Tuesday, November 29, 2011

பல்டியா? பரிசீலனையா?

பல்டியா? பரிசீலனையா?
ஜெ ஆட்சி பரமக்குடி துப்பாக்கி சூடி நடத்தி ஏழு தேவேந்திரகுல மக்களை சுட்டு கொன்றது. இறந்தவர்களுக்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை இல்லை. சட்டமன்றத்தில் அந்த நிகழ்வை " இன மோதல்" என்று முதல்வர் வர்நித்ததுவே அவரது ஒரு சார்பு நிலையை வெளிப்படுத்துகிறது. ம.நடராசன்கூட "செந்தில்வேல் அய்.பி.எஸ்." பற்றி குறை கூறியும் அரசு அசையவில்லை. ஒய்வு பெற்ற நீதிபதி சம்பத் ஐயரை நியமித்த அரசு, கருப்பு கொடிகளையே எதிர்கொண்டது. ஆனாலும்கூட தேவேந்திர மக்கள் வாக்குகள் ராமநாதபுரத்தில் அதிமுகவிற்கே உள்ளாட்சியிலும் விழுந்தது.இத்தனையும் நடந்தும்கூட அசையாத அரசு இப்போது முதல்வர் பார்மகுடி துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்தவர் குடும்பத்திற்கு கூடுதலாக நான்கு லட்சம் என்றும் காயம் பட்டவர்களுக்குகூடுதளாக பதினைந்தாயிரம் என்றும் அறிவித்துள்ளார்.

நிதி மட்டுமே அறிவித்தார் என்று பார்க்க முடியாமல் இறந்தவர் குடும்பங்களின் அடுத்த வாரிசுக்கு "அரசு வேலை" என்றும் அறிவித்துள்ளார். இது உண்மையிலேயே மக்களை திருப்தி செய்யும். இவையெல்லாம் நீதிமன்றம் சென்றதால் வந்ததா? ஒவ்வொருவரும் அப்படி பெருமை பட்டு கொள்ளலாம். ஆனால் நீதிமன்றத்திற்கு அப்படி பணியக் கூடிய அதுவும் முன்கூட்டியே பணியக் கூடியவர் அரசு என்று நாம் பார்க்க முடியவில்லை. நடக்கும் ஒவ்வொரு மனித உரிமை மீறலும், விலைவாசி ஏற்றமும் மக்கள் மத்தியில் "எதிர்கட்சிகளுக்கு" செவி மடுக்கும் செயல்பாட்டிற்கு கொண்டு செல்கிறது என்ற உளவு துறை செய்தியை கேட்டிருப்பார்கள்.ஆகா. வாக்கு வங்கியை விட்டு விடக்கூடாதே என்று "மறு பரிசீலனை" வந்திருக்கிறது.

இந்த நாடாளுமன்ற தேர்தல் கட்சிகளுக்கு "வாக்கு வங்கிகள்"தான் முக்கியம். இதை உணர்ந்தே நாம்கூட கடந்த நாட்களில் "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில், காட்சி ஊடக நமது நிகழ்வில், "மாவீரர் நாள்" அனுமதி மறுப்பையும், கைதையும், பரமக்குடி துப்பாக்கி சூட்டையும், விழுப்புரம் திருக்கோவிலூர் இருளர் பழங்குடி மீதான "பாலியல் வன்புணர்ச்சி" செய்த காவல்துறை தப்பிப்பதையும், சுட்டி காட்டி, "ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை" என்று இடித்து உரைத்தோம். அதுகூட உஅரித்திருக்கலாம். ஏன் என்றால் "இருளர் பழங்குடி" பெண்கள் பாதிப்பு பற்றி "முரசொலியை" படித்து காட்டி நேற்று நாம் நமது நிகழ்வில் பேசிய பின், வடக்கு மண்டல அய்.ஜி. சைலேந்திரபாபு "ஐந்து காவலர்களை" இடை நீக்கம் செய்ததை சில்லி பார்ரட்டிர்யிருந்தோம். அதனால் ஊடகங்களின் பார்வளியிலும் "கேட்ட பெயர்" வாங்காமல் இருக்கவோ, எதிர்கட்சிகளின் போராட்ட அறிவிப்புகளுக்கு தலைவனங்கியோ, அதை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவதை எண்ணியோ, "மறு பரிசீலனைக்கு" ஆரசு உள்ளாகி இருக்கலாம். அதை "பல்டி' என்று நாம் சொல்ல வேண்டியது இல்லை. மக்கள் கூறினால் நாம் ஒன்றும் கூற முடியாது.

வாக்கு வங்கியை குறிவைக்கும் அரசியல்வாதிகள், " இருளர் பழங்குடி பெண்கள்" மீதான காவலர் பாலியல் வன்புணர்ச்சியை இன்னமும் நீருபணம் ஆகாவிடினும், முதல்கட்ட விசாரணையில், இரவு நேரம் பெண்களை காவல் நிலையத்தில் "வைத்திருந்தது" தெரிந்தவுடன் அய்.ஜி எடுத்த நடவடிக்கை அங்கீகரிக்க தக்கது. அதை ஒட்டி இப்போது, முதல்வர் அந்த " இருளர் பழங்குடி பெண்களுக்கு தலா ஐந்து லட்சம்" அறிவித்திருப்பதும், காவல்துரையின் "கருப்பு ஆடுகளுக்கு" ஒரு தலைவலிதான். இவாறு செய்துவந்தால் நாங்கள் ஏன் குறை சொல்கிறோம்?
அதேபோல "மாவீரர் நாளை" அனுமதி மறுப்பு கொடுத்த அதிகாரிகளிடம் மீண்டும் மாவீரர் நாள் கடைப்பிடிக்க "பொதுக்கூட்டங்கள்" நடத்த சம்பந்தப்பட்டவர்களை அழைத்து அனுமதி கொடுத்தால் பாராட்டலாம். மீண்டும் நாங்கள் பல்டி என்று கூற மாட்டோம். மறு பரிசீலனை என்றே கூறுவோம்.

அதேபோல உயர்நீதிமன்றத்தில் "சாந்தன், பேரறிவாளன், முருகன்" வழக்கில் தமிழக அரசு "தள்ளுபடி" செய்ய சொன்னது என்ற செய்தி "தவறு" என்றும், "இப்போது வைகோவிற்கு திருப்தியா" என்றும் அரசு தரப்பு கேட்டதே அதையும் "நல்ல மறுபரிசீலனை" என்றே கூறத் தயார். எப்படியோ எங்களுக்கு வேலை நடக்க வேண்டும். டேஹ்ர்தல் கட்சிகள் திருந்தப் ப்கிரார்கள் என்றோ, திருந்தி விடுவார்கள் என்றோ மனப்பால் குடிக்க தயாராயில்லை. அதேபோல நேற்று இரவு "சட்ட எரிப்பு நாளையும்", பரமக்குடி துப்பாக்கி சூட்டையும் வைத்து பெரியார் திக திருவல்லிகேணியில் நடத்திய போது கூட்டத்தில் "கொளத்தூர் மணி"பேச அவ்ரும்போது காவல்துறை தடுத்து நேர காரணம் கூறி கூட்டத்தை முடித்ஹ்டு கொண்டார்களே, அந்த கூட்டத்தில் உண்மையான பெரியார் தொண்டர்களை காவல் நிலையத்தில், "ரவுடிகள்" என்று குரித்ஹ்டு வைக்கும் போக்கையும் எடுத்ஹ்டு சொன்னார்களே அதையும் மாற்றி "மனித உரிமை ஆர்வலர்களுக்கு" பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல காஞ்சி மக்கள் மன்றத்தின் மகேஷ்,ஜெசி,உமா போன்ற பெண் ஆர்வலர்கள் மீது போடப்படும் வழக்குகளை இல்லாமல் செய்யவேண்டும். காவல் அதிகாரி "காத்திருந்தோம், இப்போது வந்துவிட்டீர்கள். இனி மக்கள் மன்றத்தை பார்த்து கொள்கிறோம்" என்று ஊடகவியலாளர்களிடம் வசனம் பேசும் பாணியை நிறுத்த வேண்டும். செய்வார்களா? மத்தியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு "ஆபத்து" கூடும் நேரத்தில், எந்த நேரமும் நாடாளுமன்ற தேர்தலில் வரலாம் என்ற எண்ணத்தில், நாற்பது தொகுதியையும் கைப்பட்டார் வேண்டும் என்றால் இந்த "மறு பரிசீலனைகள்" வந்துவிடுமோ? சரி. போற்குற்றங்களுக்கு துணை போனவர் என்று அவரை தமிழ்நாட்டு மக்கள் விரட்டினாலும், இவர்களது ஆட்சிமுரையிலேயே, அவருக்கு மீண்டும் உயிர் கொடுத்து வளர்த்துவிடுவார்கள் போலிருக்கிறதே என்று நாம் "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில் கூறியது காரணம் என்று நாம் பெருமை படவில்லை. இவையெல்லாமே "தானே" நடந்தவைதான்.

Monday, November 28, 2011

கொலைவெறி எழுத்துக்களுக்கு கொடுப்பினை எது?

எழுத்துக்கள் புத்தகங்களில், ஏடுகளில், இணைய தளங்களில், வரும்போது, சில சிலருக்கு எரிச்சலை உண்டுபண்ணும். சில சிலருக்கு உற்சாகத்தை டஹ்ரும். சில சிலருக்கு தென்றலாய் தெரியும். இப்படி எழுத்துக்களில் பலவகை உள்ளது. அதில் பலரையும் பாதிக்கக்கூடிய எழுத்துக்களை சில நேரங்களில், வக்கிரபுத்தி எழுத்துக்கள் எனவும், "கொலைவெறி" எழுத்துக்கள் எனவும் குறிப்பிடலாம். அப்படி எழுத்தியவற்றிற்கு சில நேரங்களில் "பதில்" என்பது வெவேறு வகைகளில் கிடைக்கும். அப்படி ஒன்று இரண்டு நாட்கள் முன்னால் நடந்தது. அந்த தமிழ் ஏடு பிரபல ஏடு. அந்த ஏட்டில் தொடர்ந்தது "தமிழர்" பிரச்சனைகளில் "எதிர் சார்பு" நிலையையே எடுத்து வருவது கண்கூடு.

"புலவர்கள் பெண்களை பூ எனச் சொன்னான் , புலியாய் மாற்றினார் அண்ணன்.புலவர்கள் பெண்களை மான் எனச் சொன்னார். நெருப்பாய் மாற்றினார் அண்ணன்" என்ற பாடல் வரிகளுக்கு அந்த நான்கு பெண்களும் நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். "பூ" எனும்போதும், "மான்" எனும்போதும் விரல் அசைவுகளில் நடன நளினம் அந்த இளம் தமிழ் பெண்களுக்கு ஓடி வந்தது. அண்ணன் பிரபாகரன் பற்றி நவம்பர் 26 ஆம் நாள் பிறந்த நாளிலும், நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளிலும் அந்த பாடல்கள் நடனங்களாக நாம் இருப்பது கிளிநோச்சியிலா என வியக்கும் அளவுக்கு விழித்த கண்களை மூடமுடியாமல் நாம் அமர்ந்திருந்தோம். அந்த நான்கு பெண்களின் நடனத்தில் ஒரு இளம் தோழியை காணவில்லையே? ஆம். அதுதான் "செங்கொடி". செங்கொடியின் விரல்கள் பூ என விரிந்து காட்டும். மான் என மடங்கி காட்டும். அந்த நளினம் நம் கண்களை விட்டு அகலவில்லை. அன்று "செங்கொடியின் நினைவு மண்டபம்" திறந்தார்கள்.அதற்கான நிகழ்ச்சி மேடையில்தான் இந்த நடனம்.

