Monday, March 14, 2011

ஆளுக்கு அஞ்சு கோடி கொடுப்போம்

தமிழ்நாட்டில் தேர்தல் வர இருக்கிறது. அதற்கு எல்லோரும் போல தி.மு.க. தலைமை தயார் செய்யவதில்லை. திருமங்கலம் சூத்திரம், கைகொடுத்ததால், அதற்கு முன்பே 2006 பொது தேர்தலில் தொகுதிக்கு ஒன்றரை கோடி செலவு செய்த அனுபவம் இருப்பதால், இரண்டையும் சேர்த்து இப்போது கடைப்பிடிக்கலாம் என்று எண்ணுகிறது.நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 2009 இல் அதே அனுபவம் மீண்டும் கை கொடுத்தது.


அதன்பிறகு எங்கள் தலைமைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் கணிசமான பணம் கைக்கு வந்ததால் தைரியமாக செலவு செய்யலாம் என்று நினைப்பதாக தி.மு.க. பிரமுகர்கள் கூறுகிறார்கள்.அதற்காக தலைமை ஏற்கனவே ஒவ்வொரு வாக்குசாவடி குழுவிற்கும், அதாவது பூத் கமிட்டிக்கும், முதல் தவணையாக 3000 ரூபாயும், இரண்டாவது தவணையாக 5000 ரூபாயும் கொடுத்து முடித்தாயிற்று. அதில் பகுதி, வட்டம், கிளை எடுத்தது போக கணிசமான பணம் ஒவ்வொரு வாக்குசாவடி குழுவிற்கும் போயசசேர்ந்துர்ந்துவிட்டது. இது தொண்டர்களுக்கு உற்சாகப்படுத்தி வேலை செய்ய வைப்பதற்கான பணம்தான்.இதை வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணத்துடன் போட்டு குழப்பிக்கொள்ளகூடாது.

நாலு சக்கர வாகனங்களில் பணம் கொண்டு வந்தால் தேர்தல் ஆணையம் பிடிக்கிறது. எங்கள தலைமை அடுத்த தந்திரத்தை அமுல்படுத்துகிறது.. இரண்டு சக்கர மோட்டார் சைக்கிள்களில்தான் இந்த முறை எங்களது இரண்டாவது தவணையான பூத் கமிட்டி பணம் வந்து சேர்ந்தது. அதனால் கள்ளன் பெருசா, காப்பான் பெருசா என்றால் கள்ளன்தான் பெருசு. இவாறு தி.மு.க. முக்கிய பிரமுகர் கூறினார்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் தி.மு.க. தலைமை ஐஞ்சு கோடி கொடுக்கிறது. அது மக்களுக்கு சேரவேண்டிய பணம். நகர்ப்புறங்களில் உள்ள வாக்காளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு மாற்றி போட்டுவிட வாய்ப்பு அதிகம் உள்ளது.அவர்களுக்கு மனச்சாட்சி இல்லை. அதனால்தான் நகர்ப்புறங்களை எங்கள் தலைமை மாற்று கட்சிகளுக்கு கொடுக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பணம் கைநீட்டி வாங்கி விட்டால் கட்டாயமாக எங்களுக்கு தான் போடுவார்கள். அதனால் அங்கேதான் வாக்காளர்கள்
ஒவ்வொருத்தருக்கும் நாங்கள் 2000 , 3000 என்று தொடங்கி 5000 வரை கொடுக்க இருக்கிறோம்.அதில் எங்களுக்கு கணிசமாக வாக்குகள் விழவாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. இவாறு அந்த தி.மு.க. வாக்குமூலத்தையே பெருமையாக சொல்லி க்கொண்டிருந்தார்.

யார் இந்த புகழேந்திரன்?

நான்கு நாட்களாக ஊடகங்களில் ஒரு ஈழத்தமிழரின் பெயர் மாபெரும் பயங்கரவாதியாக சித்தரிக்கப்படுகிறது. அவர் பெயரை புகழேந்தி என்றும் புகழேந்திரன் மாஸ்டர் என்றும் அழைக்கிறார்கள். அதற்கும் மேலாக அவர் பொட்டுஅம்மானால் தயாரிக்கப்பட்டவர் என்று வேறு தி.ஹிந்து ஆங்கில நாளேட்டில் வெளியிடவைத்ததில் மகிந்தா வெற்றிபெற்றுவிட்டார். அந்த புகழேந்திரன் யார் எப்று நாமும் அலசினோம். அதில் பல உண்மைகள் கிடைத்தன.

