Saturday, April 30, 2011

கொழும்புக்கு சென்னை கொடுத்த பதிலடி.

இன்று ஏப்ரல் கடைசி நாளன்று, சென்னை தமிழ்நாடு சார்பாக , கொழும்புக்கு எதிராக திரண்டு வந்தது. அதாவது நாளை மே முதல் நாளன்று மஹிந்த ராஜபக்ஷே , ஐ.நா.வின் நிபுணர் குழு அறிககையை எத்ரித்து பெறும் பிணியை நடத்த இருப்பதாக செய்தி வந்தபோது, இந்தியாவில் உள்ள தமிழ்நாடு கொந்தளித்தது அதன் விளைவாக " நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம்" ஒரு பேரணியை ராஜபக்சேக்கு எதிராக, அவர் மீதானா ஐ.ந. நிபுணர் குழு முன்வைத்த ' போர்குற்றங்களை விசாரித்து தண்டிக்க வேண்டி, அகில உலக சமூகத்தை கேட்டுக்கொண்டு" ஒரு பேரணியை முந்திய நாளான ஏப்ரல் முப்பதிலேயே நடத்த திட்டமிட்டனர். தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்க, மீனவர் தலைவர் அமரர் ஜீவரத்தினம் மகள் டாக்டர் பானுமதி பாஸ்கர் துவக்க உரை நிகழ்த்த , பேரணி சரியாக குறிப்ப்பிட்ட நான்கு மணிக்கே, சென்னை கடற்கரை கண்ணகி சிலையிலிருந்து தொடங்கியது.

ஊர்வலத்தில் பல தமிழர் அமைப்புகள் கலந்துகொண்டாலும், சிறப்பு அம்சமாக, பல்வேறு மீனவர் அமைப்புகளும், மனித நேய மக்கள் கட்சி, தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், இந்திய தௌஹித் ஜாமாத், போன்ற முஸ்லிம் தமிழர் அமைப்புகள் கலந்துகொண்டது முக்கிய செய்தியாகும். அது தவிர தமிழக மீனவர்கள், இந்தியா மட்டைபந்து விளையாட்டில் வெற்றி பெற்றதற்காக, சிங்கள கடல்படை வெறியர்களால் அன்று இரவே கொலை செய்யப்பட்டு அவரகளது உடல்கள் சின்ன, பின்னப்படுத்தப்பட்டு கடலில் எறியப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ராமேஸ்வரம்--தங்கச்சி மடத்தை சேர்ந்த நான்கு மீனவர்களான கொல்லப்பட்ட விட்சன், அன்தனிராஜ், ஜான்பால், மாரிமுத்து ஆகியோரது படங்களை மீனவ இளைஞர்கள் தூக்கி வர, அவற்றிக்கு பானுமதி பாஸ்கர் மாலை அணிவித்து மலர்கள் தூவ, மடர்வர்களும் மலர்கள் தூவிய காட்சி வந்திருந்த அனைவர் மனிதிலும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த ராஜபக்ஷே உருவம் அணிந்த ஒருவர் கைது செய்யப்பட்டு இழுத்துவரப்பட்டது சிறப்பாக இருந்தது. முஸ்லிம் அமைப்புகளின் கொடிகள், தமிழர் அமைப்புகள் கொடிகள், மற்றும் பல மீனவர் அமைப்புகளின் கொடிகள் அங்கே குவிந்து வந்தது முழு தமிழகமும் வந்தது போல இருந்தது. புதிய தமிழகம் கோடிகளுடன் கலந்து கொண்டது. நாம் தமிழர் அமைப்பு கோடிகளுடன் கலந்து கொண்டது. தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம், இந்திய மீனவர் சங்கம், அகில இந்திய பாரம்பர்ய மீனவர் சங்கம், தென்னிதிய மீனவர் பேரவை, போன்ற பல மீனவர் அமைப்புகளுடன், காஞ்சி மக்கள் மன்றம், காஞ்சி தமிழர் உலகம், ஆகியனவும், யாதவர் மஹாசபாவும், கட்டிட தொழிலாளர் சங்கமும், கலந்து கொண்டன. இறுதியில் ஒவ்வொரு அமைப்பை செர்ந்டஹ்வைர்களும் கண்டன உரை நிகழ்த்தினர். பெண்கள் அதிகம் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் ராகவேலு, அருள், பாண்டிமாதேவி, அஜிதா, ஆகியோரும் கலந்துகொண்டனர். தியாகு, டி.எஸ்.எஸ். மணி, விடுதலை ராஜேந்திரன், குணசீலன், தயாளன், மகேஷ், ரூபேஷ், கபடி மாறன், அயோத்தியா குப்பம் மக்கள், தமீம் அன்சாரி, எஸ்.எம்.பாகர், திரைப்பட இயக்குனர் கௌதமன், சிபி சக்கரவர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Friday, April 29, 2011

அதென்ன ஹெட்லயன்ஸ் டுடே கண்டுபிடிப்பு?

அய்யா தளர்ந்து போனார். செய்திகள் சாதகமா இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டும் வீட்டிற்கு உள்ளேயே வந்து குவியுது. பேரன் என்று சொல்லிக்கொல்பவரை அழைத்து மனதார திட்டினார். சீ.பி.ஐக்கு தூண்டுதல் வேலை பார்கிறாயா என்று குற்றம் சாட்டினார். தேர்தல் முடிவுகள் இப்போதே கவிழ்கின்றன என்று நினைத்தார். தொண்டர்கள் சோர்வு பற்றி கேள்விப் பட்டார். வருத்தப்பட்டார். ஏதாவது செய்யவேண்டும் என்றார். யாரிடம் ஊடகம் இருக்கிறதோ அவர்தானே செய்ய முடியும் என்றனர். இது அகில இந்திய ஊடகம் மூலம் மட்டுமே முடியும் என்றார்.

முடிவு திமுகவிற்கு சாதகம் என்றால், டில்லி அதிகாரிகல்பயப்படுவர் என்றார். அடஹ்ர்கு ஏற்பாடு செய்கிறேன் என்று இளைய அமைச்சர் தயாநிதி கூறினார். ஏற்கனவே தயாளு மீது, கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் வரும்போது, காங்கிரஸ் தலைமை மீது செல்வாக்கு செலுத்த யாரை அனுப்ப என்ற விவாதம் கிளப்பப்பட்டது. டி.ஆர்.பாலுதான் இருக்கிறாரே என்று குடும்ப தலை கூறியது. தயாவை அனுப்பு என்று மூத்த மகள் கூற, அவன் எவ்ண்டாம் என்றது தலை. நம்பிக்கை இன்னமும் தம்பி மீது வரவில்லை என அவரது ஆதரவு கும்பல் குடும்பத்திற்குள் முனு, முணுத்தது. செய்துகாட்டுகிறேன் என்ற அந்த இளைய அமைச்சர் அதற்கான வேலைகளை எடுத்தார். அதில் ஒன்று ஏற்கனவே தனது பணம் நூறு கோடி கொடுத்து வைத்த அந்த தேசிய அலைவரிசை பயன்பட்டது.

ஏற்கனவே அவர்கள் எடுத்துவைத்த ஒரு ஆய்வில் ஆறாயிரம் பேரை சந்தித்து இருந்தனர். அதை அடிப்படையாக வைத்து இப்போது அணைக்கு ஒன்றை இறக்கிவிடலாம். அது முதலில் தொண்டர்களின் மன உணவை எழுப்பிவிடும்.யாரும் பாதியிலேயே வாக்கு எண்ணிக்கை இடத்திலிருந்து இடம் பெயர் மாட்டார்கள். அடுத்து டில்லி கொஞ்சம் அடக்கி வாசிக்கும். அதன்மூலம் ஸ்பெக்ட்ரம் கதையை தள்ளிப் போடலாம். அடுத்து பெரியவருக்கு திருப்தியை கொடுத்து, அதன்மூலம் உற்ச்சாகம் மூட்டலாம். இதற்கு பெயர் கார்பொரேட் பாணி கணக்கு, மற்றும் விதைத்தல். அது இங்கும் அமுலாகிவிட்டது.

பிறகு எதற்காக அந்த காட்சி ஊடக நேர்காணலிலேயே, நீங்கள் வெற்றி பெற்று வந்தால் முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை சொல்லிவன்ம்த நான்தான் என கூறவேண்டியதுதானே? அதைமட்டும் திமுக போது குழு முடிவு செடியும் என்று என் கூறுகிறார். அவருக்கு தெரியும் இது திருப்தி படுத்த வெளியிட்ட கணக்கு என்று. அது என்ன கணக்கு? திமுக.கூட்டணி 129 இடங்களை பிடிக்கும் என்ற கணக்குதான்.

ராஜபக்சேவை மே தினத்திற்கு முந்திய நாளே சென்னை எதிர்க்கிறது.

தமிழின படுகொலையை, தமிழின அழிப்பை கொடூரமாக நடத்தி, இன்னமும் அதே வெறியுடன் தமிழின சுத்திகரிப்பை தமிழீழத்தில் நடத்திவரும் கொடியவன் ராஜபக்சே, தன்னை ஐ.நா. மன்றம் "போர் குற்றவாளி" என்று முத்திரை குத்துவதற்கான முகாந்திரத்ஜ்தை வெளியிட்டு விட்டதே என்று ஆத்திரப்பட்டு, அதை மே முதல் நாள் அன்று கொழும்பு நகரில் அரங்கேற்ற ஒரு பேரணியை வைத்துள்ளது கண்டு தமிழுள்ளங்கள் வெதும்பின. அதன்விளைவு, தமிழ்நாட்டில் சென்னையில் ஒரு நாள் முன்பு ஏப்ரல் 30 இலேயே ஒரு பேரணியை ஏற்பாடு செய்ய "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம்" முடிவு செய்தது.

தோழமை மையத்தின் அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதி தனது அறிக்கையில் அதை தெரிவித்துள்ளார்.மாலை நான்கு மணிக்கு கடற்கரை உள்சாளையிளிருந்து பேரணி புற[ப்படும். அது உழைப்பாளர் சிலை வரை செல்லும். அங்கே நான்கு மீனவர்கள் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அவர்களுக்கு நினைவு அஞ்சலி நடத்தப்படும். மீனவர் குழந்தைகளும், மீனவ பெண்களும் மற்றும் ஆர்வமுள்ள தமிழின ஆதரவு அமைப்புகளும் அந்த பேரணியில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். பரவலாக கொடுக்கப்பட்டுள்ள துனடரிக்கைகள் மூலம் thaமிழர்களே அணிதிரளுங்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரணி ஐ.நா.வின் நிபுணர் குழு அறிககையை அமுலாக சொல்லியும், கிரிக்கெட் ஆட்டத்தின் உலகக் கோப்பையை இந்தியா வென்றதால் ஆத்திரப்பட்ட சிங்கள கடற்படை கொடூரமாக கொன்று குவித்த நான்கு தமிழ் மீனவர்களுக்காகவும் முழக்கங்களை எழுப்பிய வண்ணம் பேரணி செல்லும் என்றும் தெரிவிக்கிறார்.

Monday, April 25, 2011

ஈழ அகதிகள் பட்டினி போர் மருத்துவமனையிலுமா?

ஈழ அகதிகள் பட்டினி போர் மருத்துவமனையிலுமா?
பூந்தமல்லி அகதிகள் சிறப்பு முகாம் என்ற பெயரில், தமிழக அரசு ஈழ அகதிகளை பிடித்து வைத்துள்ள சிறையில் கடந்த ஒருவாரத்திற்கு மேல், பட்டினி போர் நடத்தும் நாலு ஈழ அகதிகளை இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலிஈட்டில் சென்னை பெரிய அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டால், அங்கும் அவர்கள் தங்களது சட்ட விரோத காவலை எத்ரித்து பட்டினிபோரை தொடர்கீறார்களே?

முத்துலட்சுமிக்கு உண்மையில் விடுதலை.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக காவல்துறை பொய் வழக்குகள் போட்டு தனது வெறியை ஆற்றிக்கொண்டது. அவர் சிறையில் முடக்கப்பட்டார். வீரப்பன் மறைவுக்கு பிறகும், அவரது பெயரை வைத்து மாணவி முத்துலட்சுமி சமூக, அரசியல் பயன்களை மேற்கொல்வாரோ என்று அஞ்சி நடுங்கிய ஆளும்வர்க்கம் அவரை சிறையில் போடுவதன் மூலம் மனித உரிமைகளை கொலை செய்தது.

ஆனால் வழக்கறிஞர்களது வாதங்களும், நீதியரசர்களின் துலாக்கோலும் முத்துலட்சுமியை கர்நாடகா ஆரசு போட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்தது. அதை ஆத்திரமடைந்த கர்நாடக காவல்துறை, தனது மனித உரிமை மீறலின் கூட்டாளியான தமிழக காவல்துறையிடம் கூறி நீ வந்து பிடி என்றது. இதேபோன்ற பொய் வழக்குகளை அதாவது வீரப்பன் மீது போடப்பட்ட னைத்து குற்றவியல் வழக்குகளையும், முத்துலட்சுமி மீதும் மனைவி என்ற காரணத்தால் போட்டு மீண்டும் சிறையில் தள்ளலாம் என்பது இரண்டு காவல்துறை அதிகாரிகளுக்கும் உள்ள அவா.

அந்த முறையில் தமிழக காவல்துறை வரை கைது செய்ய, அதைவைத்து கர்நாடக காவலர்கள் அவரை பெங்களூர் சிறையிலேயே அடைத்துவிட்டனர்.இன்று கோபி நீதிமன்றத்திற்கு கொண்டு வந்த கர்நாடக காவலதுறை மற்றும் தமிழக காவல்துறை முன்னால், நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கு வந்தது. அதில் வழக்கறிஞர் பாப்பா மோகன் வாதிட்டார். கோபி நீதிமன்றம் முத்துலட்சுமிக்கு சிறை தேவை இல்லை என்று கூறி, அவரை வழக்குக்கு மே மாதம் வரும்படி பணித்து விடுதலை செய்தது. பெங்களூர் சிறையிலிருந்து வெளிவந்ததால், அந்த கோபி நீதிமன்ற உத்தரவை பெங்களூர் சிறையில் காட்டி பிறகுதான் விடுதலை செய்யமுடியும். ஆகவே அவர் நாளை [ 26 ஆம் நாள் ] கலை பெங்களூர் சிறையிலிருந்து காலை ஒன்பது மணி சுமாருக்கு விடுதலை ஆகிறார்.

புட்டபரத்திக்கே அல்வா கொடுத்த ஆசாமிகள்.

புட்டபரத்தி சாய்பாபா மரணமடைந்தார். எல்லா மனிதர்களுக்கும் சம்பவிக்கும் ஒரு நிகழ்வுதான். ஆனால் ஆன்மீக நம்பிக்கை உள்ள உலகில், பல மக்களுக்கு மனது ரீதியாக ஆறுதலாக இருந்த ஒரு மனிதர் மரணமடைந்ததை அவர்கள் அக்கறையுடன் வருந்துவார்கள். அதனால் அவரகளது மனம் புண்படும் செய்திகளை இப்போது பேச வேண்டாம். ஆனால் அதேசமயம் ஆசாமிகள் யாரும் சாமிகளாக இருக்க முடியாது எனபதையும் சொல்லிவைப்போம். சரி. அவரது மறைவுக்குப்பின், 40000 கோடி என்று தொடங்கி, ஒன்றரை லட்சம் கோடி என்று அவரது சொத்து மதிப்பை அக்னக்கு சொல்கிறர்கள். இந்தியா ஏழைகள் உள்ள நாடு. அதனால் பணம் சேர்த்த யாரையும் பார்த்து நமக்கு இறக்கம் வருவதில்லை.

2007 ஆம் ஆண்டு சாய்பாபா சென்னை வந்தார்.அப்போது இங்குள்ள மன்னர் குடும்பத்துடன் ஐக்கியமானார். கலைஞர் குடும்பம் வாழும் கோபாலபுரம் சென்றார். தயாநிதிக்கும், தயாளுவுக்கும், ச்டநிக்கும், தங்க மோதிரத்தை வரவழைத்து கொடுத்தார். அங்கே நின்ற அமைச்சர் துரைமுருகன் எனக்கும் ஒன்று என்று ஓசியில் வருவதை என் விடவேண்டும் என்று கையை நீட்டினார். பகுத்தறிவு தந்தை பார்த்துக்கொண்டே இருந்தார்.அப்போது கிருஷ்ணா நதி நீர் வருவதற்கு கால்வாய் தோண்ட 200 கோடி தனது அறக்கட்டளையிலிருந்து கொடுத்தார். அந்த உறவில்தான் இப்போது முதல்வர் கலைஞர் வறுத்த செய்தி தருகிறார். தளபதி ஸ்டாலின் நேரில் சென்று மாலை வைக்கிறா இவையெல்லாமே நடந்த செய்திகள்.

ஆனால் உண்மையில் நடந்த செய்தி என்று ஒன்று சென்னையில் பவனி வருகிறது. அது அறிவாலயம் அருகே உள்ள ஆபத்ச்பெரி கல்யாணமண்டபம். அருகே "ஹில்டன் ஹோட்டல்" என்று ஒன்று பெரிதாக கட்டப்பட்டு வந்தது. அந்த கட்டிட வேலைகள் திடீரென அந்த ஆண்டில் நிறுத்தப்பட்டன. மாநகராட்சி தந்தி விதிகள் படி நிறுத்தியது என்றார்கள். அந்த ஹோட்டலின் பங்குதாரர்கள் பெறும் பங்கு உள்ள அறக்கட்டளையின் அதிபர் சாய்பாபாவிடம் முறையிட்டார்கள். அவரே நேரில் வந்தால்தான் தீர்க்க முடியும் என்றார்கள். விஷயம் ஆளும் மன்னர் குடும்பம் சம்பந்தப்பட்டது என்றார்கள். வந்தார் சாய்பாபா. இதுவரை செல்லாத அரசியல்வாதிகளிடம் அதுவும் நாத்திகம் பேசிவரும் பெரிய அரசியல்வாதி குடும்பத்திற்கே சென்றார். சாய்பாபா கலைஞர் இல்லம் தேடி வருவதா என்று எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். அப்போது செய்துகொண்ட ஒப்பந்தம்தான் தளபதிக்கு அந்த ஹில்டன் ஹோட்டலிலும் பங்கு கிடைத்தது. அதனாதான் இந்த உறவு என்று புதிதாக கூறுகிறார்கள். நாம் ஆளும் மன்னர்களையோ, ஆன்மிக சித்தர்கலையோ சந்தேகிக்காத மனிதர்கள் என்பதால் இந்த செய்தி நமக்கு எதற்கு என்று விலகியே இருக்கிறோம்..
.

Sunday, April 24, 2011

எஸ்.பொ.விற்கு இயல் விருது, இயல்பானது.

எஸ்.பொ. இந்த பெயர் ஈழத்தமிழ் எழுத்தாளர்களிடையே ஒரு எழுத்து போராளியை, ஒரு சமரசமற்ற கருத்தாளியை, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்கிறது. எஸ்.பொன்னுத்துரை அவரது பெயர். இப்போது வயது எண்பதை
தாண்டுகிறது. மட்டகிளப்பு நகரில் பிறந்து வளர்ந்தவர். பொதுவுடைமை இயக்கத்தில் ஆசிரியர் பணியில் இருக்கும்போதே ஈடுபாட்டுடன் பணியாற்றியவர். தமிழின உணர்வுகளில் ஈடுபாட்டுடன் அவர் செயல்பட்டதால், பொதுவுடைமை இயக்கத்திற்குள் கருத்து போராட்டத்தை நடத்தியவர்.

எஸ்.பொ. தனது எழுத்துக்களால் தமிழினத்தின் மீது பகைமை கொண்ட, இந்திய அமைதிப்படையின் முகமூடியை கிழிக்க முடிந்தது. ஆஸ்திரேலியா நாட்டில் குடியுரிமை பெற்றவராக இப்போது இருக்கும் எஸ்,பொ.விற்கு அவரது எழுத்துகளுக்காக கனடா நாட்டு தமிழர்கள் அறிவித்துள்ள விருதுதான், " இயல் விருது". அது 2010 ஆம் ஆண்டிற்கானது. அறிவிக்கப்பட்ட அந்த விருதை அவர் விரைவில் பெற்றுக்கொள்ள இருக்கிறார். அதற்குள் அந்த விருது பெற்றமைக்காக அவருக்கு பாராட்டு விழா நடத்தலாம் என்றுதான் சென்னையில், கன்னிமரா நூல் நிலையத்தில் ஒரு பாராட்டு விழாவை, படைப்பாளிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

சூரியதீபனின் முயற்சி அது. உணர்ச்சி கவிஞர் காசி அனந்தன்,பழ.நெடுமாறன், சீ.பி.ஐ.மகேந்தரன், பேரா.சரஸ்வதி,பண்ஜாங்கம், பாமரன் ஆகியோர் பேசினர். மகேந்தரன் தான் எஸ்.பொ.பற்றி கொண்டிருந்த பழைய கருத்துக்களை மாற்றிக் கொண்டதை குறிப்பிட்டார். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இங்கு போலவே அங்கம் பொதுவுடைமை கட்சியின் புரிதலுக்கு உட்பட்டே இருந்திருக்கிறது. அவர்கள் தமிழின தேசியத்தின் இருத்தலையோ, விடுதலையையோ வர்க்க போராட்டத்திற்கு எதிரானதாக பார்த்திருக்கிறார்கள். அதுவும் இங்குள்ள மாதிரியே என்கிறீர்களா?

