Tuesday, December 27, 2011

இது என்னடா புது குழப்பம்?

இப்போது கேரளவிவாசாயிகள் ஒரு புதிய கோரிக்கையை பரிசீல்யுங்கள் என்று கூறுகிறார்களாமே? அவர்களது தலைவர்களைஎல்லாம் திட்டுகிறார்களாமே ? புதிய நை கட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறுகிறார்களாமே ? பழைய முல்லை பெரியார் அணையை உடைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகிறார்களாமே? அப்படியானால் என்னதான் அவர்கள் சொல்லுகிறார்கள்?

முல்லைபெரியார் அணையில் இப்போது இருக்கும் 136 அடியை 120 ஆக குறைக்க கேரள அரசு சொல்கிறதா? இந்த விவசாயிகள் அதை ஏற்று கொள்கிறார்களாம்.அதேசமயம் இப்போது நீர் வெளி செல்லும் மதகுகள் 105 ஆவது அடியில் இருக்கிறதாமே? அதை 150 வரை உயர்த்த கேட்கும் தமிழ்நாடு கேட்பது மீதி நாற்பத்தைந்து அடியில் உள்ள தண்ணீர்தானே என்று இந்த விவசாயிகள் கேட்கிறார்களாம். சரி என்று வைத்து கொண்டால் என்னதான் சொல்கிரார்கலேன்று கேட்டோம். அதற்கு "நீர் வெளி செல்லும் மதகுகளை" நாற்பத்தைந்து அடிக்கு குறைத்து விடுங்கள் சரியாக போய்விடும் என்று இவர்கள் கூறுகிறார்களாம். அப்படி செய்தால் 105 அடி நீர் இருக்கும்போதே அறுபது அடி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நேரும் கூறுகிறார்களாம். அணை பாதுகாப்பிற்கு பயப்படும் கேரளகாரர்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்கிறார்களாம். இது என்ன புது குழப்பம்?

இது சாத்தியப்படுமா? நீர் அளவு ஒரு நிலை வரை இருந்தால்தானே அது மதகு மூலம் வெளியேற முடியும்? அது எப்படி நாற்பத்தைந்து அடி உயர மதகிலிருந்து வெளியே வரும்? சுத்தமாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராமல் ஆகிவிடாதா? அல்லது இதுவும் ஒரு விவாத பொருளா? விவரம் இல்லாமலவர்கள் பேசுகிறார்களா? கேரள விவாசாயிகள் புதிய அணை டேஹ்வை இல்லை என்று கூறுவது நியாயம்தான். பழைய முல்லை பெரியாரை உடைக்க வேண்டாம் என்று கூருவதும்நியாயத்தை புரிந்ததால்தான். ஆனால் கேரள அரசியல்வாதிகளின் சதிகள் கண்டு அச்சப்பட்டு ஒரு சமர்சம்செய்ய இப்படி கூறுகிறார்களா? அது ஆபத்தானதுதானே? நமக்கு விளங்கவில்லை. எபப்டியோகுட்டையை குழப்பி மீன் பிடிக்க அரசியல்வாதிகள் கேரளாவிலும், டில்ல்யிலும் ஏராளம் என்று மட்டும் தெரிகிறது.

3 comments:

நீச்சல்காரன் said...

ஆம், தொழிற்நுட்ப நீதியில் இதுசாத்தியமானால் இது நல்ல யோசனைதான். அதற்கு பொதுப்பணித் துறையினர்தான் பதிலளிக்க வேண்டும். மதகுகளின் உயரத்தை குறைத்து அதே நீர் கொள்ளளவு[அதே உயரமல்ல] வரும் படி செய்ய முயற்சிக்கலாம்.

பல்பு பலவேசம் said...

அது என்னா வின் டிவியில் இந்து மதத்தை மட்டும் தரக்குறைவாக பேசுறீங்க!ஆனா கிறிஸ்துமஸ் அன்னிக்கு கிறித்துவ பெருமக்கள் கொண்டாடினர்னு சொல்றீங்க!நல்லா இருக்கு ஓங்க போலி பகுத்தறிவு!
ஏன் இஸ்லாம் பத்திவிமர்சிங்க பாக்கலாம்!ஏன் எஸ் எம் பக்கர் என்னும் தாடி வச்ச கனவான் உக்காந்திருப்பதால் பேச பயமோ?உண்மை நாத்திகம் எப்படி இருக்கணும்?கீழே பாருங்க!
http://dharumi.blogspot.com/2009/11/why-i-am-not-muslim-1.html

நீங்க பேசுவது போலி நாத்திகம்!ஈ வே ரா வகையரா சொல்லி கல்லா கட்டுனது!

Naran said...

http://othisaivu.wordpress.com/2011/12/26/post-88/#comments

Post a Comment