Friday, February 18, 2011

அமபலப்படுத்தலிலும் ஆணாதிக்கமா?

கலைஞர் டி.வீயில் சோதனை நடத்தியது சீ.பி.ஐ. சரி இது செய்தி. அதையே ஒரு ஏடு தனது எதிர்ப்பு உணவிலிருந்து தி.மு.க. ஆபீசில் ரைடு என்று போட்டது. அதுகூட தி.மு.க. அலுவலகத்தில் கலைஞர் டி.வீ. இருப்பதால் அப்படி படுவதற்காக தங்கள் காழ்ப்புணர்ச்சியை பயன்படுத்திக்கொண்டார்கள் என்றும் பார்க்கலாம். அல்லது ஆச்சர்ய செய்தி, அதிர்ச்சி செய்தி,என்ற வணிக நோக்கு என்று கூறிவிடலாம். ஆனால் அந்த டி.வீ.யில் அறுபது பங்கு மூலதம் தயாளு அம்மையார் பெயரிலும், இருபது விழுக்காடு பங்கு மட்டுமே கனிமொழி பெயரிலும் ஒப்புக்கொள்ளும் ஊடகங்கள் எதற்க்காக குறைவான பங்கை கோடுள்ள கனிமொழியை மட்டுமே ஓரங்கட்டி செய்தி வெளியிடுகிறார்கள்?
கலைஞரின் இன்றைய அதிகாரபூர்வமான மனைவி தயாளு என்பதாலும், துணைவிதான் ராஜாத்தி என்பதாலும், இந்த பாரபட்சம் காட்டப்படுகிறதா? ஆனாலும் உண்மைக்கு மாறாக இத்தகைய பாரபட்சம் காட்டுவது ஆணாதிக்கம் இல்லையா? அதிகாரத்தை கையில் வைத்துள்ள ஸ்டாலின், அழகிரி ஆகியோரது தாயார் என்பதால் எல்லா ஊடகங்களும் வலைகின்றனவா? அதுகூட ஆணாதிக்கம் இல்லையா? கனிமொழி ஒரு ஆணாக இருந்தால் வேறு மாதிரி நடக்குமா? அலல்து முதல் மனைவிக்கு கொடுக்கும் மரியாதையை ஆணாதிக்க சமூகம் இரண்டாவது மனைவிக்கு கொடுக்க கூடாது என்று சொல்வதால் வந்த விளைவா? அல்லது எல்லாவற்றிற்கும் காரணமான தயாநிதி தங்கள் குடும்பத்தைவிட இன்னொரு குடும்பமான ராஜாத்தி மீது மட்டுமே அனைத்து இழிவும் பொய் செற்றட்டும் என்று எண்ணுகிறாரா? ஊடகங்கள் குறி வைப்பதும்கூட ஆணாதிக்க பார்வையிலா? அவங்க வீட்ல அவங்க கட்சில, அவங்க கூட்டணில ஊழல் செய்வதில் ஆணோ, பெண்ணோ வேறுபாடு காட்டுவதில்லையே? அப்புறம் அதை அம்பலப்படுத்துவதில் மட்டும் என்ன பால் வேறுபாடு?

கடலில் கழிவுகளை கிருஷ்ணா கவ்வுவாரா?

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழக மீனவர்களுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார். அதாவது மீனவர்கள் இந்திய எல்லையை கடலில் கடக்காமல் கவனமாக இருக்கவேண்டுமாம். ஏய் கிரிஷ்ணாவே உமக்கு கடலில் இந்திய எல்லை என்றால் என்ன என்று தெரியுமா? யோவ், நீங்க தமிழ்நாட்டு கரையில் வந்து என்ன நிலைமை என்று பார்த்திருக்கீங்களா? ஏய் நீரு டில்லில உட்கார்ந்துகிட்டு ராஜபக்ஷேவை திருப்தி படுத்த ஏதாவது உளருகிரீரா? தமிழ்நாட்டு கடல்கரைக்கும் இலங்கை கடல்கரைக்கும் உள்ள தூரம் வெறும் பதினெட்டு மைல்கல்தான் என்பது உமக்கு தெரியுமா? அதிலும் நாட்டு படகுகள் பல பாரம்பரியமாக மீன் பிடித்து வருபவர்கள் கடலில் உள்ள முதல் ஐந்து கடல் மைல்கல்தான் செல்லமுடியும் என்பது தெரியுமா? அதற்குமேலும் சென்று நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிக்க விரும்பினாலும் உங்கள் ஆட்சியின் திட்டத்தால் விசைப்படகுகள் இறக்கிவிடப்பட்டுள்ளதால், கடலில் எங்கள் பாரம்பர்ய மீனவர்களின் நாட்டு படகுடன் போட்டி போட்டு இந்த விசை படகுகள் அடிக்கடி சண்டை போட்டு வருவது உமக்கு விளங்குமா?
அதனால் சமாதானத்தை இங்கே தமிழ்நாட்டு மீனவர்களுக்குள் செய்யும்போது, முதல் ஐந்து மைகளுக்குதான் நாட்டு படகு மீனவர்கள் மீன் பிடிக்கவேண்டும் என்று ஒவ்வொரு கடலோர மாவட்டங்களிலும் ஒப்பந்தம் செய்து மீன் பிடித்துவருவது குளிர்சாதன அறையில் இமர்ந்திருக்கும் உமக்கு விளங்குமா? அதனாலேயே விசை படகு மீனவர்கள் அதையும் தாண்டிதான் மீன் பிடிக்க கடலில் இறங்க வேண்டும் என்பதாவது உமக்கு சொன்னார்களா? அப்படி செல்லும்போது ராம்ச்வரம் பகுதியில் பத்து மைல்கள் வரை பாறை இருப்பதை உங்களுக்கு நாகல் புரியவைக்கமுடியுமா? அதையும் தாண்டித்தான் விசை படகுகள் மீன் பிடிக்க செல்லவேண்டும் எனபது உங்கள் அமைச்சகத்திற்காவது தெரியுமா? அதற்கு பெயர் இந்திய எல்லையை தாண்டுவது என்று உங்கள் விளக்கம் கூறினால் நீங்கள் மீன் பிடி தொழில் பற்றி அறியாமையில் உள்ள மூடன் என்பதை யாரவது உங்களுக்கு சொன்னார்களா?
இதுவரை சொல்லாவிட்டாலும் இப்போதாவது சொல்கிறோம் கேட்டுக்கொள்ளுங்கள். கடலில் மீனவனுக்கு எல்லைகள் கிடையாது. இல்லாத எல்லையில் [போடமுயலும் கிரிஷ்ணாவே, உங்கள் புத்தி இப்படி மழுங்கி பொய் இருப்பது தொடருமானால் தமிழக மீனவர்களின் போராட்டம் உங்களை நோக்கி திரும்பாதா? உங்கள் ஆட்சி செய்த லட்சணம் கடலோரம் முழுவதும் கழிவுகளை கக்கும் கம்பனிகளை கட்டியிருக்கிறீர்கள். அந்த கழிவுகளை பிடிக்க கடலில் இறங்க சொல்கிறீர்களா? கிரிஷ்ணாவே நீங்கள் அந்த கடல் கழிவுகளை கவ்வுவீர்களா?

