Sunday, March 27, 2011

புலிகள் பெயரில் அடுத்த கப்சா தயாரித்தவர் ஜாபரா?

இப்போது வெளிவந்துள்ள அந்த தமிழ்நாட்டு வார இருமுறை ஏட்டில், கடைசி பக்கத்தில் வந்துள்ள செய்தி மீண்டும் புலிகள் தமிழீழ பகுதிகளில் நடமாடுவதாகவும், தாக்குதல் நடத்தியதாகவும் கூறுகிறது. இதே ஏட்டில் இதே போல "ராமு"கதை வெளிவந்ததை நமக்கு நினைவுபடுத்துகிறது. அதை வெளிக்கொண்டு வருவதில் யாருடைய பெயரில் கட்டுரை வெளிவந்ததோ அதே பெயரில் தான் இப்போதும் இந்த கட்டுரை வெளிவந்துள்ளது. அந்த கட்டுரையாளர் எப்போதுமே தன்னை புலிகளின் எதிரி என்றும், அதையும் தாண்டி தமிழர்களின் எதிரி என்றும் வெளிப்படையாக அறிவித்துக்கொள்பவர்.

இந்த செய்தியில் புலிகள் காட்டில் இருந்து வந்து ஹபரணையில் சிங்கள ராணுவ பெரிய அதிகாரியை தாக்கி கொன்றதாக கதை எழுதப்பட்டுள்ளது. அந்த ஹபரணை என்பது அனுராதபுரம் தொடங்கி திருமலை செல்லும் வழியில்,திருக்கொண்டையாமேடு வீதிக்கும், குருநகல் தொடங்கி திருமலை பெருந்தெரு செல்லும் வழியில் இருக்கிறது.அங்கே முகாமிட்டிருந்த சிங்கள ராணுவ அதிகாரிகள் வெள்ளை கொடியோடு வந்த நடேசன் மற்றும் தோழர்களை கொன்றவர்கள் என்றும் இது ஒரு பழிவாங்கும் படலம் என்பதாகவும் எழுதியுள்ளனர. அதுமட்டுமின்றி அந்த படுகொலைகளை பொன்சேகா செய்யவில்லை என்றும், கொத்தப்பாய் தான் செய்தார் என்றும் இடைசெருகல் அந்த செய்தியில் உள்ளது. அதாவது பொன்சேகாவை காப்பாற்ற எடுக்கும் முயற்சி போலவும் தெரிகிறது.


இப்போது போன்செகவிர்க்காக வர்ந்துகட்டுபவர்கள் இந்திய அரசின் வெளிவிவகார துறையான"ரா"அமைப்பினர் என்பது தெரிந்த செய்தி. அப்படியானால் இந்த செய்தியின் மூலம் ரா அமைப்பின் ஏதோ ஒரு தேவை நிறைவேறும். ஏற்கனவே புகழேந்திரன் மாஸ்டர் ஆட்களை இதே உளவுத்துறை யாழ் அனுப்பியிருப்பதும் நமக்கு தெரியும். அவர்களது விளையாட்ட இது என்பது தெரியவில்லை. அப்படியானால் அந்த வேலையை செய்வதன்மூலம் புலிகள் மீது பழியை போடுவதிலும் இவர்களுக்கு வெற்றி. அதேசமயம் பொன்சேகாவை நல்லவர் என்று கூறுவதிலும் வெற்றி. அதேசமயம் வெள்ளை கோடி போராளிகளை கொன்றதை ஐ.நா. போர்குற்றமாக எடுக்க விரும்பினால் அதற்க்கான ஆதாரங்களை தரவேண்டிய ராணுவ அதிகாரியை கொல்வதன் மூலம், அல்லது இல்லாமல் செய்வதன் மூலம், கோத்தப்பஎவையும் காப்பற்றிவிடலாம்


எப்படியோ இத்தனைக்கும் உதவிய ஜாபரை டில்லிஇலிருந்து திரும்பியதும் என்னதான் சாதிக் பாட்ச விவகாரத்தில் பிடித்தாலும், இதை உங்களுக்கு செய்து தருகிறேன் என்று அவர் பேரம் பேசிவிட்டாரா? அதனால்தான் அவர் ஏற்பாடு செய்து வெளிவரும் அதே ஏட்டில் மட்டுமே இதை அதே ஊடகவியலாளர் மூலம் எழுத வைத்தாரா? டில்லி சென்று திரும்பியதும் ஜாபர் செய்யும் அடுத்த இமாலய பணி இதுதானா?. . ஆனால் இங்கே ஐ.பி.இடம் மாட்டிய ஜாபரை, தப்பிக்கவைக்க "ரா" வழிசெய்யுமா என்ற கேள்வியும் எழுகிறது.

திமுக.வை தோற்கடித்த காங்கிரஸ்.

திருச்சி சிவா, திமுகவில் ஒரு சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல: கட்சிக்கு தலைமைக்கு விசுவாசமான ஊழியர். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதே குறிப்பறிந்து கச்சு தல்லைமைக்கு விசுவாசமாக பணியாற்றுவார் என்பதற்காகத்தான். அதுவும் கட்சியில் இருக்ககூடிய தலைமையின் குடும்ப உறுப்பினரான மத்திய அமைச்சரே கட்சித்தலைமைக்கு எதிராக காய் நகர்த்தும் நேரத்தில் கட்சி விசுவாசி அங்கே நாடாளுமன்றத்தில் இயங்க வேண்டும் என்றுதான் தலைமை சிவாவை அனுப்பி வைத்தது.அத்தகு இப்போது காங்கிரஸ் தலைமை எதிராக காய் நகர்த்துகிறது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை திமுக கட்சித்தலைமையின் கழுத்துக்கு கத்தியாக இருக்கும் இந்நேரத்தில், அதை பிஏசி என்றழைக்கப்படும் " பொது கணக்கு குழு"விற்கு உறுப்பினர் தேர்வு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் நடத்தப்பட்டது. அதில் திமுக. சார்பாக சிவா நிறுத்தப்பட்டார். முறைப்படி ஆளும்கூட்டணிக்குள் ஒவ்வொரு கட்சியும் அடுத்த கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும். ஆனால் சிவாவிற்கு காங்கிரஸ் வாக்களிக்க தனது உறுப்பினர்களுக்கு சொல்லவில்லை. மாறாக காங்கிரஸ் முயற்ச்சியில் பழைய பிரதமர் குஜ்ரால் மகன் சுயேட்சையாக நிறுத்தப்பட்டு காங்கிரஸ் உறுப்பினர்களால் வாகளிக்கப்பட்டு வெற்றபெற ச்செய்தார்கள்.சிவா தோல்வி அடைந்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி "பொது கணக்கு குழு" தீவிரமான விசாரணையை நாடாளுமன்றத்திர்க்குல்லேயே தொடங்கியுள்ள நேரத்தில் முரளி மனோகர் ஜோஷி என்ற பாஜக முன்னாள் அமைச்சர் அதை எடுத்துள்ள நிலையில் இந்த உறப்பினர் தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது.அந்த ஊழல் வழக்கில் திமுகவை பழி வாங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு செயல்படுவதாக தெரிகிறது. அத்தகைய திட்டத்தில் ஒரு அங்கம்தான் திருச்சி சிவாவை தோற்கடித்த காங்கிரசின் சாதியம். ஆனால் அதற்க்கான திட்டத்தையும் காங்கிரசுக்கு சொல்லிக்கொடுத்தது தயாநிதிதான் என்கிறார்களே