Wednesday, June 30, 2010

பழங்குடி நிலப்பறிப்பும், ராணுவ உயிர்பறிப்பும்

செவ்வாய் கிழமை சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில், மத்திய சிறப்பு காவல் படையினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் அரசுப் படையினர் பலியாகினர். இது போன்ற தொடர்ந்த உயிரிழப்புகள் இந்திய அரசை உலுக்கிவருகிறது. தனது தளபதிகளையும், அதிகாரிகளையும் இழந்தார் துணை ராணுவம் மனஉறுதியை இழக்கத் தொடங்கியுள்ளது. அபுஜ்மத் என்ற 40,000 சதுர கி.மீ. உள்ள காடுகளின் வாயில் பகுதியாக கருதப்படும் நாராயண்பூர்ஒர்சா சாலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அந்த காட்டுபகுதியை நக்சல்பாரிகளின் விடுதலைப் பகுதி என்று அழைக்கிறார்கள். பஸ்தர் பகுதியில் உள்ள தங்கள் முகாமிற்கு திரும்பி வரும் போது அந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதியம் 3 மணிக்கு நடத்தப்பட்ட அந்த தாக்குதலில், நவீன ஆயுதங்களை மாவோயிஸ்டுகள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த மாவட்டத்தின் காவல் துறை அதிகாரிகள் வேறு ஒரு கதையை சொல்கிறார்கள். முக்கிய இடமான ஜரகதியில் ஒரு ராணுவ முகாமை நிறுவ வேண்டும் என்று தாங்கள் கூறியதாகவும், அதை துணை ராணுவம் மறுத்துவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் துணை ராணுவத்தினர் அந்த இடத்தில் முதலில் ஒரு கட்டிடத்தை உருவாக்கி அதில் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும் என்று விரும்பியதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள். மத்திய சிறப்பு காவல்படையை, தொடர்ந்து மாவோயிஸ்டுகளிடம் பலியாகி வருவதாக காவல் துறையினர் அந்த மாநிலத்தில் குறைக் கூறுகின்றனர். காடுகளில் பணியாற்ற அனுபவம் இல்லாமல் இருக்கிறார்கள் என்றும் துணை ராணுவத்தினரை காவல்துறையினர் விமர்சிக்கிறார். பஸ்தர் பகுதியில் உள்ள காடுகளில் சோதனை நடவடிக்கைகளுக்கு செல்லும் போது, துணை ராணுவத்தினர் உளவுத்துறையினர் கூறும் கருத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தில் மோதல் பகுதிகளிலிருந்து, நேரடியாக பஸ்தர் பகுதிக்கு பெருவாரியான மத்தியச் சிறப்பு காவல்படையினர் கொண்டுவந்து தள்ளப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு இடைக்காலத்தில் ஒய்வு கூட கொடுக்கப்படவில்லை என்றும், அதனால் ஓய்வின்றி சோர்வாக வந்திறங்கியுள்ளனர் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.
சத்திஸ்கர் மாநிலத்தில் இருக்கும் காவல்துறைக்கும், துணை ராணுவத்திற்கும் இடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. கண்ணிவெடி புதைக்கப்பட்ட இடங்களில், அவற்றை அகற்றாமல் உள்ளே நுழைவது அவர்களுக்கு பழக்கமாகயிருக்கிறது. பஸ்தர் பகுதி, 5 மாவட்டங்களை கொண்டது. பஸ்தர், நாராயண்பூர், கான்கெர், பிஜபூர், தன்டேவாடா ஆகிய மாவட்டங்களை கொண்டது. அது தான் மாவோயிஸ்டுகளுடைய மைய பகுதியாகவும் இருக்கிறது. 80ன் கடைசியில் இருந்து கொரில்லா போராட்டப் பகுதியாக அது இருக்கிறது. பஸ்தர் பகுதியின் 40,000 சதுர கி.மீ. காட்டுப்பகுதியில், 25,000 சதுர கி.மீ. வரை மாவோயிஸ்டுகள், கண்ணி வெடிகளை புதைத்துள்ளனர் என்று சத்திஸ்கர் மாநில காவல்துறை தலைவர் விஸ்வரன்ஜன் கூறியுள்ளார். இதுவரை அந்த மாநிலத்தில் மத்திய சிறப்பு காவல்படையை சோர்ந்த 14 பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தெற்கேயுள்ள பஸ்தர் பகுதியில் மட்டும் 13 நிறுத்தப்பட்டுள்ளன. சுர்குஜா என்ற ஜார்கன்த் எல்லையை ஒட்டிய வடக்கு மாவட்டத்தில் ஒரு பட்டாலியன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு ஆயுதம் தாங்கிய அரசுப்படைகள் குவிக்கப்பட்டாலும் பழங்குடி மக்களின் காட்டுப்பகுதிக்குள் செல்வது என்பது எளிதாகயில்லை.
மேற்கண்ட பகுதிகளில் பழங்குடி மக்களுக்கு சொந்தமான காடுகளையும், நிலங்களையும் அவர்களிடம் இருந்து பறித்து, தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்பதற்கு துணைபோனவர்கள் யார் என்பது இப்போது அம்பலமாகிறது. இந்தியாவின் சுற்றுசூழல் மற்றும் வன இலாக்கா தான், காட்டுநிலங்களை பழங்குடி மக்களிடமிருந்து பறித்தெடுக்க உதவிகரமாக இருந்திருக்கிறது.
காட்டு நிலங்கள் மீதான மத்திய வன அமைச்சரவையின் கட்டுப்பாடு, லட்சக்கணக்கான மக்களின் வீடுகள், வாழ்வாதாரம், வாழ்க்கை ஆகியவற்றின் மீது அதிகமான அதிகாரத்தையும் அதன் மூலம் அநிதியையும் இழைத்துள்ளது. 1980 ஆம் ஆண்டின் காடு வளர்ப்புச் சட்டம், இந்தியாவில் இருக்கின்ற நிலங்களில் 23% காடுகள் என்று பதிவு செய்துள்ளது. 2006ம் ஆண்டிலிருந்து இன்று வரை அன்றைய மத்திய பிரதேசத்திலும், இன்றைய சத்திஸ்கரில் மட்டும் கொள்கை ரீதியாக, சட்ட விரோதமாக பல்வேறு திட்டங்களுக்கு 15,411 ஹெக்டேர் காட்டு நிலங்களை இந்த அமைச்சகம் கொடுத்துள்ளது. அந்த வட்டாரத்தில் வாழும் பழங்குடி மக்கள் உட்பட, குடியிருக்கும் மக்களிடம் அவர்கள் பயன்படுத்தும் அல்லது சார்ந்து இருக்கும் நிலங்களை பறித்துக் கொடுப்பது பற்றி கலந்தாலோசிக்க வில்லை. 2009ம் ஆண்டு ஆகஸ்டு 3ம் நாள் இந்த வனஇலாகா அமைச்சகம் நடந்ததெல்லாம் சட்ட விரோத மென்றும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையை வெளி யிட்டது. ஆனாலும் வனப்பகுதிகளில் நிலப்பறிப்பு நின்றபாடில்லை. ஒவ்வொரு ஹெக்டேர் நிலம் வனங்களிலிருந்து மாற்றப்படும் போதும், அதற்கு சமமாக வருவாய் நிலத்திலிருந்து ஒரு ஹெக்டேரோ அல்லது கைவிடப்பட்ட வனப்பகுதிகளிலிருந்து 2 ஹெக்டேரோ, புதிய மரங்களை நடுவதன் மூலம் திருப்பி அளிக்கப்படவேண்டும் என்பதாக அந்த வனப்பாதுகாப்பு சட்டம் கூறுகிறது. இது ஆவண அளவில் நல்லதாக தோன்றினாலும், இயற்கை வனங்களுக்கு மாற்றாக ஒரு மரத்தை நடுவது என்பது பல்லுயிர் சூழலின் இழப்பை சரிகட்டாது. அதே போல நீர் நிலைகளின் இழப்பை ஈடுகட்டாது. தோட்டங்களும் கூட புதிய நிலப்பறிப்பை ஏற்படுத்தவே செய்யும். அது திட்டங்கள் பெயரில் இல்லாமல், வனத்துறை பெயரில் நடைபெறும். எந்த வகையிலும் வாழ்ந்து வரும் மக்கள் தங்களது நிலங்களை இழப்பார்கள்.
புதிய தோட்டங்கள் வனவாழ் மக்களது அல்லது கிராம பொது நிலத்தையோ பறிப்பதன் மூலம் தான் நடைபெறும்.
1980 முதல் 2009 வரை இது போன்ற ஈடுகட்டும் தோட்டங்கள் 11,83,472 ஹெக்டேர் நிலத்தில் உருவாக்கப் பட்டுள்ளன. அதில் 5,54,635 ஹெக்டேர் வருவாய் துறை நிலத்தி லிருந்து வனத்துறைக்கு எடுக்கப் பட்டது. இவை அனைத்துமே மத்திய பிரதேசத்திலும், சத்திஸ்கரிலும் நடந்த சட்ட விரோத திருப்பங்கள். கூட்டு வன மேலாண்மை என்ற முறையின்படி அதிகமான நிலங்களை கிராம மக்களிடமிருந்து பறித்து எடுத்தல் தொடர்கிறது. வன இலாகா காவலர்களால் தலைமை தாங்கப்பட்டு, பங்களிப்பு திட்டத்தின்படி வனச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சட்டமாக் கியுள்ளனர். ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு மரத்திலும், வருமானத்திலும் பங்கு கொடுப்பதற்கு பதில், அவர்களது இலவசமான உழைப்பை பெற்றுக் கொள்கிறார்கள். கூட்டு வன மேலாண்மைக் குழுக்கள் முழுமையாக ஒப்பந்தக்காரர்களையும், வர்த்தகர்களையும், மேட்டுக்குடி களையும் மற்றும் வனத்துறைக்கு வேண்டியவர் களையும் கொண்டதாக உருவாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் வனங்களில் வாழ்ந்து வரும் மக்கள் நிலங்களிலிருந்து அந்நியப்படுத்தப் படுகிறார்கள். அந்த திட்டத்திற்காக 2008 லிருந்து 2010 வரை கொடுக்கப்பட்ட ரூ. 1056.74 கோடிகள் மேற்கண்ட லாபநோக்க சக்திகளால் கொள்ளை யடிக்கப் பட்டுள்ளது.
காடுகளை அழிப்பது மீண்டும் வனவாழ் மக்களது வாழ்க்கை அழித்து வருகிறது. 2009ம் ஆண்டு மாநில அரசாங்கங்களால் ரூ.5000 கோடி அனைத்து நாட்டு கடனாக பெறப் பட்டுள்ளது. அவற்றை அமுல் படுத்த கூட்டு வன மேலாண்மை பயன்படுத்தப் படவேண்டும். அது முழுமையாக வட்டார மக்களுக்கு எதிராகவே பயன்படுகிறது. இவ்வாறு வனத்துறை அமைச்சகம் பறிக்கப்பட்ட நிலங்கள் பழங்குடிகளை, மாவோயிஸ்டுகளிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது. அதன் விளைவாக அங்கே செல்லும் துணை ராணுவத்தினரின் உயிர்கள் பறிக்கப் படுகின்றன. நிலங்களை பறி கொடுத்த பழங்குடிகள், அரசப்படைகளின் உயிர்களை பறித்தெடுக்கிறார்கள் என்ற எதார்த்த உண்மையை எப்போது அரசு புரிந்து கொள்ளும் என்று தெரியவில்லை.

காதல் புரியுமா?

இளையவளே
அவன் உன்னுடன்
பேசிக்கொண்டிருக்கும்போது
வெயில் வந்துவிட்டதே
அதிகாலை முதல்
அவனுடன் கடற்கரையில்
பேசி, பேசியே நேரம்
போனது தெரியவில்லையே
கடற்கரை மணலில்
ஏறும் சூடு உனக்கு
தெரியாதுதானே
அதை புரிந்து கொண்டால்
உலகம் திருந்தி விடும்
என்கிறாயா?

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்து தாக்குதலா?

ஒரு வாரமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து வருகின்ற செய்திகள் எதுவுமே ஆரோக்கியமாக இல்லை. காட்சி ஊடகங்களுக்கு சுடச் சுட செய்திகள் கிடைக்கின்றன என்பது தவிர, வன்முறையற்ற எந்த ஒரு செய்தியும் அங்கிருந்து வரவில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள சோப்பூர் என்ற நகரில் ஒரு இளைஞர் மத்திய சிறப்பு காவல்படையின் தோட்டக்களுக்கு பலியானார். அதையொட்டி அந்த நகரின் அருகே இருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் சோப்பூர் நகரை நோக்கி கூட்டம், கூட்டமாக வரத் தொடங்கினர். இதற்கிடையில் மத்திய சிறப்பு காவல்படை ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது. ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ள பகுதிகளில், அந்த குறிப்பிட்ட நேரத்தில் யார் வெளியே வந்தாலும் உடனடியாக சுட்டுக் கொல்வார்கள் என்பது இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் பழக்கம். ஆனால் ஹூரியத் மாநாடு என்று சொல்லப்படும், தேர்தல் போட்டியிடாமல் காஷ்மீரின் சுயநிர்ணய உரிமைக்காக போராடக்கூடிய மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு, இந்த ஊரடங்கை எதிர்த்து தெருவுக்கு வந்து போராட மக்களை அறைகூவியிருந்தது. அதையொட்டியே மக்கள் ஆயிரக்கணக்கில் தெருவுக்கு வந்தார்கள் என்பது அரசாங்கத்தின் குற்றச்சாட்டு. ஊர்வலமாக வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டவுடன் துணை ராணுவப்படையினர் ஷாகார் சினிமா கொட்டகை அருகே, ஊர்வலத்தைப் பார்த்து பகிரங்கமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதையொட்டியே எதிர்ப்பாளர்கள் கலக்கமடைந்து கலவரமாக வெடித்துள்ளது.
இதே போல 20 ஆண்டுகளுக்கு முன்னால் அஸ்ஸாம் மாநிலத்தில், வங்காளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து மாணவர்கள் ஆசு என்ற மாணவர் அமைப்பின் மூலம் அணி திரண்டு போராடினார்கள். அப்போது அங்கே அனுப்பப்பட்ட துணை ராணுவப்படை ஊரடங்கு உத்தரவு ஒன்றை அறிவித்திருந்தது. அதை எதிர்த்து அனைத்து அஸ்ஸாம் மாணவர் அமைப்பு என்று கூறப்படும் ஆசு அமைப்பினர், மக்கள் ஊரடங்கு என்ற எதிர்முழக்கத்தை முன்வைத்தனர். வயோதிகர்கள் முதற்கொண்டு குழந்தைகள் வரை, தெருவுக்கு வந்து அமைதியான வழியில் ஊர்வலமாக சென்றனர். அதிர்ச்சியடைந்த துணை ராணுவத்தினரோ, பின்வாங்கிக் கொண்டனர். அதுவும் கூட ஒரு தேசிய இனத்தின் வாழ்வாதாரத்திற்கான போராட்டம் தான். அதிலும் பெரும்பான்மை மக்கள் தான் திரண்டு தங்களுடைய நிலத்தை காப்பாற்ற தெருவுக்கு வந்தார்கள்.
அதே போல காஷ்மீரிலும் பெரும்பான்மை மக்கள் தங்களுடைய நிலத்தை காப்பாற்றுவதற்காக, ஆக்கிரமிப்பு போல வந்திருக்கும் துணை ராணுவப்படையை எதிர்த்து ஊரடங்கை மறுத்து தெருவுக்கு வந்துள்ளனர். ஆனால் காஷ்மீர் பிரச்சினை இந்திய ஆட்சியாளர்களுக்கு கவுரப் பிரச்சினையாக வும், அண்டை நாடான பாகிஸ்தானுடன் பகைத்துக் கொள்வதற்கான துருப்புச் சீட்டாகவும், டெல்லி மனோபாவத்தில் விட்டுக் கொடுக்க முடியாத பிரச்சினையாகவும் இருக்கிறது. அதனால் தானோ என்னவோ, டெல்லியின் விரல் அசைப்பு, துணை ராணுவப்படையில் பகை முகம் காட்டும் நிலைக்கு தொடர்ந்து தள்ளி வருகிறது. ஹூரியத் மாநாடு அறிவித்தவுடன் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் தெருவுக்கு வருகிறார்கள் என்றால், பொதுமக்களுடைய உணர்வுகளை அந்த அமைப்புதான் சரியாக பிரதிபலிக்கிறது என்று அர்த்தம்.
தேர்தல் மூலம் காஷ்மீரில் முதலமைச்சராக இருக்கும் உமர் அப்துல்லாவோ, மத்திய காங்கிரஸ் தலைமையோ கொண்டுள்ள மக்கள் செல்வாக்கை விட, ஹூரியத் மாநாடு மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பது இதன் மூலம் தெரிகிறது. ஹூரியத் மாநாடு அமைப்பினர் ஆயுதம் தாங்கி போராடுபவர்கள் அல்ல. ஆனாலும் காஷ்மீரின் சுய நிர்ணய உரிமைக்காக அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். அவர்கள் பின்னால் மக்கள் நிற்பதால், காஷ்மீர் மக்களும் சுய நிர்ணய உரிமையை வேண்டி நிற்கிறார்கள் என்பது புலனாகிறது.
காஷ்மீர் மாநிலத்தின் சட்டத்தையும், நாடளுமன்ற விவகாரத்தையும் கவனிக்கின்ற அமைச்சர் அலி முகமது சாகர், ஞாயிற்றுக் கிழமை நடந்த வன்முறைகளை வித்தியாசமாக வர்ணிக்கிறார். மத்திய சிறப்பு காவல் படையினர் சரியான தலைமைக் கட்டளை இல்லாமல், கட்டுப்பாட்டை இழந்து போய்விட்டனர் என்று அந்த முக்கிய அமைச்சர் கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் காஷ்மீருக்கு வருகை தந்து, மத்திய சிறப்பு காவல் படையை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார். மீண்டும் சிதம்பரத்தின் அமைச்சரவையின் கீழே உள்ள அரசப்படைகளின் கட்டுப்பாடின்மை அம்பலமாகியுள்ளது. 4 மாதங்களுக்கு முன்னால் காஷ்மீர் சென்ற ப.சிதம்பரம், காவல்துறை கைகளில் சட்ட ஒழுங்கு கொடுக்கப்பட்டு, துணை ராணுவம் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது புதிய ஊடக பேட்டியில், ஹூரியத் மாநாட்டிற்கும், மத்திய உள்துறைக்கும் உள்ள பேச்சுவார்த்தைப் பற்றி சில செய்திகளை அம்பலப்படுத்துகிறார். அமைதியான வழியில் தூதரகப் பேச்சு என்ற பெயரில் ப.சிதம்பரம் அழைத்த பேச்சு வார்த்தைப்பற்றி கூறுகிறார். அத்தகைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஹூரியத் மாநாடு அமைப்பினர், பாகிஸ்தான் அரசிடம் கேட்டுக் கொண்டுதான் செயல்படுகிறார்கள் என்று உமர் அப்துல்லா ஒருபுறம் முத்திரைக் குத்தினாலும், இன்னொரு புறம் பாகிஸ்தான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருடைய முயற்சிக்குப் பிறகு, காஷ்மீர் பேச்சு வார்த்தையும் பலன் தரும் என்று கூறுகிறார். தற்போது உள்துறை அமைச்சருடன் ஹூரியத் மாநாடு அமைப்பினர் பேச்சு வார்த்தை தொடர்கிறார்களா என்ற கேள்விக்கு மௌனம் சாதிக்கிறார். மத்திய அரசின் பேச்சு வார்த்தை அணுகுமுறைப் பற்றியும், அதற்கு வருகின்ற தடங்கல்கள் பற்றியும் இருக்கும் ரகசியங்களை அரசியலிலிருந்து ஓய்வு பெற்றப்பின் எழுதுவேன் என்கிறார். அதே சமயம் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, காஷ்மீர் காவல்துறைதான் முன்னால் நிற்கவேண்டும் என்றும், துணை ராணுவம் பின்னால்தான் நிற்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கு எதிரான செயல்பாடுகள்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்து வருகின்றன.
சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கிலானி இதுபற்றி பேசினார். அவர் நாடாளுமன்ற தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலையானவர். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அறிவுஜீவி. அவர் இந்தியாவில் மக்கள் எப்படி சிந்திக்கவேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் தீர்மானித்து, அதற்கு தகுந்தாற்போல் செய்திகளை திருப்பி விடும் ஊடகங்களின் காலம் இது என்று கூறுகிறார். காஷ்மீரில் ஜம்மு பகுதி இந்து மதச்சார்பான மக்கள் அதிகம் வாழும் பகுதி. அங்கே அரசாங்கம் கிராம பாதுகாப்பு குழுக்களை கட்டியுள்ளது. அவர்கள் ராணுவத்திற்காக வேலை செய்கிறார்கள். அவர்களில் யாரையாவது காஷ்மீர் போராளிகள் தாக்கி விட்டால், உடனடியாக இந்து மக்களை போராளிகள் தாக்கி விட்டார்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அதன் மூலம் சுய நிர்ணய உரிமைக்கான இயக்கத்தை, இந்து மக்கள் எதிர்ப்பு இயக்கம் போல சித்தரித்து விடுகிறார்கள் என்று கூறினார். அந்த கிராம பாதுகாப்பு குழுக்களிலும் முக்கியமாக முன்னாள் ராணுவத்தினர் இருக்கிறார்கள். அவர்களை அரசு ஆயுதம் தாங்கியவர்களாக மாற்றி விடுகிறது. காஷ்மீரில் இறங்கி இருக்கும் அரச படையில் 99% கவனமாக இந்துக்களாக இணைக்கப் பட்டுள்ளனர். 40 ஆண்டுகள் அமைதி வழி போராட்டத்தின் மூலம் சுயநிர்ணய உரிமைக்கான இயக்கம் நடந்தது. மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்ததாதனால், இளைஞர்கள் எல்லா நாட்டிலும் நடப்பது போல, ஆயுதம் தாங்கிய வழியை தேர்வு செய்தார்கள். தங்களது குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகியவற்றை விட்டு விட்டு, காடுகளுக்கு சென்று கொரில்லா போராளிகளாக மாறியுள்ளார்கள் என்று பேராசிரியர் அப்போது கூறினார். தங்கள் மக்கள் மதிப்புடன் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்காக, போராளி ஆணும், பெண்ணும் தங்கள் உயிரைக் கொடுக்க தயாராக இறங்கியிருக்கிறார்கள் என்று அப்போது கூறினார். இந்தியாவில் நீதித்துறை உட்பட அனைத்து நிறுவப்பட்ட அதிகார நிறுவனங்களும் உடைந்து போனப்பிறகு, ஜனநாயக மதிப்பீடுகளை எங்கிருந்து எதிர்பார்க்கிறீர்கள் என்று சூடாகவே அப்போது பேராசிரியர் சென்னைவாசிகளைப் பார்த்து, கேள்வி கேட்டார். நீதி கிடைக்காமல் அமைதி எப்படி வரும் என்று வினவினார். சுடுகாட்டில் நிலவும் அமைதிதான் இவர்களது எதிர்பார்ப்பா என்று கேட்டார்.
2005ம் ஆண்டிலிருந்து இப்போது வரை காஷ்மீரில் அரசப்படைகள் நடத்திய 350 மீறல் குற்றங்களை வழக்குப்போட, அங்குள்ள அரசு மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. இதுவரை கிடைக்கவில்லை அதே சமயம் சுதந்திரமாக கருத்துச் சொல்பவர்களுக்கு எதிராக யு.ஏ.பி.ஏ. என்ற சட்ட விரோதமாக கூடுதல் தவிர்ப்பு சட்டம் என்பது பயன்படுத்தப்படுகிறது. இதுபோன்ற தவறுகளை எதிர்த்து, மற்ற மாநிலத்தில் உள்ள மக்கள் கேள்வி கேட்காவிட்டால், அவர்களது மௌனம் அத்தகைய தவறுகளுக்கு கொடுக்கின்ற ஆதரவு என்றும் பேராசிரியர் கடுமையாகவே கூறினார். இதுதான் நமக்கு நினைவுக்கு வருகிறது. ஈழத்தில் இன அழிப்பை அனுபவித்து துவண்டு போன தமிழ் நாட்டு மக்கள், காஷ்மீரில் நடத்தப்படும் இன ஒடுக்கலை எதிர்த்து கேள்வி கேட்கப் போகிறோமா? அல்லது மௌனத்தின் மூலம் ஆதரிக்கப் போகிறோமா? இதுதான் நமக்கு எழும் கேள்வி.

