Wednesday, February 10, 2010

நீதியரச மனோபாவம், ஒருமதச்சார்பானதா?

ந்திர உயர்நீதி மன்றம், முஸ்லிம் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கொடுத்திருக்கும் தீர்ப்பு, நாடு தழுவிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 2007ம் ஆண்டு ஆந்திர மாநில அர சாங்கம், முஸ்லிம்களுக்கு கல்வியிலும், வேலையி லும் 4% இடஒதுக்கீடு என்பதற்கான ஆணை யை அறிவித்தது. அந்த ஆணை ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்ட வகுப் புகளின் ஆணையம் கொடுத்த அறிக்கையின் மீது அறிவிக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் தலைவரான ஓய்வு பெற்ற அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணாவின் பரிந்து ரையின் பேரில் அந்த அறிக்கை கொடுக்கபட் டிருந்தது. இப்போது ஆந்திர உயர்நீதிமன்றம், அந்த ஆணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திர உயர்நீதிமன்றத்தின் 7 நீதியரசர்கள் கொண்ட பெஞ்ச்சின் முன்னால் அந்த வழக்கு வந்தது. அதில் 2 நீதியரசர்கள் இடஒதுக்
கீட்டை மறுக்காத நிலை யில், பெரும்பான்மையான 5 நீதியரசர்கள், முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங் கியுள்ளனர். தலைமை நீதியரசர் அனில் ரமேஷ் தவே தலைமையில், கோபாலரெட்டி, வி.ஈஸ்வ ரய்யா, ஜி.ரகுராம் ஆகிய நீதியரசர்கள் இந்த ரத்து ஆணையைப் பிறப்பித்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறியி ருக்கும் காரணங்கள் வேடிக் கையாக இருக்கின்றன.
சமூக ரீதியில் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப் பினருக்கான இடஒதுக்கீடு என்ற பரிந்து ரையை முன்வைத்த ஆணை யத்தை, நீதியரசர்கள் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறார்கள். போதுமான புள்ளி விவரங்களை, மொத்த முஸ்லிம் மக்கள் தொகை பற்றி, ஆணையம் திரட்டவில்லை என்று நீதிமன்றம் குற்றம் சாட் டியுள்ளது. பல்வேறு முஸ்லிம் குழுக்கள் இருப் பதாகவும், ஆணையம் அந்த குழுக்களின் மொத்த மக்கள் தொகை கணக்குப்பற்றி அறியா மலேயே இருந்திருக்கிறது என்றும் நீதியரசர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மொத்த முஸ்லிம் மக்கள் தொகை கணக்கு தெரியாமலேயே, ஈகுழுவில் அவர்களை சேர்த்திருப்பதாகவும், அறிவியல் ரீதியான மாதிரி எடுத்து, ஆய்வு நடத்த வில்லை என்றும், ஆய்வு எடுத்தமுறை தவறானது என்றும் இப்போது நீதியரசர்கள் குறை கூறி யுள்ளனர். மேற்கண்ட காரணங்களுக்காக மட்டுமே முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியுமா என்ற கேள்வி நமக்கு எழு கிறது. சரியான ஆய்வு முறையை ஆணையம் பின்பற்றவில்லை என்றால், முறையான ஆய்வை செய்ய வலியு றுத்தி மட்டும்தானே தீர்ப்பு வழங்கமுடியும் என்ற
சர்ச்சையும் உடன் வரு கிறது.
ஆனால் ஆந்திர உயர்நீ திமன்ற நீதியரசர்கள், வேறு ஒரு முக்கிய காரணத்தைக் கூறியுள்ளனர். 2007ம் ஆண்டு ஆணை, இடஒ துக்கீடு கொடுப்பதில், குறிப்பாக முஸ்லிம்களுக்கு என்று மதரீதியாக குறிப் பிட்டுள்ளது தவறானது என கூறியுள்ளனர். அது மதமாற்றத்தை உற்சா கப்படுத்தும் தன்மை கொண்டது என்று குற் றம் சாட்டியுள்ளனர். அத னாலேயே அது தொடர்ந்து நீடிக்கமுடியாது என்றும் கூறியுள்ளனர். இந்த இடத்தில், சமூக ரீதியில் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய பிரிவினர்களாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது என்ற அரசாணை எப்படி மதமாற்றத்தை உற்சாகப் படுத்தும் என்ற புதிய
சர்ச்சை எழுப்பப்படாமல் இருக்க முடியாது.
