Tuesday, December 21, 2010

தி.மு.க.வை கைவிடும் காங்கிரசு.

காங்கிரசு கட்சி தனது அகில இந்திய காங்கிரசு கட்சி குழுவை டிசம்பர் பத்தொன்பதிளிருந்து டில்லியில் கூட்டியது. இருபயைரம் பேர் கலந்துகொண்ட அந்த மஹாநாட்டில் பல பிரச்சனைகளில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வடக்கு மாநிலங்களில் காங்கிரசு கட்சியின் மரியாதையை சுத்தமாக காயடித்துவிட்டது. அதனால் ஆத்திரம் ஏற்பட்ட காங்கிரசு தலைவர்கள் தமிழ்நாட்டை பொறுத்தவரை என்ன செய்வது என்ற கேள்விகளோடு இருந்தனர். இப்போதைக்கு தி.மு.க.வுடனான கூட்டணியில் மாற்றம் செய்வதாக திட்டமில்லை என்று ஒருபுறம் கூறிவரும் காங்கிரசு இதுபற்றி உண்மையில் கவலைகொண்டிருப்பதை விவத்தித்தனர். தி.மு.க.வை கை விட்டால் யார் என்ற கேள்விக்கு தமிழ்நாட்டில் பா.ம.க., விஜயகாந்த், கொங்கு முன்னேற்ற சங்கம், இந்திய ஜனநாயக கட்சி என்ற பச்சமுத்து உடையார் கட்சி என்ற பெயர்கள் கூறப்பட்டனவாம். அதில் யாருமே போதுமான அளவுக்கு காங்கிரசு தலைமையை செல்வாக்கு செலுத்தவில்லை என்ற நிலையில் இப்போதைக்கு தி.மு.க.வுடன் இருக்கும் கூட்டணியில் மாற்றம் பற்றி பேச வேண்டாம் என்றும், ஆனால் தாங்கள் அதுபற்றி வருகின்ற ஜனவரி மாதம் பேசி முடிவு செய்வோம் என்றும் தலைவர்கள் கூறினார்களாம். அதற்குள் பெரிதாகும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தி.மு.க.வை அடையாளம் காட்டிவிட்டு தாங்கள் தப்பித்து விடலாம் என்று அந்த தலைவர்கள் நினைக்கிறார்களாம். அடுத்த ஆண்டு ஜனவரி தி.மு.க.விற்கு சாதகமான ஆண்டாக இருக்காது என்று டில்லியில் கூறுகிறார்கள். சீ.பி.ஐ. வழக்கில், உச்சநீதிமன்றத்தில் எப்போது விவகாரம் கையை மீறி போகும் என்று காங்கிரசு நினைக்கிறதோ அப்போது தி.மு.க. தான் அத்தனைக்கும் காரணம் என்று கூறிவிட்டு ஓடிவிடலாம் என்று காங்கிரசு நினைப்பதாகவும் கூறுகிறார்கள். காங்கிரசு தங்கள் கட்சியை கழட்டுமானால் அப்படி ஒரு முயற்சி தெரியுமானால் தி.மு.க. தன் பங்கிற்கு முன்னாள் அமைச்சர் ராஜாவை சுட்டிக்காட்டி அவர்தான் அனைத்து ஊழலுக்கும் காரணம் என்று கூறிவிட்டு தி.மு.க.தலைமை தான் தப்பித்துகொள்ள தயாராகிவருகிறது. அப்படியானால் ராஜா தன்மூலம் கருணாநிதி குடும்பத்திற்கு சென்ற தொகைகளை கூற தயாராவாரா என்று பொதுமக்கள் கேட்கிறார்கள். போல்லாதவர்கல்தான் இந்த பொதுமக்கள்.

சாயிபாபாவும், அத்வானியும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் வருகிறார்கள்..

