Monday, December 26, 2011

மகப்பேறு உதவி கிடைக்க எட்டு மாதம் காணாதா?

சென்ற வருடம் எங்களுக்கு மகப்பேறு கிடைத்தது. முதல்வர் பன்னிரெண்டாயிரம் ரூபாய் என உதவி தொகையை உயர்த்தியதாக செய்தி கிடைத்தது. ஆனா அந்த உதவிதான் கிடைக்கவில்லை. இது தமிழ்நாஎன்கும் மகப்பேறு பெற்ற தாய்மார்களின் குரல்.முந்தைய முதல்வர் அறிவித்திருந்த தொகையை விட, இந்த முதல்வர் அதிக தொகையை அறிவித்திருக்கிறாரே? என்று நாம் கேட்டால், அறிவித்து என்னய்யா பிரயோசனம்? என்று பதில் வருகிறது. மே மாதம் மகப்பேறு பெற்றவர்களுக்கு கூட இன்னும் பணம் வந்து சேரலையே? என்கிறார்கள்.ஏன் இந்த வில்லங்கம்? என்று ஆராய்ந்தோம்.

டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டம் இனி 12000 ௦௦௦ ரூபாயை கொடுக்கும் என்று முதல்வர் அறிவித்தார்.அந்த திட்டத்தில் பயன்பெறுவோர் பற்றிய குறிப்புகளை இணைய தளத்தில் போட்டுவிடவேண்டும் என்றும் முதல்வர் உத்திரவிட்டார். அந்த பட்டியலில் உதவி பெரும் "தாய் மற்றும் சேய்" ஆகியோரின் நிலை பற்றி எழுத வேண்டும். பிரசவம் நடந்த தேதி மற்றும் விவரங்களையும் எழுத வேண்டும். அவர்களுக்கு போடப்பட்ட "தடுப்பூசி" பற்றியும் எழுத வேண்டும். மொத்தத்தில் "நூற்றி எழுபது" கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும்.இந்த நடைமுறை நல்லதுதான். ஆனால் அதை செய்வதற்கான ஏற்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது.

மேற்கண்ட விவரங்களை எழுத "ஆரம்ப சுகாதார நிலையங்களில்" உள்ள கணினிகளை பயன்படுத்த வேண்டும். அங்குள்ள கணினி, எந்த நிலையில் உள்ளது? ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் ஒரு கணினிதான் இருக்கிறது. அதில்தான் கிராம சுகாதார செவிலியர்களும், சுகாதார ஆய்வாளர்களும், மற்றும் அங்கு பணியாற்றும் பிற ஊழியர்களும் தங்கள் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். அது சாத்தியமா? அதனால்தான் அத்தனை விவரங்களையு போட முடியாத நிலையில் "மகப்பேறு தாய்மார்கள்" உதவி கிடைக்கப்பெறாமல் தவிக்கின்றனர். தமிழ்நாட்டில் 1510 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருகின்றன.அவற்றிற்கு ஒவ்வொரு நிலையத்திற்கும் "ஒரு கணினி இயக்குபவரை" வேளைக்கு எடுத்தால் அவரே அனைத்து ஊழியர்களின் பணிகளையும் கவனித்து தினசரி இணையத்தில் ஏற்றிவிட மாட்டாரா? இதை செய்வதற்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் ஒரு கணினி இயக்குனரை வேளைக்கு மரத்த ஏன் இந்த "சுகாதார செயலாளர்" ஆலோசனை கூறவில்லை?


யாரிடமும் எதுவும் ஆலோசனை கேட்காமல் தானாகவே செய்யும் குணம் என்ற மாபெரும் கெட்டிகாரத்தனம் படைத்தவர் ஏன் இதை சிந்திக்க வில்லை? இப்போது எட்டு மாதங்களா முத்துலட்சுமி மகப்பேறு திட்ட உதவிகள் பொய் சேராமல் அரசாங்கத்திற்கு எவ்வளவு கேட்ட பெயர்? ஸ்கேன் எனப்படும் நிழல் படம் எடுக்க தனியாரிடம் எந்த சுகாதார ஊழியரும் செல்ல கூடாது என்று ஒரு உத்தரவு இருக்கிறது? அரசாங்க மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் அனேகமாக வேலை செய்வதில்லை. அப்படியானால் ஊழியர்கள் என்ன செய்வார்கள்? அவற்றை வேலை செய்யவைக்க என்ன செய்யப் போகிறார்கள்? இவையெல்லாம் சேர்ந்து தானே அரசாங்க அதிகாரிகளின் அன்றாட கடமை? அதைவிட அந்த கிராம சுகாதார செவிலியர்கள் வேலை செய்வது, "துணை சுகாதார் நிலையங்களில்". அதாவது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கீழே உள்ள துணை நிலையங்களில்.அங்கு இத்தகைய வசதிகள் கூட கிடையாது. அப்படியானால் அவர்கள் என்ன செய்வார்கள்?

இத்தகைய கேள்விகளுக்கு சுகாதார அமைச்சர் விடை தேடினால்தான் அரசாங்கம் கிராம மக்களிடம் நற்பெயர் பெற முடியும்.

No comments:

Post a Comment