Sunday, October 17, 2010

தமிழர் வரலாறும், பண்பாடும், எந்தகண்கொண்டு காணப்படவேண்டும்?

இன்றைய சூழலில் தமிழர் உரிமைகள் என்பது உலக தமிழர் மத்தியில் அதிகமாக கவனிக்கப்படும் விசயமாக அறுதியிடப்பட்டு வருகிறது. தமிழர் உரிமைகள் எழுப்பப்பட வேண்டுமானால், தமிழர்களது இன்றைய நிலைமை பற்றிய மதிப்பீடு அறியப்பட வேண்டும். இன்றைய நிலையை ஒப்பீட்டு அறிய, கடந்த கால தமிழர் வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அதை தெரிந்து கொள்ள தமிழர் வரலாறு படிக்கப்பட வேண்டும். அதனால் தமிழர் வரலாறும், பண்பாடும் பலராலும் இன்று கூறப்பட்டு வருகிறது. பலராலும் எழுதப்பட்டும் வருகிறது.
அவ்வாறு தமிழர் வரலாறு, கோவையில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டிலும் பேசப்பட்டது. எழுதப்பட்டது. காட்டப்பட்டது. ஓதில் காட்டப்பட்டது என்ற செய்திதான் அதிகமான மக்களை போய் அடையக்கூடியது. அதாவது காட்டப்படுவது என்பது கண்காட்சியாக வைக்கப்பட்டும், காட்சிகளாக உருவாக்கப்பட்டு என்பதாகவும்,பொருள்படுகிறது. அப்படி செம்மொழி மாநாட்டில் ஒரு கண்காட்சி வைக்கப்பட்டது. அதன் முயற்சி முழுமையாக, அனைச்சர் தங்கம் தென்னரசுவினதாக இருக்கலாம். ஆனாக் அதுதான் பெரும்பான்மையான தமிழ் மக்களை கவர்ந்தது. அதில் பல தமிழர்களது பண்பாட்டு அடையாளங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. காட்சிகள் மூலமாக பல பண்பாட்டு நிகழ்வுகள் காட்டப்பட்டன. தமிழர்களது வீர விளையாட்டுக்கள், காதல் காட்சிகள், களை திறமைகள் என அந்த கண்காட்சி காண்போர் மனதை கவர்ந்தது.
தமிழன் புறநானூற்றிலும், அகநானூற்றிலும், சங்க காலத்திலும் எப்படி வாழ்ந்தான் என்ற வரலாற்று சான்றுகள் அங்கே எடுத்து வைக்கப்பட்டன. அப்படி இருந்தும் நிகழ் கால தமிழன் எழத்தில் எப்படி போரிட்டான் என்பதும், எப்படி சுற்றி வளைக்கப்பட்டன என்பதும், எப்படி தரைபடை,கடல் படை,மற்றும் வான்படையை கட்டி அமைத்தான் என்ற வரலாறு அரசியல் காரணங்களால் இடம் பெறவில்லை. அது அவர்களது அரசியலாக இருந்துவிட்டு போகட்டும். நாம் கற்க வேண்டியது தமிழரது உண்மை வரலாறு இல்லையா? தமிழரது உண்மையான பண்பாடு பற்றி இல்லையா?
அது இன்றைய நிலையில் எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது? இவ்வாறான கேள்விகளுக்கு விடை காண வேண்டும் அல்லவா? அவ்வாறு காண்பதற்கு, தேர்தல் அரசியலை சார்ந்து நிற்கும் கூட்டத்தினரிடமிருந்து சற்றே விலகி இது பற்றி சிறிது அலச வேண்டும் அல்லவா? அதற்கு தமிழர் இயக்கங்களை, தமிழின உணர்வாளர்கள் நடத்தும் நிகழ்வுகளை, அப்படி உணர்வுள்ளவர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளை, அல்லது கண்காட்சி நிகழ்ச்சிகளை, நாம் நாடி செல்வோமல்லவா? அப்படித்தான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, தமிழக பெண்கள் செயற்களம் நடத்திய, தமிழர் பண்பாட்டு கண்காட்ச்சிக்கு பார்வையாளனாக சென்றேன்.
