Tuesday, March 29, 2011

மதிமுக தொண்டர் குரல் வைகோவிற்கு கேட்குமா?

வைகோ ஜெயலலிதா மீது உள்ள கோபத்தால் அதிமுகவை தோற்கடிக்க கங்கணம் கட்டுவதாக செய்திகள் வரும்போது, அதற்கு ஏற்றார்போல அவரது மனச்சாட்சி என்று அழைக்கப்படும் நாஞ்சில் சம்பத்தும் தினமலர், ஜூனியர் விகடன் என மறைமுகமாக இதே கருத்தை நேர்கானல்களாக கொடுத்துவருவதும் மதிமுக தொண்டர்கள் மத்தியில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இதே விஷயத்தை வேறு கோணத்தில் காண்கிறார்கள்.

அதிமுக ஆட்சி வந்தால் அவர்களது குறி முழுவதும் திமுகவை அழிப்பதிலேயே இருக்கும். அப்பது அதிமுக ஆட்சிக்கு எதிராக பேசுபவர் வைகோவாக மட்டுமே இருப்பார். ஆனால் திமுக ஆட்சி வந்துவிட்டால் அவர்கள் உடனடியாக மதிமுக கட்சியின் தொண்டர்களையும் தலைவர்களையும் இழுத்துப்போடும் வேலையையே பார்ப்பார்கள். அதனால் மதிமுக அழியும். ஆகவே திமுக வை ஆடஹ்ரிப்பது எந்த வகையிலும் மதிமுகவிற்கு சாதகமான ஒன்று அல்ல. இவ்வாறு அவர்கள் கருதுகிறார்கள். வைகோ காதுகளுக்கு இந்த செய்தி செல்லுமா?

திமுக தொண்டரின் மனச்சாட்சி.

சென்னையில் தென்சென்னை தொடர்ந்து திமுக தோற்கும் இடமாக மாறிவருவது திமுக தொண்டர்கள் மத்தியல் கவலை அளித்துவருகிறது. ஏற்கனவே தென் சென்னையில் உள்ள மயிலாப்பூர் தொகுதி, அவ்வப்போது அதிமுக வசம் சென்று விடுவதில் அவர்கள் கோபத்தில் உள்ளனர். தென் சென்னையின் நாடாளுமன்ற தொகுதியும் அதிமுக வசம் சென்றுவிட்டதே என்ற கவலையும் அவர்களுக்கு உண்டு. மயிலாப்பூர் தொகுதியில் இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைவர் கொடுத்துவீட்டரே என்று அவர்கள் வ்ருந்தி வருகிறார்கள். ஏற்கனவே மயிலாப்பூர் தொகுதியில் உள்ள மாநகராட்சி உறப்பினர்களின் தொகுதிகளில், பதின்மூன்றில் ஐந்தை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்ததற்கே மனச் சங்கடத்தில் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள்.

இப்போது ஆயிரம் கலாட்ட செய்து அதன்மூலம், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு தானே கடைசியில் வேட்பாளராக நின்றது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது சொனியாஅவையே ஏமாற்றிய தங்கபாலு தந்திரம் என்றுதான் திமுக தொண்டர்கள் எண்ணுகிறார்கள். அதேசமயம் தங்கள் கட்சியான திமுகவை மீண்டும் எப்படி இந்த தொகுதியில் வலுப்படுத்துவது என்று சிந்திக்கிறார்கள். காங்கிரஸ் இந்த முறை வெற்றி பெற்றால் மயிலை தொகுதி நிரந்தரமாக காங்கிரஸ் தொகுதியாக போய்விடும் என்று அச்சப்படுகிறார்கள்.

திமுகவில் தான்தான் வேட்பாளராக அடுத்தமுறை வரவேண்டும் என்று எண்ணுபவர்களும், தான்தான் அடுத்தமுறை வேடப்பலராக ஆவோம் என்று எண்ணுபவர்களும் நிறைய இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோருமே தொகுதியை நிரந்தரமாக காங்கிரஸ் கையில் கொடுத்துவிட தயாராயில்லை. அதற்காகவே காங்கிரஸ் கட்சி இந்த முறை தோற்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். இது ஒரு திமுக தொண்டர் கூறிய மனச்சாட்சி வாக்குமூலம்.

வைகோவின் தேர்தல் புறக்கணிப்புக்கு அர்த்தம் என்ன?

வைகோ தான் அங்கம் வகித்த அதிமுக கூட்டணியில் சரியான பங்கு கொடுககவில்லை என்ற மனக்குறைக்கு பிறகு வெளியேறினார் எனபதும், அதையொட்டி தேர்தல் புறக்கணிப்பு என்று அவர் அறிவித்ததாக ஊடகங்களில் வந்ததும் நமக்கு தெரியும்.. ஆனால் அவர் அவரது கட்சியின் தீர்மானத்தில், மதிமுக தேர்தலில் இந்தமுறை போட்டியிடப்போவதில்லை என்றுதான் தெரிவித்திருந்தார்.அப்போதும் பலர் வருத்தப்பட்டது என்னவென்றால், மதிமுக தனித்து போட்டியிட்டிருக்கலாமே என்பதுதான். அதற்கும் வைகோ பதில் கூறியிருந்தார். அதாவது அப்படி தனித்து போட்டியிட்டிருந்தால், திமுக--காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து எதிர்க்கட்சி கூட்டணியின் வாக்குகளை பிளவு படுத்துவதற்க்காக நிற்பதாக அபாண்டமாக பழி சுமத்தி விடுவார்கள் என்று அறிவித்தார்.

