Monday, October 18, 2010

மும்பை தாக்குதலை நடத்தியது அமெரிக்க குடிமகனா? அமெரிக்க உளவு துறையா?

இப்போது அம்பலமாயிருக்கும் செய்தி இதுவரை பேசப்பட்ட, அல்லது விவாதிக்கப்பட்ட பாணியில் அல்லாமல், மும்பை தாக்குதலில் முழுமையாக ஈடுபட்டது யார் என்பதில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி விட்டது. பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறைதான் என்பதாக இருந்த பதிவை மாற்றிவிட்டது இப்போது அமெரிக்க உளவுத்துறையின் பாத்திரம் அம்பலத்திற்கு வந்துள்ளது. புரோபுப்ளிகா என்ற இணையதளத்தில், செபஸ்டியன் ரோடெல்லா என்பவர் எப்படி மும்பை தாக்குதலின் மூளையான டேவிட் காலமன் ஹெட்லி என்ற லஷ்கர்-ஈ- தொய்பாவின் சிகாகோ கிளையில் உள்ள பயங்கரவாதி, அமெரிக்க உள்நாட்டு உளவு நிறுவனமான எப். பி.ஐ. யில் ஐக்கியமானார் என்று அம்பலப்படுத்தியுள்ளார். இரண்டு ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். அனைத்துநாட்டு பயங்கரவாத கண்காணிப்பு அறிக்கை எண்; 685 இல் அவை வெளியாகயுள்ளன. அக்டோபர்-15 , 16 இல் வெளியான இந்த அறிக்கைகளை, அங்க்கீகரிப்பது போல, " வாஷிங்க்டன் போஸ்ட் " வெளியிட்டது. ஹெட்லியை குற்றம் சாட்டி தாக்கல் செயப்பட்ட குற்றப்பத்திரிகை ஆய்விலிருந்து நான்கில், மூன்று பங்கு விவரங்கள் இந்த அறிக்கையில் எடுத்தாளப்பட்டுள்ளன.

அந்த அம்பலப்படுத்தும் அறிக்கையில், ஹெட்லியின் இரண்டு மனைவிகளின் வாக்குமூலங்கள் அதிர்ச்சியை தருகின்றன.ஒரு மனைவி அமெரிக்க குடி. அவர் அமெரிக்காவில் வாழ்கிறார். இன்னொரு மனைவி மொராக்கோவை சேர்ந்தவர். அவர் பாகிஸ்தானில் வாழ்ந்துவருபவர். அதேபோல எப்.பி.ஐ. யின் இன்றைய மற்றும் நேற்றைய அதிகாரிகளும் தங்கள் வாக்குமூலங்களை கொடுத்துள்ளனர். அமெரிக்காவில் இருக்கும் ஹெட்லியின் மனைவி, மூன்று முறை அமெரிக்காவில் உள்ள உளவு நிறுவனமான எப்.பி.ஐ. யின் அதிகாரிகளிடம் நேரடியாக நியு யார்க் நகரில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் தனது கணவர் ஹெட்லி பாகிஸ்தானில் இருக்கும் லஷ்கர்-ஈ-தொய்பாவின் முகாமில்,பயிற்சிஎடுத்ததீவிரபோராளிஎன்றுகுறிப்பிட்டிருந்தார்.
ஹெட்லி இரவு நேரம் பயன்படுத்தும் கண்ணாடிகளை வாங்கியதாகவும் அவர் மனைவி கூறியுள்ளார். அத்தகைய செய்திகளை மற்ற அதிகாரிகளின் சாட்சிகளும் உறுதி செய்தனர்.

மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய நபர் ஒருவரது கூற்றுப்படி, பாகிஸ்தானில் பயிற்சி எடுக்கும் போதே, ஹெட்லி அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ.யின் சம்பளம் வாங்கும் ஒரு உளவாளி என்பது அம்பலமாகி உள்ளது. உள்ளூரில் தாக்குதலில் ஈடுபட்டதாக ஹெட்லியை நியு யார்க் காவல்துறை கைது செய்தது. அது மும்பை தாக்குதலுக்கு பிறகு ஹெட்லியை காப்பாற்ற அமெரிக்க உளவுத்துறை எடுத்த முயற்சி. இங்கிலாந்து நாட்டின் உளவுத்துறை, ஐரோப்பாவில் உள்ள அல்-கொய்தாவுடன் ஹெட்லி தொடர்பு வைத்துள்ளான் என்று அமெரிக்க உளவு துறையிடம் கூறிய பிற்பாடும், மும்பை தாக்குதல் நடந்து பதினோரு மாதங்கள் ஆகியும் ஹெட்லி பிடிக்கப்பட்டு, விசாரிக்கப்பட வில்லை. அதுவே அமெரிக்க உளவுத்துறையான எப்.பி.ஐ. பற்றி நமக்கு புரிவதற்கு போதுமானது. .ஹெட்லியின் அமெரிக்க மனைவி கொடுத்த வாக்குமூலங்கள் எல்லாம் 2005
ஆம் ஆண்டு நியுயார்க் நகரில் உள்ள அமெரிக்க உளவு துறையிடம் கொடுக்கப்பட்டது.அப்படி இருந்தும் அமெரிக்க உளவு நிறுவனம் அதை இந்திய அரசிடம் கூறவில்லை. ஏன்? ஏன்? என்று இப்போதாவது நாம் கேட்க வேண்டும்.