பண்டை தமிழர்கள் கற்கால மனிதர்களாகம் வேட்டையாடும் காலத்திய நிலையில், அடுத்து விவசாயத்தை கற்ற நிலையில், பல்வேறு கலைகளை படைத்த வரலாற்றில், மன்னர் கால ஆட்சிகளில், உற்பத்திகளில் ஈடுபட்ட காலங்களில், கடல் கடந்து வணிகம் செய்த காலத்தில்,வீரத்தில்,காதலில்,இலக்கியத்தில்,என்பதாக தீட்டப்பட்ட ஓவியங்களை, சித்திரங்களை, விவரிப்புகளை,அனைத்தையும் காணமுடிந்ததது.கடுமையான உழைப்பு இன்றி இவை அவ்வாறு ஒழுங்கு படுத்தப்பட முடியாது.அததகைய கடுமையானமுயற்ச்சியை பெண்கள் மூலமாக செயலபடுத்தியிருப்பது பெரும் சிறப்பு என உணர முடிந்தது.
அதேசமயம் அந்த கண்காட்சி ஒரு பெரிய கேள்வியை கிளப்பி விட்டது. அதில் தமிழர் வரலாற்றை வர்ணிக்கும் போது, ஆண்களின் பங்கை உயர்த்தி பிடித்திருப்பதை உணர முடிந்தது, அதுதான் தமிழர் வரலாறா? அல்லது அது அவ்வாறு பொருள்படும்படி ஆண்களால் எழுதப்பட்டுள்ளதா? பெண்பாற் கவிஞர்கள் அந்த காலத்தில் ஏதாவது வித்தியாசமாக எழுதி இருக்கிறார்களா? அல்லது அப்படி எழுதியவை நமது கண்களுக்கு பட வில்லையா? அதேபோல கண்காட்சியின் கடைசி பகுதியில் இன்றுள்ள சாதி ஒடுக்கல் வரையப்பட்டுள்ளது. அது இடையில் வந்ததா? அப்படியானால் எந்த காலகட்டத்தில் இடையில் வந்தது? தமிழ் அரசர்களே அதை அதாவது சாதி வேறுபாட்டை ஆதரித்து நின்றார்களா?
உணவு உற்பத்தி என்ற விசயத்தில் நெல் உற்பத்தி எப்போது வந்தது? கம்பு, கேழ்வரகு, சோளம், திணை ஆகிய வகைகள் சமீப காலம் வரை பயிரிடப்படுவதும், அதிகமாகஉட்கொள்ளப்படுவதும் இருந்து வந்ததே? என்பதாம் ஆண்டுகள் வரை, தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில், அததகைய பயிர்களை மாட்டுமே அதிகம் உண்டு இழைத்துவந்த் தமிழ் மக்கள் மத்தியில்தானே வாழ்ந்து வந்தோம்? அதனால் நெல்வந்து அததகைய திணைகளை மாற்றி அமைத்தது, தமிழனது வாழ்வியலில் கொண்டு வந்த மாற்றம் பயனுள்ளதா? அல்லது தமிழனை உணவு பழக்கத்திலும் மாற்றி அமைத்து பலவீனப்படுத்தி விட்டதா? இப்படி பல கேள்விகள் நமக்கு எழுந்து விட்டன.
அதனால் நாம் தமிழர் வரலாற்றை எந்த கண்களுடன் காண வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஏன் என்றால் தமிழ் அரசர்கள் என்று இன்று புகழப்படுபவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்? என்ன செய்தார்கள்? எப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்தினார்கள்? யாருக்கு ஆதரவாக இருந்தார்கள்? தமிழர்களின் வாழ்வு மலர உதவினார்களா? அல்லது தமிழர்களின் பண்பாடுகளை நசுக்குவதற்கும், உழைக்கும் தமிழர்களின், வாழ்வாதாரத்தை அழிப்பதற்கும், தீவிரமாக செயல்பட்டார்களா? அப்படி செய்திருந்தால், அவர்களை தமிழர்களின் அரசர்கள் என்று பெருமைப்படலாமா? தமிழர்களில் நல்லவர்களும் இருந்தார்கள், துரோகிகளும் இருந்தார்கள் என்று ஒப்புக்கொள்ளப்போகிரோமா? இல்லையா?
