Tuesday, April 5, 2011

கலெக்டர் சஹாயத்தின் ஓட்டுனர் படுகொலை-எரிப்பு

சஹாயம் தொடர்ந்து நேர்மையாக செயல்படுகிறார். மேலூரில் ரகசியமாக கோவிலுக்குள் நுழைந்து அங்கேயே பணப்பாட்டுவாடா செய்தால் அதையும் பிடித்துவிடுகிறார். அங்கே முறைட்ட ஆர்.டி.ஒ. சுகுமாரனை வைத்து வழக்கு போடச்சொகிறார். தவறு செய்தால் வழக்கு போடுவது என்பது தேர்தல் ஆணைய சட்டமாக இருக்கலாம். ஆனால் மதுரையின் எழுதப்படாத சட்டம் என்ன என்று தெரிய வேண்டாமா? சுகுமாரனை வைத்தே திருப்பி அடிக்க செய்தோம். இப்படித்தான் அந்த மதுரை கூட்டம் சிந்திக்க முடியும். அடுத்து வட்டாட்சியர் காளிதாஸ் முதலில் குற்றச்சாட்டை கூறினார். தான் தாக்கப்பட்டதாக கூறினார். தாக்கியவர்கள் அழகிரி ஆட்கள் என்று ஊடகங்களிடம் முதலில் கூறியவர் கால்தாஸ். இப்போது தனக்கும், அழகிரிக்கும் எந்த மோதலும் இல்லை என்கிறார். அந்த அளவுக்கு அந்த காளிதாஸ் பயமுறுத்தப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது.

இப்போது சஹாயம் மதுரையில் இருபது லட்சத்தை திமுக பணப்பட்டுவாடா செய்யும்போது பிடித்து இருபத்திநாலு மணி நேரம் ஆகவில்லை. பணம் எடுத்து சென்றவர்கள் பற்றி விசாரணை நடைபெறுகிறது என்று வேறு சஹாயம் ஊடகங்களிடம் கூறியுள்ளார். அதனால் ஆத்திரம் வராதா வன்முறை கூட்டத்திற்கு? இப்போது சஹாயத்தின் வீட்டில் ஆயுத பாதுகாப்பு இல்லாத ஒரே ஆள் ஓட்டுனர்தான் என்று அடையாளம் கண்டு கொண்டார்களா? அவர் வெளியே தனித்து வரும்போது அதனாலேயே தாகப்பட்டுள்ளாரா? அவரது உடல் அதனால் தான் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? இது பகிரங்கமாக கலெக்டரை மற்றும் நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கா?