வைகோவின் அந்த வாக்குவாதம் நமக்கும் ஏற்புடையதாக இருந்தது. இப்போது புதிய செய்தி மக்களை குழப்ப வந்திருக்கிறது. வைகோ தனது கட்சிக்காரர்களிடம் வேறுவிதமான வழிகாட்டலை கொடுப்பதாகவும், அது அதிமுக கூட்டணியின் அல்லது அதிமுக கட்ச்சியின் வெற்றி வாய்ப்பை பாதிப்பதர்க்காக திட்டமிடப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதற்காக அதிமுகவும், காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் தொகுதிகளில் கூட அதிமுகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறும் அவர் வழிகாட்டல் கொடுக்கிறார் என்பதே அந்த அதிர்ச்சி செய்தி.இதி நம்பகமாக இல்லை எனபதுதான் நமக்கு வைகோ மீது உள்ள பற்று காட்டுகிறது.

ஆனால் வருகின்ற செய்தி என்னவென்றால், கோவை பகுதியில் வைகோ கொடுத்த வழிகாட்டல்படி, அதிமுகவை தோற்கடிக்க திமுக வேட்பாளரான கண்ணப்பனை ஆதரிக்க சொல்லியிருக்கிறார் என்றும், அதை அங்குள்ள மதிமுக கட்சிக்காரர்கள் எதிர்கிறார்கள் என்றும் கூறுகிறர்கள். அதாவது கண்ணப்பன் மதிமுக கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு திமுக சென்றவர் என்றும் அவரை எப்படி ஆதரிக்க முடியும் என்றும் கேட்கிறார்களாம். அப்படியானால் காங்கிரஸ் கட்சி துரோகம் செய்ததால், தமிழர்கள் அதை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியது என்னாயிற்று? பார்வதியம்மாளின் சாம்பலை கரைக்க முன்னிற்கும் வைகோ எப்படி அந்தம்மாளின் சிகிச்சைக்கு கூட வழிகொடுக்காத திமுக, காங்கிரஸ் கட்சிகளை ஆதரித்து அதேநேரம் செயல்படுத்த உத்தரவிடமுடியும்? அப்படி வைகோ செய்திருப்பார் என்று நாம் நம்ப வில்லை.


தமிழீழ தேசியத்தாய் பார்வ்தி அம்மாளின் சாம்பலை சென்னையில் மட்டுமின்றி, குமரியிலும், கரைக்க முற்படும் வைகோ எப்படி அந்த சாம்பலுக்கு துரோகம் செய்த கருணாநிதியையும், சோனியாவையும் ஆடஹ்ரிக்க முடியும்? நடக்கவே நடக்காது என்பதே நமது வாதம். வைகோவிற்கு இப்போது ஜெயலலிதாதான் முதல் எதிராக டேஹ்ரிகிறார் என்றும், ஆகவே இது நடந்திருக்கும் என்றும் கூறுவோரிடம் நமக்கு பல கேள்விகள் எழுகின்றன. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்த காங்கிரஸ் தலைமையை எப்படி வைகோ ஆதரிக்க சொல்லமுடியும்? இன ழிப்பு போரை நடத்தியது இந்திய அரசுதான் என்று அறிவித்த வைகோ எப்படி அதை மாற்றி எழுத தனது அணிகளுக்கே கூறமுடியும்? அதிமுகவிற்கு நாம் யார் என்று காட்டவேண்டும் என்றால், அதற்கு அவர்களை பல இடங்களிலும் தோற்கடித்து காட்டுவதே சிறந்த வழி என்றி அவர் கூறியதாக கூறுகிறார்கள். அப்படி கூறியிருந்தால் அதை எப்படி மதிமுக தொண்டர்கள் ஏற்பார்கள்?

வைகோ தான் பார்வதியம்மாள் சாம்பலை எடுத்க்துக்கொண்டு அமெரிக்கா செல்வதாக அந்த தகவல்கள் கூறும்போது அவர் எப்படி தேர்தலில் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பார் என்பதே நமது கேள்வி.இது திமுக தலைவரின் கெட்டிக்காரத்தனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிழையான முத்திரை குத்த்டுதலா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இந்த சந்தேகங்கள் தீர தமிழின அழிப்புக்கு துணை நின்ற காங்கிரஸ்-திமுக கூட்டணியை தோற்கடிக்க கூறி வைகோ அறிவிக்கவேண்டும் என்று கூறுவோரும் உண்டு. அதைத்தான் சீமான் உறுதிபட கூறுகிறாரே? அப்படிப்பட்ட கொள்கையில் ஊறி எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வைகோவும் தொண்டர்கள், மதிமுக கட்சிக்காரர்கள் உடனடியாக சீமானின் கட்சிக்குதாவிவிட மாட்டார்களா?