Saturday, February 27, 2010

பாலியல் குற்றச்சாட்டில் பிரபலம் பலியாகலாமா?

உ.ரா.வரதராசன் இப்போது விவா தத்திற்கு உள்ளாகியிருக்கிறார். தோழர் வரதராசனின் மரணத்தின் மூலம் அந்த விவாதம் பெரிதாகியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கொடுத்த விளக்க அறிக்கையினால், மேலும் விவாதங் கள் உருவாகியுள்ளன. வரதராசனின் மனைவி கூறியதாக ஊடகத்தில் வந்த குற்றச்சாட்டுகள் ஒருபுறம். இழப்பு ஏற்பட்டவுடன் கட்சியை குறை கூறவேண்டுமா என்ற கேள்வி மறுபுறம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், ஒரு கடுமையான விமர்சனத்தைக் கொடுத்துள்ளார். வரத ராசன் சமூக விரோத செயல்களிலோ, வர்க்க விரோத செயல்களிலோ ஈடு படவில்லை என்றும், கம்யூனிச இயக்கத்தில் மிக நீண்ட காலம் பயிற்சி பெற்றவர் என்றும், 50 ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிஸ்ட் கட்சிகாக்காவும், சாதாரண மக்களுக் காகவும் பாடுபட்டவர் என்றும், அத்தகைய தலைவர் மீது நடவ டிக்கை எடுக்கும் முன் 100 முறை யோசித்திருக்க வேண்டும் என்றும் தா.பாண்டியன் கூறியுள்ளார். தவறு செய்திருந்தால் அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் மூலம், அதைத் திருத்தச் செய்வதாக இருந்திருக்க வேண்டும் என்றும் மாறாக உயிரைப் பறிப்பதாக இருந்திருக்கக் கூடாது என்றும் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருக்கிறார். இந்த மரணம் கம்யூனிச இயக்கத்திற்குள் மிக நீண்ட காலத்திற்கு விவாதத்தை எழுப்பிக் கொண்டே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
பொதுவாக மக்களுக்கு மேற்கண்ட நிகழ்ச்சியாலும் அதுபற்றிய விமர்சனத்தாலும் பல்வேறு கேள்விகள் எழத்தான் செய்யும். ஒரு மனிதர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு பாலியல் தொந்தரவு சம்பந்தப்பட்டது. அது பிரபல தலைவர் மீது சாட்டப்படும் போது மட்டும்தான் 100 முறை யோசித்திருக்க வேண்டுமா? சாதாரண மனிதர்கள் மீது இதே போல குற்றச் சாட்டு கூறப்பட்டால், உடனடியாக முடிவு செய்தல் தவறில்லை என்று கூறுவதா? இப்படியும் கூட கேள்விகள் எழுகின்றன. நடந்த மரணம் ஒரு தற்கொலையாக இருந் தாலும், அது ஒரு விபத்து. அந்த விபத்திற்கு காரணமானது ஒழுங்கு நடவடிக்கைதான் என்பதாக புரிந்து கொண்டால் அது முழுமையாகுமா?
பிரகாஷ்காரத்தின் விளக்கம், கட்சிக் குள் இந்தக் குற்றச்சாட்டு எடுத்துச் செல்லப்பட்ட முறைகளைப் பற்றி விவரிக்கிறது. அதற்கு ஆதாரமாக பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவர் கூறிய புகார் சுட்டிக் காட்டப்படுகிறது. ஆனால் அப்படி ஒரு புகார் எழுத்துப்பூர்வமாக கொடுக்கப் படவில்லை என்ற செய்திகளும் வருகிறது. இதில் கட்சிக்குள் அதிகார மோதல் என்பதுதான் இந்த அளவுக்கு பிரச்சினையை இழுத்துக் கொண்டு சென்றுள்ளது என்றும் கூறுகிறார்கள். உ.ரா.வரதராசன் கட்சிக்குள் எப்படிப்பட்ட பதவிகளை தமிழ்நாட்டில் வகித்து வந்தார் என்பதும், டெல்லிக்கு எத்தகைய பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட்டார் என்பதும், அதுவே அவரிடம் மாறு பட்ட கருத்துள்ளவர்களுக்கு மோதலை ஏற்படுத்தியதா? என்பதும் அந்தக் கட்சிக்குள் உள்விவகாரம். அது முக்கிய காரணம் என்று யாரும் கருதமுடியாது. ஒரு காரியம் நடைபெறுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்குமானால் இதுபோன்ற உள்கட்சி மோதல், அதிகார முரண்பாடு ஆகியவை அத்தகைய காரணத்தை தூண்டி விடவோ, துரிதப்படுத்தவோ ஒரு குறிப்பிட்ட பங்களிப்பை செலுத்தியிருக்கலாம். தேர்தல் அரசியலைச் சார்ந்தும் அதிகாரப் பகிர்வை நோக்கியும் செல்லுகின்ற ஒரு அரசியல் இயக்கத்திற்குள், இயக்கத்தின் கொள்கைகளை வலுப்படுத்துவதற்கும் அல்லது பலவீனப்படுத்துவதற்கும் இது போன்ற முரண்பாடுகள் எழுவது இயற்கையே. ஒரு நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பில், குடும்ப வாழ்க்கையில் அனைத்து விதமான சிந்தனைப் போக்குகளாலும் தாக்கம் செலுத்தப்படும் ஒவ்வொரு தோழரின் அணுகுமுறையும், பிறரால் பல்வேறு விவாதத்திற்கு உள்ளாக்கப்படுவது என்பது நிகழவே செய்கிறது. முதலாளித்துவக் கட்சிகளின் செயல்பாடுகளையும், சிந்தனைப் போக்குகளையும் முழுமையாக வேறுபடுத்தி மாற்றுச் செயல்பாடு, மாற்றுச் சிந்தனைப் போக்கு ஆகியவற்றை செயல்படுத்து பவர்களாக, தோழர்கள் இயங்கி வந்தால் அதுவேறு. ஆனால் நடை முறையில் மாறுபட்ட செயல்பாடு இல்லாத தோழர்கள் மத்தியில், இன்றைய உலகின் வணிகத் தனமான முதலாளித்துவ சிந்தனைப் போக்குகள் செல்வாக்கு செலுத்தாமல் இருக்குமா?
அப்படி பல்வேறு விதமான வெளிச்சிந்தனைகள், கட்சிக்குள் தாக்கம் செலுத்தும் போது, ஒரு கட்சி தலைமை நிதானமாக எந்த ஒரு குற்றச்சாட்டையும் ஆய்வு செய்ய வேண்டாமா? என்ற கேள்வி எழலாம். அது நியாயமான கேள்விதான் என்றாலும் இங்கே பிரச்சினைக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிட்ட குற்றச்சாட்டோ, அதை முழுமையாக ஆய்வு செய்யாமல் இருந்ததோ, அவசரமாக முடிவு செய்ததோ அல்ல என்பதை நாம் உணரவேண்டும். இதே போலத்தான் செங்கல்பட்டில் சி.ஐ.டி.யூ.என்ற மார்க்சிஸ்ட் கட்சி யின் தொழிற்சங்க மையத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்த தோழர் ராதாகிருஷ்ணன் கொலை வழக்கு விவாதிக்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் மணல் கொள்ளையை எதிர்த்து போராடினார் என்பதற்காக அப்போது தனிமைப் படுத்தப்பட்டதாக கருத்து எழுந்தது. மணல் கொள்ளையை எதிர்ப்பதற்கு மனமில்லாத சக்திகள், அந்த கொலை வழக்கில் குளிர் காய்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அதுபோன்ற பிரச்சனையாக வரதரா சன் விவகாரத்தை பார்க்க முடியாது. ஏனென்றால் இது பாலியல் தொந்தரவு என்ற குற்றச்சாட்டு.
பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி சமூகத்தில் நிலவுகின்ற கருத்துக்கள் அதே போல பெண்ணிய அமைப்புகள் சமரசமற்று பார்க்க வேண்டிய நிலைப்பாடுகள், பொதுவுடமைக் கட்சி அத்தகைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கையாளக் கூடிய அணுகுமுறை ஆகிய அனைத்தும் இந்த விவகாரத்தில் சம்பந்தப் படுகின்றன. மேற்கண்ட குறிப்பிட்ட வழக்கில், புகார் கூறியதாக கூறப்படுபவர் நேரடியாக விசாரிக்கப்பட்டாரா? என்ற விவகாரமும் சேர்ந்து எழுந்துள்ளது. எந்த பொறுப்பிலிருந்தாலும், கறாரான நடவடிக்கையை ஒரு கட்சி தலைமை எடுப்பது என்பது சரியாகத்தானே இருக்கும் என்ற பார் வையை குறை சொல்ல இயலாது. இப்போது ஏற்பட்டுள்ள இழப்பின் பளுவை யொட்டி, கறாரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தவறு என்று கூறுவதும், தவறாகப் போய்விடும்.
குற்றம் சாட்டப்பட்ட தோழரும், அந்த புகாரைக் கையாண்ட தோழர் களும், தோழியர்களும் பாலி யல் உறவுகள் பற்றியும், பாலினப் பார்வைகள் பற்றியும் எத்தகைய கருத்துக்களை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த பிரச்சினைக்கான அடித்தளம். சமுதாயத்தில் நிலவுகின்ற பண்பாட்டுப் பிரச்சினைகள் மீதான பார்வையும், கட்சித் தோழர்கள் கொண்டுள்ள கருத்துக்களும் விவாதிக் கப்படவேண்டும். பல்வேறு விதமான இருதரப்பு விவரங்கள், ஆதாரங்கள், சாட்சிகள் ஆகியவற்றைத் தாண்டி, எத்தகையப் பார்வையில் இந்தப் பிரச்சினைகள் பார்க்கப்படுகின்றன என்பது இந்த விவகாரத்தில் முக்கிய மானது. ஒரு ஆண் மேலாதிக்க சமுதாய அமைப்பில், கட்சிக்கு வெளி யேயும், உள்ளேயும் இருக்கின்ற ஆண்கள் எத்தனை பேர் நிலவும் சமுதாய அமைப்பின் ஆதிக்க மனோ பாவங்களிலிருந்து தங்களை விலக்கி நிறுத்திக் கொள்வதில் வெற்றிப் பெற்றிருக்கிறார்கள் என்பது ஒரு அடிப்படையான கேள்வி.
பெண்ணியச் சிந்தனை, பெண் ணுரிமை ஆகியவற்றைப் பற்றி ஒரே விதமான கருத்துக் கோப்பு கட்சிக்குள்ளோ, தோழர்களுக்கு இடை யேயோ, நிலவிக் கொண்டிருக்கிறதா? என்பதும் கேட்கப்படவேண்டும். வரதராசன் தனது மரணத்தைத் தழுவிய நிகழ்வு எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று. அதே சமயம் ஆண், பெண் உறவுகளில், பாலின நீதி கொண்ட உலகப் பார் வையை எவ்வாறு உருவாக்கப் போகிறோம் அல்லது விளங்கிக் கொள்ளப் போகிறோம் என்ற ஆழமான விவாதத்தை நம்மிடையே அந்த மரணம் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

Friday, February 26, 2010

மியான்மர் எனும் பர்மாவிற்கு ஜனநாயகம் திரும்புமா?