ஆந்திராவில் இதற்கு முன்பே, இதே போன்ற முஸ்லிம் இடஒதுக்கீட்டு அறிவிப்பின் மீது, இதே போல உயர்நீதிமன்றம் ரத்து செய்த வரலாறு இருக்கிறது. முதலில் 2004ம் ஆண்டு ஆந்திர அரசாங்கம் ஒரு நிர்வாக ஆணையின் மூலம் 5% இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு அறிவித் திருந்தது. அது ஆந்திர மாநில சிறுபான்மை நிதிவா ரியத்தின் அறிக்கையின் மீது அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு. அப்போதும் ஆந்திர உயர்நீதிமன்றம் அந்த ஆணையை ரத்து செய்தது. அதன் பிறகு ஆந்திர அராசங்கம் ஒரு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உருவாக் கியது. அந்த ஆணையம் கொடுத்த அறிக்கை 2005ம் ஆண்டு அரசு ஆணையாக மாறியபோது, மீண்டும் உயர்நீதிமன்றம் அதை நிராகரித்தது.
இப்போது 2007ம் ஆண்டின் சட்டத்தை ரத்து செய்யும் நீதிமன்றம், சட்டத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளான, முஸ்லிம் என்பதும், மற்ற முஸ்லிம் குழுக்கள் என்பதும் சரியாக விளக்கப்படவில்லை என்ப தும் கூட நீதியரசர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அரசியல் சட்டப்பிரிவின் 14,15(1), 16(2) ஆகியவை மேற்கண்ட சட்டத்தை மீறி யுள்ளன என்று நீதியர
சர்கள் தெரிவித்துள்ளனர். ஆணையம் செய்த ஆய்வு போதாது என்று கூறுகிறது நீதிமன்றம். 2007ல் இத்தகைய முஸ்லிம் இடஒதுக் கீட்டை, சட்டமன்ற ஒப் புதலுடன், மாநில அரசு சட்டமாக்கியுள்ளது. அதன்பிறகு அரசாணை எண் 23 மற்றும் 231 ஆகிய வற்றின் மூலம் முஸ்லிம் குழுக்களுக்கான இட ஒதுக் கீடு அறிவிக்கப்பட்டது. அவை எல்லாமே இப் போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. 3வது அரசாணையாக, பணக்கார முஸ்லிம்களை நீக்கி விட்டு, இடஒதுக்கீடு தருவது என ஒரு ஆணையும் வெளியிடப்பட்டது. அதுவும் கூட இப்போது நீதிமன்றத்தால் ரத்து செய் யப்பட்டுள்ளது. இதில் மீனாக்குமாரி என்ற நீதியரசர், ஒரு பகுதி தலைமை நீதியரசருடன் உடன்பட்டாலும், தனது தீர்ப்பை தனியாக எழுதிக் கொடுத்துள்ளார். அரசாங் கம் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம், பிற்படுத்தப்பட்ட வகுப்பு களை அடையாளம் காட்ட உரிமை உண்டு என்று தனது கருத்தில் கூறியுள் ளார்.
முஸ்லிம் இடஒதுக் கீட்டு ஆணையை ரத்து செய்த நீதியரசர்கள், எந்த ஒரு நிபந்தனையையும் இதற்காக ஆணையம் முன் வைக்கவில்லை என்றும், ஆணையப் பரிந்துரையை வெளியிடுவதற்கு முன் னால், முஸ்லிம் இடஒதுக் கீட்டை மறுக்கும் எந்த ஒரு கருத்தையும் ஆணையம் அழைத்துப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதா கவும் கூட, நீதிமன்றம் குறை கூறியுள்ளது.