Monday, June 28, 2010

நாம் வாழும் காலத்திலேயே தாய் மொழிக் கல்விக்கு வேலை உத்தரவாதம்

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் நிறைவு நாளில், தமிழக முதல்வர் ஒரு அறிவிப்பை அளித்துள்ளார். தாய்மொழித் தமிழில் கல்வி கற்றவர்களுக்கு, தமிழக அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க சட்டம் ஒன்று புதிதாக இயற்றப்படும் என்று அறிவித்துள்ளார். செம்மொழி மாநாடு பற்றி ஆயிரம் பாராட்டுகளும், ஆயிரம் விமர்சனங்களும், கடுமையான இடித் துரைகளும் இருக்கலாம். அத்தனையையும் தாண்டி இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்படும் போது, யாருமே உள்ளம் குளிராமல் இருக்க முடியாது. தமிழ்நாட்டில் தமிழ் பயிற்று மொழியை நாடிச் செல்வதற்கான சூழல், நாளுக்கு நாள் குறைந்து வந்துகொண்டிருந்தது. அத்தகைய நிலையில் இந்த அறிவிப்பு, அதன் அமுலாக்கல் தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.
உலகம் முழுவதும் தாய்மொழிக் கல்வி மட்டுமே எந்த ஒரு இனத்தையும் மேம்பட வைத்துள்ளது. அதற்கு உதாரணமாக ஜப்பான், ஜெர்மன், சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து என்று நாடுகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த நாடுகளில் கல்விக்கான பயிற்று மொழியே, தாய் மொழியில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதாவது பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் இன்று அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்றுக் கொடுக்கிறார்களே, அதற்கு பதில் தாய் மொழியிலேயே அனைத்து பாடங்களும் கற்றுக் கொடுக்கப்படும். அதாவது சோசியல் சயின்ஸ் என்ற பாடத்தை முறையாக, சமூக அறிவியல் என்ற தமிழ் பேசும் மக்களுக்கு புரிகின்ற முறையில் கற்றுக் கொள்ளலாம். அது போல பிஸிக்ஸ் என்ற பாடத்தை, பௌதிகம் என்பதாகவும், கெமிஸ்டிரியை வேதியல் பாடமாகவும், மேதமெடிக்ஸ்சை கணிதமாகவும், சுவாலஜீயை விலங்கியலாகவும், பாட்டனியை தாவரயியலாகவும் கற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தாய்மொழியிலேயே பாடத்திட்டங்களை கற்றுக் கொள்வதால், படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு தாங்கள் வீட்டில் பேசுகின்ற மொழியிலேயே பாடங்கள் இருப்பதால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
பழக்கத்திலும், புழக்கத்திலும் எந்த மொழியில் ஒரு மனிதன் அனுபவம் பெற்றிருக்கிறானோ, அந்த மொழியில் தான் படிக்கும் பாடம் இருக்குமானால், அது எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கும் மேலாக படித்த பாடம் தானாகவே நினைவிலும் நிற்கிறது. தாய்மொழியில் தான் அல்லது அதிகமாக புழங்கும் மொழியில் தான், ஒருவர் சிந்திக்க முடிகிறது. தனது தாய் மொழியில் பாடத்தை படிப்பவர்கள், அதே மொழியில் சிந்திக்கும் போது புதிய கருத்துக்களை உருவாக்க எளிதாகிறது. அதாவது தான் படித்த பாடத்தின் மீது, புதிய படைப்பாற்றலுடன் கூடிய கருத்துகளை ஒருவர் உருவாக்கி கொள்ள முடிகிறது. அதில் தான் எந்த ஒரு மனிதரும், அறிவுஜீவியாக மேம்பட முடிகிறது.
மேற்கண்ட அறிவியல் சிந்தனை கல்விக்கு அடிப்படையான தளமாக இருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாக இருந்து விட்ட நாம், அவர்கள் நடத்தி வந்த காலனிய பண்பாட்டு சூழலில் சிக்கிக் கொண்டதால், ஆங்கில மொழியின் மீது ஒரு விதமான அடிமை புத்தியை கொண்டிருந்தோம். அதாவது அந்நியமொழியான ஆங்கிலம், நமது தாய் மொழியான தமிழை விட உயர்ந்தது என்ற மாயையில் கட்டுண்டிருந்தோம். அதனால்தான் ஆங்கிலேயன் அறிமுகப்படுத்திய உடுப்புகளையும், அலங்காரங்களையும் ஏற்றுக் கொண்டது போல, அவர்களது மொழியையும் நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டோம்.
1938ம் ஆண்டு தமிழ்நாட்டிற்குள் இந்தி மொழி திணிக்கப்பட்ட போது, தந்தை பெரியார் தலைமையில் அதற்கு எதிரான போராட்டம் தொடங்கியது. அதுவே 1965ம் ஆண்டு லால்பகதூர் சாஸ்திரி தலைமையிலான மத்திய அரசால் இந்தித் திணிக்கப்படும் போது, எதிர்ப்பு போராக தொடர்ந்தது. அதுவே தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கும் அடிப்படையானது. ஆனாலும் கூட இந்தி வருவது தடுக்கப்பட்ட அதே நேரம், அந்த இடத்தில் தமிழ் அரியணை ஏறவில்லை. மாறாக ஆங்கிலமே கோலோச்சியது. இந்தி என்ற வாள் தமிழின் மீது பாயமல் தடுப்பதற்கு, ஆங்கிலம் என்ற கேடயம் தேவைதானே என்ற கருத்து செல்வாக்கு செலுத்தியது. அதன் விளைவு குழந்தைகள் பள்ளிகள் முதல் உயர் கல்வி வரை, ஆங்கிலமே பயிற்று மொழியாக ஆகிவிட்டது.
நர்சரிபள்ளிகளில் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவது பெருமையாக பார்க்கப்பட்டது. தொழிலாளர் குடும்பங்களிலும், விவசாய குடும்பங்களிலும் உள்ள பெற்றோர்கள், தங்கள் தாய்மொழி தமிழை மறுத்துவிட்டு, தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் கற்க வேண்டும் என்று விரும்பினார்கள். இத்தகைய பண்பாட்டு ஆக்கிரமிப்பு தமிழ்நாடெங்கும் பரவியது. ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே, பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூட, பெற்றோர்கள் சிந்திக்க தொடங்கினர்.
இந்தி படித்தால் தமிழ்நாட்டிற்கு வெளியே இந்தியா எங்கும் வேலைக்கு போகலாம் என்ற கருத்தும் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கியது. அதனால் இந்தி எதிர்ப்பு போராட்டம், தங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைப்பதை கெடுத்துவிட்டது என்று தமிழ் பெற்றோர்கள் எண்ணத் தொடங்கினர். வேலையை மட்டுமே, அதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை மட்டுமே தனித்து சிந்திப்பதன் மூலம், தாய் மொழியின் முக்கியத்துவத்தை அறிவியல் ரீதியில் உணராமல், உடனடி தேவைகளில் நின்று, தமிழர்கள் தங்களது சிந்தனையை கீழே இறக்கிக் கொண்டனர். இதற்கெல்லாம் காரணமாக புறநிலையில் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற ஒரு பூதம் தமிழ்மக்களை ஆட்டிப் படைத்தது.
இந்தியநாட்டின் பொருளாதார கொள்கைகளினால், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுகிறது என்ற உண்மை நம் மக்களுக்கு உரைக்கவில்லை. அதுவே தாய் மொழியின் தேவையையும், அதையொட்டிய நீடித்த தன்மை கொண்ட வளர்ச்சியையும் நம் மக்களுக்கு தெரியவிடாமல் செய்துவிட்டது. அதனால் தமிழ்மொழி சார்ந்த தேசிய இனத்தின் முன்னேற்றம் உளவியல் ரீதியாக தடுக்கப்பட்டது.
ஆங்கிலத்தை பயிற்று மொழி ஊர்தியாக கொண்ட தனியார் கல்வி நிறுவனங்கள் லாப நோக்கங்களுக்காக செயல்படத் தொடங்கின. அதுவே கல்வியை வணிகமயமாக்கிவிட்டது. தனியார் கல்வி நிறுவனங்களை எதிர்த்த கருத்து இப்போது தான் அரசாங்கத்திற்கு முளைவிடத் தோன்றியுள்ளது. அதேபோல தாய்மொழி தமிழ் வழிக் கல்வியும் இப்போது தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தொழில் படிப்புகளில் பொறியியல் கல்லூரிகளில் தமிழ்வழி பயிற்று மொழி இப்போது தொடங்கப்படுவது போல, மருத்துவ படிப்பிலும் தொடங்கப்பட வேண்டிய தேவையுள்ளது.
தமிழ்வழி பயிற்று மொழியில் படித்தவர்களுக்கு வேலை உத்திரவாதம் இல்லை என்ற கூக்குரலை நிறுத்துவதற்கு, அரசுப் பணிகளில் தமிழ் பயிற்று மொழி படித்தவருக்கே முன்னுரிமை தரவேண்டும் என்ற கோரிக்கை நிண்ட காலமாக, தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்கு செவிமடுத்து இப்போது தமிழ்வழி படித்தோருக்கே, அரசுப் பணிகளில் முன்னுரிமை என்பது இப்போது அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாராட்டத்தக்க செயலாகும். வேலைக்காக கல்வியை தேடும் இன்றைய சமூகத்தில், வேலை உத்திரவாதம் கிடைக்கும் போது மட்டுமே, தாய்மொழிக் கல்விக்கு மக்கள் திரும்பமுடியும் என்ற உண்மை இங்கே வெற்றிபெறுகிறது.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான விடுதலை போராட்டம் ஆயுதம் தாங்கிய கட்டத்தை எட்டியபோது தமிழர்கள் உவகை கொண்டனர். அது தோல்வியில் முட்டியபோது தமிழர்கள் துவண்டனர். அதுவே உலகம் தழுவிய அரசியல் போராட்டமாக இப்போது எழுந்து நிற்கும் போது, மாற்றார் அது கண்டு அதிர்ச்சியுறுகின்றனர். ஆறரை கோடி தமிழ்மக்கள் வாழும் தமிழ்நாட்டில், தமிழ் வழிக் கல்விக்கு அரசுப் பணியில் உத்தரவாதம் கிடைக்கும் போது, அதுவே தமிழர்களின் தனித்த அறுதியிடலை உறுதி செய்யும். இத்தகைய மகத்தான பாய்ச்சல் தமிழர் உலகிற்கு ஒரு இனிப்பு செய்தியாக பரிமாறப்படும்.

Sunday, June 27, 2010

சீத்தாராம் யெச்சூரி கனவிலாவது தமிழ் நிலம் கிடைக்குமா?

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு எதிர்பாராத இடத்திலிருந்து, எதிர்பாராத மனிதராக சீத்தாராம் யெச்சூரி வந்தார். உரையாற்றினார். தமிழ்மொழி தழைத்தோங்கி இருக்கிறது என்றார். அதற்கு காரணம் எளிய மக்கள் மத்தியில் உயிரோட்டமாக தொடர்ந்து இருப்பதுதான் என்றார். சமஸ்கிருதம் என்ற மொழி எளிய மக்கள் மத்தியில் பேச்சு வழக்கில் இல்லை என்பதை சொல்லவில்லை. காரல் மார்க்ஸ் மொழியை சிந்தனையின் உடனடி வெளிப்பாடு என்று கூறியதை மேற்கோள் காட்டினார். ஸ்டாலின் மொழி பற்றி, அது ஒரு சாதனம் என்று கூறியதாக விளக்கினார். ஸ்டாலின் கூற்றுப்படி மொழி என்பது ஒரு சமூகத்தின் மேல்தளமுமல்ல; அடித்தளமுமல்ல. அது ஒரு உற்பத்தி கருவி. உற்பத்தி கருவியின் இன்றியமையாத பங்கை, சமூக முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள். மொழி பற்றி மொழி மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான சீத்தாராம் யெச்சூரி தனது பாராட்டுக்களை மொழி மாநாட்டில் கூறியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை.
தமிழனின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் பற்றியும் கருத்து சொல்லாமல் அவரால் தமிழ்நாட்டை விட்டு புறப்பட முடியவில்லை. மதுரைக்கு சென்றிருக்கிறார். சனிக்கிழமை ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். அதில் இலங்கைத் தமிழர்கள் பற்றி ஒரு உரையாற்றி இருக்கிறார். ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையை பெற்றுக் கொடுக்க, தங்கள் கட்சியின் பார்வையில் நின்று கொண்டு, ஒரு அரசியல் தீர்வை பேசியிருக்கிறார். ஏற்கனவே புலம் பெயர்ந்த தமிழர்களால், ஈழத்தமிழர் போர் நடந்து வரும் காலத்திலேயே பல ஆண்டுகளுக்கு முன்னால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக து.ராஜாவையும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக சீத்தாராம் யெச்சூரியையும் வெளிநாட்டிற்கு அழைத்து , விவாதித்து சில விளக்கங்களை கொடுத்து இருக்கிறார்கள். அதன் பிறகு அவர்களது பார்வையில் சிறிதாவது மாற்றம் வருமா என்று உலக தமிழ் சமூகம் கவனித்து வருகிறது. அந்த நிலையில் யெச்சூரியின் இந்த உரை கவனிக்கப்படவேண்டும்.
யெச்சூரி தனது உரையில் மனிதாபிமான தளத்தில் நின்று கொண்டு, உள்நாட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு நிவாரணமும், மறு குடியேற்றமும், மறுவாழ்வும் கொடுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார். அவற்றை அமலாக்கும் போதே, அனைத்து நாட்டு பார்வையாளர்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும் என்றும் அதை இலங்கை அரசாங்கம் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதையும் தாண்டி அனைத்து நாட்டு நிறுவனங்கள் இடம் பெயர்ந்த தமிழர்களின் மறுகுடியேற்றத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்த உடனடியாக அவர்களை இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதை விரைவு படுத்துவதனால் மட்டும்தான் சிறுபான்மை தமிழ் மக்கள் வாழும் இடங்களில், பெரும்பான்மை சிங்கள மக்களது குடியேற்றம் நடத்தப்படாமல் இருக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
அப்படி நடக்குமானால் அதுவே மீண்டும் பதட்ட சூழலை ஏற்படுத்தி விடும் என்று யெச்சூரி பேசியிருக்கிறார். அதை அனைத்து நாட்டு சமூகம் அனுமதிக்கக்கூடாது என்றும் சுட்டிகாட்டிருக்கிறார். அதற்காக அண்டை நாட்டிலிருக்கும் அரசாங்கம் தனது முழுமையான முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்பதாக கூறியிருக்கிறார். அதே சமயம் அரசியல் தீர்வு ஈழத்தமிழர்களுக்கு அமுலாக்கப்படவேண்டும் என்பதை தங்களது கட்சி விரும்புவதாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். இந்த இடத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலிருக்கும், அரசியல் விழிப்புணர்வு பெற்ற முன்னேறிய பிரிவினரின் கருத்துக்களையும் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில், கொழும்பில் இருக்கும் அரசாங்கம் புலம் பெயர்ந்த தமிழ் மக்களை அரசியல் தீர்விலிருந்து தள்ளி வைப்பதற்கான முயற்சியை செய்து வருகிறது என்ற உணர்தல் அவர்கள் மத்தியில் இருக்கிறது.
தமிழர்களுக்கான அரசியல் இறையாண்மையைப் பற்றிய முடிவு எடுக்கப்படாமல் வளர்ச்சி என்பதை தொடர்பற்று பார்க்கக் கூடிய பார்வை, சிங்கள குறுங்குழுவாத அரசியலுக்குத்தான் வழி வகுக்கும். அதுவே அனைத்து நாட்டு அளவில் இயங்கக்கூடிய கார்ப்பரேட்டுகள் என்ற பெருவணிக குழுமங்களுக்கு சௌகரியமாகப் போய்விடும். எந்த வகையிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பயனுள்ளதாக அமையாது. அதனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற தனிநபர்களோ அல்லது குழுக்களோ தனியாக வளர்ச்சிப் பற்றி முடிவெடுப்பது தற்கொலை முயற்சியாகும். மாறாக அவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டு அரசியல் முடிவை எடுத்துக் காட்ட வேண்டும். கொழும்பின் தொடர்பில் இல்லாமல் சுதந்திரமாக வளர்ச்சிப் பற்றி கையாள வேண்டும். நார்வேயில் இருக்கும் பேராசிரியர் சண்முகரத்தினம் கூட, அரசியல் தீர்வு இல்லாத வளர்ச்சிப் பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகிறார். அவர் தனி தமிழீழத்திற்கு ஆதரவானவர் அல்ல. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வேண்டி நிற்பவர். தன்னார்வமுள்ள கைதிகள் மூலமாக, சிறையை நிர்வாகம் செய்வதற்கொப்ப ஒரு முயற்சியை கொழும்பு அரசு கையாளத் தொடங்கியுள்ளது. புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் சிலரை முதலிலும், பிறகு பகுதி, பகுதியாகவும் தனது திட்டத்திற்கு கொழும்பு அரசு இழுத்து வருகிறது. அதன் மூலம் அவதியுறும் ஈழத்தமிழர்களுக்கு உடனடியான வளர்ச்சித்திட்டம் என்பதாக பேசி வருகிறது. அத்தகைய வளர்ச்சித் திட்டங்களை சிங்கள ராணுவமும், சிங்கள வெறிபிடித்த தன்னார்வ அமைப்புகளும் கையில் எடுத்துள்ளன.
ஈழத்தமிழர்களின் சொந்த தாயகத்திலேயே, ஒரு கட்டமைப்பு இன அழிப்பு என்பதை முழுமைப்படுத்த இந்த வளர்ச்சித் திட்ட அமுலாக்கல் என்ற தந்திரத்தை கொழும்பு அரசு முன்வைக்கிறது. உலக வணிகக்குழுமங்களும், போரில் வெற்றி பெற்றவர்கள் பக்கத்தில் தான் நிற்பார்கள். உலக சமூகம் மத்தியில் இருக்கின்ற அரசியல் உறுதி படைத்தோர் மட்டுமே இத்தகைய முயற்சியை எச்சரிக்கையுடன் காணமுடியும்.
ராணுவ மயமாக்கல், சிங்கள மயமாக்கல், புத்தமயமாக்கல் ஆகியவற்றை அமுலாக்குவதன் மூலம், தமிழ் தேசத்தின் நிலங்களை தங்களது பொருளாதார நலன்களுக்கு கீழ் சேவை செய்யும் ஒரு நிலைக்கு கொண்டு போக சிங்கள அரசு திட்டமிடுகிறது. உண்மையிலேயே வளர்ச்சி அல்லது நிவாரண திட்டங்களை செயல்படுத்த விரும்புகின்ற புலம் பெயர்ந்த தமிழர்கள், தங்களுக்குப் பின்னால் ஒரு நங்கூரத்தை அரசியல் தீர்வை நோக்கி எடுத்துச் செல்ல உருவாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஈழத்தமிழர்களின் இணைய தளங்கள் எச்சரிக்கை மணியை ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் யெச்சூரியின் மதுரை உரையில் இருக்கின்ற சில செய்திகளை காணவேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு சுயாட்சி என்பதாக ஒரு அரசியல் தீர்வை அவர் பேசுகிறார்.அதே நேரம் ஒற்றையாட்சி என்பது வேறு என்றும் விளக்கியுள்ளார். ஒன்றுபட்ட என்பதற்கும், ஒற்றையாட்சி என்பதற்கும் வேறுபாடு உள்ளது என்கிறார். அவர் கூட்டமைப்பு முறையை முன்வைக்கிறார். அவரது புரிதலிலிருந்து அதற்கு இந்தியாவை உதாரணம் காட்டுகிறார். இந்த இடத்தில் அரசியல் தீர்வுக்கான ஒரு அழுத்தம் ஏற்கக்கூடியதே. தமிழர்கள் தங்களுடைய தேசிய விடுதலைக்கான போராட்டத்திலிருந்து, வளர்ச்சிக்கான தேவைக்காக சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதே சமயம் வருகின்ற அல்லது திணிக்கப்படுகின்ற வளர்ச்சித் திட்டங்களை, எந்த ஒரு அரசியல் தீர்வுடனும் இணைக்காமல் அனுமதிப்பது ஏற்கக்கூடிய ஒன்றா என்று சிந்திக்க வேண்டும்.
மனிதாபிமானம் என்ற பெயரில் அரசியல் அற்ற நிவாரணத்தையும், வளர்ச்சியையும் பேசக்கூடிய யாருமே உண்மையில் நிரந்தரமான, நீடித்த தன்மைக் கொண்ட மனிதாபிமானத்தை புரிந்து கொள்ளா தவர்கள். அல்லது மறைமுகமாக சதி செய்ப வர்கள் என்பதை வரலாற்று அனுபவங் களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டி யிருக்கிறது. குறைந்த பட்சம் யெச்சூரி போன்றவர்கள், இந்திய அரசின் மூலம் இலங்கை அரசை நிர்ப்பந்தித்து, தமிழ் நிலங்களை சிங்கள மயமாக்கு வதிலிருந்து தடுக்கட்டும். அதை உலகத் தமிழ் சமூகம் புரிந்து கொள்ளட்டும்.

