Wednesday, March 30, 2011

புலிகள் மீதான தடையை நீக்கு--சென்னையில் கையெழுத்து இயக்கம்.

இன்று மாலை நான்கு மணியிலிருந்து எழு மணிவரை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நெருக்கடியான பொக்குவரத்து பகுதியில் "புலிகள் மீதான தடையை நீக்கு" என்ற பெரிய எழுத்துக்கள் கொண்ட பதாகையுடன் கையெழுத்து இயக்கம் சிறப்பாக நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் முன்முயர்ச்சியில் நடத்தப்பட்ட இந்த இயக்கம் தடை பல கடந்து நடந்ததுதான் வரவேற்கத் தக்கது மூன்று மாதங்களுக்கு முன்பே இத்தகைய ஒரு கையெழுத்து இயக்கத்தை பகிரங்கமாக நடத்த இயக்குனர் புகழேந்தி கருணாநிதி அரசின் காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தார். புலிகளின் அரசியல் பிரிவு தலைவராக இருந்து கொல்லப்பட்ட சு.பா.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கற்ப்பா எழுதிய தமிழக முதல்வரின் தலைமையிலான காவல்துறை அதற்கு அனுமதி மறுத்திருந்தது.


அந்த நிலையிலும் விடாப்பிடியாக புகழேந்தி அதே கையெழுத்து இயக்கத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடத்தினார். அது சிறப்பாக பல தமிழர்களின் பங்களிப்போடு நடந்தேறியது. அதற்காக சென்னை பத்திர்கையாளர் மன்றத்திடம் கேள்வி கேட்டது கருணாநிதியின் காவல்துறை. அதன்பிறகு அனுமதி மறுக்கப்பட்ட சைதை பனகல் மாளிகையிலேயே நடத்த உயர்நீதிமன்றம் சென்று நீதி கேட்டார் புகழேந்தி. அந்த வழக்கு நீதிமன்றத்தின் வழமைப்படி தாமதமாக எடுக்கப்பட்டு, கடந்த பத்து நாட்கள் முன்பு தீர்ப்பாக வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பை வழங்கிய நீதியரசர் சந்துரு, தடை செய்யப்ப்பட்ட விடுதலைப் புலிகள் பற்றி பேசலாம் என்றும் ஆதரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் பொடா வழக்கில் தீர்ப்பு கூறியிருப்பதையும் சுட்டிக் காட்டி, இதுபோன்று விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கோருவது ஜனநாயக மரபுகளுக்கு உட்பட்டதுதான் என்று ஒரு சிறப்பான தீர்ப்பை கூறி, அதற்க்கான காவல்துர அனுமதியை அதே இடமான சைதை பனகல் மாளிகை அருகே கொடுக்க வேண்டும் என்றும் மார்ச் 30 ஆம் நாள் மாலை நான்கு மணியிலிருந்து எழு மணி வரை வழங்குமாறும் கூறிவிட்டார்.

இந்த வரலாற்று தீர்ப்பை அமுல்படுத்தி இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், பெரியார் திராவிடக் கழக தொண்டர்களின் உதவியுடன், நாற்ப்பது அடிக்கு மூன்றடி என்ற அளவில் ஒரு பெரும் பதாகையை உருவாக்கி அதை நடைபாதையையே நிரப்பும் அளவுக்கு நிறுத்திவைத்து, அதில் துணியில் அனைவரும் கையெழுத்து போடும்படி ஏற்பாடு செய்து அதற்க்கான எழுத்தாணிகளையும் தயார்செய்து, அங்கே நின்று மிகச்சிறப்பாக செய்தார்கள். "விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு" என்ற அந்த முழக்கம் வருவோர், போவோர் அனைவரையும் கவரும் வண்ணம் கருப்பு எழுத்துக்களால் தடியாக பொறிக்கப்பட்டிருந்தது. அதில் நூற்றுக்கணக்கானோர் கையெழுத்திட்ட வண்ணம் இருந்தனர். எல்லோர் சட்டையிலும் அதே வாசகங்கள் பொறிக்கப்பட்ட அட்டைகள் குத்தப்பட்டிருந்தன.

பழ.நெடுமாறன், ஓவியர் வீர சந்தானம், பேராசிரியர் சரஸ்வதி, விடுதலை ராஜேந்திரன், திரை கவிஞர் தாமரை, தியாகு, நாம் தமிழர் இயக்கத்தின் சாகுல் ஹமீது, ஊடகவியலாளர்கள், மீனவர் சங்க மகேஷ், புரட்சிகர இளைஞர் கழகத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர், மதிமுகவினர், தமிழர் அமைப்புக்களைச்செர்ந்தோர், மே பதினேழு இயக்க திருமுருகன், தெ.சீ.சு.மணி, டேவிட் பெரியார், ஸ்டாலின் ராஜா, பாரதி தமிழன், ஏகலைவன்[ஊடகத்தார்] , பல பெண் தோழியர்கள் மற்றும் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள், ஆதவன், போன்ற பல தோழர்களின் கையெழுத்துக்கள் அங்கே பதிவு செய்யப்பட்டன. இடையில் வீரசந்தானம் முழக்கங்களை எழுப்பினார். அதில்"தடையை நீக்கு, தடையை நீக்கு. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு" என்பதாக எழுந்த முழக்கங்கள் வானைப் பிளந்தன. இவ்வாறு தமிழ்கூறும் நல்லுலகில் தமிழ்நாட்டின் தலைநகரில் ஒரு ஜனநாயாக குறளை எழுப்புவதற்கு நீதிமன்றம் சென்று திரும்பினால்தான் சுதந்திரம் கிடைக்கும் என்ற நிலை உலகுக்கு அம்பலமானது..

Tuesday, March 29, 2011

மதிமுக தொண்டர் குரல் வைகோவிற்கு கேட்குமா?

வைகோ ஜெயலலிதா மீது உள்ள கோபத்தால் அதிமுகவை தோற்கடிக்க கங்கணம் கட்டுவதாக செய்திகள் வரும்போது, அதற்கு ஏற்றார்போல அவரது மனச்சாட்சி என்று அழைக்கப்படும் நாஞ்சில் சம்பத்தும் தினமலர், ஜூனியர் விகடன் என மறைமுகமாக இதே கருத்தை நேர்கானல்களாக கொடுத்துவருவதும் மதிமுக தொண்டர்கள் மத்தியில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இதே விஷயத்தை வேறு கோணத்தில் காண்கிறார்கள்.

அதிமுக ஆட்சி வந்தால் அவர்களது குறி முழுவதும் திமுகவை அழிப்பதிலேயே இருக்கும். அப்பது அதிமுக ஆட்சிக்கு எதிராக பேசுபவர் வைகோவாக மட்டுமே இருப்பார். ஆனால் திமுக ஆட்சி வந்துவிட்டால் அவர்கள் உடனடியாக மதிமுக கட்சியின் தொண்டர்களையும் தலைவர்களையும் இழுத்துப்போடும் வேலையையே பார்ப்பார்கள். அதனால் மதிமுக அழியும். ஆகவே திமுக வை ஆடஹ்ரிப்பது எந்த வகையிலும் மதிமுகவிற்கு சாதகமான ஒன்று அல்ல. இவ்வாறு அவர்கள் கருதுகிறார்கள். வைகோ காதுகளுக்கு இந்த செய்தி செல்லுமா?

திமுக தொண்டரின் மனச்சாட்சி.

சென்னையில் தென்சென்னை தொடர்ந்து திமுக தோற்கும் இடமாக மாறிவருவது திமுக தொண்டர்கள் மத்தியல் கவலை அளித்துவருகிறது. ஏற்கனவே தென் சென்னையில் உள்ள மயிலாப்பூர் தொகுதி, அவ்வப்போது அதிமுக வசம் சென்று விடுவதில் அவர்கள் கோபத்தில் உள்ளனர். தென் சென்னையின் நாடாளுமன்ற தொகுதியும் அதிமுக வசம் சென்றுவிட்டதே என்ற கவலையும் அவர்களுக்கு உண்டு. மயிலாப்பூர் தொகுதியில் இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைவர் கொடுத்துவீட்டரே என்று அவர்கள் வ்ருந்தி வருகிறார்கள். ஏற்கனவே மயிலாப்பூர் தொகுதியில் உள்ள மாநகராட்சி உறப்பினர்களின் தொகுதிகளில், பதின்மூன்றில் ஐந்தை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்ததற்கே மனச் சங்கடத்தில் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள்.

இப்போது ஆயிரம் கலாட்ட செய்து அதன்மூலம், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் தங்கபாலு தானே கடைசியில் வேட்பாளராக நின்றது திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது சொனியாஅவையே ஏமாற்றிய தங்கபாலு தந்திரம் என்றுதான் திமுக தொண்டர்கள் எண்ணுகிறார்கள். அதேசமயம் தங்கள் கட்சியான திமுகவை மீண்டும் எப்படி இந்த தொகுதியில் வலுப்படுத்துவது என்று சிந்திக்கிறார்கள். காங்கிரஸ் இந்த முறை வெற்றி பெற்றால் மயிலை தொகுதி நிரந்தரமாக காங்கிரஸ் தொகுதியாக போய்விடும் என்று அச்சப்படுகிறார்கள்.

திமுகவில் தான்தான் வேட்பாளராக அடுத்தமுறை வரவேண்டும் என்று எண்ணுபவர்களும், தான்தான் அடுத்தமுறை வேடப்பலராக ஆவோம் என்று எண்ணுபவர்களும் நிறைய இருக்கிறார்கள்.அவர்கள் எல்லோருமே தொகுதியை நிரந்தரமாக காங்கிரஸ் கையில் கொடுத்துவிட தயாராயில்லை. அதற்காகவே காங்கிரஸ் கட்சி இந்த முறை தோற்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். இது ஒரு திமுக தொண்டர் கூறிய மனச்சாட்சி வாக்குமூலம்.

வைகோவின் தேர்தல் புறக்கணிப்புக்கு அர்த்தம் என்ன?

வைகோ தான் அங்கம் வகித்த அதிமுக கூட்டணியில் சரியான பங்கு கொடுககவில்லை என்ற மனக்குறைக்கு பிறகு வெளியேறினார் எனபதும், அதையொட்டி தேர்தல் புறக்கணிப்பு என்று அவர் அறிவித்ததாக ஊடகங்களில் வந்ததும் நமக்கு தெரியும்.. ஆனால் அவர் அவரது கட்சியின் தீர்மானத்தில், மதிமுக தேர்தலில் இந்தமுறை போட்டியிடப்போவதில்லை என்றுதான் தெரிவித்திருந்தார்.அப்போதும் பலர் வருத்தப்பட்டது என்னவென்றால், மதிமுக தனித்து போட்டியிட்டிருக்கலாமே என்பதுதான். அதற்கும் வைகோ பதில் கூறியிருந்தார். அதாவது அப்படி தனித்து போட்டியிட்டிருந்தால், திமுக--காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து எதிர்க்கட்சி கூட்டணியின் வாக்குகளை பிளவு படுத்துவதற்க்காக நிற்பதாக அபாண்டமாக பழி சுமத்தி விடுவார்கள் என்று அறிவித்தார்.

வைகோவின் அந்த வாக்குவாதம் நமக்கும் ஏற்புடையதாக இருந்தது. இப்போது புதிய செய்தி மக்களை குழப்ப வந்திருக்கிறது. வைகோ தனது கட்சிக்காரர்களிடம் வேறுவிதமான வழிகாட்டலை கொடுப்பதாகவும், அது அதிமுக கூட்டணியின் அல்லது அதிமுக கட்ச்சியின் வெற்றி வாய்ப்பை பாதிப்பதர்க்காக திட்டமிடப்பட்டிருப்பதாகவும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதற்காக அதிமுகவும், காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் தொகுதிகளில் கூட அதிமுகவை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியை ஆதரிக்குமாறும் அவர் வழிகாட்டல் கொடுக்கிறார் என்பதே அந்த அதிர்ச்சி செய்தி.இதி நம்பகமாக இல்லை எனபதுதான் நமக்கு வைகோ மீது உள்ள பற்று காட்டுகிறது.

ஆனால் வருகின்ற செய்தி என்னவென்றால், கோவை பகுதியில் வைகோ கொடுத்த வழிகாட்டல்படி, அதிமுகவை தோற்கடிக்க திமுக வேட்பாளரான கண்ணப்பனை ஆதரிக்க சொல்லியிருக்கிறார் என்றும், அதை அங்குள்ள மதிமுக கட்சிக்காரர்கள் எதிர்கிறார்கள் என்றும் கூறுகிறர்கள். அதாவது கண்ணப்பன் மதிமுக கட்சிக்கு துரோகம் இழைத்துவிட்டு திமுக சென்றவர் என்றும் அவரை எப்படி ஆதரிக்க முடியும் என்றும் கேட்கிறார்களாம். அப்படியானால் காங்கிரஸ் கட்சி துரோகம் செய்ததால், தமிழர்கள் அதை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியது என்னாயிற்று? பார்வதியம்மாளின் சாம்பலை கரைக்க முன்னிற்கும் வைகோ எப்படி அந்தம்மாளின் சிகிச்சைக்கு கூட வழிகொடுக்காத திமுக, காங்கிரஸ் கட்சிகளை ஆதரித்து அதேநேரம் செயல்படுத்த உத்தரவிடமுடியும்? அப்படி வைகோ செய்திருப்பார் என்று நாம் நம்ப வில்லை.


தமிழீழ தேசியத்தாய் பார்வ்தி அம்மாளின் சாம்பலை சென்னையில் மட்டுமின்றி, குமரியிலும், கரைக்க முற்படும் வைகோ எப்படி அந்த சாம்பலுக்கு துரோகம் செய்த கருணாநிதியையும், சோனியாவையும் ஆடஹ்ரிக்க முடியும்? நடக்கவே நடக்காது என்பதே நமது வாதம். வைகோவிற்கு இப்போது ஜெயலலிதாதான் முதல் எதிராக டேஹ்ரிகிறார் என்றும், ஆகவே இது நடந்திருக்கும் என்றும் கூறுவோரிடம் நமக்கு பல கேள்விகள் எழுகின்றன. ஈழத்தில் தமிழினத்தை அழிக்க வரிந்து கட்டிக்கொண்டு வேலை செய்த காங்கிரஸ் தலைமையை எப்படி வைகோ ஆதரிக்க சொல்லமுடியும்? இன ழிப்பு போரை நடத்தியது இந்திய அரசுதான் என்று அறிவித்த வைகோ எப்படி அதை மாற்றி எழுத தனது அணிகளுக்கே கூறமுடியும்? அதிமுகவிற்கு நாம் யார் என்று காட்டவேண்டும் என்றால், அதற்கு அவர்களை பல இடங்களிலும் தோற்கடித்து காட்டுவதே சிறந்த வழி என்றி அவர் கூறியதாக கூறுகிறார்கள். அப்படி கூறியிருந்தால் அதை எப்படி மதிமுக தொண்டர்கள் ஏற்பார்கள்?

வைகோ தான் பார்வதியம்மாள் சாம்பலை எடுத்க்துக்கொண்டு அமெரிக்கா செல்வதாக அந்த தகவல்கள் கூறும்போது அவர் எப்படி தேர்தலில் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பார் என்பதே நமது கேள்வி.இது திமுக தலைவரின் கெட்டிக்காரத்தனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிழையான முத்திரை குத்த்டுதலா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இந்த சந்தேகங்கள் தீர தமிழின அழிப்புக்கு துணை நின்ற காங்கிரஸ்-திமுக கூட்டணியை தோற்கடிக்க கூறி வைகோ அறிவிக்கவேண்டும் என்று கூறுவோரும் உண்டு. அதைத்தான் சீமான் உறுதிபட கூறுகிறாரே? அப்படிப்பட்ட கொள்கையில் ஊறி எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட வைகோவும் தொண்டர்கள், மதிமுக கட்சிக்காரர்கள் உடனடியாக சீமானின் கட்சிக்குதாவிவிட மாட்டார்களா?

Monday, March 28, 2011

எதிர் வேட்ப்பாளரை தேர்வு செய்த கருணாநிதி.