ஹெட்லி மூன்று மனிவிமார்களை மணந்தவர். அவர்களில் இன்னொருவர் மொராக்கோவை சேர்ந்தவர். அவர் 2007 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மூலம், அமெரிக்க உளவு நிறுவனமான எப்.பி.ஐ. அதிகாரிகளிடம் ஹெட்லியை பற்றி பல செய்திகளை பல முறை சந்தித்து வாக்குமூலமாக கூறியுள்ளார். அந்த மனைவியும், ஹெட்லியும் மும்பை வந்து அங்குள்ள தாஜ் ஓட்டலில் தங்கி இருந்ததை படங்களுடன் காட்டி அந்த மனைவி பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க உளவுத்துறையிடம் அப்போதே கூறியிருக்கிறார் என்ற செய்தி இப்போது வெளியாகி உள்ளது. அதாவது மும்பை தாக்குதலுக்கு ஓராண்டு முன்பே ஹெட்லியின் மனைவி ஆதாரபூர்வமாக அமெரிக்க உளவு நிறுவனத்திடம் கூறியுள்ளார். ஆனால் அப்போது ஒரு உளவு துறை அதிகாரி, அவரிடம் "வெளியே போ " என்பதாக கூறியுள்ளார். அதற்கு என்ன பொருள்? நாங்கள் ஏற்பாடு செய்து, நாங்களே தயாரித்துள்ள ஹெட்லி பற்றி எங்களிடமே குறை சொல்ல வந்துவிட்டாயா? என்பதுதானே அதற்கு பொருள்? அதன் அர்த்தம் என்ன தெரிகிறதா? அமெரிக்கவே ஏற்பாடு செய்ததுதான் மும்பை தாக்குதல் என்பது இதிலிருந்தாவது புரிந்து கொள்ளப்படவேண்டும்.

அப்படி பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் உள்ள அமெரிக்க உளவு துறை அதிகாரிகளிடம், ஹெட்லியின் அந்த மொராக்கா மனைவி ஹெட்லியின் நண்பர்கள் லஷ்கர்-ஈ-தொயபாவில் இருப்பதையும், ஹெட்லி பயங்கரமான இந்திய எதிர்ப்பு மனோபாவம் கொண்டவராக இருப்பதையும் எடுத்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த அமெரிக்க அதிகாரிகளோ, ஏன் இந்தியாவிடம் இது பற்றி முன்கூட்டியே கூறவில்லை என்று கேட்டதற்கு. குறிப்பான செய்திகள் கிடைக்கவில்லை என்றும் , அதனால்தான் இந்தியாவிடம் முன்னெச்சரிக்கையாக கூறவில்லை என்றும் அந்த அமெரிக்க உளவு துறை அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். அதாவது மனைவியால் காட்டப்படும் படத்தின் மூலம் மும்பை தாஜ் ஓட்டலுக்கு வந்ததாகவும், அங்கு வந்த ஹெட்லி லஷ்கருடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று அவரது மனைவியே கூறுவதும்கூட, இந்த அமெரிக்க உளவு துறை அதிகாரிகளுக்கு குறிப்பான விவரங்களாக தெரியவில்லை. அதாவது தாங்களே ஏற்பாடு செய்துள்ள ஒரு மும்பை தாக்குதலுக்கு முன்கூட்டியே அதுபற்றிய செய்தியை இந்திய உளவுத்துறையிடம் கொடுத்துவிட்டு, தங்களது சதி திட்டம் தவிடு பொடியாக அமெரிக்க உளவு துறை அனுமதிக்குமா?
அதனால் ஹெட்லியின் மனைவிகள் கூறிய செய்திகள் எல்லாமே, பொதுவான செய்திகள்தான் என்றும், அவை குறிப்பாக எந்த இடத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறவில்லை என்றும் ஒரு மழுப்புதலை, ஒரு தப்பித்தல் இந்த அமெரிக்க உளவு நிறுவன அதிகாரிகள் இப்போது கூறுகிறார்கள். ஹெட்லியின் தொடர்புகள் பல சிக்கலான விசயங்களை காட்டுகின்றன. இடைநீக்கம் செய்யப்ப்பட்ட பாகிஸ்தான் உளவு அதிகாரியும், இன்று அல்- கொய்தா இயக்கத்தின் ஒரு கட்டளை தளபதியாக இருக்கும் இலியாஸ் காஷ்மீரி என்ற பாகிஸ்தான் நாட்டு போராளியும் ஹெட்லியின் நெருக்கமான தொடர்புகள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. முதலில் ஹெட்லி அமெரிக்காவின் போதை மருந்து தடுப்பு துறையின் ஒற்றராக நியமிக்கப்பட்டவர். பிறகு பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் பற்றிய செய்திகளை திரட்டி தரச்சொல்லி, அவரிடம் அமெரிக்க உளவுத்துறை பொறுப்பு கொடுத்திருந்தது. அதற்காக அமெரிக்க அரசின் முழு ஒத்துழைப்புடன் ஹெட்லி பாகிஸ்தானிற்கு அவ்வப்போது சென்று வந்தார்.. அந்த நேரத்தில் ஹெட்லியின் அமெரிக்க மனைவி நியுயார்க்கில் உள்ள அமெரிக்க உளவுத்துறை வசம் ஹெட்லி பற்றிய குற்றச்சாட்டுகளை கூறியபோதும், அவர் அனுப்பும் இணைய அஞ்சல்கள் பற்றி குறைகளை கூறிய போதும், ஹெட்லி தன்னை [ மனைவியை] துன்புறுத்துகிறார் என்று கூறிய போதும் அதை அமெரிக்க உளவுத்துறை கண்டுகொள்ளவில்லை. தாங்கள் ஹெட்லியை நம்பி பெரிய பொறுப்பான ரகசியமான வேலையை கொடுத்துள்ள அமெரிக்க உளவு துறை எப்படி ஹெட்லி மனைவியின் குற்றச்சாட்டுகளை செவி மடுக்கும்?