போபால் நச்சுவாயு விபத்தில், குற்றவாளியை தப்பிக்கவைத்தது ராஜீவ் காந்திக்கு தெரியுமா?

போபால் மக்களின் கொலைகள் மீதான வழக்கு, விசாரணைக்கு பிறகு இருபத்தாறு ஆண்டுகள் கழித்து, தீர்ப்பு வந்தாலும் வந்தது, அது இப்போது இந்திய அரசியல் அதிகாரத்தில் காலம், காலமாக இருப்பவர்களின் நாட்டுப்பற்றை கேள்விக்கு உள்ளாக்கி விட்டது. முதலில் வெளிவந்த போபால் நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி குற்றவாளிகளுக்கு வெறும் இரண்டாண்டு தண்டனையை மட்டும் கொடுத்தது என்று விவாதம் எழுந்தது. அதற்கு காரணமும் உச்சநீதிமன்றத்தின் 1996 ஆம் ஆண்டின் தீர்ப்புதான் என்று விளக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் தனது குறுக்கீட்டில் குற்றபபிரிவை நீர்த்து போகச்செய்து விட்டது என்பதே அந்த விளக்கம். அதற்கு பொறுப்பு அன்று இருந்த தலை நீதியரசர் அகமது என்பது அம்பலமானது. அந்த அகமதும் இரண்டாண்டு கழித்து போபாலில் குற்றவாளி கம்பெனியான அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனம் யூனியன் கார்பைடு நடத்திய , போபால் நினைவு மருத்துவ மனையின் தலைவர் பொறுப்புக்கு அமர்த்தப்பட்டார் என்பது தெரிய வந்தது. இது பச்சையான ஊழல் என்பதை உலகம் புரிந்து கொண்டது. ஆனாலும் பெரிய அளவில் ஊழல் செய்தவர் பெரிய இடத்தை சேர்ந்தவர் என்றால் இந்தியாவில் பெருமாள் செய்த மாதிரி எனக்கூறி விட்டு விட்டுவிடுவார்கள். தனது குடும்பத்தின் இளைய தலைமுறைக்கு அதாவது வாரிசுகளுக்கு பதில்சொல்ல வேண்டிவருமே என நினைத்தாரா என்று தெரிய வில்லை நீதியரசர் அகமது, தான் காரணமல்ல என்று பதில் சொன்னார். ஏன் அரசு முதல் குற்றவாளி வாரன் ஆண்டர்சன்னை ஓடவிட்டார்கள் என்று அகமது பதில் கேள்வியை கேட்டுவிட்டார். இப்போது ஊடகங்கள் அதிகமாக வந்து விட்டதால், குறிப்பாக காட்சி ஊடகங்கள் போட்டிபோட்டுக்கொண்டு, சம்பந்தப்பட்டவரை நேரில் சென்று பேட்டி கேட்டுவிடுகிறார்கள்.சம்பந்தப்பட்டவரும் தனது அப்போதைய மனோநிலையில் இருந்து பதில் சொல்லி விடுகிறார். அதுவே ஒளிபரப்பப்பட்டு விடுகிறது. அப்படி செய்திகள் வெளிவரும்போதுதான் பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருகின்றன. மக்களுக்கு தெரிந்துவிடுகிறது. மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் தங்களுக்கு எதிராக வந்த பிறகு அரசியல் கட்சிகள் அஞ்சுகின்றன. அதை உடனடியாக மறைக்க அல்லது மறுக்க அரசியல் கட்சிகள் முயல்கின்றன. இந்த இடத்தில் போபால் பிரச்சனை மக்கள் மனதுகளில் இந்திய அரசை பற்றி, குறிப்பாக காங்கிரசு ஆட்சியை பற்றி, அதன் மக்கள்விரோத மனப்பான்மை பற்றி, அதிலும் பன்னாட்டு மூலதன கம்பெனியை பாதுகாப்பதற்க்காக, இந்திய மக்களின் மரணங்களை கூட துச்சமாக நினைப்பது பற்றி, அதுவும் அமெரிக்க அரசுக்கு அடிபணிந்து மத்திய அரசு சென்றதை பற்றி, பகிரங்கமாக இருபத்தாறு ஆண்டுகள் கழித்து அம்பலமாகி உள்ளது. குறிப்பாக திருவாளர் பரிசுத்தம் என்று அழைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி, 25000 பேரை கொலை செய்த வழக்கில் அமெரிக்க பணக்காரரை, தப்பவிட்ட சம்பவம் பற்றி, அதற்கு காரணமானவர் என்று அந்த ராஜீவ் காந்தி அம்பலமாகி இருப்பது பெரிய சிக்கலை ஏற்ப்படுத்திவிட்டது. ஏன் என்றால் அந்த ராஜீவ் பெயரை சொல்லித்தான் இப்போதைய காங்கிரசு கட்சியின் தலைமையும், எதிர்கால காங்கிரசு கட்சியின் தலைமையும், அதாவது ராஜிவின் மகன் ராகுலும் ஆட்சியில் அமர்ந்திருக்க முடியும்.
இந்த அளவுக்கு முக்கியமான பிரச்சனையாக ஆள்வோர் இந்த தீர்ப்பை எண்ணுவதால்தான், ஒரு அதிகாரமுள்ள அமைச்சர்கள் குழுவை அரசு அறிவித்தது. எதோ மக்கள் மீது அக்கறை வைத்து, அல்லது மக்களுக்கு ஆபத்து வந்துவிட்டதே என அக்கறைப்பட்டு, அல்லது உண்மை குற்றவாளிகள் தப்பிக்கக்கூடாதே என்ற நல்லெண்ணத்தில், அல்லது உணமைக் குற்றவாளியான ஆண்டர்சன்னை பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், திட்டமிடவோ, ஆலை வளாகத்தில் இன்னமும் இருக்கும் திடக்கழிவுகள் நீக்கப்படவேண்டும் என்ற சிறந்த நோக்கத்தில், . அல்லது பாதிக்கப்பட்ட போபால் மக்களுக்கு முறையான இழப்பீடு வழங்க வேண்டுமே என்ற உணர்வில் இந்த அதிகாரமுள்ள அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது அரசு என்று அரசை பற்றி யாரும் எண்ணவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது இப்போது. ஏனென்றால், பிரச்சனை கிளம்பி விட்டது. ராஜீவ் காந்தி பெயரை கருப்பு புள்ளி விழுந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்பது அவர்களுக்கு இப்போது முதல் பணியாக மாறிவிட்டது. ஏன் என்றால் அன்றைய மத்திய பிரதேச முதல்வராக இருந்த அர்ஜுன்சிங்,
தான் ஆண்டர்சன்னை வெளியே விட்டதற்கு காரணமே, மத்திய மேலதிகாரம் தான் என்பதை அநேகமாக கூறிவிட்டார். ராஜிவுக்கு ஆண்டர்சன் தப்பித்தது பற்றியே தெரியாது என்று கூறி வந்த இன்றைய காங்கிரசு ஆட்சியாளர்களுக்கு, அன்றைய ராஜிவின் முதன்மை செயலாளராக இருந்த பீ.சீ.அலக்சாண்டர், பதில் கூறி விட்டார். அதாவது ராஜிவுக்கு ஆண்டர்சன் அமெரிள்ளவிளிருந்து கிளம்பும்போது போட்ட நிபந்தனை தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதற்கு பிறகு எல்லாம் கூறப்பட்டது என்று கூறி விட்டார். அதாவது ஆண்டர்சன் தப்பித்து செல்லும்போது, ராஜிவின் ஒப்புதலுடன் தான் அந்த நாடகம் நடத்தப்பட்டது என்பதை கூறிவிட்டார். இநத்தகைய சூழலில்தான், இன்றைய மத்திய அரசு ஒரு அதிகாரமுள்ள மைச்சர்கள் குழுவை போபால் பற்றி முடிவு எடுக்க போட்டுள்ளது. அந்த குழுவும் தனது பங்குக்கு, இழப்பீடு தொகையை நிர்ணயித்து அதை கொடுக்கவேண்டும் எனவும், ஆண்டர்சன்னை பிடித்து வரவேண்டும் எனவும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்ற போதுமான வேலைகளை செய்ய வேண்டும் எனவும் தனது கம்பீரமான தீர்மானங்களை அறிவித்து முதலில் தனது இருப்பை காட்டியது. பிறகு மெல்ல பூனை பையை விட்டு வெளியே வருவதுபோல, ராஜிவுக்கு ஆண்டர்சன் வந்ததும், தப்பித்ததும் தெரியாது என ஒரு பச்சை பொய்யை சொல்லிவிட்டது.
இப்போது அதிகாரமுள்ள அமைச்சர்கள் குழுவின் ஒவ்வொரு தீர்மானமாக அலசி பார்க்க வேண்டி இருக்கிறது. இந்த குழுவின் பரிந்துரைகளில், இறந்தவர் எண்ணிக்கையிலும், ஆலை வளாகத்தில் இருக்கும் கழிவுகளின் அளவுகளிலும், போபால் நச்சால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பான அமைப்புகள் மாறுபடுகின்றன.கூடுதலாக ரூ.700 கோடியை இழப்பீட்டுக்காக இந்த குழு பரிந்துரை கூற, மத்திய அரசு அறிவித்துள்ளது.2010 ஆம் ஆண்டு ரூ. 700 கோடி என்பது, 1989 ஆம் ஆண்டு இந்திய ரூபாயின் டாலர் மதிப்பீட்டின்படி, ரூ.150 கொடிதான் வரும். இந்த நிதி பாதிக்கப்பட்ட 5 ,74 367 மக்களுக்கு போய்ச்சேராது. மாறாக 45166 பேர்களுக்கு மட்டுமே போய்ச்சேரும். இந்த எண்ணிக்கை மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் எட்டு விழுக்காடே வரும். குறைந்தது 529201 பேராவது இழப்பீடு கிடைக்காமல் இருக்கிறார்கள்.150000 மக்கள் இருபத்தைந்து ஆண்டுகளாக பதிப்பிலேயே இருப்பவர்களை, இப்போது அரசு தற்காலிகமாக காயம் பட்டவர்கள் என்று அறிவித்து அவர்களுக்கு எந்த இழப்பீடும் கிடையாது என அறிவித்துள்ளது.இறந்தவர் எண்ணிக்கையை பொறுத்தவரை 1992 வரை ஏழு பேர்தான் இறந்ததுபோல அதிகாரபூர்வமாக கூறப்பட்டுள்ளது.1997 ற்கு பிறகு மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதுபற்றி இந்த அமைச்சர்கள் குழு எதுவுமே கூறவில்லை.இப்போது கழிவை சுத்தப்படுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசும், மத்திய பிரதேச அரசும் தங்களிடம் அதற்க்கான தொழில்நுட்ப வசதிகள் இருந்தால் இது நாள் வரை அந்த கழிவு அகற்றலை செய்யாமல் இருப்பார்களா? அவர்களிடம் அதற்க்கான வசதிகள் கிடையாது. ஆனால் இப்போது இந்த அமைச்சர்கள் குழு அவர்கள் செய்வார்கள் என அறிவித்துள்ளது.அதற்காக ரூ.300 கோடியை அரசு அறிவித்துள்ளது.நீரி என்ற மத்திய அரசின் சுற்றுசூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம், ஆலை வளாகத்திற்கு வெளியே கழிவுகள் நிலத்தடி நீரில் பரவவில்லை என்று தவறாக கொடுத்த தகவலை, இந்த அமைச்சர்கள் குழு ஏற்றுக்கொண்டுவிட்டது. 11 லட்சம் டன் நச்சு கழிவுகளை, ஆலை வளாகத்திற்கு உள்ளேயே 16 ஹெக்டர் நிலத்திற்குள் புதைக்கவேண்டும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.இந்த கழிவுகளை அளக்க முதலில் வளர்ந்த தொழில்நுட்பம் தேவை. அதை ஐரோப்பிய யூனியன் அளிக்கத்தயார் என அறிவித்தும்கூட, நீரி கூறும் தவறான கருத்தை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நீரி கூறிய நிலத்தடி நீரில் கழிவு பரவவில்லை என்பதை யூனியன் கார்பைடு நிர்வாகமே மறுத்துள்ளது.மேலும் 13 ஆய்வுகள் இந்த நீரி அறிக்கையை நிலத்தடி நீர் கழிவாகவில்லை என்பதை மறுத்துள்ளன.ஆனால் இப்போது அமைச்சர்கள் குழு இந்த தவறான அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. இதுதவிர யூனியன் கார்பைடையும், அதை இப்போது வாங்கியுள்ள டௌ கெமிகல்சையும், பொறுப்பேற்க செய்வதிலும் இந்த அமைச்சர்கள் குழு தவறி விட்டது. கழிவுகளை ஆலை வளாகத்திலேயே புதைப்பது என்பது மிகவும் ஆபத்தானது. அதை வெளிநாடுகளுக்கு கப்பல் ஏற்றி அனுப்புவதே சரியாக இருக்கும் என ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
வாரன் ஆண்டர்சன்னை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பிடித்து வருவது சம்பந்தமான அமைச்சர்கள் குழு அறிவிப்பை ஆர்வலர்கள் ஆதரிக்கிறார்கள்.உச்சநீதிமன்றம் வழக்கின் முக்கிய பிரிவை நீர்த்து போகச்செய்ததை மீண்டும் வலுப்படுத்த அமைச்சரவை குழு எடுத்த முடிவையும் ஆர்வலர்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட போபாலுக்கு, பொருளாதார, மருத்துவ, சமூக மறுவாழ்வு பணிகளுக்காக, ஒதுக்கப்பட்ட ரூ. 272 கோடியில் முக்கால் பங்கை மாநில அரசுக்கு கொடுத்துள்ளது. ஆனால் மாநில அரசு ரூ.530 கோடிக்கு மேல் செலவழித்ததாக கூறியும், யாருக்கும் ஒருவருக்கு கூட பொருளாதார மறுவாழ்வு கிடைக்கவில்லை. ஏன் இன்றும் 20000 பேருக்கு மேல் நல்ல குடிநீர் கிடைக்காமல் இருக்கிறார்கள்? ஒரு ஆணையத்தை அமைத்து அதன் மூலம் எல்லா விசயத்தையும் கையாளுமாறு, மத்திய அரசை வற்புறுத்தி போபால் பாதிக்கப்பட்டோர் டில்லி வரை நடந்து சென்று நீண்ட நாள் போராட்டத்திற்கு பின், மன்மோகனிடம் வாக்குறுதி பெற்றார்கள். அது என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை. அதனால் இந்த அதிகாரமுள்ள அமைச்சர்கள் குழு, முக்கியமாக ராஜீவ் காந்தியின் முகத்தை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் காப்பாற்றவே போடபாட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது.இந்த நேரத்தில் பிரபல ஆங்கில இதழ் நேற்றைய தனது அம்பலப்படுத்தலில், 1984 ஆம் ஆண்டு டிசம்பர்-7 ஆம் நாள் வெளிவந்த தங்கள் இதழில் வெளியிடப்பட்ட செய்தியை இப்போது எடுத்து போட்டுள்ளனர். அதில் அன்றைய பிரபல ஊடகவியலாளர் ஜி.கே.ரெட்டி எழுதியதை வெலியிட்டுள்ளனர். ஜி.கே.ரெட்டி அன்றைய காலத்தில், டில்லி அதிகாரவர்க்கத்தின் ஊடகவியலாளர் பிரதிநிதி என்றே அழைக்கப்பட்டவர். அன்றாடம் டில்லியில் அதிகார மட்டத்தில் நடக்கும், அல்லது நடக்க இருக்கும் எந்த செய்தியையும் விமர்சனங்களுடன் எழுதக்கூடியவர். அவர் செய்திகளை கூறுவதைவிட விமர்சனங்களையே எழுதுவார். அந்த கட்டுரையில் அவர் அன்றைய பிரதமரின் மூத்த செயலாளராக இருந்த அலக்சாண்டரின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அந்த நாளில், ராஜீவ் மத்திய பிரதேசத்தில் இருந்தார் என்றும், அதனால் அவரிடம் ஆண்டர்சன் தங்கியிருந்த விருந்தினர் மாளிகையை விட்டு புறப்படுவதற்கு முன்பே, அந்த செய்தி பற்றி ராஜீவ் காந்திக்கு சொல்லியாகிவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு சிக்கல் இப்போது வரும் என்று யாருக்கும் தெரியாத சூழலிலேயே இந்த செய்தி வெளியாகி இருக்கிறது என்பதே இன்றைக்கு கூடிய அதிகாரமுள்ள அமைச்சர்கள் குழு அறிவித்துள்ள விவரத்திற்கு முரணாக உள்ளது. ஆகவே அமைச்சர்கள் குழு இந்த மூடி மறைக்கும் முயற்சியில் தோற்று விட்டது என்பது நிரூபணமாகிவிட்டது. நீங்கள் எவ்வளவு மறைத்தாலும், உண்மை ஒருநாள் வெளியாகும், அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும் என தெரிகிறது.
அன்றைக்கே ராஜீவ் காந்திக்கு பெரிய அளவில் செல்வாக்கு இருந்தும்கூட, அமெரிக்காவை சார்ந்து நிற்க வேண்டிய தேவை இல்லாத சூழ்நிலையிலும், அமேரிக்கா கூறிய கட்டளைகளுக்கு படிந்தும், அமெரிக்க பன்னாட்டு கம்பனியின் மூலதநித்திர்க்கு தலைவனங்கியும், அவர்களது உத்தரவுப்படி ராஜீவ் காந்தியும், இந்திய அரசாங்கமும், அடிபணிந்துள்ளது என்பது ஆண்டர்சன்னை தப்பவிட்ட கதை அம்பலமானத்தில் அம்பலமாகியுள்ளது.

Friday, June 25, 2010

அப்சல் குருவின் உயிர் அரசியல் பேரத்திற்கு பயன்படுகிறதா?