திருவாரூரை கருணாநிதி தேர்வு செய்து நிற்பது ஒரு விபத்தா? அல்லது முன்பே திட்டமிட்ட ஒரு செயலா? முன்பே திட்டமிட்டு எதிர் வேட்பாளரையும் தயார் செய்தார் கருணாநிதி என்று உண்மைகள் கூறுகின்றன. அதிமுக வேட்பாளராக குடவாசல் ராஜேந்திரன் நிற்க வைக்கப்பட்டவுடன் அதிமுகவில் பல தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் என்றால் ராஜேந்திரன் தனது அடாவடியை அங்கே உள்ள தலித் மக்களிடமும், மற்ற சமூகங்களிடமும் தொடர்ந்து காட்டியவர் முதல்வர் என்பதற்காக மக்கள் வாக்கு அழித்துவிடுவார்கள் என்று கலிஞர் நினைக்கவில்லை. சிபிஎம் கட்சி செல்வாக்கு தன்னை பாதிக்கலாம் என்றும் வருக்கு தெரியும்.

அதனால் எதிர் வேட்பாளரை அதிமுகவிலிருந்து நிறுத்தும் பொது தனக்கு அதில் தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று விரும்பினார். ஓராண்டு முன்பே அதற்காக நிழல் மனிதரை கலாட்சேத்ரா காலனியில் சிறப்பு உளவு துறை மூலம் நேருக்க தொடங்கினார். அவர்களது மிடாஸ் நிறுவனத்திற்கு கட்சி வேறுபாடு பார்க்காமல் சாராய வர்த்தகத்திற்கு வழிச்ய்த்து கொடுத்ததை எடுத்து சொல்லசெய்தார். அந்த நேரம் குடவாசல் ராஜேந்திரன் திமுகவில் சேர அறிவாலயம் வரை வந்துவிட்டார். அவர் தங்கள் கட்சிக்குள் வந்தால் ஏற்கனவே தங்கள் ஆட்சியில் கோளை வழக்கு போடப்பட்டவர் என்பதால் அவப்பெயர் தனக்கு வரும் என்று கூறி கூட்டி வந்த திமுக தலைவர் பூண்டி கலைசெல்வனிடம் மறுத்துவிட்டார். அந்த இருவரும் சொந்தங்கள் என்பதை நாடறியும்.

குடவாசல் ராஜேந்திரன் தலித் மக்களால் மட்டுமல்ல, மற்ற கொலை போன்ற வன்முறை வழக்குகளை கொண்டவர் என்பதால் அவரே தன்னை எதிர்த்து தோல்வி அடைய சரியானவர் என்று கருணாநிதி கணித்தார். . ஒரு பார்ப்பன பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் என்ற பெயரும் இருப்பதை கருணாநிதி அறிந்தே இருந்தார். இத்தகைய ஒருவர் தன்னை எதிர்த்தால் தான் எளிதாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் எனவும் கணித்தார். எதிர் தரப்பில் தனது ஆட்கள் மூலம் முதல் வேட்பாளர் பட்டியலை அம்மாவிற்கு தெரியாமல் வெளியிட்ட பாணியிலேயே இதையும் செய்தார். இப்போற்ற்ஹு தைறியமாக இருக்கிறார். ஐந்து ஆண்டுகளாக எந்த அரசியலிலும் ஈடுபடாத ராஜேந்திரன் கடைசியாக அறிவிக்கப்பட்டார். நல்ல முறையில் அவரை கவனிக்கவும் கருணாநிதி பூண்டி கலைச்செல்வனிடம் கூறியுள்

சோனியாவை ஏமாற்றிய தங்கபாலு.

சோனியாவை தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்ப்பாலர்களை தேர்ந்தெடுப்பவர் என்று வெளியே சொல்லிவிட்டு, சோனியாவிற்கும், ராகுலுக்கும் புரியாத ஒரு புதிய தந்திரத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இப்போது அரங்கேற்றிவிட்டார். அதாவது காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்பில் தனது பெயரை வேட்பாளராக அறிவிக்காமல், தனதுமனைவிஜெயந்திபெயரைஅறிவிக்கச்செய்துவிட்டு,அதற்கு எதிரப்பு வந்தும்கூட கண்டுகொள்ளாமல் கடந்த சனிக்கிழமை அன்று காலையிலிருந்து மாலைவரை விசிக,காங்கிரஸ்,திமுக,பாமக, என்று ஒவ்வொரு கட்சியின் மயிலை கிளை பொறுப்பாளர்களையும் அழைத்து சித்திரக்குளம் அருகே கல்யாணமண்டபத்தில் வைத்து, ஒவ்வொரு கட்சியின் ஒவ்வொரு பகுதி அமைப்பிற்கும் பத்தாயிரம் ரூபாயை அளித்து, மொத்தம் 150 அமைப்புகளுக்கு ஒன்றரை கோடி ரூபாயை விநியோகம் செய்தார்.

மனைவி ஜெயந்திக்காக இவ்வளவு தூரம் செய்பவரா பரவாயில்லையே என்று காங்கிரஸ் பெண்கள் மகிழ்ந்திருக்கும் வேளையில் இப்போதுதான் அதன் உண்மை முகம் வெளிவந்ததுள்ளது. இத்தனை திட்டங்களும் தங்கபாலு முன்கூட்டியே போட்டுவைத்திருந்ததுதான் என்று காங்கிரஸ்காரர்கள் கூறுகிறார்கள். அதையொட்டி உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடுமையான ஒரு குறிப்பை காங்கிரஸ் தலைமைக்கு இன்று காலை அனுப்பியுள்ளார்.இவ்வாறு சோனியாவையும், ராகுலையும் ஏமாற்ற தங்கபாலு யார் தைரியத்தில் செய்கிறார் என்ற கேள்விக்கு எந்த குழந்தையும் கலைஞர் தைரியத்தில்தான் என்று கூறிவிடும்.இனியும் தொடராது காங்கிரஸ் உறவு என்று எண்ணிய கலைஞர் தங்கபாலுவை தனது கைக்குள் வைத்துக்கொண்டுள்ளார். ஐந்து கல்லூரிகளை ஆளும் தங்கபாலு, அதுதவிர ஒரு காட்சி ஊடகத்தை நடத்தும் தங்கபாலு,அதற்கே உரித்தான ஆள் பலம், பண பலம், தந்திரம் இல்லாமல் இருப்பாரா? ஞாயிறு இரவு தான் வாழும் கஸ்தூரிபாய் நகரில் மின்வெட்டு ஏற்பாடு செய்துவிட்டு, அந்நேரம் பணத்தை கட்டு, கட்டாக தனது வீட்டிலிருந்து வெளிஎடிர்நார் என்பது தனது தேர்தல் வேளைக்கு அவர் செய்த தயாரிப்புதானே?

காங்கிரஸ் தலைமையை தனது வேட்பாளர் தேர்வில் மட்டும்தான ஏமாற்றினாரா தங்கபாலு? கிரிஷ்ணகிரி வேட்பாளர் டேஹ்ர்விலும் இதே[போல தலைமையை ஏமாற்றினார். கிரிஷ்ணகிரிக்கு தனது காட்சி ஊடகத்தில் அழகியல் கலை கற்றுத்தரும் ஹசீனசய்யதை காங்கிரஸ் வேட்பாளராக கொண்டுவந்தார் தங்கபாலு. பெண் முஸ்லிமுக்கு முஸ்லிம்கள் வாக்கு கிடைக்காது என்று எதிர்தரப்பு காங்கிரசார் புருடா விட, உடனே அதுபற்றி கெட்ட காங்கிரஸ் தலைமைக்கு தானே ஒரு ஆண் முஸ்லிம் வேட்பாளரை தருகிறேன் என்று திருவல்லிகேநியிளிருந்து மக்பூல் ஜான் என்பவரை போடவைத்தார். தங்கபாலுவின் மிரட்டலில் பயந்த மக்பூல் ஜான் கிரிஷ்ணகிரிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யவே செல்லவில்லை. தாமதமாக தனக்கு உத்தரவு கிடைத்ததால் தயார் செய்து குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லமுடியவில்லை என்று கூறிவிட்டார். ஹசீனாவிடம் தங்கபாலு ஐம்பது லட்சம் வாங்கி, அதில் பத்து லட்சத்தை மபூளுக்கு கொடுத்து எம்மற்றிவிட்டார் என்று காங்கிரஸ் பெண் கவுன்சிலர் தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியுள்ளார்.

இது ஒரு புதிய முறையில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரை மாற்றும் தந்திரம். மயிலாப்பூரில் நடந்தது இன்னொரு புதிய தந்திரம். இவையெல்லாமே இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தில் உள்ள தேர்தல் முறைகளில் உள்ள ஓட்டைகளை புரிந்துகொண்டு அதற்கு தகுந்தாற்போல காய் நகர்த்தும் தந்திரம்.தனக்கு பின்னால் கட்சியில் பெருத்த செல்வாக்கு இல்லாத தங்கபாலு இதுபோன்ற தந்திரங்களை கையாண்டுதான் பெரிய கோஷ்டிகளான சிதம்பரம்,வாசன் கோஷ்டிகளை தோற்கடிக்கமுடியும் என்பது அவர்களது வாதம்.


இதுபோன்ற தந்திரங்களை தங்கபாலுவிற்கு கற்றுக்கொடுத்தது திமுக தலைமை. ஏன் என்றால் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி ஒரு தந்திரம் செய்துள்ளார். தனது வேட்புமனு நிராகரிக்கப்படுமோ என்ற பயத்தில் மாற்று வேட்பாளராக கட்சியின் இன்னொரு நபர் வந்துவிடக்கூடாதே என்பதற்காக தனது மனைவியையே மாற்று வேட்பாளராக போட்டுவிட்டார். திமுக காரர்கள் தன்காளுக்குள் புழுங்கிகொண்டார்கள். ஏன் என்றால் அது கட்சி தொண்டர்களுக்கே எத்ரிராக, கட்சி வழக்குக்கே எதிரப்பாக,நடத்தப்பட்ட செயல். ஆனால் தலைவர் கலைஞரிடம் கேட்டுக்கொண்டு செய்த செயல் என்று பொன்முடி தரப்பு கூறுகிறது. அதே தந்திரத்தை தனது கைத்தடியாக இருந்துவரும் தங்கபாலுவிற்கும் கலைஞர் சொல்லிக்கொடுத்துள்ளார் என்பதுதான் கவனிக்கத்தக்கது.

கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கில் உள்ள சிபியை மூலம் ராஜாவை கைது செய்து சிறையில் தள்ளி, தாயாளு, கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தயார் செய்ய ஏற்பாடு செய்யும்போது, திருச்சி சிவாவை பொது கணக்கு குழு தேர்தலில் தோற்கடிக்க செய்யும்போது, ஏன் சோனியா அறிவித்த வேட்ப்பாலர்களை தங்கபாலு மூலம் திமுக தலைமை தந்திரங்களை சொல்லிக்கொடுத்து மாற்றக்கூடாது என்பதே அந்த
கோஷ்டியின் கேள்வி. இவாறு தமிழ்நாட்டு டேஹ்ர்தலில் ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு எத்ரிராக காய் நகர்த்தல் வேலையை செய்துவருகிறார்கள்.

Sunday, March 27, 2011

புலிகள் பெயரில் அடுத்த கப்சா தயாரித்தவர் ஜாபரா?

இப்போது வெளிவந்துள்ள அந்த தமிழ்நாட்டு வார இருமுறை ஏட்டில், கடைசி பக்கத்தில் வந்துள்ள செய்தி மீண்டும் புலிகள் தமிழீழ பகுதிகளில் நடமாடுவதாகவும், தாக்குதல் நடத்தியதாகவும் கூறுகிறது. இதே ஏட்டில் இதே போல "ராமு"கதை வெளிவந்ததை நமக்கு நினைவுபடுத்துகிறது. அதை வெளிக்கொண்டு வருவதில் யாருடைய பெயரில் கட்டுரை வெளிவந்ததோ அதே பெயரில் தான் இப்போதும் இந்த கட்டுரை வெளிவந்துள்ளது. அந்த கட்டுரையாளர் எப்போதுமே தன்னை புலிகளின் எதிரி என்றும், அதையும் தாண்டி தமிழர்களின் எதிரி என்றும் வெளிப்படையாக அறிவித்துக்கொள்பவர்.

இந்த செய்தியில் புலிகள் காட்டில் இருந்து வந்து ஹபரணையில் சிங்கள ராணுவ பெரிய அதிகாரியை தாக்கி கொன்றதாக கதை எழுதப்பட்டுள்ளது. அந்த ஹபரணை என்பது அனுராதபுரம் தொடங்கி திருமலை செல்லும் வழியில்,திருக்கொண்டையாமேடு வீதிக்கும், குருநகல் தொடங்கி திருமலை பெருந்தெரு செல்லும் வழியில் இருக்கிறது.அங்கே முகாமிட்டிருந்த சிங்கள ராணுவ அதிகாரிகள் வெள்ளை கொடியோடு வந்த நடேசன் மற்றும் தோழர்களை கொன்றவர்கள் என்றும் இது ஒரு பழிவாங்கும் படலம் என்பதாகவும் எழுதியுள்ளனர. அதுமட்டுமின்றி அந்த படுகொலைகளை பொன்சேகா செய்யவில்லை என்றும், கொத்தப்பாய் தான் செய்தார் என்றும் இடைசெருகல் அந்த செய்தியில் உள்ளது. அதாவது பொன்சேகாவை காப்பாற்ற எடுக்கும் முயற்சி போலவும் தெரிகிறது.


இப்போது போன்செகவிர்க்காக வர்ந்துகட்டுபவர்கள் இந்திய அரசின் வெளிவிவகார துறையான"ரா"அமைப்பினர் என்பது தெரிந்த செய்தி. அப்படியானால் இந்த செய்தியின் மூலம் ரா அமைப்பின் ஏதோ ஒரு தேவை நிறைவேறும். ஏற்கனவே புகழேந்திரன் மாஸ்டர் ஆட்களை இதே உளவுத்துறை யாழ் அனுப்பியிருப்பதும் நமக்கு தெரியும். அவர்களது விளையாட்ட இது என்பது தெரியவில்லை. அப்படியானால் அந்த வேலையை செய்வதன்மூலம் புலிகள் மீது பழியை போடுவதிலும் இவர்களுக்கு வெற்றி. அதேசமயம் பொன்சேகாவை நல்லவர் என்று கூறுவதிலும் வெற்றி. அதேசமயம் வெள்ளை கோடி போராளிகளை கொன்றதை ஐ.நா. போர்குற்றமாக எடுக்க விரும்பினால் அதற்க்கான ஆதாரங்களை தரவேண்டிய ராணுவ அதிகாரியை கொல்வதன் மூலம், அல்லது இல்லாமல் செய்வதன் மூலம், கோத்தப்பஎவையும் காப்பற்றிவிடலாம்


எப்படியோ இத்தனைக்கும் உதவிய ஜாபரை டில்லிஇலிருந்து திரும்பியதும் என்னதான் சாதிக் பாட்ச விவகாரத்தில் பிடித்தாலும், இதை உங்களுக்கு செய்து தருகிறேன் என்று அவர் பேரம் பேசிவிட்டாரா? அதனால்தான் அவர் ஏற்பாடு செய்து வெளிவரும் அதே ஏட்டில் மட்டுமே இதை அதே ஊடகவியலாளர் மூலம் எழுத வைத்தாரா? டில்லி சென்று திரும்பியதும் ஜாபர் செய்யும் அடுத்த இமாலய பணி இதுதானா?. . ஆனால் இங்கே ஐ.பி.இடம் மாட்டிய ஜாபரை, தப்பிக்கவைக்க "ரா" வழிசெய்யுமா என்ற கேள்வியும் எழுகிறது.

திமுக.வை தோற்கடித்த காங்கிரஸ்.

திருச்சி சிவா, திமுகவில் ஒரு சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல: கட்சிக்கு தலைமைக்கு விசுவாசமான ஊழியர். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டதே குறிப்பறிந்து கச்சு தல்லைமைக்கு விசுவாசமாக பணியாற்றுவார் என்பதற்காகத்தான். அதுவும் கட்சியில் இருக்ககூடிய தலைமையின் குடும்ப உறுப்பினரான மத்திய அமைச்சரே கட்சித்தலைமைக்கு எதிராக காய் நகர்த்தும் நேரத்தில் கட்சி விசுவாசி அங்கே நாடாளுமன்றத்தில் இயங்க வேண்டும் என்றுதான் தலைமை சிவாவை அனுப்பி வைத்தது.அத்தகு இப்போது காங்கிரஸ் தலைமை எதிராக காய் நகர்த்துகிறது.