ஆனால் அதே அமெரிக்க உளவு துறை, 2008 ஆம் ஆண்டு இந்திய உளவு துறையிடம் ஒரு செய்தியை முன்னேச்சடிக்கை என்ற பெயரில் கூறியது. அது கடல் வழியை பயன்படுத்தி பயங்கரவாதிகள் மும்பையை தாக்க திட்டமிட்டுள்ளார்கள் என்ற செய்தி. ஆனால் அதை ஹெட்லி மூலமாக எடுத்தோம் என்று அமெரிக்க உளவு துறை கூறவில்லை. ஏன் என்றால் ஹெட்லியை வைத்து அந்த திட்டத்தை தயார் செய்வதும் தாங்கள்தான் என்று தெரிந்து விடக்கூடாதே என்ற காரணத்திற்க்காக அவ்வாறு சொல்லாமல் இருந்திருக்க முடியும். ஹெட்லி இந்தியாவிற்கு ஐந்து முறை வருகை புரிந்தான் என்றும், அப்போது லஷ்கருக்காக தாக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு அவனுடையதாக இருந்தது என்பதும், அவன் அப்படி வருகை புரிந்த நேரத்தில் தாக்குதலுக்கான இடத்தை தேர்வு செய்தான் என்றும், கடல் வழியாக படகு வந்து இறங்கவேண்டிய இடத்தையும் அப்போது தேர்வு செய்தான் என்றும் இப்போது அமெரிக்க உளவு துறை தனது விசாரணையில் கிடைத்ததாக கூறுகிறது. .இத்தகைய செய்திகளை இந்திய அரசிற்கு கொடுக்காமல் அப்போது அமெரிக்க உளவு துறை மறைத்தது ஏன் என்ற கேள்வி நமக்கு எழ வேண்டும். தாக்குதல் திட்டம் தோற்றுவிடக்கூடாதே என்ற அக்கறையை தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?

