Saturday, November 12, 2011

2 ஜி ஊழல் போதாதென்று இப்போ 3 ஜி ஊழல் தொடர்கிறதா?

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைவரிசை ஊழலில் சிக்கிய, சிக்கப் போகும் முன்னாள்மத்திய அமைச்சர்கள் திஹார் சிறைக்குள்ளும், சிறைக்கு வெளியேயும், மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள். அதன் விசாரணை தொடங்கி விட்டது. சவான் நிறுவனம் ஏலம் எடுத்து யாருக்கு எண்ண கொடுத்தது என்பதும் விசாரணையில் வெளிவரும். அப்போது தமிழ்நாட்டிலிருந்து சென்று திஹார் சிறைக்குள் அடைபட்டிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் கலைஞர் தொலைக் காட்சிக்கு வந்த இருநூறு கோடி ரூபாயை யார் வாங்கினார் என்று சொல்லப்போவதில்லை. ஆனால் இன்னொருவர் அதுபற்றி சொல்லப்போகிறார்.

ஆறுமுறை அந்த மும்பை நபர் சென்னையில் வந்து யாரை சந்தித்தார் என்பதும் வெளியே வரப் போகிறது. கொடுத்தவரே சொன்னால் மட்டும்தான் நாடு ஏற்றுக் கொள்ளும் போல் தெரிகிறது. இந்த ஊழலில் சம்பந்தம் இல்லாத கனிமொழி இதில்போய் மாட்டப் பட்டுள்ளார். ஊழல் பற்றிய கோப்புகளை எடுத்து கொண்டு ஒவ்வொரு அரசியல் தலைவர்களிடமும் அலைந்து கொடுத்து, தான் கட்சியிலும், அமைச்சரவையிலும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி கொண்டவர் எங்கே சிக்குவார் என்று தெரியவில்லை. அதற்குள் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை வரிசை ஊழல் பற்றிய செய்திகள் வரத் தொடங்கி விட்டன.


மூன்றாம் அலைக்கற்றை வரிசை கொண்டுவர, கட்டுப்பாட்டு சிகரங்கள் கட்டப்பட வேண்டும். அவற்றை கட்டுவதற்கு ஏலம் எடுத்தது யார் தெரியுமா? ஒரு பெங்களூர்வாசி. அவர்தான் செல்வி. கலைஞரின் முதல் மகள். தயாளுவின் அன்பு செல்வி. அழகிரி, மற்றும் ஸ்டாலினின் அன்பு தங்கை. முரசொலி மாறனின் தம்பி செல்வத்தை மணம் முடித்தவர். இவர் பெங்களூரில் இருக்கிறார். இவரை சந்திக்க கலைஞர் பெங்களூர் செல்லும்போதெல்லாம் போவது உண்டு. அந்த செல்வியின் பெயர் நேற்று சென்னை மாநகர காவல் ஆணையத்தில் மூன்று ஜி ஊழலில் மோசடி செய்யப்பட்டவர்களின் புகாரில் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

செல்வி பல பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மூன்றாம் அலைவரிசை "கட்டுப்பாட்டு சிகரங்களை" உருவாக்க ஏலம் எடுத்தார். ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் அப்படி இந்தியா முழுவதும் கட்டுப்பாட்டசிகரங்கள்கட்டப்படவில்லை. கண்ட்ரோல் டவர்கள் கட்டாமலேயே மூன்றாம் தலைமுறை அலைவரிசை கொடுக்கப்பட்டு வரும் விந்தை இந்த நாட்டில்நடந்துவருகிறது. இரண்டாம்அலைவரிசையில் சிக்காத, முன்னாள் மன்னர் குடும்பத்தினர் மூன்றாம் அலைவரிசை ஊழலில் சிக்குகிரார்களா?

No comments:

Post a Comment