உலகில் மாபெரும் ஜனநாயக நாடு என்று அறியப்படும் இந்தியாவிற்கு அருகே அது ஒரு சிறிய நாடு. அன்றைக்கு அதற்குப் பெயர் பர்மா. இன்றைக்கு அதற்குப் பெயர் மியான்மர். ஐ.நா.வரை இப்போது அந்த சிறிய நாடு பிரபலமடைந்து விட்டது. அமெரிக்கா கூட அந்த நாட்டைப் பற்றிக் கவலைப்படுகிறது. அதிபர் ஒபாமா அதிகமாக கவலைப்படுவதாகக் கூறினார். அண்டை நாடான இந்தியா கவலைப்பட்டதா என்று நமக்கு இது வரை தெரியவில்லை. மியான்மர் நாடு பிரபலமடைந்தது, அதன் சாதனை களுக்காக அல்ல. அந்த நாட்டில் நடக்கும் ராணுவ ஆட்சியாளர்களால், அந்த நாட்டின் ஜனநாயகம் வேதனைப் படுகிறது என்பதனால். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகப் பாதை அந்த நாட்டிலும் இருந்தது. ஆனால் அங்கு மட்டும் மக்களால் வாக்களிக்கப்பட்டு வெற்றி அடைபவர்கள், நாடாளுமன்றம்
சென்று பதவி ஏற்பதற்கு பதில், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். அதில் தான் அந்த நாடு பிரபலமடைந்துள்ளது. நாடாளுமன்றப் பாதையைப் போற்றிப் புகழும் இந்தியத் திருநாட்டின், ஆட்சி யாளர்கள் கண்டு கொண்டார்களா என்பது இந்தியக் குடிமக்களுக்கு இன்னமும் விளங்கவில்லை.
ராணுவத்திற்குள் இருந்து மியான்மர் நாட்டில், ஜனநாயக சிந்தனையுள்ள அதிகாரிகளும் வெளியே வந்திருக்கிறார் கள். அதற்கு உதாரணமாகத் தான் டின்ஓ என்ற தலைவர் இருக்கிறார். அவர் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி. அவருக்கு ராணுவ ஆட்சியாளர்களுடன் முரண்பாடு உருவானது. அதன் விளைவாக ராணுவ ஆட்சியாளர்களை விமர்சித்து விட்டு வெளியே வந்தார். வெளியே வந்தவர் 1988ம் ஆண்டு தேசிய ஜனநாயக லீக் என்ற கட்சியைத் தொடங்கினார். ஆங்சான் சூ கியூ என்ற பெண் தலைவருடன்
சேர்ந்து அந்த கட்சியை டின்ஓ தொடங் கினார். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட
சூ கியூ வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நோபல் சமாதான பரிசு அளிக் கப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து ஜனநாயக ஆதரவாளர்கள் 21,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சென்ற வாரம் சனிக்கிழமை டின்ஓ என்ற அந்த வயதான தலைவர் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். மியான்மர் நாட்டின் மனித உரிமைகள் நிலைமை பற்றி நேரடியாக மதிப்பீடு செய்ய, கடந்த திங்கட்கிழமை ஐ.நா.சபையிலிருந்து சிறப்புத் தூதர் ஒருவர், மியான்மர் நாட்டிற்கு வருகை தந்தார். அதை முன்னிட்டோ அல்லது வேறு காரணத்திற்கோ அதற்கு இரண்டு நாள் முன்பு டின்ஓ விடுதலை செய்யப்பட்டார். சூ கியூ உட்பட எதிர்கட்சித் தலைவர்களை சந்திக்க ஐ.நா.வில் சிறப்புத் தூதர் முயற்சி செய்தார். இப்படித்தான் அந்த நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் நடப்பு இருக்கிறது. இது எந்த வகையிலும் இந்தியாவிற்கு தெற்கே உள்ள இலங்கை நாட்டின் அதிபர் ஆட்சியிலிருந்து மாறுபட்டு தெரியவில்லை.
7 ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்த வயதான தலைவர் டின்ஓ, தான் விடுதலையானவுடன் தனது கட்சி ஆதரவாளர்களுடன் யங்கோன் நகரில், விவாதித்தார். அவரது விடுதலை என்பது மீண்டும் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை என்பதாக எடுத்துக் கொள்ளப்பட முடியாது. அதுதான் மியான்மர் ஆட்சியின் நிலைமை. பின் எதற்காக டின்ஓ விடுதலை செய்யப்பட்டார்?
இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும், தாய்லாந்திலும் புலம் பெயர்ந்த மியான்மர் நாட்டு குடிமக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மீண்டும் தங்கள் நாட்டில் ஒரு ஜனநாயக ஆட்சி அதிகாரத்தை, நிறுவுவதற்காக அந்த புலம் பெயர்ந்த பர்மாக்காரர்கள் முயன்று வருகிறார்கள். தான் ஒரு ராணுவ ஆட்சியின் தலைவர் என்பதால், ராணுவ தளபதி தான் ஷ்வே என்ற அதிபர், தேசிய சபைக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்பதாக அறிவித்துள்ளார். இதுவரை அதற்கான தேதிகள் அறிவிக்கப்படாவிட்டாலும், ஒரு ராணுவ ஆட்சித் தலைமை, தனது நாட்டில் பொதுத் தேர்தல் நடத்தப்போகி றோம் என அறிவித்துள்ளது. தமிழ் தேசிய விடுதலைக்காக போராடிக்கொண்டிருக் கும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் நாட்டில் ஜனநாயக பூர்வமான ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கும் போது, ராணுவத் தலைமையை கையில் வைத்திருக்கும் அதிபர் மகிந்த ராஜபக்சே, தானாகவே ஒரு அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை செய்ததைப் போலவே, மியான்மர் நாட்டின் ராணுவத் தலைமையும் நடந்து கொள்கிறது. இரண்டு நாட்டு ஆட்சியாளர்களுக்கும், அண்டை நாடான இந்த பெரிய ஜனநாயக நாட்டின் ஆட்சியாளர்கள் ஆலோ
சனை கொடுத்தார்களா என்பது நமக்குத் தெரியாது.
மியான்மர் நாட்டு ராணுவத்தலைவர் தான் ஷ்வே, தனது நாட்டில் தேர்தல் என்பது சுதந்திரமாக, நியாயமாக நடக்கும் என்று முன்கூட்டியே அறிவித்துள்ளார். அதிருப்தியாளர்கள் கூற்றுப்படி, அந்த ராணுவத்தலைமை குறைந்த பட்சம், ஐ.நா.விற்கும், அனைத்து நாட்டு சமூகத்திற்கும், தான் ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவதாக காட்டிக் கொள்ள அப்படிக் கூறியிருக்கலாம். ஆனால் அனைத்து நாட்டு சமூகத்திற்கும், ஐ.நா.விற்கும் வளைந்து கொடுக்க மகிந்த ராஜபக்சே, இலங்கையில் முயன்றதாக நமக்கு தகவல்கள் இல்லை.
ஜனநாயக ரீதியான தேர்தல்களை மியான்மர் நாட்டில் நடத்த வேண்டும் என் றால், எதிர்க்கட்சி என்று பெயரளவுக்காவது ஒன்று இருக்க வேண்டும். ஜனநாயக ஆதரவு போராட்டங்கள் நடத்தப்பட்டு விடக்கூடாது. ஆனால் தேர்தலில் மட்டும் ஒரு பெயரளவு எதிர்க்கட்சி போட்டிப் போடவேண்டும். இது மியான்மர் நாட்டின் ராணுவ ஆட்சியாளர்களுக்குத் தேவையாக இருக்கிறது. இந்த பணியை செய்ய டின்ஓ தயாராக இருப்பார் என்று தெரிகிறது. அதே சமயம் இன்னொரு அபிப்ராயமும் அந்த நாட்டிற்குள் விவாதிக்கப்படுகிறது. ஐ.நா.சபையின் சிறப்புத் தூதர் தாமஸ் ஓஜியா குயின்டானா வருகையின் போது, மியான்மர் நாட்டில் நிலவுகின்ற மனித உரிமை நிலைமைகள் பற்றி பதிவு செய்யும் போது, ஜனநாயகம் பற்றி சில சொற்களை அனுமதிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்காக டின்ஓவை விடுதலை செய்திருக்கலாம். அந்த நேரத்தில் டின்ஓ பேசுகின்ற ஜனநாயகக் குரலை எல்லாம் அரசு தரப்பு பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். ஐ.நா.தூதர் திரும்பிச் சென்று ஐ.நா. அலுவலகத்தில் தனது அறிக்கையை கொடுத்த பிற்பாடு, பதிவு செய்யப்பட்ட டின்ஓவின் கலகக் கருத்துக்களைக் காரணங்காட்டி, மீண்டும் டின்ஓ கைது செய்யப்படலாம்.
மேற்கண்ட சந்தேகங்கள் அந்த நாட்டின் ஜனநாயக சக்திகளுக்கு எழுகிறது. பழம் பெரும் எதிர்க்கட்சித் தலைவரான 87 வயதுள்ள டின்ஓவை விடுதலை செய்வதன் மூலம், ராணுவ ஆட்சியாளர்களுக்கு வெளிநாட்டு உதவி என்ற பெயரில் நிறைய நிதி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் அந்த வயதில் அந்த தலைவர் மக்களைத் திரட்ட முடியாதவராக இருக்கிறார். மியான்மரில் உள்ள ஜனநாயக இயக்கத் திற்கும், தான் எப்படி தேர்தலை எதிர் கொள்ளப்போகிறோம் என்பதில் மாறு பட்ட கருத்துக்கள் அவர்களிடையே நிலவுகின்றன. இதுதான் இலங்கையிலும் எதிர்க்கட்சிகளை உடைப்பதில் ஆளுங் கட்சிக்கு வெற்றித் தேடித்தந்தது. மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சியாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளைக் கண்டு மயக்கமடைவோரும் உண்டு. தேசிய ஜனநாயக லீக் போட்டியிடுமானால், ஐ.நா.வின் மேற்பார்வை வேண்டும் என்று கருதுவோரும் உண்டு. தேசிய சபையில் பிரதிநிதித்துவம் பெறுவது என்ற குறைந்தபட்ச தேவையாவது நிறை வேறும் என எதிர்பார்ப்பதும் உண்டு. அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மூலமாக குரல் எழுப்பி, அனைத்து நாட்டு சமூகத்திற்கும், ஐ.நா.விற்கும் செய்தி கூறமுடியும் என்று எண்ணுவோரும் உண்டு. ராணுவ ஆட்சியாளர்கள் தாங்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய இந்த தேர்தலை, ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த இருக்கிறார்கள் என்ற கருத்து பொதுவாக இருக்கிறது.
இப்படி ஒரு சிறிய நாட்டு நசுக்கப் படும் ஜனநாயக குரல்களுக்காக, பெரிய நாடு இந்தியா செவிமடுக்காதது ஏன்? என்ற கேள்வியை இந்திய மக்கள் எழுப்புவதில்லை. இலங்கையில் பயங் கரவாதத்திற்கு எதிரான போர் என்று காரணம் கூறி தப்பித்து வந்த நமது மத்திய அரசு, மியான்மர் நாட்டு விவகாரத்திற்கு என்ன பதில் கூறுவார்கள் என்று தெரிய வில்லை.