அவ்வாறு நிகழ்வு சென்று கொண்டிருக்கும் போது, மேடையின் எதிரே நாம் அமர்ந்து இருந்தோம். எங்களுக்கு இடதுபுறம், கூட்டத்தை எல்லாம் தாண்டி திடீரென ஒரு சல,சலப்பு. ஒரு "சாமி வேடம்" போட்டவர் ஓடிக்கொண்டிருந்தார். அவரை சிலர் துரத்தி கொண்டு ஓடினர். திருப்பதிக்கோ, பழனிக்கோ போகும் நபர் இங்கு எண்ண "தவறு"செய்து விட்டு "ஓடுகிறார்" என்று கேட்டேன்.எதற்காக அவர் இங்கே அதுவும், காஞ்சி மாவட்டம் மேலக் கதிர்புரின், மனகல்ம்பாடி என்ற "சென்கொடியூரில்" உலகிடை கிராமத்தில் ஓடவேண்டும் என்று ஆச்சரியப்பட்டேன். ஒரு "திருடன்" மாட்டிக் கொண்டதுபோல "தலை தெறிக்க" ஓடுகிறானே? பின்னால் ஓடுபவர்கள் ஏன் துரத்த வேண்டும்? குக்கிராமத்திற்குள் வந்து ஒருவன் ஓடவேண்டும் என்றால் அவன் "தவறு செய்து விட்டு: அதை உணர்ந்து தானே ஓடவேண்டும்? எல்லோரும் உட்காருங்கள் என்றனர். பொதுமக்கள் மேடை நிகழ்வில் மீண்டும் மூழ்கிப் போனோம். எதிராய் இருந்தாலும் அடிக்கவேண்டாம் என்று முன்னால் ச.ம.உ.வேல்முருகன் கூறினார். இங்கே எதற்கு எதிரி வருகிறான் என்று நாம் கேட்டுக் கொண்டு அம்ர்தந்து விட்டோம்.

அதற்கு பிறகு ஓடியவன் அந்த "தமிழ் ஏட்டின் நிருபர்" என்றனர். ஊடகமா என விசாரிக்க போனேன். ஆமாம். அவன் வந்திருந்தான். அவனை ஏற்கனவே காஞ்சிபுரம் கார்களுக்கு தெரியும். அவன்தான் செங்கொடி மரணத்தை தழுவிய மறுநாள் அவர்கள் ஏட்டிலே "வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கொண்டுவந்து போட்டார்கள் என்று எழுதியவன். ஏன் இப்போது இங்கே வந்தாய் என ஒரு பையன கேட்டான். நான் ஊடகம் என்றான். அப்படியானால் அன்று ஏன் செங்கொடி பற்றி பொய்யாக எழுதினாய் இன்னொருவன் கேட்டான். ஆராய்ந்துதான் எழுதினேன் என "திமிறாய்" பதில் சொன்னான். டேய் என ஒரு பையன சொல்ல, "ஓடத்" தொடங்கிவிட்டான். நின்றிருந்தால்கூட யாரும் அடிக்க முனைய மாட்டார்கள். ஓடத் தொடங்கியவனை சிலர் "துரத்த" தொடங்கினர். இது சாதாரண மக்கள் பழக்கம். ஊடகக்காரன் எங்காவது பேசும்போதே "ஓடுவானா?". அவனுக்கு அப்படி "நடக்க" சொல்லிக்கொடுத்து "அனுப்பி இருக்கிறார்களா?". தெரியவில்லை.

அடித்து விட்டு சிலர் வந்து விட்டார்கள். வந்தவனும் ஓடிவிட்டான். அந்த குக்கிராமத்தில், காஞ்சியிலிருந்து எட்டு கிலோ மேட்டார் தூரம் கொண்ட மன்கலபாடியில், அவனை குறி வைத்து அடிக்க யாரும் எண்ணியிருந்தால், அவனை மீண்டும் ஓடிப்போ என விட வேண்டிய அவசியம் இல்லையே? இத்தனை தூரம் காவல்துறை யோசீக்காதா? அங்கே நின்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் அது தெரியுமே? அப்படி இருக்கும் போது, ஏன் மறுநாள் வந்து மக்கள் மன்றம் "மகேஷ் உட்பட, ஜெசி, உமா" என்ற பெண்களுடன் பதின்மூன்று பேரை காவல்துறை அள்ளி சென்று வேலூர் சிறையில் அடைக்கவேண்டும்? அந்த நிகழ்வு நடக்கும்போது மக்கள்மன்றம் மகேஷ், ஜெசி, உமா போன்றோர் எங்களுடன் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்? அவர்களுக்கும் அந்த "ஓட்டமும், விரட்டலும்" ஆச்சர்யமாக இருந்ததே? எப்படி அவர்களை காவல்துறை "கைது" செய்ய முடியும்?

மேலிருந்து வந்த உத்தரவாமே? யார் அந்த மேலிருந்து ? ஓகோ. அதுதான் அந்த "தமிழ் ஏட்டின்" முதலாளியா? அவர்தானே "செங்கொடி" பற்றி மோசமாக எழுதி தமிழ்நாட்டில் "கலவரம்" உருவாக்க காரணமானவர்? அவர்தானே "மூன்று தமிழர் உயிர் காக்க" சட்டமன்ற தீர்மானம் போட்டும்கூட, "தூக்கு போடவேண்டும்" என்று எழுதி, தமிழ்நாட்டில் "கலவரம்" உருவாகாதா? என்று காத்து கிடந்தவர்? வேண்டும் என்றே அந்த ஏட்டின் முதலாளிகள் இந்த மக்கள் மாற நிகழ்ச்சியை "பாழ்" படுத்த அப்படி ஒரு ஆளை அனுப்பி இருப்பார்கள் என்று ஒரு சென்னையின் மூத்த ஊடகத்தார் என்னிடம் கூறினார். இப்படி எழுதுவதும், அதன் பிறகு அத்தனை தூரம் உள்ள கிராமத்திற்கு இப்படி ஆளை "திட்டமிட்டு" அனுப்புவதும், அங்கே போய் "கூட்டம் முன்னால் ஓடச்ச்சொவதும்" எல்லாமே சென்னையில் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட "நாடகம்" என்று தெரிய வந்துள்ளது.

மூன்று தமிழர் உயிரை "பறிக்க" எண்ணும் சக்திகள் அந்த கொலைவெறி எழுத்துகளுக்கு பின்னால் நின்றுகொண்டு, இன்று "கண்டனம்" வேறு கொடுக்கின்றனவே? கொலைவெறி எழுத்தில் மட்டுமல்ல, நாடகத்தை திட்டமிடுவதிலும், அதை அரங்கேற்றி மக்கள் மன்றத்தை முடக்க நினைப்பதிலும், அதை ஒட்டி தனது ஆதரவு சக்திகளை அணிதிரட்டுவதிலும், தொடர்வது ஏன்? மக்கள் மன்றத்தின் மகேஷும், ஜெஸியும்,மற்ற தோழர்களுடன் சேர்ந்து கொண்டு, தமிழ்நாட்டில் "கடைக்கோடியில்" இருக்கும் இதுவரை எழுந்துவராத, எளிதில் எழுப்ப முடியாமால் பிறர் "தோற்றுப் போன" இருளர் மக்களை "பொறுமையாக" கிராமம், கிராமமாக சென்று பேசி, அணிதிரட்டி, அவர்கள் வீட்டு குழந்தளைகளை படிக்க வைத்து, உணர்வுள்ளவர்களாக, கல்வி கற்பவர்களாக, நடனம் ஆடவும், பாட்டு பாடவும், பழகி கொடுத்து சமூகத்தில் ஒரு "மரியாதையை" அவர்களுக்கு வாங்கி கொடுக்க உதவி விட்டார்களே? என்ற ஆதங்கம், "இரண்டாயிரம் ஆண்டுகளாக" அவர்களை போட்டு கடைசி மட்டத்தில் "ஒடுக்கி" வைத்திருந்த சக்திகளுக்கு "கோபத்தை" உருவாக்கத்தானே செய்யும்?

இத்தகைய "ஆதிக்க சக்திகளின்" "கொலைவெறி அரசியலையும்" அவர்களது "நாடக நடிப்பையும்" நாம் அடையாளம் காணவேண்டும். அவர்களது ஏட்டில்அவர்களது நிருபர் அடிபட்டதாக போட்ட "படமே"அதை அமபலப்படுத்தும். ஒரு "சுண்டு விரலில்" கட்டு போட்டுக் கொண்டு அவர் படத்திற்குமுகம் காட்டுவது நகைப்பை உருவாக்கும். இத்தகைய வழக்குகளை மேலிருந்து என்று கூறாமல், காவல்துறை "சரியாக ஆராய்ந்து" பார்க்குமானால் காவல்துறை அதிகாரிகள் மீது நம்பிக்கை வரும். இல்லாவிட்டால் அவர்களும், "வரலாற்றின் குப்பை மேடுகளை" தேடிச் செல்வர்.

Friday, November 25, 2011

சென்னையில் அணு உலை எதிர்ப்பு களம்

எல்லோரும் கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது சரியா? இல்லையா? என்று சர்ச்சை செய்துவரும் வேளையில் சென்னையில் இன்று " சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம்" என்ற அமைப்பை அறிவித்து,பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தினர். அதில் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த. வெள்ளையன், உணவு பொருள்கள் விநியோக சங்கங்களின் தலைவர், மற்றும் உலக தமிழர் பேரமைப்பின் பொருளாளர், தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபரும், நில உடமையாலருமான சென்னை வாழ் பிரமுகர் சந்தரேசன், அறிவியலாளரும், திருவனந்தபுரம் பிரமுகரும், அணு உலைகளின் ஆய்வுகள் மூலம் அணு பாதிப்பு கதிர்வீச்சை கருவி கொண்டு அளந்து விளக்கும் விஞ்ஞானியும், கர்நாடகாவில் கிகா அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் இப்போது ஈடுபட்டு வருபவரும், இருபத்தைந்து ஆண்டுகளாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்துடன் தன்னை இணைத்து கொண்டவருமான வி.டி.பத்மநாபனும், முதலில் பேசினர்.

வி.டி.பத்மநாபன் தான் தயாரித்த "பவர் பாயிண்ட் பிரசெண்டேசனை" சென்னை பத்திரிகையாளர் மத்தியில் திரையில் போட்டு காண்பித்தார். அதில் அணு உலைகள் கூடங்குளத்தில் எவ்வாறு நிறுவப்பட்டுள்ளன என்றும் விளக்கினார். அணு உலைகளுக்கு எப்படி எரிபொருளான யுரேனியும் முக்கியமோ, அதுபோல நல்ல சுத்தமான தண்ணீரும் முக்கியம் என்றார். அதாவது அயோடின் இல்லாத,கணிமதன்மை இல்லாத தண்ணீரை "குளிரூட்ட" அணு உலைகளுக்கு சுற்றி ஓடவிடும் போது மட்டும்தான் "அணு உலைகளிலிருந்து" வெளிவரும் வெப்பமான "கதிர்வீச்ச்சு" கட்டுப்படும் என்ற உண்மையை போட்டு உடைத்தார். இதையே கூறித்தான் அணு உலைக்கு ஆதரவான விஞ்ஞானிகளும் நம்மை பயமுறுத்த, அந்த குளிரூட்டல் தஹ்டுக்கப்பட்டால் இப்போதே கூடங்குளத்தில் விபரீதம் ஏற்படுத்தப்படும் என்று அறிக்கை விட்டு வருகின்றனர்.

அத்தைகைய தண்ணீரை கூடங்குளம் அணு உலைகள் பெறுவதற்கு எண்ண ஏற்பாடு என்று அவர் நிர்வாகத்தை கேட்டார். அப்படி ஒரு நாளைக்கு 2500 கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவை என்றார். அதற்கு நிர்வாகம் எண்ண ஏற்பாடு செய்துள்ளது என்று கேட்டார். இத கேள்வியை வி.டி.பி. ஒரு கருத்தரங்கில் வட மாநிலத்தில் கேட்ட போது மறுநாளே கூடங்குளம் அணு நிர்வாக தலைவர் காசிநாத் பாலாஜி, தாங்கள் எட்டாயிரம் கியூபிக் மீட்டார் தண்ணீரை "கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில்" கொண்டு வார இருப்பதாக ஒரு மழுப்பல் அறிககையை கொடுத்தார் என்றார். அதுவும் போதாது. பத்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இவர்களால் கூடங்குளத்தில் கொண்டுவரப்பட்டாலும் எந்த நேரத்திலும் அவை "பழுதுபடலாம்" என்றார். அப்போது மாற்று ஏற்பாடு தண்ணீருக்கு எங்கே இருக்கிறது என்று வினவினார்.