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை திமுக கட்சித்தலைமையின் கழுத்துக்கு கத்தியாக இருக்கும் இந்நேரத்தில், அதை பிஏசி என்றழைக்கப்படும் " பொது கணக்கு குழு"விற்கு உறுப்பினர் தேர்வு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் நடத்தப்பட்டது. அதில் திமுக. சார்பாக சிவா நிறுத்தப்பட்டார். முறைப்படி ஆளும்கூட்டணிக்குள் ஒவ்வொரு கட்சியும் அடுத்த கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும். ஆனால் சிவாவிற்கு காங்கிரஸ் வாக்களிக்க தனது உறுப்பினர்களுக்கு சொல்லவில்லை. மாறாக காங்கிரஸ் முயற்ச்சியில் பழைய பிரதமர் குஜ்ரால் மகன் சுயேட்சையாக நிறுத்தப்பட்டு காங்கிரஸ் உறுப்பினர்களால் வாகளிக்கப்பட்டு வெற்றபெற ச்செய்தார்கள்.சிவா தோல்வி அடைந்தார்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி "பொது கணக்கு குழு" தீவிரமான விசாரணையை நாடாளுமன்றத்திர்க்குல்லேயே தொடங்கியுள்ள நேரத்தில் முரளி மனோகர் ஜோஷி என்ற பாஜக முன்னாள் அமைச்சர் அதை எடுத்துள்ள நிலையில் இந்த உறப்பினர் தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது.அந்த ஊழல் வழக்கில் திமுகவை பழி வாங்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு செயல்படுவதாக தெரிகிறது. அத்தகைய திட்டத்தில் ஒரு அங்கம்தான் திருச்சி சிவாவை தோற்கடித்த காங்கிரசின் சாதியம். ஆனால் அதற்க்கான திட்டத்தையும் காங்கிரசுக்கு சொல்லிக்கொடுத்தது தயாநிதிதான் என்கிறார்களே

Friday, March 25, 2011

மிரட்டுகிறார் ஜாபர் சேட்..........

ஜாபர் சேட் பெயர் இப்போது தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைவிட, அதிலும் ஊழல் புகாரில் சிக்கியவர்களைவிட, குடும்ப அரசியலால் முழ தமிழ்நாட்டையும் கட்டிப்போட்டவர்களைவிட, உருட்டியும், சீராடியும கூட்டணியை சாதித்தவர்களைவிட, பெரிதும் பேசப்படும் மர்மம் என்ன? ஒரு உளவுத்துறை பெரிய அதிகாரியைப்பற்பற்றி ஏன் இவ்வளவு தூரம் ஊடகங்கள் எழுதவேண்டும்? அவர் தேர்தலில் நடத்தப்படும், நடத்தப்பட இருக்கும் தில்லுமுல்லுகளுக்கேல்லாம் ஆசானாக செயல்படுகிறார் என்பது மட்டும்தானா? ஜாபரை பொறுத்தவரை அவர் கடமை ஆற்றுவது என்பதையும் தாண்டி எதையாவது செய்தால் அதற்கு சன்மானம் வாங்காமல் போகமாட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அதற்கான பல உதாரணங்களை அவரே செயல்படுத்தி காட்டியுள்ளார்.

திருச்சியில் பெரிய அதிகாரியாக இருக்கும் போதே, முட்டை ரவி, குற சிவா, என்று போளிம்தல் சாவுகளை நடத்தி காண்பித்த ஜாபர், பிறகு சென்னைக்கு உளவுத்துறைக்கு மாற்றலான பிறகு தனது சட்டவிரோத காரியங்களை, எளிதாக செய்துவந்தார். நெடும் அளவிலான வேண்டுகோள்களுக்கு பின்னும் மணல்மேடு சங்கர் கொலையை அரங்கேற்றினார். அவை எல்லாவற்றிற்கும் சிறந்த அளவில் சன்மானங்கள் பெருக்கொண்டதுதான் முக்கிய செய்தி. ஒவ்வொரு சாதிக்காரர்களிடமும் அடுத்த சாதிக்காரனை தீர்த்துக்கட்ட என்று சன்மானம் கிடைக்கும். அது அந்த பணக்காரர்கள் தங்கள் உயிர் பாதுகாப்பிற்கு என்று எண்ணி ஜாபரின் வார்த்தைகளை நம்பி கொடுக்கும் சன்மானம். ஜாபர் இயல்பிலேயே பணக்காரர் அவர் ஏன் சன்மானம் வாங்க வேண்டும் என்றும் பரப்புரியை ஒருபுறம் கிளப்பிவிடுவார். இன்னொரு புறம் வாங்குவதை வான்க்கிக்கொள்ள அது எளிதாக இருக்கும். அந்த போலி மோதல் சாவுகள் வரிசையில் குற நடராஜையும் போட்டு விட்டார். இவையெல்லாம் ரவுடிகளை போடலாம் என்ற " காக்க, காக்க" படவரிசையில் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டவை

சரி. எழத்தமிழரை கொள்ளலாமா? அது எந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டது? டில்லியில் உள்ள ஒற்றையாட்சி மனோபாவம் உள்ள அதிகாரவர்க்க கும்பலால், அதாவது எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் வகையராக்களால் அங்கீகரிக்கப்பட்டது. அது போதும் ஜாபருக்கு. அவர் எம்.கே.நாராயணன் மனோபாவத்தால் செயலபடுத்தப்பட்டார். எழத்தில் நடத்தப்பட்ட தமிழின அழிப்பை எம்.கே.நாராயணன் ஆதரித்தார். ஜாபர் அவர் வழி செயல்பட்டார். தமிழின அழிப்பை தடுக்கும் வல்லமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. ஆனால் தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் வல்லமை ஜாபருக்கு உண்டு என்று டில்லி நம்பியது. பல முறைகளை ஜாபர் தமிழ்நாட்டு மக்களது எழுச்சியை தடுத்து நிறுத்தினார். ஒருபுறம் ஈழ பிரச்சனைகளுக்கு போராடினால் அனுமதி மறுப்பு.இன்னொரு புறம் இன அழிப்பு ஆதரவு தலைவர்களுக்கு இன ஆதரவு முத்திரை பெருவதற்கான தயாரிப்பு. அதுவே ஜாபர் ஆலோசனையில் கருணாநிதி தலிமையில் அமைந்த இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவை. அதற்கு கொடுக்கப்பட்ட விளம்பரத்தால் அந்த இன அழிப்பு தலைவர்களின் முகங்கள் காப்பாற்றப்பட்டன.

முத்துகுமார் நிகழ்ச்சி ஜாபருக்கு விழுந்த பெரிய அடி. அதையும் சமாளித்தார் ஜாபர். மாணவர்கள் கைகளில் கொடுக்கவிடாமல், அரசியல்வியாதிகள் கைகளில் முத்துகுமாரின் உடலை பெற்றுத்தர ஏற்பாடு செய்தார். அதன்படி முத்துகுமாரின் விருப்பத்திற்கு எதிராக அவரது உடலை உடனடி அடக்கம் செய்ய துடித்தார். அடக்க ஊர்வலத்தின் திசையை மாற்ற பாடுபட்டு வெற்றிபெற்றார். அதன்மூலம் எழ இருந்த தமிழக மக்களின் எழுச்சியை அடக்குவதில் வெற்றிகண்டார். அதற்கெல்லாம் சன்மானமாக டில்லி மட்டுமல்ல, கொழும்பும் உவகையுடன் லண்டனுக்கு கூப்பிட்டு கொடுத்தது பல கோடி என்ற செய்தி விசாரிக்கப்படவேண்டும். பின்னல் இருந்த அம்சா வ்ஹேன்னையில் இருந்தாலும் லண்டனில் இருந்தாலும் ஜாபரின் ஆலோசகர். இத்தனை திறமை உள்ள அதாவது சூழ்ச்சிகள், சதிகள் செய்வதில் திறமை உள்ள ஜாபரை, எப்படி தேர்தல் ஆணையம் கூப்பிட்டு விசாரித்து மேற்கு வங்கத்திற்கு மாற்றமுடியும்? அதை இப்போது ஊடகங்கள் மூலம் கேட்கவைத்துள்ளார் ஜாபர்.

டில்லிக்காரர்களிடம் ஜாபர் எதில் மாட்டிக்கொண்டார்? அரசரைவிட அரசு செலுத்துவதில் விசவாசம் காட்டிய ஜாபர், தமிழ்நாட்டு மன்னர் குடும்பத்தின் தயவிற்காக, இலங்கை அமைச்சர் ஆறுமுக தொண்டைமானின் உதவியுடன், மன்னர் மகளுக்கு நுவரிலியாவில், நிலம் வாங்கி கொடுத்தார். தனது மனைவியின் பெயருக்கு, முதல்வர் கையெழுத்துடன் வீட்டு வசதி வாரிய வீட வாங்கி கொண்டார்.சுத்தமான கை என்றால் இந்த வீடு வாங்கியிருக்க கூடாதே? அப்படி மன்னர் குடும்ப விச்வாசத்திர்க்காக தமிழர் விரோத போக்குடன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வாநிப்போரின் ஒத்திகையை நடத்திக்காட்டினார். அதில் சில பெரிய அதிகாரிகளைக்கூட பகைத்துக்கொள்ள தயங்கவில்லை. கடைசீயில் ஆ,ராஜா சிக்கிய ஸ்பெக்ட்ரம் விவாகரத்தில், மன்னர் குடும்பத்தை காப்பாற்றுவதர்க்காக சாதிக் பாட்சா மரணம் என்று ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சாதிக்கின் சாவுக்கு முன்பு ஒருமணிநேரம் முன்பு ஜாபர் சாதிக்கை சந்தித்தார் என்ற செய்தி ஒன்று இருக்கிறது.அது கொலையா என்ற சீ.பி.ஐ.யின் கேள்விக்கு பதில் சொல்ல டில்லியழைக்கப்பட்டார். ஆனால் தான் அழைக்கப்பட்டது தேர்தல் விதி மீறல் பிரச்சனை என்று ஊடகங்களில் திசைதிருப்பும் வேலையை செய்துவருகிறார்.

இப்போது டில்லியையே மிரட்டும் வேளையில் இறங்கியுள்ளார். அதுதான் இப்போது சோனியா, ராகுல் போன்ற தலைவர்கள் வரும்போது பாதுகாப்புஆபத்து இருக்கிறது என்று புதுகரடி விடுகிறார். அதற்குதான் தான் ஐ.ஜி.ஆக இருக்கவேண்டும் என்று டில்லியை அல்லது தேர்தல் ஆணையத்தை மிரட்டுகிறார்.புகழேந்திரன் மாஸ்டர் என்று ஒரு நபரை டில்லி உளவு துறை தமிழ்நாட்டில் உலவவிட்டு, அதன்மூலம் தமிழ்நாட்டு சட்ட,ஒழுங்கை கேள்விக்குறியாக்க முயல்வதும் ஜாபருக்கு தெரியும். அதைத்தான் இலங்கை நாடாளுமன்றத்தில் அதன் பிரதமர் ஜெயரத்னே கூறியிருந்தா. அந்த கூட்டத்தில் சிலர் யாழ்ப்பணத்திற்கு இந்திய உளவுத்துறையான "ரா" மூலம் சென்று இருப்பதுள் ஜப்பாருக்கு தெரியும். ஏன் என்றால் ஜாபர்தான் " ராமு" என்ற சரணடைந்த போராளியை பயன்படுத்தி இந்திய உளவுத்துறை படம் காட்டிய போது அதை தனது ஆதரவில் உள்ளவர்கள் ஓலம் தமிழ்நாட்டு பிரபா ஏட்டில் கொண்டுவரவைத்தவர்.இப்போது தான் த்மியாஹ்னாட்டில் பதவியில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் இருந்த படியே உயர் தொழில்நுட்பம் மூலம் தமிழ்நாட்டு தேர்தலில் தில்லு முள்ளு செய்யமுடியாதா என்று டில்லியில் மிரட்டினார் என்று அவரது நண்பர் மூலம் வார இருமுறை ஏட்டில் எழுதவைத்துள்ளார். இப்போது ஜாபருக்கு ஆதரவாக கலைஞர் அரசு கொடுத்துள்ள வினாக்கள் கடைசியில் பூனை பையை விட்டு வெளியே வந்து விட்டதை காட்டுகிறது.
எப்படியும தமிழ்நாட்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக தில்லுமுல்லு செய்ய தயாராக இருக்கும் ஜாபரை எப்படி அம்பலப்படுத்தவோ, தடுக்கவோ, அவர் செய்ய உள்ள வெடிவைக்கும் நிகழ்ச்சிகளை தடுக்கவோ முடியும் என்பது தேர்தல் ஆணையத்திற்கும், எதிர்க்கட்சிகளுக்கும், மக்களுக்குசவாளாக அமைந்துள்ளது.

Thursday, March 24, 2011

இலவசம், இலவசம், இலவசம்.

கருணாநிதி இலவசங்களை வைத்து, கிராமப்புற வாக்குகளை அள்ளிவிடுவார் என்ற கருத்து பொதுவாக இருந்தது. அதிலும் அவர் அறிவித்துள்ள கிரைண்டர் அல்லது மிக்சி, என்பது பெண்களுக்கு உர்ச்ச்காகத்தை உண்டுபண்ணும் என்றனர். அப்போதே அந்த கிரைண்டர், மிக்சி கண்டுபிடிப்பு அதிமுகவுடையது என்பதுபோல நக்கீர்டன் எழுதியிருந்தது. அதாவது பொள்ளாச்சி ஜெயராமனின் கையிலிருந்து பரந்த காகிதத்தில் உள்ளல இலவசங்கள் அவை என்று எழுதியிருந்தது. இப்போது அதுவும் உணமையாகிவிட்டது. ஜெயலலிதா ஒரு தேர்தல் கால வாக்குறுதி அறிககையை அறிவித்து விட்டார். அதில் அவர் க்ரின்டரும், மிக்சியும் மற்றும் பொருள்களும் என்று நீட்டி முழங்கிவிட்டார். இப்போது இலவசங்களுக்காக என்று கூறிய கருத்துக்கள் மூலையில் போய் படுத்துவிட வேண்டியதுதான்.

நகரில் ஐம்பத்தெட்டு வயது வந்தோருக்கு இலவச பேருந்து சீட்டு என்ற கலைஞரின் வசனத்தைவிட, கிராம, நகரங்களில் அம்பத்தெட்டு வயது வந்தோருக்கு இலவச பேருந்து சீட்டு என்ற ஜெயலலிதா வாக்குறுதி மேலே போய்விட்டது. அதேபோல மாணவர்களுக்கு அனைவருக்கும் மடிகணணி. பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டுக்கொடுப்போம். இது கலிஞர் குடும்பம் பறித்தத நிலங்கள் சம்பந்தப்பட்டது. பலரது வயோற்றில் புலியை கரைக்கும். எல்லாவற்றையும் விட, கேபிள்களை அரசுடமை ஆக்குதல் என்பது மக்களை கவரும் முழக்கம். அதிலும் குறைந்த காசில் அரசே கேபிள்களை கொடுக்கும் என்பதுதான் மக்களுக்கு பிடித்தமானது. என்லோயே கொண்டு சென்று விட்டது இந்த இலவசங்கள். ஆனாலும் சில வாக்குறுதிகள் கலைஞர் குடும்பத்தை குறி வைத்து ஒட்டாணி ஆக்கும் முயற்சியா என்பது தெரியவில்லை. மக்களும் அதைத்தானே விரும்புவார்கள் போலிருக்கிறது.