அந்த இயக்கத்தில் இருந்த எஸ்.பொ. அதில் முரண்பட்டிருக்கிறார். "நற்போக்கு எழுத்தாளர் சங்கம்" என்று ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். அதன்மூலம் வர்க்க போராட்டத்தை காணும் மார்க்சிசம் எப்படி இன விடுதலையையும் கறாராக பார்க்கிறது என்று எடுத்து சொல்லியிருக்கிறார். அங்குள்ள் கம்யுனிஸ்டுகள் அதை புரிந்து கொள்ள சக்தியற்று இருந்திருக்கிறார்கள். எஸ்.பொ. தனது ஆசிரியர் பணிக்கு இடையே தமிழினம் அடக்கப்படுவதை உணர்ந்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டிருந்திருக்கிறார். கவிஞர் காசி அனந்தன் எஸ்.பொ.வுடன் ஒரே அறையில் தங்கி கல்வி கற்றலை தொடர்ந்திருக்கிறார்.அதே பள்ளியில் அவரும் மாணவர்.ஆனால் எஸ்.பொ. இவருக்கு நேரடியாக ஆசிரியர் அல்ல.

மட்டகிளப்பில் எஸ்.பொ., காசி அனந்தன், பாலு மகேந்த்ரா எல்லோருமே ஒரே பகுதியில் அடுத்தடுத்த தெருக்களில் வாழ்ந்தவர்கள். காசி அனந்தன் தமிழரசு கட்சியிலும், எஸ்.பொ. பொதுவுடைமை இயக்கத்திலும் இருந்திருக்கிறார்கள். அதை காசி அனந்தன் அந்த 23 ஆம் நாள் சனிக்கிழமை கூட்டத்தில் விளக்கினார். தமிழரசு கட்சியில் இருந்துகொண்டே சாதியில் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும், பேசும் வித்தியாசமான வராக காசி அனந்தனும்,பொதுவுடைமை இயக்கத்தில் இருந்துகொண்டே தமிழின விடுதலையை பேசும் வித்தியாசமானவராக எஸ்.பொ.வும் இருந்ததை குறிப்பிட்டார்.

மூன்றாம் உலகம் பற்றி அதாவது மண்ணுக்கு நெருக்கமான உலகம் பற்றி, வளராத நாடுகளின் நிலைமை பற்றி எஸ்.பொ. எழுதியுள்ளார் என்பது எல்லோர் பேச்சிலும் வெளிப்பட்டது. மூன்றாம் உலகம் என்பது ஒரு தத்துவமாக மாவோவால் வழிநடத்தப்பட்ட கொள்கை.அதாவது அமெரிக்காவும், சோவியத் யூனியனும், உலகை பங்கு போடும் வல்லரசுகளாக மாவோவால் வர்ணிக்கப்பட்ட போது, அதை முதல் உலகம் என்று மாவோ கூறினார். அதற்கு அடுத்து வளர்ந்த நாடுகளான முதலாளித்துவ நாடுகளை இரண்டாம் உலகம் என்றார். வளராத அல்லது வளர்ந்துவரும் நாடுகளை, சோஷலிச நாடுகள் உட்பட மூன்றாம் உலகம் என்று மாவோ கூறினார். அன்றைய மார்க்சிசவாதிகளுக்கு,அதிலும் மாவோவை பின்பற்றி மார்க்சிசத்தை கற்றவர்களுக்கு இதில் பரிச்ச்சயம் உண்டு.அதுவே
எஸ்.பொ. எழுத்தில் தொநித்திருக்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.


எஸ்.பொ.அவர்களது மகன் போருக்கு புலிகளுடன் சென்றவர். நெடுமாறன் தனது ரகசிய ஈழப்பயனத்தில் காணொளி எடுத்தவர் எஸ்.பொ. மகன்தான் என்பதை அங்கே பதிவு செய்தார். அந்த புலி தம்பி இப்போது நம்மிடையே இல்லை. அவர் தனது தாய் நாட்டிற்காக வீரச்சாவை தழுவிவிட்டார். இதுவே எஸ்.பொ.வை மேலும் ஒரு போராளியாக படம் பிடித்து காட்டியது. பேராசிரியர் சரஸ்வதி, நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையத்தின் அமைப்பாளர். அவர் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிககையை சுட்டிக்காட்டி வருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவு பற்றி விளக்கினார்.இன்குலாப் தனக்கு கருணாநிதி அரசு அளித்த கலைமாமணி விருதை, எப்படி முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒட்டி அரசுக்கே திருப்பி கொடுத்தார் என்று சரஸ்வதி சுட்டி காட்டினார். அவ்வாறு எழுத்தாளர்கள் முதுகெலும்புடன் இருப்பது அரிது என்றாலும், அதில் ஒருவர் எஸ்.பொ. என்றார்.


எஸ்.பொ. ஒரு இலக்கியம் என்றால், அவரது மகன் ஒரு வரலாறு என்று காசி அனந்தன் கூறும்போது அவையே அமைதியானது. சென்னை இப்படி ஒரு போராளி எழுத்தாளருக்கு பாராட்டு நடத்தியதை எண்ணி பெருமை கொண்டது.

ரா.சு.நல்லபெருமாள் பிரபாகரனுக்கு எழுதிய கடிதம்

தமிழ்நாட்டின் எழுத்துலக மேதைகளில் ஒருவரான, நெல்லை தந்த நல்முத்து, ரா.சு.நல்லபெருமாளது மறைவு தமிழக எழுத்தாளர்களை மட்டுமல்ல, தமிழக வாசிப்பாளர்களை மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள தமிழ் கூறும் நல்லுலகின் அனைத்து வாசகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது என்பதுதானே நமக்கு இதுவரை தெரியும். ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனை இந்த எழுத்தாளனது மரணம் எப்படி பாதிக்கும் என்பது நமக்கு தெரியாது அல்லவா?

ரா.சு. நல்லபெருமாளின், " கைக்குள் ஈரம்" என்ற புதினம் அந்த போராளி பிரபாகரனை குலுக்கி இருந்தது. அதை தனது கைப்பட பிரபாகரனே , எழுத்தாளர் ரா.சு.நல்லபெருமாளுக்கு எழுதி பாராட்டியிருந்தார். யாழ்ப்பனவாசிகள் எப்போதுமே இலக்கிய பற்று அதிகம் கொண்டவர்கள். வாசிப்பு அவர்களது கைவந்த கலை. தமிழ் இலக்கியம் அவர்களுக்கு அல்வா சாப்பிடுவது போல. அதிலும் மட்டகிளப்பு வாசிகள் தங்களது, அருகே நீரும், அதில் துள்ளும் மீன்களையும் பார்த்து பார்த்து பரவசமடைபவர்கள். அதை எழுதி ரசிப்பவர்கள். யாழ் குடாநாட்டில் பிறந்து, மட்டக்கிளப்பில் வளர்ந்த பிரபாகரனுக்கு கேட்கவா வேண்டும்.

அந்த போராளிக்கு உள்ளே ஒரு மனிதம் முழித்துக்கொண்டே இருந்தது என்பதால்தான் ரா.சு.நாவின் எழுத்தை, கல்லுக்குள் ஈரத்தை அந்த போராளி கண்டிருக்கிறார்.பிரபாகரனது கடிதத்திற்கு இந்த தமிழ்நாட்டு எழுத்தாளர் நல்லபெருமாள், பதில் கடிதம் அனுப்பினார். அப்போது பிரபாகரன் அரசால் தேடப்பட்டுக்கொண்டிருந்த நேரம். காடுகளில் கலங்களை அமைக்க பயணம் செய்து கொண்டிருந்த காலம். அவர் அருகே அப்போது, உணர்ச்சி கவிஞர் காசி அனந்தன் இருந்திருக்கிறார். ரா.சு.நல்லபெருமாள் தனக்கு எழுதிய கடிதத்தை, போராளி பிரபாகரன், இந்த கவிஞரிடம் உள்ள நெகிழ்வோடு எடுத்து காட்டியிருக்கிறார்.

கடிதம் பிரபாகரனுக்கு வந்து சேர்ந்த நேரத்தில், காடுகளில் அவருடன் தானும் பயணத்தில் இருக்கும் போது, அதை வாங்கி படித்து காட்டினார் பிரபாகர என்பதை அந்த உணர்ச்சி கவிஞர் கூறும்போது அவர் கண்கள் மட்டுமல்ல, நமக்கும் கண்கள் பணித்திவிட்டன.

ஜெயலலிதா அறிக்கைக்கு ஈழத்தமிழர் பாராட்டு.

திடீரென அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதா அளித்த அறிக்கை, ஐ.நா. நிபுணர் குழுவிற்கு ஒரு கை கொடுத்தது. தமிழ்நாட்டில் அத்தகைய கைகொடுத்தால் தேவை என்று புலம் பெயர்ந்த தமிழர் சமூகம் எண்ணுகிறது. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு பங்களிப்பு செலுத்திய சோனியா அரசையும், அதற்கு ஆதரவு கொடுத்த கருணாநிதி அரசையும் உலக தமிழர்கள் மன்னிப்பதாக இல்லை. ஆனாலும் தனது சித்து விளையாட்டுக்களால், களிஞரும் அவரது தொண்டரடிப்பொடி அரசியல் அடியாட்களும், அவ்வப்போது தாங்கள் செய்ததை சொல்வதைவிட, ஜெயலலிதா எப்படியெல்லாம் ஈழத்தமிழருக்கு எதிரானவர் என்பதை பட்டியல் போட தயங்கவில்லை.

சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, ஈழத்தமிழர்களது படுகொலைகள பகிரங்கமாக நடந்து வந்த நேரம். அப்போது அந்த போரை எதிர்த்து உலகமே கொந்தளித்தபோது, தமிழகமும் தனது பங்கிற்கு கொந்தளிக்காமல் இல்லை. அந்த நேரம் நடந்த இரண்டு கூட்டணி அரசியலும் அழத்தமிழர்களை பற்றியும், அந்த போர் தவறு என்பதை பற்றியும், அந்த வன்னி போர் நிறுத்தப்படவேண்டும் என்பதை பற்றியும் நிறையவே பேசிவந்தனர். அதுநேரம் செல்வி.ஜெயலலிதாவும், தமிழீழம் ஒன்றே ஈழத்தமிழருக்கு தீர்வு என்று பேசிவந்தார். அந்த பெச்ச்சை திமுக கிண்டல் செய்தது. தேர்தல் நேர சித்து விளையாட்டு என்று குறை கூறியது. அதையும் பலர் நம்பினார்கள்.

குறைந்த பட்சம் ஜெயலலிதா பற்றி ஒரு குழப்பத்தை அன்று கருணாநிதியால் ஈழத்தமிழர் பிரச்சனையில் ஏற்படுத்தமுடிந்தது. ஆனால் இப்போது செல்வி.ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிககையை யார் குறை கூற முடியும்? ஆனாலும் கருணாநிதி குறை கூறுகிறார் என்பதும், அது எள்ளி நகையாடப்படுகிறது என்பதும் வேறு செய்தி. ஈழத்தமிழர்களில், முக்கிய அறிஞர்கள், போராளிகளுடன் இரண்டற கலந்து இணைத்து செயல்பட்டவர்கள் இந்த ஜெயலலிதா அறிக்கை பற்றி என்ன கூறுகிறார்கள் என்று வினவினோம்.

ஜெ.அறிக்கை மிக சிறப்பாக இருப்பதாக கூறினர்.அது மட்டுமின்றி, இந்த அறிக்கை தேர்தல் முடிந்த பிறகு வந்திருப்பதுதான் முக்கிய சிறப்பு என்று கூறினார். இது உணமையிலேயே ஜெ.க்கு கிடைத்த பாராட்டுதான்

கல்வெட்டில் உன்பெயர் வர,கல்லறையில் எம் பெயரா?

அய்யா, கலைஞர் அவர்களே, உங்கள் பெயர் எல்லா இடத்திலும் கல்வெட்டுகளில் வரவேண்டும் என்பதற்காக, நீங்கள் ஆட்சியில் தொடர்ந்து இருக்கவேண்டும். அதற்காக மத்திய அரசை தாங்கள் தொங்கி பிழைக்கவேண்டும். இன்று காலை முதல்வர் கலைஞர் திறந்து வைத்ததாக எழுதப்பட்ட கல்வெட்டை, கடற்கரையில் கண்டேன். கண்டவுடன் எனக்கு இப்படி எழுத தோன்றியது. பல நாள் உங்கள் பெயர் கொண்ட கல்வெட்டுகளை , கடற்கரையிலும, வள்ளுவர் கோட்டத்திலும், கன்னிமரா நூல் நிலையத்திலும், அன்னா நூற்றாண்டு நூல் நிலையத்திலும், ஒவ்வொரு புதிய மேம்பாலங்களிலும், புதிதாக கட்டப்பட்டு இன்னமும் முடிக்கப்படாத [ அதற்குள் அவசரப்பட்டு தமிழ்மக்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருகிறார்கள்] புதிய சட்ட பேரவை வளாகத்திலும் இன்னும் இன்னபிற இடங்களிலும், கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால் உங்கள் ஆசையான தாங்கள்தான் ராஜ ராஜ சோழனின் வாரிசு, என்பதும், கேரளாவின் மாவேலி அரசரின் வழி வந்தவர் என்பதாகவும் உள்ள கற்பனை வளத்தை செயல்படுத்த , மத்திய அரசு தமிழர் விரோத வேலைகளை எங்கு சென்றாலும் அதற்கு முழு மனதோடு ஆதரவு கொடுத்து வந்துள்ளீர்கள். அந்த செயல்பாடுகளில், ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததை ஆதரித்து, அங்கீகரித்த காரணத்தால் உங்கள் பெயரை கல்வெட்டுகளில் பதிக்க முடிந்தது. ஆனால் எங்கள் தமிழர்கள் அதற்காகவே கல்லறைகளில் பெயர் பதிக்கப்படும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்களே.

அதேபோல தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து சிங்கள கடல் படையால் கொலை செய்யப்பட்டு, அவர்களது பெயர்கள் கல்லறைகளில் பதிக்கப்பட்டு வருவதற்கு காரணமே, கலைஞரே உங்கள் பெயர் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டதனால்தானே

தங்கச்சிமடத்திற்கு கொலை, வடமராச்சிக்கு தாக்குதல், வல்வெட்டித்துறைக்கு கைது?

தமிழன் எங்கிருந்தாலும், இந்தியா இலங்கையை உலக கோப்பை போட்டியில், மட்டைபந்து விளையாட்டில் வென்றதால், அடியும், உதையும், கைதும் வாங்கவேண்டும். மரணத்தை சந்திக்கவேண்டும். இது என்னடா கொடுமை? நம்மூர் இந்திய தமிழர்கள் மீனவனாக பிறந்ததால், மீன் பிடிக்க சென்ற போது, அவர்களை பிடிக்கும் சிங்கள கடல்படை. இந்தியா இலங்கையை இரண்டாம் நாள் வென்றால், இரவிலேயே அந்த தமிழக மீனவர்களை, நிராயுதபாணியானவர்களை, நகத்தால் கீரியும், வாளால் வெட்டியும், கட்டையால் அடித்தும், கையை வெட்டியும், கழுத்தை அறுத்து, தலையை வெட்டி, முண்டமாகியும் கொலை செய்வார்கள் சிங்கள படைகள்.

அதற்கு இந்திய அரசு எந்த கேள்வியும் கேட்காது. எந்த வழக்கும் தமிழக அரசு இலங்கை படை மீது போடாது. ஆனால் அதே மட்டைபந்து ஆட்டத்திற்கு ராஜபக்ஷேவை இந்திய அரசு கூப்பிட்டு கௌரவிக்கும். அந்த ஆட்டத்தில் ஆடிய வீரர்களுக்கு இந்திய அரசும், தமிழக அரசும் கோடி கணக்கில் நிதி கொடுக்கும். அந்த விளையாட்டினால் ஏற்பட்ட மரணத்தை தழுவிய தன் சொந்த நாட்டு குடிமக்களான தமிழக மீனவர்களுக்கு சில லட்சங்களை இரையாக போட்டு அவர்கள் உயிர்களை மீன் பிட்க்க அனுமதிக்கும். இத்தகைய இந்திய அரசையு, தமிழக அரசையும் தண்டிக்க எந்த சட்ட நிபுணர்களும் புறப்பட மாட்டார்கள்.

இங்கே உள்ள தமிழனுக்கு மட்டுமா என்று இன்றைய அங்கில ஏடான, "டெக்கான் குரோனிகல்" அம்பலப்படுத்தியுள்ளது. இந்தியா வெற்றி பெற்றதை ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சி போங்க வரவேற்று இருக்கிறார்கள். உடனே அங்கிருந்த சிங்கள ராணுவம் வடமராச்ச்சி பகுதியில் அவர்களை அடித்து நொறுக்கியுள்ளது. அதேபோல, வல்வெட்டித்துறை கிராமத்தில் [ அது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனது சொந்த ஊர் ] இந்திய வெற்றியை கொண்டாடிய தமிழர்கள் மீது சிங்கள ராணுவமும், காவல்துறையும் சேர்ந்து கைது நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தியாவே நீ வெற்றி பெற்றால் அதனால் அதாக்கப்படுவதும் தமிழர்கள்தான். அவர்கள் எந்த நாட்டு தமிழர்கள் என்பது அல்ல பிரச்சனை. இந்தியா வென்றால், மட்டைபந்து ஆட்டக்காரருக்கு கொடிகள் குவியும். எங்கள் தமிழர் இல்லங்களில் அழுகுரல் குவியும். இந்த உண்மையை யாராவது அந்த மட்டைபந்து ஆட்டக்காரர்களுக்கு தெரிவிப்பார்களா? அவர்களாவது கண்விழிப்பார்களா? மத்திய, மாநில அரசுகள் இந்தியாவில் தமிழர்களை கைவிட்டு விட்ட நிலையில் நாங்கள் மட்டைபந்து ஆட்டக்காரர்களை மட்டுமே இப்போது இதற்கு பதில் கேட்கும் நிலையில் இருக்கிறோம்.

ஊழல் தடுப்பு சட்டம் உயிருள்ளதா?

ஊழல் தடுப்பு சட்டம் உயிருள்ளதா?
அன்னா பற்றி கண்ணா,பின்னா?
அன்னா ஹசாரே ஒரு புயலை கிளப்பினார். அதை உணமையல்ல என்று கூற முடியுமா? அன்னா ஹசறேக்கு உண்மையில் ஊழலை ஒழிக்க எண்ணமில்லை என்று வேண்டுமானால் யாரும் கூறலாம். ஆனால் அவர் கிளப்பிய அந்த புயல் நாடெங்கும் நடுத்தர வர்க்கம், படித்த வர்க்கம், மற்றும் தொழிலாளி வர்க்கம் மத்தியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வில்லை என்று கூற முடியுமா? சில மேதாவிகள் அவர் மீதான தங்கள் கேள்விகளை அல்லது குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து முளையிலேயே இப்படி ஒரு ஊழலுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வை காயடிக்க அதீத அறிவுஜீவிகளாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு வர்களது அடையாள நெருக்கடி. என்ன செய்ய?

தாங்கள் மட்டும்தான் ஊழலை எத்ரிக்கும் சிகாமணிகள் என்று அவர்கள் ஒரு சிறிய வட்டத்திற்குள் கூறிவந்தார்கள். இப்போது ஒரு பெறும் கூட்டம் அன்னா ஹசாரே பின்னால் திரள்கிறதே என்று அவர்களுக்கு கலக்கம் வந்துவிட்டது. தங்கள் அடையாளம் போய்விடுமோ என்று வருந்தி, வயத்தெரிச்சலில் எதையோ எழுதுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் வாதம் வெற்றி பெற சில, பல உண்மைகளை தேடி கண்டுபிடித்தாவது எழுதிவிடுகிறார்கள். அவற்றையும் நாம் புறம் தள்ள முடியாது. உதாரணமாக அன்னா ஹசாரே பற்றி தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதி ஹண்டே குறை கூறினார் என்று நாம் கூறினோம். ஹண்டே சுதந்திர கட்சியில் தொடங்கி, அதிமுக, பிஜேபி, என்று பயணம் செய்த அரசியல்வாதியாக இருக்கலாம். அதற்காக சந்தர்ப்பவாதம் என்று கூறி அவரது கருத்தை மறுக்க நாம் தயாராக இல்லை.

என் என்றால் அன்னா ஹசாரே தனது ராணுவ ஓட்டுனர் பதவியில் தொடங்கி, மகாராஷ்ட்ராவில் சினிமா கொட்டகையில் சீட்டு எடுத்து விற்றவர் என்றுகூட கூறுகிறர்கள். அது அன்றைய அவரது பொழைப்பாக கூட இருக்கலாம். இந்த நாட்டில் எல்லா இளைஞர்களுக்கும் அரசால் வேலை கொடுக்க முடியாதபோது, சினிமா சீட்டு விற்பதுகூட ஒரு பொழைப்புதான். அதற்காக இளைஞர்களை குறை கூறாதே. அரசை குறை கூற கற்றுக்கொள் என்று நாம் சொல்ல வேண்டும். அடுத்து அன்னா ஹசாரே ஒரு பிளாக் மெயில் செய்பவர் என்று சரத் பவர் சொன்னாராம். சரத் பவர் ரொம்ப யோக்கியர் என்பதால் நாம் அதை மறுக்க விரும்பவில்லை. அன்னாவே அடஹ்ர்கு பதில் சொல்லிவிட்டார். நான் செய்வது பிளாக் மெயில் என்றால் தொடர்ந்து அதை செய்வேன் என்கிறார்.