அதற்காக "பேச்சிப்பாறை அணைக்கட்டு" தண்ணீரையோ, "கோதையாறு அணிக்கட்டு" தண்ணீரையோ எடுத்து வார அணு உலை நிர்வாகம் ஆசைப்பட்டால் அங்குள்ள விவசாயிகள் எப்படி அனுமதிப்பார்கள்? ஏற்கனவே பேச்சிப்பாறை விவசாயிகளின் "பாசன பாதுகாப்பு சங்கம்" 1987 இலிருந்தே தங்கள் தண்ணீரை எடுப்பதை எதிர்த்து போராடி வருகிறது. தண்ணீர் தட்டுப்பாடு அணு உலையை சிறிது, சிறிதாக செயல் இழக்க செய்து, "இருபத்து நாலு மணி நேரத்தில்" வெடிக்க செய்யும் என்று அறிவியலாளர் பத்மநாபன் விளக்கினார். இத்தகைய பெரும் தடங்களை வைத்துக் கொண்டுதான் இவர்கள் கூடங்குளம் அணு உலையில் "பாதுகாப்பு" பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள் என்பது அம்பலமானது.

அடுத்து மனித நேய மக்கள் கட்சியின் போது செயலாளர் அப்துல் சமத் பேசினார். இவர் கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். அதனால் அங்குள்ள நிலைமைகளை விளக்கினார். எந்த அளவுக்கு கல்பாக்கம் அணு உலைகளின் " கதிரியக்க கசிவுகள்" அங்குள்ள கிராமங்களில் "புற்று னையை" ஏற்படுத்தி உள்ளது என்று பட்டியலிட்டார். மருத்துவர் புகழேந்தி அது பற்றி உண்மை விவரங்களை கூறியதற்காக அந்த அணு உலை நிர்வாகம் அவர் மீது குறி வைத்து வழக்குகளில் சிக்க வைக்க திட்டமிடுவதும் அங்கே தெரிய முடிந்தது. இப்போது புதிய "ஈனுலை" என்று ஒரு உலையை கொண்டுவர முயர்ச்சிப்பதை எத்ரிக்க வேண்டும் என்றார். கல்பாக்கம் மக்கள் படும் அவதி போதுமென்றும், அந்த கொடுமை கூடன்குலத்திற்கும் வேண்டாம் என்றும் கூறினார்.

அடுத்து பேசிய இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் யாரிடம் கேட்டு இவர்கள் கூறுகின்ற யுரேனியத்தை உள்ளே கொடன்னு வந்தார்கள் என்றார். அமெரிக்காவிற்கு முழுவதும் அடிமை ஆவதும், அணுகுண்டு தயாரிக்க திட்டமிடுவதும் இவர்களது முயற்சியா? என்று வினவினார். அதை அடுத்து மக்கள் சிவில் உரிமை கழகத்தின்{ பி.யு.சீ.எல்.} தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி பேசினார்.அவரது இருபத்தைந்தாண்டு கூடங்குளம் எதிர்ப்பு போராட அனுபவங்களை கூறினார். இந்த எதிர்ப்பு இப்போது உருவானந்து என்பதே ஒரு பொய் என்றார்.இத்தனை ஆண்டுகளாக மக்களது கவலையை போக்க அரசுகள் முயற்சி செய்யாதது யார் தவறு என்று கேட்டார்.

1962 ஆம் ஆண்டு அணு சட்டப்படி இவர்கள் அனைத்தையும் அணு சக்தி துறைக்கு மட்டுமே ரகசியமாக வைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். 2005 ஆம் ஆண்டு "தகவல் பெரும் உரிமை சட்டம்" உருவானதை நினைவு படுத்தி, பகுஷிமா விபத்திற்கு பிறகு அந்த தகவல் பெரும் உரிமையை மக்களுக்கு அளித்து உண்மையை அரசு கூறவேண்டும் என்றார். அதற்கான மைச்சரவை தீர்மானந்தை தமிழக அரசு போட்டதற்காக மத்திய "அய்.மு.கூ. அரசு " தமிழ்நாட்டை பழி வாங்குகிறது என்றார். அதற்காக அணு சக்தி துறை மூலமும், கூடங்குளம் அணு உலை நிர்வாகம் மூலமும், பல கோடி பணத்தை செலவழித்து "அணு உலை ஆதரவை" கிளப்பி விடுகிறார்கள் என்றார். 1998 ஆம் ஆண்டு நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் உள்ள "ஊடகத்துறை வசம்" ஒரு கோடி ரூபாய் தருகிறோம், அணு பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள் எனு லஞ்ச்ச்மா கொடுக்க முயன்றதை சுட்டி காட்டினார். இப்போது அதுவே பல நூறு கோடி லஞ்சமாக மாறிவிட்டது என்றார். ஆகவே அணு உலை ஆதரவாலர்களுக்குதான் பல கோடி ரூபாய் வருகிறது என்றார்.

அமெரிக்கா அணு சக்தி சட்டத்தை அதாவது 123 சட்டத்தை அமுலாக, பல அணு உலைகளை இந்தியாவிற்கு கொண்டுவர பல நூறு கொடிகளை, அமெரிக்கா அணு உலை அதாரவுக்கு செலவழிக்கிறது என்றார். அதையே அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது பழி போட திசை திருப்புகிறார்கள் என்றார். மக்கள் இயக்கத்தை யாரும் ஒச்சைப்படுத்த முடியாது என்றார். அடுத்து பேசிய பறையர் பேரவை ஏர்போர்ட் மூர்த்தி, தானும் கல்பாக்கம் பகுதிகாரர்தான் என்று கூறி, தன்கள் பகுதியில் எத்தனை சொந்த கற்ற தலித்துகள் கல்பாக்கம் அணு உலை கதிர் வீச்சால் "புற்று நோய் " வந்து அவதிப்படுகிறார்கள் என்று விளக்கினார்.

மொத்தத்தில் "கிருத்துவர்கள் மட்டுமே எதிர்ப்பதாக" பொய்யை கிளப்பிவிட்ட அர்சுதுரைக்கு, கிருத்துவர் அல்லாத பல முக்கிய பிரமுகர்கள் இந்த சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம் என்ற அமைப்பை உருவாக்கி இருப்பது பெரும் "பதிலடியாக" இருக்கும்.

Wednesday, November 23, 2011

வால்மார்ட் இடம் நாட்டை ஒப்படைக்கும் நயவஞ்சகம்.

வால்மார்ட் இடம் நாட்டை ஒப்படைக்கும் நயவஞ்சகம்.
இன்று மாலை மத்திய அமைச்சகத்தில் கொண்டுவர இருக்கும் "திட்டம்" இந்தியாவில் உள்ள சாதாரண சில்லறை வணிகர்களை ஒழிப்பது மட்டுமல்ல, அதையும் தாண்டி இந்திய சந்தையை அமெரிக்காவின் ஏகபோக பன்னாட்டு நிறுவனமான "வால்மார்ட்" கைகளில் ஒப்படிக்க உள்ள தந்திரம். அமைச்சகம் முன்னால் வைக்கப்பட்டுள்ள நூற்று பத்து பக்கங்களில் "ஆயிரம் கொடிகளை" மூலதனமாக போடும் நிறுவனமே இந்தியாவின் பெரு நகரங்களில் "பெரும் பல்முனை அங்காடிகளை" நிறுவ அனுமதி அளிக்கப்பட்டு என்று உள்ளது. அதாவது அமெரிக்காவின் கார்பொரேட் ஆக இருக்கும் "வால்மார்ட்" நிறுவனத்தை உள்ளே நுழைய விடுவது மட்டுமல்ல, அதற்கு போட்டியாக எந்த ஒர் நிறுவனமும் வந்துவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு தெளிவாக உளது என தெரிகிறது.


பத்துலட்சம் மக்கள் தொகை உள்ள அனைத்து நகரங்களிலும் இனி "வால்மார்ட்" மாத்திரமே சந்தையை "கபளீகரம்" செய்யும். வால்மார்ட் நிறுவனம் தனது "தொழிலாளர்களை" நடத்துவது, மற்றும், நுகர்வோரின் உரிமைகளுக்கு மதிப்பு அழிப்பது ஆகிய விசயங்களில், "கடுமையான கெட்டபெயரை" சம்பாதித்து உள்ளது. இப்போது இருந்துவரும் "சில்லறை வணிகர்கள்- நுகர்வோர்" என்ற உறவு ஒரு ஆரோக்கியமான உறவாகும். நுகர்வோர் கைகளில் காசு இருக்கும் போது அதற்கு தகுந்தாற்போல பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நுகர்வோருக்கு தேவைப்படும்போது, அத்தகைய பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். நுகர்வோரின் கைகளில் இருக்கும் சிறிய அளவு காசுக்கு தகுந்தாற்போல பொருள்களை "பொட்டலம்" கட்டி வாங்கிக் கொள்ளலாம். இது இந்தியாவின் கிராமங்கள் சார்ந்த, விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தில், நுகர்வோரின் தேவைகளையும், வாங்கும் சக்தியையும் பொறுத்து நடத்தப்படும் "பரிவர்த்தனை". ஆனால் ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம்தான் அத்தகைய பொருள்களை விற்கும் என்ற நிலை வந்துவிட்டால், நுகர்வோருக்கு ஒரு "உத்திரவாதமான" ஆரோக்கியமான உறவு வணிகர்களுடன் இல்லாமல் போய்விடும்.

இயந்திரமயமான ஒரு உறவில் என்னதான் அழகான பைகளில் சாமான்களை வாங்கினாலும், அவை நுகர்வோரின் திருப்தியை நிரப்புமா? ஏழை, எளிய நுகர்வோர்கள் அதிகம் உள்ள நமது நாட்டில் ஆரோக்கியமான உறவுடன் கூடிய வணிகம் மட்டும்தானே நுகர்வோரின் தேவையை சரியாக நிரப்ப முடியும்? இது "மனித உறவு" சம்பந்தப்பட்டது. நிலப்பிரபுத்துவ நில உறவுகளை இன்னமும் வைத்துக் கொண்டு, முழு முதலாளித்துவ பழக்கங்களுக்கு எப்படி செல்ல முடியும்? இந்த மத்திய அரசின் முயற்சி, கேள்விப்படும்போது "படாடோபமாக" தெரியலாம். ஆனால் நடைமுறையில் இந்திய நுகர்வோரை "வஞ்சிக்கின்ற" ஒரு செயலே.

சில்லறை வர்த்தகத்தை அழிக்கவரும் அமைச்சரவை கூட்டம்.

நாளை மாலை இந்தியாவில் உலா வரும் சில்லறை வர்த்தகங்களுக்கு சாவுமணி அடிப்பதற்காக மத்திய அமைச்சரவை கூடப் போகிறது. அதாவது சில்லறை வர்த்தகத்தில் "அந்நிய நேரடி மூலதனத்தை" உள்ளே நுழைப்பதற்காக ஒரு "நூற்று பத்து" பக்கம் கொண்ட அறிககையை தயார் செய்து "நிதி அமைச்சகம்" மத்திய அமைச்சகம் கையில் கொடுத்துள்ளது. அந்த பக்கங்களை படித்துக்கொண்டு வந்து மத்திய அமைச்சரவை நாளை மாலை கூடி, அதுபற்றி முடிவெடுக்க வேண்டும். அதில் எந்த துறைகளில் எல்லாம் அந்நிய நேரடி மூலதனம் வரலாம் என்று எழுதப்பட்டுள்ளது. விவசாயம், மற்றும் அனைத்து பல் [பொருள்களிலும் அந்நிய மூலதனம் "ஐம்பத்தொரு" விழுக்காடு வரை வரலாம் எண்மரு அதில் குறிப்பு கொடுக்கப் பட்டு=ள்ளது. இது அந்த துறைகளில் இருக்கும் சில்லறை வணிகத்தை ஓரங்கட்டிவிடும்.

ஏதோ அந்நிய மூலதனத்திற்கு தாங்கள் "கட்டுப்பாடு" வித்திப்பது போல அந்த அறிக்கையில் "படம்" காட்டியுள்ளார்கள். அதாவது அந்நிய நேரடி மூலதனம் "ஐம்பத்தொரு" விழுக்காடு வரிதான் வரவேண்டும். "பத்து லட்சம்" மக்கள் தொகை இருக்கும் நகரங்களில்தான் வரவேண்டும். அதாவது அந்நிய நேரடி மூலதனத்தில் இயங்கும் "பல்பொருள் அங்காடிகள்" அதாவது சூப்பர் மார்கட்டுகள் சிறிய நகரங்களில் வரக்கூடாது என்றும், பத்து லட்சம் மக்கள் வசிக்கும் நகரங்களில் மட்டுமே வரவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள்ளது. இது ஒரு மாபெரும் "ஏமாற்று வேலை". ஏன் என்றால் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளும், அதாவது பெரிய, மற்றும் நடுத்தர நகரங்களும் இந்த "பட்டியலில்" வந்துவிடும். அங்கெல்லாம் இருக்கும் சில்லறை வணிகர்கள் "கடைகளை மூடிவிட்டு" ஓட வேண்டி வரும்.