Thursday, February 25, 2010

மனித உரிமை போராளிகளும், மாவோயிஸ்ட்களும்!

மாவோயிஸ்ட்கள் வன்முறையை கைவிட்டால், பேச்சு வார்த்தை நடத்தலாம் என்கிறார் உள்துறை அமைச்சர். 72 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கத் தயார் என்று மாவோயிஸ்ட் தலைவர் ஒருவர் கூறுகிறார். இடையில் அவ்வப்போது மத்திய உள்துறை அமைச்சர், வன்முறை செய்யும் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாகப் பேசுகின்ற மனித உரிமை ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், சமூக ஆர்வலர் களும் தங்கள் ஆதரவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறிவருகிறார். உள்துறை அமைச்சரின் தாக்குதல் இலக்கு முக்கியமாக மனித உரிமை ஆர்வலர்கள் மீது தான் இருக்கிறது. அப்படிப்பட்ட பட்டியலில் இருக்கின்ற மனித உரிமை ஆர்வலர்கள், காட்சி ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் தங்கள் பக்கத்து வாதங்களை முன்னெடுத்து வைக்கிறார் கள். அப்படி அவர்கள் தங்கள் கருத்துக்க ளைக் கூறும்போது, தெளிவாக தாங்கள் அனைத்து வன்முறைகளுக்கும் எதிராக இருக்கிறோம் என்பதை மறுக்காமல் பதிவு செய்கிறார்கள். சமீபத்தில் அவ்வாறு பதிவு செய்த டாக்டர் பினாயக் சென், தனது காட்சி ஊடக நேர்காணலில் வன்முறை எந்த வடிவத்தில் நிகழ்ந்தாலும், அது சாதாரண மக்களின் அமைதியான வாழ்நி லையை பாதிக்கிறது என்பதை எடுத்துச் சொன்னார்.
அதே போல மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற பி.யூ.சி.எல். அமைப்பின் பொதுச் செயலாளர், ஒரு காட்சி ஊடகத்தில் கூறும்போது, தங்கள் அமைப்பு அனைத்து வகையான வன்முறைக்கும் எதிரானது என்று கூறியுள்ளார். ஆனாலும் கூட 72 நாள் போர் நிறுத்த அறிவிப்புக்கு தயார் எனக் கூறிய மாவோயிஸ்ட் தலைவர் கிஷன் ஜி, அரசாங்கத்துடன் நடத்த இருக்கும் பேச்சு வார்த்தைக்கு, இடை ஏற்பாட்டாளராக மனித உரிமை ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அரசு தரப்பு ஒரு புறமும், மாவோயிஸ்ட் தரப்பு மறுபுறமும் நவீன ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, மோதல்களையும், துப்பாக்கிச் சூடுகளையும், உயிர்பலிகளை யும் ஏற்படுத்தி வரும் வேளையில் வன்முறையை அங்கீகரிக்காத மனித உரிமை போராளிகளை, இரு தரப்புமே குறி வைத்துப் பேசுவது நிகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட மனித உரிமை முன்னோடி அமைப்பான, பி.யூ.சி.எல். என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அமைப்பாளர்கள், இந்த தீவிரமான சச்சரவு பற்றி கூடி விவாதித்திருக்கிறார்கள்.
கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில், பெங்களூரில் கூடிய தங்களது தேசிய கவுன்சில் கூட்டத்தில், இந்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், சத்திஸ்கர் மாநிலத்திலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் நடந்து வரும் அரசாங்க கெடுபிடிகளையும், சல்வாஜூடும் என்ற கூலிப்படையை ஏவி விடும் காவல் துறையின் நடவடிக்கைகளையும்,
சாதாரண ஜனநாயக சக்திகளும், காந்தியவாதிகளும் ஆதிவாசி மக்களை பாது காப்பதற்காக குறைந்தபட்ச அறவழிப் போராட்டங்களைக் கூட நடத்தமுடியாத நிலை இருப்பதையும், விரிவாகவும், விளக்கமாகவும் அலசினார்கள்.
இதே போல ஏற்கனவே பிரபல பெண் எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான அருந்ததிராய், நடந்து வரும் சத்திஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் வன்முறைகளும், அரசாங் கம் ஆதிவாசி மக்கள் பகுதிகளின் மீது நடத்தும் போர் என்று கூறியிருந்தார். அதற்காக அருந்ததிராயைக் கூட, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தயங்காமல் மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவு தருபவர் என்பது போல முத்திரைக் குத்தியிருந்தார். பன்னாட்டு மூலதன நிறுவனங்களுடன், இந்திய அரசு செய்து கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், அந்தப் பிராந்தியத்தின் காடுகளையும், மலைகளையும் ஆதிவாசிகளின் கரங்க ளிலிருந்து பறிப்பதற்காக திட்டமிடுகின்றன என்று அருந்ததிராய் கூறியிருந்தார். அதற்காகவே ஒரு போர் நடத்த மத்திய அரசு தயார் செய்கிறது என்றும் கூட குற்றம் சாட்டியிருந்தார். இத்தகைய அம்பலப்படுத்தலுக்காகவே எழுத்தாளர் அருந்ததிராய் போன்ற மனித உரிமை ஆர்வலர்களை, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வம்புக்கு இழுப்பது போல, அவ்வப்போது பேசி வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் சத்திஸ்கர் மாநிலத்திலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் முதன்மையாக செயல்பட்டு வரும் மனித உரிமை அமைப்பான, மக்கள் சிவில் உரிமைக்கழகம் அந்த மாநிலத்தின் பொறுப்பாளர்களுடன், அகில இந்திய அளவிலான தேசிய செயற்குழு உறுப் பினர்களையும் அமர வைத்து, விவா தித்து இதற்கெல்லாம் விடை தேட முயற்சித்தது. இந்த சூழ்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, இதே பி.யூ.சி.எல். அமைப்பின் அகில இந்திய மாநாட்டை, ஜார்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சியில் கூட்டியிருந்தார்கள். அதிலும் மாவோயிஸ்ட்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையிலான போர் பற்றியும், பாதிக்கப்படும் ஆதிவாசி மக்களின் அவலம் பற்றியும், அதில் அமைதி ஏற்படுத்துவதற்கான பி.யூ.சி.எல். அமைப்பின் முயற்சிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அந்த அகில இந்திய மாநாட்டை நடத்திக் காட்டிய, ஜார்கண்ட் மாநில பி.யூ.சி.எல். தலைவர் சுப்ரத்தோ பட்டாசார்ஜீ சமீபத்தில் மரணம் அடைந்தார். அத்தகைய சூழலில்தான் இப்போது அவர்கள் தேசிய கவுன்சிலில் கூடினார்கள்.
ஜார்கண்ட் மாநில பி.யூ.சி.எல். போல் அல்லாமல், சத்திஸ்கர் மாநிலத்தில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஆளுகின்ற மாநில அரசாங்கத்தால் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கின்ற சிபுசோரன், ஆதிவாசிகள் இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். அதே சமயம் அவர் சில தொகுதிகளில் மாவோயிஸ்ட்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றதாக கூறுகிறார்கள். அங்கே நடந்த ஒரு ஊராட்சி ஒன்றிய அதிகாரியை, மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று, கைதாகி உள்ள அப்பாவி ஆதிவாசிகளை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்த போது, சமீபத்தில் அந்த கோரிக்கையை ஏற்று மாநில முதல்வர் சிபுசோரன், அப்பாவி ஆதிவாசி களை விடுதலை செய்தார். அதே போல மாவோயிஸ்டுகளும் தாங்கள் பணயக் கைதியாக பிடித்து வைத்த, பி.டி.ஓ.வை விடுதலை செய்தார்கள். இத்தகைய செயல்பாடு ஜார்கண்ட் மாநிலத்தில் சாத்தியமாக இருக்கிறது. ஆனால் சத்திஸ்கர் மாநிலத்தில் நிலைமை அப்படியில்லை என்பதுதான், மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் தேசிய செயற்குழுவில் ஏற்பட்ட புரிதலாக இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர், ராணுவ மயமாக்கும் ஒரு தந்திரத்தை பெரி யளவில் முயற்சிக்கிறாரா என்ற கேள்வி கூட அங்கே எழும்பியுள்ளது.
பச்சை வேட்டை என்ற பெயரில் ஒவ்வொரு வாரமும், சல்வாஜூடும் என்ற கூலிப்படையை ஏவி விட்டு 30லிருந்து 40 வரை பொதுமக்களை, குறிப்பாக ஆதிவாசிகளை கொலை செய்யக்கூடிய, ஒரு கொலை வெறித் தாண்டவம் சத் திஸ்கர் மாநிலத்தில் நடந்து வருகிறது என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது. தெற்கு சத்திஸ்கரில் உள்ள பாஸ்டர் பகுதியில், அந்த வட்டாரத்தையும், சல்வாஜூடும் அமைப்பையும், மாநிலத்தின் ஆளும் கட்சியான பா.ஜ.க.வின் தோழமை அமைப்பாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ். தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்ற செய்தி, பி.யூ.சி.எல். தேசிய கவுன் சிலையே அதிர வைத்தது. எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல், ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு 15,000 எஸ்.பி.ஓ.க்கள் என்ற சிறப்பு காவல் படை அங்கே இறக்கிவிடப்பட்டுள்ளது.
உண்மை அறியும் குழாமாக அந்த வட்டாரத்திற்கு சென்ற மனித உரிமை ஆர்வலர்களை ஆயுதம் தாங்கிய 500 பேர் கொண்ட கூலிப்படை சுற்றி வளைத்துக் கொண்டு, முட்டைகளால் தாக்கியது. அந்த தாக்குதலில் மேதாபட்கர் உட்பட அடிபட்டார்கள். இத்தகைய தொடர் தாக்குதல்களால் 643 கிராமங்களைச் சேர்ந்த, 60,000 ஏழை மக்கள், ஊர்களை காலி செய்து கொண்டு இடம் பெயர்ந்துள்ளனர். துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 70,000 கிராம மக்கள் இடம் பெயர்ந்த அகதிகளாக அங்கே இருக்கிறார்கள். எஸ்.ஆர்.எம்., டாட்டா, புஷ் கம்பெனி ஆகிய முதலாளிகள் உள்ளே நுழைவதற்காக, ஆர்.எஸ்.எஸ்.ம், சல்வாஜூடுமும் இணைந்து வேலை செய்கிறார்கள்.
கிராமங்களில் மக்களின் வீடுகள் எல்லாம் எரிக்கப்பட்டு, விளைச்சல் நிலங்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டு, கால்நடைகள் கடத்தப்பட்டு, வெறும் கைகளுடன் உள்நாட்டு அகதிகளாக மக்கள் வெளியேறி இருக்கிறார்கள். மாவோயிஸ்ட்களுடனோ, அல்லது அரசு படைகளுடனோ மட்டும் தான் ஒருவர் உயிர் வாழ முடியும் என்ற நிலைமை நிலவுகிறது. எதிர்ப்பு குரல்கள் நெறிக்கப்படுகின்றன. காந்திய வாதி ஹிமன்ஷýகுமார் நடத்திய பாத யாத்திரை தடுக்கப்பட்டது. பிப்.6,7 தேதிகளில் நடத்தப்பட இருந்த பொது விசாரணைக்கு வர ஒப்புக் கொண்டிருந்த மத்திய அமைச்சர் சிதம்பரம், வராமல் புறக்கணித்தார். அரசாங்க நிதியுதவியுடன் இயங்கி வந்த வனவாசி சேத்னா ஆசிரமமும் கூட உடைக்கப்பட்டது. மார்ச் மாதம் 6ம் நாள் நடக்க இருக்கும் சத்திஸ்கர் மாநில பி.யூ.சி.எல். மாநாட்டையும் குலைக்க, பா.ஜ.க. அரசு சதி செய்கிறது.
இப்படிப்பட்ட பின்னணியில்தான் இப்போது மத்திய உள்துறை அமைச்சர், மாவோயிஸ்ட்களுடன் பேச்சு வார்த்தைப் பற்றி சிலாகித்து வருகிறார். மனித உரிமை அமைப்பை அங்கீகரித்து, மத்திய அரசு அந்த வட்டாரத்திற்கு அமைதி திரும்ப ஏற்பாடு செய்யுமா? செய்யாதா? என்ற கேள்வி முதன்மையாக நிற்கிறது.