வாஜ்பாய காலத்திலிருந்து செல்லுலார் தொலைபேசி ஊழலில் இருக்கின்ற கொஷிகா என்ற நிறுவனத்தின் முதலாளியான குல்வந்த்ராயின் டில்லி வீட்டில் புட்டபரத்தி சாயிபாபா தங்கியிருந்து இந்த தனியார் வணிகத்திற்காக வக்காலத்து வாங்கிய கதை வெளியே வந்துள்ளது. அதேபோல எஸ்ஸார் நிறுவனம் அன்றைய துணை பிரதமர் அத்வானிக்கு நெருக்கமானது என்று கூறப்படுகிறது.மேற்கண்ட தகவல்களை இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டிக்கொண்ட கருணாநிதியே தனது முரசொலி ஏட்டில், தனது நண்பர் சின்ன குத்தூசி மூலம் எழுதவைத்துள்ளார்.

சொந்த செலவில் சூனியம் வைத்துகொள்பவர்கள்

தி.மு.க. அரசு எல்லா மக்களுக்கும் இலவச தொலைக்காட்சி பெட்டிகளை கொடுத்தது. அதன்விளைவாக இப்போது சன் தொலைக்காட்சி மூலம் தினசரி ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி மக்கள் அளவுக்கு அதிகமாகவே தெரிந்து கொள்ளதொடங்கிவிட்டார்கள். அதை திரைப்பட தயாரிப்பாளர் புகழேந்தி தங்கராஜ் வர்ணிக்கும்போது, இதுதான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்று நக்கலடித்தார்.

ராஜா ஓட, சீ.பி.ஐ. துரத்த....

பைசால் என்ற இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு அதிகார முன்னாள் தலைவர் சீ.பி.ஐ.யால் சம்மன் வழங்கப்பட்டு, டில்லி சீ.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணையை எதிர்கொண்டார். அதேபோல நிரா ராடிஆவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் விசாரணையை எதிர்கொண்டார். ஆ.ராஜாவிற்கு சீ.பி.ஐ. டிசம்பர் இருபதாம் நாள் வந்து விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் ராஜா டில்லி செல்லவில்லை. அதேசமோம் ராஜா அன்று காலை அப்போலோ மருத்துவமனியில் சேர்ந்ததாக பரவலாக பேசப்பட்டது. ஆனால் அப்போலோவிளிருந்து அரை மணி நேரத்தில் வெள்யே வந்துவிட்டார். சீ.பி.ஐயிடம் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் வரமுடியவில்லை என்று எழுத்து மூலமாக தெரிவித்து, இன்னொரு நாள் கொடுக்குமாறு கேட்டிருந்தார். அதாவது ஒரு வாரம் நேரம் கேட்டதாக தெரிகிறது. அதற்கும் சீ.பி.ஐ. சம்மதித்துவிட்டது. என்று சீ.பி.ஐ. நாள் கொடுக்கிறார்களோ அன்று தான் போய் விசாரணையை எதிர்கொள்வேன் என்று அவர் கூறியிருக்கிறார். அதன்பிறகே அவர் மீதான நடவடிக்கையை சீ.பி.ஐ. முடிவு செய்யமுடியும். பதிலளி முன்அனுப்பு

தி.மு.க. எதிர்ப்பு கூட்டணியில் சீமான்.

. சீமான் கருணாநிதி எதிர்ப்பு, தி.மு.க. எதிர்ப்பு என்று எதிர்க்கட்சி தொலைகாட்சியில் விளாசி தள்ளிவிட்டார். இலங்கையில் என் தமிழ் சமுதாயம் அழிய ஆட்சியில் இருந்துகொண்டே காரணமாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. அவர் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. வரவும் விடமாட்டோம். என் தொழிலான சினிமாத்துறை அழியவும் காரணமாக இருக்கிறார். சிவாஜி குடும்பம், ராஜ்கபூர் குடும்பம், எல்லாம் சினிமாவில் இல்லையா என்று கருணாநிதி கேட்கிறார். அவர்கள் குடும்பங்கள் எல்லாம் சினிமா துறையில் இருந்தன. ஆனால் சினிமா துறையே கருணாநிதி குடும்பத்தில் இருக்கிறதே. ஈழப்பிரச்சனை மட்டுமல்ல, ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக என்னவெல்லாம் செய்தார் என்பதை நாங்கள் வருகிற தேர்தலுக்கான பரப்புரையில் தமிழ்நாடெங்கும் போய் சொல்லுவோம். அ.தி.மு.க.கட்சிதான் இன்று இருப்பதில் பரவாயில்லை என்றும் ஒரு ஏட்டிற்கு நேர்காணல் கொடுத்துள்ளார். ஏற்கனவே காங்கிரசு எதிர்ப்பில் இருந்தவர் இப்போது தி.மு.க. எதிர்ப்பு, என்று வந்துவிட்டார்

