Tuesday, March 22, 2011

கொளத்தூர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவலியா?

சிறிய தொகுதியை தேர்ந்தெடுத்து அதில் நிறுவிடலாம் என்று, ஆயிரம் விளக்கில் நிற்க முடியாத சூழலில் ஸ்டாலின் சிந்தித்தார்.ஆயிரம் விளக்கு தொகுதியில் பல ஏழை மக்களை அவர்களது குடிசைகளில் இருந்தும், அவர்களது அடுக்கு மாடி குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளில் இருந்தும் விரட்டியடித்த ச.ம.உ ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற நிலைமை வந்துள்ளது. அதனால்தான் அவர் சிறிய தொகுதி ஒன்றை டேஹ்ர்வு செய்து அதில் எப்படியாவது செலவழித்து நின்று விடலாம் என்று எண்ணி நிற்கிறார். ஆனால் அவரது அதிர்ச்சிக்கு காரணமாக அமைந்த்தது அதிமுக அறிவித்த வேட்பாளரது பெயர்தான். அதாவது சைதை துரைசாமி என்ற பெயர் ஸ்டாலினை நிலை குலையச்செய்துள்ளது.

சைதையாரும் தனது வாக்கு சேகரிப்பை தொடங்கி விட்டார். அவர் சிறப்பாக தனது பக்கத்து வாதத்தை எடுத்து வைக்கிறார் என்கிறார்கள். ஏற்கனவே பகுசன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆர்ம்ஸ் ஸ்ட்ரோன்க் தன்னை வேட்பாளராக அறிவித்துக்கொண்டு எல்லோர் வீடுகளுக்கும் போய் தனது யானை சின்னத்தை கொடுத்திவிட்டார். இந்த நிலையில் ஸ்டாலின் இறக்கிறார் என்பது அவருக்கும் அதிர்ச்சி.இப்போது சைதை துரைசாமி எவரு சேர்ந்துகொண்டார். எப்படியும் கொளத்தூர் தொகுதி பதட்டம் ஆகிவிடும். நமக்கு முத்துகுமாரின் சடலம் அவரது வீட்டருகே வைக்கப்பட்ட இடமும், அதற்கு மூன்று நாட்கள் தமிழின உணவாளர்கள் கூடியது அந்த இடம்தான் என்பதும், அதனால் அங்கு போர்குற்றம் புரிந்தவர்களின் வாரிசுகளுக்கு என்ன வரவேற்ப்பு கொடுப்பது சரி என்ற எண்ணமும் உருவாகாமல் இல்லை.

பார்வதியம்மாள் அஸ்தி, சென்னை கடற்கரையில்,கரைக்கப்பட்டது

.
இன்று தமிழினத்தின் தேசியத்தலைவரை பெற்றெடுத்த தாயார் பார்வதியம்மாளின் சாம்பல் முப்பத்தொன்றாவது நாளாக கடலில் கரைக்கப்பட வேண்டிய சடங்கு முறைப்படி, சென்னையில் மாலை ஆறு மணிக்கு மேல் நடந்தது. பார்வதியம்மாளின் சாம்பலை கலசத்தில் ஏந்தி வந்த பழ.நெடுமாறன், வைகோ கடல் நீரில் மலர் தூவ தாய் கடலில் கரையவிட்ட நிகழ்ச்சி நடந்தது. நாலு மணிக்கு கண்ணகி சிலைக்கு பின்னால் உள்ள கடலில் கரைக்கப்படும் என்று நெடுமாறன் முதலிலும், பிறகு வைகோவும் அறிவுப்பு செய்திருந்தனர். அதை ஏற்ற தமிழின உணர்வாளர்கள் அங்கே முதலில் நூற்றுக்கணக்கில் திரண்டனர். நேரம் ஆக, ஆக, அது பல நூறு மக்களாக ஆனது. காவலுக்கு நின்ற காவலர்கள் திகைத்து நிற்க, ஊடகங்கள் அனைத்தும் வந்து குவிய, காவல்துறையின் படம் பிடிக்கும் நபர் படம் பிடித்து தள்ள, அதையெல்லாம் சட்டை செய்யாமல் பிரபாகரன் படங்களுடனும், பார்வதியம்மாள் படங்களுடனும், புலிக்கொடிகளுடனும், தமிழின உணர்வாளர்கள் ஆயிரக்கணக்கில் திரளத் தொடங்கினர்.

இரண்டாயிரத்திற்கு மேல் கூட்டம் திரண்டிருந்தது. ம.தி.மு.க.வை சேர்ந்த பெண்கள் பல பத்து பேர் திரண்டிருந்தனர். பெரியார் திராவிட கழகத்தின் தம்பிகள் தங்கள் குடும்பம் சகிதம் திரண்டு வந்திருந்தனர். வைகோவும்,நெடுமாறனும் வந்தவுடன் திரண்டிருந்த கூட்டம் கடலை நோக்கி புறப்பட்டது. வீரவணக்கம் வீரவணக்கம், பார்வதியம்மாளுக்கு வீரவணக்கம் என்ற முழக்கங்களுடன், மாபெரும் பேரணியாக தமிழர்கள் கடலை நோக்கி நடந்து வந்த காட்சி மகிழ்ச்சியை ஊட்டியது. புளித்தாயார் பார்வதியம்மளுக்கு வீரவணக்கம் என்றும் முழக்கம் இட்டனர். புலிகள் மீதான தடையை ரத்து செய்ய என்றும் அரசியல்முழக்கங்கள் முழங்கப்பட்டன. ஓவியர் வீர சந்தானம், கவிஞர் காசி அனந்தன், மன்ழூர் அலிகான், ஆகிய உணர்வாளர்களும் வந்திருந்தனர். மீனவர் சங்க தலைவர்களும் திரண்டிருந்தனர். கடலில் இறங்கிய தமிழர்களின் குரல் சிங்களர் ஆளும் தீவை நோக்கி திரும்பும், அங்கு தமிழர் மறுவாழ்வை பெற்றுத்தர எழும் என்பதில் ஐயமில்லை.