Wednesday, February 24, 2010

தெலுங்கானா மாநிலம் ஒரு அடிப்படை உரிமை

தெலுங்கானா தனி மாநில கோரிக்கை தீவிரமாக வலுவடைந்து வருகிறது. அந்தப் பகுதியிலிருந்து வருகின்ற செய்திகள் புதிய எழுச்சியை படம் பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. அதாவது தனித் தெலுங்கானா மாநில கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வரும் சந்திரசேகராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும், பா.ஜ.க.வும், அவ்வப்போது தெலுங்கு தேசம் கட்சியும், தெலுங்கானா பகுதியிலுள்ள காங்கிரஸ் தலைவர்களும், இப்போது தெலுங்கானா மக்கள் மத்தியில் ஆழமான பிடிப்புடன் அங்கீகரிக்கப்படவில்லை. மாறாக அது ஒரு மக்கள் பிரச்சினையாக மாறிவிட்டது. இன்னமும் சொல்லப்போனால், ஹைதராபாத்திலிருக்கும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் கைகளுக்கு அந்தப் போராட்டம் சென்று விட்டது. தேர்தல் கட்சிகள் யாரையும் இப்போது அந்த மக்கள் நம்பத் தயாராக இல்லை. நடிகர் விஜயசாந்திக்கு தெலுங்கானாவை ஆதரித்ததற்காக இருந்த ஆதரவு கூட, அவர் டி.ஆர்.எஸ். கட்சியில் சேர்ந்த பிறகு இல்லாமல் போய் விட்டது. உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள், போராட்டத்தின் திசை வழியை தீர்மானிப்பதால், போராட்டத்தை தொடர்ந்து கொண்டு செல்வதால், தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிரான சக்திகள், குறிப்பாக மாநிலத்தை ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி தனது தாக்குதலை உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதே செலுத்த முயல்கிறது. அதன் ஒரு அறிகுறி தான் அந்த மாணவர்கள் மத்தியில் மாவோயிஸ்ட் தூண்டுதல் இருப்பதாக அவர்கள் சாட்டி வரும் குற்றச்சாட்டு.
இந்த குற்றச்சாட்டு உயர்நீதிமன்றத்தால் ஏற்கப் படாமல், பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிகளை மானபங்கம் செய்ததாக, துணை ராணுவத்தினர் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், ராணுவமே பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையும் ஆந்திர அரசாங்கம் எதிர்த்து உச்சநீதிமன்ற மேல் முறையீட்டுக்குச் சென்று, தற்காலிகமாக ராணுவம் பல்கலைக்கழகத்திற்குள் இருக்கலாம் என்ற இடைக்கால உத்தரவைப் பெற்றது. அதையும் கூட அடுத்து வந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கியது. ஆந்திர அரசாங்கத்திடம் மாவோயிஸ்ட் தூண்டுதல் பற்றி ஆதாரம் கொண்டு வா என்று கேட்டுள்ளது.
உள்ளபடியே உஸ்மானியா பல்கலைக்கழக மாண வர்கள் மத்தியில் மாவோயிஸ்ட் சிந்தனை இருக்கிறதா அல்லது இருந்ததா அல்லது அவர்கள் அதை நோக்கி ஈர்க்கப்பட வாய்ப்பு உள்ளதா என்று ஆராய்வோமானால், இந்தக் குற்றச்சாட்டின் ஆழமற்ற போக்கு புரியும். ஏனென்றால் நக்சல் பாரி இயக்கம் தொடங்கிய 1967ம் ஆண்டில் தொடங்கி, ஆந்திர மாநிலத்திலுள்ள அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும், இந்தியா முழுவதும் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே, மாவோ சிந்தனைகள் மாணவர்கள் மத்தியில் வெள்ளம் என புரண் டோடியது என்பது உண்மை தான். அதில் உஸ்மானியா பல்கலைக்கழகம் தப்பவில்லை. ஆந்திர மாநிலத்தில் இருந்த பல்வேறு பிரிவு நக்சல் பாரி இயக்கங்களில், ஒவ்வொரு பிரிவின் மாணவர் அமைப்பும் உஸ்மானியா பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாகவே செயல்பட்டு வந்தன. புரட்சிகர மாணவர் சங்கம் என்ற மக்கள் போர் குழுவினரின் மாணவர் அமைப்பு தங்களது பரப்புரையை வழமையாகவே செய்து வந்தது. அதைவிட முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கம் என்ற பீ.டி.எஸ்.யு என்ற மாணவர் பிரிவு, சந்திரபுல்லா ரெட்டி தலைமையிலான நக்சல் பாரி பிரிவினுடைய மாணவர் அமைப்பாக, அதிக வலுவுடன் செயல்பட்டு வந்தது. அதனால் அப்படிப் பட்ட சிந்தனை உள்ளவர்கள் அந்த வளாகத்திற்கு புதிய வர்கள் அல்ல. அந்த வளாகத்தின் கட்டிடங்களில் உள்ள செங்கல்கள் கூட, மாவோ சிந்தனைகளை உரைத்துக் கொண்டேயிருக்கும். அப்படியிருந்தும் அமைதியாக இருந்த உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களை, இப்போது உசுப்பி விட்டிருப்பது யார் என்று பார்க்க வேண்டும்.
தனித் தெலுங்கானாவிற்காக தொடர்ந்து குரல் கொடுத்த டி.ஆர்.எஸ். கட்சியை, இந்தியாவின் ஆட்சியாளர்கள் மாறி,மாறி ஏமாற்றிய பிறகு, அவர் பட்டினிப் போராட்டம் அறிவித்தார். அவரை வற்புறுத்தி போராட்டத்தை ஆட்சியாளர்கள் நிறுத்திய காரணத் தினால், உஸ்மானியா மாணவர்கள் அவருக்கு எதிராகவே போராட புறப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் தனித் தெலுங்கானா அமைக்கப்படும் என்று முதலில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, பிறகு பின்வாங்கியதால் உஸ்மானியா மாணவர்கள் உசுப்பி விடப்பட்டுள்ளனர். இதற்கு மாவோயிஸ்ட்கள் காரணம் என்று சொன்னால், கேழ்வரகில் நெய் வடியுது என்று சொன்னால், கேக் கறவன் புத்தி எங்க போச்சு என்பதாக கிராமத்தில் சொல் வார்கள் என்பது தான் நினைவுக்கு வரும்.
இப்போது தெலுங்கானா பகுதியின் 9 மாவட் டங்களும் முழுமையாக மக்கள் எழுச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எல்லாக் கிராமங்களிலும் அன்றாடம் தனித் தெலுங்கானா கோரிக்கைக்காக, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. புரட்சிக் கலைஞர் கத்தார், தனது பாடல்கள் மூலம் தெலுங்கானா தனி மாநிலத்திற்கான கோரிக்கையை முதலில் பரப்பினார். இப்போது ஒவ்வொரு தெலுங்கானா கிராமத்திலும், பல கத்தார்கள் உருவாகி விட்டனர். கத்தார் அணிந்திருக்கும் உடையான வேட்டியும், தோளில் போட்டிருக்கும் கருத்த போர்வையும், ஆதிவாசிகளின் உடை. அதேபோல உடையணிந்து இளைஞர்களும், மாணவர்களும், கிராமம், கிராமமாக புதிய பாடல்களை கத்தார் பாணியில் எழுதி, கத்தார் பாணியிலேயே பாடி, ஆடத் தொடங்கி விட்டனர். இதுவே கிராமங்கள் வரை வேர் போல ஆழமாகச் சென்றிருக்கின்ற எழுச்சியை காட்டுகிறது. தவிர தெலுங்கானா கிராம நிலங்களை, ஆந்திரா பகுதி கம்மா பண்ணையார்கள் விலைக்கு வாங்கி, கார்ப்ப ரேட்டுகளுக்கு விற்று வருகிறார்கள். அதனால் தான் தெலுங்கானா மக்கள் நிலமற்ற, வறியவர்களாக ஆகியிருக்கிறார்கள். அதனால் கார்பரேட்டுகளுக்கு எதிரான, ஏழை விவசாயி களுடைய போராட்டமாகவும், தெலுங்கானா போராட்டம் மாறியிருக்கிறது.
சமீபத்திய தெலுங்கானா போராட்டம் 3 மாதங் களுக்குள், மாணவர்களிடையே கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் விளைவாக இதுவரை 285 மாணவர்கள் தங்களது உயிரை நெருப்பிட்டு மாய்த்துக் கொண்டுள்ளனர் என்ற கணக்கை அங்கே உள்ள பி.யூ.சி.எல். கொடுக்கிறது. ஹைதராபாத் தலை நகரில் இருக்கின்ற அரசாங்க அலுவலகங்களில், 90% பணியாளர்கள் தெலுங்கானா அல்லாத ஆந்திராவை சேர்ந்தவர்கள். தனித் தெலுங்கானா கிடைக்காமல், அந்த வட்டார மாணவர்களுக்கு எதிர்காலம் இல்லை. அதனால் தான் அவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். உயிர்பலி செய்து கொள்கிறார்கள். போராட்டத்தை கொண்டு செல்கிறார்கள்.
வரலாற்றுப் புள்ளிவிவரங்கள் இதற்கான ஆதாரங்களை முன்வைக்கின்றன. 1953ம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, மொழி வாரி மாநிலங்கள் அமைப்பதற்காக, ஒரு மாநில புனரமைப்பு ஆணையத்தை நிறுவினார். அதற்கு நீதியரசர் பசல் அலியை தலைவராக நியமித்தார். அந்த ஆணையத்தை, 1954ம் ஆண்டு உள்துறை அமைச்சராக இருந்த கோபிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையிட்டார். அந்த ஆணையம் தெலுங்கானா பகுதியை, ஆந்திராவுடன் இணைக்கக் கூடாது என்று கூறியது. தெலுங்கு பேசும் விரிந்த ஆந்திராவை, ஆந்திரா பகுதி மக்கள் விரும்பினாலும், தெலுங்கானா பகுதி மக்கள் இன்னமும் அதை ஏற்கவில்லை என்று ஆணையம் எழுதியது. தெலுங்கான பகுதி பொருளாதாரத்தில் வளர்ச்சியற்று இருக்கிறது என்றும் கூறியது. அதனால் தெலுங்கானாவில் இருக்கும் வளங்களையும் இணைத் தால் ஆந்திரப் பகுதியினர் தங்கள் நலனுக்கு எடுத்துச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்று பசல் அலி எழுதினார். அரசாங்க வேலைகளிலும், கல்வியிலும் ஆந்திரப் பகுதி யினர் அதிக லாபம் பெற்று விடுவர் என்பது போன்ற விவரங்களை, ஆணைய அறிக்கை 382வது பாராவில் பசல் அலி எழுதியிருக்கிறார்.
மாநில புனரமைப்பு ஆணைய அறிக்கையின் 386வது பாராவில், ஹைதராபாத் மாநிலம் என்று அழைக்கப் பட்ட பகுதியை, தெலுங்கானா மாநிலம் என்று தனி மாநிலமாக அறிவிக்கலாம் என முடித்துள்ளார். 1961ன் பொதுத் தேர்தலில் ஹைதராபாத் மாநில மக்கள் மூன்றில் இரண்டு பங்கு, ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவாக வாக்களித்தால் ஒன்றுபடுத்தலாம் என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு கட்டாயமாக சேர்க்கப்பட்ட ஒன்றுபட்ட ஆந்திராவில், தனித்தெலுங்கானாவிற்காக 1969ம் ஆண்டே மாணவர்கள் போராட்டம் எழுந்தது. 362 உறுப்பினர்களை பலி கொண்டது. இந்த உயிர் பலிகள் தொடர வேண்டுமா? தெலுங்கானா வட்டார மக்களது வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டுமா? இப்படி கேள்விகளை அருகே இருக்கும் நாமாவது எழுப்பக் கூடாதா?