மழை, வெள்ளத்தால் மூழ்கும் ஈழத்தமிழர்கள்

இலங்கை முழுவதும் பலத்த மழை. முதல் மழை பொய் இரண்டாம் மழை மேலும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பதினெட்டு மாவட்டங்களில் அந்த தீவு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகள்;ஐ இழந்து தவிக்கிறார்கள். அதில் சிங்கரும், ஈழத்தமிழரும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஆனால் பதினெட்டு மாவட்டங்களில் மூன்றே மாவட்டங்களில்தான் அதிகமான பாதிப்பு. அந்த மூன்று மாவட்டங்களும் முறையே மாட்டகிலப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகியவையே. அவை மூன்றும் கிழக்கு மாகாணத்தில் வருகின்றன. அதாவது தமிழர் பகுதிகளாக அடையாளம் காட்டப்பட்டவை. அதிக சேதம் நடந்துள்ள அந்த மாவட்டங்களை சிங்கள் இன வெறி அரசு கவனிக்கவே இல்லை.
பதிக்கப்பட்ட சிங்கள பகுதிகளுக்கு சென்ற அரசத்தலைவர் மஹிந்த ராஜபக்ஷே, தமிழர் பகுதிகளை எட்டிக்கூட பார்க்கவில்லை. மொத்தம் பதிமூன்று அச்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு மொத்தம் நூறு கோடி ரூபாயை இதர்த்க்காக நிவாரத்தொகையாக ஒதுக்கியுள்ளது என்று அறிவித்துள்ளார்கள். பாதிக்கப்பட்ட பதிமூன்று லட்சம் மக்களுக்கும் இந்த நூறு கோடி ரூபாய் பணம், பிரித்துக்கொடுத்தாலே ஆளுக்கு நூறு ரூபாய் கூட வராது. அந்த அளவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாத ஒரு அரசு அங்கே இருக்கிறது. அதிலும் மூன்று கிழக்கு மாவட்டங்களிலும் வாழும் தமிழர்களான முஸ்லிம்களும், இந்துக்களும், கிறித்துவர்களும், ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் ஆயிரம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அந்த முகாம்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு முகாமில் குறைந்தது இரநூற்றைம்பது குடும்பங்கள் தங்கியுள்ளனர். அதாவது ஆயிரம் தமிழர்கள் தங்கி உள்ளனர். அதில் இந்துக்களும், முஸ்லிம்களும் கலந்தே இருக்கின்றனர்.
இவ்வாறு மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் மூவாயிரம் தமிழர்களின் நிலைதான் உள்ளதிலேயே அதிக கடினப்பாட்டுடன் இருக்கிறது. அவர்கள் மத்தியில் மக்கள் சார்பு அமைப்புகள் தான் உதவிகளை செய்து வருகின்றன. அதில் கிழக்கு மாகாண அனர்த்த பாதிப்பு முகாமைத்து குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. அதற்கு அனுப்பபடுகின்ற நிதிகளை அது பொருள்கள் வாங்கி கொடுத்து இடம் பெயர்ந்துல்லோரை கவனித்து வருகிறது. அதில் கணிசமாக முஸ்லிம் ஆர்வலர்களும் செயல்படுகின்றனர். சிங்க சூழ்ச்சியால் பிரிக்கப்பட்ட முஸ்லிம், இந்து சகோதரர்கள் இங்குதான் சேர்ந்து உதவிகளை செய்வதும், சேர்ந்து அமர்ந்து உண்பதுமான இணக்கம் ஏற்பட்டுவருகிறது.
இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட இடரை பயன்படுத்தி தமிழ் இனத்தை மேலும் அழிக்க சிங்க பேரினவாத அரசு திட்டமிட்டுவருகிறது.