Wednesday, December 21, 2011

மக்கள் மனங்களில் ஒருவித விடுதலை.?

கலைஞரை பிடிக்காதவர்கள் எம்ஜிஆரிடம் சென்றார்கள்.எம்ஜிஆரிடம் சென்றவர்கள் ஜெயலலிதாவிடம் வந்தார்கள். ஏதோ கலைஞர் மட்டுமே நாட்டில் கெட்ட அரசியல்வாதி என எண்ணியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என பற்று கொண்டார்கள். கலைஞர் மீது கோபம் கொண்ட தமிழின உணர்வாளர்களும் கடைசியாக ஜெயலலிதாவிடம் நல்லது நடக்காத என ஏங்கி வந்தார்கள். காங்கிரஸ் என்பது எதிரி என கணக்குபோட்ட தமழின உணர்வாளர்கள் ஏதாவதொரு திராவிட் அக்கட்சியிடம் தானே எதிர்பார்க்க முடியும் என்று கூறினார்கள். வன்னிப்போரால் புண்பட்ட தமிழ் இதயங்கள் கலைஞரை வெறுத்ததால், ஜெயலலிதா புண்ணுக்கு மருந்து என்று கூறினார்கள். அதை நிரூபிக்கும் முகத்தோடு அந்த அமமாவும் "போர்குற்றம் விசாரணை", "மீனவர் மீது துப்பாக்கி சூடு","காங்கிரஸ் எதிர்ப்பு" "ப.சிதம்பரம் எதிரி", " நூன்று பேர் தூக்குதண்டனை குறைப்பு", என தமிழ் இன உணர்வாளர்களுக்கு நிறைய "கடலை போட" சரக்கு கொடுத்தார்கள்.


சாதாரண மக்களோ கலைஞர் குடும்பம் கொள்ளை அடித்தது என்று தங்களுக்கு தெரிந்ததையும், தெரியாததையும் கூறி அரசியல் பேசினார்கள். அவர்கள் எல்லோரும் "ஒரே விசயத்தில்" மனம் வருந்தினார்கள். அதுதான் "சசிகலா குடும்பம்" செய்யும் ஆதிக்கம். திமுக கட்சியின் வளர்ச்சிக்காக தங்கள் உழைப்பை கொடுத்த "ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, ஊடகம் மூலம் தயாநிதி, ஆகியோரையே தாங்கிகொள்ளாத தமிழினம், அதிமுக வளர்சிக்கு எந்த உழைப்பையும் போடாமல், அதன்மூலம் தனைகளுக்கு வருமானம் மாத்திரமே பெற்று வந்த ஒரு சசிகலா குடும்பம் பற்றி வாய் திறக்க முடியாமல் புலம்பி வந்தார்கள். அந்த கும்பலை கண்டு பயந்தார்கள். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக கட்சியின் சிறிய பதவிக்கும் பணம் வாங்கி கொண்டு பொறுப்பு கொடுக்கும் குடும்பத்தை அப்ற்றி வாய் திறக்க வழி இன்றி தவித்தார்கள்.

இப்போது எல்லோருமே ஒரு பெருமூச்சு விடுகிறார்கள். அப்படா. கடைச்யாக அம்மா சசிகலா குடும்பம் மீது நடவடிக்கை எடுத்தார்களே என்று வாய் விட்டு கூறுகிறார்கள். அதனால் அந்த ஆள் இதை செய்தான், இந்த ஆள் அதை செய்தான் என்று வெளியிடுகிறார்கள். அதில் அதிக பக்கங்கள் அந்த ராமாயண தமிழ் மன்னன் பெயரை கொண்டவர் தோட்டத்தில் இருந்து கொண்டு, பணமும், பெண்களும் என மிரட்டி வாங்கி குவித்த மர்மங்களை எல்லாம் மூட்டை மூட்டை மூட்டையாக இப்போது அவிழ்த்து விடுகிறார்கள். மக்கள் இதன் மூலம் மன விடுதலை பெற்று வெளியே பேச வருகிறார்களே...அது ஒரு முதல் கட்ட நன்மைதான். இனி யாரும் அந்த குடும்பம்தான் காரணம், முதல் மனுஷி நல்லவர்கள் என்று "சப்பை கட்டு" கட்ட முடியாது அல்லவா?

No comments:

Post a Comment