Tuesday, February 23, 2010

இடம் பெற வேண்டியது குழுவிலா? கூட்டணியிலா?

முல்லைப் பெரியாறு பிரச்சினை மீண்டும் தமிழ் நாட்டிற்குள் அரசியல் விவாதமாகி இருக்கிறது. 2006ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் பிப்.27ம் நாள் வழங்கிய தீர்ப்பில் அணை பலமாகவே இருக்கிறது என்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். கேரள அரசு முல்லைப் பெரி யாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், அதனால் புதிய அணை ஒன்றை அதன் அருகிலேயே கட்ட வேண்டும் என்றும், உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்தது. அந்த வாதத்திற்கு பதிலடியாகத்தான் மேற்படி கருத்தை உச்சநீதி மன்றம் தெரிவித்தது.
வெறும் வாதங்களின் மூலம் அப்படிப்பட்ட முடிவுக்கு, உச்சநீதிமன்றம் வர வில்லை. மாறாக மிட்டல் தலைமையில் 7 நிபுணர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, அந்த அணையை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யக் கோரியது. அப்படி ஆய்வு செய்யப்பட்டு கொடுக்கப் பட்ட பரிந்துரையை அடிப் படையாகக் கொண்டு தான், மேற்கண்ட தீர்ப்பை, அதாவது அணை பலமாக இருக்கிறது என்ற கருத்தை உச்சநீதிமன்றம் 2006ம் ஆண்டு கூறியது. அப்போது தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்து வந்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தது. அதை 142 அடியாக உயர்த்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் கூறி யது. அதாவது நிலவும் முல்லைப் பெரியாறு அணையிலேயே, அதிக மான அளவு நீரைச்
சேர்த்து, போதுமான அளவு தமிழ்நாட்டிற்கு வழங்க முடியும் என்பதுதான் அந்த தீர்ப்பின் பொருள். அதன் மூலம் தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கின்ற தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்ற விவசாயத்திற்கு மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என்பதுதான் அந்த தீர்ப்பையொட்டி, தமிழக மக்களின் எதிர் பார்ப்பு.
மேற்கண்ட தீர்ப்பை கேள்விப்பட்ட வுடனேயே கொந்தளித்து எழுந்தது கேரள சட்ட மன்றம். அப்போது கேரளாவில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது மார்க்சிஸ்ட் கட்சி. கேரள மாநிலத்தை ஆண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், எதிர்கட்சி வரிசையிலிருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணியும், சற்றும் மாறுபாடு இல்லாமல் தங்கள் மாநிலத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, சட்டமன்றத் தில் ஒரு சட்டத்தை இயற்றி னார்கள். வழக்கமாக சட்ட மன்றங்களில் இயற்றப் படும் சட்டங்களுக்கான மசோதா, அந்த மாநில பிரச்சினைக்காக கொண்டு வரப்படும். ஆனால் அடுத்த மாநிலத்திற்கு பயன்படும் வகையில் உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பை மறுப்பதற்காக அல்லது எதிர்ப்பதற்காக ஒரு சட்டம், பேரவையில் நிறைவேற்றப்படுகிறது என்றால் அது ஒரு விசித்தி ரமான நிகழ்வு.
அதாவது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என்ற ஆலோசனையை அல்லது உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்த உடனேயே, கேரள சட்டமன்றத்தில் புதிய அணை ஒன்று முல்லைப் பெரியாறு அருகே கட்டப்பட வேண் டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டு, சட்ட மாக்கப்பட்டது என்பதே அந்த விசித்திரம். அதற்கு அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கான திருத்தம் என்று பெயரிட்டு, அதன் மூலம் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பையே செயல்படுத்தப்பட முடியாத ஒன்றாக ஆக்கி னார்கள்.
மேற்படி கேரள சட் டப்பேரவை இயற்றிய சட்டம் அல்லது சட்டத் திருத்தம் செல்லுமா? என்ற கேள்வியை, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் எழுப்பி னார்கள். விவாதித் தார்கள். அத்தகைய கேள்வி தமிழகத்தின் நலனிலிருந்து மட்டுமே எழுப்பப்பட்ட கேள்வி அல்ல. மாறாக ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கும் போது, அதற்கு எதிராகவே ஒரு மாநி லத்தின் சட்டப்பேரவை சட்டத்திருத்தம் ஒன்றை கொண்டு வரமுடியுமா என்று எழுப்பப்பட்ட கேள்வி. அதாவது மேற்படி செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதாக எடுத்துக்கொள்ளப் பட வேண்டாமா என்பதுதான் தமிழக அரசு தொடுத்த வழக்கின் முக்கியமான முன் வைப்பு. ஆனால் தங்களது அதாவது உச்சநீதி மன்றத்தின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள, மதிப்பை நிலைநாட்டிக் கொள்ள தமிழக அரசு
கொடுத்த ஒரு நல் வாய்ப்பு என்பதாகத் தான் உச்சநீதிமன்றம் அந்தப்பிரச்சினையை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு, முல்லைப் பெரியாறு அணை பற்றிய ஆய்வை மீண்டும் செய்வதற்காக, மீண்டும் ஒரு நிபுணர் குழுவை, மீண்டும் உச்சநீதிமன்றம் நிறுவியுள்ளது என்பதுதான் அதிர்ச்சியைக் கொடுத்தது.
புதிய நிபுணர் குழு 5 பேரைக் கொண்டதாக இருக்கும் என்பது உச்சநீதி மன்றத்தின் முன்வைப்பு. இந்த புதிய நிபுணர் குழுவே தேவையில்லை என்பதால், அதில் தமிழக அரசு கலந்துகொள்ள வேண்டிய தேவையில்லை என்று ஆளுங்கட்சியான தி.மு.க. தனது பொதுக்குழுவில் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளது. அந்த தீர்மானம் உரைப்பது போலவே, தமிழக அரசும் முடிவு செய்துள்ளது. மேற்படி தீர்மானத்தை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுகின்றார். அதாவது உச்சநீதிமன்றத்தின் முன் வைப்பை பயன்படுத்தி, தமிழகத்தின் சார்பான நிபுணர் ஒருவரை, அதற் குள் அனுப்பி வைக்க வேண்டும் என்பதே அவரது வாதம்.
தமிழகத்தின் சார்பில் யாரும் நியமிக்கப்பட வில்லை என்றால், தமிழகத் தின் கருத்துக்களை எப்படி பிரதிபலிக்க முடியும் என்று கேட்டு வைக்கிறார். அது தமிழகத்திற்கு எதிராகவும், கேரள அரசுக்கு சாத கமாகவும் அமையக் கூடிய ஒரு தீர்ப்பை வெளியிடும் நிலைமைக்கு கொண்டு போய் தள்ளிவிடாதா என்பதே முன்னாள் முதல்வரின் வாதம். அவரது வாதத்திற்கு வலு சேர்ப் பதற்காக சில சேதிகளையும் அவர் கூறுகிறார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசனப்பிரிவு தான், மேற்படி ஐவர் குழுவை அறிவித்துள் ளது என்றும், அதில் மத்திய அரசின் சார்பாக இரண்டு தொழில் நுட்ப நிபுணர்கள் இருந்தால், தமிழக அரசு சார்பாக ஒருவரும், கேரள அரசு சார்பாக ஒருவரும் இருக்க வேண்டும். அதில் தமிழக அரசு சார்பான தொழில் நுட்ப வல்லுநர் நியமிக்கப்படாமல் இருந் தால், தமிழகத்திற்கு சாத கமான முடிவு எப்படி கிடைக்கும் என்பதுதான் அவருடைய வாதமாக இருக்கிறது.
அதையும் தாண்டி உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்சின் தீர்ப்பை உதாசீனப்படுத்துவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயலாகும் என்றும் கடுமையான ஒரு கருத்தை வைக்கிறார். இது அரசியல் எதிரிகளுக்குள் நடக்கின்ற வாதமாக இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் இதே போல கர்நாடக மாநிலத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்ந்து இருந்து வரும் காவிரி நதிநீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தால் நிறுவப் பட்ட காவிரி நடுவர் மன்றம் கொடுத்த தீர்ப்பைக் கூட, கர்நாடக அரசு நிறைவேற்ற வில்லை. ஆகவே அண்டை மாநிலங்களுடன் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பிரச்சினை வரும் பொழுதெல்லாம், உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டல்களை அத்தகைய அண்டை மாநிலங்கள் மீறுகின்றன. இதைக் கேட்பாரே கிடையாதா என்ற நிலையில்தான், ஆளுங்கட்சியின் பொதுக் குழு மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றும்படி தள்ளப்பட்டுள்ளது என் பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள, கூடலூர் பகுதியில், அம்பலமூலா என்ற கிராமத்தில் தமிழர்களுக்கும், மலை யாளிகளுக்கும் பிரச்சினை உருவாகியுள்ளது. அதா வது கேரள எல்லையில் உள்ள அந்த கிராமத்தில் தமிழர்கள் உருவாக்கிய முருகன் கோவிலின் அருகே உள்ள அம்மன் சிலை மீது ஜீப்பை மோதி உடைத்துள்ளனர். இத்தகைய பிரச்சினைகள் அதிகமாகாமல் தடுப்பதற்கு அரசியல்வாதிகள்
ஆவ ன செய்ய வேண்டும். மாறாக நீதிமன்றம் அறி வித்த குழுவில் சேருவதா, இல்லையா என்பது, தற்போதைய சூழலில் கூட்டணியில் சேருவதா, இல்லையா என்ற அடிப்படையிலிருந்து பார்க்கப்பட்டு விடக் கூடாது.