இத்தகைய கேள்விகள் நமக்குள் எழ வேண்டும். அவ்வாறு எழும்போது உலகம் முழுக்க மனித இனம் வளர்ந்தது போலவே, தமிழ் இனத்தின் கற்காலங்களிலும்ம பெண் தலைமை சமுதாய அமைப்புதான் இருதது எனபதையும், பெண்கள் தலைமையில் ஆண்கள் வேட்டையாடுதலை செய்தார்கள் என்பதிலும் நமக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்க தேவையில்லை. அப்படி ஆணும், பெண்ணும் சமமாக இருந்த தமிழர்கள் மத்தியிலும் பாலின வேறுபாடு வந்தது என்பதை நாம் மறைக்க தேவையில்லை. அந்த பாலின வேறுபாடும், எழத்தில் போர்க்களத்தில், பெண்புலிகள் துவக்கு எடுத்து போரிடுன் போதுதான் உணமையான பாலின சமத்துவம் மீண்டும் படைக்கப்பட்டது என்ற வரலாற்றையும் நாம் பகிரங்கமாக உரக்க கூவ வேண்டும்.
அதுபோல ராஜ ராஜ சோழனது ஆட்சி காலத்தில்தான் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களை அவர்கள் நிலங்களில் இருந்து விரட்டி அடித்து அவர்களின் இடம் பெயர்வை சட்டரீதியாக ஆக்கிய கொடியவன்தான் அந்த அரசன் என்பதை நாம் பதிவு செய்யாமல் அவனை புகழ முடியுமா? அதுமட்டுமின்றி சதிர்வேத மங்கலத்தில் ராஜ ராஜ சோழனுக்கு எதிராகம உழைக்கும் தமிழ் மக்களான தாழ்த்தப்பட்ட மாக்கள் போராடியதை மறைக்கமுடியுமா?இன்றுஅதேபோல அரச தன்மையை கொண்டுள்ள மன்னர்கள் வேண்டுமானால் அந்த அரசனை புகழலாம். விடுதலை வேண்டிசெயல்படுவோர் புகழமுடியுமா?
ஆகவே இந்த சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய வேறுபாடுகளை உடைத்தெறிவதும் தமிழ் தேசிய விடுதலையின் ஒரு பகுதியும், தொகுதியும் ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. உகத்தில் பல நாடுகளில் பல தேசிய இணைகள் விடுதலைக்காக போராடி உள்ளன. பல விடுதலை அடைந்துள்ளன. ஆனால் தமிழ் தேசிய இனம் மட்டுமே தனது விடுதலையின் ஊடே, பாலின வேறுபாட்டையும், சாதி வேறுபாட்டையும், மத வேறுபாட்டையும், வர்க்க வஐபாட்டையும் நீக்கும் போராட்டங்களை உள்ளடக்கி வளர்ந்து வருகிறது. அதனால்தான் தமிழர் திருநாள் என்று அறியப்பட்ட பொங்கல், உழவர்களது அறுவடை திருநாளாக, கொண்டாடப்படுகிறது. தமிழர் என்றால் உழவர் என்பத்கும் அதில் பொருள் படுகிறது.
ஆகவே தமிழர் விடுதலை என்ற தொலைநோக்கு பார்வையுடன் தமிழர் வரலாற்றை தொகுக்கும போது, பாலின சுதந்திரம், சாதி வேறுபாடு நீக்கம், ஆகியவற்றை இணைத்து காண்பதுதான் தமிழர் பண்பாட்டில் சிறப்புதன்மையையும், செழிப்புதன்மையையுன் ஏற்படுத்தி, எதிர்கால விடுதலைக்கு வித்திட முடியும் என்பதை நாம் உரக்க கூறலாம்.








புதிய விண்டோ
அனைத்தையும் அச்சிடு
ஸ்பான்சர் செய்யப்பட்ட இணைப்புகள்
Life In The Robotics Lab
Who builds humanoid robots? Blog, contests and more!
Robot Manipulators
Manual, semi and automatic models Capacities from 250 up to 20,000kg
Indoor Research Robot
Affordable, Capable, and Expandable Program in Linux or Windows
Dynamixel, Bioloid, OLLO
Smart Robot Servo, DIY Robot Kit ROBOTIS - All you need for robot
X10 for Android
X10 Remotes for Android Phones Download OpenRemote 2.0 Now!
பற்றி மேலும்…
இந்த இணைப்புகளைப் பற்றி