அதாவது அரசை பிளாக் மெயில் செய்து, ஊழலுக்கு எத்ரிப்பாக ஒரு சட்டத்தை பற்களுடன் அதாவது அதிகாரத்துடன் கொண்டுவர அண்ணாவால் முடிந்தால் அதற்கு பிளாக் மெயில் என்று பெயர் வைத்தால் அந்த வேலையை தொடர்ந்து செய்வேன் என்பது அவரது வாதம். அது சரிதானே. அடுத்து அன்னா வுடன் கரைசேர்ந்த சாந்தி பூஷன் பற்றியும், பிரஷாந்த் பூஷன் பற்றியும் வருகிறது. அவர்ஹல் பேசிய குறுந்தகடு உண்மை என்றும், உணமையில்லை என்றும் இரண்டு வாதங்கள். அதில் அமர்சிங் களம் இறங்குவது பற்றி நமக்கு அதிகம் அக்கறை இல்லை. என் என்றால் ஏற்கனவே அமர்சின்க்தான் அண்ணாவை எத்ரித்து இந்த குறுந்தகடு விவரத்தை முன்பே பிரச்சனை செய்தவர். ஆனால் திக்விஜய்சிங் இறங்கியிருக்கிறார். அவர் சோனியாவின் விசுவாசி.

சோனியாகாந்தி அன்னாவின் ஊழல் எதிர்ப்பை ஆதரிக்கிறேன் என்கிறார். அதற்காக தனது தலைமையில் உள்ள தேசிய ஆலோசனை குழுவை இறக்கி விடுகிறேன் என்கிறார். அது அவருக்கும் பிரதமாத் பொறுப்பில் உள்ளவருக்கும் உள்ள மோதலால் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் எதற்காக திக்விஜயசிங்கை, ஆனவிற்கு எத்ரிராக சோனியா இறக்கிவிடவேண்டும்? மன்மோகன் வசமாக ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டிய நாட்டின் பிரதமர் என்ற பெயரில், அசிங்கப்பட்டு நிற்கிறார். அந்த கெட்ட பெயரில் இருந்து காங்கிரசை காப்பாற்ற சோனியா மன்மோகன் மீதே அனைத்து குற்றங்களையும் போட்டுவிட்டு தப்பிக்க மன்மோகன் எத்ரிப்பு காய்களை நகர்த்தலாம். காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி வாரிய ஊழல், ஐ.எஸ்.ஆர்.ஒ. ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் அனைத்திலுமே நேரடியாக சிக்குவது மன்மோகன்தான்.


அவரது அமெரிக்கா சார்பு நிலையை நியாயப்படுத்த விரும்பும் சக்திகள் சு.சாமி மூலம் மன்மோகனை காப்பாற்ற ஒருபுறம் நீதிமன்ற வக்காலத்து மூலமும், இன்னொரு புறம் சோனியா--ராகுல் கூட்டுதான் அனைத்து ஊழலுக்கும் காரணம் என்றும் போட்டுக்கொடுகின்றன. இந்த நேரத்தில்தான், 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள போஸ்டன் நகரில் ராகுக் காந்தி ஐந்து கோடிக்கு இந்திய பணத்திற்கான டாலர்களுடன் சிக்கியதை, வாஜ்பாய் எடுத்துவிட்ட கதையை மீண்டும் வெளியிட்டு ஒரு கூட்டம் மகிழ்கிரரகள். அப்படியானால் இந்தியாவின் ஆளும் கட்சி குடும்பம் ஊழலில் சிக்கினால், அதை அடுத்த ஆளிம்வர்க்க கட்சி தலைமை எடுத்துவிடும் என்பதுதானே பொருள். அதாவது ஊழலில் பிரதமர் வேறு, ஆளும் குடும்பம் வேறு, ஆளும் வர்க்க எத்ரிகட்சி வேறு என்பது அல்ல என்பதுதானே பொருள். அப்படியானால் இந்த ஊழல் எத்ரிப்பு சட்ட வரைவுநகல் உண்மையில் நல்ல படி வெளிவந்தாலும் அதனால் பயன் உண்டா?


உலகை இன்று ஆளும் கார்பரேட்கள் தனியார் லாப நோக்கம் கொண்ட நிறுவனங்களாக இருப்பதால், அவற்றின் நலன்களுக்காக எப்படியும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், லஞ்சம் கொடுப்பார்கள். அதற்கு பெயர் வணிக தர்மம் என்று கூறுவார்கள். அதற்காக உலகம் முழுவதும் உள்ள கார்பரேட்கள் ஒரு தனி பிரிவை தன்கள் நிறுவனத்தில் ஒதுக்கி அதன்மூலம் கமிஷியன் கொடுப்பது என்ற பழக்கத்தை தொழில் வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளார்கள். இப்போது அல்லோலகல்லோல படும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய நீரா ராடியா கூறுவதுபோல, தனது நிறுவன லாப ஊடாடல் உலகம் முழுவதும் பன்னாட்டு மூலதன நிறுவனகளால் செயல்படுத்தப்படும் பழக்கம்தான் என்று தெளிவாகிறது. அப்படியானால் இதை தடுக்கவே முடியாதா?

முடியும். இப்போதுள்ள உலங்கை பிடித்துள்ள உலகமயமாக்கல் கொள்கையால்தான் இந்த ஊழல் வழக்கமாகி உள்ளது. தனியார்துறை இருக்கும்வரையில் இப்படி ஊழல் இருக்கத்தானே செய்யும் என்று வாதம் செய்பவர்களும் உண்டு. தையர்துரையை சீனா உட்பட நாடுகள் இன்று பயன்படுத்தி வருகின்றன. உடனடியாக இத்தகைய ஊழல்களை தடுக்க என்ன வழி என்று நாம் சிந்திக்கலாம். இந்தியாவில் பொதுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் இருந்த நேரு காலத்தில், தனியாரதுரையை கட்டுக்குள் வைக்க ஒரு சட்டம் இருந்தது. அதற்கு " ஏகபோக தடுப்பு சட்டம்" என்று பெயர். அந்த சட்டத்தை 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சியில் டங்கள், காட் என்ற திட்டங்கள் மூலம் உள்ளே நுழைந்த அமெரிக்க் பொருளாதார கொள்கைகள், நாளடைவில் தாராளமயமாக்கல், என்று வளரும்போது, அந்த "ஏகபோக தடுப்பு சட்டத்தை" நீர்த்துபோக வைத்துவிட்டார்கள். அதனால் மட்டுமே " அந்நிய தனியார் மூலதனம்" கண்டபடி இந்த நாட்டிற்குள் நுழைய முடிந்தது.

அப்படி ஒரு சட்டத்தை , " கார்பரேட் தடுப்பு சட்டம்" என்று கொண்டுவந்து, அதனுடன் சேர்த்து இந்த" ஊழல் தடுப்பு சட்டம்" வருமானால் அது உறுப்படும் என்று புதிய மாற்று ஏற்பாட்டை நாம் முன்வைக்க வேண்டும். அப்படி வைக்கும்போது இப்போது கிளம்பியுள்ள மக்களது ஊழல் எத்ரிப்புக்கும் அர்த்தம் இருக்கும். மக்களுக்கும் விளங்கிக்கொள்ள முடியும்.. மாறாக இது நொள்ளை, அது சொள்ளை, என்று கூறினால், எந்த நல்லது வந்தாலும் இந்த ரிவுஜீவிகள் புறம் சொல்லத்தான் செய்வார்கள் என்ற பெயர் தான் வரும். தவிர இந்த சொல்லப்படும் அறிவுஜீவுகளுக்கு அப்படி ஒன்றும் பெரிய அக்கறை இந்த நாட்டில் புதிய வழிகளை அக்ண்டுபிடித்து ஊழலை ஒழிக்கவேண்டும் என்று அக்கறை இருப்பதாக தெரியவில்லை. தங்கள் பெயர் வித்தியாசமாக பேசினார், எழுதினர் என்று வரவேண்டும் எனத்தான் நினைக்கிறர்கள்.

Saturday, April 23, 2011

ஒரு " சதி விமானத்தில் அமெரிக்காவிற்கு பயணமாகிவிட்டது"

URGENT MESSAGE ;-
Conspiracy send through Flight from Colombo to Newyork
-------------------------------------------------------------------------------------------------------------------

Kothapaye Rajapakse, Defence Secretary of SLGov. takes his flight now towards America. This Trip was planned in a higher level meeting of the gov.of SL. Sri Lankan President Mahinda Rajapakse who was disturbed by the leakage of the summarry of the UN Panel report on the Crimes against Humanity by both the side of War, either it is the Gov.of Sri Lanka or the LTTE.Colombo govt. approached Gov. of Russia, who gave its Green signal to the Gov.of SL and it tries to pressurise the UNSC. Colombo also is trying to influence the Gov. of PRC, Peoples Republic of China to support its cause for stopping the publication of the Panel Report by the UN Security Council. Seeing the danger of the report being published Rajapakse regime is depending on some senate members from the U.S. to support their cause. For directely handling these forces to staal the report, President of SL planned to send his brother cum Defence Secretary and a Citizen of United States, Gothapaye Rajapakse to fly to Newyork and toinfluence the forces of the UNSC to stop them from publishing their report, since the Govt.of SL itself is ging to declare its own report on the Human Rights violations at the time of war through its enquiry agency called LLRC. This trip od Gothapaye is kept as a secret trip Today morning he takes aspecial flight to US from Colombo.

ஒரு " சதி விமானத்தில் அமெரிக்காவிற்கு பயணமாகிவிட்டது"

இலங்கை அரசு ஐ.நா.வின் நிபுணர் குழு எழுதிய "மானுடத்திற்கு எதிரான குற்றங்கள்" அறிக்கையின் ஒரு பகுதி வெளியானதால், இடிந்துபோய் உட்கார்ந்த்தது. அதை முறியடிக்க எண்ணி, ராஜபக்சே அரசு, ஐ.நா.வை முதலில் மிரட்டியது. பிறகு அறிககையை அதிகாரபூர்வமாக வெளியிடவேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டது. அதற்கும் ஐ.நா.மசியாது போல தெரிந்த உடனே, ருஷ்யா மூலம் நிர்ப்பந்தம் கொடுத்து, ஐ.நா. பாதுகாப்பு குழு அந்த அறிககையை வெளியிட இடாமல் தடுக்க முயற்சிக்கிறது. அதேபோல சீனாவையு தனக்கு சாதகமாக வாதாட ஐ.நாவில் ஏற்பாடு செய்து வருகிறது.அதே நேரம், அமெரிக்காவில் உள்ள இளநகை அரசுக்கு ஆதரவாக இருக்கும் சில செனட் உறுப்பினர்களை வைத்து, ஐ.நா.வில் இலங்கைக்காக வாதாட எர்பாஉ செய்துள்ளது.

இதுபோன்ற "சதி" வேலைகளை செய்ய நேரில் ஐ.நா. சென்று நம்பகமான ஆள்கள் வேலை செய்யவேண்டும் என்று முடிவு செய்தது. அதன்படி, அமெரிக்கா குடிமகனான, அரசத்தலைவரின் தம்பியும், பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளருமான கோத்தபாயே ராஜபக்சே தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சில உயர் ராணுவ அதிகாரிகளுடன் அமெரிக்கா சென்று, அங்கே உள்ள தங்கள் ஆதரவு சகதிகள மூலம் ஐ.நா. அறிககையை வெளியிட விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்வார். இன்று காலை அதற்காக அமெரிக்காவிற்கு கோத்தபாயே மற்றும் அதிகாரிகள் விமானத்தில் கொழும்புவிலிருந்து, கிளம்பி விட்டார்கள். இந்த பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

Friday, April 22, 2011

மகிந்தாவை குற்றம் சாட்ட இந்தியா தயாரா?-ஜெ. கேள்வி.

மகிந்த இராசபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா

மஹிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய சகாக்களின் போர்க்குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்கிற்கு இந்திய அரசு எடுக்க வேண்டும் என தெரிவித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என்பதைத் தான் அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தியர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடூர மனப்பான்மைக்கு உண்மையிலேயே ஆதாரம் தேவை என்றால், இலங்கை அதிகாரிகளின் சித்திரவதையால் அழுகிய நிலையில் சிதைந்து கிடந்த மீனவர்களின் சடலங்களே சாட்சி.

இந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் மீதே இது போன்ற கொடூரத் தாக்குதலை இலங்கை அரசு நடத்தியிருக்கும் நிலையில், யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து விதமான மனித உரிமை மீறல் குற்றங்களுக்கும் ஆளாகி, இலங்கை அரசின் அடக்குமுறைக்கு அடிபணிந்து இலங்கைத் தீவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

ஓர் தமிழ் இளைஞரை துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு, அவரை நிர்வாணமாக்கி, கண்களை மூடி, கை, கால்களைக் கட்டி, காலால் எட்டி உதைத்து இலங்கை இராணுவத்தினர் பேரானந்தம் அடைந்த காட்சியை 25.8.2009 அன்று 40 வினாடிகளுக்கு பிரிட்டிஷ் டி.வி. ஒளிபரப்பி உலகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த இளைஞரின் பிணம், இதேபோன்று ஒன்பது சடலங்கள் இருந்த இடத்திற்கு உருட்டி விடப்பட்டது. இந்த கொடுஞ்செயலுக்கு எதிராக சர்வதேச அளவில் கூக்குரல் எழுப்பப்பட்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச சர்வதேச நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, போர்க் குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இந்திய அரசோ, தமிழக அரசோ இது குறித்து எதிர்ப்பையோ அல்லது வருத்தத்தையோ கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, இலங்கை அதிபருடன் விருந்துண்டு மகிழ்வதற்காக, 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், கனிமொழி உட்பட தி.மு.க., காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தார் கருணாநிதி.

பரிசுப் பொருட்களுடன் திரும்பிய நாடாளுமன்றக் குழுவினர் இலங்கையில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்றும், அங்குள்ள தமிழர்கள் குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு புகார் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தனர். என்னதான் நற்சான்றிதழ் கொடுத்தாலும், அங்குள்ள தமிழர்களின் நெஞ்சை உருக்கும் நிலையைக் கண்டு மனித உரிமை ஆர்வலர்கள், முற்போக்கு நாடுகளைச் சேர்ந்த அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை பொங்கி எழுந்தன.

தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அனுப்பிய குழுவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் இருந்து ஒரு சில பகுதிகளை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஐ.நா. குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நம்பத் தகுந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படின், சர்வ தேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிரான ஆபத்து விளைவிக்கக் கூடிய அத்து மீறல்களை இலங்கை அரசாங்கம் நிகழ்த்தியுள்ளது வெட்ட வெளிச்சமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் சில குற்றங்கள் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகும். 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும், 2009ம் ஆண்டு மே மாதம் 19 ம் தேதிக்கும் இடையே, வன்னி பகுதிக்கு முன்னேறிய இலங்கை இராணுவம், மிகப் பெரிய அளவில் பரவலாக குண்டு மழை பொழிந்து அப்பாவி தமிழர்கள் மாண்டு போவதற்கு காரணமாக இருந்தது.

இதன் மூலம் வன்னி பகுதி மக்களுக்கு பலவிதமான தொந்தரவுகளை இலங்கை இராணுவம் கொடுத்தது. கிட்டத்தட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் குண்டு மழை பொழிவிலிருந்து தப்பிக்க முடியாத அளவுக்கு மிகக் குறுகிய பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர்.

ஊடகங்கள் மற்றும் போர் விமர்சகர்களை பயமுறுத்தும் வகையிலும், அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் வகையிலும், வெள்ளை வாகனங்களில் மக்களை கடத்துவது, மறைத்து வைப்பது உட்பட பல்வேறு அச்சுறுத்தும் நடவடிக்கைகளை இலங்கை அரசு கையாண்டது.

குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பொதுமக்கள் வாழும் தொடர்ச்சியான மூன்று இடங்களில் இலங்கை அரசு மிகப்பெரிய அளவில் குண்டு மழை பொழிந்திருக்கிறது. மருத்துவ மனைகள் குறிவைத்து தொடர்ந்து தாக்கப்பட்டு இருக்கின்றன. வன்னிப் பகுதியில் உள்ள மருத்துவ மனைகள் அனைத்தும் பீரங்கிகளால் தாக்கப்பட்டு இருக்கின்றன.

மருத்துவமனைகள் இருக்கும் பகுதிகள் என்று இலங்கை அரசாங்கத்திற்கு நன்கு தெரிந்திருந்தும் சில மருத்துவமனைகள் மீண்டும், மீண்டும் தாக்கப்பட்டிருக்கின்றன. போர் பகுதியில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யக் கூடிய உதவிகளான மருத்துவ உதவி, உணவு ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் தடுத்து அவர்களை மேலும் துன்பத் திற்கு ஆளாக்கி இருக்கிறது.

இதன் மூலம் போர் பகுதியில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்து மதிப்பீடு செய்தது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே வரை, மனித வர்க்கத்தின் படுகொலை நடந்த இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அனாமதேயமாக செத்து மடிந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை குழுவின் அறிக்கை மிகத் தெளிவாக உள்ளது. இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களை பட்டியலிட்ட தோடு மட்டுமல்லாமல், இலங்கை போர் முடிவிற்கு வந்து விட்டது என்று கூறி 27.4.2009 அன்று தனது மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகத்தை கருணாநிதி முடித்துக் கொண்டதற்குப் பிறகும், 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை இனப்படுகொலைகள் நடந்துள்ளன என்று தெளிவாக இந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான இனப்படு கொலைக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும், தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்த கருணாநிதி பகிரங்கமாக பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ராஜபக்ச மற்றும் அவருடைய சகாக்களின் போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில், அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை தனது பங்கிற்கு இந்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையெனில், அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு இலங்கை குறித்து சோனியாகாந்தி தெரிவித்த கருத்துக்கள் வாய்மையற்றவை என்றாகி விடும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலையை நடத்தியது இந்திய அரசு தான் என்று அடிக்கடி கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டு உண்மை என்று நம்புவதாக வழி வகுக்கும். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறி உள்ளார்.

என்.ராம் ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக்கொண்டாரா?

என்.ராம் ஒரு பிரபல ஊடகத்தின் முதலாளியும், தலைமை ஆசிரியரும் ஆக இருக்கிறார். அவரது ஆங்கில ஊடகம் உலகம் முழுவதும் அப்படி பிரபலம். அண்ணா அந்த ஆங்கில ஊடகம் பற்றி கூறும்போது, மவுண்ட் ரோடு மகா விஷ்ணு என்றார். தனது தலையை வாஷிங்டனிலும்,தனது காலை மெட்ராசிலும் வைத்திருக்கும் மகா விஷ்ணு என்றார். அப்படி பெயர் பெற்ற அந்த மதம் பெயர் கொண்ட ஆங்கில ஏடு, தனது பணிகளில் சமீபத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு ஊதுகுழல் வேலை செய்துவருவதும் எல்லோரும் அறிந்ததே.அதுமட்டுமின்றி, பிரபல சிங்கள ஊடகவியலாளர் ராஜபக்சே கொடுத்த விருதை மறுத்த போது, சிங்கள ஊடகவியலாளர்கள் எல்லோரும் ராஜபக்சே அரசை, கருத்துரிமைக்கு எதிரி என்று கண்டித்த போது, இலங்கைக்கு பறந்து சென்று ராஜபக்சே கொடுத்த விருதை வாங்கி மகிழ்ந்தவர் என்.ராம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

தமிழர்கள் மீது இன அழிப்பு போரை நடத்திய ராஜபக்சேவை, புலி எதிர்ப்பு என்ற பயங்கரவாத எதிர்ப்பை நடத்துபவர் என்று பாராட்டி, சீராட்டி, ஆதரவு கொடுத்து வந்தது என்.ராம் தலைமையிலான "திஹிந்து" நாளேடு என்பதும் உலகிற்கு தெரியும். இதே என்.ராம் ஒருகாலத்தில் புலிகள் தலைவர் கிட்டுவுடன் நெருக்கமாக இருந்த போது, அவர் பற்றி அதிக ஆதரவு தந்து எழுதி வந்தவர் என்பதும் மறப்பதற்கில்லை. அதனால் தனது நட்பு எந்தப்பக்கமோ, அந்த பக்கம் எழுதுபவர் எப்படி ஊடகவியலாளராக இருக்க முடியும் என்று அறிவுஜீவிகள் எண்ணி பார்த்திருக்க வேண்டும். அதேபோல அவர் சிபிஎம் காரர்களுடன் நட்பு வைத்திருந்தார் என்பதால், அவர்களுக்காக எழுதுவதை பழக்கமாக கொண்டிருந்தார். அதை வைத்து அவரை இடதுசாரி என்று தவறாக என்னிக்கொண்டவர்கள் அதிகம். அவர் எஸ்.எப்.ஐ.யில் இருந்தார் மாணவ பருவத்தில் என்பதால், மேட்டுக்குடி வீட்டு பையன், கட்சியின் பொது செயலாளர் நம்பூதிரி பாட சென்னை வரும்போது, தனக்கு வீட்டில் கொடுத்திருந்த பீயத் காரில் விமான நிலையம் சென்று அந்த கேரள முதல்வரை கூட்டி வருவார் என்று பெருமையாக கட்சிகாரர்கள் கூறிக்கொள்வார்கள்.