Saturday, February 20, 2010

ஸ்டெர்லைட்டின் வேதாந்தா குழுவை வெறுக்கும் வெளிநாட்டவர்

ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் ஒரு பிரபலமான நிறுவனம். இந்த ஆலை தாமிர உருக்காலை திட்டத்தை செயல்படுத்துகிறது. பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த ஆலை, முத்துநகரில் தொடங்கப்பட்டு பல்வேறு புதிய பிரச்சனைகளையும் ஏற்படுத்தி, அவ்வப்போது மூடப்பட்டு, பிறகு மீண்டும் திறக்கப்பட்டு, உயிர்பலிகள், மூச்சுத் திணறல்கள், காற்று மாசுப்படுத்தல், நீர் வளத்தைக் கெடுத்தல், மண் வளத்தை சேதப்படுத்தல் போன்றவற்றில், புகழ் வாய்ந்த பெயரை எடுத்துள்ளது. தொடர்ந்து ஆட்சியாளர்களால் அரவணைக்கப்பட்டும், சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டும், அரசியல் வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு பயன்படும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனஇலாகா ஆகியவற்றின் நற்சான்றிதழ்கள், இந்த ஆலையின் தொடர்ந்த இயங்குதலுக்கு உதவிகரமாக இருக்கிறது.
இந்த தாமர உருக்காலைத் திட்டத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா குழுவினர், உலக அளவில் பெரும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். சமீபத்தில் வந்திருக்கின்ற செய்திப்படி, இங்கிலாந்தில் இருக்கின்ற ஜோசப் ரவுண்ட்ரீ தர்ம அறக்கட்டளை என்ற நிறுவனம், தான் வேதாந்தா குழுமத்தில் விலைக்கு வாங்கியிருந்த 22 லட்சம் டாலர் பெறுமான பங்குகளை, சில நாட்கள் முன்பு விற்று விடுவது என முடிவு செய்து விட்டது. அதற்கு அவர்கள் கூறும் காரணம், சுற்றுப்புறச்சூழலை வேதாந்தா குழு, கெடுத்து வருகிறது என்பதுதான். உதாரணமாக ஒரிசா மாநிலத்தில், கோந்த் ஆதிவாசிகள் வசிக்கின்ற நியாம்கிரி மலைகளை, சுரங்கம் தோண்டுவது என்ற பெயரில் வேதாந்தா குழுமம் அழித்து வருகிறது என்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரிசா மாநிலத்தில் இருக்கின்ற நியாம்கிரி மலைகளில், பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற கோந்த் பழங்குடி மக்கள், அந்த மலையை தங்களது புனிதத்தலமாக நினைக்கிறார்கள். அந்த மலையை ஒரு பன்னாட்டு மூலதன நிறுவனம், தாதுப்பொருட்களை கொள்ளை யடிப்பதற்காக, சுரங்கம் தோண்டுவதற்கான உரிமத்தை ஏதோ ஒரு வகையில் அரசிடம் பெற்றுக் கொண்டு, அதை வைத்துக் கொண்டு, பாரம்பரியமாக வாழ்ந்து வரும் ஆதிவாசிகளின் இருப்பிடங்களை விட்டு, அவர்களை நிர்பந்தமாக இடம் பெயர வைப்பதும், மலை வளங்களை அழிப்பதும் என்று சுற்றுச்சூழல் கேடுகளை ஏற்படுத்த முயலும் போது, அந்த ஆதிவாசிகளின் பெரும் கோபத்திற்கு உள்ளாகிறார்கள்.
கோந்த் பழங்குடி மக்கள், அந்த நியாம்கிரி மலைகளைச் சார்ந்துதான், தங்களது உணவுகளையும் தேடிக்கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி அந்த ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரமே, நியாம்கிரி மலைகள்தான் என்ற அளவுக்கு அவர்கள் இருக்கிறார்கள். இயற்கையைச் சார்ந்து, மலைகளையும், நதிகளையும் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொண்டு, பல நூறு ஆண்டுகளாக நியாம்கிரி மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் அந்த ஆதிவாசி மக்களின், பண்பாட்டு அடையாளங்களும், அந்த மலைகளைச் சார்ந்தே உள்ளது. இது மாநகரங்களிலும், நகரங்களிலும் வாழ்ந்து வரும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு புரிய நியாயமில்லை. அதுமட்டுமின்றி சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்து வரும், மாநகர வளர்ப்பான பெரிய அதிகாரிகள் தாங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அலுவலகங்களில் பணியாற்றினாலும், இயற்கையான ஆதிவாசிகளின் பண்பாட்டு அடையாளங்களையோ, அவற்றை செயற்கைத் திட்டங்களால் அழிப்பதையோ, உணரப் போவதில்லை. அதனால்தான் அத்தகைய அதிகாரிகளின் மற்றும் அரசியல்வாதிகளின் அனுமதியின் பேரில், இப்படிப்பட்ட மாசுபடுத்தும் சுரங்கங்களும், நிறுவனங்களும் உள்ளே நுழைகின்றன.
இங்கிலாந்தில் உள்ள ஜோசப் ரவுண்ட்ரீ நிறுவனம், சில நாட்கள் முன்பு தனது வேதாந்தா பங்குகளை விற்றது போலவே, சென்ற வாரம் ஒரு நிகழ்வும் நடந்துள்ளது. இங்கிலாந்தின் திருச்சபை என்ற அமைப்பு, தான் வேதாந்தா குழுமத்தில் விலைக்கு வாங்கியிருந்த 21 லட்சம் டாலர் பங்குகளை, சுற்றுச்சூழலை கெடுக்கின்ற வேதாந்தா நிறுவனத்திலிருந்து, நீதிக்கொள்கையின் அடிப்படையில் விற்றுவிட முடிவு செய்தது. இதே போல 2007ம் ஆண்டில் ஒரு லட்சத்து 30,000 டாலருக்கான தங்கள் பங்குகளை, நார்வே நாட்டு அரசாங்கத்தின் ஓய்வூதிய நிதி அமைப்பு, வேதாந்தா குழுமத்திலிருந்து விற்றுவிட்டது. 2009ம் ஆண்டில் 23 லட்சம் டாலர்கள் பெருமான பங்குகளை, வேதாந்தா குழுமத்திலிருந்து மார்ட்டின் கேரி என்ற நிறுவனம் தான் போட்ட மூலதனத்தை, விற்றுவிட்டது. இப்படியாக ஒவ்வொரு பங்குதாரரும், மேற்கண்ட பன்னாட்டு மூலதன நிறுவனத்தின் மோசமான, மக்கள் செயல்பாடுகளை தெரிந்துகொண்ட நேரத்திலேயே, தங்கள் பங்குகளை விற்றுவிடுகிறார்கள் என்ற செய்தி இத்தகைய மாசுபடுத்தும் நிறுவனங்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
மனித உரிமை மீறல்களை செய்கின்ற பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு, புதிய முறையில் இதுபோன்ற எதிர்ப்புகள் காட்டப்படுவது, அந்த நிறுவனங்களின் அடிப்படையாக இருக்கின்ற பொருளாதார அடித்தளத்தையே நிலைகுலைய வைக்கும் செயல். ஆனால் மேற்கண்ட வேதாந்தா நிறுவனமோ, தான் மக்களுக்காக சேவை செய்வதாக பரப்புரை செய்து வருகிறது. பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தாங்கள் மேலாண்மை செய்து வருவதாகவும், ஒரு வலுவான உள்கட்டுப்பாடு இயங்கி வருவதாகவும் தனது கார்ப்பரேட் நிர்வாக ஆண்டறிக்கையில் கூறியுள்ளது. அது தவிர தங்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு என்ற பெயரில், ஒரு தொகையை ஒதுக்கி அதன் மூலம் தொண்டு நிறுவனங்கள் என்ற தன்மையில், தாங்கள் கெடுத்துவரும் சுற்றுச்சூழலில் வாழ்ந்து வரும் மக்களிடையே, காசுகளை இறைத்து செயல்பட்டு வருவதை பெருமையாக தங்கள் ஆண்டறிக்கையில் கூறுகிறார்கள்.
இந்தியாவில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த, உலக அளவிலான பெரும் தொழிற்சாலை விபத்தாக, போபால் யூனியன் கார்பைடு நச்சு வாயு கசிவு அறியப்படுகிறது. அதற்கு பிறகு இந்தியாவின் சுற்றுச்சூழல் விதிமுறைகள், பல்வேறு சட்டங்களின் மூலமாக வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அல்லது ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்க போன்ற வெளிநாட்டவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் அதே சமயம் அத்தகைய ஒழுங்கு படுத்தல் எதுவுமே நடைமுறையில் இல்லை என்பதுதான் அவர்களுடைய ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் உண்மை. இந்தியாவின் மலைகளிலும், காடுகளிலும் வசித்து வரும் ஆதிவாசி மக்களின் மற்றும் தலித் மக்களின் பாரம்பரிய உரிமைகள், மண்ணுரிமை, வாழ்வுரிமை, பண்பாட்டு உரிமை ஆகியவற்றை தகர்த்தெறியும் நடைமுறைகளை, சட்ட அங்கீகாரத்தையும், அரசாங்க ஒப்புதலையும் பெற்றுக் கொண்டு பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக, உலக அரங்கில் தெரியத் தொடங்கியுள்ளது. அவ்வாறு சுரங்கம் தோண்டுதல் என்ற தொழிலில், வேதாந்தாவின் செயல்பாடுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இன்றைய காலத்தில், புதியதொரு செயல் தந்திரத்தை மேற்கொள்கிறார்கள். ரோகர் மூடி என்ற ஒரு சுரங்கத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான இங்கிலாந்து நாட்டுக்காரர், வேதாந்தா குழுமத்தில் சிறியதொரு பங்குதாரராக சேர்ந்து கொண்டு, லண்டனில் நடந்த பங்குதாரர் கூட்டத்தில், இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் அந்த நிறுவனம் நடத்தி வரும் சுற்றுச்சூழல் கேடுகளை பட்டியல் போட்டு அம்பலப்படுத்தினார்.
இதுபோன்ற அம்பலப்படுத்தல்கள், உலக அரங்கில் சுற்றுச்சூழல்வாதிகளால் செய்யப்படும் போது, வேதாந்தா போன்ற சூழலைக் கெடுக்கும் கார்ப்பரேட்டுகள், பொதுவான பங்குதாரர்கள் மத்தியில் அசிங்கப்பட்டு தனிமைப்படுகின்றன. அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்ற மூதாதையர் பழமொழி போல, நமது ஊரில் சூழலைக் கெடுக்கும் ஸ்டெர்லைட் ஆலை, சற்று காலம் சென்று பங்குதாரர்கள் மத்தியில் பகிரங்கமாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட உதாரணம் இனி மனித உரிமை ஆர்வலர்களால் பயன்படுத்தப் படமுடியும். ஒவ்வொரு தவறுக்கும், கார்ப்பரேட்டுகள் ஒருநாள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

Friday, February 19, 2010

விடுதலைத் தாகம் அழியக்கூடியதா?