Wednesday, March 23, 2011

தேர்தல் ஆணையத்தை, சூதகமான கங்கை என்கிறார் கலைஞர்

பசுன்பொன் தேவரை மேற்கோள் காட்டி," மங்கை சூதகமானால், கங்கையிடம் முறையிடலாம், கங்கையே சூதகமானால், யாரிடம் முறையிட? "என்று இன்று முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு எழுதுகிறார் கலைஞர். தேர்தல் ஆணையம் விதிக்கும் கட்டுப்பாடுகளையும், அதை கறாராக அமுல்படுத்த முற்படுவதையும் அப்படி சாடுகிறார. கலைஞர் கருணாநிதிக்கு, ஒரு இந்திய அரசியல்வாதி என்ற முறையில், ஒரு இந்திய அரசின் தேர்தல் முறைகளை ஏற்றுக்கொண்டவர் என்ற முறையில், இந்தியாவின் ஏக இந்தியா கோட்பாட்டை சமீபத்தில் அதிகமாக உச்சரிப்பவர் என்ற முறையில், இந்திய அரசின் ஒரு அங்கமாக திகழ்பவர் என்ற் முறையில், மத்திய அரசில் அங்கம் வகிப்பவர் என்ற முறையில், பழுத்த அரசியல்வாதி என்ற முறையில், ஐந்து முறை தமிழக முதல்வராக வீற்றிருப்பவர் என்ற முறையில், தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டணி ஆட்சியின் தளகர்த்தா என்ற முறையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் பற்றி குறை கூற உரிமை இருக்கலாம்.

ஆனால் " மங்கை சூதகமானால்" என்று பெண்களை இழிவு படுத்தும் பழமை பார்வைகளை பகிர்ந்துகொள்ள எந்தவிதத்தில் உரிமை இருக்கிறது? "ஆண்கள் சூதகமானால்" என்று புதிதாக கருணாநிதியால் எழுத முடியுமா? ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் பொம்பளை சிரிச்சா போச்ச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பதுபோல ஏன் மேற்கோள்கள் அவருக்கு தோன்ற வேண்டும்? இது ஆணாதிக்க மனப்பான்மை தவிர வேறென்ன? " சூதகம்" என்று எதை சொல்கிறார் இந்த கலைஞர்? " தவறு செய்தால்" என்றுதானே சொல்கிறார்? அரசியல்வாதியே தவறு செய்தால் என்றும், அரசரே ஊழல் செய்தால் என்றும், ஆட்சியாளரே சட்டத்தை மீறினால் என்றும், அமைச்சர்களே வாக்குக்கு பணம் கொடுத்தால் என்றும் பொதுமக்கள் பேசுவது இவருக்கும் சேர்த்து பொருத்தமானது இல்லையா? ஏன் இப்படி மங்கை சூதகமானால் என்று மட்டும் பெண்களை தாக்கி எழுதவும், அதற்கு பசும்பொன் தேவரை துணைக்கு அழைப்பதும் செய்யவேண்டும்? டேஹ்ர்தல் ஆணையத்தை எதிர்க்கவேண்டும் என்றால், தைரியமாக எத்ரிக்க வேண்டியதுதானே? அதற்கு தேவரை எதற்கு இழுக்கிறார்? பயந்து ஏன் தேவரை துணைக்கு அழைக்கிறார்?

தேர்தல் ஆணையம் இன்று சுவர்களில் தேர்தல் விளம்பரங்களை எழுத தடை விதித்து விட்டது என்று புலம்புகிறார். இன்று கட்சி தோரணங்களை சாலைகளில் கட்ட தடை வித்தித்துள்ளது என்று கவலைப்படுகிறார். தலைவர்களின் சிலைகளை துணி பொட்டு மூடிவிட ஏற்பாடு செய்துள்ளது என்று வருத்தப்படுகிறார். அதாவது தெருவெங்கும் கட்சி சின்னகளையும், விளம்பரங்களையும் வசதி உள்ள, அல்லது ஊழல் பணத்தை கையில் வைத்துள்ள கட்சிகளும், வேட்பாளர்களும், வரைந்து தள்ளுவார்கள். காசில்லாத சாதாரண வேட்பாளர்கள் இந்திய டேஹ்ர்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துக்கொண்டு போட்டியிட்டால், அவ்வாறு விளம்பரங்களை செய்யமுடியாமல் பார்வையாளர்களாக இந்த டேஹ்ர்தலில் இருக்கவேண்டும் என்றுதானே வர விரும்புகிறார்? அதாவது ஏழை, பாழைகள், தேர்தலில் நிற்க கூடாது: பணம் சேர்த்த அல்லது கொள்ளையடித்த கட்சிகள் மட்டுமே போட்டியிடவேண்டும் என்பதுதானே அதன் உட்பொருள்? இவர் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்பாராம்.

கட்சி கொடிகளை தோரணங்களாக கட்டி கட்சி சார்பற்ற பெரும்பான்மை மக்களுக்கு தொல்லை கொடுப்பதை வழக்கமாக்கி கொண்டிருக்கும் இந்த அரசியல்வியாதிகளுக்கு இப்படித்தான் சொல்லத்தெரியும். தலிவர் கலைஞர் அவர்களே, உங்களுக்கு தெரியுமா? கட்சி சார்படர் பொதுமக்கள்தான் இந்த நாட்டில் அதிகம். அவர்களுக்கு உங்கள் கொடிகளும், தோரணங்களும், சின்னகளை விளம்பரம் செய்யும் முறைகளும், எங்கு பார்த்தாலும் தேர்தல் விளம்பரங்களை எழுதி வைப்பதும், எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இடையூறாக இருக்கின்றன. நீங்கள் கட்சிகளின் தேர்தல் பூத்துகள் என்று ஒவ்வொரு தெருவிலும் உருவாக்கி வைத்துக்கொண்டு, ஒலிபெருக்கிகளில் கத்திக்கொண்டு, கொடுக்கும் சித்திரவதையை தாங்க முடியவில்லை. அவர்களுக்கு அதாவது பெரும்பான்மை மக்களுக்கு இந்த டேஹ்ர்தல் ஆணைய கட்டுப்பாடுகள் மகிழ்ச்சியை தருகின்றன.கலைஞருக்கு வேண்டுமானால், அப்படி அடாவடி பரப்புரைகள் மூலம் மட்டுமே கிளர்ச்சி வரலாம், அவரது தொண்டர்களுக்கு அந்த முறையில் தான் எழுச்சி வரலாம்> அனால் அவை அனைத்தும் மக்களால் வெறுக்கப்படுபவை.


அடுத்து இந்த அரசியல்வாதிகள் டேஹ்ர்தல் நேரத்தில் தங்கள் கட்சி தலைவர்களின் சிலைகள் மட்டுமின்றி, ஊரில் உள்ள எல்லா சிலைகளுக்கும் அந்தந்த சமூகங்களின் வாக்குகளை பெறுவதற்காக போய் நின்று கொண்டு மாலை போடுகிறேன் என்ற பெயரில் போக்குவரத்தை இடையூறு செய்துகொண்டு செய்யும் கலாட்டாவை எப்படி நிறுத்துவது? அந்தந்த சமூக மக்களை ஏமாற்ற இப்படி செய்து வாக்குகள் பெற முயற்சிப்பதே சாதிகள் பெயரில் வாக்குகள் வாங்க கூடாது என்ற தேர்தல் விதிப்படி முறைகேடுதானே? அதை நிறுத்த சிலைகளுக்கு துணி பொட்டு மூடுவதை தவிர வேறு என்ன வழி? ஊதாரணமாக எப்போதும் ஜவஹர்லால் நேருவை திட்டிக்கொண்டிருக்கும் அமைச்சர் பொன்முடி தனது முதல் ஊர்வலத்திலேயே விழுப்புரத்தில் நேரு சிலைக்கு மாலை அணிவிக்கவில்லையா? அதை நிறுத்த இதுதானே ஒரே வழி? கலைஞருக்கு இதுபோன்ற குறுக்கு வழிகளில்தான் தேர்தலை நடத்த முடியும் என்றால் யார் என்ன செய்முடியும்?

அடுத்து கலைஞர் கடிதத்தின் தாக்குதல் சாலைகளில் செல்லும் வாகனங்களில் பணம் டேஹ்டுகிறேன் என்று, ஆடு, கோழிகளை கொண்டு செல்வதை பிரியாணி போட என்று கற்பனை செய்து கொண்டு பிடிக்கிறார்கள் என்கிறார். இது தலைவரே உங்கள் உள்மனதை அல்லது உங்கள் உடன்பிறப்புகளின் திட்டத்தை படம் பொட்டு காட்டுவது போல இல்லையா? அடுத்து கொலுசுகளை, நகைகளை பிடிக்கிறார்கள் என்று வருந்துகிறார். கொலுசும், நகையும் எதற்காக மொத்தமாக கொண்டு செல்லப்படவேண்டும்? சென்ற ஆந்திரா தேர்தலில் சிரஞ்சீவி என்ற நடிகர் " மூக்குத்தி" கொடுக்க மொத்தமாக் ஆர்டர் போட்டு, கும்மிடிப்பூண்டியில் உள்ள ஒரு மார்வாடி மூலம் குறைந்த வில்லிக்கு பல ஆதிரம் மூக்குத்திகளை வாங்கி சென்றது தேர்தல் ஆணையத்திற்கு தெரிந்து விட்டதோ என்னவோ? அதை தாங்கள் கடைப்பிடிக்க திட்டமிடுவதும் புரிந்து விட்டதோ என்னவோ?

ஆகையால் முறையாக வாக்கு கேட்டு அதில் வெற்றியோ, தோல்வியோ சந்தியுங்கள். தேர்தல் ஆணையத்தின் பக்கம்தான் பொதுமக்கள் இருக்கிறார்கள். இப்போதே தொண்டர்கள் மத்தியில் தேர்தல் ஆணையம் பற்றி ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்தி அதன்மூலம் தங்களது தோல்வியை நியாயப்ப்டுத்த முயலாதீர்கள்.கடைசியாக கலைஞர் டி.ஜி.பி.ஐ மாற்றலாமா? ஜாபார் சேட்டை மாற்றலாமா? இது இதுவரை நடந்தது உண்டா? என்று கேள்வி கேட்கிறார். லத்திகா சரண் தங்களுக்கு பதில் அரசியல்வாதி போல பதில் அறிக்கை கொடுக்க சொல்லிக்கொண்டிருந்தீர்கள் என்றால் மாற்றமாட்டர்களா? ஜாபார் சேட்டு தமிழ்நாடெங்கும் "மோதல் சாவுகளை" திட்டமிட்டு போளித்தனமாக் செய்யச்ஹ்கோல்வார்: வீட்டு வசதி வாரியத்தில் முதல்வர் ஒப்புதலோடு தன் மனைவி பெயரில் வீடு வாங்குவார்.அதற்கு ஒரே நாளில் பல லட்சங்களை கட்டுவார். அதற்கு பிறகு அதை விற்க ஏற்பாடு செய்வார். கட்சி கூட்டணிக்கு வேலை செய்வார். எதிர்க்கட்சி கூட்டணியை உடைக்க சதி செய்வார்: ஆ.ராஜா நண்பர் சாதிக்கின் மரணத்திற்கு காரணமா என சீ.பி.ஐ. அவரை விசாரிக்கும். தேர்தல் ஆணையம் மாற்றக்கூடாதா?

எல்லாம் ஏன் இப்போது பெரிதாக கலைஞரால் எழுதப்படுகிறது. மதுரையில் மாவீரனாக வர்ணிக்கப்பட்ட மூத்த மகனின் மத்திய அமைச்சரவை வாகனத்தில் கடந்த சனிக்கிழமை பணம் கொண்டு சென்ற போது தேர்தல் பார்வையாளர்கள் பிடித்தபோது, உடனடியாக அடியாட்கள் இரு லாரிகளிலும், சுமோவிலும் வந்திறங்கி, ஊடகவியலாளர்களை பார்த்து டேஹ்ர்தல் பார்வையாளர்களை லார்ரி ஏற்றி கொன்றது என நாளை போடுங்கள் என்று சொன்னதனால், அந்த பார்வையாளர்கள் கதி கலங்கிபோய், பணத்தை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தபின்பு எழுதப்படுகிறதா? அடஹ்ர்குபின் தேர்தல் பார்வையாளர்கள் அதே மதுரையில் ஐந்து நாட்களாக தடுப்பு ச்ச்வடிகளை நீக்கியுல்லார்களே? அது எதனால் தலைவரே என்று கேட்கத்தோன்றுகிறது.

Tuesday, March 22, 2011

கொளத்தூர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவலியா?

சிறிய தொகுதியை தேர்ந்தெடுத்து அதில் நிறுவிடலாம் என்று, ஆயிரம் விளக்கில் நிற்க முடியாத சூழலில் ஸ்டாலின் சிந்தித்தார்.ஆயிரம் விளக்கு தொகுதியில் பல ஏழை மக்களை அவர்களது குடிசைகளில் இருந்தும், அவர்களது அடுக்கு மாடி குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளில் இருந்தும் விரட்டியடித்த ச.ம.உ ஸ்டாலின் பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற நிலைமை வந்துள்ளது. அதனால்தான் அவர் சிறிய தொகுதி ஒன்றை டேஹ்ர்வு செய்து அதில் எப்படியாவது செலவழித்து நின்று விடலாம் என்று எண்ணி நிற்கிறார். ஆனால் அவரது அதிர்ச்சிக்கு காரணமாக அமைந்த்தது அதிமுக அறிவித்த வேட்பாளரது பெயர்தான். அதாவது சைதை துரைசாமி என்ற பெயர் ஸ்டாலினை நிலை குலையச்செய்துள்ளது.

சைதையாரும் தனது வாக்கு சேகரிப்பை தொடங்கி விட்டார். அவர் சிறப்பாக தனது பக்கத்து வாதத்தை எடுத்து வைக்கிறார் என்கிறார்கள். ஏற்கனவே பகுசன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆர்ம்ஸ் ஸ்ட்ரோன்க் தன்னை வேட்பாளராக அறிவித்துக்கொண்டு எல்லோர் வீடுகளுக்கும் போய் தனது யானை சின்னத்தை கொடுத்திவிட்டார். இந்த நிலையில் ஸ்டாலின் இறக்கிறார் என்பது அவருக்கும் அதிர்ச்சி.இப்போது சைதை துரைசாமி எவரு சேர்ந்துகொண்டார். எப்படியும் கொளத்தூர் தொகுதி பதட்டம் ஆகிவிடும். நமக்கு முத்துகுமாரின் சடலம் அவரது வீட்டருகே வைக்கப்பட்ட இடமும், அதற்கு மூன்று நாட்கள் தமிழின உணவாளர்கள் கூடியது அந்த இடம்தான் என்பதும், அதனால் அங்கு போர்குற்றம் புரிந்தவர்களின் வாரிசுகளுக்கு என்ன வரவேற்ப்பு கொடுப்பது சரி என்ற எண்ணமும் உருவாகாமல் இல்லை.

பார்வதியம்மாள் அஸ்தி, சென்னை கடற்கரையில்,கரைக்கப்பட்டது

.
இன்று தமிழினத்தின் தேசியத்தலைவரை பெற்றெடுத்த தாயார் பார்வதியம்மாளின் சாம்பல் முப்பத்தொன்றாவது நாளாக கடலில் கரைக்கப்பட வேண்டிய சடங்கு முறைப்படி, சென்னையில் மாலை ஆறு மணிக்கு மேல் நடந்தது. பார்வதியம்மாளின் சாம்பலை கலசத்தில் ஏந்தி வந்த பழ.நெடுமாறன், வைகோ கடல் நீரில் மலர் தூவ தாய் கடலில் கரையவிட்ட நிகழ்ச்சி நடந்தது. நாலு மணிக்கு கண்ணகி சிலைக்கு பின்னால் உள்ள கடலில் கரைக்கப்படும் என்று நெடுமாறன் முதலிலும், பிறகு வைகோவும் அறிவுப்பு செய்திருந்தனர். அதை ஏற்ற தமிழின உணர்வாளர்கள் அங்கே முதலில் நூற்றுக்கணக்கில் திரண்டனர். நேரம் ஆக, ஆக, அது பல நூறு மக்களாக ஆனது. காவலுக்கு நின்ற காவலர்கள் திகைத்து நிற்க, ஊடகங்கள் அனைத்தும் வந்து குவிய, காவல்துறையின் படம் பிடிக்கும் நபர் படம் பிடித்து தள்ள, அதையெல்லாம் சட்டை செய்யாமல் பிரபாகரன் படங்களுடனும், பார்வதியம்மாள் படங்களுடனும், புலிக்கொடிகளுடனும், தமிழின உணர்வாளர்கள் ஆயிரக்கணக்கில் திரளத் தொடங்கினர்.