ப.சிதம்பரத்தின் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட
தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் மரணதண்டனை கொடுக்கப்பட்ட அப்சல்குரு, தொடர்ந்து தனது மரணதண்டனை இழுபறியாக ஆகிக்கொண்டிருப்பதை எண்ணி வருந்தியிருப்பார். இப்போது அதற்கு முடிவு எதோ ஒரு வடிவில் வந்துவிட்டது என்றாலும் பரவாயில்லை. ஆனால் இப்போதைய உள்துறையின் அறிவுப்பும் ஒரு அரசியல் பேரம் பேச என்று தெரியும்போது அதிர்ச்சி அடைவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்? ஏற்கனவே இந்தியாவில் இன்னமும் முடிவெடுக்கப்படாமல் இருக்கின்ற மரணதண்டனை வழக்குகள் அதிகமாக இருந்தாலும், ஒவ்வொன்றாக உள்துறை எடுத்து ஆய்வு செய்து, தனது கருத்தை அதாவது கருணை மனுவை ஏற்று சம்பத்தப்பட்டவரை மரணதண்டனையிலிருந்து மன்னிக்கலாமா, கூடாதா என்ற ஆலோசனையை குடியரசு தலைவருக்கு கூறவேண்டிய பொறுப்பு உள்துறைக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில்தான் இப்போது உள்துறை அப்சல்குருவின் வழக்கில் மன்னிப்பு கொடுப்பதை எதிர்த்த கருத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளது. இதுபற்றிய சர்ச்சைகளுக்கு செல்வதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட வழக்கு பற்றிய சில விவரங்களை நாம் கவனமாக பார்க்கவேண்டியுள்ளது. அதேசமயம் இந்த அப்சல்குருவின் வழக்கோடு இணைத்து பார்க்கப்படும் சரப்ஜித்சிங்கின் வழக்கையும் ஆராய்ந்து பார்ப்பது நல்லது. ஏனென்றால் இதில் ஒருவர் இந்திய சிறையிலும், மற்றொருவர் பாகிஸ்தான் சிறையிலும், மரண தண்டனை கைதிகளாக இருக்கின்றனர். இருவருமே அந்தந்த அரசாங்கங்களின் கருணையை எதிர்பார்த்து இருப்பவர்கள். இரண்டுபேருடைய கருணை மனுக்கள் மீதும், இரண்டு நாட்டு அரசாங்கங்களும், அரசியல் கட்சிகளும் அதிக கவனம் செலுத்துவதிலும் அதேசமயம் மாறி, மாறி, வக்காலத்து வாங்குவதாகவும் இருக்கிறார்கள். ஆகவேதான் இந்த வழக்கின் நியாயங்களை ஆழமாக நாம் பார்க்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி உள்ளோம்.
இந்திய நாடாளுமன்றம் மீதான 2001 ஆம் ஆண்டு டிசம்பர்-13 ஆம் நாள், நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல்,இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த தாக்குதலில் ஒன்பது பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதல் நடந்ததை நாம் அனைவரும் காட்சி ஊடகங்களில் கண்டு அன்றே அதிர்ந்து போனோம். அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடனடியாக நாடாளுமன்ற வளாகத்தை சுற்றி வந்ததையும் காட்சி ஊடகங்களில் கண்டது இன்று போல கண் முன்னே வரும் காட்சிகள். ஆனால் அதில் அப்போது நமக்கு சொல்லப்பட்டதும், நாம் நேரில் கண்டதும் அல்லது காட்டப்பட்டதும், ஐந்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒன்பது பாதுகாப்பு படையினர் மரணமடைந்தார்கள் என்பதுதான். அவர்கள் காஷ்மீர் விடுதலைக்காக போராடும் லஷ்கர்-ஈ-தொய்பா, ஜெய்-ஷெ--முகமது ஆகிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்பதாக நமக்கு நமது அரசு கூறியது. அப்போதே நமக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அதாவது நாடாளுமன்றம் நடந்துகொண்டிருக்கும்போதே அந்த கட்டிடத்திற்கு வந்து, ஒரு தாக்குதலை எப்படி பயங்கரவாதிகள் நிகழ்த்த முடியும் என்ற சந்தேகம் நமக்கு எழுந்தது. அதற்கு நமது அரசு விளக்கம் கொடுத்தது. அதாவது பயங்கரவாதிகள் தைகளை இந்திய ராணுவத்தினர் போல வேடம் போட்டுக்கொண்டு உள்ளே வந்துவிட்டனர் என்றனர். அது எப்படி சாத்தியம் எனக்கேட்டதற்கு, பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவப்படையினர் வேடத்தில், அவர்களது அடையாள அட்டைகளை போலாக வைத்துக்கொண்டு, வாகனத்தில் உள்ளே நுழைந்துவிட்டனர் என்று அரசு விளக்கம் அளித்தது.அப்படியானால் அவ்வாறு அவர்களை உள்ளே விட்ட காவலர்களுக்கு, அதை கண்காணிக்க தவறிய அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? அவர்கள் எல்லாம் பயங்கரவாத தாக்குதல் மீதான குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லையே ஏன்? என்று யாரும் கேட்கவில்லை.
தாக்குதல் நடந்த பிறகு, முதல் குற்றப்பத்திரிகையில், பன்னிரண்டு பேர் சேர்க்கப்பட்டனர். அதில் மூன்று பேர் பாகிஸ்தான்காரர்கள். அவர்கள் மசூதுஅசார்,தாரிக்அகமது, காசிபபா,எனப்படுபவர்கள். அவர்கள்தான் மூளையாக செயல்பட்டவர்கள் என்று அரசு கூறியது.அப்படியானால் அவர்கள் மூவரும் இதுவரை கைதும் செய்யப்படவில்லை; விசாரிக்கப்படவும் இல்லை. அவர்களை பாகிஸ்தான் அரசு எப்போதாவது கைதிகள் பரிமாற்றம் என்ற ஒப்பந்தப்படி இந்தியாவிடம் ஒப்படைத்தால், நிச்சயமாக அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்ககூடாது என்ற உத்திரவாதத்தின் அடிப்படையில்தான் அது நடக்கும். அதாவது அவர்களுக்கு, பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களுக்கு எந்த காலத்திலும் மரண தண்டனை கிடைக்காது. ஆனால் தாக்குதலில் நேரடியாக சம்பத்தப்படாத, மேலும் உச்சநீதி மன்றத்திலாயே நேரடி சாட்சி இல்லை என்று அறிவிக்கப்பட்ட அப்சல்குருவிற்கு இங்கே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதே கவனிக்கத்தக்கது. இதுதான் இந்தியாவின், மற்றும் இந்திய நீதிமன்றத்தின் நிலைமையாக இருக்கிறது.கிலானி, அப்சல், சௌகத் ஆகியோர் மூவருக்கும் முதலில் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. சௌகத்தின் மனைவி அப்சன்குரு குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டு அவருக்கு பத்து ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் பிறகு கிலானி, அப்சன்குரு ஆகியோருக்கு உயர்நீதி மன்றம் விடுதலை கொடுத்துவிட்டது. அதனால் கிலானி, டில்லி பல்கலைகழகத்தில் பேராசிரியராக இப்போது பணியாற்றுகிறார். உச்சநீதி மன்றத்தில் சௌகத்தின் மரணதண்டனை குறைக்கப்பட்டு அவருக்கு பத்தாண்டு தண்டனை வழங்கப்பட்டது. இவர்களது வழக்கில், நந்திதா ஹக்சர் வழக்கறிங்கராக செயல்பட்டார். அவர் முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பத்தாண்டிற்கு மேல் செயலாளராக பணியாற்றிய ஹக்சரின் மகள். அவர் ஒரு மனித உரிமை ஆர்வலர். அதற்காகவே வழக்கறிஞர் படிப்பு படித்தார். அதற்கு முன்பு தொழிற்சங்க பணிகளை செய்து வந்தார். அந்த நந்திதா ஹக்சர் இப்போது அப்சல்குருவின் கருணை மனுக்காக அதிகமாக போராடி வருகிறார். அவர் இந்த சிதம்பரத்தின் பச்சைக்கொடி இந்திய ஜனநாயகத்திர்க்கே ஒரு கருப்பு புள்ளி எனக்குறிப்பிடுகிறார். மூன்று வகைகளில் இந்த தீர்ப்பு தவறானது என்கிறார். முதலில் அப்சல் தாக்குதலில் சம்பந்தப்பட்டதர்க்கு எந்த நேரடி சாட்சியமும் இல்லை என உச்சநீதிமன்றமே கூறியுள்ளது என்பதை சுட்டி காட்டுகிறார். இரண்டாவது, முதலில் அவர்கள் மீது போடப்பட்ட பொடா வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோது தோற்றுபோய்விட்டது. பொடாவிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். அதாவது எந்த ஒரு பயங்கரவாத அமைப்பையோ, அல்லது குழுவையோ சேர்ந்தவர் அல்ல என்று அவரை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூன்றாவதாக, அப்சல்குருவிற்கு ஒரு நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை. இவ்வாறு நந்திதா கூறுகிறார்.இதற்கிடையில் அதிக பாதுகாப்பு உள்ள திஹார் சிறையில் அப்சல் வைக்கப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர் பன்சோலி இதுபற்றி கூறும்போது, விசாரணை காலத்தில் எந்த ஒரு வழக்கறிஞரின் உதவியும் அப்சல்குருவிற்கு கொடுக்கப்படவில்லை எனக்கூறுகிறார். அவர் கேட்ட வழக்கறிஞர்களை கொடுக்காமல், நீதிமன்றமே கொடுத்த வழக்கறிஞர்களும் சிலர் பின்வாங்கிக்கொண்டனர் என்கிறார். பிராகி கடைசிவரை இருந்த வழக்கறிஞரும் எதுவும் தெரியாதவர் என்றார். சாட்சிகளை அப்சல்குருவே விசாரிக்கட்டும் என நீதிமன்றம் கூறிவிட்டது; இதுவே அனுபவமற்ற அப்சளால் செய்யமுடியாத பணி என்கிறார் அவர். தவிர உச்சநீதிமன்றமும், மற்ற நீதிமன்றங்களும் அப்சலின் கைது பற்றி காவல்துறை கொடுத்த நாளும், நேரமும் தவறானவை என்பதை கூறிவிட்டன என்றார். ஆனாலும் அவருக்கு மரணதண்டனை கொடுத்த காரணமும் வேடிக்கையாகவே உள்ளது. நாடாளுமன்றம் தாக்கப்பட்டது ஒரு பயங்கரமான நாட்டை முழுவதும் உலுக்கக்கூடிய சம்பவம் என்பதாலும், இந்திய மக்களின் கூட்டு மனச்சாட்சி திருப்தி அடைய வேண்டுமானால் அந்த சம்பவத்திற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் நீதிபதி கூறியிருப்பதுதான் இதில் முக்கிய செய்தி. மேலும் வழக்கறிஞர் பன்சோலி, அமெரிக்காவை உதாரணம் காட்டுகிறார். அங்கே நடந்த பெரிய பயங்கரவாத தாக்குதலான 9 /11 வழக்கில், நேரடியாக ஈடுபடாத சகாரியா மௌவிக்கு ஆயுள் தண்டனை தான் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல மகாத்மா காந்தியை கொன்ற வழக்கில், நாதுராம் கோட்சேக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோது, அந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபடாத அவரது சஹோதரருக்கு ஆயுள் தண்டனை தான் வழங்கப்பட்டது என்கிறார். இந்த வழக்கில் மட்டும் ஏன் மரண தண்டனை? என்று கேள்வி எழுப்புகிறார். இந்த வழக்கு பாகிஸ்தான் அரசிடம் மரண தண்டனைக்கான கருணை மனுவுடன் போராடும் சரப்ஜித் சிங் வழக்குடன் இணைத்து பேசப்படுகிறது. இங்கே அப்சலுக்கு தூக்கு என்றால், அங்கே சரப்ஜித்திற்கு தூக்கு என்பதாக பேசப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூரிலும்,முல்டனிலும் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் பதினாலு பேர் மாண்டனர்.அந்த ஆண்டிலேயே ஆகஸ்டு மாதம், பாகிஸ்தான்---இந்திய எல்லையில் கடக்கும்போது சரப்ஜித் கையும், களவுமாக பிடிபட்டார் என்கிறது பாகிஸ்தான் அரசு.அவர் இந்திய வெளிவிவகார துறையின் உளவுப்பிரிவான ரா அமைப்பை சேர்ந்தவர் என்கிறது அவர் அந்த குண்டு வெடிப்பில் தொடர்பு உள்ளவர் என்கிறது பாக் அரசு.பாகிஸ்தான். 1991 ஆம் ஆண்டு சரப்ஜித்திற்கு பாக் நீதிமன்றம் மரணதண்டனை கொடுத்துள்ளதுஅவரோ பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமமான பிகிவிண்டை சேர்ந்தவர் என்று அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். அவரது மனைவி சுக்ப்ரிட்கவுர், மற்றும் அவரது மகள்களான ஸ்வபன் தீப், பூனம் கவுர் ஆகியோர் அவருக்காக இப்போது அலைந்து திரிகிறார்கள். அவர் 19 ஆண்டுகள் பாகிஸ்தானில் தனிமை சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்காக சரியான வழக்கறிஞர்களை அங்கேயும் கொடுக்க வில்லை. இப்போது சரப்ஜ்த்திர்க்காக ஒரு மனித உரிமை வழக்கறிஞரான ஷேக் இறங்கியுள்ளார். முதலில் சர்ப்ஜித்திர்க்காக கொடுக்கப்பட்ட கருணை மனுவை, அதிபர் முஷாரப் நிராகரித்துவிட்டார். இப்போது வழக்கறிஞர் ஷேக் புதிய கருணை மனுவை, அதிபர் அன்சாரியிடம் கொடுத்துள்ளார். இதற்கிடையில் சரப்ஜித் பாக்கில் உள்ள கோட்லாக்பட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இப்படி சூழலில்தான் இங்கே உள்ள அப்சலும், அங்கே உள்ள சரப்ஜித்தும் இருவருமே இந்திய குடிமக்கள் என்றும், அகவே இருவரும் விடுவிக்கப்படவேண்டும் எனவும் காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மகபூப் எம்.பீ. கூறுகிறார். அதேபோல காஷ்மீரின் முன்னாள் முதல்வரான குலாம் நபி அசாத்தும், அப்சல் மரண தண்டனையிலிருந்து குறைக்கப்பட வேண்டும் என்கிறார்.அருந்ததிராய், பிரபுல் பிட்வாய் போன்ற எழுத்தாளர்களும் மரண தண்டனை கூடாது என்கிறார்கள். இதற்கிடையே சிதம்பரம் கூறியுள்ள முடிவு யோசிக்க வைக்கிறது.
நேற்று இந்திய வெளிவிவகார துறையின் செயலாளர் நிருபமா ராவ் பாகிஸ்தான் சென்று தனக்கு ஒப்ப உள்ள அதிகாரிகளை சந்தித்துள்ளார். உள்துறை அமைச்சர் சிதம்பரம் பாகிஸ்தான் செல்ல இருக்கிறார். ஏற்கனவே சரப்ஜித்சிங்கை மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற 2005 ஆம் ஆண்டே இந்தியா வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்த நட்வர்சிங்கு பாக் சென்று பேசினார். இப்போதும் இதுபோன்ற சில அரசியல் பேரம் பேச இந்த மரண தண்டனைகளை இரு அரசுகளுமே பயன்படுத்துவதாக தெரிகிறது. அப்படியானால் இது மிகவும் வெட்கம் கேட்ட செயல் என்பதை எப்படி சொல்லாமல் இருக்க முடியும்?

நடைப்பயிற்ச்சியில்......

அன்றாடம் நடப்பதுதானே.
இது நடைப்பது தானே
ஒரு நாள் வந்தாள்.
ஆர்வம் என்ன?
தெரியாத நேரம்.
நடந்து முடித்து....?
கேள்வியே நின்றது.
இங்கேதான் நிதானிப்பா?
இடம் எது என கேட்கவா?
அர்த்தம் அன்றைய நிலையில்
விளங்கவில்லை.
இப்போதுமட்டும்?

உயரமானது எல்லாம் அதிகாரமா?

உயரமில்லை என்கிறாயா?
உயரம் குறைந்தால் குறையா?
கூடைப்பந்து விளையாட
உயரமானவர் பயன்படலாம்.
கால்பந்து விளையாட
குள்ளம் அதிக லாபம்.
அது தரையை நெருங்கி
பார்க்க..............
விரைவையும், ஓட்டத்தையும்
வரிசைப்படுத்த ..........
அதன்மூலம் வெற்றியை தேட,
கால்பந்துக்கு குள்ளம் தேவை.
இது கால்பந்து விளையாட்டு காலம்.
அதனால் நீ தான் சிறந்து நிற்கிறாய்.
அவ்வப்போது உதை வாங்கியதாலோ,
என்னவோ
உன்னை கால்பந்து வீராங்கனையாக
வரிந்துகொண்டு பார்த்தேன்.....
அதில் நீ மட்டுமே நின்றாய்.
நானல்ல. நிச்சயமாக நானல்ல.

Thursday, June 24, 2010

பேசத்தயங்காதே.

நீ பேசத்தயங்குகிறாய்.
நானும் கூட......
நீ புன்முறுவல் செய்ய
தயங்குகிறாய் ...
நானும் கூட........
நீ முகம் பார்க்க
கூசுகிறாய்.
நானும் கூட....
நீ தொடங்கினால்,
முடிக்க துடிக்கிறாய்.
நானும் கூட.....
நீ நச் என பேசுகிறாய்.
நானும் கூட.....
உன்னைப்போல என்னை
நினைக்க நான் யார்?
நானும் தயங்கும்போது

Wednesday, June 23, 2010

இனியவை நாற்பது புறப்பட்டது,

இனியவை நாற்பது புறப்பட்டது,
இன்னா நாற்பது மறைந்திடுமா?
உலகத்தமிழர் எதிர்பார்ப்பான,
ஈழத்தமிழர் விடுதலைப்படை
இன்னல்களை சந்தித்தது.
இடரில் சிக்கியது.
இரத்தம் சிந்தியது.
இரக்கம் இல்லா உலகம்
வேடிக்கை பார்த்தது
இந்த புண்ணை மறைக்க,
இறந்துபட்ட உறவுகளை
மறக்க, தந்திரங்கள்
பலவும் பலிக்காத சூழலில்,
உலகத்தமிழ் செம்மொழி
மாநாடு. புண்ணுக்கு களிம்பு.
அரிப்புக்கு சொரிதல்.
கேதத்தில் கேளிக்கை.
சாவில் சரசம்
அடுத்தவர் ரத்தத்தில்
குடும்ப விழா.
இன அழிப்பில் ஒரு உற்சாகம்.
முதல்நாளே, ஊர்வலம்
இனியவை நாற்பது அதன்பெயர்.
இது எந்த இன்னா நாற்பதை
மறைக்க?
இன்னா நாற்பது என்றால் என்னா?
கண்ணகி கோவிலை,
முள்ளிவாய்க்காலில் மூடசெய்த
முள்கள் இங்கே கண்ணகி சிலையை
ஊர்வலமாக, ஓவியமாக, விளம்பரம்
செய்வது இன்னா நாற்பதில் வருமா?
யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்டதை
மறக்க இங்கே திருக்குறள் தந்தவர் சிலையை
இலட்சினையாக, ஊர்வலத்தில், எடுப்பதுதான்
இன்னா நாற்பதில் வருமா?
ஒன்பது கிலோமீட்டர் தூர ஊர்வலம்
புறநானூறு காட்சிகள் அலங்காரமாக,
வன்னி போரின் காட்சிகளை மறைக்கவா?
அதுதான் இன்னா நாற்பதா?
40 அலங்கார வண்டிகள்
ஒவ்வொன்றும் பண்டை
தமிழர் வரலாறு சித்தரிப்பு.
எங்கே போனது ஈழத்தமிழர்
போர் வரலாறு?
தமழர் பண்பாட்டை விளக்கும்
காட்சிகளில், புலிகளின் போரால்
பெண்கள் சமத்துவம் சாதிக்கப்பட்டது,
இடம்பெறாதா? நிகழ்கால வரலாற்றை
மறைத்து, புறநானூறு பேசுவதுதான்
செம்மொழியின் சிறப்பா?,
கோவையில் மாநாடு; சென்னையில்
தமிழ் வழக்கறிஞர்கள் தமிழ் வழக்காடு
மொழியாக்க கருப்புக்கொடி போராட்டம்.
எது தமிழுக்கு பெருமை?
தமிழில் வாதாட, சாதா தமிழன்
புரிந்துகொள்ள ஒரு கையெழுத்து
போடாத குடியரசு தலைவர் கொடியசைத்து
தமிழுக்கு கோவையில் விழா எடுப்பார்.
இதுதான் தமிழுக்கு பெருமையா?
பேரணி அலங்கார வண்டியில்
போர்முழக்கம் செய்யும் தமிழர்
எங்களுக்கு ஈழப்போரை நினைவுபடுத்த,
உங்களுக்கு எந்த போரை எடுத்துசொன்னது?
குறிஞ்சி,முல்லை,பாலை,நெய்தல்,மருதம் காட்சிகள்
எங்களுக்கு ஐவகை திணைகளை மட்டக்களப்பிலும்,
முல்லைத்தீவிலும், கிளிநொச்சியிலும், யாழ்பாணத்திலும்,
மன்னாரிலும், திரிகோணமலையிலும் தேடதோன்றியது
மயிலுக்கு போர்வை வழங்கிய பேகன் வருகிறான்.
எங்களுக்கு ஈழப்போருக்கு எம்.ஜி.ஆர்.
கொடுத்த கொடைதான் நினைவுக்கு வந்தது.
பேரணியை பார்த்து மனம் மகிழும்
பேராளர்கள் என்று கலைஞர் டி.வீ.யில்
வருவதில் பெருமைப்படும் பெயர் ஆளர்கள்.
குடியரசு தின ஊர்வலம் போல,
வாங்கிய காசுக்கு ஆடிவரும்
அற்புத தமிழர்கள். பீளமேட்டை
கடப்பதில் பெருமைப்படும்
தமிழர்களே, கிளிநொச்சியை கடந்ததில்
பெருமைப்பட்ட சிங்களப்படை போல
ஆகினீரோ? கரகாட்டம், ஒயிலாட்டம்
தமிழனுக்கு இன்று தேவையா?
ஆடிய கரங்களும், கால்களும்,
முள்வேலி பின்னாலே நின்று
பார்க்குதடா
பாரதி உருவம் பூண்ட தமிழரை
காட்டும் பேரணியே, பாரதி உங்களை
மன்னிப்பானா? தப்பாட்டம் காட்டும் தமிழா,
நீ ஆடுவது தப்பான ஆட்டம் என
உனக்கு தெரியவில்லையா?
தமிழனுக்கு இழுக்கில்லையா?
தமிழகத்துக்கு இழிவில்லையா?
பாஞ்சாலி சபதம் பேசும் காட்சிகள்
பாஞ்சாலியாய் எம் தமிழ் பெண்கள்
வடக்கிலும், கிழக்கிலும்,இலங்கையில்
அவதிப்படுவதுதான் இன்னா நாற்பதா?
சிலம்பாட்டம், மற்போர் என ஊர்வல
காட்சிகள் காட்டுகிறீரே, அதையும் தாண்டி
கரும்புலி, கடல்புலி, வான்புலி, காட்டிய
தமிழரை மறந்தததுதான் இன்னா நாற்பதோ?
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம் எல்லாம்
பேரணியில் காட்சிகள் ஆகினவே?
உண்மையில் அந்த காட்சிகளை தந்திட்ட
தலைவன் கேட்டிருக்கவேண்டும் இந்த
கொடுமையை.....துவக்குதான் பேசியிருக்கும்.

Tuesday, June 22, 2010

வவுனியாவில் எம் தமிழ் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு ????