இப்போது தமிழ் மக்கள் மத்தியில் உலகமெங்கிலும் ஒரு தீவிரமான விவாதம் நடந்து வருகிறது. இனி மேல் ஈழத்திலும், இலங்கையிலும் என்ன நடக்கும் என்பதே அந்த விவாதத்தின் சாரமாகும். இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகள் மட்டு மின்றி, தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழும் பகுதியிலும், இந்திய வம்
சாவழி தோட்டத் தொழிலாளர்கள் வாழும் மலையகப் பகுதி யிலும், நேரடியாக இத்தகைய விவாதம் தீவிரமடைந்துள்ளது. அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. யார் யார் எந்தப் பக்கம் என்ற
சர்ச்சை இருந்தது. தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்தன. தமிழர் பகுதி களில் அதிக வாக்குகள் பொன் சேகாவிற்கே போய்ச் சேர்ந்தன. இப் போது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக் கப்பட்டுள்ளது. அதில் யார் யார் எந்தப்பக்கம் என்று மீண்டும் விவாதம் வந்தது. எந்தப்பக்கமும் இல்லாமல், தனித்து நிற்கின்ற அணிகளும் கிளம்பியுள்ளன. இது நிலவும் அரசியல் அமைப் பிற்குள், தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தை தீர்மா னிக்கின்ற முயற்சிகள். ஆனால் உலக அரங்கில், குறிப்பாக தமிழர்கள் மத்தியிலும், பொதுவாக மக்கள் மத்தியிலும் வேறொரு விவாதம் வேர் கொண்டு வருகிறது. அதுதான் நான்காவது ஈழப்போரில், விடு தலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டு விட்டனரா என்ற விவாதம்.
இந்த விவாதத்தில் குதித்துள்ள பல்கலைக் கழகப் பேராசிரியர் அட்டேல் பார்க்கர் தனது ஆங்கில புத்த கத்தில் ஒரு புதிய விளக் கத்தை கூறுகிறார். இலங்கையில் இந்த அமெரிக்கப் பேராசிரியர் 20012002 ஆண்டுகளில் தங்கியிருந்து, அனுப வங்களைப் பெற்றுள் ளார். இலங்கை அர
சாங்கம் முற்றுமுழுதாக புலிகள் அமைப்பை அழித்து விட்டதாக கூறிக் கொண்டாலும், இன்ன மும் கூட அவர்களுக்கு அதில் கலக்கம் இருக் கிறது என்கிறார் அவர். ஈழத் தமிழர்களுக்கு அடிப் படை பிரச்சினைகளாக இருக்கும், நாட்டு வளங் களை சமமாக பங்கீடு செய்யாமை, கல்வி, வேலைவாய்ப்பில் காட்டப்படும் பாரபட்சம், போதிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல் லாமை போன்றவை மீண்டும் புலிகளை உருவாக்கியே ஆகும் என்று இந்த பேராசிரியர் வாதம் செய்கிறார்.
போராளிகள் அமைப் பின் உயர்மட்ட தலை வர்கள் கொல்லப்பட்ட தாகவும், அதுவே அவ் வியக்கத்தின் முடிவாக கருதப்படக் கூடாது என்றும் அவர் வாதம் செய்கிறார். போர் முடிந்த பிற்பாடும், அதே வட்டாரத்தில் அதிகள வில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்று ஆதாரம் காட்டு கிறார். சந்தேகிக்கப்படு பவர்களை, இன்னமும் ராணுவம் முகாம்களில் அடைத்து வைக்கிறது என்கிறார் அவர். உலகம் விடுதலைப்புலிகள் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை என்பது இந்தப் பேராசிரியரின் வாதம். அந்த இயக்கம் கடைபிடித்த ரகசியத் தன்மை அதற்கு காரண மாக இருக்கலாம் என்றும் எழுதுகிறார். இங்கிலாந்து ஊடகங்கள், இது பற்றிய விவரங்களை அமெரிக்க ஊடகங்களை விட அதிகமாக தெரிந்திருக் கின்றன என்றும் கூறியுள் ளார். விடுதலைப் புலிகள் அமைப்பு உறுதியான கொள்கைகளுடன் இறுக்கமாக ஒருங்கமைக்கப் பட்ட இயக்கம் என்கிறார் அட்டேல் பார்க்கர். பெரும் பான்மையான தமிழர்கள் பிரபாகரனின் லட்சியத்தையே வரிந்து கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதம் அடிப் படையில் அஹிம்சை, அன்பு, சமாதானம், தியானம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது என்ப தையும் குறிப்பிடுகிறார். இலங்கையில் புரிந்து கொள்ளப்பட்ட பௌத் தம் வேறுபோல இருக் கிறது என்பது அவரது கருத்து. மகாவம்சம் என்ற காப்பியத்தின்படி, இலங் கைக்கு புத்தர் வந்தார் என்று நம்பப்படுகிறது என்றார். அதனால் புத்த பிக்குகளும் அதை காப்பாற்ற, சிங்கள இனவாதிகளாக இருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டுகிறார். இத்தகைய பார்வை அமெரிக்க பேராசிரியர் அட்டேல் பார்க்கருக்கு மட்டும் இருக்கிறதா? அண்டை நாடான இந்தியா வின் ஆட்சியாளர்களும், அறிவுசார் பிரிவினரும் இதே உண்மைகளை அறியாமல் இருக்கிறார் களா? உலக நாடுகளில் பரந்து கிடக்கும் தமிழ் மக்கள் மத்தியில், <<ஈழத் தமிழர் போர்முறை தெளி வுடன் புரியப்பட்டுள் ளதா? நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதற்கான முயற்சியை, உலகம் தழுவிய தமிழர்கள் எப்படி புரிந்து கொண்டுள் ளார்கள்?
மேற்கண்ட கேள்விக ளுக்கெல்லாம் விடை தேட வேண்டும் என்றால், நடந்து முடிந்த வன்னிப் போரின் ஒவ்வொரு கட்டத்தையும், அசை போட் டுப் பார்க்க வேண்டும். அதிலி ருந்து கிடைக்கின்ற படிப்பினைகள், பல் வேறு விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கொடுக்கும். உணர்ச்சி கரமான எல்லைகளுக்கு செல்வதிலிருந்து, தமிழர் களை சிந்திக்க வைக்கும். எதிர்கால நடவடிக்கைகளுக்கு திட்டமிட, இந்த தேசிய இனத்திற்கு திசைவழிகாட்டும். போர் விதிகள் பற்றிய அறிவையும் கூட கற்றுக் கொடுக்கும். வரலாற்றில் எடுத்து வைக்க வேண்டிய படிக்கட்டுகளை, வரி சைப்படுத்திக்காட்டும்.
ஒரு கட்டத்தில் புலி களின் துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டுள் ளன. அதற்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை தொகுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னால் உணரப்பட்ட, தேசிய இன உரிமைக்கான குரல் ஈழத்தில், அறவழிப் போராக தொடங்கியது. அது நாடாளுமன்ற பாதை யையும் பயன்படுத்த தவறவில்லை. வட்டுக் கோட்டை தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட தேர்த லில் தமிழ் மக்களின் வாக்குகள், சுயநிர்ணயத்திற்கு ஆதரவாகவே அளிக் கப்பட்டன. அத்தகைய பாதைகளால் இனவாதத் தையும், இன ஒடுக் கலையும், இனத்தாக்கு தலையும் நிறுத்தமுடிய வில்லை என்பதனால், தமிழ் இளைஞர்களின் பார்வை ஆயுதப் போராட்டத்தை நோக்கித் திரும்பியது. ஆயுதப் போராட்டம், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட அறவழி அரசியல் போராட்டத்தை விட, உயர்ந்தது என்பதாக தமிழர்கள் உணர்ந்தார்கள். இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற ஒரு திட்டத்திற் கான முயற்சி தொடங் கப் பட்டுள்ளது. அது உலகம் தழுவிய அளவிலான அரசியல் போராட்டம் என்பதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் நடந்த ஆயுதப் போராட்டத்திற்கும், நடக்கயிருக்கும் அரசியல் போராட்டத்திற்கும் உள்ள உறவு என்ன என்பதுதான் சரியான முறையில், விளங்கிக் கொள்ளப்படாமல் இருக் கிறது. வன்னிப்போரில் தோற்றதனால், தமிழர்கள் அரசியல் போராட்டம் என்பதாக தங்களது இயலாமையைக் காட் டுகிறார்களா என்ற கேள்வியும், சிலரை செரிக்க விடாமல் செய் கிறது. ஆனால் உண்மை என்ன என்றால், ஆயுதப் போரான வன்னிப் போரின் தொடர்ச்சி தான் உலகம் எங்கும் நடத்தப் பட இருக்கும் அரசியல் போர். இத்தகைய அரசியல் போராட்டம், எந்த வகையிலும் ஆயுதப் போராட்டத்திற்கு குறைந் தது அல்ல.
இது எப்படி அதன் தொடர்ச்சியாக இருக்க முடியும் என்ற அப்பா வித்தனமான கேள்வி அனைவருக்கும் எழ வேண்டும். ஆயுதப் போரை நடத்திக் கொண் டிருந்த, தமிழீழ விடுத லைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் வே.பிரபா கரனும், எத்தகைய அனுபவங்களையும் மற்றும் படிப்பினை களையும் அதிலிருந்து கற்றார்கள் என்பது புரியப்படவேண்டும். உலகில் எந்த ஒரு தேசிய இனமும், முப்படைகளையும் உருவாக்கி, தங்களுடைய விடுதலைப் பகுதியில், புரட்சிகர அரசாங்கத்தையும் நிறுவி, போரில் ஈடுபட்ட வரலாற்றை, ஈழப் போராளிகள் நடத்திக் காட்டியது போல செய்து காட்டவில்லை. அப்படிப்பட்ட புலிகள் இயக்கம், 7 நாடுகளின் ஒத்துழைப்புடன், அரசப்படை நடத்திய போரை எதிர்கொண்டது. அதன் விளைவுகளை முன்கூட்டியே சரியாக உணர்ந்து கொண்டது. அதனாலேயே கிழக்கு மாகாணங்களிலிருந்து, புலிப்படையை அதன் தலைவர் திரும்பப் பெற் றார். வடக்கு மாகாணத்தில் கூட, கிளிநொச்சிக்குள் தமிழர் படைகளை உள்ளிழுத்துக் கொண் டார். அங்கும் தாக்குதல் தொடங்கிய போது, முல்லைத் தீவிற்கு பின் வாங்க வைத்தார். முல்லைத் தீவு நகருக்குள் சிங்களப் படை நுழைந் தவுடன், மக்கள் திரளுடன் புலிப்படை புதுக் குடியி ருப்புக்கு நகர்ந்தது. அங்கும் எதிரிப்படை இறங்கியவுடன், முள்ளி வாய்க்கால், ரெட்டை வாய்க்கால் பகுதிக்கு விடுதலைப் படை, தன்னை பின்னிழுத்துக் கொண்டது. இவை யெல்லாம் போர் விதிக ளின்படி, தற்காப்புப் போர் உத்திகளாகப் புரி யப்படவேண்டும்.
ஒவ்வொரு அங்கு லமும் தற்காப்புப் போரில் ஈடுபடுத்தப்பட்ட புலிப்படை, உலகத்திற்கு ஒரு செய்தியை உரக்கக் கூவியது. அதுதான் அரசியல் போராட்டமாக, புலம் பெயர் தமிழர்கள் இந்த விடுதலைப் போராட் டத்தை, முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற செய்தி. அதை உணர்ந்து தான் விடுதலைப் படை யின் தலைமையின் முழு வழிகாட்டலில் தான், பெற்ற படிப்பினைகளின் தொடர்ச்சியில் தான், இப்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அரசியல் போராட்டம் எழுந்துள்ளது. இது ஆயுதப் போராட்டத் திலிருந்து, அரசியல் போராட்டம் என்ற பரி ணாம வளர்ச்சிக்கு வந்தி ருக்கும் ஒரு இயங் கியல் விதி. அதனால் தமிழீழத் தாயகம் என்ற தமிழரின் தாகம், அழியக்கூடியதல்ல.