ஏதோ நிபந்தனைகள் போட்டு அந்நிய நேரடி மூலதனத்தை கட்டுப்படுத்துவது போல " ஏமாற்று வேலை" செய்வதற்காக இந்த கொள்கை முடிவை எடுக்கப் போகிறார்கள். இது இந்தியாவையே "கூறு போட்டு" பன்னாட்டு மூலதன வணிகர்களுக்கு விற்பதற்காக உள்ள ஏற்பாடு. "வால்மார்ட்" போன்ற உள்ள ஏகபோக, பன்னாட்டு மூலதன முதலைகளிடம் இந்திய உள்நாட்டு சந்தையை ஏலம் விடுகின்ற ஒரு செயல்திட்டம். இதை நிறைவேற்ற விடாமல் இங்குள்ள வணிகர்களும், மக்களும், நாடாளுமன்றவாதிகளை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். .

கார்பரேட் அதிகாரம், அரசியல் அதிகாரத்தை விட உயர்ந்தது.?

கனிமொழி பிணைகாக, திமுக தலைவர் கலைஞர் டில்லி சென்று மன்மோகனையும், சோனியாவையும் சந்தித்து நெஞ்சுருக பேசிவிட்டு வந்தார். ஆனாலும் பாட்டியாலா நீதிமன்றம் என்ற விசாரணை நீதிமன்றத்திலும், டில்லியின் உயர நீதிமன்றத்திலும் கனிமொழிகான பிணை மறுக்கப்பட்டது. இது அரசியல் அதிகாரத்தின் தோல்வி அல்லது அரசியல் அதிகாரம் தன்னால் பிரிதொரு அதிகாரத்தை எதிர்த்து செயல்பட முடியாத விளைவு. சீ.பி.அய். வழக்கறிஞர் கனிமொழிக்கு பிணை கொடுக்க மறுப்பு கூறவில்லை எனு அறிவித்த பின்னாலும், நீதிமன்றங்கள் மசியவில்லை. உச்சகட்ட அதிகாரம் அரசியல் அதிகாரம்தான் என்று எண்ணியவர்கள் எல்லாம் இந்த நிகழ்வை எப்படி விவரிப்பது என்று திணறிப் போனார்கள். ஏதோ ஒரு அதிகார சக்தி இடை மறிக்கிறது என்று மட்டுமே புலம்பினார்கள்.


ஆனால் உச்சநீதிமன்றத்திற்கு சென்ற கார்பொரேட் காரர்கள் தங்கள் கணக்கு சரிதான் என்று நிரூபிக்கும் முகத்தோடு இன்று "ஐந்து குற்றம் சாட்டப்பட்ட கார்பொரேட் அதிகாரிகளுக்கும்" பிணை கிடைத்துள்ளது. அதுமட்டுமல்ல உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் பிணை கொடுக்காத உயயர்நீதிமன்றத்தை கடிந்து கொண்டுள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படையே "பிணை கொடுக்க சொல்கிறது" என்று உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை கண்டித்துள்ளது. ஏதோ உச்சநீதிமரத்தின் நீதியரசர்கள் பலரும், சனி, ஞாயிறு கிழமைகளில் "சிறப்பு விமானங்கள்" மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கும் "உல்லாசபுரிகளுக்கும்" அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற காரணத்தினால் மட்டுமே இந்த பிணை கிடைத்ததா? அப்படி ஒரேயடியாக சொல்லமுடியாது.

ஆனால் ஒன்றை மட்டும் நாம் சொல்ல முடியும்.கார்பொரேட்கள் "பலம் வாய்ந்தவை". அதனால் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையே பிணை கொடுப்பதுதான் என்ற வார்த்தை முத்துக்கால் சாதாரண மனிதனுக்கு சார்பாக வந்து விழுந்துள்ளன. எப்படியோ. கார்பொரேட்கள், அரசியல்வாதிகளை விட, பலம் வாய்ந்தப்வர்கள் என்பது இதில் நிரூபணம் ஆகிறது.

நீதிபதி ஷைனி ஒரு கொடுங்கோலனா?

டில்லி பாட்டியாலா நீதிமன்றம். கனிமொழி உட்பட விசாரிக்கப்படும் சீ.பி.அய். நீதிமன்றம். தொடர்ந்து கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் பிணை மறுக்கப்படும் இடம். இப்போது அந்த குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமரம் அழைத்து வராமலேயே திஹார் சிறை சென்று விசாரிக்கப் போகிறேன் என்று அந்த ஷைனி அறிவிக்கிறார். இது எண்ண புது கதை?

கனிமொழி மீது போடப்பட்ட வழக்குகளில், சில பொருந்தாது என்று சீ.பி.அய். வழக்கறிஞரே கூறிவிட்டார். அதாவது 120 ௦ [பி] என்ற ராஜா துரோக பிரிவுடன் சேர்த்து படிக்கப்படும் 409 என்ற பிரிவான மோசடி வழக்கு கனிமொழிக்கு பொருந்தாது என்று சீ.பி.அய்.. வழக்கறிஞர் பாட்டியாலா நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற பிணை விசாரணையிலும் கூறிவிட்டார். மீதி பிரிவுகளில் உள்ள வழக்குகள் கனிமொழியை குறைந்த பட்சம் ஆறு மாதங்கள் உள்ளே வைக்கும் தண்டனையை கொடுக்கும் வழக்குகள். ஆனால் அவரோ, அந்த ஆறு மாதத்தை இப்போதே விசாரணை காலமாக கழித்து விட்டார். இதை கூட கணக்கிடாமல் அவரையும் சேர்த்து திஹார் சியரிக்குள்ளே விசாரிப்பேன் என்று கூறும் நீதிபதி ஒன்று மனநோய் கொண்டவார்கவோ, அல்லது கொடிய மனது கொண்டவராகவோ இருக்கவேண்டும். எப்படியானாலும் அவர் சட்டப்படி நடக்க வில்லை எனபது மட்டும் திண்ணாம்.

அப்படியானால் அந்த நீதிபதிக்கு பின்னால் இருப்பவர் யார்? அந்த சயனி என்ற நீதிபதிக்கு கனிமொழி மீதோ, தாத்தா கலைஞர் மீதோ என்மத ஒரு கோபமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் வரத்து நண்பர்கள் யாரோ, அல்ல்லது அவருக்கு பெருத்த அளவில் பின்புலமாக இருப்பவர் யாரோ கனிமொழி வெளியே வந்து விடக் கூடாது என்று சதி செய்ய எவ்ண்டும்? யார்? யார்? யார்? அது யார்? என்று நாம் கேட்டால் ராஜாத்தி அம்மா போட்டு உடைக்கிறார். அவரது குறி முழுவதும் கே.டி. சகொக்களை சுட்டுகிறது.

Thursday, November 17, 2011

நார்வே வெளியிட்ட அறிக்கைப்படி டில்லியும் ஒரு போர்குற்றவாளியே

நார்வே வெளியிட்ட அறிக்கைப்படி டில்லியும் ஒரு போர்குற்றவாளியே
இரண்டாண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளை வென்றதாக கொக்கரிக்கும் இலங்கை அரசு, வன்னியில் ஒரு தமிழின அழிப்பு போரை நடத்தியது என்பது இன்று அனைத்துலக சமூகத்தால் ஏற்றுக் கொல்லப்பட்ட செய்தி. அந்த்ச இன அழிப்பு போரில் ஈடுபட்ட எழு நாடுகளை பற்றிய செய்தியும் வெகுவாக அம்பலமாகி உள்ளது. அந்த எழு நாட்டு பின்புலத்தில், தெற்காசியாவின் வல்லரசு நாடாக இருக்கும் இந்திய அரசின் செயல்பாடும், மவுனமும் எந்த அளவுக்கு ஈழ இன அழிப்பு போரில் செயல்பட்டுள்ளது எனபதை நார்வே நாடு இப்போது தனது அறிக்கையாக கொடுத்துள்ளது.

அந்த அறிக்கை இந்திய பேரரசை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. ஈழ விடுதலை போரில் பல ஆண்டுகளாக சமாதான முயற்சியில் ஈடுபட்ட நார்வே நாட்டின், அமைச்சர் எரிக் சொல்டீம் இந்த அறிககையை முன்வைத்துள்ளது சாலப் பொருத்தமானது. முக்கிய நேரங்களில், போரின் முக்கிய நேரங்களில், இந்திய அரசு தலியிட்டு, விடுதலைப் புலிகள் காப்படர்ப்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்தியா கவனமா ஐருன்தது என்பதே நார்வேயின் வெளிப்படுத்தல். காங்கிரஸ் அரசு வந்த பிற்பாடு, ஈழ விடுதலையை ஒடுக்குவதில் காங்கிரஸ் அரசு அதிக கவனத்தை எடுத்துக் கொண்டது என்பதும் நார்வே அரசின் அம்பலப்படுத்தல். குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் எப்படி தங்கள் சொந்த நலன், சொந்த விருப்பம், சொந்த மதிப்பீடு ஆகியவற்றை வைத்துக் கொண்டு அந்த போரின் கடைசி க்ட்டத்தில் விடுதலைப் புலிகளையும், தமிழீழ மக்களையும் தனிமை படுத்தி சாகடிப்பதில் கவனமாக இருந்தது எனபது அந்த அறிக்கையில் வெளிப்படுகிறது.


இனி போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்சே என்று மட்டும் கூறுவதை விடுத்து, இந்திய அரசையும் சேர்த்து நாம் முழங்க வேண்டும் என்று நம்மை அழைப்பது போல இந்த நார்வே அறிக்கை அமைந்திருக்க வில்லையா?.

Tuesday, November 15, 2011

சட்டவிரோத ஸ்டெரிலைட் ஆலையை ஆதரிக்கும் அரசுகள்?

சட்டவிரோத ஸ்டெரிலைட் ஆலையை ஆதரிக்கும் அரசுகள்?
ஸ்டெரிலைட் ஆலை தூத்துக்குடியில் தொடங்கப்பட இருக்கும்போதே, அது மகாராஷ்டிரா மாநிலத்தில் அல்போன்சா மாம்பழ தோட்டங்களை அழித்து விடும் என்று மாம்பழ உற்பத்தி விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தால் தவிர்க்கப்பட்டது. இது ஒரு தாமிர உருக்கு ஆலை. அதாவது தாமிரத்தை பூமிக்கு அடியிலிருந்து எடுத்து, தாமிர கனிம வளங்களை கொள்ளையடிக்கும் தனியார் ஏகப்க முதலாளி வேதாந்தா அகர்வால், இளிச்சவாய் மாநிலம் என்ருதமிழ்நாட்டை கணடதால்,தொத்துகுடியில் 1995 இல் இறக்குமதி ஆனது.மாறி, மாறி வரும் ஆட்சியாளர்களின் ஆதரவோடு எத்தனை தொழிலாளரை ஆலைக்கு உள்ளேயே கொன்றாலும், மீண்டும்,மீண்டும் இந்த ஸ்டெரிலைட் ஆலை அனுமதி பெற்று இயங்க வைக்கப்படுகிறது.

இதன் முதலாளி நிறுவனமான வேதாந்தா இந்தியாவில் எத்தனை முறை தடைகளை அபராதங்களை,மூடல்களை எதிர்கொண்டாலும் "கையூட்டு" கொடுத்தே ஆலையை திறந்து மாசுகளை அள்ளி தெளித்தே தனது மோசமான வாழ்க்கையை நடத்தி வருகிறது. ஒரிஸ்ஸாவில், வேடாந்தாவின் வன அழிப்பு அத்துமீறல்களும், நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. ஆலை மூடல் அம்பலமானது. பங்குதாரர் கூட்டத்தில் லண்டனில் வேதாந்தா கேள்விகள் கேட்கப்பட்டு அம்பலமானது. நார்வே நாட்டின் "ஓய்வூதியம் பெறுவோர்" தங்கள் பங்குகளை திரும்ப பெற்றனர். இதே வேடாந்தாவின் ஸ்டெரிலைட் நிறுவனம் எந்த விதி மீறலையும் சாதரணமாக தூத்துக்குடியில் செய்துகொண்டு இருக்கிறது. இதன் மீது எத்தனை வழக்குகள் இருந்தாலும் அது பற்றி கவலைப் படாமல் பணம் கொடுத்தே தனது காரியங்களை செய்து வருகிறது.