முன்னாள் போராளிகளுக்கு என்ன செய்கிறது இலங்கை அரசு? கருணா அம்மான் நிறைய நிலங்களையும், தோட்டங்களையும் வாங்கி போட்டிருக்கிறான். அவற்றில் முன்னாள் போராளிகளை ஆயிரக்கணக்கில் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குகிறான். தமிழன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆங்கிலேயரால் கடத்திச்செல்லப்பட்ட காலத்தில், அங்கே போய் ரத்தத்தை பிழிந்து காடுகளை பதப்படுத்தி தோட்டமாக்கி அன்றைய ஆங்கிலேயர்களுக்கு உற்பத்தி பின்னிலமாக ஆக்கி வைத்தான். அன்றே சுதந்திரமாக இருந்த ஈழத்தமிழர்கள் இன்று போரில் தோற்றபின், அடிமைகளாக, கொத்தடிமைகளாக, ஆக்கப்பட்டு, உண்ண உணவு கூட கொடுக்கப்படாத நிலையில், கடுமையாக வேலை வாங்கப்படுகிறார்கள். இப்போது இதைச்செயபவன் ஆங்கிலேயன் அல்ல. சிங்களன் அல்ல. ஆனால் முன்னாள் போர்ப்படை தளபதியாக இருந்து இந்நாள் அமைச்சராக இருக்கும் கருணா அம்மன் இதை செய்கிறான். இன்று பட்டினியில் வேலை செய்யும் அந்த முன்னாள் போராளிகள், எலும்பும்,தோலுமாக காட்சி அளிக்கிறார்கள். அவர்களை சென்று பார்த்த அவர்களது மனைவிமார்கள் இந்த கோரக்காட்சிகளை கூறக்கேட்கும்போது நெஞ்செல்லாம் வெடிப்பது போல் உள்ளது.
அடுத்து வவுனியாவில் உள்ள ஈழத்தமிழ் பெண்கள் நிலைமை மிக மோசமாக ஆகி வருகிறது. அங்கே இருக்கும் சிங்கள ராணுவ காடையர்கள் எங்கள் தமிழ் பெண்களை சூறையாடுவதை வழமையாக கொண்டு இருக்கிறார்கள். அதன் விளைவு வவுனியாவில் உள்ள தமிழ் பெண்களில் பலரை பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். வவுனியா தமிழ் பெண்களின் நிலைமை யாராவது தலையிட்டு தடுக்கவேண்டும் என்ற நிலைமைக்கு சென்றுள்ளது. வெளி நாட்டிலிருந்து அங்கு செல்லும் பணக்கார தமிழர்கள் ஏதாவது உதவி செய்ய செல்கிறோம் எனக்கோரி செல்பவர்கள் சிலர்கூட, இதே போல தமிழ் பெண்களை சூறை யாடுவதை தங்களது ஆண் ஆதிக்க வெறியாக காட்டி வருகிறார்கள் என்ற செய்தி வெட்கத்தக்க செய்தியாக இருக்கிறது. தமிழ் ஆண்களே, புலம்பெயர்ந்த ஆண்களே, நீங்கள்தான் அன்றே ஓடிப்போய் உங்களது தமிழ் பற்றை காட்டி விட்டீர்களே. இப்போது என் அங்கே சென்று எங்கள் பெண்களின் இயலாமையை சுரண்ட எண்ணுகிறீர்கள்? உங்களுக்கு உங்கள் அக்காள், தங்கச்சி, தாய் ஆகியோர் இல்லையா? இப்படியும் கூட கேட்கத்தோன்றுகிறது.
இவையெல்லாவற்றையும் விட கொடூரமான வேலையை அரசு சார நிறுவனம் என்ற பெயரில் சில தமிழர்கள் செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. சில அரசு சார நிறுவங்கள் குழந்தைகள் பாதுகாப்பு அகங்களை நடத்துகிறோம் என்கின்றனர். மகிழ்ச்சி என்று சொன்னால், அதிலும் தங்கள் நிதி திரட்டும் வேலையை காட்டுகிறார்கள். வடக்கே இருக்கும் குடும்பக்களுக்கு அவரவர் குழந்தைகளை அனுப்ப, இந்த நிறுவனகள் மறுக்கின்றன. அதற்கு அவர்கள் கூறும் காரணம், நீங்கள் முதலில் மீள் குடியேற்றத்தில் சரியாக அமருங்கள். உங்களை நிலைப்படுத்திகொல்லுங்கள். அதுவரை உங்கள் குழந்தைகள் எங்கள் இல்லத்தில் இருக்கட்டும் எனகூறிவிடுகின்றனர். அதன் மூலம் பெற்றோரையும், குழந்தைகளையும் பிரித்தே வைத்து விடுகின்றனர். தாய்மாரை தங்கள் குழந்தைகளிடமிருந்து பிரித்து வைத்து விடுகின்றனர். சிங்களனின் கொடுமை போதாது என்று இது வேறா என்பதாக எம்மக்கள் அடித்துக்கொள்கிராரகள். ஏற்கனவே சிங்களவன் வந்து குடியமர்த்தப்படுகிறான். தமிழன் தனது நிலத்தை இழக்கிறான். குடியிருப்பை இழக்கிறான். சிங்கள ராணுவம் வடக்கை ஆக்கிரமித்து கொண்டு உள்ளான். அதில் புத்த சிலையை நிறுவுகிறான். அரச மரத்தை நடுகிறான். தமிழ் கடவுள் முருகன் கோவிலை அத்துமீறி பயன்படுத்துகிறான். தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவத்திற்காக குடியிருப்பு கட்டுகிறான். இத்தனையும் காணாது என முன்னாள் போராளிகளை கருணா நடத்தும் விதமும், வவுனியாவில் தமிழ் பெண்கள் நடத்தப்படும் விதமும், சேவை நிறுவனகள் தமிழ் குழந்தைகளை பிடித்து வைத்து கொண்டு, அவர்கள் பெயரை சொல்லி வெளிநாட்டு நிதி திரட்டும் விதமும், கேள்விப்படும்போது நெஞ்சை உருக்குகிறது. இந்த கொடுமைகளை தமிழர்களே செய்யாதீர்கள். செய்தீர்கள் என்றால் உங்கள் பெயரும் துரோக பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். இதுமட்டும் நிச்சயம். என் என்றால் அனைத்தையும் உலகத்தமிழர்கள் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். நினைவில் வையுங்கள்.

இன்னொருவர் அம்பலமாகிறார்

அக்னி சுப்பிரமணியம் என்பவர் பற்றி இப்பொது ஒரு செய்தி இணையதளத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. அது ஆச்சர்யமாக இல்லை. ஏற்கனவே தமிழ்நாட்டில் அவர் மீது பொதுவாக நம்பிக்கை இல்லை.அக்னி சுப்பிரமணியம் பற்றி ஏற்கனவே எச்சரித்தோம். இதுபோல நல்லவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால் நமது தமிழர்கள், குறிப்பாக எங்களுடன் களப்பணிகளுக்கு வரும் தமிழ் நாட்டு தமிழர்கள் பலரும் இது போன்ற செயல்பாட்டாளர்களை அடையாளம் கண்டு கொள்வதில்லை. அல்லது அதற்காக அதிகம் கவனம் செலுத்துவது இல்லை. இந்த அக்னி ஏற்கனவே ஈரோட்டில் என்னை மக்கள் சிவில் உரிமை கழக மாநாட்டில் முதலில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தார். அல்லது அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். அப்போதே நான் அதாவது அவரை சந்திப்பதற்கு முன்பே நான் அவர் இப்படிப்பட்டவர் என்று கேள்விப்பட்டேன். அதனால் அவரிடமே வினவினேன். உங்களை பற்றி நான் நல்ல முறையில் கேள்விப்படவில்லையே?இதுவரை நாம் சந்தித்த்டது இல்லை.இப்போது பார்த்து விடீர்கள். இனி நம்பலாம் இல்லையா?-என அவர் கேட்டார். பார்த்ததனால் எப்படி நம்ப முடியும்?-நான் கேட்டேன்.நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அவர் சொன்னார். நான் என்.ஜி.ஒ. எனக்கு அது பற்றி நல்ல அபிப்ராயம் இல்லையே? உடனே அவர் சொன்னார்:- நான் ஹென்றி வளர்ப்பு. நான் சொன்னேன், அவர் வளர்ப்பு என்றால் நான் தவறாகத்தான் நினைப்பேன். நான் அகதிகளுக்கு உதவி செய்கிறேன். நான் நெடுமாறன் ஆகியோருடன் வேலை செய்கிறேன். நான் கேட்டேன் ஆனால், யாருக்கும் உங்களை பற்றி நல்ல அபிப்ராயம் இல்லையோ? அவர் திணறினார். பிறகு அவர் சொன்னார். நான் நண்பர்களிடம் பணம் சேர்த்தது அகதிகளுக்கு துணிமணி வாங்கி கொடுக்கிறேன். அப்படி யாரும் செய்வது கடினமாயிற்றே? இப்படி இருந்தது முதல் சந்திப்பு.
அதற்கு பிறகு அவர் சென்னை வந்தார். நான் சென்னை வந்துவிட்டேன் என்றார். சரி. அவரது வரத்து தலைமை உத்தரவு போலும் என எண்ணினேன். பிறகு ஈழத்தமிழர் பேரணிகளில் முனனால் தலைவர்களுடன் வந்தார். அதற்கு முன்பே சேது திட்டத்தை எதிர்த்தது போராடும் எங்கள் தோழர்களை தெற்கே சென்று பார்த்து பேசி இருக்கிறார். அவருக்கு அவ்வளவு அதிகமாக விவரம் தெரியாது. பின் எப்படி எல்லாவற்றிலும் இணைகிறார் என்ற ஐயம் இருந்தது பிறகு பெங்களூரில் நடந்த முஸ்லிம் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தமிழ்நாட்டு பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டார் என கேள்விபட்டேன். என் போன்ற தோழர்கள் இப்படி எல்லா இடங்களிலும் போய் கலந்து கொள்வது வேறு விஷயம். இவர் அப்படி ஆளும் இல்லை. அவ்வளவு விவரமும் இல்லை. வன்னி போர் நேரத்தில் டெலோ தலைவர்களுடன் பத்திரிகையாளர் கூட்டத்தை இவரே கூட்டினார். எனக்கு சந்தேகம் கூடியது. சிவாஜிலிங்கம் அதில் சிக்கிகொண்டவர் என்பது பிறகு தெரிந்தது. முதலில் எல்லா புலி அல்லாத எம்.பி.களையும் ரா பயன்படுத்த விரும்புகிறது என்பதாகத்தான் நான் சந்தேகப்பட்டேன். அதை நான் பேசும் தொலைகாட்சி நிகழ்ச்சியிலும் சொல்லிவிட்டேன். இந்த ஆள்
இந்திய உள்நாட்டு உளவுத்துறை ஆள் என்று தான் நான் எண்ணினேன். பிறகு ஒரு ஹூண்டாய் காருடன் வந்தார். நண்பர்கள் அதில் ஏறி சென்றனர். நானும் எச்சரித்தேன். பிறகு வணங்காமன் கப்பல் வந்தது. தடுக்கப்பட்டது. அதற்குள் வெப்சைட் நடத்தினார். அதன்மூலம் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பழகினார். அவர்களும் நம்பி கப்பல் பற்றிய செய்திகளை இவருக்கு தந்தனர். அதைவைத்து சென்னையிலுள்ள ஊடகங்களை செல்வாக்கு செலுத்தினார். இந்த அளவுக்கு விவரமான ஆளாகவும் தெரிய வில்லை. அவருக்கு யாரோ அத்தனை ஆலோசனையையும் கொடுப்பதாக தெரிந்தது. இப்போது கலைஞருக்கு பார்வதி எழுஅம்மாவால் தப்பட்டதாக சொன்ன கடிதம் மூலம் உண்மை வெளிவந்துள்ளது. தமிழ் நாட்டில் ஒரு தவறான பழக்கம் உள்ளது. ஒருவரை அவரது பேச்சு, மற்றும் எழுத்தை மட்டும் வைத்து முற்ப்போக்கு எனவும், புரட்சியாளர் என்றும் முடிவு செய்கிறார்கள். அவரது செயல் என்பதை கணிப்பதே இல்லை. இதே தவறு புலம் பெயர்ந்த தமிழரில் சாதாரண மக்களிடம் உள்ளது. இயக்கத்துக்காரார்கள் மட்டுமே ஒவ்வொருவரையும் பரிசீலித்து கணிக்க முயற்சிக்கிறார்கள். இதுதான் தமிழனின் கோளாறு. ஒவ்வொருவரையும் பேச்சை வைத்து பார்க்காதீர்கள்.

Monday, June 21, 2010

தூக்கில் தொங்கினான் தமிழன்

ஓவியனாய் ஆகா விரும்பினான் .
சிற்பங்கள் செய்ய படிக்க
வந்தான். அது ஓவியக்கல்லூரி
கிராமத்தில் பிறந்து நகரம்
வந்தவன். பிறந்த இடத்தில்
சாதி துரத்தியது. ஓடிவந்த
சென்னையில் ஓவியக்கல்லூரி.
ஓவியத்தில், சிற்பத்தில்
சாதி கிடையாது. நம்பிக்கையில்
தம்பி உள்ளே நுழைந்தான்.
ஓவியத்துக்கு உயிர் உண்டு
சிற்பத்திற்கு உயிர் உண்டா?
உண்டு உண்டு என்று சொன்னோம்
அதனால்தான் இங்கும் சாதி வந்ததா?
உயிர் இருந்தால் சாதி வந்திடுமா?
சசிகுமார் இளைஞன் தானே?
சாதி எதில் இருக்கும்?
எதை கண்டான் அவன்.
முதல்வர் வந்தார்.
ஓவியம் அவருக்கு தெரியாது.
சிற்பமோ அவருக்கு புரியாது.
பின் எப்படி முதல்வர்?
சசிக்கு தெரியவில்லை.
முதல்வருக்கு போதை
இருந்தது. சாதியும் போதையில்
கலந்தது சசிக்கு தெரியாது
தமிழ் பற்று சசிக்கு.
யாழ் நூலகம் எரிந்தது கேட்டு
வயிறு எரிந்தான் சசி.
தமிழ் நூல்களை எரியாமல்
பாதுகாக்க என்ன செய்யலாம்?
சசிக்கு தெரிந்தது சிற்பம்தான்.
சுட்ட மண்ணை எரிக்க முடியாதே.
திருக்குறளை எரிக்காமல் காக்க
களிமண்ணில் வடிவமைத்து
சுட்டால் குறள் பிழைக்கும்.
சசி இப்படி சிந்தித்தான்.
களி எடுத்தான்.குறள் வடித்தான்.
ஒன்று,இரண்டு, மூன்று.நான்கு
எண்ணி செய்தான். ஒரு குறளை
விடக்கூடாது.என. களி வாங்க காசு இல்லை.
முதல்வர் மனோகர் வாக்கு தந்தார்.
மனோகரை வாயார புகழ்ந்தான்.
போதையில் மனோகரன் சொன்னதை
மறந்தார். களி வந்து ஊர்தியில் இறங்க
மனோகர் காசு தர மறுத்தார்.
கலங்கி போனான் சசி. மனோகர்
கார் கூட தடையாய் தெரிந்தது.
உடைத்தான் கண்ணாடி நொறுங்கியது.
பழி வாங்கியது மனோகர் கும்பல்.
பாதிக்கப்பட்டோர் தலித் மாணவர்.
விடவில்லை தனது லட்சியத்தை
சசி தொடர்ந்து முயன்றான்.
குறள்களை களியில் செய்து முடித்தான்.
1330 குறள்களும் தயார் ஆகின.
சுடுவதற்கு காசு இல்லை.
சுட்டு முடித்தால் செம்மொழி
ஆகும். சுட்ட தமிழ்தானே
உண்மை செம்மொழி.
சசி கையில் மட்டும் உண்மை
செம்மொழி. மாநாடு அதை
அலட்சியப்படுத்தியது. சசிக்கு
அவர்தம் கலைக்கு, அவர் தரும்
திருக்குறளுக்கு மரியாதை தர
செம்மொழி மாநாட்டுக்கு விருப்பமில்லை.
மாநாட்டு மன்னருக்கு பரிவட்டம் கட்டும்
ஐ.ஏ.எஸ். ஒரு அரசவை கவிஞர்.
அவர்தான் சசி துறைக்கும் பெரியதிகாரி.
அந்த இறையை பகைக்கலாமா?
பகைக்கப்பட்ட முதல்வரோ
சாதி தமிழர். சசி என்ன ஆதிதமிழர்தானே?
செம்மொழி மாநாடு தொடக்கம் நெருங்க
சசி எனும் இளைஞன் நொறுங்கிப்போனான்
அதனால்தானே கல்லூரி சென்று அந்த மரத்தை
தேர்வு செய்தான். தூக்கு கயிறு வலிக்கவில்லை.
அவன் பிணம் சுமக்கும் தமிழ்நாட்டிற்கு இப்போது
வலிக்கவில்லை. தமிழ்நாடு விழா காண்கிறது.
வாறன் அண்டர்சன் நேரடி கொலை செய்யவில்லை.
பல்லாயிரம் சாவுக்கு காரணமானான். அதுவும்
கொலைதானே. உலகம் கூறியது.
இந்த சசியின் மரணம் சொல்வது என்ன?
செம்மொழி மாநாடு பெருவிழாச்சத்தம்
காதை அடைக்குது. சசி சாவு கேட்கவில்லை.

Sunday, June 20, 2010

சீனா மட்டும்தான் ஆபத்தா?

தமிழ்நாட்டில் எதிர்க் கட்சி தலைவர், ஈழத் தமிழர்கள் பற்றி ஒரு அறிக்கை வெளியிட் டுள்ளார். அதில் 25,000 சீன கைதிகளை இலங்கை வளர்ச்சி பணிகளுக்கு, சீன அரசு அனுப்பி வைக் கிறது என்று கூறியுள்ளார். அந்த கைதிகள் யாழ் பாணத்தில் மற்றும் தமிழர் பகுதிகளில், சாலை கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் போது, உள் நாட்டு அகதிகளாக இருக் கின்ற ஈழத் தமிழர்களுக்கு நெருக்கடி உருவாகும். தமிழ்ப் பெண்களுக்கு ஆபத்து வந்து சேரும். மேற்கண்ட எச்சரிக்கை களை தமிழ்நாட்டின் எதிர் கட்சித் தலைவர் தனது அறிக்கையில் தெரிவித் துள்ளார்.
இலங்கையில் நடந்து வரும் பல்வேறு நடவடிக் கைகள் பற்றி, பல்வேறு ஆய்வு அறிக்கைகள் உலகம் முழுவதும் வெளி வந்து கொண்டிருக்கின் றன. அவற்றில் சீனமய மான ராஜபக்சேவை, இந்திய மயமாக்க டெல்லி முயல்வதாக சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் எழுதியிருந்தார். அதே போல சீனாவிற்கும், இந்தியாவிற்கும் மத்தியில் இலங்கை நிலங்களையும், வளங்களையும் கைபற்று வதில் போட்டி நிலவுகிறது என்றும் கருத்துகள் உண்டு.
அம்பாந்தோட்டை என்ற இடத்தில், சீனா விற்கு துறைமுகம் கட்டுவ தற்காக, இலங்கை அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த இடம் இலங்கைத் தீவின் ஒரு ஒரத்தில், தொங்கிக் கொண்டு இருக் கும் ஒரு பகுதி இது கதிர் காமம் என்ற பிரபல முருகன் கோவில் உள்ள தமிழர் பகுதிக்கு கீழே உள்ளது. அம்பாந் தோட்டை முழுமையாக சிங்களப் பகுதிதான் என்றாலும், அம்பாறை, மட்டக்களப்பு போன்ற தமிழர் வாழும் கிழக்கு மாகாணப்பகுதிகளை ஒட்டி இருக்கிறது.
அம்பாந் தோட்டை யில் சீனத் துறைமுகம் ஒன்று உருவான பிற்பாடு, சீனநாட்டின் பெரிய கப்பல்கள் அங்கே நிறுத் தப்படும். அவை இந்திய பெருங்கடலில் இருக்கின்ற அம்பாந் தோட்டை துறைமுகத்திற்கு வந்து போய் கொண்டிருக்கும். அதன் முலம் சீன நட மாட்டம், இந்திய பெருங் கடலிலும், அரபிக் கடலி லும், வங்காள விரிகுடா விலும் அதிகரிக்கும். அவை சீன கப்பற்படை கப்பல்களாகவோ, ஒற்றர் பிரிவுகளாகவோ இருக் கலாம். இதனால் இந்தி யாவின் தென் பகுதியில் இருக்கும் கடற்கரை ஒரங்களுக்கும், கடலுக்கும் பாதுகாப்பின்மை ஏற் படலாம்.
இது தவிர இலங்கை அரசு, சீன அரசுடன் வேறு ஒரு ஒப்பந்தமும் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இலங்கையில் உள்ள தமிழ் மீனவர் களையும், இந்தியாவில் உள்ள தமிழ் மீனவர் களையும் பாதிக்கும் தன்மை கொண்டது. இலங்கையின் வடக்கு மாகாணமான முல்லைத் தீவு மாவட்டத்தில் இருக்கின்ற கடல்பகுதியை சீன அரசுக்கு தாரைவார்ப் பது போன்ற தன்மை கொண்டது. முல்லைத் தீவின் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கான உரி மத்தை, சீனாவிற்கு இலங்கை அரசு கொடுத் துள்ளது. முல்லைத் தீவு தான், வன்னிப் பகுதியில் முக்கியமான தளமாக போராளிகளுக்கு இருந் தது. அங்கிருக்கும் கடற் கரையோரம், விடுதலைப் புலிகளின் கடல் புலிப் படை வலுவாக செயல் பட்டு வந்தது.சுனாமி பேரலைகளால், பேரழிவு ஏற்பட்டபோது, இலங் கையின் தமிழர் பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட் டன. தமிழர் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளான முல்லைத் தீவும், மட்டக் களப்பும் அதிகமாக பாதிக்கப்பட் டன.
இயற்கையின் அத் தகைய பாதிப்புகளை, எதிர்நீச்சல் போட்டு தமிழர்கள் வென்றனர். அவ்வாறு மறுவாழ்வை ஏற்படுத்திய கடலோர மீனவத் தமிழர்களுக்கு, கடல் புலிகளின் முழுமை யான ஒத்துழைப்பு இருந் தது. அதில் ஒரு பகுதியான முல்லைத் தீவு மாவட்டத்தின், மீனவத் தமிழர்கள் தங்கள் கடலில் சுதந்திரமாக மீன் பிடிக்க தடை விதிக்கும் அணுகுமுறை யில், இலங்கை அரசு சீனாவிற்கு மீன்பிடி உரிமையை கொடுத்துள் ளது. அது மட்டுமின்றி ஆழ் கடல் மீன்பிடி ஒப்பந் தத்தையும் போட்டுள்ளது. இது இந்தியாவில் உள்ள மீனவத் தமிழர்களின் வாழ்வதாரத்தையும் பாதிக்கக் கூடியதாக இருக்கும்.
இந்திய மீனவர்கள் ஏற்கானவே இந்திய அரசு அந்நிய கப்பல்களுக்கு கொடுத்த, ஆழ் கடல் மீன்பிடி உரிமத்தை எதிர்த்து போராடி, அதை திரும்பப் பெற வைத் தார்கள். இப்போது இப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை இலங்கை அரசு, சீன நாட்டின் அந்நியக் கப்பல்களுக்கு கொடுப்பதனால், இரு நாடுகளிலும் உள்ள பரம்பரிய மீனவர்களுக்கு எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும். அதே போல வன்னிப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களது வீடுகளை உடன டியாக, தான் கொடுக்கின்ற ரூ.1000 கோடி நிதியில் இருந்து இந்திய அரசு நேரடியாக கட்டிக் கொடுக்கும் என்று உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருந்தார். அத்தகைய கூற்றை எதிர்த்து, இலங்கை அமைச்சர் பதில் கூறி யுள்ளார். இலங்கை அர சுத்துறையின் மூலமாக மட்டும்தான் எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் அல்லது மறுவாழ்வுத் திட்டமும் செய்து கொடுக் கப்படும் என்பதாக அவர் கூறிவிட்டார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் கட்ட முதல் தவணை கடனாக 3,600 லட்சம் டாலர்களை, அதாவது துறைமுக கட்டு மானத்திற்கான 83 விழுக்காடு நிதியை சீனா அளித்திருந்தது. இப்போது இரண்டாவது கட்டமாக, அடுத்த ஆண்டு தொடங்கும் கட்டுமானத் திற்காக 2,000 லட்சம் டாலர்களை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஜுன் 1012 நாட்களில் சீன துணைபிரதமர் இலங்கை வந்த போது இதற்கான ஒப்பந்தம் செய் யப்பட்டது. சீனாவுடன் இலங்கை அரசு 67 ஒப்பந் தங்களை செய்து கொண் டுள்ளது.
இந்தியாவுடன் டெல்லி யில் சமீபத்தில் புதிய ஒப்பந்தங்களை செய்து கொண்ட அதிபர் ராஜ பக்சே, அதன் பிறகு பாகிஸ்தானுடன் புதிய ஒப்பந்தங்களில் கையெ ழுத்து யிட்டுள்ளார்.
அதே சமயம் இந்திய அரசும் தன் பங்கிற்கு வீடுகள் கட்ட 2500 லட் சம் டாலர்களை கூடுதலாக அளிக்க, இலங்கைக்கு உறுதி கூறியுள்ளது. அதே போல இலங்கையில் நடந்த போரில் விதவைகளான பெண்களுக்கு உதவுவதற்காக, சுய வேலைப் பெண்கள் அமைப்பு என்ற குஜராத் தில் உள்ள சேவா என்ற அரசுசாரா நிறுவனத்தை ஈடுப்படுத்துவது என்ற இந்திய அணுகுமுறை கேள்விக்குள்ளகின்றது. அமைப்பாக்கப்படாத மற்றும் ஏழைப் பெண்கள் மத்தியில் வேலை செய்யும் ஒரு அமைப்பு எப்படி போரினால் விதவைகளான பெண்க ளுக்கான பணியாற்ற முடியும் என்று கேள்வி எழுந்துள்ளது. இலங் கையில் உள்ள அரசுசாரா நிறுவனங்களே அந்த பணியை சரியாக செய்ய முடியும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிற்கு அம்பாந் தோட்டை என்றால், இந்தியாவிற்கு திரிகோண மலை துறைமுகம் என்பதா கவும் விவாதிக்கப்படு கிறது. ராஜபக்சேவை பெறுத்த வரை, இரண்டு நாடுகளையும் சார்ந்து, இரு நாடுகளின் வாய்ப்பு களையும் பயன்படுத்தி கொள்வது என்ற தந்தி ரத்தை கையாள்கிறார். பாகிஸ்தானும் தன் பங் கிற்கு இலங்கையில் இறங்கி வருகிறது. அமெரிக்காவும் இந்தியா முலம் அனைத்தையும் செய்வோம் என அறிவித் துள்ளது.
தமிழர் விடுதலைக்கான ஒரு சுதந்திரமான போர் தோற்கடிக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு வல்லரசு நாடும் இலங்கைத் தீவை பங்குபோடத் துடிக்கின்றன என்று தான் புரிந்துகொள்ள முடிகி றது.