இரண்டாயிரத்திற்கு மேல் கூட்டம் திரண்டிருந்தது. ம.தி.மு.க.வை சேர்ந்த பெண்கள் பல பத்து பேர் திரண்டிருந்தனர். பெரியார் திராவிட கழகத்தின் தம்பிகள் தங்கள் குடும்பம் சகிதம் திரண்டு வந்திருந்தனர். வைகோவும்,நெடுமாறனும் வந்தவுடன் திரண்டிருந்த கூட்டம் கடலை நோக்கி புறப்பட்டது. வீரவணக்கம் வீரவணக்கம், பார்வதியம்மாளுக்கு வீரவணக்கம் என்ற முழக்கங்களுடன், மாபெரும் பேரணியாக தமிழர்கள் கடலை நோக்கி நடந்து வந்த காட்சி மகிழ்ச்சியை ஊட்டியது. புளித்தாயார் பார்வதியம்மளுக்கு வீரவணக்கம் என்றும் முழக்கம் இட்டனர். புலிகள் மீதான தடையை ரத்து செய்ய என்றும் அரசியல்முழக்கங்கள் முழங்கப்பட்டன. ஓவியர் வீர சந்தானம், கவிஞர் காசி அனந்தன், மன்ழூர் அலிகான், ஆகிய உணர்வாளர்களும் வந்திருந்தனர். மீனவர் சங்க தலைவர்களும் திரண்டிருந்தனர். கடலில் இறங்கிய தமிழர்களின் குரல் சிங்களர் ஆளும் தீவை நோக்கி திரும்பும், அங்கு தமிழர் மறுவாழ்வை பெற்றுத்தர எழும் என்பதில் ஐயமில்லை.

Monday, March 21, 2011

அவசர சிகிச்சையை அதற்குத்தானே பயன்படுத்தறாங்க?

ஐந்து கோடி ரூபாயை ஒவ்வொரு வேட்பாளருக்கும் கொடுக்கணும், அவங்க அதை சிந்தாமா, சிதறாம, வாக்காளர்களுக்கு கொடுக்கணும்னு தலைவர் திட்டமிட்டார். அதற்குள் தேர்தல் ஆணையம் வாகனங்களில் கொண்டு செல்லும் பணத்தை வாரிவிடுவோமென மறிக்கத்தொடங்கினர். இப்போது தொண்டர்கள் கண்டுபிடித்துள்ள புது வழி செயல்படுகிறது.108 வாகனம் அவசர சிக்கைச்சைகளுக்கு மக்களுக்கு உதவத்தானே உள்ளது? அதனால் அதில் வட்ட செயலாலட் போய் படுத்துக்கொண்டால், வட்ட செயலாளர் தனியே செல்ல முடியுமா? அதர்காக அவருடன் ஒரு சிறு கோஷ்டி செல்லும்.அந்த கோஷ்டி பல, பத்தாயிரம் லட்சத்தை அலட்சியமாக நோய் வாய்ப்பட்ட வட்டத்துடன் eடுத்து சென்று விடுகின்றனர்.பணம் வேண்டும் நிலையில் மக்களும், பணம் கொடுத்து வாக்கு பெரும் நிலையில் மக்களும் இருப்பது அவசர சிகைச்சைக்குத்தானே?

இப்படித்தான் கிராமங்களில் வாக்குக்கு பணம் பட்டுவாடா ஏக போக மாக நடக்கிறது.அதுதவிர கிராமங்களில் உள்ள பெரிய மனிதர்கள் சிலரை வரவழைத்து அவர்களிடம் பணம் கொடுத்து பேருந்தில்; அவர்களை ஏற்றி அனுப்பிவுடுகின்றனர். அவர்கள் தங்கள், தங்கள் கிராமங்களில் போய் விநியோகம் செய்துவிடுகிறார்கள்.இது தேர்தல் அனையத்திற்கு தெரிந்தால் ரிந் என்ன?, தெரியாவிட்டால் என்ன?

Friday, March 18, 2011

கெட்டிக்காரர் கருணாநிதிதானே?

அய்யா. அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் என்பதாக ஒன்று 160 பேருடன் வெளிவந்தது. அதில் தேமுதிக,சீ.பி.ஐ.,சீ.பி.எம்.,புதிய தமிழகம், போன்ற கட்சிகள் கேட்டிருந்த விருப்ப தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை அறிவித்திருந்தார்கள்.அதனால் அவர்கள் கடும் கோபத்திற்கு உள்ளானார்கள். அவர்கள் அனைவரும் தேமுதிக அலுவலகத்தில் கூடினார்கள். அவர்களுக்குள் ஒரு மூன்றாவது தனி அணியை கட்டிக்கொள்ளலாமா என்று பேசத்தொடங்கினார்கள்.அவை அனைத்தும் ஊடகங்களில் வந்துகொண்டே இருந்தது. அம்மா அதுபற்றி தெரியாதவராக இருந்தார். திடீரென ஒரு ஆங்கில காட்சி ஊடகம் பார்த்தார். அதில் தனது உருவபொம்மையை மதிமுகவினர் எரிப்பதை பாரதத்தார். அதன் பிறகே கேள்விப்பட்டு அதிமுக தன்னிச்சையாக ஒரு வேட்பாளர் பட்டியலை அறிவித்ததை தெரிந்து கொண்டார் என்கிறது ஒரு கதை. இந்த கதை சோ தயார் செய்து வெளியிட்டது என்றும் கூறுகிறார்கள்.

அந்த கதையை விவரமாக தினமலர்,தினமணி ஆகியவை வெளியிட்டன. அதன்படி ஜெயலலிதா சிசிகலாவின் உறவினர் ராவணனிடம் ஒரு அதி முக முதல் பட்டியலை 70 பேருக்கு தயார் செய்து கொடுத்ததாகவும், அதை மறைத்துவைத்துவிட்டு ராவணன், இன்னொரு பட்டியலை அதாவது 160 பேர்கொண்ட முழு அதிமுக பட்டியலை வெளியிட்டுவிட்டார் எனவும் அந்த ஏடுகள் கூறின.அப்படி ஒரு சதிகார பட்டியலை தயாரித்தவர்கள் என்று புதிய பார்வை நடராசன், திவாகரன், டி.டி.வி.தினகரன்,டாக்டர் வெங்கடேஷ் என்ற சசிகலாவின் உறவினர்கள் அந்த ஏடுகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அதாவது நடராசன் தலைமையிலான ஒரு கும்பல் என்பதாக அது அம்பலமானது.அதனால் தான் சீ.பி.ஐ.,சீ.பீ.ம், ஆகிய கட்சிகளின் அகில இந்திய தலைமையுடன் நல்லுறவு கொந்த அல்லது நல்லுறவு வேண்டி நின்ற ஜெயலலிதா இப்படி அவர்கள வென்று வந்த தொகுதிகளையும் அவர்களிடமிருந்து பிரிப்பாரா என்ற சந்தேகம் எழுந்த ஒரு நாளுக்குள் சதிதான் என அம்பலப்பட்டுவிட்டது.

எதற்காக நடராசன் இப்படி செய்யவேண்டும்? சசிகலா குழுவினரின் "மிடாஸ்" என்ற சாராய தொழிற்ச்சாலையில் இருந்து, பல்லாயிரம் கோடிகளுக்கு கருணாநிதி அரசு டாச்க்மாக் என்ற அரசு சாராய கடைகளுக்கு மது வாங்கிவருகிறது. அதன்மூலம் போயஸ் தோட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் சசிகலா கும்பலுக்கு அதிகமான அளவில் வணிகம் கொடுத்துவருகிறது. இவாறு கருணாநிதி அரசு கொடுத்துவருவது சசிகலா கும்பலை கருணாநிதியின் விசுவாசத்திற்கு கொண்டுசென்றுள்ளது. இதுதவிர புதிய பார்வை நடராசன் வைத்திருக்கும் வங்கி கணக்கை கருணாநிதியின் காவல்துறை ஓராண்டிற்கு முன்பே கணக்கு பார்த்து பல்லாயிரம் கோடி எப்படி வந்தது என்றும் அதன் வட்டியாக பல, பல லட்சங்களை நடராசன் பெற்றுவருவதையும் கண்காணித்து கொடுக்கி போட்டது. அதன்விளைவாக நடராசன் கருணாநிதியின் காவல்துறைக்கு விசவாசம் செய்பவராக ஆகிவிட்டார். அப்போதிலிருந்தே அவர் அதிமுக கட்சிக்கு உள்ளிருந்து வரும் முரண்பாடுகளை கேட்டறிந்து அவற்றை கருணாநிதி கட்சி தலைமைக்கு கூறி அதன்மூலமே பல பிரமுகர்களை கட்சி மாறி தி.முக விற்கு தாவ வழி செய்தார்.

இவாறு ஓராண்டாக செய்துவரும் ஒரு நிழல் மனிதர் தன்னைப்பற்றி எப்போதும் அதிமுக தலைக்கு வழிகாட்டிக்கொண்டிருப்பதாக போய் கூறிவருவார். அதை நம்பிய மதிமுக தலைவர் வைகோ, நடராஜனது வீட்டு முன்பே பத்து நாட்களாக தவம் கடந்ததால், அவருக்கு தோட்டம் அழைப்பு இடிக்கவில்லை. நடராஜனை எதிரி என்று தெரிந்திருந்த ஜெயலலிதா அவரது கும்பல் செய்யும் வேலைகளை அறிந்திருக்கவில்லை. உதாரணமாக் நடராசன் தம்பி ராமச்சந்திரன் தோட்டத்தில் நல்ல பெயர் வாங்கி நம்பிக்கைக்குரியவர் என்று அங்கீகரிக்கப்பட்டவர். அவர் அண்ணன் நடராஜனுடன் எப்போதும் தொடர்பிலேயே இருந்துவருகிறார். ஒவ்வொரு கட்டத்திலும் விசுவாசம் கேட்டவர் என்று அடையாளம் காணப்பட்டு ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட திவாகரன், டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேஷ், ஆகியோர் சேர்ந்து தயார் செய்த பட்டியலில் தங்கள் குழுவிடம் காசு கொடுத்த தங்கள் சமூக தாவது முக்குலத்தோர் பட்டியலை ராவணன் என்ற தங்கள் சொந்தம் மூலம் தயார் செய்தனர்.84 அதிமுக வேட்பாளர்கள் அந்த சமூகத்தவர் என்றும் கூறுகிறார்கள்.

இவ்வாறு எதிர்கட்சிக்குள் கலக்கம் ஏற்பாடு செய்த கருணாநிதி கெட்டிக்காரர் தானே? இப்போது தோட்டத்திற்குள் சண்டை என்றும், சசிகலாவிடம் ஜெயலலிதா கோபம் என்றும் வருகின்ற செய்திகள் யாருக்கு என்ன லாபம்? கருணாநிதி எப்போதும் தான் தோற்றுப்போவோம் என்று முடிவுக்கு வந்தால் இப்படித்தான் சதி செய்து அடுத்த கட்சியின் சோலியை முடிப்பார். அடுத்த கட்சியாக சாதிக் பாட்சசாவும் இருக்கலாம், ஜெயலலிதா கட்சியும் இருக்கலாம்.

Wednesday, March 16, 2011

சாதிக் பாட்சா முதல் தற்கொலையா?

ஆ.ராஜாவின் வணிக பங்காளி சாதிக் பாட்சா தற்கொலை என்பது பயங்கர அதிர்ச்சி ன்னு மக்களை உலுக்கிவிட்டது. அவர் பெரம்பலூரில் ராஜாவின் நண்பராபா இருந்தாலும், சொந்த ஊர் பள்ளப்பட்டி. அவரை சென்ற ஆண்டு டிசம்பரில் சீ.பி.ஐ. விசாரணை செய்தது. அவருக்கு 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நேரடி தொடர்பு இருப்பதாக யாரும் கூறவில்லை.அவர் ராஜவின் பணத்தை கையாண்டதில் முக்கிய ஆள் என்றுத்தான் கூறுகிறார்கள். அவரை சீ.பி.ஐ. அடுத்த விசாரணைக்கு டில்லிக்கு அழைத்ததாக ஓர் தகவல் கூறுகிறது.

அதை ஒட்டி நடந்த மரணமா எனவும் வினவுகிறார்கள்.நமக்கு நினைவுக்கு வருவதெல்லாம், ஊழல் சிக்கல் வந்த போது, ஸ்டாலின் நண்பர் அண்ணாநகர் ரமேஷ் குடும்பத்துடன் இதுபோலவே தற்கொலை செய்துகொண்டார்.புலிகளுக்கு உதவியதாகவும், அதில் ப்வாக்கத்தில் நிலம் பெடர்தாகவும் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மேலிருந்து வந்த மிரட்டலில் முன்னா காவல் ஆணையர் துறை மாத்திரைகள் பொட்டு தற்கொலை செய்து கொண்டார். ராஜீவ் கோளை நீரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு காவலில் இருக்கும்போதே வேதாரண்யம் சண்முகம் தற்கொலை செய்துகொண்டார்.

இவ்வாறு சான்றுகளை மறைக்க இந்த மரணங்களா என்ற கேள்விகள் எழுகின்றன.

Tuesday, March 15, 2011

பகுஷிமா டையசி தொடங்கி, கூடங்குளம் வரை....

இன்று ஜப்பானின் பகுசிமா டையசியில் உள்ள அணு உலைகள் உருகுவதும், வெடிப்பதும் ஊடக அதிர்ச்சிகளாக வெளிப்படுகின்றன.இந்த விபத்துக்கள் சுனாமியின் பேரலைகள் மற்றும் நில அதிர்வுகளால் ஏற்பட்டுள்ளன என்பது படம் பிடித்து காட்டப்படுகிறது. இதுவரை பத்து லட்சம் மக்கள் இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டோக்கியோவில் உள்ள மக்களுக்கும் அரசு எச்சரிக்கை கொடுத்துள்ளது. மழை பெய்யும்போது வீட்டு கதவுகளை மூடி வைத்துக்கொள்ளுங்கள், கழுத்தில் உள்ள தைராயிடு சுரப்பிதான் முதலில் அணுக்கதிர் வீச்ச்சால் தாக்கப்படும் என்பதால், அதை மூடி வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு ஜப்பான் அரசு எச்சரிக்கை அறிவித்துள்ளது.

அறிவியலாளர் வி.டி.பத்மநாபன் ஒரு பெரும் விளக்கத்தையே நமக்கு அனுப்பி உள்ளார். ஜப்பானின் வட கிழக்கு பகுதியான பாகுஷிமா டையசுயில் நடந்த ஆபத்துக்கள் எப்படி அகிலம் தழுவியது என்று விளக்குகிறார்.1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 சோவியத் யூனியனின் செர்னோபில்லில், நடந்த அணு உலை விபத்து பற்றி நினைவூட்டுகிறார். அந்த செர்நோபில் விபத்து இப்போது ஜப்பானில் நடந்ததை காட்டிலும் மிகவும் சிறியது என்கிறார். அத்தகைய செர்நோபில் விபத்தின் விளைவாக பறந்து வந்த அணு கதிர்வீச்ச்சு அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடல்களை கடந்து வந்தது என்கிறார்.

அதே 1986 ஆம் ஆண்டு மே மாதம் பத்தாம் நாள் கூடங்குளத்தில், மற்றும் கல்பாக்கத்தில் உள்ள சுகாதார, பௌதீக சோதனை சாலைகளில் அணு கதிர்வீச்சு அயோடின், செர்னோபில்லில் இருந்து நகர்ந்து வந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது என்கிறார் இந்த விஞ்ஞானி. இந்த அணு விபத்து நடந்து எண்பது நாட்களுக்கு மக்கள் பாலியல் உறவுகளை காண்டம் மூலம் மட்டுமே வைத்துக்கொள்ளல் வேண்டும் என்கிறார். மூன்று அணு உலைகள் இப்போது உருகிவிட்டன. அடுத்து பல அதேநிலைமையை எட்டபோகின்றன. ஒரு வாரம் கழித்தே அறிவியலாளர்கள் எந்த அகவு அணு கத்ரிசீச்ச்சு வெளியாகி உள்ளது என கூறமுடியும்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு செர்னோபில்லில், விபத்தின் விளைவாக காற்றில் 300000000000000000000000000 அணு கதிர்கள் கலந்தன என்கிறார் பத்மநாபன்.ஒவ்வொரு அணு கதிரும், புற்று நோயையும், மன நோயையும் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என்று எச்சரிக்கிறார். பல லட்சம் மக்கள் அந்த பாதிப்பு உள்ள பகுதிகளை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள், அந்த கதிர்வீச்சின் துகள்கள் பூமியின் எல்லா பகுதிகளுக்கும் பரவும் என்கிறார் அவர்.கடல் வழியாக இலங்கை தீவிற்கும் அது பரவி வருவதாக இப்போது ஒரு செய்தி கூறுகிறது. ஆனால் இனிசிய அரசு மட்டுமே எந்த ஒரு பாதுகாப்பையும் மக்களுக்கு செய்யாமல் இருக்கிறது. அணு கதிர்களை கண்டறியும் கருவி கூட இங்கே எல்லா முக்கிய அலுவலகங்களிலும் இல்லை.