இரண்டு நாட்கள் முன்பு ஒரு தொழிலாளி ஸ்டெரிலைட் ஆலை உள்ளேயே மரணம் அடைந்தும் இன்னமும் "சட்ட விரோத" வேலைகளை ஸ்டெரிலைட் ஆலை நிறுத்த வில்லை. இன்று "அதீனா" என்ற கப்பல் ஒன்று "தாமிர கைமன்களை" ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி துறைமுகம் வாசலில் வந்து நின்று கொண்டு இருக்கிறது. அந்த துறைமுகத்திற்குள் 36000 டன் தாமிர கனிமம் தான் கொண்டுவரலாம். ஆனால் இந்த கப்பல் 42000 டன் கணிமத்துடன் வந்துள்ளது. இதுவே சட்ட விரோத செயல். அதனால் அதிகமாக உள்ள 6000 டன் தாமிரத்தை பெரிய கப்பலில் இருந்து சிறிய படகுகளுக்கு அதாவது புர்ஜர்களுக்கு மாற்றி எடுக்க ஸ்டெரிலைட் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இன்று அதற்கான பர்ஜர்கள் தயார் ஆகிவிட்டன. ஆனால் காற்று அதிகமாக வீசியதால் நாளை இறக்கலா என இருக்கிறார்கள்.

கப்பல் மேலிருந்து கீழே உள்ள சிறிய பர்ஜர்களில் 6000 தங்களை கொட்டும்போது, கடலிலும் அவை விழா நேரிடும். ஏற்கனவே தூத்துக்குடி துறைமுகத்தில் இந்த "தாமிர கனிமம்" மலை போல குவிக்கப்பட்டிருக்கும். அந்த "பச்சை மலையை" அருகில் சென்னு கூட காண முடியாது. அத்தனை நெடி வீசும். மூக்கால் தாங்க முடியாது. இப்போது அந்த தாமிர கனிமம் கடலிலே கலப்பதால், கடல் வாழ் உயிரினங்கள் சாகும்.கடும் மாசு கிளம்பும். கடலையே களங்கப்படுத்தி விடும். அத்தகைய நடவடிக்கை நாளை நடக்கப் போகிறது. நமது மத்திய, மாநில அரசுகள் அதைகானதது போல இருக்கின்றன.தூத்துக்குடி துறைமுக நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், கஸ்டம்ஸ் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் தங்கள் நலனை மட்டுமே பேணுவதால் இது நடக்க போகிறது.

உத்தபுரத்தில் போலி[ஸ்] முகமூடி கிழிகிறது ..........

உத்தபுரத்தில் போலி[ஸ்] முகமூடி கிழிகிறது ..........
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம், உத்தமபுரம் கிராமம் சென்ற ஆட்சியிலேயே பிரபலமாக பேசப்பட்டது. அங்கு இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகமான தேவேந்திர குல வேளாளர் [ பள்ளர்] சமூக மக்கள் தங்கள் சொந்த கிராமத்திலேயே இருக்கும் பிள்ளைமார் சமூக மக்களால் ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கப்பட்டு, கோவில் நுழைவு மறுக்கப்பட்டு, இரண்டு குடியிருப்புகளுக்கு மத்தியில் ஒரு "தீண்டாமை சுவர்" கட்டப்பட்டு, சட்ட விரதமாக சமத்துவம் இழந்து, ஆளும் கூட்டத்தாரும், அதிகாரவர்க்கத்தாரும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் உழவர் குடிக்கு எதிராக செயல்பட்டு வந்தார்கள் என்பதை நாடு அறியும். அங்கே தேவேன்றகுலம் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்த "புதிய தமிழகம்" கட்சியையும், அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வந்த "தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு" வினரையும் கண்டுகொள்ளாமல் இருந்த காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் எழும்பிய பிரச்சனையை தீர்க்க எண்ண செய்தார்கள் என்று லாவணிக்க வேண்டும்.

சென்ற ஆட்சியில் கலைஞரின் நேரடி பார்வையில் அந்த ஊர் விவகாரத்தில் "தீண்டாமை சுவரை" இடிக்க வேண்டும் என்ற குரல் எழுந்தபோது, அங்குள்ள பிள்ளைமார் சமூக மக்களிடமும், அவர்களது தலைவர்களிடமும் புதிய தமிழகம் தலைவர் மருத்துவர் கிரிஷ்ணசாமி தொலைபேசியில் பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வார முயல்வதை அறிந்த முதல்வர் தனக்கு நெருக்கமாக இருந்த சீ.பி.எம். செயலாளர் என்.வரதராஜனிடம் ல்கலந்துகொண்டு, ஒரு நாடகம் அரங்கேற ஏற்பாடு செய்தார். அதில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு தனி அரசியல் கட்சி இருக்கக் கூடாது என்று சீ.பி.எம் கட்சியே அந்த பிரச்சனையை எடுத்தால் பரவாயில்லை என்று முதல்வர் அபிப்பிராயப் பட்டார்.அதை ஒட்டி தீண்டாமை சுவரை இடிக்க சீ.பி.எம். கட்சியின் அகில இந்திய போது செயலாளர் தோழர் பிரகாஷ் கரத் கொண்டு வரப்பட்டார். இந்தியாவில் வேறு எங்குமே "தீண்டாமை" இல்லாததை அந்த கட்சி கண்டுபிடித்ததால்தான், தீண்டாமை இருக்கும் ஒரே இடமாக அந்த கட்சி கண்டுபிடித்த உத்தபுரத்திற்கு கட்சியின் அகில இந்திய போது செயலாளரே வந்தார்.

அனைத்துமே அன்றைய முதல்வரின் ஏற்பாடு என்பது வெளி உலகுக்கு தெரியாது.பிரகாஷ் கரத் வரும் முன்பே கலைஞர் என்ற பெரியார் வழி வந்தவரின் ஏற்பாட்டில் அரசே அந்த சுவரை இடித்தது. முழுமையாக இடித்ததா? என்றால் இல்லை. அப்போதுதான் அரசும், சீ.பி.எம். மும் அரசியல் செய்ய முடியும் என்று எண்ணினார்களா? என்பது தெரியவில்லை. அதன்பிறகும் அங்குள்ள கோவிலுக்குள் தேவேந்திர மக்கள் செல்வதும், அவரகளுக்கு பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்வதும், கோவில் அருகே குப்பைகளையும், கழிவு சாக்கடையையும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குடியிருப்பை நோக்கி திருப்பி விடுவதும் தொடரும் பிரச்சனைகள்.

திடீரென இப்போது சென்ற வாரம் எல்லாம் தீர்ந்து விட்டன என்றும், தீண்டாமைக்கு எதிராக வெற்றி என்றும் அதை சாதித்தவர்கள் சீ.பி.எம். என்று ஒரு புறமும், விஸ்வ ஹிந்து பரிஷத் என்று மறுபுறமும் விளம்பரம் செய்யப்பட்டது. ஊடகங்களுக்கு அது ஒரு இனிப்பான செய்தி. வெளியிட்டு கொண்டாடின. அதாவது தாழ்த்தப்பட்ட நிலையில் உள்ள தேவேந்திர குல மக்களை பிள்ளைமார்கள் கட்டுப்ப்பாட்டில் இருக்கும் கோவிலுக்குள் கொண்டு சென்று பூசை செய்வித்து காவல்துறை தீண்டாமையை உடைத்து விட்டது என்பது செய்தி. ஆனால் உண்மை வேறு மாதிரி இருக்கிறது.

காவல்துறையால் கோவிலுக்கு உள்ளே கொண்டு செல்லப்பட்ட தேவேந்திர குல மக்கள் "பதினோரே" பேர்தான். அந்த கிராமத்தில் மூன்னூறு குடும்பங்கள் தேவேந்திர குலம் உள்ளது. இவர்கள் உள்ளே கொண்டு செல்லப்பட்ட போது, காவல்துறையின் பலத்த பாதுகாப்பில் பிள்ளைமார் சமூகம் "தடுத்து நிறுத்தப்பட்டது". பிள்ளைமார் சமூக பெண்கள் நூற்றுக் கணக்கில் அங்கே நின்று கொண்டு, "நாங்கள் வீடு வீடாக வரி கட்டி கட்டிய கோவிலுக்குள் பள்ளர்கள் நுழைவதா?" என்று கூக்குரல் கிளப்பினார்கள்.அதனால் காவல்துறைஅச்சார, அவசரமாக அந்த பதினோரு பேரையும் பூசைசெய்யசொல்லிவிட்டு, வெளியே கட்டாயமாக அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். இது ஒரு அவசர கேதியிலான"நாடகமாக" நடத்தப்பட்டு விட்டது.

உள்ளே சென்ற பதினோரு பெரும் சீ.பி.எம். ஆல் ஏற்பாடு செய்யப்ப்பட்ட சீ.பி.எம். கட்சியை சேர்ந்த மிலிடரி பொன்னையா குடும்பத்தினர்கள். இதை சீ.பி.எம். "வெற்றி" என்று கொண்டாடுகிறது. ஏன்? சீ.பி.எம். தலித் கட்சிகள் தோன்றிய பிறகு, அவை வாக்கு அரசியலுக்கு வந்த பிறகு, தங்கள் கட்சியின் வாக்குகள் எல்லாம் வர்களுக்கு போய்விட்டது என்று கருதுகிறது. அதனால் அதை உடைத்து மீண்டும் கொண்டுவர ஒரு பிரும்ம பிரயத்தப்னம் செய்வது அவர்களது வேலைத் திட்டம். அதற்காகத்தான் உத்தபுரத்தையும் "சோதனை களமாக" எடுத்தது. அதற்காக ஒரு "தீண்டாமை ஒழிப்பு முன்னணியை" அமைத்தது. அதில் கவனமாக பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த சம்பத் என்பவரை தலைவராக போட்டது. அதனால்தான் பிள்ளைமார் சமூகத்திடமும் உத்திரபுரத்தில் பேசி சரி செய்ய முடியும் என்று முயற்சியை எடுத்தது.

இப்போதும் உத்திரபுரத்தில் பிள்ளைமார் சமூகத்துடன் காவல்துறையுடன் சேர்ந்து கொண்டு பேசி வருகிறது. அவர்களோ, எங்கள் கோவிலுக்கு "கும்பாபிஷேகம்" செய்யப்போகிறோம். அது முடிந்த பிறகு வேண்டுமானால் தீண்டத்தகாத சமூகத்தை உள்ளே அனுமதிக்க பார்க்கிறோம் என்று பேசி வருகிறார்கள். இவ்வாறு இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக "எல்லோரும்" சேர்ந்து வேலை செய்கிறர்கள். இதில் காவல்துறை "மக்களையும், அரசையும்" ஒரே நேரத்தில் ஏமாற்றி விட்டோம் என்று திருப்தியடைகிறது. அந்த வட்டாரமான தென் மாவட்டங்கள் முழுமைக்கும் காவல்துரையின் தலைமை அய்.ஜி. ராஜெஷ்தாஸ் ஏற்கனவே தனது "புகழ்பெற்ற பரமக்குடி துப்பாக்கி சூட்டால்" தேவேந்திர மக்கள் மீது போர் தொடுத்தவர் என்பது நினைவில் கொள்ளத் தக்கது. .


இந்த உண்மைகளால் காவல்துறையின் "மூஞ்சி" கிழியத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே சென்ற ஆட்சியில் நடந்த பிள்ளைமார் மக்களின் "மலை ஏறும் போராட்டம்" ஆதிக்க சாதிகளை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சராலும், அந்த கூட்டணியின் இன்னொரு கட்சி தலிவராலும் அரங்கேறியது என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. உத்தபுரம் தீண்டாமை ஒழிப்புக்கு ஒரு முன்னுதாரணம் அல்ல. மாறாக "தீண்டாமை ஒழிப்பு நாடகத்திற்கு" ஒரு நல்ல முன்னுதாரணம்

Monday, November 14, 2011

மேட்டுக்குடி சாராயம் விற்கப்போவது தனியார்துறை?