அந்த காலத்தில் எஸ்.எப்.ஐ.மாணவர் தலைவர்களில் பலரும் ஜவஹர்லால் நேரு பலகலை கழகத்தில் "டிஸ்கோதே"என்ற மேற்கத்திய நடனத்தில் ஊறியவர்கள் என்பதும் அப்போதே வெளிவந்த செய்திகள். அதனால் அந்த கால நிகழ்வுகளை வைத்து எவரையும் மதிப்பிடக்கூடாது என்று விவரம் தெரிந்தவர்கள் புரிந்திருக்க வேண்டும். சமீபத்தில் கொலை குற்றத்திற்காக பிடிபட்ட சங்கராச்சாரியார் உள்ளே போன பின்பு, தப்பிக்கலாம் என்று எண்ணிய சின்ன சங்கராச்சாரியாரான விஜேந்திரன் என்.ராமின் உதவியை நாட, இந்த மனிதர் உடனே தானே தனது காரை எடுத்து கொண்டு போய், அவரை ஆந்திர எல்லையிலிருந்து கூட்டி வந்து காஞ்சிபுரத்தில் விட்டார். அடுத்த வாரமே பிரகாஷ் கரத் புதிய பொது செயலாளர்க சிபிஎம்.மிற்கு வந்தவுடன் அவரது சென்னை வருகையில் அவருக்கும் தனது வாகனத்தில் இடம் கொடுத்து கூட்டி வந்தார். இது ஒரு லிபரல் அதாவது தாராளமனது கொண்ட,கொள்கை இல்லாமல் நண்பர்களுக்காக உதவும் ஒரு பணக்கார மனிதரின் செயல்கள்தான். அதை புரியாத நமது மக்கள் அவரை இடதுசாரி என்று எண்ணினால் அது ஒரு மாயை.


சீனஅரசாங்கம் செய்யும் எல்லா தவறுகளையும் தனது லாபத்திற்காக இந்த மனிதர் பாதுகாப்பார். சீனகம்யுனிஸ்ட் கட்சி செய்வது பற்றி அதிகம் இதுபோன்ற மேட்டு குடிகளுக்கு தெரிய அவசியம் இல்லை. அங்கே அரசாங்கம் செய்யும் பிற்போக்கு வேலைகளை தனியாகவும், கட்சி செய்யக்கூடியதை வேறாகவும் பார்ப்பது ஒரு வேடிக்கை.அதில் ஒன்று ராஜபக்சேவை ஆதரிப்பது. இந்த பெரிய மனிதருக்கு[ [என்.ராமுக்கு] ஜெயலலிதா ஆட்சியுடன் மோதல் வந்த போது, அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி இவருக்கு ஆதரவாக மத்திய சிறப்பு காவல் படையை அனுப்பினார் என்பதை நாம் மறக்க கூடாது. அதேபோல அந்த ஏட்டின் நூறாவது ஆண்டு விழாவுக்கு பிரதமர் வாஜ்பாயை ராம் அழைத்து வந்தார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல வாஜ்பாயியின் அமெரிக்கா பயணத்தில் ராமை அவர் அழைத்து சென்றார் என்பதையும் மறக்க முடியாது.

இப்போது என்.ரவி என்ற அவரது சொந்த தம்பி ஒரு கடிதம் எழுதி அண்ணனை அமபலப்படுத்தி உள்ளார். தன்னை ஆசிரியர் பொறுப்பிலிருந்து இந்த மாதம் மூன்று நாட்கள் முன்பு, பதினெட்டாம் தேதி ராம் நீக்கி விட்டார் என்று குற்றச்சாட்டை தொடங்கியுள்ளார். மேலாண்மை இயக்குனராக இருந்த தனது தம்பி என்.முரளியையும் நீக்கி விட்டார் என்.ராம் என்று என்.ரவி எழுதுகிறார். இணை ஆசிரியர் நிர்மலா லக்ஷ்மணன் என்பவரையும் நீக்கி விட்டார் என்கிறார். மாலினி பார்த்தசாரதி என்ற தங்கள் சித்தி மகளையும், நிர்வாக ஆசிரியர் பதவியிலிருந்து ராம் தூக்கி விட்டார் என்கிறார் அவர். ஏற்கனவே மாலினியை தூக்கி எறிந்து விட்டு, தலைமை ஆசிரியராக ராம் தானே வந்தார் என்பதும் அதை ஒட்டி மாலினி அனுமதித்திருந்த பத்தி எழுத்தாளர்களான கெயில்ஒம்வேல்ட், காஞ்சனஇல்லையா, கிரிஷ்ணானந், போன்றோரின் பத்திகள் வருவது நின்று விட்டது என்பதும் வாசகர்கள் அறிந்ததே.

இப்போது என்.ரவி தனது கடிதத்தில் பல குற்றச்சாட்டுகளை என்.ராம் மீது வைக்கிறார். அவற்றில் முக்கியமானது ராம் எப்படி ஆ.ராஜாவின் நேர்காணலை போட்டு அவரை காப்பாற்றும் நோக்கத்துடன் ஊடகத்தை தவறாக பயன்படுத்தினார் என்பது. அதில் அதற்காக அதே நேரம் அந்த தொலை தொடர்புஅமைச்சகத்திலிருந்து ஒரு பக்க வண்ண விளம்பரம் கொடுக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டுகிறார். அதை "பணம் கொடுத்து செய்தி வரவழைக்கும் பாணி" என்று அவர் கூறுகிறார்.அதனால் ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்றும் கூறுகிறார். அப்படியானால் சுற்று சூழல் சாட்சியங்களின் படி இந்த என்.ராமும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவாரா என்ற கேள்வி நமக்கு எழுகிறது. அகில உலக அளவில் கொடுங்கோலன் ராஜபக்சே தண்டிக்கப்படும்போது, அவனது கைத்தடிகள் அவரவர் நாடுகளில் தண்டிக்கப்படுவது நடக்கத்தான் செய்யுமோ?

Thursday, April 21, 2011

பறக்கும் பாலம் பறந்தே போச்சா?

கலைஞர் அரசு சென்னையை மையமாக வைத்து, தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் மற்றும் இன்னபிற கார்பரேட் நிறுவனங்கள்தான் உதவியாக இருக்கும் என்ற ஆய்ந்த முடிவின்படி ஏற்பாடுகள் செய்தார். அவர் ஆண்ட கடைசி ஐந்தாண்டும் தமிழ்நாட்டை கார்பரேட்களின் நலனுக்கு என்ற வகையில் பிரித்து கொடுத்து, டில்லி தந்த வாய்ப்பில் காற்பறேட்களுக்கு உதவி செய்து அதில் தங்களுக்கு கிடைத்த உதவி தொகையான கமிஷனை மட்டுமே எடுத்துக்கொண்ட குடும்பம் எனும் நற்பெயரையும் கார்பரேட்களிடம் பெற்றுள்ளார்.

அப்படி செய்த பணிவிடைகளில் கிடைத்த சிறு உதவி தொகையை இன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று அழைக்கிறார்கள்.அவ்வாறு செய்த உதவிகளில் ஒன்றுதான் சென்னையில் உள்ள வணிக துறைமுகத்தை பெரிதாக்குவதும், சிறு துறைமுகங்கள் என்ற பெயரில் தமிழ்நாடெங்கும் கடலோர மாவட்டங்களில் இதுபோன்ற சிறு துறைமுகங்களில் அந்நியநாட்டு ஒப்பந்தங்களை அளிப்பதில் மத்திய அரசுடம் சேந்து கொண்டு முடிவு செய்து அங்கும் மீனவர் வாழ்நிலையை கெடுக்க ஏற்பாடு செய்வதில் கெட்டிக்காரத்தனமான வேலையை வெற்றிகரமாக செய்துவிட்டார். இப்போது புரியாத மீனவர்கள் ஒருகட்டத்தில் இவை அனைத்துமே மீனவர்களை கடல்கரையை விட்டு வெளியேற்றி கரைகளை அந்நிய நாட்டு உடமையாக ஆக்கத்தான் என்பதை புரிந்துகொள்வார்கள்.

அந்த வரிசையில்தான் பறக்கும் மேம்பாலங்களும் வந்தன.அதாவது திட்டமிடப்பட்டன. ஒன்று போர் நினைவுதூனிலிருந்து மதுரவாயில் செல்லும் மேம்பாலம். அது அமிஜிகரை மக்கள் வீடுகளை இடிக்கும் மேம்பாலம். மக்கள் மத்தியில் பெறும் எதிர்ப்பு வந்தது. அடுத்து கலங்கரை விளக்கிலிருந்து, தென்சென்னையில் கொட்டிவாக்கம் வரையிலான பறக்கும் மேம்பாலம். இவை இரண்டுமே வணிக துறைமுகத்திலிருந்து வெளியே வரும் கார்பரேட் கண்டைனர்களை கொட்னுசெள்ள போடப்படும் என்பதுதான் கலைஞர் அய்யா அந்த பெரு முதலாளிகளுக்கு கொடுத்த வாக்குறுதி.

அதன்படி கீழே உள்ள மீனவர் குப்பங்கள் உடையட்டும். ஆனால் பன்னாட்டு நிறுவனகள் வாழவேண்டும் என்ற அரச குடும்பத்தின் ஆசை. இதை எதிர்த்து பல போராட்டங்கள். மீனவர்கள், சுற்றுப்புற சூழல்வாதிகள் நடத்தியும் கவலைப்படாத கலிஞர் அரசு இப்போது உயர்நீதமன்றம் முன்னால், அந்த திட்டம் பற்றி பரிசீலனையில்தான் இருக்கிறது, இன்னமும் நுடிவு செய்யவில்லை என்று பின்வாங்கியுள்ளார். மக்கள் எத்ரிப்பு தனக்கு எதிராக மக்களை வாக்களிக்க செய்துவிட்டது என்று உணர்ந்த பின்னால் அதற்கான காரணங்களை கண்டு பிடித்து, இனி தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டும் என்றால் இதுதான் வழி என பின்வாங்குகிறார்.
.

Wednesday, April 20, 2011

கோடீஸ்வர குடும்பத்திற்கு எதிராக.......

எதுக்கய்யா இந்த மாதிரி எல்லோரும் சேர்ந்து இரட்டை இளைக்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும் ஒட்டுமொத்தமாக வாக்களித்தீர்கள் என்று சாமான்ய தமிழனை கேட்டால், அது ஒன்னும் அந்த ம்மா மீதுள்ள பற்றினால் அல்ல என்கிறான் தமிழன். அப்பா எதற்கு ன்று வினவினோம். அது ஒண்ணுமில்ல. அந்த கோடீஸ்வர குடும்பம் செய்யும் அலும்பு தாங்களா என்கிறான். அது எண்ண அலும்பு? என்றோம். ஒன்றா? இரண்டா? எடுத்து சொல்ல என்கிறான்.

ஒரு முதலமைச்சர் போனமுறை கலைஞர் ஆளும்போது இருந்தார். ஓஹோ. 1996 முதல் 2001 வரை உள்ள ஆட்சியை சொல்றீங்களா? ஆமாம். அப்பவே தமிழ் மக்கள் அந்த ஆட்சியின் சாதனைகளை வைத்து வாக்கு போடல்ல. ஆட்சியை மாத்திட்டாங்க. அந்த முறை கலைஞர் உணமையிலேயே ஊழலை பல தட்டுகளிலும் குறைத்து சாதனை செய்தார். இந்த முறை ஆட்சியில் அவர் ஒருவர் மாட்டுமா முதல்வராக இருந்தார்? பத்து பேர் முதல்வராக இருந்தனர். காவல்துறையில் யார், யாரை எங்கே போடவேண்டு என்று முடிவு பண்ற இடத்தில் அந்த துறையை கவனித்த கலைஞர் இல்லையே?

துணை முதல்வர் தளபதி அனேகமாக உளவு துறையை கையாண்டார் என்றால், அதில் உள்ள ஜாபர் சேட் மூலம் பெரிய காய் நகர்த்தல்களைத்தானே கலைஞர் செய்து வந்தார்? என்றார்கள். சரி. மதுரை மண்டல காவல் அதிகாரிகளை மாற்றுவதில் தளபதி தலையிட்டாரா என்றால், அதுதான் இல்லை. அடுஹு அண்ணன் பகுதி.என்று தளபதியே பின்வாங்கவில்லையா? என்கிறார்கள். சரி. தன்னால் முடிந்த அளவு ராசாத்தி அமமையாரும் காய் நகர்த்தலை செய்தாரே என்கிறார்கள். அதனால்தானே ஜாங்கிட் ஆட்சி சென்னை மற்றும் புற நகர்களில் நடந்தது என்கிறார்கள். ஓஹோ. அதனால்தான் ஜாபரையும், ஜாங்கிட்டையும் தேர்தல் ஆணையம் மாற்றிவிட்டதோ என்று கேட்கதொன்றியது. எல்லாம் திமுக காரர்களே பேசுவதுதான்.

சரி. ஒரு தொழிலை சுதந்திரமாக விட்டார்களா? திரை தொழிலில் நுழைந்து அதையும் ஆக்கிரமித்தார்கள். ஏற்கனவே சின்னத்திரை அவர்களது குடும்பம் கையில்தான். அதை வைத்து விளம்பரம்செய்துதங்கள் படங்களை ஓடச்செய்யட்டும் .அதற்காக திரை அரங்குகளை கையில் எடுத்துக்கொண்டு, அதில் தங்கள் படங்கள் தவிர மற்றவர் படங்களை திரையிட மறைமுக தடை விதிப்பது கோபத்தை கொடுக்காதா? என்கின்றனர். அதோடு நிறுத்தாமல் குறிப்பிட்ட கலைஞர்களுக்கு தடங்கல்கள் செய்வது என்ன நியாயம்? என்று கேட்கிறார்கள்.

சரி. அடுத்த திட்டம் அந்த தனியார் பேருந்துகளை கை வைப்பதாமே? என்று கேட்டார்கள். அது என்ன? என்றோம். கலாநிதி, தயாநிதி சகோதரர்கள் எண்ணூறு பேருந்துகளை பயங்கர உயர் தொழில் நுட்பத்துடன் ஏற்பாடு செய்து தயார் செய்து வைத்துள்ளதாகவும், அவற்றை இப்போது இரவில் பல ஊர்களுக்கும் செல்லும் ஆம்னி பேருந்துகளின் தடங்களில் இறக்க இருப்பதாகவும் வந்த தகவல் அடுத்த அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படி தமிழ்நாட்டையே ஒரு கோடீஸ்வர குடும்பம் வாங்கி, தன்கள் கைகளில் வைத்து கொள்வதை, தமிழ் மக்கள் ஏற்கத்தாயாரக இல்லை என்று முடிக்கிறார்கள்.

அப்பா போட்ட வாக்குகள் அம்மா வரணும், என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் என்கிறீர்களா? என்றால் ஆமாம் என்கிறார்கள்.அதனால்தான் மத்திய உளவு துறையினர் சமீப கணக்கு, அதிமுக 126 என்றும், அவர்கள் கூட்டணி 186 என்றும் கணக்குசொல்கிறார்களா?

Tuesday, April 19, 2011

பூந்தமல்லி சிறையில் பட்டினி போர்.

போர் குற்றங்கள் செய்த ராஜபக்சே அரசை, மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் இழைத்ததாக ஐ.நா. நிபுணர் குழு ஒரு அறிககையை வைத்தவுடன் அதை எதிர்த்து மகிந்தா அரசு கொந்தளித்தது. ஐ.நா. காட்டியுள்ள போர் குற்றங்களுக்காக ராஜபக்சே அரசை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலகமெங்கும் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அந்நியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் அதே கோரிக்கைக்காக பட்டினி போர் தொடங்கி உள்ளனர்.

பூந்தமல்லி சிறப்பு முகாம் பெயரில் உள்ள சிறைக்கூடத்தில், இன்று காலை ஒன்பது மணிக்கு தொடங்கி பட்டினி போரை, அமலன் அப்பாதுரை[33 ], கங்காதரன் நடராஜா [ 42 ], ஜெயமோகன் விரைஜா [ 30 ], சந்திரகுமார் மாரி [38 ] ஆகியோர் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு உலக தமிழர்கள் அனைவரும் ஆதரவு தந்து,ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசையும் நிர்ப்பந்திக்க வேண்டும்.

மீனவர் கொலைக்கு பட்டினி போராட்டம் பதிலா?

நான்கு மீனவர்களை சிங்கள கடல் படை கொடியவர்கள் கொலை செய்தார்கள் என்றால் இந்தியா இலங்கையை மட்டைபந்து போட்டியில் வேற்றதனால்தான் என்ற உண்மையை உலகம் அறியும் முன்பு அறிந்தவர்கள் நமது இந்திய-தமிழக அரசுகள். ஏப்ரல் இரண்டாம் நாள் கடலுக்கு சென்ற TN / 10 / MFB / 262 என்ற எண்ணுள்ள விசைப்படகில் சென்ற விக்டஸ் [36 ], ஜான்பால், அந்தோணிராஜ், மாரிமுத்து ஆகிய மீனவர்கள் கடுமையாக சிங்கள படையால் அடித்து, சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு, அவர்களது உடலங்கள் ஒவ்வொன்றாக கிடைக்கின்ற நிலையில் கடலில் வீசப்பட்டுள்ளது. ஒவ்வொரு உடலமும் கிச்டைக்கும் போது அவற்றில் இருந்த காயங்கள் எப்படி உடலெங்கும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதராமாக இருந்தது.

கடைசியாக கிடைத்த உடலில் தலயும் வெட்டப்பட்டு, கையும் வேட்டப்பட்டதிளிருந்து திட்டமிட்டு சிங்களர் செய்த அட்டூழியம் என்பது பச்சையாக புரிகிறது. இந்த கொலைகள் நம்பி தங்கியிருந்த தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களம் சித கொலைகள்தான் என்பதும் டேஹ்ளிவாகிறது. நான்காம் நாள் நடந்த மட்டைபந்து விளையாட்டில் இந்தியா, இலங்கையை வென்றதால் ஆத்திரப்பட்ட சிங்களர்கள் செய்த அட்டூழியம் என்று தெரியவருகிறது. அப்படி அவர்கள் செய்த நாள் ஏப்ரல் நான்காம் நாள் இரவில். அதாவது நான்கு மீனவர் படுகொலையும் ஏப்ரல் நான்காம் நாள் நள்ளிரவில் நடந்துள்ளது. உடனடியாக ஐந்தாம் நாள் அதிகாலையிலேயே டில்லிக்கு செய்திகள் வந்துவிட்டன. டில்லி அதிகார மையம் ,சென்னை அதிகார மையத்தை தொடர்ப்பு கொண்டுள்ளது. இரண்டு அதிகார மையங்களுக்குள் விவாதம் நடந்துள்ளது. ஆலோசனைகள் பரிமாறப்பட்டுள்ளன.

வருகிற பதின்மூன்றாம் நாள் தேர்தல் நாள் என்பதால் இந்த படுகொலைகளை தற்போதைக்கு மறைத்து விடுவது என்று அதிகார மையங்கள் முடிவு செய்துள்ளன. இதுபோன்ற மறைப்பது, திசை திருப்புவது போன்ற செயல்களில் திறமை கொண்ட ஜாபர் சேட் இடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. அதன் பிறகே நான்கு இறந்து போன மீனவர்களுக்கும் ஆளுக்கு, தலா ஐந்து லட்சம் தமிழக அரசு தானம் செய்துள்ளது. அதுகூட வழக்கமாக இறந்தவர்களுக்கு ஏழு ஆண்டு முடிந்த பின்புதான் நிதி வழங்குவது வழக்கம். இப்போது மட்டும் ஏன் எட்டே நாட்களுக்குள் வழங்கவ்ண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலை கணக்கில் கொண்டு என்று சொன்னாலும், கடைசி பிணம் கிடைக்காத நிலையில் எப்படி அர்சுக்குமட்டும், காணாமல்போன மீனவர்கள் சிங்கள அரசின் கைகளால் கொல்லப்பட்டது தேரோயும்? என்ற கேள்விக்கு விடையில்லை.

அப்படியானால் ஐந்து மீனவர்களும். கொலை செய்யப்பட்டார்கள் என்ற செய்தி ஐந்தாம் நாள் காலையிலேயே மத்திய-மாநில அரசுகளுக்கு தெரிந்து விட்டது என்பது புரிகிறது. அதற்கு எண்ண செய்யலாம் என்ற் விவாதத்தில் இரண்டு நாட்களை கலைஞர் ஓடவிட்டார். அதன் பிறகே இப்போதைக்கு தேர்தல் நேரத்தில், மரணம் அடைந்தவர் வீடுகளுக்கு பணம் கொடுப்பது என்று முடிவாகிறது. மீனவர் படுகொலைகளை முன்கூட்டியே தெரிந்திருந்தும் மக்களிடம் உண்மையை சொல்லாமல் இருந்த கலைஞரும் குற்றவாளிதானே என்று மீனவர்கள் கேட்கிறார்கள்.

கொலை குற்றத்தை ராஜபக்சே மீதும், அதை மூடி மறைத்த குற்றத்தை கலைஞர் மேலும், சோனியா மேலும் போடவேண்டும் என்று இன்று மீனவர் தலைவர்களான, ரூபேஷ், தயாளன், கபடி-மாறன் ஆகியோருடன் பத்து மீனவர்கள் அகில இந்திய வானொலி நிலையம் முன்பு பட்டினி போராட்டம் இருந்தார்கள். அவர்களை ஆரசின் காவல்துறை கைது செய்தது.

