Tuesday, December 6, 2011

பேராசிரியர் கல்யாணி என்ன தவறு செய்தார்?

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில், மண்டபம் ஊரில்
நான்கு இருளர் பழங்குடி பெண்களை "பாலியல் சித்திரவதை" செய்ததாக புகார்
வந்தது. அதை கல்விமணி கல்யாணி எடுத்து பதிவு செய்தார். அதற்காக
விருத்தாசலத்தை சேர்ந்த தங்கமணி என்ற பழங்குடி கட்சி ஓரை வைத்திருப்பவர்
ஏன் "ஆத்திரப்படவேண்டும்?".

அந்த தங்கமணியை ஆதரித்து அவருக்கு தங்க இடம் கொடுத்த
சீ.பி.எம். கட்சியின் விழுப்புரம் அலுவலகம் இந்த விவகாரத்தில் ஒன்றுமே
தெரியாமல் ஆதரித்து விட்டார்களா? அதிமுக கொடுத்த தொகுதி என்பதால்
விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்று விட்டோமே, அந்த வட்டாரத்தில்
கட்சி பலமாக இல்லையே என்ற எண்ணத்தில் அவசரப்பட்டு நடந்த தவறா?
ஆத்திரப்பட்ட தங்கமணி கல்யாணி மீதும், பழங்குடி தலைவர் ரமேஷ் மீதும்
வழக்கு பதிவு செய்வது முறையா?

அந்த அவ்ழக்குகளை காவல்துறை பதிவு செய்யலாமா? முதல்வர்
அறிவித்த ஐந்து லட்சம் பாதிக்கப்பட்ட பழங்குடி பெண்களுக்கு போய் சேர்வதை
ஏன் இந்த தங்கமணி எதிர்க்க வேண்டும்? பாலியல் பலாத்காரம் நடக்கவில்லை
என்று ஏன் அறிக்கை கொடுக்க வேண்டும்? பாலியல் வன்புணர்ச்சி வேறு, பாலியல்
பலாத்காரம் வேறு என்று இவர்களுக்கு ஏன் புரியவில்லை?

வடக்குமண்டல அய்.ஜி. சைலேந்திரபாபு, அறிவித்ததும், உதல்வர்
அறிவித்ததும் முதல் கட்ட விசாரணையில் அந்த நான்கு பெண்களை விதிகளை மீறி
காவல் நிலையத்தில் வைத்திருந்தது தவறு என்றுதானே ஐந்து காவல் அதிகாரிகளை
இடை நீக்கம் செய்தார்கள்? காட்டிற்குள் கூட்டி போனதாக அந்த பழங்குடி
பெண்கள் கூறும்போது, கூட்டி சென்ற காவலர்களை தண்டிக்க வேண்டியது
தேவைதானே?

முதல்வர் அறிவிப்பையே எதிர்க்கும் வேலையை அரசியல்வாதிகள்
"கூட்டணி குழப்பத்தில்" செய்யலாம். காவல்துறையும் செய்கிறதே? அதற்கு
தனியாக தண்டனை உண்டா?

2 comments:

PUTHIYATHENRAL said...

* உச்சிதனை முகர்ந்தால்”.!
* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே!
* பெரியாரின் கனவு நினைவாகிறது
* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று!
* தமிழகத்தை தாக்கும் சுனாமி!
* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!
* இந்தியா உடையும்! ஆனா உடையாது .
* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?
* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!

Maniblog said...

தங்கமணி விழுப்புரம் சீ.பி.அய்.[எம்] அலுவலகத்தில் இரவு தங்கி இருந்தார் என்பதாலும், மறுநாள் அந்த கிராமத்திற்கு சென்று பார்க்க கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. செல்லும்போது, அவர் வாகனத்துடன் தங்கமணியும் ஒரு வாகனத்தில் சென்றார் எனவும் செய்திகள் இருக்கின்றன. அதனால்தான் அப்படி கருதவேண்டி வந்தது. இந்த செய்தியை நான் வின் டி.வி. "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்வியில் கூறிய பிறகு சீ.பி.எம் தலையிடுவது நின்று விட்டது என்றும் நல்ல செய்தி கிடைத்தது. இப்போது பால பாரதி எம்.எல்.ஏ. சொல்வதையும் வைத்து நாங்கள் சீ.பி.எம். தவறு செய்யவில்லை என்று எடுத்துக் கொள்ளுகிறோம். எப்படியோ முதல்வர் அறிவிப்பிற்கு வேதிரானது தங்கமணியின் புகார். அதை பதிவு செய்த அதிகாரிகள் முதல்வருக்கு எதிராக செல்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறோம்.

Post a Comment