சகா நினைவு படுத்திவிட்டார். இன்று கூட காட்சி ஊடகத்தில் கூறிவிட்டேன். தமிழக அரசு எலைட் சாராயக்கடைகளை அதாவது மேட்டுக்குடி சாராயக் கடைகளை "தனியாரிடம்" ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாம். அப்படியானால் சாராயக் கடைகள் தனியாரிடம் இருப்பதால் , தனியாரின் ஏலத்திற்கு செல்வதால், ரௌடியிசம் வளர்கிறது என்ற பெயரில் அரசு எடுத்து நடத்துவது என்ற க்கை முடிவு "காற்றில்" பறந்து விட்டதா? அதனால்தான் இன்று முரசொலியில் கட்டம் கட்டி, இனி விபச்சார விடுதிகள் வரும், சூதாட்டம் வரும், குதிரை பந்தயம் வரும் என்று நீட்டி முழங்கி இருக்கிறார்கள்.

நாம் கேட்பல்தேல்லாம் எது வந்தாலும் "தனியாருக்கு" வருணம் என்பது ஒரு கொள்கை முடிவுதானே? அதாவது ஏதோ ஒரு குழு இதற்காகவே அரசிற்குள் உழைந்து செயல்படுவது தெரிகிறதே? எந்த காரணத்தை கூறி தனியாரிடம் இருந்து சாராயக் கடிகள பறிக்கப்பட்டதோ, அதே காரணம் "திசை" மாறி விட்டதே? இந்த பழைய குருடி கதவை திறக்க ஒரு வருடமாவது ஆகவேண்டாமா? அதற்குள் பொறுக்காமல் "திடீர்" பணக்காரர்கள் சேர்ந்துகொண்டு, மேட்டுகுடி சாராயக் கடைகளை ஏலம் எடுக்க தயாராகி விட்டார்களா? யார் சொன்னது? எடுத்தாச்சு, அய்யா. அந்த விமான நிலைய ஏலக்காரர்கள்தான் எடுத்திருக்காங்கலாமே?

இனி எல்லாம் தனியாரிடம்தானா? சரி. அரசின் ஒவ்வொரு இலாகாவையும் தனியாரிடம் கொடுத்தால் நிறைய காசு கிடைக்குமாமே? அதுவும் நடக்கப்போகுதா?

Sunday, November 13, 2011

அண்ணா நூலகம் கட்ட பயன்பட்ட நிதி கிராம நூலகங்களுடையதா?

தமிழ்நாட்டில் ஆயிரம் ஊரக நூல்நிலயகள் இருக்கலாம். அவைகளுக்கு தனியாக அவற்றின் வளர்ச்சிக்காக ஏற்கனவே ஒரு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை முறையாக "ஊரக நூல்நிலயங்களுக்கு" செலவழித்தால் ஒவ்வொரு கிராமத்திலும் படித்த மற்றும் தொடர்ந்து படிக்க முடியாத மாணவர்களுக்கு "நூல்களை"படிக்க அது உதவும். அப்படி உதவ அனுமதித்தால் கிராமப்புற தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்றி வைத்ததாக அரசை பாராட்டுவார்கள். ஆனால் அந்த செயல்பாடு நடக்க விடாமல் அரசு தடுத்து விட்டது என்று இப்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்று நாமும் விரும்பலாம்.

ஆனால் மூன்று நாட்கள் முன்பு தினமணி ஏட்டில் வந்திருந்த ஒரு "தகவல் பெறும் உரிமையால் கிடைத்த விவரம்" நம்மை உலுக்கி விட்டது. தமிழ்நாட்டின் கிராமப்புற நூல்நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சங்க தலைவர் அந்த செய்தியை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலமாக பெற்று இருந்தார். அதில் "ஊரக நூல் நிலையங்களுக்கு" ஒதுக்கப்பட்ட நிதிதான் இந்த பிரபலமான "கோட்டுர்புரம் அண்ணா நூல் நிலையம்" கட்ட செலவழிக்கப்பட்ட 168 கோடி ரூபாய் என்ற அதிர்ச்சி செய்தி தகவல் பெறும் உரிமை மூலம் கிடைக்கப்பட்டிருந்தது.அப்படியானால் எங்களை எல்லாம் அண்ணா நூலகம் கட்டப்பட்டது ஒரு மாபெரும கொடை என்று நம்ப வைத்து கழுத்தறுத்து எங்கள் கிராமப்புற இளைஞர்களின் படிப்பை கெடுத்துதானா?

நகரங்களில் ஒன்று இல்லாவிட்டாலும் இன்னொன்று என்று நூலகம் தேட மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தெரியும். ஆனால் கிராமங்களில் எங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் ஒரே அறிவு பெட்டகம் நூலகம்தானே? அதற்காக அரசு ஒதுக்கும் நிதி மிகவும் குறைவுதானே? அந்த குறைந்த நிதியையும் ஒட்டுமொத்தமாக திரட்டி எடுத்து இத்தனை கோடி பணம் சேர்த்து அதை கொண்டுவந்து அண்ணா நூல்நிலையத்திற்கு கொட்டுர்போர்த்தில் கொட்டிவிட்டீரே? கலைஞர் அவர்களே, இது முறைதானா? உங்கள் நுகம் நூலகம் கட்டுவதா? அல்லது செல்வி.ஜெயலலிதா கட்ட திட்டமிட்டிருந்த தலைமை செயலகம் அந்த கோட்டுர்புரத்தில் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியத்தால் வரக்கூடாது என்ற எண்ணத்திலானதா?

அதுதவிர அந்த அண்ணா நூலகத்திற்காக வாங்கிய நூல்களின் பட்டியலில் "நூலின் விலையை விட அதிக விலையாக ஐம்பதாயிரம்" கொடுத்து வாங்கப்பட்ட நூல்களின் பட்டியலும் உள்ளதே? அது ஊழல்தானே? அப்படியானால் ஒரு ஏடு கட்டிடம் கட்ட ஊழல் செய்தவர்கள் என்று எழுதியதற்கு கொப்பப்பட்டு வழக்கு போட துடிப்பது எந்த வகை கலைஞர் அவர்களே? ஐயோ. ஐயோ. தொட்டதெல்லாம் ஊழலாக இருக்கிறதே? இதில் எண்ண நேர்மை இருக்கிறது? இதற்கெல்லாம் முற்று புள்ளி வைப்பது எப்படி? சரி. இந்த மாற்றத்தால் நூலகம் டி.பி.அய். வளாகம் என்ற "கல்வி இயக்கக"வளாகத்தில் "ஒருங்கிணைக்கப்பட்ட அறிவுசார் பூங்கா" என்ற பெயரில் கன்னிமாரா நூல்நிலயத்தையும் சேர்த்து, அண்ணா நூலகத்தையும் சேர்த்து வரப்போகிறதே? அது நல்லதுதானே? இன்னொரு உழன்தைகள் சிறப்பு மருத்துவமனையும் கிடைக்கிறதே? இந்த மாற்றத்தால் இரண்டு நல்ல விசயங்கள் தமிழர்களுக்கு கிடைக்குமே?

Saturday, November 12, 2011

இம்ரான் பாகிஸ்தானில் எழுகிறாரா?

இந்த வாரம் இம்ரான்கான் வாரம் என்று சொல்லும் அளவுக்கு, அந்த முன்னாள் மட்டைபந்து விளையாட்டு குழாமின் தலைவர், இந்நாள் அரசியல்வாதி அதிகமாக விவாதிக்கப்படுகிறார்.சீ.என்.என்.-அய்.பி.என். தொலைகாட்சியில் பிரபலமான கரன் தாபர் நடத்தும் "டெவில்ஸ் அட்வகேட்" என்ற நிகழ்ச்சியில், பாகிஸ்தான் அரசியல் தலைவர் இம்ரான்கானை கேள்வி கேட்கிறார். சென்ற வாரம் "ஐம்பதாயிரம்" மக்களுக்கு மேல் திரட்டி ஒரு மாபெரும் பேரணியை அமெரிக்காவின் மிரட்டலுக்கு சவால் விடும் அளவுக்கு இம்ரான்கான் தனது கட்சி பதாகையின் கீழ் நடத்தி காட்டினார்.

தனது பேட்டியில் இம்ரான் தான் பிரதமராக வந்தால், தனக்கு கீழ் ராணுவத்தை கொண்டுவருவேனஎன்றார். ராணுவமும், அய்.எஸ்.அய்.யும் பிரதமருக்கு கீழ் படிய வேண்டும் என்றார். இன்று பலூசிச்தானிலும், கராச்சியிலும் கூட, இராணுவமே ஆட்சி செய்கிறது என்றார். பாகிஸ்தானில் ஒரு பயங்கரவாத நடவடிக்கையும், உள்ளேயும், வெளியேயும் இல்லாமல்செய்துவிடுவேன் என்றார்.இளைஞர்களையும், பெண்களையும் அரசியல்படுத்துவதே அடஹ்ற்கான வழி என்றார். இளைஞர்கள் இப்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றார். இவ்வளவு முற்போக்காக பேசுகிறாரே என்று நாம் ஆச்சர்யப்ப்படும்போது, அதுபற்றி பாகிஸ்தானில் இருந்து ஊடகவியலாளர் பணிகளைகவனித்த, பெனாசிர் பூட்டோ கொல்லப்பட்டபோது , அருகில் இருந்து அதுபற்றி எழுதிய ஆங்கில ஊடகவியலாளர் நிரூபமா சுப்பிரமணித்திடம் கேட்டேன்.

அவர் கூறிய கருத்துக்கள் இன்னமும் வித்தியாசமாக இருந்தது. அங்கே இம்ரான்கானை "அழகான தலிபான்" என்றே அழைப்பார்களாம். அது மட்டுமின்றி, " இம்தா டிம்" என்றும் அழைப்பார்களாம். அதாவது ஆள் கொஞ்சம் விவரக் குறைவு என்பார்களாம். இம்ரான் வெறும் அமெரிக்கா எதிர்ப்பு மட்டுமல்ல, தலிபான் ஆதரவு என்றார் நிரூபமா. ராணுவத்தின் செல்வாக்கில்தான் தானும் இருப்பதே அவருக்கே தெரியாது என்றார். பெரும் கூட்டத்தை கூட்டும் ஒரே அரசியல்வாதியாக இம்ரான் இப்போது இருக்கிறார் என்றார்.இந்தியாவின்மேல் இம்ரானுக்கு நம்பிக்கை இல்லை என்றார். இதுதான் எபகிச்தான் பொதுமக்களின் அபிப்பிராயம் என்று நாம் நினைத்துக் கொண்டோம். காஷ்மீர் பிரச்னையை இந்திய அரசிடம் விடுவதை இம்ரான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். நாமும்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று எண்ண வைத்தது.

காமன்வெல்த் விளையாட்டு--இலங்கை, இந்தியா தோல்வி.

காமன்வெல்த் விளையாட்டை நடத்துகிறேன் பேர்வழி என்று ஊழல் தேசம் எனப் புகழ் பெற்ற இந்தியா, ச்நேர ஆண்டு டில்லியில் ஒரு மாபெரும் எழுபதாயிரம் கோடி ஊழலில் சிக்கி மாட்டிக் கொண்டு முழிக்கிறது. சிறைக் கம்பிகளை எண்ணும் காங்கிரஸ்காரர் சுரேஷ் கல்மாடி அதற்கு சாட்சியாக திகாரில் "ஒன்று,இரண்டு" சொல்லிக் கொண்டுள்ளார். தேனை எடுத்தவன் கையி நக்காமல் விடுவானா என்பது மன்மோகன் அரசை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது. ஆகவே ௨௦௧௮ ஆம் ஆண்டு வார இருக்கும் காமன்வெல்த் விளையாட்டை எப்படி கைப்படறி காசு அடிக்கலாம் என்பதே டில்லிக்கு கவலை.அதற்காக இலங்கையை தயார் செய்தது.