இந்தியாவின் கிழக்கு கடற்கரை ஓரத்தில் நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணு உலை இன்னும் சில மாதங்களில் தனது உற்பத்தியை தொடங்க இருக்கிறது. அதை எதிர்த்த போராட்டம் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழ்நாடு தழுவிய அளவில் நடந்து வந்தது. அதை காதில் வாங்கி கொள்ளாமல் அங்கே நில அத்ரிவுகளுக்கு உள்ள வாய்ப்பை பூமி ஆய்வாளர்கள் கூறியும் கூட அரசு செவி மடுக்க வில்லை. தமிழன் ஈழத்தில் அழ்க்கப்படுவதில் பங்கு கொண்ட டில்லி, இப்போது தமிழன் தமிழ்நாட்டில் அணு உலையால் அழிக்கப்படுவதை கண்டுகொள்ளுமா?

கூடங்குளத்தில் எட்டு அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும், 235 யுரேனியத்தின் மூன்று கிலோ கிராம் கழிவை கக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொரு நாளும் அந்த எட்டு அணு உலைகளும் 5000000000000000000000000 பொருள்களை உற்பத்தி செய்யும் தகுதிபடைத்தவை என்கிறார் பத்மநாபன்.அதிவிரைவு ப்ரோடோ தன்மை அணு உலைகளை கூடங்குளத்தில் நிறுவுவதை பொதுமக்கள் மத்தியிலும், அறிவியலாளர் மத்தியிலும் கடும் அளவில் எதிர்த்தும் கூட அரசு செவி மடுக்கவில்லை. அதை இந்திய மற்றும் ரஷிய அறிவியலாளர்களே சோதனை செய்து பார்த்து எதிரத்துள்ளனர்.

அதேபோல கூடங்குளம் அணு உலை அருகே சுனாமி நிவாரணம் என்ற பெயரில் மீனவர்களுக்கு காசா என்ற கிருத்துவ தொண்டு நிறுவனம் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் கட்டிக்கொடுத்துள்ளனர். அமெரிக்கா ப்ராட்டச்டன்ட் திருச்சபைகளின் உதவியில் அந்த வீடுகள் அவ்வளவு ஆபத்தான இடத்தில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. அதை இடம் பெயர்த்து வேறு இடத்தில் கட்டிக்கொடுக்க அரசுக்கு துப்பு இல்லை. இப்போது டையிச்சியில் வெடித்த முதல் அணு உலை 40 ஆண்டுகள் பழையது. அதற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் சோதனைக்கு பிறகு இன்னும் பத்து ஆண்டுகளுக்கு சேவை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்தியாவிலும் பழைய அணு உலைகள் மும்பையில் தாராப்பூரில் உள்ளன என்கிறார் விஞ்ஞானி. அதற்கும் டையிசி போலவே அடுத்த பத்தாண்டுகளுக்கு பணிக்காலம் நீட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார் அவர். இந்தியாவில் இந்த அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும். அதன்மூலம் உண்மையில் ஒரு விழுக்காடு மின் உற்பத்திதான் கிடைக்கிறது. ஆனால் மன்மோகன் அரசு அமெரிக்காவுடன் போட்டுள்ள ஒப்பந்தப்படி ஆக்கத்திற்கான அணு உலைகள் என்ற பெயரில் இதுபோன்ற தரமில்லா அந்நிய அணு உலைகள் வந்து இறங்கப்போகின்றன.

சூரிய ஒளி மின் உற்பத்தி எந்த ஒரு ஆபத்தையும் கொடுக்காது. அதுபோன்ற உற்பத்திகளுக்கு நமது மக்கள் போராடுவார்களா?

Monday, March 14, 2011

ஆளுக்கு அஞ்சு கோடி கொடுப்போம்

தமிழ்நாட்டில் தேர்தல் வர இருக்கிறது. அதற்கு எல்லோரும் போல தி.மு.க. தலைமை தயார் செய்யவதில்லை. திருமங்கலம் சூத்திரம், கைகொடுத்ததால், அதற்கு முன்பே 2006 பொது தேர்தலில் தொகுதிக்கு ஒன்றரை கோடி செலவு செய்த அனுபவம் இருப்பதால், இரண்டையும் சேர்த்து இப்போது கடைப்பிடிக்கலாம் என்று எண்ணுகிறது.நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 2009 இல் அதே அனுபவம் மீண்டும் கை கொடுத்தது.


அதன்பிறகு எங்கள் தலைமைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் கணிசமான பணம் கைக்கு வந்ததால் தைரியமாக செலவு செய்யலாம் என்று நினைப்பதாக தி.மு.க. பிரமுகர்கள் கூறுகிறார்கள்.அதற்காக தலைமை ஏற்கனவே ஒவ்வொரு வாக்குசாவடி குழுவிற்கும், அதாவது பூத் கமிட்டிக்கும், முதல் தவணையாக 3000 ரூபாயும், இரண்டாவது தவணையாக 5000 ரூபாயும் கொடுத்து முடித்தாயிற்று. அதில் பகுதி, வட்டம், கிளை எடுத்தது போக கணிசமான பணம் ஒவ்வொரு வாக்குசாவடி குழுவிற்கும் போயசசேர்ந்துர்ந்துவிட்டது. இது தொண்டர்களுக்கு உற்சாகப்படுத்தி வேலை செய்ய வைப்பதற்கான பணம்தான்.இதை வாக்காளர்களுக்கு கொடுக்கும் பணத்துடன் போட்டு குழப்பிக்கொள்ளகூடாது.

நாலு சக்கர வாகனங்களில் பணம் கொண்டு வந்தால் தேர்தல் ஆணையம் பிடிக்கிறது. எங்கள தலைமை அடுத்த தந்திரத்தை அமுல்படுத்துகிறது.. இரண்டு சக்கர மோட்டார் சைக்கிள்களில்தான் இந்த முறை எங்களது இரண்டாவது தவணையான பூத் கமிட்டி பணம் வந்து சேர்ந்தது. அதனால் கள்ளன் பெருசா, காப்பான் பெருசா என்றால் கள்ளன்தான் பெருசு. இவாறு தி.மு.க. முக்கிய பிரமுகர் கூறினார்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் தி.மு.க. தலைமை ஐஞ்சு கோடி கொடுக்கிறது. அது மக்களுக்கு சேரவேண்டிய பணம். நகர்ப்புறங்களில் உள்ள வாக்காளர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு மாற்றி போட்டுவிட வாய்ப்பு அதிகம் உள்ளது.அவர்களுக்கு மனச்சாட்சி இல்லை. அதனால்தான் நகர்ப்புறங்களை எங்கள் தலைமை மாற்று கட்சிகளுக்கு கொடுக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பணம் கைநீட்டி வாங்கி விட்டால் கட்டாயமாக எங்களுக்கு தான் போடுவார்கள். அதனால் அங்கேதான் வாக்காளர்கள்
ஒவ்வொருத்தருக்கும் நாங்கள் 2000 , 3000 என்று தொடங்கி 5000 வரை கொடுக்க இருக்கிறோம்.அதில் எங்களுக்கு கணிசமாக வாக்குகள் விழவாய்ப்பு கூடுதலாக இருக்கிறது. இவாறு அந்த தி.மு.க. வாக்குமூலத்தையே பெருமையாக சொல்லி க்கொண்டிருந்தார்.

யார் இந்த புகழேந்திரன்?

நான்கு நாட்களாக ஊடகங்களில் ஒரு ஈழத்தமிழரின் பெயர் மாபெரும் பயங்கரவாதியாக சித்தரிக்கப்படுகிறது. அவர் பெயரை புகழேந்தி என்றும் புகழேந்திரன் மாஸ்டர் என்றும் அழைக்கிறார்கள். அதற்கும் மேலாக அவர் பொட்டுஅம்மானால் தயாரிக்கப்பட்டவர் என்று வேறு தி.ஹிந்து ஆங்கில நாளேட்டில் வெளியிடவைத்ததில் மகிந்தா வெற்றிபெற்றுவிட்டார். அந்த புகழேந்திரன் யார் எப்று நாமும் அலசினோம். அதில் பல உண்மைகள் கிடைத்தன.

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் வான்னி போரில் சரணடைந்தோர் பட்டியலில் இந்த புகழேந்தி வாத்தியும் இருந்தார். அப்படித்தான் ஈழத்தமிழர்கள் அவரை அழைக்கிறார்கள். சரணடைந்த போராளிகளில், பலரும் சுட்டு கொல்லப்பட்டபோது, அதில் புகழேந்தி வாத்தி கொல்லப்படவில்லை என் என்பது நமக்கு தெரியாது. அவர் அவ்வளவு முக்கிட ஆளில்லை என்றுகூட சிங்களம் நினைத்திருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு கிடைக்காத சலுகை வாத்திக்கு கிடைத்தது. அவர் இந்தியா செல்ல அனுமதிக்கப்பட்டார். ஏன் என்று நமக்கு புரியவில்லை. அதேநேரம் அதே சிங்களம் இப்போது அவரை பயங்கரவாதி என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு பிரதமரே கூறியுள்ளது ஏன் என்பதே இப்போதைய கேள்வி.

இந்தியாவிற்கு அப்போதே வந்த புகழேந்தி வாத்தி இந்திய உளவுத்துறையின் நேரடி பராமரிப்பில் இருக்கிறார் என்பதும் தொடர் செய்தியாக தெரியவந்துள்ளது. அதாவது பா.சிதம்பரம் என்ற ஒரு பெரிய மனிதரின் கட்டுப்பாட்டில் அந்த வாத்தி இருப்பதாக தெரிகிறது. அவர் மூலம் இந்திய உளவுத்துறையான "ரா" கேரள-தமிழ்நாட்டு எல்லையில் சிலரை வைத்து மீண்டும் ஈழத்தமிழர்களை பலிகடா ஆக்கி இந்திய அரசுக்கும், அதன் இந்திய முதலாளிகளுக்கும் இலங்கை தீவில் வணிகம் செய்ய ஒப்பந்தங்கள் போட இலங்கை அரசை பயமுறுத்த முடியுமா என சிந்திக்கிறார்களாம்.

அந்த வாத்தியை காரணம் காட்டி இந்த புளுகு மூட்டைகள் அவிழ்த்து விடுபவை அதைவிட ஆபத்தானவை. அதாவது வாத்தி ஆட்கள் இந்திய தலைவர்களை கொள்ள திட்டமிட்டுள்ளனராம். இத்தகைய புருடாக்களை சிங்களம்தான் தயார்செய்து அவிழ்த்து விட்டதா என்றால் அதுவும் இல்லை. இந்த புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டதும் சிதம்பரம் தலைமையிலான உள்துறைதான். ஏற்கனவே நாம் எழுதியதுபோல, நான்கு வாரங்களுக்கு முன்பே மத்திய அரசின் உள்துறை இதேபோன்ற அறிககையை தமிழக அரசுக்கு அனுப்பியது என்று அதே ஹிந்து ஏடு செய்தி வெளியிட்டது.

தி.மு.க.வுடன் கூட்டணி முறிந்துவிடும் என்றும் அப்போது தி.மு.க. ஈழத்தமிழர் பிரச்னையை சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பரப்புரை செய்யும் என்றும் எண்ணிய சிதம்பரம் அப்படி ஒரு அறிககையை கொடுக்க வைத்து, தி.மு.கே. தலைமையை மிரட்டிவைக்க அதைசெய்துள்ளார். அப்போது காவல்துறை தலைமை அதிகாரி லத்திகாசரண் மூலம் அப்படி ஒன்றும் புலிகளின் முகாம்கள் தமிழ்நாட்டில் இல்லை என்று அறிக்கை கொடுக்கசொன்ன கருணாநிதி
இப்போதும் இலங்கை பிரதமருக்கு பதில் கொடுக்க லத்திகாசரனையே பயன்படுத்தி உள்ளார். ஏன் என்றால் அந்த இலங்கை பிரதமரின் அறிக்கை அல்லது நாடாளுமன்ற பேச்சு சிதம்பரம் அலுவலகத்தில் தயாரான ஒரு அறிக்கை எனபது வெள்ளிடை மலையாக அனைவருக்கும் தெரியும்.

இலங்கை பிரதமர் ஜெயரத்னே தங்கள் நாட்டில் அவசர நிலைமையை தொடர்வதற்காக, அதன்மூலம் மட்டுமே சிங்களர் மத்தியில் திரண்டுள்ள அதிருப்தியை அடக்குவதற்காக இந்த இந்தியாவில் புலி முகாம்கள் என்ற சாக்கை பயன்படுத்திக்கொண்டார்.இப்போதும் இந்திய மத்திய அரசு அதற்கு பதில் கொடுக்கிறேன் என்ற பெயரில் இல்லாததை சொல்வதாக இலங்கை அரசை குற்றம் சாட்டவும் இல்லை: லம்டிக்கவும் இல்லை: மாறாக கெடுவாயப்பானது [ துரதிரஷ்டமானது] என்று மட்டுமே மத்திய அரசிலிருந்து பதில் கொடுத்த்துள்ளது. அதிலிருந்தே இவர்களது விளையாட்டை யாரும் புரிந்து கொள்ளலாம்.

Thursday, March 10, 2011

கருணாநிதிக்கு எதிராய் சிதம்பரம் குத்திய கத்தி.

கருணாநிதிக்கு எதிராய் சிதம்பரம் குத்திய கத்தி.
பயன்படுத்திய ராஜபக்சே
கருணாநிதியின் தேர்தல் தந்திரங்கள், கூட்டணி தந்திரங்கள் ஆகியவற்றை உணர்ந்த காங்கிரஸ் இந்த முறை விழிப்போடு இருந்து அதிக தொகுதிகளும், ஆட்சியில் பங்கு கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தி விட வேண்டும் என்று எண்ணித்தான், டில்லி காங்கிரஸ் காய் நகர்த்தியது.அதில் மௌன அடிமையாக இருந்த தங்கபாலுவை விட, ஜெயந்தியை விட, வாசனை விட, வேகமாக இருந்தவராக சிதம்பரம் கவனிக்கப்பட்டார். ஸ்டாலின் அவர்களை அவமரியாதை செய்தபோதும், துரைமுருகன் நக்கல் செய்து கிண்டலடித்தபோதும், அதிக ஆத்திரப்பட்டவர் சிதம்பரம்தான். அதுகூட ஒரு கார்பொரேட் தந்திரமா என்று தெரியாது.

அத்தகைய சூழலில், மூன்று வாரங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம்கள் வைத்திருப்பதாகவும், அதில் பயிற்சி பெற்ற புலிகள் தலைவர்களை கொள்ள இருப்பதாகவும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஒரு செய்தியை அனுப்பியுள்ளது என்று தி ஹிந்து ஆங்கில நாளிதழில் வெளியிட்டிருந்தார்கள். அதை உடனடியாக தமிழக அரசின் டி.ஜி.பி. மூலம் மறுத்து அறிவுப்பு வெளியிட்டார்கள். அது காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசுக்கும், தி.மு.க.வின் மாநில அரசுக்கும் உள்ள போர் என பலரும் அக்கறையற்று இருந்துவிட்டனர். காங்கிரஸ் தி.மு.க. கூட்டணிக்கட்சிகளின் உள்முரன்பாடுதானே என்று கூட பலரும் சும்மா இருந்துவிட்டனர்

அதுவே இப்போது விஸ்வரூபம் எடுத்து விட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் பிரதமர் ஜெயரத்னே, விடுதலை புலிகள் தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் பயிற்சி முகாம்களை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதில் ஒன்று ருத்திரகுமரால் நடத்தப்படும் நாடு கடந்த தமிழீழ அரசு என்றும், இன்னொன்று நர்டியவன் தலைமையிலான முகாம் என்றும், பிரிதொன்று போட்டு அம்மான் வழிகாட்டலில் இருந்த விநாயகம் என்றும்,புகழேந்த்ரா என்று அவர் அழைக்கப்படுவார் என்றும் கூறியுள்ளார். இந்த செய்தியை இலங்கை அரசுக்கு இந்திய மத்திய உளவு அமைப்பான "ரா"கொடுத்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் உள்துறை தி.மு.க. அரசு மீது சேற்றைவாரி எறிய தமிழ்நாட்டில் விடுதலை புலிகளது முகாம் இருப்பதாக கூறியது.