Monday, April 18, 2011

மீனவர்களை கொன்ற சிங்கள கடல்படை..?

அப்ரப் இரண்டாம் நாள் வழமையாக கடலுக்கு செல்லும் அரநூற்றுக்கு மேற்பட்ட படகுகள் ராமேஸ்வரம் கரையிலிருந்து புறப்பட்டு மீன் பிடிக்க கடலுக்கு சென்றன. அதை வழமையாக சிங்கள கடல்படையினர் பிடிப்பது போல இப்போதுனம் பிடித்தனர். இப்போது அவர்களிடம் நல்ல முறையில் உரையாடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று பிடிபட்ட மீனவர்கள் கைபேசியில் சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் பேசியிருக்கிறார்கள். அடுத்தநாள் மூன்றாம் நாள் அன்று இந்திய-இலங்கை மட்டைபந்து விளையாட்டு சூடு பிடிக்கிறது. அப்போதுவரை இலங்கை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் சிங்க படையினர் இருக்கிறார்கள்.

இலங்கை தோற்றால் உங்களுக்கு இருக்கு என்று அந்த நான்கு இந்திய மீனவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். பிடிபட்ட நால்வரும் மட்டை பந்து ஆட்ட உலக கோப்பை விளையாட்டில் இந்தியா வெற்றி பெற கூடாது என்று இறைவனிடம் வேண்டிகொள்கின்றனர். விளையாட்டில் யார் வெற்றி பெற்றால் எண்ண, தங்களது உயிர் போய்விட கூடாது என்பதில், இந்திய மீனவர்கள் உறுதியாக இருந்தனர். அதேபோல எப்போதெல்லாம் இந்தியா-இலங்கை மட்டை பந்து நடக்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டு கரையோரம் இருக்கின்ற கடலாளிகள் ஆண்டவரை வேண்டிக்கொள்கின்றனர். அதில் இந்தியா விளையாட்டில் வெற்றி பெற கூடாது என்று வேண்டுதல் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த முறை கடலுக்கு சென்று இலங்கையிடம் மாட்டிக்கொண்ட மீனவர்கள் நாலு பெறும், நன்றாக நீச்சல் அடிக்க தெரிந்தவர்கள்.அப்படஈருக்கும் போது எப்படி அவர்கள் ஒவ்வொருவராக கடலில் மூழ்கி மரணம் அடைய முடியும்? என்ற் கேள்வி எழுந்துள்ளது. முதல் சடலம் விட்சனுடையது அது நெடுந்தீவு அருகே இலங்கையின் வடக்கு பகுதியில் வருகிறது. அந்த உடலில் விரல் நகங்களால் நிறைய கீறல்கள் விழுந்துள்ளன. உடலெங்கும் விடுபட்ட தடங்கள் பதிந்துள்ளன. ஒவ்வொரு மீனவர் உடலங்களும் அடிபட்ட தழும்புகளுடன் மட்டுமே கிடைக்கிறது.கடைச்யாக கிடைத்துள்ள சடலத்தில் தலை இல்லை என்பது பகிரங்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதை எதிர்க்க இன்னமும் தமிழர்களுக்கு உணர்ச்சி வரவில்லை என்ற சூழலில், ஒருவர் அதையே தனது அரசியலுக்கு பயன்படுத்துகிறார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு இதை ஒரு பிரபலமான முறையில் பேர் வாங்க செயது விட்டார். அவர் மக்களை கூட்டி இலங்கை தூதரகத்தை முற்றுகை இட்டுள்ளார். ஆகையினால் தமிழர்களே சிங்களவன் தமழ் மீனவனின் கையை, காலை, தலையை வெட்டி கடலில் போடுகிறான். தமிழன் உணர்ச்சியற்று இருக்கிறான். இதுதான் தமிழ்நாடு உலகுக்கு சொல்லும் செய்தியா? தேர்தல் பரப்புரைக்காக சென்னைக்கு சோனியா வந்தபோது, அந்த தீவுத்திடல் மேடையிலேயே, கலைஞர் சோனியாவிடம் மீனவர்கள் உரிம்மைக்காக கூட அல்ல, அவர்களது உயிருக்காக போராடுகிறார்கள் என்று சொல்ல, உடனே சோனியா, " இனி ஒரு துப்பாக்கி சூடு கூட நடக்காது" என்று உறுதி கூறினார், அவர்கள் எண்ண, " இனி சுடாதே. வெட்டி கொன்றுவிடு" என்று மறைமுகமாக கூறிவிட்டார்களா? அப்படியானால் சோனியாவும், கருணாநிதியும் இந்த நாலு மீனவர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் அல்லவா?

Sunday, April 17, 2011

உளவு துறை செய்தியால் அடிப்போனாரா கலைஞர்?

வாக்கு பதிவு முடிந்துவிட்டது. ஒரு மாதம் கஹித்துதான் வாக்கு எண்ணிக்கை நடக்க போகிறது. அதற்குள் அவசரப்பட்ட முதல்வர் உளவு துறை மூலம் சரியான முறையில் விழுந்த வாக்குகளை எண்ண பணித்தாராம். தொகுதி, தொகுதியாக வெற்றிபெற இருப்பவர்களை பட்டியலிட சொன்னாராம். அவர்களும் கணக்கெடுத்து கலைஞர் மனம் கோணாத அளவில் அவரிடம் கணக்கு சொல்லவேண்டுமே என்பதற்காக ," அய்யா, தங்கள் கூட்டணிக்கு தொண்ணூறு தொகுதி வரை வெற்றி பெற வாய்ப்பி உள்ளது அய்யா" என்றார்களாம். அதற்கே ஆடிப்போய் விட்டாராம் திமுக தலைவர். பெரிய கட்சிகளை தவிர தனி சுயேச்சை சின்னங்களில் நின்ற வேட்பாளர்களில் வெற்றி பெறுபவர்களிடம் பேசலாமில்லையா என்று தலைவர் வினவினாராம்.இதை தங்களுக்குள் அசை போடும் காவல் அதிகாரிகள் தாங்கள் முதலில் அவரிடம் சொன்ன எண்ணிக்கையே மிகைப்படுத்தல் என்ற உண்மையை யாரிடமும் சொல்லவில்லை.

அதேபோல சிதம்பரம் அய்யா தனது உள்துறை மூலம் தமிழ்நாட்டு நிலைமையை கேட்டாராம். அவருக்கும் அவர்கள் இதேபோல, அதிமுக கூட்டணி 130 முதல் 140 வரை வரும் என்று கூறினார்களாம். அதுவும் குறைத்து கூறிய கணக்குதான் என சிதம்பரம் அய்யாவுக்கு தெரியுமா என்று நமக்கு தெரியாது. இந்த மாநில, மத்திய உளவு துறைகள் சொன்ன கணக்கிலேயே இப்படி திணறும் அய்யாமார்கள் முழு தீர்ப்பு வந்தவுடன் எண்ண செய்ய போகிறார்கள்?

Saturday, April 16, 2011

ஐ.நா.வின் இலங்கை போர்குற்ற அறிக்கையில் புலிகளை குறை சொல்வது நியாயமா?

ஐ.நா.மகிந்தா அரசின் மனித உரிமை மீறல்களை, தனது நிபுணர் குழு அறிக்கை மூலம் கடுமையாக கண்டித்துள்ளது. அதில் அனைத்து நாட்டு மனித உரிமை தரங்களுக்கு கட்டுப்படாத இலங்கை என்பதை தெளிவாகவே சுட்டி காட்டுகிறார்கள். போது மக்களை போர் நேரத்தில் பாதுகாக்காத, அவர்கள் மீது குண்டுமழை பொழிந்த , போது மருத்துவமனைகளை தாக்கிய, மருந்துகளை மக்களுக்கு போகவிடாமல் தடுத்த, அனைத்து நாட்டு செஞ்சிலுவை சங்கம், ஐ.நா.வின் உதவி அமைப்புகள் ஆகியவற்றை செயல்பட விடாத, ஊடக சுதந்திரத்தை அனுமதிக்காத இலங்கை அரசின் கொடூரங்களை வரிசையாக அதில் பட்டியலிட்டுள்ளது. அதனால்தான் கோத்தபாயேவால் அந்த அறிககையை ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதேசமயம் இருபுறம் உள்ள படைகளையும் குற்றம் சொன்னால்தான் தங்கள் அறிக்கை இருக்கும் சிக்கலான சூழலில் எடுபடும் என்று அந்த நிபுணர்கள் எண்ணினார்களோ என்னவோ. அவர்கள் புலிகள் பக்கத்திலும் மீறல்கள் நடந்ததாக சிலவற்றை பட்டியலிடுகிறார்கள்.

அதில் தமிழ் மக்களை பதுங்கு குழிகள் தோண்ட நிர்ப்பந்தப் படுத்தியது, சிறுவர் உட்பட அனிவரையும் ஆயுதபாணியாக்கியது போன்ற குற்றச்சாட்டுக்கள் போர் நேரத்தில் நடக்கின்ற சாதாரண நிகழ்வுகள் என்ற புரிதல் அந்த நிபுணர்களுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களை கேடயமாக புலிகள் பாவித்தார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு நாம் பதில் சொல்லித்தான் ஆகவேணும். அங்கே அந்த அறிக்கையின்படியே அரசியல் தீர்வை உருவாக்க எந்த முயர்ச்சியும் செய்யாத இலங்கை அரசு, வன்னியில் போரை நடத்தி, அப்பாவி மக்கள் மீது விமான குண்டு வீச்சை நடத்தியது என்கிறார்கள்.தேசிய இனங்களுக்குள் இப்படி ஒரு போர் நடக்கும் சூழலில், கிழக்கிலிருந்து தனது படையை புலிகள் திரும்ப அழைத்த போதிலிருந்து அவர்கள் ஒரு தற்காப்பு போரைத்தான் நாத்தி வந்தார்கள். அப்போது மன்னார் மாவட்டத்தில் பேசாலை தேவாலய தாக்குதல் உட்பட, அப்பாவி பொதுமக்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதலால் மிரண்டுபோன தமிழ்மக்கள் கொத்து,கொத்தாக ஓடிபோய், தமிழர் படையுடன் உள்ள விடுதலை பகுதிக்குத்தான் செல்வார்கள். ஏன் என்றால் அது ஒரு இன ரீதியான போர். அதனால்தான் னைவரும் பாதுகாப்பு தேசி கிளிநொச்சி சென்றார்கள்.

மேகண்ட உண்மையை நாம்தான் உலகிற்கு எடுத்து சொல்லவேண்டும். அதனால் விடுதலை புலிகள் மக்களை கேடயமாக பாவிக்கவில்லை. மக்கள்தான் விடுதலை புளிகளிடம் அடைக்கலம் தேடினார்கள். அதாவது மக்கள்தான் புலிகளை தங்களுக்கான கேடயமாக பாவித்தார்கள்.நான் ஒவ்வொரு நாள் போர் நிகழ்வையும் காட்சி ஊடகம் மூலம் விவரித்து வந்தவன். அந்த 2008 அக்டோபர் முதல் 2009 மே வரை ஒவ்வொரு நாளும் என் நினைவுகளில் பதிந்து இப்போது நினைவுக்கு வருகின்றன.அதனால் அந்த இரண்டு லட்சம் உள்நாட்டு இடம் பெயர்ந்த தமிழர்களையும் சிங்கள ராணுவம் துரத்தியதால் அவர்கள் கிளிநொச்சிக்கு வந்ததும், பிறகு துரத்தியதால் மூன்றரை லட்சம் தமிழர்களும் முல்லைத்தீவுக்கு வந்ததும் பசுமரத்தாணி போல நினைவில் பதிந்துள்ளன. ஆகவே போரில் பின்னடைவு என்பதற்காக புலிகளை குறை சொல்ல நாம் அனுமதிக்க முடியாது.

Friday, April 15, 2011

பணம் கொடுத்தும், திருப்பி அடிக்கிறானே?

அய்யா. திமுக பணம் கொடுத்தது உய்னமைதான். அதை திமுககாரர்களே ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் வாதம் இப்போது வேறு. அதாவது தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு வெளிவந்த கருத்து கணிப்பில் எல்லாம் எங்கள் திமுக தோற்கும் என்று வந்தது உண்மைதான். ஆனால் நாங்கள் அதற்குபிறகு அனேகமாக எல்லா இடங்களிலும் பணம் கொடுத்துள்ளோமே? பணம் வாங்கியவர்கள் எப்படி எங்களுக்கு போடாமல் இருப்பார்கள்? இதுதான் இப்போது திமுகவின் வாதம்.

இன்னும் ஒருமாதம் இருக்கிறது வாக்கு எண்ணிக்கை நடக்க. அதற்குள் திமுக தோற்கும் என்ற நிலையை அவர்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்த தயாரில்லை. அல்லது அப்படி ஒப்புக்கொள்ள தயாரில்லை. அதற்காக சில தர்க்க வாதங்களை கிளப்பி விடுகிறார்கள். அதில் இதுவும் ஒன்று. திமுக செய்த நல்வாழ்வு திட்டங்களுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என்கிறார்கள். அது என்ன நல்வாழ்வு திட்டம் என்று கேட்டால், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்கிறார்கள். அதுமட்டுமல்ல கலைஞட் காப்பீட்டு கழகம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல வண்ண தொலைக் காட்சி என்கிறார்கள். எழுபாதயிரம் ரூபாய்க்கு வீடு கட்டி கொடுத்து, குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றியமை என்கிறார்கள். இவைகள் எல்லாமே உண்மைதான். இவற்றிற்கு ஒரு பிரிவினர் அதாவது அதனால் லாபம் பெற்றோர் அதாவது வறுமையின் எல்லைகூட்டிற்கு கீழே உள்ளவர்களில் ஒரு பிரிவினர் வாக்கு போட்டிருக்க கூடும் என்பது உண்மைதான்.

ஆனால் அதுமட்டுமே இன்று தேர்தலை தீர்மாநித்திருக்குமா? நாங்கள் கொடுத்த பணத்திற்கு நன்றி காட்டமாட்டார்களா? என்று வினவுகிறார்கள். அதனால்தான் வாக்கு பதிவு இதுவரை இல்லாத அளவில் வரலாற்று காணாத அளவில் 77 விழுக்காட்டை தாண்டுகிறது என்கிறார்கள். புதிதாக வாக்காளர்களாக சேர்ந்துள்ள என்பது லட்சம் இளைஞர்கள் எங்கே போட்டிருப்பார்கள்? என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. உங்கள் தலைமை கொடுத்த பணம் முழுவதும் மக்களுக்கு பொய் சேர்ந்தததா? எவ்ன்றால் அவர்களிடமிருந்து பதில் இல்லை.

திமுக தொண்டர்கள் திமுக தலைமைக்கு முன்பு போல விசவாசமாக இருக்கிறார்களா? என்றால் பதில் இல்லை. அதனால் கொடுத்தனுப்பிய பணமும் முழுமையாக மக்களிடம் போயசெரவில்லை என்றால் அதற்கும் பதில் இல்லை. இலவசம் மற்றும் பணம் பற்றி மட்டுமே தேர்தலை சிந்திக்கிறார்கள். வழமையான அரசு எதிர்ப்பு உணர்வு பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. ஏறிவரும் விலைவாசி பாத்தித்த்டிருக்குமா என்றால் தெரிவதில்லை. எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள குறைகளை அதாவது அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளை பற்றி மட்டுமே சிந்த்த்டித்து வரும் ஹிமுக தொண்டரால் இன்றும் புரியப்போவது இல்லை.

பணம் கொடுத்தவர்களால பணம் வாங்கியவர்களின் வாக்குகளை பிசிறில்லாமல் உதய சூரியனுக்கு போடவைக்க முடியுமா என்றால் திமுக தொண்டர்கள் முழிக்கிறார்கள். சென்னையில் தொண்ணூறாம் வட்டத்தில் நாட்டும் பகுதி செயலாளர் காமராஜ் ஹான்கள் கொடுத்த பணம் பெற்றவர்கள் சரியாக போடுகிரரகளா? என்று சோதிக்க வாக்கு அளிக்கும் இடத்திலேயே ஆள் போட்டிருந்தார். அவர்கள் கூட 9000 வாக்குகளில் 6000 வாக்குகள் தான் பெறமுடிந்தது என்கிறார்கள். பென்னாகரம் இடைதேர்தலில் பணம் வாங்கியவர்களில் பாதி பேர்தான் வாக்களித்தார்கள் என்பது திமுக கணக்கு. அப்படியானால் இந்த போது தேர்தலில் எத்தனை பணம் வாங்கியவர்கள் வாக்களித்தார்கள் என்பது ஒரு சிறிய கணக்கு. அந்த கணக்கையும் எடுத்து பார்த்து நாம் சிந்திக்க வேண்டும்.

Thursday, April 14, 2011

ரஜினிகாந்த் ஏன் குழம்புகிறார்?

ஏப்ரல் பதிமூன்றில் வாக்களித்த திரையுலகினர் அனைவருமே வெளியே வந்து ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக மறைமுக வார்த்தைகளில் சொன்னார்கள். அதில் நடிகர் சூரியாவும், விஜய்யும் அடக்கம்.ஆனால் ரஜினி மட்டும் மாட்டிக்கொண்டார். ஏற்கனவே ரஜினியை மு.க.ஸ்டாலின் சென்று பார்த்தார். பிறகு அவரை எதிர்த்து நிற்கும் சைதை.துரைசாமியும் போபி பார்த்தார். அதனால் ரஜினி யாருக்கு ஆதரவு என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ரஜினிக்கு தமிழ்நாட்டில் அதிகமாக வாக்குகள் இருப்பதாக ஒரு மாயை நிலவி வருகிறது. ரஜினி குரல் கொடுக்கப்போகிறார் என்று இரு தரப்பும் கூறி வந்தனர்.

கலைஞருக்கு ஏற்பாடு செய்யப்ப்பட்ட ஒரு திரை உலக விழாவில் நடிகர் அஜித் திமுகவின் அடாவடி தனத்தை எதிர்த்து பேசிவிட்டார். கலைஞர் முன்னிலையில் அந்த பேச்சை ரஜினி எழுந்து நின்று கைதட்டி வரவேற்று விட்டார். அதன் பிறகுதான் திரை உலகினர் கலாநிதி-தயாநிதி குடும்பத்திடம் படும் பாடு வெளியே தெரிய தொடங்கியது. பிறகு விஜய் அவர்களிடம் பட்ட பாடு எஸ்.எ.சந்திரசேகர் மூலம் வெளியே வந்தது.இத்தகைய நிலையில் திரை கலைஞர்கள் எல்லோருமே எதிர்ப்பு உணர்வில் இருக்கிறார்கள் என்ற கருத்து மிகை அல்ல. நேரடியாக காங்கிரசை எத்ரிகிறேன் என்று கூறிவிட்டு, திமுகவையும் எத்ரித்து சீமான் ஊர், ஊராக பேச எவண்டி வந்தது. அப்போது நான் மட்டுமல்ல, திரை உக்லகமே இந்த ஆளும் குடும்பத்திற்கு எதிராகத்தான் உள்ளது என்றும், அவர்கள் அனைவரும் பின்னாலிருந்து தன்னை உற்ச்சாகப்படுத்தி வருவதாகவும் அவர் கூறிவிட்டார்.

இப்போது ரஜினி வாகளித்டு விட்டு வெளியே வந்தார். ஊடகத்தாரிடம் பேசினார். விலைவாசி உயர்வு மக்களை வாக்களிக்கவைத்துவிட்டது என்றார். யார்க்கு என்று கூறவில்லை. அது தேவையுமில்லை. ஊழலை எத்ரிக்கும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு என்றார். அதில் பொய் கலந்து கொள்ள விரும்பினேன் என்றார்.உடல் சரியில்லாததால் செல்லவில்லை என்றார். எதையோ அதன்மூலம் சொல்லவந்தார்.தமிழ்நாட்டில் உள்ள ஊழல் என்ற கேள்விக்கு அது வேண்டாம் என்று கூறிவிட்டார். கருத்தை வெளிப்படையாக சொல்ல தயக்கம் என்பதை வெளிப்படுத்தினார். விவாசாயிகள் நலனுக்கான அரசு வரவேண்டும் என்றார். அதன்பிறகு அவரது வாக்கு போட்ட படம் ஊடகங்களில் வெளிவந்தது. அதில் இரட்டை இலைக்கு போட்டதுபோல படம் இருந்தது.மதியமே காட்சி ஊடகங்கள் ரஜினியின் நேர்காணலை வெளியிட்டன. அதுவே இரண்டு விழுக்காடு வாக்குகளை திமுகவிற்கு எதிராக திருப்பி விட்டதாக கூறுவோரும் உண்டு.

அதற்கு விளக்கம் சொல்ல நிர்பந்தம் வந்தது. மாலையில் ,கலிஞர் எழுதிய,"பொன்னர் சங்கர்" படம் முன் திரையிடல் நடந்தது. ரஜினி அழைக்கப்பட்டார். முதல்வரின் அழைப்பு என்பது புரிந்த்து. அங்கு சென்ற ரஜினி முதல்வரின் உதவியாளர்களிடம் பேசினார். ஊடகங்கள் திரும்ப திரும்ப வாக்களிப்பதை படம் பிடிக்க வேண்டி கையை மின்னணு இயந்திரத்தில் வைக்க சொன்னார்கள் என்றும், அது தவறாக இரட்டை இலையில் உள்ள வளர்மதி பெயர் முன் சென்ற போது படம் எடுத்து விட்டனர் என்றும் ஊடகங்கள் மீது பழியை போட்டு தப்பித்தார். இந்த அளவு பொய் சொல்லித்தான் தம்ழ்நாட்டு ஆள்வோரிடம் ரஜினியே தப்பிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.?.