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் வான்னி போரில் சரணடைந்தோர் பட்டியலில் இந்த புகழேந்தி வாத்தியும் இருந்தார். அப்படித்தான் ஈழத்தமிழர்கள் அவரை அழைக்கிறார்கள். சரணடைந்த போராளிகளில், பலரும் சுட்டு கொல்லப்பட்டபோது, அதில் புகழேந்தி வாத்தி கொல்லப்படவில்லை என் என்பது நமக்கு தெரியாது. அவர் அவ்வளவு முக்கிட ஆளில்லை என்றுகூட சிங்களம் நினைத்திருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு கிடைக்காத சலுகை வாத்திக்கு கிடைத்தது. அவர் இந்தியா செல்ல அனுமதிக்கப்பட்டார். ஏன் என்று நமக்கு புரியவில்லை. அதேநேரம் அதே சிங்களம் இப்போது அவரை பயங்கரவாதி என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமரே கூறியுள்ளது ஏன் என்பதே இப்போதைய கேள்வி.

இந்தியாவிற்கு அப்போதே வந்த புகழேந்தி வாத்தி இந்திய உளவுத்துறையின் நேரடி பராமரிப்பில் இருக்கிறார் என்பதும் தொடர் செய்தியாக தெரியவந்துள்ளது. அதாவது பா.சிதம்பரம் என்ற ஒரு பெரிய மனிதரின் கட்டுப்பாட்டில் அந்த வாத்தி இருப்பதாக தெரிகிறது. அவர் மூலம் இந்திய உளவுத்துறையான "ரா" கேரள-தமிழ்நாட்டு எல்லையில் சிலரை வைத்து மீண்டும் ஈழத்தமிழர்களை பலிகடா ஆக்கி இந்திய அரசுக்கும், அதன் இந்திய முதலாளிகளுக்கும் இலங்கை தீவில் வணிகம் செய்ய ஒப்பந்தங்கள் போட இலங்கை அரசை பயமுறுத்த முடியுமா என சிந்திக்கிறார்களாம்.

அந்த வாத்தியை காரணம் காட்டி இந்த புளுகு மூட்டைகள் அவிழ்த்து விடுபவை அதைவிட ஆபத்தானவை. அதாவது வாத்தி ஆட்கள் இந்திய தலைவர்களை கொள்ள திட்டமிட்டுள்ளனராம். இத்தகைய புருடாக்களை சிங்களம்தான் தயார்செய்து அவிழ்த்து விட்டதா என்றால் அதுவும் இல்லை. இந்த புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டதும் சிதம்பரம் தலைமையிலான உள்துறைதான். ஏற்கனவே நாம் எழுதியதுபோல, நான்கு வாரங்களுக்கு முன்பே மத்திய அரசின் உள்துறை இதேபோன்ற அறிககையை தமிழக அரசுக்கு அனுப்பியது என்று அதே ஹிந்து ஏடு செய்தி வெளியிட்டது.

தி.மு.க.வுடன் கூட்டணி முறிந்துவிடும் என்றும் அப்போது தி.மு.க. ஈழத்தமிழர் பிரச்னையை சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பரப்புரை செய்யும் என்றும் எண்ணிய சிதம்பரம் அப்படி ஒரு அறிககையை கொடுக்க வைத்து, தி.மு.கே. தலைமையை மிரட்டிவைக்க அதைசெய்துள்ளார். அப்போது காவல்துறை தலைமை அதிகாரி லத்திகாசரண் மூலம் அப்படி ஒன்றும் புலிகளின் முகாம்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று அறிக்கை கொடுக்கசொன்ன கருணாநிதி
இப்போதும் இலங்கை பிரதமருக்கு பதில் கொடுக்க லத்திகாசரனையே பயன்படுத்தி உள்ளார். ஏன் என்றால் அந்த இலங்கை பிரதமரின் அறிக்கை அல்லது நாடாளுமன்ற பேச்சு சிதம்பரம் அலுவலகத்தில் தயாரான ஒரு அறிக்கை எனபது வெள்ளிடை மலையாக அனைவருக்கும் தெரியும்.

இலங்கை பிரதமர் ஜெயரத்னே தங்கள் நாட்டில் அவசர நிலைமையை தொடர்வதற்காக, அதன்மூலம் மட்டுமே சிங்களர் மத்தியில் திரண்டுள்ள அதிருப்தியை அடக்குவதற்காக இந்த இந்தியாவில் புலி முகாம்கள் என்ற சாக்கை பயன்படுத்திக்கொண்டார்.இப்போதும் இந்திய மத்திய அரசு அதற்கு பதில் கொடுக்கிறேன் என்ற பெயரில் இல்லாததை சொல்வதாக இலங்கை அரசை குற்றம் சாட்டவும் இல்லை: லம்டிக்கவும் இல்லை: மாறாக கெடுவாயப்பானது [ துரதிரஷ்டமானது] என்று மட்டுமே மத்திய அரசிலிருந்து பதில் கொடுத்த்துள்ளது. அதிலிருந்தே இவர்களது விளையாட்டை யாரும் புரிந்து கொள்ளலாம்.