Tuesday, March 8, 2011

கருவிலும், உருவிலும், சிதையிலும் சிதைக்கிறாயே

உலக பெண்கள் தினம் என்பதால் எல்லா அரசியல் தலைவர்களும் நீளமான வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இன்றும் கருவில் பெண்கள் அழிக்கப்படுவது அதிகமாக பெண் உரிமை பேசும் தமிழ்நாட்டிலேயே ஒழிக்கப்படவில்லை. அதற்கு பொருளாதாரம் காரணமாக சொல்லப்படுவதும் அதை கேட்டு பலரும் அனுதாபபடுவதும் கொடுமை மனங்களை படம் பிடித்து காட்டுகிறது. உருவில் பெண்ணாக வளர்ந்தபின்னும் தொடரும் சிசுக்கொலைகள் நின்றபாடில்லை. பொதுமக்கள் இயல்பாகவே பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைப்பதிலிருந்து விடுதலை பெற்றுவிடவில்லை. அதற்கு வளர்ப்பு கூட காரணமாக ஆகிவிடுகிறது. வளர்ந்த பின்னும் பெண்களுக்கு சமூகம் கொடுக்கும் மரியாதை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

யாராவது மானுடத்தில் பெண்கள் சரிபாதி என்று மனதார அனுமதிக்கிறார்களா? சமீபகூட்டம் ஒன்ரிபெராசிரியர் சரஸ்வதி ஒரு செய்தியை கூறினார். பெண்களுக்கு கல்வி கொட்த்தும் கூட அதற்கு மக்கள் வரிப்பணம் செலவானால் கூட, பெண்களை படித்து முடித்த பின், வேளைக்கு செல்ல அனுமதிக்காமல் கல்யாணம் கட்டிக்கொடுப்பதில் மட்டுமே கவனமாக இருக்கும் சமூகத்தை சுட்டிக்காட்டினார். உங்கள் கல்யாணமும், உங்கள் குடும்பங்களும் எவ்வளவு செய்தரினாலும், சிரித்தாலும் நீங்கள் திருந்துவதாய் இல்லை என்பதுதானே உங்கள் நிலை? உரப்படும் போங்கள்.இந்த அடிமை மனோபாவத்திலிருந்து எப்போது வெள்யே வரப்போகிறீர்கள்?

பெண்களும் மானுடத்தின் சரிபாதி என்றால் அவர்கள் வேளைக்கு செல்வதும், அவர்களே தங்கள் திருமணத்தை தீர்மானிப்பதும் உங்களுக்கு ஏற்கமுடியவில்லையா? இப்போது பெண்கள் ஆரோக்கியமான புலிக்குட்டியை பெற்றெடுத்தாலும், அவர்களது மறைவுக்கு பின்கூட அவரது சிதையில் கூட சாம்பலை சிதறடிப்போம் என்ற இனவெறி செயலை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் பார்வதியம்மாள் தனது மரணத்தின் மூலம். அதை எண்ணியாவது உலக பெண்கள் தினத்தில் ,தமிழ்பெண்கள் துவக்கெடுத்த பின்தான் தமிழீஹத்தில் சரியான சமத்துவம் பெற முடிந்தது என்பதை உலகம் புரிந்துகொண்டால் சரி.