இலங்கைக்கு வருகிற கமான்வேழ்த் விளையாட்டு நடத்த அனுமதி தரவேண்டும் என்று இந்தியா வரிந்து கட்டியது. அதனால் இந்திய அரசுக்கு எண்ண லாபம்? டில்லியில் காமன்வெல்த் விளையாட்டில் ஒப்பந்தங்கள் பெற்ற பெரும் புள்ளிகள் இன்னமும் இந்தியாவில் கையி நக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் எப்படியாவது இலங்கைக்கு வாங்கி கொடுத்து, அதில் தங்களுக்கு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி கொடுக்க தொந்தரவு செய்தார்கள். இலங்கை அதிபரும் தங்களுக்காக "உலக அரங்கில் அவ்வப்போது பிணை எடுக்கும் இந்தியா" சாப்பிட்டு விட்டு போகட்டும் என்றும், மீதி கறிகளை தாங்கள் தின்னலாம் என்றும் திட்டமிட்டனர். காமன்வெல்த் நாடுகள் மொத்தம் எழுபத்து ஒன்று. அவர்கள் மத்தியில் விளையாட்டை எந்த நாட்டில் நடத்துவது என்று வாக்கு எண்ணிக்கைக்கு விடப்பட்டது.

இலங்கை தனது அம்பாந்தோட்டையில் நடத்துவது என்றும் அதில் இந்தியாவிற்கு நூறு பில்லியன் டாலருக்கு அதாவது ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு, இந்தியாவிற்கு ஒப்பந்தங்களை தாரை வார்ப்பது என்றும் முடிவானது. அதற்காக மட்டை பந்து விளையாட்டு வீரர் முத்தையா முரளீதரனை அனுப்பி சக காமன்வெல்த் நாடுகள் மத்தியில் பேசி சரி செய்ய முயன்றனர். அதற்கு யாரும் அசைந்ததாக தெரியவில்லை. ஆஸ்திரேலியா தனது "தங்க கடற்கரையில்" நடத்துவோம் என்று வாக்கு கேட்டனர். எழுபது நாடுகள் தான் வாக்களித்தன. தலைவர் தனது வாக்கை போடவில்லை. அதில் "நாற்பத்தேழு" வாக்குகள் ஆசிதிறேளியாவிற்கும், இருபத்து மூன்று வாக்குகள் மட்டுமே இலங்கைக்கும் விழுந்தன.

காமன்வெல்த்நாடுகளின் அடுத்தவிளையாட்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்று வாக்கெடுப்பில் முடிவானது. இலங்கையுடன், இந்தியாவும் வாக்கெடுப்பில் தோற்றது. காமன்வெல்த் நாடுகள் முன்னால் இந்தியாவின் மரியாதை அதோகதி ஆகிவிட்டது.ஏற்கனவே காமன்வெல்த் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடாக து நடந்த சென்ற வாரமே "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்" அதில் கலந்து கொண்டது ஒரு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

2 ஜி ஊழல் போதாதென்று இப்போ 3 ஜி ஊழல் தொடர்கிறதா?

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைவரிசை ஊழலில் சிக்கிய, சிக்கப் போகும் முன்னாள்மத்திய அமைச்சர்கள் திஹார் சிறைக்குள்ளும், சிறைக்கு வெளியேயும், மாட்டிக் கொண்டு முழிக்கிறார்கள். அதன் விசாரணை தொடங்கி விட்டது. சவான் நிறுவனம் ஏலம் எடுத்து யாருக்கு எண்ண கொடுத்தது என்பதும் விசாரணையில் வெளிவரும். அப்போது தமிழ்நாட்டிலிருந்து சென்று திஹார் சிறைக்குள் அடைபட்டிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் கலைஞர் தொலைக் காட்சிக்கு வந்த இருநூறு கோடி ரூபாயை யார் வாங்கினார் என்று சொல்லப்போவதில்லை. ஆனால் இன்னொருவர் அதுபற்றி சொல்லப்போகிறார்.

ஆறுமுறை அந்த மும்பை நபர் சென்னையில் வந்து யாரை சந்தித்தார் என்பதும் வெளியே வரப் போகிறது. கொடுத்தவரே சொன்னால் மட்டும்தான் நாடு ஏற்றுக் கொள்ளும் போல் தெரிகிறது. இந்த ஊழலில் சம்பந்தம் இல்லாத கனிமொழி இதில்போய் மாட்டப் பட்டுள்ளார். ஊழல் பற்றிய கோப்புகளை எடுத்து கொண்டு ஒவ்வொரு அரசியல் தலைவர்களிடமும் அலைந்து கொடுத்து, தான் கட்சியிலும், அமைச்சரவையிலும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி கொண்டவர் எங்கே சிக்குவார் என்று தெரியவில்லை. அதற்குள் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை வரிசை ஊழல் பற்றிய செய்திகள் வரத் தொடங்கி விட்டன.


மூன்றாம் அலைக்கற்றை வரிசை கொண்டுவர, கட்டுப்பாட்டு சிகரங்கள் கட்டப்பட வேண்டும். அவற்றை கட்டுவதற்கு ஏலம் எடுத்தது யார் தெரியுமா? ஒரு பெங்களூர்வாசி. அவர்தான் செல்வி. கலைஞரின் முதல் மகள். தயாளுவின் அன்பு செல்வி. அழகிரி, மற்றும் ஸ்டாலினின் அன்பு தங்கை. முரசொலி மாறனின் தம்பி செல்வத்தை மணம் முடித்தவர். இவர் பெங்களூரில் இருக்கிறார். இவரை சந்திக்க கலைஞர் பெங்களூர் செல்லும்போதெல்லாம் போவது உண்டு. அந்த செல்வியின் பெயர் நேற்று சென்னை மாநகர காவல் ஆணையத்தில் மூன்று ஜி ஊழலில் மோசடி செய்யப்பட்டவர்களின் புகாரில் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

செல்வி பல பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மூன்றாம் அலைவரிசை "கட்டுப்பாட்டு சிகரங்களை" உருவாக்க ஏலம் எடுத்தார். ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் அப்படி இந்தியா முழுவதும் கட்டுப்பாட்டசிகரங்கள்கட்டப்படவில்லை. கண்ட்ரோல் டவர்கள் கட்டாமலேயே மூன்றாம் தலைமுறை அலைவரிசை கொடுக்கப்பட்டு வரும் விந்தை இந்த நாட்டில்நடந்துவருகிறது. இரண்டாம்அலைவரிசையில் சிக்காத, முன்னாள் மன்னர் குடும்பத்தினர் மூன்றாம் அலைவரிசை ஊழலில் சிக்குகிரார்களா?

Friday, November 4, 2011

மம்தா வங்கத்து அறிவுஜீவிகளை எதிரொலிக்கிறார்.

மம்தா பாநெர்ஜி மத்தியில் ஆளும் "ஐக்கிய முற்போக்கு கூட்டணி" ஆட்சியிலிருந்து "திரினாமுல் காங்கிரஸ்" விலகும் என்ற அளவுக்கு முடிவு செய்ய சென்றுவிட்டார் எனும் செய்தியை கேள்விப்படுகிறோம். அது இன்று பெட்ரோல் விலையேற்றத்தை வைத்து அறிவிக்கப்படலாம். ஆனால் கனகிரசுக்கும், திருநாமுள் காங்கிரசுக்கும் ஏற்கனவே பல இசயங்களில் இப்படி முட்டலும், மோதலும் இருந்து வருகிறது. அதை கடைசியாக முடிவுக்கு கொண்டு வருவது மேற்கு வங்க அறிவுஜீவிகளின் "மனப்போக்குதான்". அதாவது மேற்கு வங்க அறிவுஜீவிகளின் கருத்து எப்போதுமே அங்குள்ள ஊடகங்களில் ஒலிக்கும். அவர்கள் டில்லியை சாடுவதில் எப்போதுமே தயங்காதவர்கள். கொல்கத்தா வை மையமாக கொண்டு உலவும் அறிவுஜீவிகள் "வங்காள மொழியுணர்வு " கொண்டவர்கள். தங்களை தனி தேசிய இன அடையாளமாக பார்த்து கொள்பவர்கள். அனாவசியமாக "தனிநாடு" என்று முழக்கம் எழுப்பாமலேயே "தனி வன்கால" உணர்வோடு செயல்படுபவர்கள்.

அவர்கள் ஒரு நீண்ட காலத்திற்கு இடதுசாரி கட்சிகளை நாடாளுமன்ற பாதையில் நம்பி வாழ்ந்தவர்கள். அதனாலேயே காங்கிரஸ் கட்சியை செயல் இழக்க செய்தவர்கள். ஆனால் மம்தா தனது இளைஞர் காங்கிரஸ் காலத்தில் இருந்தே, இன்றோடு நாற்பது ஆண்டுகளாக "வன்கால" இன உணர்வையும், "வங்காளமொழி உணர்வையும்" உள்வாங்கி கொண்டு அரசியல் நடத்தியவர். நாடாளுமன்ற டேஹ்ர்தலில் வேன்றதனாலேயே அவர் டில்லி செல்ல வேண்டி வந்தது. இடதுசாரிகளை தோற்கடிக்க வேண்டியே அவர் கனகிரசுடன் சேர வேண்டி வந்தது. ஆனால் அது அவரது "தேர்வு" அல்ல. அவர் தான் வணகாலத்தை ஆளாவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனாலேயே "காத்திருக்குமாம் கொக்கு" என்ற பாணியில் மம்தா "சட்டமன்ற டேஹ்ர்தளுக்காக காத்திருந்து அதன்மூலம் "முதல்வர்" நாற்காலியையும் கைப்பற்றினார்.


இப்போது டில்லிக்கு எதிராக அதாவது அய்.மு.கூ. ஆட்சிக்கு எதிராக கிளம்புகிறார். அவரது அதறாவக் ஐருக்கும் வங்காள அறிவுஜீவிகள், அவருக்கும், மாவோவாதிகளுக்கும் மத்தியில் பாலமாக இருந்தனர். அவர்களும் நாடாளும்னர் இடதுகளையும், காங்கிரசையும் எத்ரிப்பவர்கள். அது வங்காள நிலத்தின் உணர்வு. காநிராஸ் முதல்வராக இருந்த சித்தார்த்த சங்கர் ரே கூட "வணக்க தேச" பிரச்சனையில் டில்லியை நிர்ப்பந்தப்படுத்தும் அளவுக்கு வங்களா இன உணர்வை வெளிப்படுத்தினார் என்பது நமக்கு தெரியும். இப்போது மம்தா கிளம்பியுள்ளார். மத்தியா ஆட்சியாளர்களுக்கு இது பெரும் சங்கடம்தான். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து டில்லிக்கு காவடி தூக்கும் கழகத்தின் தலைவர் கலைஞர் இதேபோல "அய்.மு.கூ."ஆட்சியை விட்டு வெளியேற குரல் கொடுப்பாரா? மகளை சிறைக்கு அனுப்பிவிட்டு எப்படி நிமிர்ந்து கான்க்கியர்சிடம் பேசமுடியும்?

Thursday, November 3, 2011

நூல்நிலையம் போச்சு, மருத்துவமனை வந்தது டும்,டும்,டும்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக இடையே நடக்கும், பழி வாங்கும் போக்கு, பழிக்கு,பழி வாங்கும் போக்கு என்பதை "பெரிதாக" எடுத்து கொண்டு சிலர் சத்தம் எழுப்புகிறார்கள். ஏன் சத்தம் எழுப்புகிறீர்கள்? உங்கள் சத்தம் ஏதாவது செய்ய்துவிடுமா? ஒன்றும் சாதிக்காது. உள்ளதை உள்ளபடி பார்க்க கற்று கொள்ளுங்கள். யதார்த்தத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். 2003 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா "கோட்டுர்புரத்தில்" ஒரு அடிக்கல் நாட்டினார். அது "தலைமை செயலகத்தை" கட்டுவதற்கான அடிக்கல். அந்த முயற்சி, எத்தனை முயற்சிகளுக்கு பிறகு நடந்தது? முதலில் இருக்கும் இடத்திலிருந்து தலைமை செயலகத்தை மாற்றி, சொந்த கட்டிடத்தில் அமைக்க முயற்சித்தார். அதற்காக "ராணி மேரி கல்லூரியை" தேர்வு செய்தார்.

