Sunday, February 6, 2011

அம்பலமான புதிய ஊழலில் சிக்குவது?

இந்து ஆங்கில நாளிதழும்,அதன் வணிக இதழான பிசினஸ் லைனும், வெளியிட்டுள்ள புதிய சீ.ஏ.ஜி. அறிக்கை என்ற, கணக்கு கண்காணிப்பு குழுவின் புதிய அறிக்கை பர,பரப்பை ஏற்படுத்தியுள்ளது.அது அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாயை நட்டம் ஏற்படுத்திய ஒப்பந்தம் ஒன்றை பற்றி கூறுகிறது.அப்படி ஒரு ஒப்பந்தத்தை நமது நாட்டின் விண்வெளி துறையின் வணிகபிரிவு போட்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை. அப்படியானால் அந்த அம்பலமாகியுள்ள ஒரு லட்சத்து எழுபத்தாறு கோடி ரூபாய் கொள்ளையைவிடட இன்ரண்டு லட்சம் கோடி ரூபாய் நட்டம் என்பது பெரிய கொள்ளை இல்லையா? இதை கமுக்கமாக செய்தவர்கள் யார்? இந்த ஒப்பந்தம் போடப்பட்ட ஆண்டு 2005 . அந்த நேரத்தில் இந்த நாட்டின் தலைமை அமைச்சராக இருந்தவர் மன்மோகன் தான். இது என்ன ராஜா செய்த ஒப்பந்தத்தைவிட அதிக நட்டத்தை ஏற்படுத்தியது? இவர்கள் மாறி,மாறி இந்திய் அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார்களா?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி என்ற் ஐ.எஸ்.ஆர்.ஒ .உடன், அதாவது அதன் வணிக பிரிவான அற்றிக்ஸ் உடன், தேவா என்ற நிறுவனம் போட்டுக்கொண்ட ஒப்பந்தம் இது. இதன் மூலம் ஆண்டு செயற்கை கோள்களை அந்த தனியார் நிறுவனம் வானில் பறக்க விட்டது. ஐ.எஸ்.ஆர்.ஒ.எப்போதுமே தலைமை அமைச்சரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிறுவனம். அதாவது அன்றைய தலைமை அமைச்சரான மன்மோகன் சிங் போட்ட ஒப்பந்தம். மன்மோகனும் தனியார் நிறுவனமான தேவாவுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தம். அதில்தான் இந்திய அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது என்று இந்த சீ.ஏ.ஜி. அறிக்கை தெரிவிக்கிறது
2500 மெகா ஹெர்ஸ் கொண்ட அந்த செயற்கை கோளில் எழுபது மெகா ஹெர்ஸ் இந்த தேவா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் மூன்றாம் அலைக்கற்றை விற்பனையில் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட தொகையை கணக்கில் கொண்டு இப்போது சீ.ஏ.ஜி. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தேவா நிறுவனம் பெற்ற தொகையை கணக்கிட்டுள்ளது. அதான் இரண்டு லட்சம் ரூபாய் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இந்த ஒப்பந்தத்தால் நட்டமாகி உள்ளது என்ற கணக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. .ஐ.எஸ்.ஆர்.ஒ. விற்கு தலைமை அமைச்சர் மன்மோகன் தான் பொறுப்பு என்பதால் அவரும் சேர்ந்து செய்த நட்டம் என்று புரிகிறது.
