சென்னையில் தொண்ணூறாம் வட்டத்தில் நாட்டும் பகுதி செயலாளர் காமராஜ் ஹான்கள் கொடுத்த பணம் பெற்றவர்கள் சரியாக போடுகிரரகளா? என்று சோதிக்க வாக்கு அளிக்கும் இடத்திலேயே ஆள் போட்டிருந்தார். அவர்கள் கூட 9000 வாக்குகளில் 6000 வாக்குகள் தான் பெறமுடிந்தது என்கிறார்கள். பென்னாகரம் இடைதேர்தலில் பணம் வாங்கியவர்களில் பாதி பேர்தான் வாக்களித்தார்கள் என்பது திமுக கணக்கு. அப்படியானால் இந்த போது தேர்தலில் எத்தனை பணம் வாங்கியவர்கள் வாக்களித்தார்கள் என்பது ஒரு சிறிய கணக்கு. அந்த கணக்கையும் எடுத்து பார்த்து நாம் சிந்திக்க வேண்டும்.