இதில் வேறு சில செய்திகளும் உள்ளன. அதாவது தனது இந்திய வர்ய்கைக்கு முன்பே, இந்திய அரசிடம் தனது பாகிஸ்தான் பிறப்பு தெரிந்து விடக்கூடாதே என்பதற்காக, தனது பெயரான தாவூது கிலானி என்ற பாகிஸ்தான் பெயரை மாற்றி அமெர்க்க பெயரான டேவிட் காலமன் ஹெட்லி என்ற பெயருக்கு ஒரு பாஸ்போர்ட் எடுக்கிறான். இதுவும் அமெரிக்க உளவுத்துறையின் ஏற்பாடுதானே? மும்பை தாக்குதலுக்கு பிறகும், ஹெட்லி மீண்டும் இந்தியா வந்துள்ளான். அப்போதும் அமெரிக்க உளவுத்துறை அதுபற்றி இந்திய அரசிடம் கூறவில்லை. அதேசமயம் அமெரிக்க உளவு நிறுவனம் , கோபன்ஹெகனில் மற்றொரு தாக்குதலுக்கு ஹெட்லி திட்டமிடுவதை இடைமறித்த செய்தி மூலம் தெரிந்துகொண்ட பின்பே ஹெட்லியை கைது செய்கின்றனர்.அதாவது 2005 ஆம் ஆண்டு முகமது நபி பற்றி ஒரு கேலிசித்திரம் வரைந்த ஒரு நாளேடு மீதான தாக்குதலை கோபன் ஹேகனில் திட்டமிடும் போதுதான், அமெரிக்க நடவடிக்கை எடுத்தது. அதாவது தான் திட்டமிட்டு கொடுத்த சதிக்கு ஹெட்லி பயன்படலாம். ஆனால் தானாகவே ஹெட்லி இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிட்டு விடக்கூடாது என்பதுதான் அமெரிக்காவின் கொள்கையாக இருக்கிறது.

ஹெட்லி பற்றி அமெரிக்கா அறிவித்த பிற்பாடும், அவனை இந்திய அதிகாரிகள் நேரடியாக எடுத்துசென்று விசாரிக்க ஏன் அனுமதிக்கவில்லை? அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும்போதும் இந்திய அதிகாரிகள் அங்கே சென்று தனியாக அவனை விசாரிக்கவும் ஏன் அமெரிக்கா அனுமதிக்க வில்லை? அமெரிக்கா உளவு நிறுவனமான எப்.பி.ஐ. அதிகாரிகள் முன்புதான் விசாரிக்கவேண்டும் என்று ஏன் வற்புறுத்தினார்கள்? தனியாக விசாரிக்கப்பட்டால் ஹெட்லி அமெரிக்கா உளவு நிறுவனத்தின் ஏற்பாட்டில்தான் மும்பை தாக்குதலை நடத்த திட்டமிட்டோம் என்று கூறி விடுவான் என்பதற்காகத்தானே? இதுபோல அமெரிக்கா உளவுதுறை நடந்து கொள்ளவேண்டிய தேவை என்ன? மும்பை தாக்குதலில் அமெரிக்கா உளவு துறைக்கு உள்ள ரகசிய உறவு என்ன? அதற்கு முக்கிய பங்கு அமெரிக்கா அரசு வகிக்க வேண்டிய காரணமென்ன?

இத்தனை கேள்விகளுக்கும் விடை காண வேண்டும் என்றால், அமெரிக்கவிற்கும், இந்தியாவிற்கும் நடந்து வரும் அரசியல் உறவுகள், ராணுவ ஒப்பந்தங்கள், மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் ஆகியவை பற்றி ஒரு ஆய்வு செய்யப்பட வேண்டும். அமெரிக்காவிற்கு ஏதாவது நிர்ப்பந்தம் இரூக்கிறதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தியாவில் அமெரிக்காவுடனான ஏதாவது ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு உள்ளதா என்று நினைத்து பார்க்க வேண்டும். அந்த எதிர்ப்பு இப்படிப்பட்ட மும்பை தாக்குதல் போன்ற ஒன்றால், உடைக்கப்பட முடியுமா? என்று எண்ணி பார்க்க வேண்டும். இந்தியாவில் அமெரிக்கவுடன்னான அணுசக்தி ஒப்பந்தம் மீது நாட்டுப்பற்று உள்ள சக்திகள் மத்தியில் எதிர்ப்பு இருப்பது அமெரிக்காவிற்கு கவலை அளக்கிறது என்பது உணமைதான். அதை உடைக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதும் தெரிந்த செய்திதான். அத்தைகைய முயற்ச்சியில் அமெரிக்கவால் பா.ஜ.க. வை அமெரிக்கா ஆதரவாக அணு சக்தி விபத்து இழப்பீடு சட்டத்தை போடும்போது கொடுவர முடிந்தது. ஆனால் இந்திய மக்களை அப்படி காசு கொடுத்து அரசியல்வாதிகளை வாங்குவது போல வாங்க முடியாதே? அதனால்தான் இப்படி ஒரு மும்பை தாக்குதல் மூலம் நாட்டின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டிய தேவை அமெரிக்கா அரசுக்கு இருக்கிறது. அதுவே இத்தனை நாடகங்களுக்கும் காரணம் என்பதை நாட்டு பற்றுள்ளவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். ஒபாமா வரும்போது அதையே எதிரொலிக்க வேண்டும். செய்வார்களா?