Friday, June 18, 2010

நானும்,நீயும். ..........

.
என்னிலிருந்து தொடங்கி
பார்த்தேன். உன்னை புரிய
முடிய வில்லை.
உன்னிலிருந்து என்னை
பார்த்தாயா? எண்ணி பார்த்தாயா?
எனக்கு தெரியவில்லை.
மண்ணிலிருந்து நான் பார்த்தேன்.
விண்ணிலிருந்து பார்க்க வழி இல்லாததால்.
கண்ணிலிருந்து பார்த்ததால் கட்டுண்டேன்.
என் செய்வேன்? தொலைந்தேவிட்டேன்.

காதலியா?............................

காதல் வாழ்க்கை அவளுக்கு
பிடிக்கும். அதனால் எனக்கு
காதல் பிடிக்கும்.
காதலில் அவள் மூழ்கி
எழுவாள். அதனால் எனக்கு
அவளை பிடிக்கும்.

கிர்கிஸ்தான் இன மோதல் படிப்பினை தருமா?

கடந்த ஒரு வாரகாலமாக கிர்கிஸ்தானில் இனக்கல வரம் என்பதுதான் முதன் மைச்செய்தியாக வெளி வந்து கொண்டு இருக்கிறது. மத்திய ஆசியாவில் கிர்கிஸ்தான் குடியரசு இருக்கிறது. அதன் வடக்கே கஜகஸ்தான் இருக்கிறது. மேற்கே உஸ்பெகிஸ்தான், தென் மேற்கே தஜுகிஸ்தான், மற்றும் கிழக்கே மக்கள் சீனக்குடியரசு இருக்கின் றன. இப்படி மலைகளுக்கு மத்தியில் இந்த கிர்கிஸ்தான் மாட்டிக்கொண்டுள்ளது. பிஷ்கெக் என்பது இந்த நாட்டின் தலைநகரம். கிர்கிஸ் என்றால் நாற்பது பழங்குடியினர் என்று பொருள்.
மனாஸ் என்ற மாவீரன் தலைமையில் இந்த நாற்பது பழங்குடியினரும் அணிதிரட்டப்பட்டு கிதான்சுக்கு எதிராக போரா டினார்கள் என்பது வரலாறு. கிர்கிஸ்தானின் கொடியில் நாற்பது கதிர்கள், அந்த நாற்பது பழங்குடினரை குறிக்கும். தென்னாடு என்பதை குறிக்க சிவப்பு அந்த கொடியில் இருக்கிறது.
சாகா என்ற போர்க்குணம் கொண்ட பழங்குடிதான் அங்குள்ள பாரம்பரிய மக்கள். கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து, கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு வரை சாகா பழங்குடியினர் அங்கே வாழ்ந்து வந்தனர். மத்திய ஆசியாவிற்கு துருக்கியர்கள் ஆட்சி நாலா வது நூற்றாண்டில் வரும் வரை சாகா மக்கள் அங்கே கோலோச்சி வந்தனர்.
சாகன் மொழி சீன மொழியிலிருந்து வந்துள் ளது. சோவியத் யூனிய னின் உடைவுக்கு பிறகு, கிர்கிஸ்தான் ஒரு தனி நாடாக உருவாகத்தொடங் கியது. 1876 இல் ரஷ்ய சாம்ராஜ்யத்தில் அது சேர்க் கப்பட்டது. 1989 இல் கிர்கிஸ் என்ற பழங்குடி இனத்தவரை, வெளியே தள்ளி அந்த இடங்களில் ரஷ்யாவின் மற்ற இனங்களை குடியேற்ற முயற்சித்தபோது, பலத்த எதிர்ப்பு உருவானது. கடைசியான சோவியத்தின் புள்ளிவிவரத்திலேயே நகர்புறத்தில் கிர்கிஸ் எண்ணிக்கை இருபத்தி இரண்டு விழுக்காடுதான் என்று குறிப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு பாரம்பர்ய பழங்குடிகளை விரட்டி அவர்களது நிலங்களை மற்ற சோவியத்தின் இனங் கள் கைப்பற்றியுள்ளனர்.
அதனால்தான் புரட்சி வெடித்துள்ளது. இதை இன்றைய அரசுகள் தங் கள் நாட்டில் உள்ள தேசிய இனங்களை அவர் கள் பகுதிகளை விட்டு விரட் டும்போது உணர்வார் களா?
அதிகாரபூர்வமற்ற அரசியல் குழுக்கள் தடை செய்யப்பட்டன. அதுவே பல புதிய குழுக்களை ஏற்படுத்தி அவற்றின் இயங்குதலையும் அரசே அங்கீரிக்க வேண்டிவந்தது 1990 ஜுனில் கிர்கிசுகுக்கும், உஸ்பெக்சுக்கும் மத்தியில் இன மோதலும், வன்முறையும் வெடித்தது. அதையொட்டி கிர்கிஸ் தான் ஜனநாயக இயக்கம் ஒரு பலமான அரசியல் சக் தியாக எழுந்தது.1991 ஆகஸ்ட் 31 இல் சோவியத் யூனியனிலிருந்து கிர்கிஸ் தான் சுதந்திரம் பெற்றது அறிவிக்கப்பட் டது.
2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள், மத்திய ஆசியாவின் கடைசி அமெ ரிக்க ராணுவத்தளமாக இருந்த மனாஸ் விமானப் படைத்தளமும் கிர்கிஸ் அதிபரால் மூடப்பட்டது. அதை நாடாளுமன்றம் அங்கீகரித்தது. கிர்கிஸ், ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் ஆகியோர் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தை மூலம் அந்த முடிவு மீண்டும் அதே ஆண்டு ஜூன் மாதத்தில் மாற்றப்பட்டது. அமெரிக்கர்கள் இப்போது அதிகமான வாடகைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
உலகில் உள்ள முதல் இருபது ஊழல். நாடுகளில் கிர்கிஸ்தானும் ஒன்று என்று பெயர் வாங்கியுள் ளது அதிகமான அளவில் செலவழிக்கும் ஆள் வோரை எதிர்த்தும், ஊழலை எதிர்த்தும் அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலை வர்கள், ஏப்ரல் ஆறாம்நாள், ஒரு போராட்டத்தை தொடங்கினார்கள். அதுவே வன்முறையாக மாறி நாடெங்கும் பரவி யது. மறுநாள் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. பல எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பிஷேக் என்ற தலைநகரில், மக்கள் அரசு தொலைக் காட்சியையும், பாதுகாப் புதுறை தலைமை அலுவ லகத்தையும் கைப்பற்றி னார்கள். 75 பேர் கொல்லப் பட்டதாகவும், 458 பேர் காயம் பட்டதாகவும் முதல் தகவல்கள் கூறின. அந்த நாட்டின் பிரதமர் ரஷ்யா தான் தூண்டிவிட்டது என்றார்.எதிர்க்கட்சிகளும் அமெரிக்க விமானபடைத் தளத்தை மூடும்படி கோரினர்.
அதிபர் அடுத்த நாடான கழகச்தானுக்கு ஓடினார். ஜூன் 12 கணக்குப்படி 200 பேர் கொல்லப்பட்ட னர். 1685 பேர் காயம் பட்டனர். வட்டாரத்தில் உள்ள உஸ்பெக்கிர்களுக் கும், கிர்கிஸ்களுக்கும் இன மோதலாக வெடித்தது. அதில் கிர்கிஸ் இன ஆயுதப்படையும் சேர்ந்து கொண்டது. 30000 உஸ்பெகிச்தானியர் மோத லின் விளைவால் வெளி யேறி, எல்லை தாண்டி உஸ்பெகிஸ்தான் எல் லைக்குள் வந்ததாக அவர்கள் அறிவித்தார்கள். ஐ.நா. மனிதாபிமான உதவிகள் பற்றி வழக்கம் போலவே பேசியது. ஐ.நா.வின் உதவும்கரங்கள் தங்கள் அகதி முகாம் டெண்டுகளுடன் உஸ்பெ கிஸ்தான் வந்து இறங்கி விட்டனர். இரண்டு மாதங் களுக்கு 80000 பேருக்கு உணவு வழங்க தாங்கள் தயார் என உலக உணவு மன்றம் அறிவித்துள்ளது. இரண்டு லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம் பெயர்ந்த அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்த கிர்கிஸ்தான் வன் முறை, அருகாமை நாடான சீனக் குடியரசை அதிகமாக பாதித்துள்ளது. வன்முறை நடந்த பகுதிகளிலிருந்து சீனர்களை வெளியேற் றுவதில் சீன நாடு அக்கறை செலுத்த தொடங்கியது. ஜூன் 14ம் நாள் 600 சீனர்களை தங்கள் நாட் டிற்குள் எடுத்துச் சென் றது. 4 லட்சம் உஸ்பெகிஸ் தான்காரர்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி எல்லை தாண்டியுள்ளதாக சீனா கணிக்கிறது. கிர்கிஸ்தான் என்ற ஒரு சிறிய தேசிய இனத்தை தொடர்ந்து அடக்குமுறை செய்ததால், சோவியத் யூனியன் உடைந்தது. அதேபோல, உஸ்பெக்கியர்கள் என்ற இன்னொரு தேசிய இனம் அருகாமை நாட்டிலிருந்து, கிர்கிஸ்தானிற்குள் விரிவாகத் தொடங்கியதால் இத்தகைய எதிர்ப்பும், வன்முறையும் சீன தேசம் வரை பாதிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. இதுவே, காஷ்மீர் விச யத்தில் இந்திய அரசுக்கும், ஈழத் தமிழர் பிரச்சினையில் இலங்கை அரசுக்கும் பாட மாக அமையுமா என்ற கேள்வி நமக்கு எழுகிறது.
கிர்கிஸ்தானில் நடக்கும் வன்முறையை அல்லது மோதலை அந்த நாட்டின் அதிபரான பக்கியேவ் என்பவரை தூக்கி எறிவதற் கான போராட்டத்தை யொட்டி எழுந்ததாக, உலக நாடுகள் கணிக்கின் றன. ஆனால் அதற்கு பின்னால் ஒரு சிறிய தேசிய இனம், தான் பிரிந்து சென்று சுதந்திரமாக தன்னை அறுதியிட்டுக் கொள்வதற்கு தடையாக இருக்கும் உலக சக்திகள் பற்றிய கணக்கு எடுக்கப்படுவதில்லை. உள்ளபடியே, தனித்து நிற்க முடியாத ஒரு உலகச் சூழலில், சுதந்திரமாக வெளியே வந்துவிட்ட கிர்கிஸ்தான் எந்தளவுக்கு அமெரிக்காவாலும், ரஷ் யாவாலும் தலையிடு செய்யப்பட்டு, சிதற டிக்கப்பட்டது என்ற உண்மை காணப்பட வேண்டும்.
அண்டை நாடான உஸ்பெகிஸ் தானிலிருந்து வருகின்ற மக்கள், கிர்கிஸ்தான் நாட்டிற்குள் சென்று குடியமர்வதும், 10 லட்சம் பேர் அதுபோல குடியேறிய பிறகு இந்த மோதல் இனவாத மோதலாக மாறியுள்ளதும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த கிர்கிஸ்தான் மக்கள் தொகை 54 லட்சமாக இருக்கும்போது, அதில் 10 லட்சம் பேர் உஸ்பெகிஸ் தானியர் களாக போய் வாழ்வதும், அந்த நாட்டு அரசியலுக் குள் தங்களுக்கான அரசியல் கட்சியை ஒரு
சக்தியாக வளர்க்க முயல் வதும் எந்தளவுக்கு பாரம்பரிய கிர்கிஸ்தான் மக்களுக்கு எரிச்சலையும், எதிர்ப்பையும் வலுப்படுத் தியிருக்கும் என்பதும் எண்ணிப்பார்க்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழர் பாரம்பரிய பகுதிகளான வடக்கிலும், கிழக்கிலும் தற்போது நடைபெற்று வரும் சிங்கள குடியேற்றங்கள், இதுபோன்ற ஒரு இனவாத வன்முறையை அல்லது மோதலை அல்லது தாக்குதலை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை இந்திய, இலங்கை அரசுகள் மற்றும் உலகச் சமூகம் தொலைநோக்குப் பார்வை யுடன் பார்க்குமா என்ற கேள்வி நமக்கு இந்த இடத்தில் எழுகிறது.
ஓஷ் என்ற தெற்கே உள்ள நகரம் பெர்க்கணா பள்ளத்தாக்கு என்ற நீர்பாசன விவசாயப் பகுதியாக இருக்கிறது. சோவியத் யூனியனின் உடைவுக்குப் பிறகு அந்தப் பள்ளத் தாக்கு, கிர்கிஸ்தான், உஸ் பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய மூன்று சுதந்திரமான குடியரசுகளால் பங்கு போடப்பட்டுள்ளது. அந்த மூன்று இன மக்கள் மத்தி யில் ஒரு நல்லிணக்கம் உருவாகாத சூழலில் இத்தகைய மோதல்கள் தவிர்க்க முடியாதவையாக ஆகிறது. இந்த பெர்க்கணா பள்ளத்தாக்கில் உள்ள கடும் உழைப்பாளிகளான கிர்கிஸ் இன மக்கள் தங்களது வணிகத்தை பெருக்கி வருகின்றன. உலகச் சந்தைக்கு ஆப் கான் நாட்டிலிருந்து செல் லுகின்ற கள்ளத்தனமான போதை வஸ்துக்களும் இந்தப் பகுதி வழியாக செல்லுகிறது. அவற்றை ஊழலில் சிக்கிய கிர்கிஸ் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இத்தகைய செயல் பாடுகள் ஒரு சிறிய தேசிய இனத்தின் சரிவையும், பலவீனத்தையும் காட்டுகிறது என்றால் என்ன பொருள்? சூழலின் கட்டா யத்தால் சுதந்திரமான நாடாக உருவான ஒரு தேசிய இனத்திற்கு, சரியான கொள்கையுள்ள, கட்டுப்பாடு கொண்ட ஒரு வலுவான இயக்கமும், அதற்கான உறுதிமிக்க படைப்பிரிவும் இல்லாத காரணத்தால், இத்தகைய சீரழிவுகள் வெளிச்சத்திற்கு வருகின்றன. இதுவே, போரில் வீழ்ந்து பட்ட தமிழ் தேசியத்திற்கு ஒரு சரியான, வலுவான, ஒன்றுபட்ட கட்டமைப் புடன் கூடிய தலைமை தேவை என்பதை வலி யுறுத்துகிறது.
தேசிய இனங்களின் இருத்தலுக்கும், அறுதியிட லுக்கும், வாழ்வாதாரத் திற்கும் பிரச்சினை எழும் போது, அடக்கமுடியாத வன்முறைகள் எழுச்சி பெறும் என்ற உண் மையை சீன தேசம் தனது வாயிலிலேயே தெரிந்து கொள்ள இந்த மோதல் உதவட்டும். உஸ்பெகிஸ் தான் இஸ்லாமிய இயக்கத் தின் தலைவர்கள், பாகிஸ் தானில் உள்ள வடக்கு வசிரிஸ்தானில் தங்கியிருப் பதால், இந்த பிரச்சினையில் இந்திய அரசும் கவலை கொள்கிறது. இந்த இரு நாடுகளும் சிறிய தேசிய இனங்களின் இருத்தலை மற்றும் வளர்ச்சியையும், சுதந்திரத்தையும் அங் கீகரிக்க வேண்டும் என்ற உண்மையை, இந்த கிர்கிஸ்தான் தரும் பாடம் சொல்லித்தருமா என்ற கேள்வி நமக்கு எழுந் துள்ளது.