தி.மு.க.விற்கும் காங்கிரசுக்கும் காய் விட்டுக்கொண்ட நேரத்தில் அத்தைகைய குற்றச்சாட்டை காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஏற்பாட்டில் செய்தார்கள். இது இந்தியாவின் மத்திய அரசு வழமையாக செய்துவரும் ஒரு தந்திரம்தான்.அதாவது மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் முரண்பட்டு வந்த நேரத்தில் எல்லாம் மத்திய உள்துறை இப்படி மோசமான குற்றச்ச்காட்டை வெளியிடும். அதுகண்டு மாநில கட்சிகள் அசைவர். இதே தந்திரத்தை 2004 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி நடக்கும் போது மத்திய அரசு செயது பார்த்தது.அப்போது ஜெயலலிதாவிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டது.அப்போது சிவராஜ் பட்டீல் உள்துறை அமைச்சராக இருந்தார்.

முதல்வர் செல்வி.ஜெயலலிதாவை கொள்ள இரண்டு பெண் புலிகள் வந்திருப்பதாக அப்போது உள்துறை அறிக்கை கூறியது. விசாரித்ததில் அதுபோன்ற ஒரு புகார் வந்ததாகவும், அதை ஐ.பீ.என்ற மத்திய உளவு நிறுவனம் சம்பவம் பற்றி கூறப்பட்ட மணப்பாக்கம் சென்று பார்த்ததாகவும் அவை அத்தனையும் போய் என்றும் அப்போதே உள்துறைக்கு செய்தி அனுப்பி விட்டதாகவும் கூறினார்கள்.ஆனால் அதே விஷயத்தை உள்துறை ஜெயலலிதா ஆட்சி பற்றி கெட்ட பெயரை உருவாக்கவும், சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக மத்திய அரசுக்கு அறிக்கை தரவும், அந்த குற்றச்சாட்டை பயன்படுத்த முயன்றது. அதை ஜெயலலிதா அரசு கடுமையாக எதிர்த்து அறிக்கை விட்டதாலும், ஜெயா தொலைக்காட்சியில் அது பற்றி விரிவாக விவாதம் செய்து அம்பலப்படுத்தியதாலும், அந்த தந்திரத்தை காங்கிரஸ் மத்திய அரசு கைவிட்டது.


அந்த நேரத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றில் ஆண்டு அறிக்கையில் மத்திய உள்துறை இவ்வாறு கூறியிருப்பதை கேள்வி கேட்டது. அதாவது அதற்கு முந்திய ஆண்டு ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி தனது ஆண்டு அறிக்கையில் தமிழ்நாடு பற்றி இப்படி ஒரு குற்றச்சாட்டை எழுப்பாத போது, ஓராண்டிற்குள் எந்த ஒரு வன்முறையும் தமிழ்நாட்டில் ஈழப்போராளிகளால் நடக்காத போது, எப்படி காங்கிரஸ் அரசு இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறுகிறது என்று அந்த ஆங்கில ஏடு சென்னை பதிப்பில் தீட்டியிருந்தது. அப்போதே மத்திய உள்துறை மாநில அரசுகளை மிரட்ட இப்படி புலிகள் பெயரால் மிரட்டல்களை செய்வதை பழக்கமாக கொண்டுள்ளது என்பது அம்பலமானது.

இப்போது கருணாநிதி அரசுடன் அல்லது கருணாநிதி தலைமையிலான தி.மு.க. கட்சியுடன் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு பிரச்சனைகள் எழுந்துள்ள நேரம். இன்னமும் சொல்லப்போனால் மத்திய அரசில் சிதம்பரம் உள்துறைஅமைச்சராக பொறுப்பேற்றுள்ள நேரம்.சிதம்பரத்தின்செயல்பாடுகளில் தி.மு.க.அரசுக்குஎதிராக ஒவ்வொரு காய்களும் நகர்த்தப்பட்டபோது, விடுதலை சிறுத்தை கட்சியின் ஒரே சட்ட மன்ற உறுப்பினரான ரவிக்குமார் முதல்வர் கருணாநிதியை வழக்கம் போல பார்க்கசெல்கிறார். அப்போது தேத்தலில் தோற்றுப்போன சிதம்பரத்தை எதற்க்காக வெற்றி பெற்றதாக அறிவிக்க வைத்தீர்கள் என்று வினவினார். அதற்கு பதிலளித்த முதல்வர் நானா செய்தேன்.என் பய்யன் செய்துவிட்டான் என்று விடையளித்துள்ளார். அந்த அளவிற்கு சிதம்பரத்தின் ச்யல்பாடுகளில் கருணாநிதி சந்தேகம் கொண்டிருந்தார்.

அதே சித்ம்பரம்தான் இப்போது தி.மு.க. காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிகளின் எண்ணிக்கை பற்றியும், ஆட்சியில் பங்கு பற்றியும் முரண்பாடுகள் வந்தபோது, துரைமுருகன் கேலி செய்தார் என்றும், ஸ்டாலின் நாற்காலியை தள்ளிவிட்டு எழுந்து போனார் என்றும் அதன்மூலம் தன்னையும் காங்கிரசையும் அவமானப்படுத்தி விட்டதாக எண்ணி கடும் அக்டுப்பு கொண்டு தி.மு.க. பற்றி கண்டபடி சோனியாவிடம் எடுத்து சொன்னவர். காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வை விட்டு பிரியும் நிலைமை வரும் என்று முன்கூட்டியே அவதானித்த சிதம்பரம் அதற்குதான் இப்படி புலி கதையை தி.மு.க. அரசுக்கு எதிராக கிளப்பிவிட்டார்.atharku அவர் பயன்படுத்திய உள்துறை அறிக்கையில் சென்னை அருகே வளசரவாக்கத்தில் புலிகளின் பயிற்சி நடப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதைத்தான் அப்போது தமிழ்நாடு காவல்துறை தலைமை அதிகாரி லத்திகாசரண் மறுத்திருந்தார்.

இப்போது அதே குற்றச்சாட்டை ராஜபக்சே அரசின் பொம்மை பிரதமர் ஜெயரத்னே இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். அதாவது தி.ஹிந்து ஏடு இன்று காலை வெளியிட்டுள்ளபடி,தமிழ்நாட்டில் ருத்த்ரகுமார் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்று முகாம் வைத்திருப்பதாகவும், நெடியவன் தலைமையிலான புலிகள் முகாம் ஒன்று இருப்பதாகவும், பொட்டம்மான் வழிகாட்டலில் வளர்ந்த புகழேந்திரன் தலைமையிலான புலிகள் முகாமில் முக்கிய ரசியல்வாதிகளை கோளை செய்ய பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் அந்த இலங்கை இபிரதமர் பிதற்றியுள்ளார். அதற்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் இதை இந்திய அரசிடம் தெரிவித்தீர்களா என்று கேட்டதற்கு வாய் மூடி மௌனியாக அந்த அமைச்சக உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள். இந்த செய்தி இந்திய உளவு நிறுவனமான "ரா" கூறிய அறிக்கையே தவிர வேறு எதுவும் இல்லை.

இபடி ஒரு அறிககையை "ரா" தயார் செய்யவேண்டிய அவசியம் என்ன? தி.மு.க. காங்கிரசை விட்டு வெளியே வந்து தனது கூட்டணியை கட்டி செயல்பட தயாராகி வருகிறது என்று தாயாநிதி மாறன் காங்கிரஸ் தலைமையிடம் ஏற்கனவே கூறிவிட்டார். அப்படி செய்யும்போது தி.மு.க.தலைமை தமிழர் பிரச்னையை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எடுக்க திட்டமிட்டுள்ளது என்றும் மத்திய அரசுக்கு சித்தி பறந்தது. அதன்விளைவே தி.மு.க. அரசு புலிகளுக்கு சரணாலயம் தர்ய்வதாக குற்றம் சாட்ட சிதம்பரம் போட்ட திட்டம் என்ற சிதம்பர ரகசியம் வெளியாகி உள்ளது. ஆனால் புலிகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் தலைவர்கள் இறந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்துள்ள சீ.பி.ஐ.யின் செயலை செய்த அதே மத்திய அரசு இது போன்ற கபட நாடகங்களை அரங்கேற்றும் போது எல்லாமே அம்பலமாகி நிற்கிறது.

Wednesday, March 9, 2011

மன்னர் மண்டியிட்டாரா?

தன்னை ராஜ ராஜ சோழனின் வாரிசு என்று அழைத்துக்கொண்ட, கேரளாவின் மாவேலி அரசரின் ஆட்சி போல ஆளும் மன்னர் என்று பெருமைப்பட்டுக்கொண்ட ஒருவர், தமிழ் மன்னர்கள் மக்களாட்சியை நடத்தத் வந்தனர் என்று மன்னர்களை அவர்களது ஆட்சிகளை நியாயப்படுத்தி வாதிட்ட ஒருவர் இன்று சோனியா என்ற காங்கிரஸ் தலைவியிடம் மண்டி இட்டுவிட்டாரா? இருக்கவே முடியாது. காங்கிரசிடம் கேட்ட தொகுதிகளை கொடுத்திருக்கலாம். காங்கிரசிடம் பணம் எதிர்பார்த்து தமிழ்நாட்டு மன்னர் செல்லவேண்டிய அவசியம் இல்லை. காங்கிரஸ் வாக்குகளில்தான் தமிழ்நாட்டில் வெற்றி பெறவேண்டும் என்ற நிலையும் தி.மு.க.விற்கு இல்லை.பின் எதற்காக தி.மு.க. தலைமை காங்கிரசிடம் மண்டியிடவேண்டும்?

தி.மு.க. தலைமை தேர்தல்களை சந்திக்க புதிய உத்திகளை திருமங்கலம் தேர்தல் தொடங்கி நடைமுறைப்படுத்துகிறது. அது இந்திய நாடாளுமன்ற டேஹ்ர்தல்களுக்கு புதிய உத்திதான். மக்களிடம் பெற்றதை மக்களிடமே தருவது என்பது அதற்கு பெயர். நம்மை ஆட்சியி அமரவைத்த மக்களால்தான் நமக்கு அதிகமான நிதி சேர்ந்தது என்று ஒப்புக்கொள்ளும் தி.மு.க.தலைமை அதில் ஒரு பகுதியை அந்த மக்களுக்கே திருப்பி தருவது என்று நடைமுறை தந்திரத்தை செயல்படுத்தி வருகிறது. இத்தகைய தர்மச்செயலை பலரும் பலமாதிரி பேசுகிறார்கள்.தேர்தல் நேரம் இல்லாதபோது, அரசு மக்களுக்கு இலவசமாக மழை, வெள்ள நிவாரணம் கொடுக்கலாம். இலவசமாகவான்ன தொலைகாட்சி பெட்டிகளை கொடுக்கலாம். சமையல் வாயு அடுப்புகளை கொடுக்கலாம். முதியோருக்கு கண்ணாடி கொடுக்கலாம். ஏழைகளுக்கு செருப்பு கொடுக்கலாம்.மாணவர்களுக்கு சிக்கொள் கொடுக்கலாம். தேர்தல் நேறத்தில் மட்டும் கொடுக்க கூடாது. இது என்னய்யா சட்டம் என்று கேட்கிறது தி.மு.க.தலைமை.

தேர்தல் நேரத்தில் மக்களிடம் பெற்றதை மக்களிடமே கொடுக்கும் தி.மு.க.தலைமையின் பெருந்தன்மையை யாரும் புரிந்துகொள்ள மறுக்கிறார்களே? அது என்ன நியாயம்? தேர்தல் ஆணையத்திற்கும் அது புரியவில்லை. மக்கள் இன்று ஏழைகளாக இருப்பது தேர்தல் ஆணையத்திற்கு தெரிய வேண்டாமா? அவர்களை ஒரு மன்னர் ஆட்சி ஏதோ முடிந்த அளவு தேர்தல் நேரத்திலாவது வசதியாக வைத்திருக்க முயல்கிறதே? இது விளங்க வேண்டாமா? இந்த தேர்தல் ஆணையம் எப்போதுமே மாநில கட்சிகள் சொன்னால் கேட்பதில்லை. மத்தியில் உள்ள எதிர்க்கட்சி சொன்னாலும் கேட்பதில்லை. மாறாக மத்தியில் ஆளும் கட்சி அதுவும் காங்கிரஸ் போன்ற நூறு ஆண்டு கட்சி சொன்னால் மட்டும்தான் கேட்கிறது.


அதனால்தான் எத்தனை மண்டியிட்டாலும் பரவாயில்லை, மன்னரின் மூத்த மைந்தன் கண்டுபிடித்த இந்த தேர்தல் தந்திரத்தை எப்படியாவது அமுல்படுத்தி மக்களுக்கு அவர்களது சொந்தமான நிதியில் ஒரு சிறு தொகையாவது போய்சேர வேண்டுமே என்று மன்னர் கவலைப்பட்டு தேர்தல் ஆணையஹ்திற்கு புரியும் மொழியில் அதை சொல்ல காங்கிரஸ் தலைமையுடன் மண்டியிட்டாவது கூட்டணி என்று அமைத்துக்கொண்டுள்ளார்.மன்னர்களை புரிந்துகொல்பதே இந்த தமிழர்களுக்கு கடினம் போலிருகிறது.அதுவும் தமிழ் மன்னர்களை தமிழர்கள் புரிந்துகொள்ளவே மாட்டேன் என்கிறார்களே?


தொழிற்சங்கம் நடத்துபவர்களுக்கு இது புரிய வேண்டும். தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சம்பளத்தின் ஒரு பகுதியே போனஸ் என்ற ஊக்கத்தொகை என்று கூறுவதில்லையா? அதுபோலத்தான் இதுவும். இப்போது காங்கிரஸ் தி.மு.க.வுடன் சேர்ந்தாகிவிட்டது. இனி தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்து தி.மு.க.வின் செயல்தந்திரத்தை முறியடிக்க முடியுமா?

Tuesday, March 8, 2011

கருவிலும், உருவிலும், சிதையிலும் சிதைக்கிறாயே

உலக பெண்கள் தினம் என்பதால் எல்லா அரசியல் தலைவர்களும் நீளமான வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார்கள். ஆனால் இன்றும் கருவில் பெண்கள் அழிக்கப்படுவது அதிகமாக பெண் உரிமை பேசும் தமிழ்நாட்டிலேயே ஒழிக்கப்படவில்லை. அதற்கு பொருளாதாரம் காரணமாக சொல்லப்படுவதும் அதை கேட்டு பலரும் அனுதாபபடுவதும் கொடுமை மனங்களை படம் பிடித்து காட்டுகிறது. உருவில் பெண்ணாக வளர்ந்தபின்னும் தொடரும் சிசுக்கொலைகள் நின்றபாடில்லை. பொதுமக்கள் இயல்பாகவே பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நினைப்பதிலிருந்து விடுதலை பெற்றுவிடவில்லை. அதற்கு வளர்ப்பு கூட காரணமாக ஆகிவிடுகிறது. வளர்ந்த பின்னும் பெண்களுக்கு சமூகம் கொடுக்கும் மரியாதை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

யாராவது மானுடத்தில் பெண்கள் சரிபாதி என்று மனதார அனுமதிக்கிறார்களா? சமீபகூட்டம் ஒன்ரிபெராசிரியர் சரஸ்வதி ஒரு செய்தியை கூறினார். பெண்களுக்கு கல்வி கொட்த்தும் கூட அதற்கு மக்கள் வரிப்பணம் செலவானால் கூட, பெண்களை படித்து முடித்த பின், வேளைக்கு செல்ல அனுமதிக்காமல் கல்யாணம் கட்டிக்கொடுப்பதில் மட்டுமே கவனமாக இருக்கும் சமூகத்தை சுட்டிக்காட்டினார். உங்கள் கல்யாணமும், உங்கள் குடும்பங்களும் எவ்வளவு செய்தரினாலும், சிரித்தாலும் நீங்கள் திருந்துவதாய் இல்லை என்பதுதானே உங்கள் நிலை? உரப்படும் போங்கள்.இந்த அடிமை மனோபாவத்திலிருந்து எப்போது வெள்யே வரப்போகிறீர்கள்?