தங்கபாலு முகமா? முகமூடியா?

ஜெயந்தி தங்கபாலு, அதாவது தங்கபாலுவின் மனைவி தன்னிடம் தயாள சீட்டு இருந்தாலும் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி,வாக்கு சாவடி முன்பே ஊடகங்களிடம் கடுமையாக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஏன் அவரது பெயர் விடுபட்டது? எப்படி விடுபட்டது? தங்கபாலு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருப்பவர். அவரது மனைவி சாதாரண குடும்ப பெண் என்பதல்ல. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையிலிருந்து முடிவு செய்யப்ப்பட்ட வேட்பாளர் பட்டியலில், சென்னையில் மயிலாப்பூர் என்ற பிரபல தொகுதிக்காக கட்சி மேலிடத்தால் நியமிக்கப்பட்டவர். அந்த தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியில் பலர் வேட்பாளராக முயற்சித்தனர். முன்னாள் சட்ட மன்ற உறப்பினர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் வாசன் கோஷ்டியில் சேர்ந்து ம்ய்லாவ்ரே வேட்பாளராக முயற்சித்தார். சிதம்பரம் கோஷ்டியில் சேர்ந்த கராத்தே தியாகராஜன் தனக்கு தான் மயிலாப்பூர் தொகுதி வந்து சேரும் என்று சிதம்பரத்தை நம்பி எதிர்பார்த்திருந்தார். அதற்கான வேலைகளையும் செய்ய தொடங்கிவிட்டார். ஆர்.வெங்கட்ராமன் என்ற முன்னாள் குடியரசு தலைவரின் பேத்தி தங்களது பாரம்பர்ய இடமான மயிலாப்பூர் தொகுதியை ராகுல் மூலம் கேட்டாராம். கொட்டிவாக்கம் ரவி என்பவர் தான் மீனவர் என்பதால் இந்த தொகுதியில் அதிகமாக உள்ள மீனவர்கலஹு பிரதிநிதியாக தனக்கு தொகுதியை ஒதுக்கவேண்டும் என்று ராகுலிடம் கேட்டிருந்தாராம்.

மேற்கண்ட அனைவருக்கும் பட்டை நாமம் போட்டுவிட்டு தனக்கு வேண்டிய குலாம் நபி ஆசாத் மூலம் தனது மனைவிக்கு இந்த தொகுதியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலு வாங்கினாராம். அதுவும் கூட தங்கபளுவிற்கு வாங்க முடியாது காங்கிரஸ் கட்சியின் புரிதல்படி மாநில தலைவர் மாநிலம் எங்கும் இறங்கி தேர்தல் பணி செய்யவேண்டும் என்றும் அதனால் தங்கபாலுவின் மனைவிக்கு தொகுதியை ஒதுக்கி கொடுங்கள் என்ற வரத்து வேண்டுகோள் ஆசாத் மூலமாக அகில இந்திய தலைமையிடம் எடுபட்டது என்றும் கூறினார்கள்.
அவ்வாறு ஜெயந்தி தங்கபாலு காங்கிரஸ் வேட்பாளராக ம்ய்லபோருக்கு அறிவிக்கப்பட்டவுடன், அதுவரை தன்னை வேட்பாளராக அர்விப்பார்கள் என்று எதிர்பார்த்த கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களிடம் குமுற, அவர்கள் நான்கு நாட்களுக்கு தங்கபாலுவின் வீடு, காங்கிரஸ் கட்சியின்
தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவன் ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் கூடி ஆர்ப்பாட்டமும், தங்கபாலு கொடும்பை எரிப்பும் செய்தனர். அத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவரான மங்கள்ராஜ் அறிவிக்கப்பட்ட காங்கிரசின் அதிகாரபூர்வமான வேட்பாளர் ஜெயந்தி தங்கபளுவிர்காக பணியாற்ற தொடங்கினார். இவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்தவர்.ஆனாலும் தங்கபாலு கோஷ்டியின் வேட்பாளருக்காக இறங்கினார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வந்தது. ஜெயந்தி தங்கபாலு தனது வேட்புமனுவுடன் வட்டாட்சியர் அலுவலகம் வர, கராத்தே ஆட்கள் வெளியே கலவரம் செய்ய, மங்கள்ராஜ் கட்சி விசுவாசத்துடன் ஜெயந்திக்கான வேட்புமனுவிற்கு, சாட்சி கையெழுத்திட வந்து சேர்ந்தார். அப்போது ஜெயந்தி கொடுத்த வேட்புமனு பிரதிகள் வழமையாக கொடுக்க வேண்டிய நான்கு தாள்களாக இல்லாமல், இரண்டு தாள்கள்தான் இருந்தன என்று இப்போதும் மங்கள்ராஜ் கூறுகிறார்.அப்போது ஜெயந்தி கையெழுத்து போடாத ஒரு தாளில்கூட மங்கள்ராஜ் ஐத்து சொல்லி கையெழுத்து போடவைத்துளார். வழமையாக மாற்று வேட்பாளராக மாவட்ட தலைவர் மனு செய்வார் என்ற பழக்கப்படி மங்கள்ராஜ், தங்கபாளுவிடம் வினவ, அவர் நானே போட்டுவிடுகிரேனே மாற்று வேட்பாளராக என்று கூறியதை பெரிதாக அன்று எண்ணாமல் மங்கள்ராஜ் சரி என்று கூறிவிட்டார்.

ஆனால் பிறகு நடந்த கதை மன்கராஜை சிந்திக்க வைத்து விட்டது.ஜெயந்தி தங்கபாலு முன்வைத்த வேட்புமனு தாள்களில், முன்வைக்க வேண்டிய நான்கு தாள்களில் இரண்டை மட்டுமே முன்வைத்தார். அதனால் மார்ச் இருபத்தேழாம் நாள் இரவில் வட்டாட்சியர் அழைப்பு ஜெயந்தியிடம் ஒரு கைஎழ்குத்துடன் எதையோ அறிவ்த்தது என்கிறார் மங்கள்ராஜ். அதுதான் அடுத்த நாள் ஜெயந்தியின் வேட்புமனு செல்லுபடி ஆகவில்லை என்றும் மாற்று வேட்பாளரான தங்கபாலுவின் வேட்புமனு ஏற்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டது. அப்போதே இது ஒரு சதி என்றும் ஒரு குற்றவாளியான தங்கபாலுவிற்கு வேலை செய்ய முடியாது என்றும் மாவட்ட தலிவர் மங்கள்ராஜ் முடிவு செய்துள்ளார். அதை காரணமாக வைத்து இப்போது தேர்தலுக்கு மறுநாள், மாநில தலிவர் தங்கபாலு, சிதம்பரம் கோஷ்டியான கராத்தே தியாகராஜனையும், வாசன் கோஷ்டியான எஸ்.வி.சேகரையும், ஈ.வி.கே.எஸ்.இலன்கோவம் கோஷ்டியான மங்கள்ராஜ் அவர்களையும் கட்சியிலிருந்து மாநில தலிவர் தங்கபாலு விலக்கிவிட்டார்.

இப்போது மங்கள்ராஜ் கூறும்த்கவல்கள் அதிர்ச்சியாக இருகின்றன. 25 ---10 --2010 இல் வெளியிடப்பட்ட கடைசி வாக்காளர் பட்டியலில் தங்கபாலுவின் பெயரும், தங்கபாலு மனைவி ஜெயந்தி பெயரும் இல்லை என்கிறார் மங்கள்ராஜ். அதற்கு பிறகு தங்கபாலு பெயர் எப்படி சேர்க்கப்பட்டது என்று தெரியவில்லை என்கிறார்.இப்போது ஜெயந்தி பெயர் மட்டும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதும், தங்கபாலு பெயர் ஒருக்கிறது என்பதும் தங்கபாலுவிற்கு தெரியாமல் நடக்காது என்கிறார் அவர். அதன்மூலம் ஜெயந்திக்கு எதிராக, அதாவது தனது மனைவிக்கு எத்ரிராக தங்கபாலு செய்த சதி இதில் தெரிகிறது என்கயார் அவர். அது மட்டுமல்ல. தங்கபாலுவின் மகன், மகள் ஆகிய இருவர் பெயரும் இரண்டு இடங்களில், இரண்டு வேவீறு முகவரிகளில் இருக்கிறது என்றும் அவர் ஆதாரம் தருகிறார்.

தங்கபாலு மகள் இந்திரா பெயர் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியில் இருக்கிறது. ஒன்று பாகம் எண் 107 இல், வரிசை எண் 413 இல் இருக்கிறது. அதே முகவரியான 32 /12 கஸ்தூரிபாய் நகரில்,இரண்டாவது முக்கிய சாலையில், அந்த எண்ணையே 32 / A -12 என்ற முகவரியில் தங்கபாலுவின் மகனான கார்த்திக் பெயர் வரிசை எண் 447 இல் இருக்கிறது. அதேபோல இந்திரா பெயர் இன்னொரு முகவரியான கஸ்தூரிபாய் நகர் ஆறாவது முக்கிய சாலையில் 108 வது பாகத்தில், வரிசை எண் 604 இல் 12 / 16 என்ற வீட்டு என்னில் இருக்கிறது. அதே எண்ணில் 24 /120 என்ற முகவரியில் வரிசை எண் 644 இல் தங்கபாலுவின் மகன் கார்த்திக் பெயர் இருக்கிறது. அதாவது தங்கபாலுவின் மகனும், மகளும் இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் இறக்கிறார்கள். இதுவே பெரிய குற்றம். ஆனால் அவரது மனைவி பெயரை மட்டும் வாக்காளர் பாட்டிலில் இருந்து தங்கபாலு நீக்க வைத்துள்ளார். ஒருபுறம் அன்னை சோனியாவிற்கும் துரோகம், இன்னொரு புறம் தேர்தல் ஆணையத்திற்கும் துரோகம், அனைத்தியு விட தனது மனைவிக்கே துரோகம் செய்ஹ்டுள்ளார் எங்கள் மாநில தலைவர் என்று மங்கள்ராஜ் கொந்தளிக்கிறார்.

Monday, April 11, 2011

மின்தடை ஏற்படுத்தியவர்கள் கொள்ளைக்காரர்கள்- ஆதாரம் அம்பலம்.

.
தமிழ்நாடெங்கும் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மின் தடை என்பது ஒரு சாதாரண விசயமாக ஆகிவிட்டது. கிராமங்களில் விவசாயம் செய்ய மோட்டார் போட மின்சாரம் இல்லை. விவசாயத்தை நம்பி பிழைக்கும் மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் சிறு தொழில்கள் மின்தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. விசைத்தறிகள் ஓடவில்லை. தறித்தொழிலாளி பட்டினி கிடக்கிறான்.பல சிறு தொழில்கள் மின்தட்டுப்பாட்டினால் நசிந்து போய்விட்டன. பெரும் ஆலைகளுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக இந்த மின்வெட்டு மூலம் சிறு தொழில்களையும்,விவசா
யத்தையும் காவு கொடுத்தது கலைஞர் ஆட்சி என்ற அவப்பெயர் வந்துசேர்ந்தது.


அதற்கெல்லாம் பதில் சொல்கிறார் முதல்வர் கலைஞர் புதிய தொழிற்சாலைகளை தனது ஆட்சி திறந்ததால் , மின்சாரம் தடைப்பட்டது என்கிறார் அத்தகைய புதிய தேவைகளுக்கு மின்சாரம் உற்பத்தி ஏன் செய்துகொள்ளவில்லை என்று கேட்டோமானால், முந்திய அதிமுக ஆட்சியில் மின் உற்பத்திக்கான புதிய ஆலைகளை அமைக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் உண்மை என்ன என்று நாம் கண்டுபிடிக்கவேண்டியுள்ளது.


இப்போது கிடைத்திருக்கும் விவரங்களில் இருந்து, தனியார் ஆலைகளுக்கு அதிக கட்டணம் கொடுத்து, அதன்மூலம் மின்சாரம் பெற்ற தமிழ்நாடு மின்வாரியம் செய்த பிழைதான் மின்தடைக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. அரசு மாநிலத்தின் தேவைகளுக்கு ஒப்ப தனது மின் உற்பத்தியை பெருக்கி கொண்டிருந்தால்
இந்த மின்தடைக்கு வாய்ப்பில்லை. 1999 ஆம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில், தனியார் மின் உற்பத்தி ஆலைகளுக்கு வித்திடப்பட்டது. சென்னை பேசின் பிரிட்ஜில் இருந்த . .அரசு மின் உற்பத்தி ஆலையை தனியாரான ஜி.எம்.ஆர். என்ற நிறுவனத்துக்கு கருணாநிதி அரசு கொடுத்தது.அவர்கள் அன்றிலிருந்தே அடக்க செலவை அதிகமாக காட்டி, அதன்மூலம் மின்சாரத்தை ஒவ்வொரு யுனிட்டிற்கும் மிக அதிகமான விலை வைத்து தமிழ்நாடு மின்வாரியத்திற்கு விற்க தொடங்கினார்கள்.


பேசின் பிரிட்ஜின் ஜி.எம்.ஆர், தர்மபுரியின் சாமல்பட், மதுரை சமயநல்லூர் மின் ஆலை, திருவையாறு அருகே பிள்ளை பெருமாள் நல்லூர் அப்போல்லோ திட்டம் ஆகியவை அதிக விலைக்குமின்சாரத்தைமின்வாரியத்திற்குகொடுத்துவரத்தொடங்கின. அந்த ஆலைகளில் நாப்தா மூலம் மின் உற்பத்தியை மின்வாரியம் துரிதப்படுத்தியது. எப்போதெல்லாம் பெட்ரோலிய விலை கூடுகிறதோ அப்போதெல்லாம் நாப்தா விலை
கூடத்தொடங்கியது. அதை தனியார் ஆலைகள் வாங்கும் விலை பற்றி கணக்கு பார்க்க மின்வாரியத்திற்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. மின்சாரத்தை யூனிட்டிற்கு
மூன்று ரூபாய், மூன்றரை ரூபாய் என்று வாங்கி கொண்டிருந்த மின்வாரியம் இந்த தனியார்களிடம் ஒரு யூனிட் ஏழு ரூபாய்க்கு என்று வாங்க தொடங்கினார்கள்.


மத்திய அரசின் கையில் இருந்த பவர் டிரேடிங் கார்பொரேஷன் தனது பங்குகளை ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் தனியாருக்கு விற்று விட்டதால், அதுவும் தனியார் இலாபங்களுக்கான ஒரு கார்பரேஷனாக ஆகிவிட்டது. அந்த நிறுவனத்திடம் மின்சாரத்தை வாங்கும் தமிழ்நாடு மின்வாரியமும், ஒரு யூனிட் மின்சாரத்தை ஏழு ரூபாய் கொடுத்து வாங்க தொடங்கியது. இப்போது அந்த நிறுவனம் மூலம் மின் வாரியம் பெறும் மின்சாரத்திற்கு ஐந்து ரூபாய்,எழுபது பைசா கொடுக்கிறது. இந்த அதிக விலை போல, ஜி.எம்.ஆர் நிறுவனத்திடமிருந்து, 600 மெகாவாட் மின்சாரத்திற்கு, நமது மின்வாரியம் யூனிட்டிற்கு
ஒன்பது ரூபாய் கொடுத்து வருகிறது. இதன்விளைவாக இப்போது தமிழ்நாடு மின்வாரியம் 15000 கோடி நட்டம் அடைந்துள்ளது.41000 கோடி கடனில் உள்ளது.


ஏன் இந்த அவல நிலை? முந்திய ஆட்சியை கருணாநிதி குறை சொல்வது உண்மையா? 2002 ஆண்டு அதிமுக ஆட்சியில் த.நா.மின் வாரியமும், என்.டி.பி.சீ [நேஷனல் டிரேடிங் பவர் கார்பரேஷன்].யும் சேர்ந்து வடசென்னை மின்னுற்பத்தி நிலையம் ஒன்றிற்கான ஒப்பந்தம் போட்டார்களே? அதை பின்னால் வந்த கருணாநிதி ஆட்சி ஏன் நிறைவேற்ற வில்லை? அதேபோல 2004 ஆண்டு தூத்துக்குடியில் த .நா.மின் வாரியமும், நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனும் சேர்ந்து ஒரு மின் உற்பத்தி நிலையம் ஒப்பந்தம் போட்டார்களே, அதையும் கருணாநிதி ஆட்சி ஏன் நிறைவேற்ற வில்லை? இப்போது சென்ற ஆட்சியில் மின் உற்பத்திக்கான திட்டம் போடவில்லை என்று பொய் சொல்லும் கருணாநிதி இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?


புதிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கினாலும் மூன்று ஆண்டுகளுக்குள் அது உற்பத்தியை கொடுத்துவிடும். அப்படி தனது ஆட்சியில் ஐந்து ஆண்டுகளாக என் ஏற்படுத்தவில்லை? 2002 ஆண்டு ராமனாதபுரம் அருகே உள்ள வழுதூரில் , 200 மெகா வாட் உற்பத்தி செய்யும் ஒரு இயற்கை வாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலையை ஒ.என்.ஜி.சீ. மூலம் உருவாகினார்கள் அதை ஏன் கருணாநிதி ஆட்சி வெறும் நூறு மெகாவாட் மின் உற்பத்தியாக குறைத்து உற்பத்தி செய்கிறது? அதேபோல தஞ்சை குத்தாலம் அருகே 100 மெகாவாட் உற்பத்தி செய்யும் வாயு மூலம் மின் உற்பத்தி நிலையத்தை 2005 ஆண்டு ஏற்பாடு செய்தார்களே? அதை ஏன் உற்பத்தியே இல்லாமல் கருணாநிதி ஆட்சி முடக்கி போட்டுள்ளது?




மேற்கண்ட அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் எதிர்கால தேவைகளை கணக்கில் கொண்டு ஏற்பாடு செய்யப்ப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை முடக்கி போட்ட கருணாநிதி அதன்மூலம் அடைந்த லாபம் என்ன? மின்சார அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உதவியாளர் இளங்கோ, இதற்கெல்லாம் காரணமாக இருக்கிறார். அவர் ஒரு சாதாரண கிளார்க்காக மின் வாரியத்தில் பணியாற்றி வந்தவர். அவர் இப்போது ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார் என்று மின்வாரியத்தில் உள்ள அனைவரும் கூறுகின்றனர். அவர் இப்போது இந்த தேர்தலில் கருணாநிதி நிற்கின்ற திருவாரூருக்கு அருகே, நன்னிலத்தில் திமுக வேட்பாளராக நிற்கிறார. மின்சார அமைச்சருக்கு தேர்தல் வாய்ப்பு கொடுக்காத கருணாநிதி, ஏன் இந்த மின்சார அமைச்சரின் உதவியாளராக இருந்த இளங்கோவிற்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்? அந்த உதவியாளர் இளங்கோ இன்று புதிய சட்டமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள பிரியதர்ஷினி விடுதிக்கு சொந்தக்காரர் என்பதும் உண்மையா?


இந்த இளங்கோ தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி தமிழ்நாடு மின் வாரியம் நட்டமடைவதற்கு காரணமாக இருந்தவர். அதனாலேயே நமது மக்களுக்கு போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. அது மட்டுமின்றி தமிழ்நாடு மின்வாரியமும் பெருத்த நட்டத்தை சந்தித்து கொண்டு இருக்கிறது.ஒரு மாதத்திற்கு 1600 கோடி வருமானம் பெறும் மின் வாரியம், மாதம் 3000 கோடி செலவு செய்து கொண்டு இருக்கிறது.அதில் முக்கிய செலவு மின்சாரத்தை அதிக விலைக்கு தனியாரிடமிருந்து வாங்குவதால் தான். அப்படி வாங்கும் போது இளங்கோ பெற்று வரும் கமிஷன் தொகைக்காக அதில் பெரும பகுதியை முதல்வரின் பங்குக்கு போவதற்காக,தமிழ்நாட்டில் அரசே ஏற்பாடு செய்த மின் உற்பத்தி நிலையங்களையும் கிடப்பில் போட்டுவிட்டு, நட்ட கணக்கு காட்டி வருகிறது கருணாநிதி அரசு

Saturday, April 9, 2011

விஜயகாந்திற்கு விளம்பரம் தரும் சன் டிவி,,கலைஞர் டிவி?

விஜயகாந்த் சேர்ந்து விட்டதால், அதிமுக கூட்டணி வெற்றிபெற்றுவிடும் என்ற எண்ணம் திமுகவை பற்றிக் கொண்டுள்ளது. அதன்விளைவாக விஜயகாந்த்தை தரகுறைவாக விமர்சிக்க தொடங்கினார்கள். அடஹ்ர்காக வடிவேலுவை அம்ர்த்திவிட்டார்கள். பாவம். அவரும் இந்த ஆண்டில் வேறு படம் எதுவும் இல்லையே. இந்த தேர்தல் படத்தில் கற்றுக்கொடுத்த வசனத்தையே மீண்டும், மீண்டும் சொல்லுவோம் என்று விஜயகாந்த் விமர்சனத்தை தரக்குறைவாகவே செய்து வருகிரார. அந்த பேச்சுகளையும், அதேபோல விஜயகாந்த் ஒருவரை அடிப்பது போல பதிவான காட்சியையும் திரும்ப, திரும்ப போட்டால் அதன்மூலம் அவருக்கு உள்ள பொதுவான பெயர் கெட்டுப்போகும் என்பது திமுக தலைமையின் எண்ணம்.