Thursday, June 17, 2010

மௌனித்ததை மரணித்ததாக எண்ணி, ஆவி அரசியல் செய்யும் சூன்யங்கள்

உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர் களுக்கு ஈர்ப்பு மையமாக இன்று வரை இருப்பது ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம். உலகமெங்கிலும் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்து வந்தாலும், இலங்கையிலும், இந்தியாவிலும் வாழுகின்ற தமிழர்கள் தான் அடிப்படையில் தேசிய இனத்திற்கான அடையாளங்களை அறுதியிடுகிறார்கள். என்ற கருத்து ஏற்கனவே இருக்கிறது. அதிலும் இந்தியாவில், தமிழ் நாட்டில் வாழுகின்ற தமிழர்கள் தங்களது உற்பத்தி முறையில், இந்திய துணைக் கண்டத்தில் நிலவுகின்ற பொருளா தாரத்துடன் இணைந்த வாழ்க்கையை நடத்தி வருவதால், ஒரு தேசிய இனத்தின் சிறப்பு அறுதியிடல் பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றார்போல், பயிற்றுமொழிக் கல்வியும், அதற்கான பணிவாய்ப்பும் தாய் மொழி சார்ந்து நிலைநிறுத்துவதில் இன்னமும் வெற்றி பெறாத நிலைமை தொடர்கிறது.
அதே சமயம் இலங்கையில் இருக்கும் ஈழத் தமிழர்களின் நிலைமை வேறுபட்டு நிற்கிறது. தமிழர் தாயகமாக நிலவும் பகுதிகள், சுயமான பொருளாதார, பண்பாட்டு, அரசியல், எல்லைகள் ஆகியவற்றுடன் உறுதியான அடித்தளத்தை அங்கே வைத்துக்கொண்டுள்ளன. அதுவே அறவழி அரசியல் போராட்டமாகவும், அதன் பிறகு ஆயுதப் போராட்ட மாகவும் வளர்ந்தன. 60 ஆண்டுகளாக நடந்து வரும் அரசியல் போராட்டம், 30 ஆண்டுகளாக தொடர்ந்த ஆயுதப் போராட்டம் ஆகியவை கடந்த ஆண்டின் மே18ல் ஒரு கட்டத்தை எட்டின. போராட்டத்தின் வடிவங் களையும், கட்டங்களையும் அவ்வப் போது சூழ்நிலைகளின் தேவையை ஒட்டி, விடுதலைப் போராட்ட தலைமை மாற்றி அமைத்தனர். இலங்கை அரசு சிங்கள ராணுவத்தின் மூலம், ஒரு இனஅழிப்பு போரை திட்டமிட்டு நடத்துவதையும், அதற்கு உலக நாடுகள் சிலவற்றின் ஒத்துழைப்பு கொடுக்கப் படுவதையும் களத்தில் நின்ற விடுதலை புலிகளின் தலைமை, சரியாகவே அவதாணித்தது. பூநகரியை தாண்டி அரசு படை முன்னேறிய கட்டத்தி லேயே, ஆயுதப் போராட்டம் தாக்கும் தன்மையில் தொடர முடியாது என புலிகள் தலைமை கணித்தது. அதையொட்டி தற்காப்பு போராக தங்களது போர்க்களத்தை மாற்றி அமைத்தது.
அரசுப் படைகளுக்கு கிளிநொச்சி மாவட்டம் விழ்ந்த பிறகு, ஒரு கட்டத்தில் புலிகளின் தலைமை, துப்பாக்கிகளை மௌனிக்கிறோம் என்று அறிவித்தது. அதாவது உலக நாடுகளுக்கு புரிகின்ற மொழியில், போர் நிறுத்தத்தை தானாகவே முன் வந்து, தமிழர் தலைமை அறிவித்தது. அது கூட உலகத்தின் மனச்சாட்சியை உருத்தவில்லை என்பது வேறு விஷயம். அந்த நேரத்தில் புலிகளின் இயக்கத்தில், போதுமான அளவிற்கு தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபட தயாரான போராளிகளாக ஆண்களும், பெண்களும் இருந்தார்கள். ஆனாலும் அத்தகைய கரும்புலி படைகளை பயன்படுத்த இயக்கத் தலைமை முடிவு செய்யவில்லை. உலகே வியக்கும் அளவிற்கு புலிகள் இயக்கம் கட்டுப்பாடுகள் கொண்ட ஒன்றாக திகழ்ந்தது.
மே18ல் புலிகளின் மூத்த தலைவர்கள் அனைவரும் மரணமடைந்துவிட்டார்கள் என்று, உலகிற்கு அறிவிக்கின்ற ஒவ்வொரு நாட்டின் உளவுத்துறை தலைமையும், இப்போது கிலி பிடித்து சில செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
அதில் இந்திய முன்னாள் அதிகாரி பி. ராமன் எழுதும் ஆய்வு, அவர்களுக்கு வசதியாக போய்விட்டது. ஆயுதப் போராட்டம் அல்லது பயங்காரவாதம் செய்வதற்கு பயிற்சி பெற்ற புலிகளின் எண்ணிக்கை எத்தனையோ என்று இப்போது கிளப்புகிறர்கள். மரணித்தவர்கள் தவிர, இலங்கை படையிடம் சரணடைந்தவர்கள் போக, மீதம் எத்தனை பேரோ என்று இப்போது அவர் அங்கலாய்கிறார். மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் எழுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றாலும், பயிற்சி பெற்றவர்கள் பிரிந்து சென்று, என்ன செய்வார்களோ என்று சந்தோகத்தை கிளப்பிவிடுகிறார். மீண்டும் அது எழுவதற்கு தமிழ் நாட்டிலும் வாய்ப்பு இருக்கிறது என்பதாக ஒரு புருடாவை எழுப்பி யுள்ளார். அதை புலிகளின் மிச்சசொச்ச போராளிகள் என்பதாக வருணிக்கிறார்.
மீண்டும் ஒரு தமிழர் தலைவரால், இத்தகைய சிதறிக்கிடக்கும் போராளி களைத் திரட்டி ஒரு கலகத்தை செய்ய முடியும் என்பதாக யூகம் செய்கிறார். இதை கேட்டு சூடு போட்டு கொள்ளும் பூனைகளும் இங்கே உண்டு. ஆனாலும் அவைகள் பூனைகள் தான் என்பது அரசுக்கு தெரியும். இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் இன்னமும் தமிழர்கள் மத்தியில் கோபம் இருக்கிறது என்பது அவர்களது மதிப்பீடு. வன்னிப் போர் தனது இறுதிக் கட்டத்தில், உலகம் தழுவிய அரசியல் போராட்டமாக பரிணமிக்கத் தொடங் கிவிட்டது. அதுவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நிறுவும் நிலைக்கு வளர்ந்து விட்டது. இத்தகைய அரசியல் போராட்டம் தமிழினத்திற்கு எதிரான சக்திகளை எரிச்சலடையச் செய்தி ருக்கிறது.
சமீபத்திய அரசியல் போராட்டங்கள், கொழும்பில் நடந்த அனைத்து நாட்டு திரைப்பட விழாவை எதிர்த்தும், ராஜ பக் சேவின் டெல்லி வருகையை எதிர்த்தும் நடத்தப்பட்டது கூட, அவர்கள் கண்களை உருத்துகிறது. அதனால் தான் செயற்கையாக உருவாக்கப்பட்ட விபத்து நாடகங்களை, முடிவுக்கு கொண்டு வர, சிதறிக்கிடக்கும் பழைய போராளிகள் மீது பழியைச் சுமத்த எண்ணுகிறார்கள். உணர்ச்சிவசப்பட்ட தமிழர்களின் உரைகள் சந்தையில் கிடைக்கின்றன. அதையே காராண மாக்கி, மரணித்ததாக அறிவித்த ஒரு இயக்கத்தின் மீது அவர்களால் தடை நீடிப்பை செய்ய முடிந்தது. அதை நியாயப்படுத்த தொடர்ந்து செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் தமிழின எதிரிகளுக்குத் தேவைப்படுகிறது.
இலங்கைத் தீவில் நெருக்கடி நிலையை தொடர்வதற்கும், வடக்கிலும், கிழக்கிலும் சிங்கள ராணுவத்தை தொடர்ந்து நிறுத்துவதற்கும் காரணம் காட்ட, சரணடைந்த ஒருவரை காட்டிற்குள் படை நடத்துவதாக காட்ட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. அதுபோலவே வெடிகுண்டு வெடிப்புகளையும், மிரட்டல்களையும் நடப்பதாகக் காட்ட வேண்டிய கட்டாயம் இங்கேயுள்ளவர்களுக்கும் இருக்கிறது. உலகம் தழுவிய அளவில் எழுந்துள்ள ஈழத் தமிழரின் அரசியல் போராட்டம் உண்மையில் இவர்களை அச்சுறுத்துகிறது. அதையும் தாண்டி ஈழத் தமிழருடன், உலகத் தமிழர்கள் மொழியால், பண்பாட்டால் ஒன்றுப் பட்டு நிற்பவர்கள், அரசியலால் தமிழ் தேசிய அடையாளத்தால் ஒன்றுப்பட்டு வரும் புதிய சூழல், தமிழர் எதிரிகளை அதிகமாக அச்சுறுத்துகிறது. அதனால் தான் புலிபூச்சான்டியைக் காட்டி, அவர்கள் தங்களது திட்டத்தை நகர்த்துகின்றனர்.
மௌனித்ததை எல்லாம் மரணித்த தாக எண்ணினார்கள். மரணித்ததைக் கண்டு ஆவி அடிக்கும் என அலறு கிறார்கள். அவர்கள் சூன்யத்தில் அரசியல் செய்ய எத்தணிக்கிறார்கள். ஆழமாக வேரூன்றிய அரசியல் போராட்டத்திற்கு முன்னால், சூன்யத்தில் ஆட்டம்போட முடியாது என்பதை வரலாறு மெய்ப்பிக்கும்.

எங்கிருந்தோ வந்த குரல்...

மௌனித்தான் தன் துவக்கை
தலைமை கட்டளையிட்டதால்.
தற்காப்பு போருக்கு செல்வதால்
தலைமை சிந்தித்த தந்திரம் அது.
இழப்பை இனியும் தாங்கமுடியாதென
தலைமை எடுத்த முடிவு அது.
அப்பாவி தமிழர் இழப்பை இனியும்.......

கிழக்கை இழந்தோம், வடக்கில்கூட
பின்வாங்கும்போது மன்னார் கண்ட
இழப்புகளை அப்பாவி தமிழர்
அவதிகளை தலைமை எண்ணி
தளம் அமைத்ததால், ....................
ஓடும் தமிழரை துரத்திய
வெறியர் படைமுன்
வயோதிகரை, குழந்தைகளை
அப்பாவி பெண்களை
பலி கொடுக்க விடுதலைப்படை
வித்திடாது. தலைவர் எடுத்த
தகுதியான முடிவு
தற்காப்பு போர்.

பூநகரியை கடந்தான் எதிரி
தலைவர் சிந்தித்தார்
ஏழு அல்ல இருபது நாட்டு
அரசுகள் இங்கே அணிசேர காண்கிறேன்
தமிழன் வீரமுள்ளவன்,
விவேகமும் இணைந்து கொண்டவன்.
வீரம் புலிப்படையில் என்றும் உண்டு.
விவேகம் இப்போது வெளியே வரவேண்டும்.
தலைவன் எண்ணினான். தற்காப்பு போர் என்று.

தாக்கும் போருக்கும், தற்காப்புக்கும்
வேறுபாடு தெரிந்தவனா சிங்களவன்?
சிங்கள இளம் சிறார் படை அது.
பதினைந்து வயதில் பால்குடி மறவா
பாலகன்கள் தென்னிலங்கை விட்டு
நிர்ப்பந்தமாக யாழ் களம் இறங்கினர்.
கொட்டியா என்றால் ஓடும் வயது.
பொய்கூறி அழைக்கப்பட்ட படைவரிசை.
தலைவர் கண்ட களங்கள் சரித்திரம் சொல்லும்.
கொழும்பு தாக்குதல், வான்வெளியை பிய்த்தது
அனுராதபுரா கரும்புலி தாக்கு, எதிரியை
மரண பயத்தில் தள்ளியது.
எதிரியின் வெறி தமிழ்ப்போராளிகளை
நிர்வாணமாக்கி வக்கிரம் காட்டியது.
எங்கள் போராளிகளின் உடல்கள்கூட
உங்களை தூங்கவிடாது.
ஆனாலும் நாங்கள் தலைவர் கூறினால்,
துவக்கையும் மௌனிப்போம்.

தலைவர் சிந்தித்தார். இனி அரசியல் போர்தான்.
அதுவும் அனைத்துலக அளவில்.
புலம் பெயர்ந்தோருக்கும் ஒரு
வாய்ப்பு அதில். இனி அவர்கள் எடுத்துச்செல்வார்கள்.
ஆயுதம் தூக்கியபோது, அதிவேக வெறியுடன்
ஆள் திரட்டல், ஆயுதம் திரட்டல், உளவு திரட்டல்,
செயற்கைகோள் வேவு என எம் தமிழரை
அடையாளம் காட்டிய அன்னியர் இனி என்ன
செய்வர்?
அரசியல் போரில் அகிலம் பங்கு கொள்ளும்.
தமிழர் அகிலம் பங்குகொள்ளும்.

Wednesday, June 16, 2010

போர் குற்றவாளியை வலுப்படுத்துவதில் போட்டியா?

பகிரங்கமாக ஒரு இன வாத போரை நடத்தி, ஒரு லட்சம் தமிழர்களை படுகொலை செய்து, ரத்தக் கறையுடன் இந்தியாவின் தலைநகருக்கு வந்துவிட்டு திரும்பி சென்றுள்ள மகிந்த ராஜபக்சே என்ற இலங்கை அதிபரை ஆதரிப்பதில் இந்திய அரசுடன், அமெரிக்க அரசு போட்டிக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போட்டி அல்ல மாறாக கூட்டு நடவடிக்கை என்பதாக தெரிகிறது. 4வது வன்னிபோர் நடக்கும் தருணத்தில், இந்திய அரசு, பாகிஸ்தான் அரசும், சீன அரசும் இலங்கை அரசின் இன அழிப்பு போரை ஆதரித்து செயல்பட்டார்கள் என்பது உலகறிந்த செய்தி. ஆனால் அதே நேரத்தில் அமெரிக்க அரசு, ஈழத் தமிழர்கள் மீது பச்சாதாபம் கொண்டு, தமிழர்களின் உரிமைகளையும், சுயாட்சியையும் ஆதரிப்பதாக செய்திகள் வெளிவந்தன. அது மட்டும் இன்றி இலங்கை அரசும், சிங்கள ராணுவமும் நடத்தி வந்த மனித உரிமை மீறல்களையும், அமெரிக்க அரசு எதிர்த்து வந்ததாக செய்திகள் வெளியாயின. குறிப்பாக அமெரிக்க வெளி விவகாரத்துறை அமைச்சரான ஹிலாரி கிளின்டன், இலங்கையில் நடந்த போர் குற்றங்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறிவந்தார். அதை கேட்டு உலக தமிழர்கள் பேருவகை கொண்டனர். அமெரிக்க அரசு தமிழர்களுக்கு சாதகமாக இருப்பதாக ஒரு மாயத் தோற்றம் உருவானது.
ஆனால் இலங்கை செய்த போர் குற்றங்கள் பற்றி, ஐ.நா. சபை ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்வதற்கு தொடங்கிய போது, இலங்கை அதிபர் தானாகவே, ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய போகிறோம் என அறிவித்தார். இந்த அறிவிப்பு, ஐ.நா. சபையின் ஆய்வை தடுப்பதற்கான முயற்சி என்று உலகம் கூறியது.
ஆனால் அமெரிக்க அரசின் ஹிலாரி கிளின்டன், இலங்கை அரசின் ஆய்வுக் குழு ஏற்பாட்டை திடீரென ஆதரித்துவிட்டார். இத்தகைய அமெரிக்க அரசின் திடீர் பல்டி, அமெரிக்கவை எதிர் பார்த்திருந்த உலக தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்தது. ஏனென்றால் பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த உடன், தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் தங்களது கோரிக்கைகளை, ஒபாமாவிற்கு அனுப்பி அதில் மகிழ்ச்சி அடைந்தனர். அமெரிக்கா பேசி வந்த மனித உரிமைகள் பற்றிய சொற்களை உலக தமிழர்கள் நம்பி வந்தனர். இப்போது அமெரிக்கவின் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ராபர்ட் ஒ பிளேக் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளர். அதாவது இலங்கை பற்றிய வெளி விவகார கொள்கைகளில், அமெரிக்கவும், இந்தியாவும் ஒரே கருத்தில் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
இலங்கை பிரச்சனையில் இந்தியாவும், அமெரிக்காவும் ஒன்றாக பணியாற்றி கொண்டிருக்கிறோம் என்பதாகவும் பிளேக் கூறியுள்ளார். வடக்கு மாகாணத்தில், போருக்குப் பிறகு உள் நாட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள தமிழர்களை, மீள் குடியேற்றம் செய்வதற்கான பணிகளில், அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்தியாவிற்கும், அமெரிக்கவிற்கும் இலங்கையில் நிலவும் சூழ்நிலை பற்றி ஒரே கருத்து இருப்பதாகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ஒரே கருத்து இருப்பதாகவும் பிளேக் கூறியுள்ளார். இப்போதாவது ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் இந்திய அரசு, துரோகத் தனமான நிலையை எடுத்ததாகவும், அமெரிக்க அரசு சாதகமான நிலையை எடுத்ததாகவும் நம்பி கொண்டிருந்த உலகத் தமிழர்களின் மதிப்பீட்டில் மண் விழுந்துள்ளது.
மேற்கண்ட அறிவிப்பு பற்றி கேள்விப்படும் தமிழர்கள் மத்தியில், இன்னொரு விதமான கருத்து நிலவுகிறது. அதாவது வன்னிப்போர் நடக்கும் நேரத்திலும், போருக்கு பிறகு அதிபர் தேர்தல் நேரத்திலும், அமெரிக்கா தமிழர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும், இந்திய அரசு தான் அத்தகைய நேரங்களில் நேரிடையாக இன அழிப்புக்கு துணை நின்றதாகவும் அழுத்தமான ஒரு கருத்தை உலகத் தமிழர்கள் கொண்டிருந்தார்கள். அதில் இந்திய அரசின் நேரடி பங்களிப்பு பற்றி, ஆதாரபூர்வமான செய்திகளை உலகெங்கும் பரிமாறிக் கொண்டனர். இலங்கை அரசுக்கு உதவி செய்வதில், இந்திய அரசுக்கும், சீன அரசுக்கும் போட்டி இருந்தது என்பதாக சரியாகவே கணித்தார்கள். இந்தியாவும், சீனாவும் இலங்கை தீவில் குறிப்பாக தமிழர் பகுதிகளில், வணிக நோக்குடன் பங்கு போட துடிக்கிறர்கள் என்றும் சரியாகவே கணித்தார்கள். ஆனால் அத்தகைய வணிகப் போட்டியில், அமெரிக்கா என்ன செய்து கொண்டிருந்தது என்பது பற்றி ஒரு மதிப்பீடு இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்போது அத்தகைய மதிப்பீட்டை எட்டுவதற்கான உதவியாக, அமெரிக்க அமைச்சர் பிளேக்கின் கூற்றை நாம் எடுத்துக்கொள்ளலாம். அதாவது இலங்கையில் நிலவும் சூழ்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றி கொண்டிருக்கிறோம் என்று அமெரிக்கவையும், இந்தியாவையும் பற்றி பிளேக் கூறியுள்ளார். அங்கே இருக்கும் நிலைமை எப்படி உருவானது என்பதில் எங்களுக்குள் ஒத்த கருத்து உள்ளது என்று பிளேக் கூறுகிறார்.
அதிலும் இடம்பெயர்ந்துள்ள உள் நாட்டு அகதிகளான, தமிழர்களுக்கு உணவு கொடுப்பதில் முக்கியமான நன்கொடையாளராக அமெரிக்காதான் இருந்தது என்று கூறுகிறார். வடக்கு மாகாணத்தில் புதிய வணிக வளர்ச்சியை உற்சாகப்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார். முப்பது ஆண்டுகளாக புலிகளின் ஆட்சியில் பாதிக்கப்பட்ட அந்த பகுதிகளில் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்று பிளேக் கூறியுள்ளார். அத்தகைய பணிகளில் இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்படுவோம் என்றும் அறிவித்துள்ளார். அதேபோல சமீபத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் உடன் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வாஷிங்டனில் சந்தித்து பேசியது, மிகவும் வெற்றிகரமாக அமைந்தது என்றும் பிளேக் கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றிருப்பதையும், பெரும் வெற்றியாக அமெரிக்கா கருதுகின்றது. இவை அனைத்துமே உலக தமிழர்களாது மதிப்பீடுகளுக்கு, எதிரானவையாக இருக்கின்றன. அதே சமயம் ஈழத் தமிழர்களின் உரிமை போருக்கு எதிராகவும், ஈழத் தமிழர்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கைகளில் முதன்மையாகவும் பங்களிப்பு செலுத்தியதாக நம்பப்படும் இந்திய அரசுக்கு, முழுமையான பின்னணி பலமாக அமெரிக்க அரசு செயல்பட்டது என்பதும், இனியும் செயல்படும் என்பதும் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதே சமயம் இலங்கையிலும், தெற்காசியாவிலும், சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக இந்தியாவின் ஆதிக்கத்தை வலுப்படுத்தி, அதன் முலம் தனது வல்லரசு ஆதிக்கச் சுரண்டலை செயல்படுத்துவது தான் அமெரிக்கவின் நோக்கம் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதை உலகத் தமிழர்கள் உணர வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது.