மாணவிகள் மத்தியில் இருந்தும் எதிர்ப்பு வந்தது. திமுக வும் அகலம் இறங்கியது. மத்திய சுற்று சூழல் அமைச்சராக இருந்த திமுக அமைச்சர் டி.ஆர்.பாலு, ஒரு அமைச்சராக உத்தரவை ஏற்படுத்தி அதை தடுத்து விட்டார்.இது உண்மையில் நல்ல எண்ணத்திலா? அல்லது ஜெயலலிதா கள்ளத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்திலா? அதன்பிறகே ஜெயலலிதா இந்த "கொட்டுர்புரம்" அடிக்கல்லை நாட்டினார். .அப்போதிலிருந்தே கருணாநிதி அதில் ஒரு கண்ணை வைத்து கொண்டிருந்தார். அதனால்ற்ற்ஹான் கருணாநிதி "அரசினர் தோட்டத்திற்குள்ளேயே" புதிய தலைமை செயலகத்தை கட்ட தொடங்கினார். அதாவது அந்த பெருமை ஜெக்கு போக கூடாது, தனக்கு வரவேண்டும் என்பதே அதற்கு பொருள். அதேநேரம் ஜெ அடிக்கல் நாட்டிய இடத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்து ஜெ தலைமை செயலகத்தை கட்டிவிடக்கூடாது எனபதில் கருணாநிதி தீவிரமாக இருந்தார். அதனால் அந்த இடத்தில் வேறு பெரிய கட்டிடம் எதையாவது கட்டிவிட துடித்தார். அதுவே "அண்ணா நூறாண்டு நினைவு நூல்நிலையம்" ஆக எழுந்தது. இந்த "மரிமுக சதி" மக்களுக்கு தெரியாது. விளங்கவும் இல்லை.

அண்ணா பெயரில் கட்டினால் எவரும் அதை மாற்ற முடியாது என்பது கருணாநிதியின் தந்திரம். அதுவும் நூல்நிலையம் என்று சொன்னால் அதையும் யாரும் மாற்ற முடியாது என்பதும் அவரது தந்திரம். அப்படி மாற்றினால் அதையே வைத்து "அய்யகோ, அண்ணா பெயரை" மாற்றுகிறார்களே என்று கூப்பாடு போடலாம். அதே போல நூல்நிலையத்தை மாற்றினாலும் பெரும் கூப்பாடு போடலாம். அதைத்தான் இப்போது போட முயல்கிறார். நோக்கம் என்னவோ ஜெ அடிக்கல் நாட்டிய இடத்தில் அவர் நினைத்த தலைமை செயலகம் வரக்கூடாது என்பதே. வரலாற்றில் ஒருவர் பெயர் வ்ருவதை, இன்னொருவர் ஏற்பத்தில்லை. இந்த "பதிலுக்கு பதில்" நாடகத்தில் அடுத்த காட்சிதான் இப்போது அரங்கேறுகிறது.ஏற்கனவே இதே போல கருணாநிதி கட்டிய "வள்ளுவர் கோட்டத்தை" எம்.ஜி.ஆர். திறந்து வைத்தாலும் அதை பராமரிக்க வில்லை. இதை ஒரு குற்றமாக் கூரிய கருணாநிதி பதின்மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த பின்பு, அதை பராமரிப்பு பணிகள் செய்தார். இது வழமையாக தமிழ்நாட்டில் அண்டப்பதுதான். புதிதல்ல.

அதேபோல கருணாநிதி கட்டிய புதிய தலைமை செயலகத்தை ஜெ இப்போது "சிறப்பு மருத்துவமனை" ஆக ஆக்கப்போகிறேன் என்று கூறினார். அதேபோல இந்த அண்ணா நூல்நிலயத்தையும், மாற்றி குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை என்று அறிவித்துள்ளார். அதாவது கல்வி இயக்கக வளாகத்திற்குள், அண்ணா நூல்நிலையம் அமைக்கப்படும். அதற்கு பிறகு அந்த கோட்டூர்புறம் இடத்தில் சிறப்பு குழந்தைகள் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தான் வைத்த அடிக்கல்லை ஏதோ காரணம் கூறி அகற்றியவர் வைத்த அடிக்கல்லை இன்னொரு காரணம் கூறி அகற்றுவது என்பதே. வினை விதைத்தவர் வினை அறுத்திருக்கிறார். நீங்கள் தலைமை செயலகத்தை கொண்டுவராமல் செய்ய "நூல்நிலயத்திற்குள்" மருந்தால், நான் நூல்நிலையத்தை விட, மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவமனை மூலம் வருவேன் என்கிறார் முதல்வர். எப்படியோ இவர்கள் இருவருக்குமான சண்டையில் தமிழனுக்கு "நூல்நிலையமும் கிடைத்து, மருத்துவமனையும் கிடைத்தது" என்று காண்பதே விவரமான பார்வை.


இதே போல கருணாநிதி இன்னொரு வேலை செய்தார். அதாவது கடற்கரை ஓரத்தில் உள்ள "நடைமேடையை" ஜெ காலத்தில் இருந்ததை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிய "மொசைக்" நடைமேடை போட்டார். அதற்காக தனது பெயரிலும், தனது தனயன் பெயரிலும் ஒரு "கல்வெட்டை" கடற்கரை சாலையில் கலங்கரை விளக்கு அருகே வைத்துள்ளார். இது எதற்காக? ஜெ காலத்தில் போடப்பட்ட அத கடற்கரை சாலை நடைமேடை கோடுகளுடன் வழுக்காத மொசைக்காக இருந்தது. அதை மாற்றிவிட்டு கருணாநிதி போட்ட நடைமேடை "வழுக்கும் மொசைக்காக" இருக்கிறது. இப்போது மழைக் காலம். அதில் நடப்பது முடியாமல் இருக்கிறது. இதுதான் அவர் செய்த மாதரத்தின் விளைவு. அப்படியானால் மாற்றம் மக்களுக்கு நன்மை செய்கிறதா? அல்லது தீமை செய்கிறதா? என்று பார்க்கலாம் அல்லவா?

ஜெ செய்த கொட்டுர்புரம் மாற்றம் கல்வி இயக்கககத்தில் ஒரு அறிவுசார் பூங்காவையும், அதில் அதே அண்ணா நூற்றாண்டு நினைவு நூல்நிலயத்தையும், கூடுதலாக கோட்டுர்புரத்தில் ஒரு குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையையும் தருகிறது. இந்த மாதரம் மக்களுக்கு இரண்டு வைகையிலும் நல்லதை தரும். ஆனால் கடற்கரை சாலையின் நடைமேடையில் கருணாநிதி செய்த மாதரம் மக்களுக்கு வழுக்கி விழும் ஆபத்தை தரும். இவர்களுக்குள் உள்ள அடிதாடியை நாம் தஹ்டுக்க முடியாது. ஆனால் அவர்கள் செய்யும் மாற்றம் மக்களுக்கு நன்மையா? தீமையா? என ஆராய டேஹ்ரிய வேண்டும். இப்போது ஜெயகாந்தன் போன்ற கலைஞர் ஆட்சியில் நன்மை பெற்றோர் சத்தம் கொடுக்கலாம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், தமிழ்நாடு ஆகி இலக்கிய பெருமன்றமும் குரல் எழுப்பியிருக்கலாம். ஆனால் அவர்கள் இப்படித்தானே "செம்மொழி மாநாடு" கருணாநிதியால் "எழ தமிழர் இன அழிப்பை மறைக்க" நடத்தப்பட்ட போது அதன் உட்பொருள் புரியாமல் மேலோட்டமாக பார்த்து, அதை ஆடஹ்ரித்தார்கள். அவர்களது அத்தகைய மேலோட்டமான பார்வைக்கு நம்மிடம் மருந்து இல்லை.

அதனால் இந்த நிகழ்வை நாம் " நூல்நிலையமும் வருது, மருத்துவமனையும் வருது டும், டும் ,டும்" என்றே அழைக்கலாம்.

Wednesday, November 2, 2011

தந்தை செல்வாவின் சிலையின் "தலையறுத்த" சிங்களம் போருக்கு அழைக்கிறதா?

எங்கள் தம்பிகள் "துவக்குகளை" மௌனித்து விட்டார்கள். அது தற்காலிகமானதுதான். இன்று உலக அரசியல் அரங்கில் தம்பிமார்கள் "தலை" நிமிர்ந்து நிற்கிறார்கள். சிங்களமே, உனக்கு தமிழீழத்தின் அரசியல் போராட்டம்தான் அதிக "அச்சுர்த்தலை" ஏற்படுத்துகிறது எனபது எங்களுக்கு தெரியும். சிங்களமே, நீ எங்கள் ரத்தங்களின் "வடக்கையு, கிழக்கையும்" ஆக்கிரமித்து கொண்டுள்ளாய் என்பதை நாங்கள் மறக்கவில்லை. நீ தமிழர்களின் வரலாற்றை நினைவு படுத்தும் "கலைப்போருல்களை" களவாண்டு விற்பது எங்களுக்கு தெரியும். நீ தமிழர் "காணிகளில்" ஆக்கிரமித்து கொண்டு இருப்பதும் எங்களுக்கு தெரியும்.

இந்திய பேரரசு தனது பசிக்கு தமிழர உயிரை புசித்து தின்றது என்பதை உலக அரங்கில் நாங்கள் சொல்லி வருகிறோம். அதனால் திணறிப் போன இந்திய அரசு ௫௦௦௦௦ வீடுகளை கட்டி தருவதாக வாக்கு கொடுத்தது. அதை நிறைவேற்ற விடாமல் "மகிந்தா" அரசாங்கம் சித்து விளையாட்டு விளையாடியதையும் நான்கள் அறிவோம். வீடு கட்டினால் அதை தமிழரிடம் கொடுத்தால் மீண்டும் தமிழ்ர் நிலம் "தாய் நிலம்" ஆகிவிடுமோ என்று சிங்களம் பயந்ததா என்பது எங்களுக்கு தெரியாது. அதனால் வீடு அகட்டி கொடுப்பதற்கு பதில் அதையே "பணமாக" கொடுத்து விடுங்கள் என்று சிங்களம் கேட்டதாம். இந்திய அரசும் ஒப்புக் கொண்டதாம். எண்ண வேடிக்கை. இந்தியாவே வாக்கு கொட்த்தபடி வீடுகளை கட்டி கொடு என்ற குரல் எழும்பட்டும். பணத்தை ஏழ்மையில் இருக்கும் தமிழர்கள் "வடக்குக்கும், கிழக்குக்கும்" வந்தேறிய "சிங்கள வணிகர்களிடம்" கொடுத்து விட்டு வெறும் கைகளுடன் நிரப்பர்கள் எனபது சிங்களத்தின் சதியா? அல்லது இந்திய அரசு சொல்லிக் கொடுத்த சதியா?

இப்போது கிழக்கு மாகாணமான திருகோணமலையில் திருஞானசம்பந்தர் வீதியில், சிவன்கோயில் அருகே, "தந்தை செல்வா" சிலையின் தலையை "ஆக்கிரமிப்பு சிங்கள ராணுவம்" வெட்டி எடுத்து கீழே போட்டுள்ளது. இது தைமிழர் அடையாளங்களை அடியோடு நீக்க சிங்களம் செய்யும் சதியே தவிர வேறெதுவும் அல்ல. இதை உலக தமிழர்கள் கண்டிக்க வேண்டும். உலகெங்கும் அரசியல் போராட்டங்களில் வென்று வரும் தமிழர் கூட்டம், "பொதுநல வாயை மாநாட்டிலும்" கலந்து கொண்டு தன் கருத்தை கூறியதை சிங்களம் பொறுத்து கொள்ளுமா? நாடு அக்டந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள் அந்த "காமன்வெல்த்" நாடுகளின் மாநாட்டில் வெளிவிவாகார அமைச்ச்சராகா கலந்து கொண்டது சிங்களத்திற்கு தாங்க முடியாத சவுக்கடி. அதை ஜூனியர் விகடன் வெளியிட்டிருப்பது அதை விட பெரிய அடி.தமிழர்களின் அரசியல் போராட்டம் சிங்களத்தின் தலைமுடியை பிடித்து இழுக்கிறது. அதனால்தான் தமிழர்களின் அரசியல் போராட்டங்களுக்கு முதல் அடையாளமாக திகழ்ந்த "தந்தை செல்வா" வின் தலையை அவர்கள் வெட்டி எரிந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ஹ்டிருக்கிரார்கள். சிங்களமே, நீ ஒரு சிலையின் தலையை ஒரு நாள் வெட்டலாம். தமிழர்கள் தங்களுக்கென்று நிலம் பிடித்து, அதில் தமழர் தலிவர்களின் சிலைகளையும், தலைகளையும் நிறுவும் நாள் தூரத்தில் இல்லை.