பெண்களும் மானுடத்தின் சரிபாதி என்றால் அவர்கள் வேளைக்கு செல்வதும், அவர்களே தங்கள் திருமணத்தை தீர்மானிப்பதும் உங்களுக்கு ஏற்கமுடியவில்லையா? இப்போது பெண்கள் ஆரோக்கியமான புலிக்குட்டியை பெற்றெடுத்தாலும், அவர்களது மறைவுக்கு பின்கூட அவரது சிதையில் கூட சாம்பலை சிதறடிப்போம் என்ற இனவெறி செயலை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் பார்வதியம்மாள் தனது மரணத்தின் மூலம். அதை எண்ணியாவது உலக பெண்கள் தினத்தில் ,தமிழ்பெண்கள் துவக்கெடுத்த பின்தான் தமிழீஹத்தில் சரியான சமத்துவம் பெற முடிந்தது என்பதை உலகம் புரிந்துகொண்டால் சரி.

Saturday, March 5, 2011

எந்த நிபந்தனை அடிப்படையில் ஆதரவு?

அய்யா, கலைஞர் அவர்களே. காங்கிரஸ் உங்களது சுய மரியாதையை சீண்டி பார்கிறார்கள்.உங்கள் கட்சியான தி.மு.க.வின் சுய மரியாதையை சீண்டி பார்கிறார்கள். மொத்தத்தில் தமிழ்நாட்டின் சுய மரியாதையை சீண்டி பார்கிறார்கள். அதற்கு பதிலடி கொடுத்தே ஆகவேண்டும். உங்களுடன் தொகுதி உடன்பாட்டில் ஒத்துவராத காரணத்தால் மட்டுமே நீங்கள் வெள்யே வந்துவிட்டீர்கள் என்று தமிழ் கூறும் நல்லுலகம் எண்ணுகிறது. நீங்கள் இவ்வளவு நாளும் எந்த அளவுக்கு புழுங்கிக்கொண்டு இருந்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும். அதாவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்த கேரள,கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் செயல்களுக்கு பின்னால் காங்கிரஸ் இருந்தது என்று தெரிந்தும் நீங்கள் மத்திய அமைச்சரவையில் பங்கு கொண்டு "பங்கு" எடுக்கவேண்டுமே என்பதால், அதன்மூலம் தங்கள் கட்சியின் அமைச்சர்கள் வளம் பெறவேண்டுமே என்பதற்காக, தமிழ்நாட்டு நலன்கள் கூட முக்கிய அல்ல என்று பொறுமை காத்தீர்கள் என்பது எங்களுக்கு புரிகிறது.

அதன் பிறகு, நீங்கள் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய அஞ்சலி கவிதையை கூட தாங்காத மத்திய அரசை எதிர்க்காமல், பதிவிக்காக தொங்கிக்கொண்டு இருந்தீர்கள் என்பது தமிழ் மக்களுக்கு தெரியும். அதன்பிறகு இலங்கையில் நடந்த தமிழின அழிப்பு நேரத்தில் நீங்கள் காங்கிரஸ் உடன் உள்ள உறவுக்காக ஏங்கித்தவித்ததும் தமிழினத்திற்கு தெரியும. அதேபோல இலங்கையில் தமிழின அழிப்பை முழுமைப்படுத்தவும், புலிகளை அழிக்கவும் காங்கிரஸ் அரசு முடிவு செய்தபோதுகூட, நீங்கள் பதவியால் கிடைக்கும் லாபம் உங்கள் அமைச்சர்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் தானே என்று அமைதி காத்ததும் எங்களுக்கு நினைவில் இல்லாமல் இல்லை. ஆனாலும் கூட்டணி என்றால் கொள்ளை அடிப்பதில், அதில் பங்கு பெறுவதில் என்றுதானே அர்த்தம். அதை விடுத்து ராஜாவை மட்டும் அவர்கள் சிறையில் அடைப்பது உங்களை துன்புறுத்தியது என்பது எங்களுக்கு புரிகிறது.

இப்போது உங்களிடம் நாடி நிற்கும் காங்கிரஸ் தனது கையை உயர்த்தி தமிழ்நாட்டு ஆட்சியில் பங்கு கேட்பதும், எத்தனை தொகுதி என்று கேட்பதும், தொகுதிகளை முன்கூட்டி கூறவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதும் எந்தவகையில் நியாயம் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரிகிறது. அதனால் நீங்கள் மத்திய அமைச்சரவையை விட்டு வெளியே வருவதும் விளங்குகிறது.அதில் உங்கள் பேரன் என்று கூறிக்கொள்பவர் கூடவெளியே வந்தாக வேண்டுமே? அவர் அதை விரும்ப மாட்டாரே? அவர்தானே இத்ததனைக்கும் காரணம் என்று உங்களுக்கு தெரியுமே? சரி. அது என்ன பிரச்சனை அடிபடையில் நிபந்தனை அற்ற ஆதரவு? எந்த பிரச்னையை சொல்கிறீர்கள்?

ஈழத்தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய பிரச்சனை அடிப்படையை எடுப்பீர்களா? ஈழத்தமிழர்களை முகாம்களிலிருந்து வெளியேற்ற பிரச்சனை எடுப்பீர்களா? ஈழத்தில் இன்று வெள்ளத்தால் தவிக்கும் மக்களுக்கு உதவ பிரச்சனை எடுப்பீர்களா? ஈழத்தமிகர் பகுதிகளை வடக்கையும், கிழக்கையும் ஒன்று சேர்க்கும் பிரச்னையை எடுப்பீர்களா? அரசியல் தீர்வு என்று பொதுக்குழுவில் எழுதினீர்களே,அது தமிழீழம்தான் என்று பிரச்சனையை காங்கிரஸ் கட்சிக்கு சொல்வீர்களா? நாடு கடந்த தமிழீழ அரசுக்கு இந்திய மத்திய அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று பிரச்சனையை மத்திய அரசிடம் கூறுவீர்களா? விடுதலை புலிகள் மீதன்ன தடையை நீக்கவேண்டும் என்ற பிரச்னை அடிப்படையில் காங்கிரசை கோருவீர்களா? என்னய்யா பிரச்சனை அடிப்படை? தமிழ் கூறும் நல்லுலகம் நம்ப வேண்டாமா?.

Friday, March 4, 2011

தி.மு.க.வை குத்தும் காங்கிரஸ்.

குத்து குத்து கும்மாங்குத்து குத்தராங்கலேப்பா காங்கிரஸ். இது ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு மனிதனை கடிக்கும் கதையா? முதலில் ஈழத்தமிழர்களை போராட விடாமல் சிங்களத்திற்கு உதவியது காங்கிரஸ்.பிறகு ஈழத்தமிழரின் விடுதளிக்கு போராடும் விடுதலை புலிகளை தடை செய்தது காங்கிரஸ். பிறகு விடுதலை புலிகளின் தலைவர் மீது கோளை குற்றத்தை சுமத்தியது காங்கிரஸ். பிறகு விடுதலை புலிகளின் இருத்தலே போர்க்க மாட்டாமல் அழிக்க முழு உதவியை சிங்கள பவுத்த பேரினவாத போர் வெறியர்களுக்கு செய்தது காங்கிரஸ். பிறகு ஈழ தமிழ் தேச்டிய இனத்தையே அழிக்க னைத்து உதவிகளையும் செய்தது காங்கிரஸ். அதேபோல தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முல்லை பெரியார் அணைக்கட்டு தண்ணீரை உச்சநீதிமன்றம் கொடுத்தான் கூட அதை கேரள சட்டமன்ர்டம் மூலம் தீர்மானம் போட்டு தடுத்தது காங்கிரஸ். கர்நாடக மூலம் காவேரி தண்ணீரை நடுவர் மன்ற தீர்ப்பை கூட மீறி தடுத்தது காங்கிரஸ். ஆந்திராவில் பாலாற்றுக்கு நடுவே தடுப்பணைகளை கட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராமல் தடுத்தது காங்கிரஸ்.

இத்தனையும் நடக்கும் போதெல்லாம் காங்கிரஸ் தலைமையை ஆதரித்த தி.மு.க. தலைமையை இப்போது போட்டு வாட்டி வதைக்கிறது காங்கிரஸ்.தி.மு.க தலைவர் கூறுவது போலவே தேர்தல் ஆணையம் மூலம் ஏப்ரல் பதிமூன்றே தேர்தலை வைத்து தானே கூட்டணி பேச்சுவார்த்தையை இழுத்துக்கொண்டு போய், திக்கு முக்காட வைக்கிறது காங்கிரஸ். டில்லியிலிருந்து வந்த ஆசாத் முதலில் என்பது என்றார். பிறகு ஐம்பத்து எழுவரை ஒப்புக்கொண்டார். அறுபது என்று தி.மு.க. வந்த பின்பும் இப்போது அறுபத்து மூன்று என்கிறது காங்கிரஸ். மத்திய அரசை விட்டு வெள்யே வருகிறோம் என்று கருணாநிதி இப்போது சிந்திக்கிறார். இடையில் கருணைதி, அன்பழகன், ஆற்காட்டார், துரைமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட கருணாநிதி மேலவை திட்டம் வைத்திருந்தார். அதையும் காங்கிரஸ் தனது தேர்தல் ஆணைய வழக்கறிஞர் மூலம் பேசவைத்து முறியடித்து விட்டது.

அதேசமயம் ராஜாவை உள்ளே தள்ளி அவர் மீது அன்னிய நாட்டு உலவி துறைக்கு உதவிய வழக்கை போட முடிவு செய்கிறார்கள்.இது எல்லாமே கருணாநிதிக்கு திட்டமிட்டு காங்கிரஸ் கொடுக்கும் தொல்லைகள்தான். தமிழினத்தை பகைத்துக்கொண்டாலாவது, தனது குடும்ப நலனை பெரிதாக எண்ணிய ஒரு கிழவயது அரசியல்வாதிக்கு டில்லி கொடுக்கும் சித்திரவதை இது மட்டுமா, இன்னமும் போகுமா என்று தமிழினம் எண்ணிப்பார்கிறது

தீபஞ்சி அம்மன் கோயில் குருக்கள் மூன்று வயது சிறுமையை பாலியல் பாலாத்க்காரம்

காஞ்சி நகரில் கோவில்கள் அதிகம். அதிலும் இந்து மதத்தவர்களால் அதிகமாக ஆராதிக்கப்படும் கோவில்கள் அதிகம். அதனால் அந்த கோவிகளை வைத்து கொள்ளை அடிக்கும் கூட்டத்திற்கு கொண்டாட்டம். கலைஞர் "பராசக்தி" படத்திற்கு வசனம் எழுதியது போல, கோவில்கள் கூடாது என்பதற்காக அல்ல, கோவிகள் கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக,அவற்றை பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. இப்போது காஞ்சியிலிருந்து மக்கள் மன்றத்திலிருந்து வருகின்ற செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது. இது ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் மேலும் எண்ணையை ஊற்றுவதாக உள்ளது.இன்று காலை அது நடந்துள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள தீபஞ்சி கோவிலில் அந்த இழி செயல் நடந்துள்ளது.

ஏற்கனவே அங்கே உள்ள பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் வைத்து அதன் மேலாளர் பாடுகளை செயப்பட்டார். அதற்கு முக்கிய காரணமான சுப்பிரமணி என்ற சங்கராச்ச்காரியார் குற்றம் சாட்டப்பட்டு கைதானார். ஆனால் இன்றைய அரசாங்கத்தின் ஆதரவை பெற்றதால் அவருக்கு எதிரான சாட்சிகள் உடைக்கப்பட்டு விடுதி ஆகப்போகிறார். அதுபோல ஒரு குருக்கள் தேவநாதன் என்ற பெயரில் கற்பக்கிரகத்தையே தனது பள்ளியறையாக ஆகினார். அவரும் கைது செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்போது இந்த தேவராஜன் என்ற பெயருள்ள தீபஞ்சி கோவில் குருக்கள் மூன்று வயது சிறுமையை பலாத்காரம் செய்து மாட்டிக்கொண்டுள்ளார். அதை விஷ்ணு காஞ்சி கவக் நிலையத்தில் கொண்டு சென்று புகார் செய்யும் போது இப்போது நூறு பார்ப்பனரல்லாத பக்தர்கள் காவல் நிலையம் சென்று மரிக்கிறார்கள். இதுதான் இந்த நாட்டின் நீதியா?இந்த பாலியல் வெறியனான குருக்களையும் கருணாநிதி அரசு விடுதலை செய்ய துடிக்குமா?

பார்வதியம்மாள் ஒரு அடையாள குறியீடு.

வருகிற மார்ச் ஏழாம் நாள் புலிக்குட்டியை பெற்றெடுத்த தாய்ப்புலி பார்வதியம்மாளின் பதினாறாவது நாள் காரியம். பார்வதியம்மாள் சைவ நம்பிக்கை கொண்டவர். சைவ நம்பிக்கை கொண்டவர்கள் பதினாறாம் நாள் காரியத்தை கவனமாக கடைப்பிடிப்பார்கள். நாம் வைணவராகவோ,கிறித்துவராகவோ, இஸ்லாமியராகவோ,மதம் அற்றவராகவோ, நாத்திகராகவோ இருக்கலாம். ஆனால் அனைவரும் தமிழர்கள் அனைவரும் தமிழீழம் அடைவதை வாழக்கையின் ஒரு முக்கிய லட்சியமாக கொண்டிருக்கிறோம்.அதிலும் அதற்காக புறப்பட்ட புலிப்படையின் சாகசங்களையும், சாதனைகளையும்,மனதில் நிறுத்தி ஒவ்வொரு நாளும் அகமகிழ்கிறோம்.அதற்கு காரணமான அந்த மகத்தான தமிழீழ தேசியத்தலைவரை எண்ணி, எண்ணி,பஐவகை அடைகிறோம். உலகில் எந்த ஒரு தேசிய இன விடுதலை போராட்டத்திலும் தரைப்படையை தாண்டி, கடல் படையையும்,வான் படையையும் கட்டி வெற்றிகரமாக வழிநடத்தியதாக சரித்திரம் இல்லை. அப்படிப்பட்ட சரித்திரத்தை படைத்த ஒரு தலைவரை தனது கருவில் சுமந்து பெற்ற அந்த தாயார் பார்வதியம்மாளின் காரியம் என்றால் அதில் தமிழர்களின் பதிவு வேண்டும்.

பார்வதியம்மாள் இன்று ஒரு அடையாள குறியீடாக ஆகி உள்ளார்.அதாவது அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு கூட சிங்கள வெறியர்களின் தலைமையை ஏற்றுள்ள ஒட்டு குழுவினர் தடை செய்தார்கள். அம்மாளின் சிதையில்கூட அவர்கள் உடைப்பு வேலை செத்தார்கள். சாம்பலை கூட விட்டுவைக்க தயாரில்லை.பார்வதியம்மலின் சாம்பலில் கூட நாய்களை அறுத்து போட்டனர். கருவிலே புலியை சுமந்த ஒரு தாயாரின் சாம்பல் கூட தமிழின எதிரிகளுக்கு அச்சத்தை உருவாக்கி உள்ளது. அதால் பார்வதியம்மாள் ஒரு அடையாள குரீடாக ஆகிவிட்டார்.

சென்னையில் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் மீனவர் சங்கங்களின் முன்முயர்ச்சியில், நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையமும் சேர்ந்து அத்தகைய காரியத்தை நடத்திட பல இடங்களில் திங்கள் கிழமை பார்வதியம்மாள் படத்துடன் ஏழைகளுக்கு உணவு அளித்தால் என்ற காரியத்தை செய்ய இருக்கிறார்கள்.அதற்க்கான பணியை துவங்கி விட்டார்கள். நீங்கள் என்ன செய்யப்போகிரீகள்.