இப்போது தேவாஸ் மல்டி மீடியா என்ற அந்த நிறுவனம் எந்த அலைக்கற்றையையும் வாங்கவில்லை என்றும், குத்தகைக்குத்தான் எடுத்தோம் என்றும் எல்லாமே ஐ.எஸ்.ஆர்ட்.ஒ.வின் வசம்தான் இருப்பதாகவும் கூறியுள்ளது.அதே கருத்தை முன்னாள் ஐ.எஸ்.ஆர்.ஒ. செயலாளர்களான ராதாகிருஷ்ணன், மாதவன் நாயர், ஆகியோரும் கூறுகின்றனர். ஏன் இவர்கள் முண்டி அடித்துக்கொண்டு பதில் சொல்கிறார்கள்? இந்த தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் முன்னாள் செயலாளராக ஐ.எஸ்.ஆர்.ஒ.வில் இருந்த சந்திரசேகர்.. அப்படியானால் பல ஐ.எஸ்.ஆர்.ஒ. முன்னாள் செயலாளர்கள் சேர்ந்து இப்படி ஒரு திட்டத்தை தீட்டி அதை தங்களது தனியார் நிறுவனமான தேவாசிற்கே குத்தகைக்கு கொடுக்கும் ஒப்பந்தம் செய்தார்களா? இது ஒரு அதிகாரிகள் மட்டத்து மாபெரும் ஊழலா?
ஏன் டெண்டர் விடவில்லை என்று கேட்டதற்கு மற்றவர்கள் போற்ற்டிக்கு வரவில்லை என்றும், தேவாஸ் மாத்திரமே வந்தது என்றும் கூறுகிறார்கள். அதாவது இப்படி ஒரு திட்டம் ஐ.எஸ்.ஆர்.ஒ.விடம் உருவானது மடற நிறுவனங்களுக்கு தெரியவிடாமல் முன்னாள் அதிகாரிகள் மட்டுமே திட்டமிட்டு அவர்களுக்குள் போட்டுக்கொண்ட சதியா? கர்நாடகாவில் உள்ள இந்த நிறுவனம் மாதவன் நாயர் போன்றோரின் உறவினர்கள் மற்றும் எழுபது விழுக்காடு பங்கை பெற்றுள்ள பிரான்சு நாட்டு நிறுவனம் ஆகியவை சேர்ந்து செய்துள்ளதாக தெரிகிறது. நெருக்கடி இப்போது வந்தவுடன், அந்த ஒப்பந்தத்தை சென்ற ஆண்டே அரசு வழக்கறிஞர் ரத்து செய்ய சொன்னதாகவும், ஆகவே அது செயல்படுவதற்கு முன்பே ரத்து செய்யப்படும் என்றும் இப்போது கூறுவது, கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்றும், முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சியா? என்றும் எண்ணத்தோன்றுகிறது. எஸ்.பான்ட் என்பதுதான் இப்படி ஒப்பந்தம் போடப்பட்டது என்றும், கே.யு.பாண்ட்தான் சன் குழுமம் உட்பட டி.டி.எச்.களுக்கு பயன்படுகிறது என்றும் விளக்குகிறார்கள்.எப்படியோ இப்போதைக்கு தயாநிதி சிக்கவில்லை. ஆனால் மன்மோகன் மாட்டிக்கொண்டார்.ஆனால் ஏன் சன் குழுமத்தின் பங்கு தொகை கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக சரிந்துள்ளது?
2007 -2008 ஆண்டுகளில் தயாநிதி சகோதர்கள் நடத்தும் சன் காட்சி ஊடக குழுவினர், ஒரு செயற்கை கோளை அதிகமான பங்கை செலுத்தி வாங்கி அதை வானில் விட்டு முதல் முறை தோற்றுபோய் பிறகு வெற்றி அடைந்தது நினைவிருக்கிறதா? அது இந்த ஒப்பந்தம் தானா என்ற கேள்வியும் எழுகிறது. அதன்மூலம் தங்களது குழுமத்தின் அனைத்து அலைவரிசைகளையும் இயக்கி வருகிறார்களே? இந்திய நாட்டை நட்டமடைய வைத்து தங்கள் குடும்பம் பிழைக்கின்ற வழியா இது? இப்போது ஆ.ராஜாவின் சின்ன ஊழல் கோடுக்கு பக்கத்தில் தயாநிதியின் பெரிய ஊழல் கோட்டை போட்டாச்சா?


.