ஆனால் நடந்தது என்ன? விஜயகாந்த் ஆதரவு வாக்குகள் யாருமே இதனால் பாதிக்கப்படவில்லை. மாறாக திமுக அதரவு சிந்தனையாளர்களே இதை பெரிதாக எண்ணி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வது எல்லா ஊரயுக்கும் போயசெரவில்லை. அப்படி தனது பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் அதிமுக அணிக்கு செய்யப்படுவது பற்றி எடுத்து சொல்ல விஜயகாந்திடம் எந்த ஊடக ஏற்பாடும் இல்லை. பெரிய ஊடகங்கள் திமுக சார்பாக இருப்பதால் விஜயகாந்திற்கு விளம்பரம் யாரும் கொடுப்பதில்லை.ஆனால் இந்த விஜயகாந்த் இழிவுபடுத்தல் ஏற்பாட்டை தி,முக வின் ஊடகங்களான சன் மற்றும் கலிஞர் டிவிக்கள் திரும்ப திரும்ப போடுவதால் அதுவே விஜயகாந்திற்கு விளம்பரமாக போய்விட்டது.

கோடி ரூபாய் செலவழித்தாலும் விஜயகாந்திற்கு இந்த அளவு விளம்பரம் கிடைக்காது. அதை செய்வதில் கலிஞர் தன்னையும் அறியாமல் தவறு செய்துவிட்டார். இப்போது விஜயகாந்த் ஒரு பெரும் சக்தி என்று திமுக வே ஊரெல்லாம் சொல்ல்வதுபோல ஆகிவிட்டது.

அன்னா ஹசாரே பின்னால் மக்கள் திரண்டதால்,........

ஊழலை எதிர்க்கும் அரசியல் ஆட்டத்தை ஊழலை எதிர்க்கும் மக்கள் பங்களிப்புடன் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு கிடைத்த வெற்றிதான், இன்று மத்திய அரசு இறங்கி வந்து வரைவு நகல் தயாரிப்பு குழுவில் பாதி விழுக்காடு மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கிறோம் என ஒப்புக்கொண்டது. அது காந்தியவாதி அண்ணாவிற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல அவருக்கு பின்னால் திரண்ட இந்திய மக்களது மாபெரும் வெற்றி. உலக கோப்பையை இந்தியா மட்டைப்பந்து ஆட்டத்தில் பெற்றதைவிட, காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் களவாண்ட அரசியல்வாதிகாய் கைது செய்வதற்கான ஒரு சட்டத்தை உருவாக்க வாய்ப்பு கிடைத்துள்ளது ஒரு பெரும் வெற்றிதான்.

அன்னா ஹசாரே நல்லவரா? கெட்டவரா? என்று பட்டிமன்றம் நடத்த சென்னையில் ஒரு ஹன்டேயும், மும்பையில் ஒரு சரத் பவரும் முயலலாம். ஆனால் இந்திய மக்களை பொறுத்தவரை நம்மை பொறுத்தவரை அவர் இப்போது எடுத்த கோரிக்கையும், அதை நிறைவேற்ற எடுத்த போராட்ட முறையும் பொதுமக்களை ஈர்த்தது: பல்லாயிரக்கணக்கில்,லட்சக்கணக்கில், பங்கு கொள்ள வைத்தது. போராட வைத்தது. இதே நிலை தொடருமானால் அடுத்து சிறை நிரப்பும் போராட்டம் என்றும், கைதுகளுக்கு அஞ்சவில்லை என்றும் நடுத்தர வர்க்கம் உட்பட அறிவித்து ஆனாவுடன் நின்றது ஆள்வோரை ஆட்டிவிட்டது.


நமது சென்னையில் கூட காந்தி சிலை அருகே இரவிலும் நூற்றுக்கணக்கில் கூடிய நடுத்தரவர்க்கத்தார் காவல் துறை கைது செய்வோம் ன்று பயமுறுத்திய போது, பயப்படாமல் கைதாக தயார் என்று கூறியதே அதுதான் ஒரு மக்கள் புரட்சிக்கான சூழல் கணிந்து உள்ளது என்பதை காட்டியது. அதுதான் ஆள்வோரை அஞ்ச வைத்து அடிபணிய செய்துள்ளது. எத்தனை நாள்தான் லிபியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் மக்கள் எழுச்சியை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது என்று நமது நடுத்தர வர்க்கம் எண்ணிவிட்டது போலும்.

மக்கள் சார்புடன், மக்கள் பங்களிப்புடன் ஒரு சட்டத்தை எழுதுவது என்பது சொல்வதற்கு எளிது. ஆனால் இன்றுதான் அதற்கு ஆள்வோறது அனுமதி கிடைத்துள்ளது. உச்சகட்ட ஊழலை இந்திய ஆள்வோர் செய்த பிறப்பது அதைகண்டு மக்கள் கோபம் கொண்டு கொத்தித்த பிற்பாடு இது நடந்துள்ளது. அவர்கள்தான் ஜெயபிரகாஷ் நாராயணனின் முழு புரட்சியின் வேகத்தை பார்த்தவர்கள் ஆயிற்றே?
அதனால் சாதுர்யமாக ஒரு மக்கள் புரட்சியை தவிர்த்திருக்கிறார்கள் என்றே தெரிகிறது.

Thursday, April 7, 2011

மீண்டும் தேசிய முன்னணி உருவாகிறதா?

கோவையில் அம்மையார் செல்வி.ஜெயலலிதா எதோ கருணாநிதி அரசை தூகிஎரிய சூளுரை விடுத்தார் என்று மட்டும் பார்க்கமுடியவில்லையே? அதற்காக எல்லா கட்சிகளையும் கொண்ட ஒரு மெகா கூட்டணியை அமைத்தார் என்று மட்டுமே சிந்திக்க முடியவில்லையே? தமிழ்நாட்டில் ஆட்சி மாட்ட்ரத்தை மாட்டுமே மனதில் வைத்து தேர்தலை சந்திக்கிறார் என்று எண்ணிப் பார்க்கமுடியவில்லையே? ஊழல் செய்கிறார் கருணாநிதி என்று மட்டுமே கொப்பப்படுவதாக தெரியவில்லையே? கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டத்தான் கொதித்தேழுந்துள்ளார் என்று எண்ணிப் பார்க்க முடியவில்லையே?

அதற்கு பதில் அல்லது அதையும் விட கூடுதலாக தமிழ்நாட்டை வீட்டு வெளியே பார்க்கும் பார்வையும் அல்லவா தெரிகிறது? எதோ இடதுசாரி கட்சிகளின் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்டதால் மட்டுமே இப்படி கூறுகிறேனா? இடதுசாரிகள்தான் அவரது கூட்டணியின் அங்கமாயிற்றே? அதில் சிபியின் தா.பாண்டியன் தவிர, டி.ராஜா தவிர, தமிழர் அல்லாத ஏ.பி.பரதனும், சி.பி.எம்.இன் ஜி.ராமகிருஷ்ணன் தவிர அகில இந்திய செயலாளர் பிரகாஷ் கரந்தும் கலந்து கொண்டதை வைத்து மட்டும் சொல்ல முடியுமா? அவர்கள் இருவருக்கும் கேரளாவில் இதே நேரம் சட்டமன்ற தேர்தல் நடப்பதால் இந்த வட்டாரத்தில்தான் சுற்ற வேண்டும் என்பதால் கோவை கூட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று சமாதானம் சொல்லிவிடலாம்.

அது நமது கலைஞருக்கும் பெரும் தலைவலியாக தோன்றாது. ஆனால் ஏன் கோவை அதிமுக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வந்தார். கோவையில் கொங்கு வேளாளர் வாக்குகளை அதிமுக அதிகமாக பெற்றாலும், ஒரு கொங்கு முன்னேற்ற கழகத்தை கலைஞர் வளைத்து போட்டிருப்பதால், என்னதான் கொங்கு இளைஞர் கழகத்தை அம்மா வளைத்து போட்டாலும் அந்த சமூக வாக்குகள் பிரிந்து எதிர்ப்புறம் போய்விடுமோ என்ற அச்சத்தில்தான், கொங்கு வாக்குகளுடன் நாயுடுக்கள் வாக்குகளும் வேண்டும் என்பதற்காக என்னதான் விஜயகாந்த் தன பக்கம் இருந்தாலும், வைகோ எத்ரிப்புரம் போய்விட்டாரே என்ற காரணத்திற்க்காக, சந்திரபாபு நாயுடு மூலம் அந்த தெலுங்கு வாக்குகளை பெறத்தான் செய்துள்ளார் என்று ஜெயலலிதாவின் தந்திரத்தை சுருக்கி பார்க்க முடியுமா?

இப்படி சுருக்கி தமிழ்நாட்டளவில் ஜெயலலிதாவின் சூத்திரத்தை பார்ப்பது ஒரு வகை பார்வை.அந்த பார்வைப்படி செல்வி.ஜெயலலிதா இந்த கோவை கூட்டத்தை வெறும் தமிழ்நாட்டு வெற்றிக்காக மட்டுமே நடத்தினார் என்றால், தேர்தலுக்கு பிறகு கிடைக்கும் தொகுதி எண்ணிக்கையை கணக்கில் வைத்து காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்வார் என்றே நினைக்க தோன்றும். இத்தகைய ஒரு கணக்கு எங்கும் இந்திய லவில்கூட பரப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் கோவை கூட்டம் இத்தகைய கணக்கிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.

கோவை கூட்டத்தில் பிரகாஷ் கரத் பேசும்போது, இது தமிழ்நாட்டிற்கு மட்டும் எதிர்பார்க்கும் தேர்தல் முடிவு அல்ல என்றும் அகில இந்திய ளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் பேசியதிலிருந்து மட்டும் நம் சிந்திக்கவில்லை. ஏன் என்றால் பிரகாஷ் கரத் இந்த கருத்தை ஒரு வாரமாகவே கூறிவருகிறார். அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க சந்திரபாபு நாயுடு பேசியது உண்மையில் யாரை எட்டவில்லை என்றாலும் அறிவாலயத்தின் தலைவருக்கு அத்ர்ச்சியாகவே இருக்கும். ஏன் என்றால் கருணாநிதிக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் எந்த ஒரு முரண்பாடும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை.

அப்படியானால் ஏன் அவர் அப்படி பேசவேண்டும்? திமுக காங்கிரசுடன் சேர்ந்து இருப்பதால் மட்டுமே எதிர் குரலாக அபப்டி பேசினார் என எடுத்துக் கொள்ளலாமா? ள்ளது அதற்கும் மேலே ஏதாவது அரசியல் இதில் இருக்கிறதா? சந்திரபாபு நாயுடுவிற்கு ஆகாத கட்சி, எதிரான கட்சி, காங்கிரஸ் கட்சிதான். அதனால் சந்திரபாபு நாயுடு வந்தது, கலந்து கொண்டது, பேசியது எல்லாமே காங்கிரஸ் எதிர்ப்பை அடிப்படையாக கொண்டதுதான். பக்கத்து ஆந்திராவில் காங்கிரஸ் எத்ரிப்பில் மட்டும்தான் நாயுடு நிற்கிறார்.ஆகவே இங்கே கோவையில் நடந்த அதிமுக கூட்டணி கூட்டம் அல்லது தமிழ்நாட்டு டேஹ்ர்தல் கூட்டணி வியூகம் காங்கிரஸ் எத்ரிப்பு நோக்கத்தை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது.

அதற்கு இங்குள்ள தேர்தலில் திமுக எதிர்ப்புதான் பேசவேண்டும். எப்போது சோனியா வருவது உறுதியானதோ, எப்போது கருணாநிதி எதிர்ப்பு என்று எல்லோரும் நம்பிய ராகுல் வருவது உறுதியானதோ, அதற்கு பிறகுதான் இந்த கோவை கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனால்தான் கடைசிநேரத்தில் அதிக கால அவகாசம் இல்லாமலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் கோவை கோட்டத்திற்கு வந்த தலிவர்களுக்கு நன்றி என்று ஜெயலலிதா அங்கெ பேசினார். சோனியாவும், ராகுலும் கருணாநிதியின் தேர்தல் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று எல்லோரும் சொல்லிவரும்போது அப்படி நடந்தாலும் லாபம்தான் என்று எண்ணியிருந்த ஜெயலலிதா, அவர்கள் இருவரும் வருவது உறுதியானவுடன் அவசர,அவசரமாக கோவையில் கூட்டணிகட்சி தலிவர்களின் கூட்டம் என்று அறிவித்தார். அதை பயன்படுத்தி ஒரு அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணியை கட்டுவதற்கான முஸ்தீபை தொடங்கி வைத்துள்ளார்.

இப்போது இந்த காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணியில் இடது சாரிகளும் இருப்பதால், அது ஒரு பிஜேபி எதிர்ப்பு முன்னணியாகவும் ஆகிவிட்டது. அதாவது காங்கிரசும் வேண்டாம், பிஜேபியும் வேண்டாம் என்ற அகில இந்திய அளவிலான முன்னணிக்கு விதை போட்டு விட்டது. அத்தகைய முன்னணி நிச்சயமாக இடதுசாரிகளையும், முஸ்லிம்களையும், கிருத்துவர்களையும் தன்னகத்தே இழுத்து கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படி ஒரு முன்னநிதானே விபிசிங்கால் தொடங்கப்பட்டது? அதற்கு பெயர் தேசிய முன்னணிதானே? அந்த முன்னணியை தொடங்கியது சென்னையில்தானே? அதற்கு கலைஞர்தானே அடிக்கல் நாட்டினார்? அந்த முன்னணி காங்கிரசை இந்தியாவிலிருந்து விரட்ட ஏற்பட்டதுதானே? அந்த காங்கிரசுடன் இப்போது கலைஞர் பிரிக்க முடியாத ஸ்பெக்ட்ரம் உறவுடன் கலந்து விட்டாரே?

அதனால்தான் அம்மையார் அந்த அரசியல் தந்திரத்தை கையில் எடுத்து விட்டாரா? காங்கிரஸ் கட்சி இன்று அகில இந்திய அளவில் காமன்வெல்த் விளையாட்டு ஊழல், கார்கில் வீரர்களுக்கு வீடு கட்டும் ஆதர்ஷ் ஊழல், ஐ.எஸ்.ஆர்.ஒ. ஊழல் என்று சஈக்யதொடு மட்டுமின்றி, திமுக என்ற பங்காளி மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழலிலும் சிக்கியுள்ளது என்பதால் நாடு தழுவிய ஒரு பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. அந்த எதிர்ப்பை பயன்படுத்தி மாற்று ஒன்றை ஏற்படுத்த வலு இல்லாத நிலையில்தான் பிஜேபி.யும் இருக்கிறது. அதனால் ஒரு சரியான மாற்று இந்திய நாட்டிற்கு தேவைப்படுகிறது.

அத்தகைய சூழலில்தான் இந்த புதிய முயற்சி செய்யப்படுகிறது. நீங்கள் அந்த ம்மையாரின் செயலுக்கு தேவையில்லாமல் வக்காலத்து வாங்க பார்கிறீர்கள் என்றும் சிலர் நம்மை கேலி செய்யலாம். அவர்கள் வரலாற்றை மறந்தவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஏன் என்றால் சல்வி.ஜெயலலிதா கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு முயற்ச்சியை செய்துவருகிறார்.அதுதான் அவர் அவ்வப்போது, சந்திரபாபு நாயுடு கட்சி தலைவர்களுடனும், சரத் யாதவ் போன்ற ஐக்கிய ஜனதா தலைவர்களுடனும், அஜித்சிங் போன்ற தலிவர்களுடனும் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள். அதாவது இந்த தலிவர்கள் போயஸ் தோட்டம் வந்திருந்து பேசினார்கள் என்பது முக்கியமான செய்தி.

ஆகவே இந்த மீண்டும் ஒரு தேசிய முன்னணி என்பது பகிரங்கமாக அறிவிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் அதை நுகர்ந்து கொள்ளும் சிறுபான்மை சமூகமும், இடது சாரி சிதனைகளும், மதச்ச்கார்பற்ற சக்திகளும், ஜெயலலிதா அம்மையார் அணிக்கு வாக்களிக்க முன்வருவார்கள். அதுவே இன்றைய ஊழல் எதிர்ப்பு அலைவரிசையில் முதலிடம் பிடிக்கும் என்றும் தெரிகிறது.

Tuesday, April 5, 2011

கலெக்டர் சஹாயத்தின் ஓட்டுனர் படுகொலை-எரிப்பு

சஹாயம் தொடர்ந்து நேர்மையாக செயல்படுகிறார். மேலூரில் ரகசியமாக கோவிலுக்குள் நுழைந்து அங்கேயே பணப்பாட்டுவாடா செய்தால் அதையும் பிடித்துவிடுகிறார். அங்கே முறைட்ட ஆர்.டி.ஒ. சுகுமாரனை வைத்து வழக்கு போடச்சொகிறார். தவறு செய்தால் வழக்கு போடுவது என்பது தேர்தல் ஆணைய சட்டமாக இருக்கலாம். ஆனால் மதுரையின் எழுதப்படாத சட்டம் என்ன என்று தெரிய வேண்டாமா? சுகுமாரனை வைத்தே திருப்பி அடிக்க செய்தோம். இப்படித்தான் அந்த மதுரை கூட்டம் சிந்திக்க முடியும். அடுத்து வட்டாட்சியர் காளிதாஸ் முதலில் குற்றச்சாட்டை கூறினார். தான் தாக்கப்பட்டதாக கூறினார். தாக்கியவர்கள் அழகிரி ஆட்கள் என்று ஊடகங்களிடம் முதலில் கூறியவர் கால்தாஸ். இப்போது தனக்கும், அழகிரிக்கும் எந்த மோதலும் இல்லை என்கிறார். அந்த அளவுக்கு அந்த காளிதாஸ் பயமுறுத்தப்பட்டுள்ளார் என்பது தெரிகிறது.

இப்போது சஹாயம் மதுரையில் இருபது லட்சத்தை திமுக பணப்பட்டுவாடா செய்யும்போது பிடித்து இருபத்திநாலு மணி நேரம் ஆகவில்லை. பணம் எடுத்து சென்றவர்கள் பற்றி விசாரணை நடைபெறுகிறது என்று வேறு சஹாயம் ஊடகங்களிடம் கூறியுள்ளார். அதனால் ஆத்திரம் வராதா வன்முறை கூட்டத்திற்கு? இப்போது சஹாயத்தின் வீட்டில் ஆயுத பாதுகாப்பு இல்லாத ஒரே ஆள் ஓட்டுனர்தான் என்று அடையாளம் கண்டு கொண்டார்களா? அவர் வெளியே தனித்து வரும்போது அதனாலேயே தாகப்பட்டுள்ளாரா? அவரது உடல் அதனால் தான் பாதி எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? இது பகிரங்கமாக கலெக்டரை மற்றும் நேர்மையான அதிகாரிகளை மிரட்டுவதற்கா?

Sunday, April 3, 2011

திமுக வழங்கிய அன்பளிப்பு, தீர்வாகுமா?.

நேற்று அதாவது ஏப்ரல் இரண்டாம் நாள் இரவு பத்தரை மணிக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக நிற்கும் அமைச்சர் தண்டராம்பெட்டை வேலு தனது ஆதரவாளர்கள் மூலம் தெர்தேருவில் வீடு வீடாக ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் அன்பளிப்பாக ஐநூறு ரூபாயை வழங்கியிருக்கிறார். இந்த பணபட்டுவாட எதிர்பார்த்த இரண்டாயிரம் அல்லது ஐந்தாயிரம் ரூபாய் காசை எட்டவில்லை என்பதால், இது வாக்குக்கு காசு கொடுக்கும் விதி மீறல் என்ற தவறில் சேருமா அல்லது சேராதா என்ற குழப்பம் வாக்காளர்கள் மத்தியில் உள்ளது. இது போன்ற வழங்கப்பட்ட அன்பளிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் என்ன பரிகாரம் செய்யும் என்பதும் நமக்கு விளங்கவில்லை.

இதற்கிடையே தேர்தல் ஆணையம் எடுத்துவரும் சட்டபூர்வமான நடவடிக்கைகளை ஆதரிக்கும் போக்கு அறிவுஜீவிகளிடமும், பி.யு.சீ.எல். போன்ற மனித உரிமை அமைப்புகளிடமும் இருப்பதால் மெல்ல, மெல்ல அத்தகைய ஆதரவும் டேஹ்ர்தல் ஆணையத்தை வலுப்படுத்திவிடுமா என்ற அச்சம் ஆளும் தரப்பில் இருப்பது தெரிகிறது. ஆனால் வருகிற ஏப்ரல் ஐந்தாம் நாள் சென்னைக்கு சோனியா காந்தி வருகை புரிந்து ஒரே மேடையில் கலைஞருடன் பேச இருப்பதால் அதற்கு பிறகு தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் திமுக மீது இப்போது இருப்பது போல இருக்காது என்ற எதிர்பார்ப்பில் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியை காங்கிரஸ் கட்சி வேண்டும் என்றேதான் அனுமதித்துள்ளது என்றும் அதன்மூலம் திமுக கூட்டணி தோல்வியை தழுவுவதை காங்கிரஸ் தலைமை விரும்புகிறது என்றும் டில்லியின் தகவல்கள் கூறுகின்றன.தமிழ்நாட்டு அரசு கையில் இருப்பதால்தான் திமுக தலைமை காங்கிரசை மத்தியில் மிரட்ட முடிகிறது என்றும், அதனால் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த திமுக பெட்டிப்பாம்பாக மத்திய ஆட்சிக்கு ஆதரவை கொடுத்துக்கொண்டு சும்மா இருக்கும் என்றும் அந்த டில்லி தகவல்கள் கூறுகின்றன. அதனால் க்ளன்கிராஸ் தலைமை சிபியை. வழக்கை ராஜா மீது குற்றப்பத்திரிகையுடன் போட்டதுபோல, இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தயாளு, கனிமொழி ஆகியோரையும் அடக்கி போட எத்தனிக்கிறது என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.இதை திமுக தலைமை எப்படி முறியடிக்க போகிறது?