இதே நேரத்தில் மேற்கு வங்க அரசு திடீ ரென முஸ்லிம் மக்களுக்கு 10% இடஒதுக்
கீட்டை அறிவித்துள்ளது. அதற்கு அந்த அரசு கூறுகின்ற காரணங்கள், அரசியல் விளக்கங்களாக உள்ளன. வெளியாகி உள்ள ரெங்கநாத் மிஸ்ரா ஆணையம், முஸ் லிம்களுக்காக 10% இடஒ துக்கீடும், பிற சிறுபான்மை சமூகங்களுக்காக 5% இட
ஒதுக்கீடும், ஆக மொத்தம் 15% இடஒதுக்கீட்டை சிறுபான்மையினருக்கு அளிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. அந்தப் பரிந்துரையை மத்திய அரசு எப்போது அமுலாக்கும் என்பது தெரியவில்லை என்றும், அதனால்தான் மேற்கு வங்க அரசு இப்படி தங்கள் மாநிலத்திற்கு அறிவித்திருக்கிறோம் என்று மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்
சாரியா கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் மக்கள் தொகையில் 25% பின்தங்கிய முஸ்லிம் மக்கள் என்றும் அவர் அப்போது கூறியுள்ளார். அதே சமயம் ஆண்டு வருமானமாக நாலரை லட்சம் ரூபாய் ஈட்டுபவர்களுக்கு, முஸ்லிம் இடஒதுக்கீடு கிடையாது என்றும் அவர் அறிவித்துள்ளார். கிரீமி லேயர் என்று அழைக்கப்படும், வசதியா னவர்களை தவிர்த்து விடல் என்ற விசயத்தையும், மேற்கு வங்க அரசு தங்களது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறியுள்ள மதமாற் றம் நடைபெறும் ஆபத்து, அந்த முஸ்லிம் இடஒதுக் கீட்டில் இருக்கிறது என்ற கருத்து பெரும் சர்ச்
சைக்கு உள்ளாக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. மக்கள் தங்களது விருப்பப்படி, மதமாற்றம் செய்து கொள்வதற்கு இந்திய அரசியல் சட்டத்தின் மத உரிமை, அனுமதிக்கிறது. அப்படி இருக்கும் போது, பின்தங்கிய மக்களுக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பளிக்கும் இடஒதுக்கீட்டை, மத அடையாளம் கொண்டது என்ற காரணத்தினால், மதமாற்றத்தை உற்
சாகப்படுத்தக்கூடியது என்று அழைக்கலாமா? அப் படியானால் தங்களுக்கு விருப்பமில்லா விட்டாலும், பெரும்பான்மை மத மான இந்து மதத்தில் தங் கியிருந்தால்தான் இடஒ துக்கீடு கிடைக்கும் என்ற சூழல் நிலவுகிறதா? அல் லது அப்படிப்பட் ஒரு சூழல் நிலவவேண்டும் என்றும், அது மாற்றப் பட் டுவிடக்கூடாது என்றும் குறிப்பிட்ட நீதியரசர்கள் விரும்புகிறார்களா? மாற்று மதத்திற்கு சென்றாலும், பின்தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும் என்ற ஒரு நிலைமை உரு வானால், குறிப்பிட்ட மக்கள் பெரும்பான்மை மதமான இந்து மதத்தை விட்டு, மாறிச் சென்று விடுவார்கள் என்ற அச்சம் நீதியரசர்களுக்கு ஏன்தோன்றுகிறது? அப் படியானால் உடன்பாடு இல்லாவிட்டாலும், நமது நாட்டின் ஏழை மக்கள் இடஒதுக்கீடு பெறுவதற்காக, இந்து மதத்திலேயே இருக்க வேண்டும் என்று குறிப் பிட்ட நீதியரசர்கள் எண் ணுகிறார்களா? அப்படி எண்ணுவதானால் அல் லது அப்படிப்பட்ட மனோபாவம் இருக்கு மானால், எந்த சார்புமற்று சிந்திக்க வேண்டிய நீதியர சர்கள், ஒரு மதச்சார்பாக சிந்திக்கிறார்கள் என்று தானே பொருள்படும்? இது ஒரு மதச்சார்பு மனப்பான்மை என்று அழைக்கப்படாதா? அதாவது ஒரு மதச்சார்பு (Theocratic) என்ற மனப் பான்மை அல்லாமல் வேறென்ன? நீதியர சர்கள் இப்படிப்பட்ட மனப்பான்மையில் இருப்பதுதான் இந்திய அரசா என்றும் கூட விவா திக்கப்பட வேண்டும்.