ராஜா ---------தயா மோதல்.

ஆ.ராஜா வுடன் , தயாநிதி குழுவினர் முரண்பட்டு இருப்பதோ, முரண்பாடுகளை கிளப்பிவருவதோ, அதிகார மோதலுக்காக ராஜாவை அம்பலப்படுத்த தயா முயற்சி எடுப்பதோ தெரிந்த பழைய செய்திகள். ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு வந்துள்ளது புதிய செய்தி. டில்லி, சென்னை, பெரம்பலூர், திருச்சி, திருவானைக்காவல் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் திடீரென நடந்த சீ.பி.ஐ. சோதனைகள், யாரால் தூண்டப்பட்டன? யார் அதுகண்டு மகிழ்ந்தார்கள்? கட்டளை அனுப்பும் இடத்தில் அமர்ந்து கொண்டு அதற்கான ஆதாரங்களை கொடுத்தது யார்? இப்படிப்பட்ட கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
இதுவரை ராஜா மீது தனக்கு இருந்த முரண்ப்பாட்டை அல்லது போட்டியை அல்லது தனக்கும், டாட்டாவுக்கும் இடையே இருந்த வர்த்தக போட்டியில் ஆ.ராஜா டாட்டாவால் பயன்படுத்தப்பட்டார் என்ற கோபத்தை, அய்யோபாவமான ராஜா மீது காட்டுவது தயாநிதிக்கு வாடிக்கையாக போய்விட்டது. இதில் ராஜாவின் அறிவு வளர்ச்சிக்காகவும், சிந்தனை திறமைக்காகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்ற காரணத்திற்க்காகவும் அவரை ஊழல்களுக்கு மத்தியிலும் ஆதரித்து வந்த சில நண்பர்கள் வசமாக இந்த வலையில் சிக்கிக்கொண்டனர். ஊழலுக்கு சாதியும், மதமும், ஏகபோக எதிர்ப்பும் கிடையாது என்று அந்த நண்பர்களுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. இப்போது சோதனைகள் வந்தபின்பு அதை உணர்ந்திருப்பார்கள்.
சீ.பி.ஐ. சோதனைகளை நடத்த சில மனிதர்களின் வீடுகளை அடையாளம் காட்டியது தயாநிதிதான் என்றும், அதை அவர் தந்திரமாக தனக்கு இருக்கும் பழைய மற்றும் புதிய தொடர்புகளான அதிகார வர்க்க சக்திகளை பயன்படுத்திகொண்டார் என்றும் ராஜா ஆதரவாளர்கள் கருதுகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைமை அமைச்சர் அலுவலக சக்திகளையே பயன்படுத்திகொண்டார் என்பதே அவர்களது கணிப்பு. கணிப்பொ, கண்டுபிடிப்போ, இங்கே சென்னையிலும், திருச்சியிலும், பெரம்புலூரிலும் அந்த சீ.பி.ஐ. சோதனைகள் நடந்து கொண்டு இருக்கும் போது, தயாநிதி மாறன் டில்லியில் அமர்ந்து கொண்டு, அதை ரசித்துக்கொண்டும் அதை இயக்கிகொண்டும் இருந்தார் என்று கூறுகிறார்கள்.
தி.மு.க. தலைவர் குடும்பத்தில் உள்ள உள்பகை இந்த அளவுக்கு போயிருப்பதால் தான் இப்போது அனைத்தும் அம்பலமாகி இருக்கின்றன.