Saturday, April 2, 2011

தேத்தல் அதிகாரிக்கு மக்கள் அமைப்புகள் ஆதரவு.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகளாக இருப்பார்கள். அந்த வகையில் சகாயம் என்ற நேர்மையான அதிகாரி மதுரை மாவட்டத்தின் தேர்தல் அதிகாரியாக உள்ளார். அவர் தேர்தல் ஆணையம் மேலிருந்து கூறியுள்ள அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று கண்டிப்பாக இருக்கிறார். அதாவது மதுரை என்பதால் அங்குள்ள குருநிலமன்னருக்கும், அவரைத் தொண்டரடிப்பொடி அடியாட்களுக்கும் பயப்படாமல் செயல்பட்டு வருகிறார்.

மதுரையில் தொடர்ந்து சக்கரவர்த்தி முதல்வர் குடும்பத்தின் மூத்த அரசர் சொல்படி நடக்கும் அராஜகங்களை கண்டு மனம் நொந்து இருக்கின்ற அமைப்புகளும், அறிவு ஜீயகளும் ஒரு பதினைந்து அமைப்புகள் இணைந்து இன்று காலை பி.யு.சீ.எல். என்ற மக்கள் சிவில் உரிமை கழகம் என்ற அகில இந்திய பிரபல மனித உரிமை அமைப்பின் முக்கிய பங்குடன் ஒரு முடிவு செய்துள்ளார்கள். தங்கள் மதுரைக்கு ஒரு நல்ல, நேர்மையான அதிகாரி இப்போதுதான் மாவட்ட ஆட்சியராக கிடைத்துள்ளார். அவரை நீக்க, அவரை இழிவு படுத்த ஆளும் கூட்டம் எடுக்கும் முயற்சிகளை எத்ரித்து தேர்தலை பயம் இன்றி நடத்த இதுபோன்ற நல்ல, நேர்மையான அதிகாரிகளை ஆடஹ்ரிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.பியுசியல் மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளி இதை தெரிவிக்கிறார்.

காங்கிரஸ் பணம் கொடுத்தால் தேர்தல் ஆணையம் பிடிக்காதா?

இன்று [ 02 -04 -2011 ] மாலை 6 -30 மணிக்கு காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊஞ்சனை கிராமத்தில் வைத்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கே.ஆர்.ராமசாமியின் மகன் கரு.மாணிக்கம் தலைமையில் வந்த மூன்று கார்கள் மூன்று லட்சம் ரூபாயுடன் பிடிபட்டன. அதை பாஜக வேட்பாளர் நேரில் பார்த்திருக்கிறார். உயர் மட்ட காவல்துறையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆனா அதற்குள் அந்த மாவட்டத்தில் சுற்றுலா செய்யும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதில் தலையிட்டு பிடிபட்டவர்களை விடுதலை செய்யவைத்துள்ளார்.

அதன்பிறகு தேர்தல் ஆணையம் ஊடகத்தாரிடம் புது கஹையை சொல்லியிருக்கிறார்கள். அந்த கதையில் ஒரு கார் பிடிபட்டதாகவும் அதில் துண்டுகள் மட்டுமே இருந்ததாகவும் அதில் வேட்பாளர் மகன் கரு.மாணிக்கம் இல்லை என்றும், பொய் செய்தியை கூறமுடியும் என்றால் சிதம்பரத்தின் தலையீடு எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் நேர்மையாக தேர்தல் நடத்தக்கூடாது என்பதில் இருக்கிறது என புரிய முடியும். ஏற்கனவே சிதம்பரம் இன்று சிவகங்கை மாவட்டத்தில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தில் ஒரு ஆலோசனையி ஊடகங்களுக்கு மிரட்டலுடன் கூறியுள்ளார். தேர்தல் என்றால் திருமண வீடு போல இருக்க வேண்டும் என்றும், அதில் திருவிழா களை கட்டவேண்டும் என்றும், சுவர் எழுத்து, சுவரொட்டி, கொடிகள் தோரணங்கள் ஆகியவற்றை தெர்தலானையம் தடுக்க கூடாது என்று கூறிவிட்டு, இந்த விசயத்தில் ஊடகங்கள் தேர்தல் ஆணையத்தை எத்ரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கே.ஆர்.ராமசாமி ஏற்கனவே ஊஞ்சனைகிராமத்தில் 1980 ஐந்து தலித் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு காரணமாக இருந்த கரிய.மாணிக்க அமபலத்தின் மகன். மற்றும் தொடர்ந்து "நாடு" என்ற பெயரில் சாதி ஆதிக்கத்தை அங்கு தலைமைதாங்கி வருபவர். அவருக்கு எப்போதும் உதவியாக இருக்கும் ஊஞ்சனை ராமசாமி என்பவர், தான் சைக்கள நடராஜனுக்கு நெருக்கம் என்று கூறி கொண்டு, அதேசமயம் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஆர்.ராமசாமிக்கு அனைத்து வேலைகளையும் செய்துவருபவர்.அதிமுக சார்பாக ஒரு கள்ளர் சமூகத்தினரான சோலை.பழநிச்ச்காமியை அங்கே நிருத்தியிருந்தும் கூட, இந்த ஊஞ்சனை ராமசாமி போன்றோர் கே.ஆர்.ராமசாமியையே தங்கள் சமூக தலைவராக பார்க்கிறார்கள்.

இப்போது திமுகவிற்கு பணப்பட்டுவாடா விசயத்தில் தடை செய்ய முயலும் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அதை செய்ய முற்படவில்லையே என்று திமுகவினர் கூட கேட்கிறார்கள். வருகிற ஐந்தாம் நாள் சோனியா வந்தபிறகு, ராகுலும் தமிழக தேர்தலுக்கு தங்கள் கூட்டணிக்கு ஆடஹ்ரவு கேட்டு வந்த பிறகு, தேர்தல் ஆணையம் இதே நேர்மையுடன் நடந்துகொள்ளுமா? அப்படி நடக்க காங்கிரஸ் தலைமை அனுமதிக்குமா? சிதம்பரத்தின் தலையீடு தனது சொந்த மாவட்டத்தில் தொடங்கி விட்டதே?

மும்பையில் காவல்துறை கெடுபிடி.

.
இலங்கையில் தமிழின அழிப்பை கொடூரமாக செய்த அரச தலைவர் ராஜபக்சேவை பாதுகாக்க மும்பை காவல்துறை வரிந்து கட்டிக்கொண்டு இறங்கியுள்ளது. நேற்றிரவே தான் திருப்பதி மலையில் தங்க இருப்பதாக பொய் தகவலை கொடுத்த ராஜபக்சே, அது இன்று ஆங்கில ஏடுகளில் வெளிவர செய்துவிட்டு, அதேசமயம் மும்பைக்கு நேற்று இரவே வந்திறங்கி ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிவிட்டான். அது மாத்திரமின்றி ராஜபக்சேவை பாதுகாக்க மும்பை காவல்துறை எடுத்துக்கொண்ட செயல்பாடுகள் கணக்கில் அடங்கா.

நூறு மீட்டர் தூரத்திற்கு முன்னூறு காவலர்களை மும்பை காவல்துறை போட்டு அராஜகமான மிரட்டலை செய்தது. அவை அனைத்துமே இந்திய மத்திய அரசின் வழிகாட்டலில் செய்யப்பட்டுள்ளது. அதுவும் சிதம்பரம் என்ற துரோகம் செய்ய அஞ்சாத ஒரு தமிழனின் நேரடி ஏற்பாட்டில் மத்திய அரசின் உள்துறை செய்த வேலை என்று தெரிய வருகிறது. முதலில் வந்த செய்தியான விமான நிலையத்தில் தமிழர்களின் எதிர்ப்பு என்ற செய்தி தவறானது என்றும், உணர்ச்சி வசப்பட்ட தமிழர்கள் பொய் செய்த்கிகளை தரவேண்டாம் என்றும் நாமும் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த கெடுபிடிகளுக்கு மத்தியில் மும்பை தமிழர் அமைப்புக்கள் எல்லோரும் சேர்ந்து அந்தேரி என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் முன்னூறு பேராக கூடி ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டபோது அதையும் மும்பை காவல்துறை தடுத்து விரட்டி விட்டது. அதன் பின், மும்பை தமிழ் சங்க கட்டிடம் முன்பு அனைவரும் மீண்டும் கூடி சிறப்பாக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

கொடியவன் ராஜபக்சேவுக்கு வால்பிடிக்கும் காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா அரசையும் , மத்திய அரசையும் கண்டித்து தமிழர்கள் விழிப்புடன் இருக்க இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டாய் அமைந்துவிட்டன

இந்திய சாமிக்கு அல்வா கொடுத்த ராஜபக்சே

ரத்தகறையோடு ராஜபக்சே திருப்பதி வந்தான். அங்குள்ள சாமியிடம் வேண்டிக்கொண்டான். போர்குற்றத்தில் பிடிப்பட கூடாது என வேண்டியிருபான். அங்குள்ள சாமி இந்திய சாமிதானே. அதனிடமே அவன் சிங்களம் இந்தியாவை மட்டை பந்து போட்டியில் வெல்லவேண்டும் என வேண்டியுல்லான். அப்படியானால் இந்திய ஆசாமிகளை போலவே இந்திய சாமிகளுக்கும் மானம் கிடையாதா?

ஆனால் இந்திய புரட்சியாளர்களுக்கு மானம் உண்டே? அதனால்தான் அந்த ரத்தகரை பிடித்த ராஜபக்சே அந்த திருப்பதி மலையை இட்டு கீஹி இறங்காமல் இரவும் திருப்பதி மலையிலேயே தங்கினானாம். அவன் ஒரு மனன்கேட்டவேன் என்றால், அவனுக்கு அழைப்பு விடுத்த இந்திய அரசும், அவனுக்கு பாதுகாப்பு கொடுத்த இந்திய அரசாங்கமும் மானம் கெட்டதுதானே?

Friday, April 1, 2011

டில்லியே பதில் சொல்

1974 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நாட்டுடன் டேவிஸ் க்ளப் போட்டி நடப்பதாக இருந்தது. அப்பது தென்னாபிரிக்காவை ஆண்டு வந்தது வெள்ளை இனவெறியர்கள். அவர்களை எதிர்த்து நெல்சன் மாண்டலே தலைமையில் " ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்" ஆடுதப்போராட்டம் போராடி வந்தது. அந்த கறுப்பர்களின் ஆயுதப்போராட்டத்தை ஆதரித்த இந்திய அரசு அந்த டேவிஸ் க்ளப் போட்டியில் கலந்துகொள்ள மாட்டோமென அறிவித்தது.

அதேபோல இப்போது சிங்கள இனவெறி ஆரசு தமிழர்களை இன அழிப்பு செய்து வருகிறது. தமிழர்கள் நேரடியாக இந்தியாவிற்கு சம்பந்தப்பட்டவர்கள். ஆனாலும் இந்திய அரசு நெல்சன் மண்டலேவிற்கு கொடுத்த ஆதரவு போல அல்லாமல் இலங்கையின் சிங்கள பேரினவாத அரசு நடத்திய இன அழிப்பு போருக்கு எதிராக போராடிய பூகள் அமைப்பை ஆதரிக்காமல் அழிக்கவே உதவியது. அதுமட்டுமின்றி இப்போது அந்த இலங்கை தமிழின அழிப்பை நடத்திய சிங்கள செரியன் ராஜபக்சேக்கு சிகப்பு கம்பளம் விரித்து மும்பையில் நடக்கும் போட்டியில் கலந்து கொளிறது.வெட்க கேடு. வெட்க கேடு

கீழவெண்மணியின் 44 தியாகிகள் நினைவு தேர்தலில் மீண்டும் எழுகிறது.

கீழ வெண்மணி கிராமம், 1968 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் உலகம் முழுவதும் ஒரு அதிர்ச்சி தகவலை கொடுத்தது. செழுமையான விவசாயத்தை கட்டிக்காத்துவந்த உழவர் பருன்குடி மக்களான தாழ்த்தப்பட்ட விவசாயக்கூளிகளை சுரண்டி கொழுத்துவந்த ஆதிக்க சாதி வெறி கொண்ட பண்ணையார்களின் சங்கத்தலைவன் கோபாலக்ருஷ்ண நாயுடு, காவல்துறையுடன் சேர்ந்துகொண்டு அறுவடைக்கு அதிகக்கூலி கேட்ட அந்த அடிமட்ட ஏழை மக்களை விரட்டி, வெண்மணி கிராமத்திலேயே ஒரு குடிசைக்குள் தள்ளி கதவை தாளிட்டு அவர்களது வாழ்க்கைக்கும் தாளிட்டுவிட்டான். அனைத்து கூலி மக்களும் அவன் வைத்த வெந்தீயில் எரிந்து சாம்பலாயினர். அந்த கொடூரக்காட்சியை பார்த்துகொண்டு கைகள் தேர்தல்களால் கட்டப்பட்டநிலையில் மார்க்சிஸ்ட் கட்சி கண்ணீர் விட்டது. அந்த மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக இப்போது கீழ்வேள்ளூர் தொகுதியில் ஒரு மகாலிங்கம் நிற்கிறார்.

கீழ வெண்மணியை கொண்ட இந்த கீழ்வெள்ளூர் தொகுதி புதிதாக சமீபத்திய தொகுதி மறுபரிசீலனையில் உருவாக்கப்பட்ட புதிய தொகுதி. அதுவும் தலித் இனத்திற்கான ஒதுக்கீட்டு தொகுதி. கீழ வன்மைநீல் நடந்த கொடூரக்கொளைகளுக்கு எதுவும் செய்யமுடியாமல் சாபிடாமல் மட்டுமே இருந்த முதல்வர்தான் திமுகவின் முதல் முதல்வரான அண்ணாதுரை. அந்த திமுக சார்பாக இப்போது அந்த தொகுதியில் அமைச்சர் மதிவாணன் நிற்கிறார். அந்நாள் வெண்மணி படுகொலையை நினைவு படுத்தி நிற்கின்ற இளம் பெண் மாணவி தேவகி அனைவராலும் கவனிக்கப்படுகிறார். ஏன் என்றால் அவர் மட்டுமே வெண்மணி படுகொலைகள் பற்றி பேசக்கூடியவராக இருக்கிறார். இனி இப்படி கொடுமைகள் நடைபெறாவண்ணம் தடுக்கவேண்டும் என்ற எண்ணத்தை முன்வைத்து தனது தேர்தல் பயணத்தை அந்த இளம் பெண் துவக்கியிருக்கிறார்.

ஆட்சியாளர்களும், நீதிமன்றமும், மார்க்சிஸ்ட் கட்சியும் படுகொலைகளுக்கு தீர்ப்பு எழுதாத ஒரு சூழலில், நக்சல்பாரி இயக்கம் அந்த படுகொலைகள் நடந்து பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து கொடியவன் கோபாலக்ருஷ்ண நாயுடுவை அழித்தொழித்தது. அந்த அழித்தொழிப்பை நடத்திய சி.பி.ஐ.-எம்.எல்.. இயக்கத்தை அன்று வினோத் மிஸ்ரா தலைமை தாங்கினார். அந்த அழித்தொழிப்பை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தோழர்களில் ஒருவர் கண்ணையன் என்ற ராமசாமி. அந்த ராமசாமியின் தம்பி மகள்தான் இந்த தேவகி என்ற சுயேச்சை வேட்பாளர்.

இந்த சுயேச்சை வேட்பாளர் தேவகி, மயிலாடுதுறை ஏ.வி.எம். கல்லூரியில் எம்.ஏ.படிக்கும் மாணவி. பறையர் நல பேரவையின் தலைவர்.அவருக்கு "பள்ளர் நல பேரவை" "சக்கிலியர் நல பேரவை"ஆகியவை ஆதரவு தருகின்றன.இன்றைய தேர்தல் போட்டியில் இப்படி ஒரு சமூக கொடுமையை மையப்படுத்தி பரப்புரை செய்வது பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் கோபலக்ருஷ்ண நாயுடுவின் படுகொலைக்கு காரணமானவர் என்றும், தலைமை தாங்கியவர் என்றும் காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்ட வெண்மணி குமரன் என்ற சுப்பிரமணியன் இந்த தேர்தல் களத்தில் " தேவகி" க்கு ஆதரவாக இறங்கியுள்ளார் என்ற செய்தி செவிமடுக்கவே மகிழ்ச்சியை தருகிறது.

ராஜபக்சே வருகையால் திமுக கூட்டணிக்குள் குழப்பமா?

மும்பையில் உலக மட்டைப்பந்து விளையாட்டு போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற நாளை தயார் ஆகிவருகிறது. அது இந்தியாவிற்கும், இலங்கைக்கும் ஆன ஆட்டம். ஆகவே அதை பெருமையாக இருபுறமும் நினைப்பார்கள். பாவம் தமிழர்கள். இந்த ஆட்டத்திற்கு, மகிந்தாவை இந்திய அரசு அழைத்திவிட்டது. அவரும் வருகிறார். தமிழின அழிப்பில் அறுபதாயிரம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே மும்பை வருகிறான். அடஹ்ர்கு ஏற்பாடு செய்யும் இந்திய அரசு இலங்கை அரசத்தலைவர் மகிந்தாவுடன், இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல்தான் அமரவேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

இது பிரதமர் மன்மோகனை காப்பாற்றி தமிழ்நாற்ற்டு தேர்தலில் வரை இறக்கிவிட ஒரு திட்டமா என்று விளங்கவில்லை. ஆனாலும் பிரதமரும், அன்னை சோனியாவும், இளைய பட்டத்தரசர் ராகுலும், மும்பை செல்லாமல் இருக்கமுடியாது. மகிந்தாவை காணாமல் உறக்கம் வராது. அவருடன் கைகுலுக்காமல் இருக்க மாட்டார்கள். அந்த ரத்தக்கறை படிந்த கைகள் இவர்களது கைகளில் படியாமல் இருக்காது. அந்த ரத்தக்கைகளுடன் சோனியாவும், ராகுலும் தமிழ்நாட்டிற்கு வருவார்கள். அந்த ரத்தம் படிந்த, தமிழரின் ரத்தம் படிந்த கரங்களை பற்றாமல் எங்கள் ஊர் தாத்தா, மூத்த அரசியல்வியாதி இருக்கமாட்டார்.

மும்பையில் கொலைகாரன் ராஜபக்சே வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்த அனுமதி இல்லை. எங்கு பார்த்தாலும் ராணுவம் வளம் வருகிறது.அடஹ்னால் இனமான உணர்வுள்ள தமிழர்கள், வழமையாக ஆர்ப்பாட்டம் நடத்தும் { காவல்துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெறாமல் நடத்த இருக்கும் அனுமத்திக்கப்பட்ட இடம்} விக்டோரியா டவர் என்ற இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தமிழர் உணர்வாளர்கள் என்ன செய்வார்கள்?


தமிழர்களின் ரத்தத்தில் இத்தனை விசேசம் இருக்கிறதா என்று தமிழ்நாட்டு வாக்காளர்கள் சிந்திக்கவேண்டும். அதேநேரம் வைகோ தனது படை, பட்டரன்களை அதிமுக தோல்விக்கு வேலை செய்ய கட்டளையிட்டுள்ளார். அதை அப்படியே தொண்டர்களும் பின்பற்றுவர். திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வேலை செய்யும்படி வைகோ கொடுத்த உத்தரவால் மதிமுக தொண்டன் சமீபத்தில் நிலை குலைந்துவிட்டார்கள்.ராஜபக்சே வரவை திமுக வரவேற்கட்டும். பாமக, விசிக,இரண்டும் இரண்ட்டாட்டில் ஒராடு போல விழிக்கிரார்

ஜெயலலிதாவை சந்தித்த முஸ்லிம் தலைவர்கள்

இன்று மதியம் இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர்கள் எஸ்.எம்.பாக்கர், முனீர், சித்திக், இக்பால், அந்தோணியப்பா,ஆகியோர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இருபுறமும் அகமகிழ்வுடன் வரவேற்றுக்கொண்டனர். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அறிவித்ததற்கு அவர்கள் நன்றி சொல்ல, அதையும் தாண்டி முஸ்லிம்கள் பிரச்னைக்கு இந்திய தௌஹித்துகள் கூறியவற்றை செல்வி.ஜெயலலிதா ஆர்வமாக கேட்டார். பொது விசயங்கள் பற்றியும் பேசினர்.

ஜே கூட்டணிக்கு அமோக ஆடஹரவு மக்கள் மத்தியில் இருப்பதாக இருபுறமும் பரிமாறிக்கொண்டார்கள். போகிற [போக்கை பார்த்தால் அதிமுக கூட்டணி முக்கால் வாசி தொகுதிகளையும் கைப்பற்றிவிடும் போலிருக்கிறதே?