Tuesday, June 15, 2010

தீர்ப்பு தரும் ஊடகங்களும், திருப்தி அடையாத ஊடகங்களும்

இப்போது தமிழ்நாட்டில் அச்சு ஊடகங்கள் மத்தியில், விழுப்புரத்தில் நடந்த ரயில்வே தண்டவாள தகர்ப்பு பற்றிய தர்க்கம் ஒரு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக இந்திய ஊடகங்கள் எந்தவொரு நெருக்கடியான நிகழ்ச்சி நடந்தாலும், அதுபற்றி நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதற்கான ஆவணங்கள் தயாராவற்கு முன்பே, தாங்களாகவே புனைந்த கதைகளை எழுதுவதும், ஒளிபரப்புவதும் பழக்கம்.
அதுமட்டுமின்றி, சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியில் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரைப் பற்றியோ அல்லது அமைப்பை பற்றியோ தங்களது கருத்துக்களை அல்லது மதிப்பீடுகளை அல்லது விருப்பங்களை முத்திரையிட்டு, அதை வெளியிடுவதை ஊடகங்கள் வழக்கமாக கொண்டிருந்தன. தொடர்ந்து இவ்வாறு ஊடகங்கள் செயல்படுவது விமர்சிக்கப்பட்டு வந்தன. சில குண்டுவெடிப்புகள் எங்காவது நடந்தால், அதை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற பெயரில் முத்திரை குத்தி தங்களது கருத்துக்களை பரப்பிவருவது, வழமையாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு. இத்தகைய முத்திரை குத்துதலை சிறுபான்மை இயக்கங்களும், மனித உரிமை ஆர்வலர்களும் வழக்கமாக குறைகூறுவார்கள். இதன் மூலம் ஒரு விதமான கருத்துருவாக்கம் மக்கள் மத்தியில் உருவாக்கப்படும். அதுவே, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பிற்கு இடையூறாக சென்று முடியும். உளவியல் ரீதியாக பெரும்பான்மை மக்கள் மத்தியில், இதுபோன்ற பரப்புதல்களின் விளைவாக சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பின்மை ஏற்படுகிறது. ஆக்கப்பூர்வமான மதநல்லிணக்கதிற்கு வழிகோல வேண்டிய ஊடகங்கள், தங்களையும் அறியாமல் மதங்களுக்கு மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதற்கு ஊதுகுழலாக மாறிவிடுகின்றன. திட்டமிட்டு மதமோதலை அல்லது மதப்பகைமையை அல்லது மத இழிவுபடுத்தலை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்படும் ஊடகங்கள் பற்றி நாம் இங்கே கவலைப்பட முடியாது. ஆனால் பொதுமக்கள் மத்தியில், பொதுவான நடுநிலையான அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என்று பெயர் பெற்றிருப்பவை, இதுபோன்ற குந்தமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பரப்புரையை செய்யும் போது, அது வருத்தத்தை உருவாக்குகிறது.
இவ்வாறு நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும், அவசரப்பட்டுக் கொண்டு, அல்லது முந்திக் கொண்டு தீர்ப்பு சொல்ல வேண்டிய ஆதங்கத்தில் சோக நிகழ்வுகளுக்கான காரணங்கள் என்று யாரையாவது முத்திரை குத்துவது, வணிக நோக்கத்திற்காக செய்யப்படுகிறது.
இவ்வாறு ஊடகங்கள் வணிக நோக்கங்களுக்காக அவசர, அவசரமாக சில செய்திகளை முத்திரைகுத்தி, பரபரப்பை ஏற்படுத்தும் முறையில் வெளியிடுவது பாரதூரமான பாதிப்புகளை சமூகத்தில் ஏற்படுத்துகிறது. இதை ஊடகங்கள் முன்கூட்டியே வழங்கும் தீர்ப்பு என்பதாக விமர்சிப்பார்கள். அதாவது புலனாய்வுக்குப் பிறகு காவல்துறை பதிவு செய்கின்ற வழக்குகளை, சாட்சிகளுடன் நீதிமன்றத்தில் கொண்டுபோய் விவாதம் செய்து, அந்த விசாரணையில் கொடுக்கப்படும் தீர்ப்பு என்ற நமது சட்ட முறைக்கு எதிராக, ஊடகங்கள் தீர்ப்பு வழங்கி விடுகின்றன என்பதாக அந்த விமர்சனம் செய்யப்படுகிறது.
தீர்ப்பு வழங்கும் ஊடக முறை செல்வாக்கு செலுத்துகின்ற நமது நாட்டில், இந்தமுறை விழுப்புரம் ரயில்வே தண்டவாள தகர்ப்பு பற்றி வித்தியாசமான வெளிப்பாடுகள் ஊடகங்களில் தென்படுகின்றன. சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் வண்டிகள் மோதல் பற்றி, மேற்கு வங்க காவல்துறையும், ஊடகங்களும் முன்கூட்டியே, மாவோயிஸ்டு சதி என்பதாக அந்த நிகழ்வை சித்தரித்தார்கள். முதலில் ஒரு வெடி வெடித்தபிறகுதான் அந்த ரயில்கள் மோதல் நடந்தது என்பதாக காவல்துறை அதிகாரிகளும், அதையொட்டி ஊடகங்களும் பரப்பின. அதன்பிறகு அப்படியொரு வெடியே வெடிக்க வில்லை என்ற செய்தி வெளியானது. அதன்பிறகு ரயில்வே தண்டவாளத்தில் உள்ள பிஷ் பிளேட்டுகள் கழட்டப்பட்டன என்றும் அதனால்தான் ரயில்கள் மோதல் ஏற்பட்டன என்றும் ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டின. இத்தகைய செயல்கள் எல்லாம் மாவோயிஸ்டுகள் தான் செய்வார்கள் என்ற பொதுவான ஒரு கருத்து இருப்பதால், அதை வலுப்படுத்தும் விதத்தில் அவர்களது பரப்புரை அமைந்தது. அதன்பிறகு அந்த செய்தியும் உண்மையல்ல என்று நிருபனமானது. வட்டார காவல்துறை அதிகாரிகளுக்கு, மாநில அரசாங்கத்தின் அரசியலை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை இருப்பதால், அவர்கள் தொடர்ந்து மாவோயிஸ்டுகள் மீதான குற்றச்சாட்டை விடவில்லை. அந்த வட்டாரத்தில் இருக்கின்ற பெரிய மக்கள் திரள் அமைப்பான, காவல்துறை அராஜகத்திற்கு எதிரான மக்கள் அமைப்பு என்பதை மாவோயிஸ்டு செல்வாக்கு உள்ளவர்கள் என்று முத்திரை குத்தி, நடந்து முடிந்த ரயில்வண்டிகள் மோதலுடன் தொடர்பு படுத்த சில அதிகாரிகள் முயன்றனர். அதையொட்டி ரயில்வே என்ஜீன் ஒட்டுனரை இந்த மக்கள் திரள் அமைப்பினர் கடத்தி கொண்டு சென்றதனால், அந்த ரயில் வண்டிகள் மோதல் நடந்தது என்பதாக ஊடகங்களில் வெளிப்படுத்தினர். இவ்வாறு ஊடகங்கள் ஒவ்வொரு முக்கியமான நிகழ்விலும், கறாரான நடுநிலையை நிலைநிறுத்தாமல் இருந்து விடுகின்றன.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்த விழுப்புரம் ரயில்வே தண்டவாள வெடி விபத்து பற்றி, தமிழகத்தில் இருந்து வெளிவரும் ஏடுகள் வித்தியாசமான கருத்துக்களை விதைத்துள்ளன என்பது விசித்திரமான உண்மை. வழமையாக செய்திகளை வெளியிடும்போது, அரசு தரப்பு அல்லது அதிகாரிகள் தரப்பு அல்லது தனிப்பட்ட அதிகாரிகள் வெளிப்படையாக மற்றும் ரகசியமாக கூறுகின்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன. அவ்வாறு வெளியிடும்போது தங்களது விருப்பத்திற்கேற்ற முத்திரையை குத்துவது என்பதை பழக்கமாக கொண்டுள்ளன. அப்படித்தான் இந்த விபத்துபற்றிய செய்தியை முதலில் வெளியிடும்போது, அது மாவோயிஸ்டு சதி என்றும், தமிழ் தீவிரவாதிகளின் சதி என்றும் வெளியிட்டனர். உடனடியாக தமிழக காவல்துறை தலைமை அதிகாரிகள், அந்த நிகழ்வை மாவோயிட்டு சதி அல்ல என்று பதில் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அடுத்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வைக்கப்பட்ட குறி என்பதாக ஒரு பரபரப்புச் செய்தியை வெளியிட்டு ஊடகங்கள் மகிழ்ந்தன. அதுவும் கூட உடனடியாக மறுக்கப்பட்டது மட்டுமின்றி, சம்மந்தப்பட்ட ப.சிதம்பரத்தாலேயே மறுக்கப்பட்டது.
அதன்பிறகு, சென்னையில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கில ஏட்டில், காவல்துறை உயர்அதிகாரிகளும், சம்மந்தப்பட்ட ரயில்வே துறையும் கூறுகின்ற விவரங்களில் முரண்பாடு இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. சேலம்சென்னை விரைவு வண்டியின் ஒட்டுனர் தனது ரயில் வண்டி வெடிவிபத்தின் காரணமாக ஆட்டம் கண்டதாக உணர்ந்தார் என்று தமிழக காவல்துறைத் தலைவர் சொன்ன செய்தி, ரயில்வே துறை கூறிய செய்தியிலிருந்து முரண்படுவதை இந்த ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியது அதாவது அந்த ரயில் வண்டியின் கடைசிப் பெட்டியில் வரும் கார்டு தான் அதை உணர்ந்தார் என்றும், உடனடியாக நிலைய அதிகாரிக்கு கூறினார் என்றும் ரயில்வே துறை தெரியப்படுத்தியது அதேபோல டி.ஜி.பி. சித்தனி பக்கத்தில் வெடிவெடித்ததாக கூறியதையும், ரயில்வே துறை பேரணி பக்கத்தில் வெடி வெடித்ததாக தெரிவித்ததையும் இந்த ஆங்கில ஏடு வெளிப்படுத்தியது. இவ்வாறு ஆய்வு தொடங்குவதற்கு முன்பே, நடந்த நிகழ்ச்சி பற்றிய வெவ்வெறு துறையின் அதிகாரிகளின் அறிவிப்புகளில் உள்ள முரண்பாடுகளை வெளியிடுவதன் மூலம் நிகழ்ச்சி பற்றிய ஐயத்தை இந்த ஏடு ஏற்படுத்தியது.
சில தமிழ் ஏடுகள் மட்டுமே தமிழ்நாட்டில், தலையங்கம் எழுதி வரும் வழக்கம் இருக்கும்போது, பாரம்பரியமாக வெளிவரும் பிரபல ஏடு ஒன்று ஒரு மாத காலமாக தலையங்கம் எழுத தொடங்கியிருப்பது நல்லதொரு அறிகுறியாக இருக்கிறது. அதிகமான அளவில் விற்பனையாகும் இந்த ஏட்டின் தலையங்கத்தில், யாருக்கு குறிவைக்கிறார்கள் என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார்கள். அதில் விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு பற்றி எழுதும் போது, ராஜபக்சே பற்றி விரிவாக கூறுகிறார்கள். விமர்சன நையாண்டியுடன், ராஜபக்சே குளுகுளு பிரதேசமான சிம்லாவுக்கு தன் மனைவி ஷிராந்தியுடன் பறந்தார் என்றும், அங்கே கடைவிதிக்கும் சென்று பொருட்களை வாங்கினார் என்றும் விளக்கியுள்ளார்கள். இப்படி யொரு அருமையான இடமாக இருக்கிறதே சிம்லா ஆனந்தமாக அந்த குளுகுளு பிரதேசத்தில் பொழுதை கழித்தார் என்றும் எழுதியிருக்கிறார்கள். தான் சென்ற இடங்களில் எந்த எதிர்ப்பையும் சந்திக்காமலும், உற்சாகமாக பவனி வந்தார் என்றும், அதிபரின் மனைவி ஷீராந்தியும் சிம்லா கடைவீதிகளில் மிக மகிழ்ச்சியோடு சுற்றி வந்தார் என்றும், இவ்வாறு இந்தியாவில் தங்கள் பொழுதை இனிமையாகவும், உற்சாகமாகவும் கழித்த அவர்கள் இனிதே இலங்கை திரும்பி சென்றார்கள் என்பதாக எழுதியுள்ளார்கள். இந்த பாணி தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற வெறுப்புணர்வின் வெளிபாடாக புரிய முடிகிறது.
விழுப்புரம் தண்டவாள தகர்ப்பை விமர்சிக்க வந்த அந்த தலையங்கம், அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றால், ராஜபக்சே வந்திறங்கி டெல்லி பட்டணத்திலோ, அவர் ஆனந்தமாக பொழுதை கழித்த சிம்லாவுக்கோ சென்றோவல்லவா எதிர்ப்பை காட்டியிருக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார்கள். இத்தகைய முறையில் கருத்துக்களை உருவாக்குவது, பொதுவாகவும் சரி, இந்த ஏட்டிற்கும் புதியதொரு அணுகுமுறையாக தென்படுகிறது. அதேபோல, தரமான தமிழ்நாளேடு என்பதாக அறியப்பட்ட ஒரு ஏட்டின் தலையங்கத்தில், இதே விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு பற்றி, சதி... சதி... சதி... என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளார்கள். அதில் முழுமையான விசாரணை நடைபெறுவதற்கு முன்பே, மாவோயிஸ்டுகள் என்றும், விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் என்றும் சதிக்கான காரணத்தை அதிகாரிகள் முத்திரை குத்துவதை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். இது தமிழ்நாட்டில் ஊடகங்களின் கருத்தில் வந்திருக்கும், நல்லதொரு மாற்றம் மேலும் அந்த தலையங்கத்தில் இலங்கை அதிபர் தனது இந்திய வருகையின்போது, ஏற்கெனவே இந்தியாவில் குற்றவாளி பட்டியலில் இருக்கும் ஒரு அமைச்சரை கூட்டி வந்ததை விமர்சித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இலங்கை அரசின் உளவுத்துறையே கூட ஏன் இப்படியொரு சதித்திட்டத்தை அரங்கேற்றி, பழியை விடுதலைப்புலிகள் மீது போட்டு, டக்ளஸ் தேவானந்தா கைது பிரச்சினையை முடி மறைக்க முற்பட்டிருக்கக் கூடாது என்பதாக ஒரு கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இவ்வாறு, அரசு தரப்பு மற்றும் ஆர்வமுள்ள தரப்புகள் எழுப்பிய முத்திரைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாட்டின் பிரபல ஏடுகள் எழுதுகின்றன என்பது ஒரு புதிய வரலாறு. இலங்கை அரசின் உளவுப்படையினர் இங்கே செயல்படுவதானால், அவர்கள் டக்ளஸ், வரதராஜ பெருமாள், ராஜன் அமைப்பைச் சேர்ந்த நபர்கள் மூலம்தான் செயல்பட்டிருப்பார்கள் என்ற பார்வை நாட்டை பாதுகாக்கும் அதிகாரிகளுக்கு ஏன் எழவில்லை என்பதான கேள்வி நமக்கும் எழுகிறது. எப்படியோ, தீர்ப்பு கொடுக்கும் நிலையில் இல்லாமல், ஊடகங்கள் இன்று திருப்தியடையாத நிலைக்கு வந்துள்ளன என்று தெரிகிறது.

Monday, June 14, 2010

வெள்ளையும் அழகுதான்........

அவள் வெள்ளை என்றான்
பரவாயில்லை என்றேன்.
அவள் நெருப்பு என்றான்.
அதுதானே சூடேற்றும் என்றேன்
அவள் அறிவுகூர்மை என்றான்.
அது கற்க உதவுமே என்றேன்.
அவள் விரும்பமாட்டாள் என்றான்.
முயன்று தோற்கலாம் என்றேன்.
அவள் வெறுப்பாள் என்றான்.
அது அவள் எடுக்கும் உரிமை என்றேன்.
தோல்வி வலிக்காதா என்றான்.
வலி ஒரு சுகம்தானே என்றேன்.
உனக்கு கிறுக்கு என்றான்.
அதுதான் காதல் என்றேன்.

Sunday, June 13, 2010

நள்ளிரவில் நடந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்திய தீவிரவாதி யார்?

சூன்12ம் நாள் நள்ளிரவுக்கு மேல் பூமி அதிர்ந்தது. சென்னையிலும் பல இடங்களில் நில நடுக்கம். கட்டடங்கள் ஆடின. இரவுக் காவலர்கள் குடியிருப்புகளுக்கு வெளியே ஓடி வந்தனர். கடற்கரை ஓர மீனவர் குடியிருப்புகளில் கலக்கம். தென் சென்னையில் மயிலாப்பூரில் உள்ள, பெரிய மீனவக்குப்பமான நொச்சிக்குப்பத்திலும், குடியிருப்புகள் ஆடின. மக்கள் எல்லாம் வெளியே வந்து நின்று கொண்டிருந்தனர். இத்தனை கலக்கத்தை இந்த நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்படுத்தி விட்டது. ஏன் என்றால், 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் நாள் இதே போன்ற நில நடுக்கம் அதிகாலை 615 மணிக்கு சென்னையில் உணரப் பட்டது. அப்போது இந்தோனேஷியா, இலங்கை, அந்தமான் நிகோபர் என வந்து, இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா என முதலில் நிலநடுக்கமும், பிறகு சுனாமியும் நமது கடற்கரையைத் தாக்கியது. மறக்க முடியாத பேரழிவை ஏற்படுத்தியது.
இப்போது நள்ளிரவு தாண்டியதும், ஞாயிற்றுக்கிழமை விடியும் முன்பே, இந்த நிலநடுக்கம் வந்துள்ளது. அப்போதும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைதான் நிலநடுக்கமும், அடுத்து சுனாமியும் தாக்கின. இப்போதும் அந்தமான் நிகோபரில் 7.7 ரிக்டர் என்று நிலநடுக்கத்தை அளவிடுகிறார்கள். இந்த நள்ளிரவுக்கு மேல் வந்த நிலநடுக்கம், சுனாமி பேரழிவாக மாறவில்லை. நல்வாய்ப்பாக, மனிதகுலம் தப்பியது. இதே போலத்தான் இந்த நிலநடுக்கத்திற்கு 24மணி நேரம் முன்பு, விழுப்புரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில், ஒரு வெடி வெடித்து தண்டவாளம் ஒன்று துண்டாடப்பட்ட செய்தி வெளிவந்தது. உடனடியாக அரசு தரப்பிலும், ஊடகத்தரப்பிலும், மாவோயிஸ்ட்டுகளா அல்லது தமிழ் தீவிரவாதிகளா என்ற கேள்வியை எழுப்பினார்கள். இந்தப் பரப்புரை நமது செவிகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதனால் 24 மணிநேரம் கூட முடியாத நிலையில், இந்த நில நடுக்கத்திற்கும், மாவோயிஸ்டுகளோ, தமிழ் தீவிரவாதிகளோ சம்பந்தப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் நமக்கு எழுதுவதில் நியாயம் இருக்கிறது. நிலநடுக்கம் எப்படி சுனாமி பேரழிவாக இப்போது மாறவில்லையோ, அதே போல அதற்கு 24 மணிநேரம் முன்பு நடந்த ரயில் தண்டவாள வெடி விபத்து, எந்த மனித உயிர்ப்பலியையும், பேரழிவையும் ஏற்படுத்தவில்லை. இதனால்தான், இரண்டிற்கும் தொடர்பு இருக்குமோ என்ற ஐயம் வலுப்பெறுகிறது.
சுனாமிப் பேரழிவும், அதற்கு முன்வரும் நிலநடுக்கமும், தமிழ்நாட்டையும், இலங்கையையும் ஒரே நேரத்தில் தாக்கியது. அதைப் போலவே, இலங்கை அதிபரின் இந்தியப் பயணம் முடிந்து அவர் கொழும்பு சென்ற பிறகு, இந்த தண்டவாள வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. அதுவும் ராஜபக்சே வருகையைக் கண்டித்து, அவர் நிம்மதியாகத் திரும்பிச் சென்ற பிறகு நடத்தப்பட்டுள்ளது. இலங்கை அதிபரின் வருகைக்கு முன்பு, அவரைக் கண்டித்து வெடித்திருந்தால், நமக்கும் தமிழ் உணர்வாளர்கள் மீது ஐயம் ஏற்படும். மூன்று நாள் ராஜபக்சேயின் இந்தியப் பயணத்தின் போது, இந்த வெடி வெடித்திருந்தால் அவர் இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாமல் கூட, போயிருக்கும். அதாவது எதிர்ப்பு வெடி உருவத்தில் வருவதைக் காரணங்காட்டி, ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமல், மனைவியுடன் உல்லாசமாக சிம்லா செல்வதையும் தவிர்த்து, ராஜபக்சே கொழும்பு சென்றிருப்பார். அந்த அளவுக்கு கொழும்பு நகரில் உள்ள சிங்கள அறிவுஜீவிகள் இந்தியாவுடனான ஒப்பந்தங்களுக்கு எதிராக இருந்தனர். ஆகவே தனக்கு எதிராக வெடிவிபத்து நடந்திருந்தால், அதைக் காரணங்காட்டி, ராஜபக்சே கையெழுத்திடாமலேயே, பறந்திருப்பார். இதையும் சம்பந்தப்பட்ட டெல்லி சக்திகள் விரும்ப வில்லை எனத் தெரிகிறது.
அதனால்தான், விழுப்புரம் ரயில்தண்டவாளம், ராஜபக்சே பயணம் நிறைவுற்ற பிறகு, வெடித்துள்ளது என்கிறார்கள். வளையாத இலங்கை அதிபரை, இந்தியாவுடன் கையெழுத்திட தயங்கிய ராஜபக்சேவை இணங்க வைத்து டெல்லிக்கு அழைத்து வந்தவர் இலங்கை அமைச்சர் டக்ளஸ். அத்தகைய காய் நகர்த்தலில் உதவி செய்த, பிரபல தமிழ் பத்திரிக்கையாளர் தனது டக்ளஸ் நட்பை பயன்படுத்தினார் என்கிறார்கள். அதுவும் அந்த நபர், தமிழ்நாட்டு ஆட்சிக்கு எதிராக, அரசியல் காய் நகர்த்துகிறார் என்று அரசியல் வட்டாரத்தில், நடப்பு நிகழ்வுகளைத் தொகுக்கிறார்கள். இந்த நேரத்தில் இலங்கை அமைச்சர் டக்ளஸ் பற்றி, பழைய கசப்பான நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டதில், டெல்லியில் அந்த சில சக்திகள் ஆட்டம் கண்டன. அதற்கு பின்னணி என ஒரு மாநில அரசியலைப் பார்த்து, சம்பந்தப்பட்டவர்கள் முறைக்கிறார்கள்.
அதுவே ராஜபக்சே வருகையின் பலனை கையில் எடுத்த பிறகு, அவரது வருகைக்கு எதிராக வெடிக்கிறது என்ற ஐயத்தை வலுப்படுத்தியுள்ளது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது என்ற குரலை எழுப்பவும் அது பயன்பட்டு விட்டது. இடையில் சில கேள்விகளும் எழுகிறது. 25,000 பேரைக் கொலை செய்த, நச்சுக் கழிவுக்குக் காரணமான அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவன அதிபர் வாரன் ஆண்டர்சன்னை காப்பாற்றி தப்ப விட்ட குற்றத்தை செய்தவர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திதான் என்ற மாபெரும் சர்ச்சையிலிருந்து நாட்டு மக்களை திசை திருப்ப வேண்டிய அவசியமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இருக்கிறது.
இப்படி வன்முறைகளைத் தூண்டி, ஒரு மாநிலத்தில் சட்டஒழுங்கு கெட்டுவிட்டது என மத்தியில் உள்வர்கள் செய்யத் துணிவார்களா? என்ற கேள்வி எழுகிறது. 1984ம் ஆண்டு தமிழ்நாடே ஈழத்தமிழர் மீது நடக்கும் கொடூரங்களுக்கு எதிராக, கொந்தளித்த போது, மாணவர்கள் அந்தக் களத்தில் முதலில் நின்றார்கள்.
மதுரையில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் நடவடிக்கைக்குழு கிளர்ச்சியின் மையமாக இருந்தது. அப்போதைய மாணவர் தலைவர்களை அணுகிய சம்மந்தப்பட்ட மத்திய அதிகாரம், ரெயில்களுக்கு நெருப்பிடும்படி ஆலோசனை கொடுத்தார்களே? அதை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் விசுவாச உளவுப் படையான மோகன்தாஸ் தலைமையிலான அணியிடம், மாணவர் தலைவர்கள் போட்டுக் கொடுத்தார்களே? இப்படியும் சர்ச்சைகள் கிளம்புகின்றன. அதே போல 4வது வன்னிப் போர் நேரத்தில், சென்னை ரயில் நிலையத்தில் மர்ம மனிதர் ஒரு ரயில் என்ஜினை ஓட்டிச் சென்று பெறும் விபத்தை ஏற்படுத்த முயன்றாரே? இதுவரை புலனாய்வு உண்மைக் குற்வாளியின் பின்னணியைக் கூறவில்லையே? அதுகூட சம்பந்தப்பட்ட சக்திகளால், தமிழினப் போராளிகள் மீது பழி சுமத்தவும், மாநில அரசின் தமிழ் பாசத்தை சட்டஒழுங்கு பெயரில் கட்டுப்படுத்தவும் தானே? எனக் கேட்கிறார்கள்.
மேற்கு வங்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் பிஷ்பிளேட்டை கழற்றி, ரயில்களை மோதவிட்டு, மக்களைக் கொன்றார்கள். அதை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா, அரசியல் சதி எனக் கூறினார். அதாவது மாநிலம், மத்திக்கு எதிராக செய்த சதி எனப் பொருள்பட்டார். இங்கே அது அப்படியே மாறி செயல்படுகிறதா? தெரியவில்லை.
எப்படியோ, பலியாவது என்னவோ, தமிழ் உணர்வாளர்கள்தான். இந்த வழக்கில் கருத்துரிமைக்குப் போராடும், இளம் தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பின் அமைப்பாளரை குற்றம் சாட்டுவது, நடைமுறைப் பொறுத்தமாக இல்லை.
நமக்கு முக்கியமே நில நடுக்கத்தை ஏற்படுத்திய தீவிரவாதி யார்? என்பதுதான். கரியமிலவாயுவை உலகெங்கிலும் உற்பத்தி செய்து, பல லட்சம் கோடி டாலர்களைச் சேர்த்துவிட்ட, அமெரிக்க பன்னாட்டு மூலதன நிறுவனங்கள், பிராணவாயு மண்டலத்தில் ஓட்டை விழ வைத்தார்கள். அதுவே கடலுக்கடியில், நிலநடுக்கங்களை உருவாக்குகிறது. அப்படியானால் உண்மையான தீவிரவாதிகள் யார்?