Thursday, February 18, 2010

மாவோயிஸ்ட் கோட்டையில் கண்ணிவெடிகள்

சமீபத்திய நாட்களில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல்கள் அல்லது அவர்கள் மீது அரசப்படை நடத்திய தாக்குதல்கள் என் பதாக செய்தி வராத நாளே இல்லை என்று கூறலாம். ஊடகங்களுக்கும் அத் தகைய செய்திகள், பர
ப ரப்பூட்டும் ஆய்வுகளை நடத்த உதவியுள்ளன. சமீபத்தில் நமது மத்திய உள்துறை அமைச்சர், தற்காலிகமாக அரசுக்கு ஏற்பட்ட தோல்வியையும், இந்திய அரசியல்
சட்டத்திற்குட்பட்ட ஆட் சியில் மாவோயிஸ் டுகளின் கொள்கைகளுக்கு இட மில்லை என்பதையும், விரிவாக விளக்கியிருந்தார். அது மேற்கு வங்க மாநி லத்திலுள்ள, மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில், மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல் பற் றியது. தாக்குதலில் பலியான அரசப்படை வீரர்கள் மீது, பலத்த அனுதாபம் ஏற்பட்டது. ஜர்க்ரம் பகுதியிலிருந்து கிடைக்கும் செய்திகள், ஆறு மாதங்களுக்குள் அரசப்படை மீது ஐந்து தாக்குதல்கள் நடந்து விட் டன என்று கூறுகிறது. 32 படைவீரர்கள் கொல்லப் பட்டனர். பல பத்துப் பேர் காயமடைந்தனர். ஆயுதங் கள் பறிக்கப்பட்டன. காவல் முகாம்கள் பிடிக்கப் பட்டன. அதேசமயம் மாவோயிஸ்டுகளின் முகாம்களில் மூன்று உடைக்கப்பட்டது. கொரில்லக்கள் என சந் தேகிக்கப்படும் 3 பேர் கொல் லப்பட்டனர். 190 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்ட படை அதி காரி அத்திந்தரநாத் தத்தாவை விடுதலை செய்வதற்காக 23 பேர் விடுதலை செய் யப்பட்டனர். மாவோ யிஸ்ட் தலைவர் கிஷன்ஜி, எல்லா விவரங்களையும் மறைந்து இருந்து கொண்டே, ஊடகப் பேட்டிகள் கொடுக்கிறார். ஜங்கல் மஹால் என்ற ஆதிவாசிகள் வசிக்கும் காட்டுப்பகுதியில், அரசப்ப டைகளுக்கு எதிராக மாவோயிஸ்ட்களை மக் கள் ஆதரிக்கிறார்கள்.
2008ம் நவம்பர் மாதத்திற்கு பிறகு, அதாவது காவல்துறை அராஜ கங்களுக்கு எதிரான மக் கள் குழுவை அமைத்த பிற்பாடு, ஒவ்வொன்றாக மாவோயிஸ்ட்கள், வெற்றி பெற்று வருகிறார்கள். 2009 ஜனவரியில் லால் கரில் காவல்துறையை புறக்கணித்தார்கள். காவல்துறைக்கு உளவுக் கொள்பவர்களை தீர்த்துக் கட்டினார்கள். 300 கிராமங் களிலுள்ள 3 லட்சம் மக் களை பாதுகாக்க லால்கரில் 36 காவலர்களே அப்போது இருந்தனர். உள்ளூர் உளவு கட்டமைப்புத் தான், காவல்துறைக்கு இருந்த ஒரே அமைப்பு. அதையும் மாவோ யிஸ்ட்கள் குறி வைத்து தாக்கினார்கள். இரவு ஆனபிறகு காவலர்கள் வெளியே வருவதில்லை. படுகொலைகள் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பி யுள்ளன. இதன் மூலம் விடுதலை பகுதியை ஏற்படுத்தி, மேற்கு மிதி னாப்பூரையும் தாண்டி, புருலியா மற்றும் பங்குரா மாவட்டங்களுக்கு, மாவோ யிஸ்ட்கள் செல்வாக்கு விரி வடைந்துள்ளது. கிணறுகள் தோண்டுதல், சாலைகள் அமைத்தல், சுகாதார மையங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றை வளர்ச் சியுறாத பகுதி களில் உருவாக்கி மக்கள் செல்வாக் கையும், மாவோயிஸ்ட்கள் பெற்று விட்டார்கள். அரசப்படைகளுக்கு இல்லாத அனைத்து கட்ட மைப்புகளும், அங்கே மாவோயிஸ்ட்களுக்கு இருக்கிறது.
9 மாதங்களாக அந்த வட்டாரத்திலேயே முகாமிட்டு இருக்கின்ற அரசப்படைகள், அந்த வட் டாரம் பற்றி இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு கிராமப்புற பாதை தெரியவில்லை. காடுகளில் உள்ளே உள்ள வழிகள் தெரியவில்லை. காலை முதல் மாலை வரை தாங்கள் வலம் வரும் பகுதிகள் மட்டும் தான் தெரியும். இரண்டு வாரங்களாகத் தான் காடுகளுக்குள் அரசப்படைகள் செல்கின்றார்கள். புதிதாக உள்ளே செல்லும் போது குடிக்க தண்ணீர் கூட கிடைப்பதில்லை என்று, கையில் ஆயுதங்கள் இல் லாத நிலையில் அரசப்படை வீரர்கள் அலறுகிறார்கள்.
மேற்கண்ட நிலைமை மேற்கு வங்கத்தில் என்று சொன்னால், சத்திஸ்கர் மாநிலத்தில், பஸ்டர் பகு தியில் இருந்து வரும் செய்திகள், மாபெரும் உள்நாட்டு போர் சூழலை நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. 14வது நூற்றாண்டில், பஸ்டர் என்ற அரசாட்சி அங்கே நடந்து வந்திருக்கிறது. ராமா யணத்தில் தண்டகாரண்யா என்று சொல்லப்படும் பகுதி தான் அது. மகாபாரதத்தில் கோசல ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட பிராந் தியம் தான் அது. 19ம் நூற்றாண்டின் தொடக் கக் காலத்தில், பஸ்டர் என்ற அந்த அரசாட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் மத்திய பிராந்தியமாக அழைக்கப்பட்டது. 1948ம் ஆண்டு ஜனவரி 1ம் நாள், பஸ்டர் பகுதி இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்டது. 1956ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக மாறியது. 2000மாவது ஆண்டு சத் திஸ்கர் மாநிலத்தில், பஸ்டர் வட்டாரத்தின் ஒரு பகுதி
சேர்க்கப்பட்டது. இந்தி ராவதி நதிக்கரையோரம் அந்த ஆதிவாசி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு புறம் ஒரிசா இன்னொரு புறம் ஆந்திரா. எல்லாம் காடுகள் இவ்வாறு வர லாற்று புகழ் பெற்ற அந்த பகுதி தான் இப்போது, மாவோயிஸ்ட்களுக்கும், அரசப்படைகளுக்கும் மத் தியில் ஒரு கயிறு இழுக்கும் போட்டி போல நடந்து வருகிறது.
ஒரு பிரபல ஊடகம் தண்டகாருண்யாவின் அடர்த்தியான காடுகளில், தர்பா என்ற பகுதியின் மாவோயிஸ்ட் குழு தலைவர்கள் 3 பேரை சந்தித்திருக்கிறது. பத்ரு, வினோத், தேவா என்ற அந்த மூன்று பேர் கொண்ட குழுவின் தளப தியான பத்ரு, ஊடகத் திற்கு கடுமையான நேர்காணலைக் கொடுத் துள்ளார். பன்னாட்டு மூல தன கம்பெனிகளுக்கு, தங்கள் பகுதியின் நிலங் களை விற்கத் துடிக்கின்ற மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் செய்ய முடியாது என்றும் தாங்கள் அரசு ஏற்றுக் கொள்ளாத கொள்கையை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது அந்த வட்டார நிலங்கள் ஆதி வாசிகள் உட்பட வட்டார மக்களுக்கே சொந்தம் என்று அவர் தெரிவிக்கிறார். மாவோயிஸ்ட் ஆயுதக்குழு தலைவர் பத்ருவிற்கும், இந்திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரத்திற்கும் எந்தவொரு வேறுபாடும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதாவது இருவருமே அவரவர் துப் பாக்கிகளை, துடைத்து வைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார் கள். இது தான் சமாதா னத்திற்கோ, பேச்சுவார்த் தைக்கோ, வழிவகுக்குமா என்ற கேள்வி தான் எழு கிறது.
அரசப்படைகளிட மிருந்து, அப்பாவி மக்களை தாங்கள் காப்பாற்ற விரும் புவதாகவும், அதற்காகவே தாங்கள் துப்பாக்கி தூக் கியிருப்பதாகவும், பத்ரு போன்றவர்கள் கூறுகி றார்கள். அப்பாவிகளைத் தான் அரசப்படைகள் கொலை செய்ய முடியுமே தவிர, தங்களை அல்ல என் றும் மாவோயிஸ்ட்கள் உரக்கக் கூறுகிறார்கள். அதன் விளைவாக அதிகமான மக்கள் துப் பாக்கி ஏந்துவார்கள் என்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். பச்சை வேட்டை என்ற பெயரில் அரசப்படையும், அரசால் ஆயுதபாணியாக்கப்பட்ட, கூலிப் படையான சல்வா ஜுடுமும், அப்பாவி மக்களை கொலை செய்வ தனால், எதிர் விளைவுகளே உருவாகும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆஸ்ரம பள்ளிகளை உடைத்தீர்களே என்ற கேள்விக்கு, அரசப் படைகள் அவற்றை ஆக் கிரமித்திருந்தன என்றும் பதில் கூறுகிறார்கள். பா.ஜ.க.வும், காங்கிர
சும் பன்னாட்டு மூலதன நிறுவனங்களை, அந்த வட்டாரத்திற்கு கொண்டு வந்து, பாரம்பரியமாக வாழும் மக்களை நிர்பந் தமாக இடம் பெயர வைக்கிறார்கள் என்பது அவர்களது குற்றச்சாட்டு.
அதேசமயம் அரசு தரப்பு செய்திகள், தாங்கள் செய்கின்ற பச்சை வேட்டை என்பது, பொது இடங்களில் மாவோயிஸ்ட்களால் நிலத்தில் புதைக்கப்பட்ட, கண்ணிவெடிகளை நீக்குவது தான் என்று கூறுகிறார்கள். அவ்வாறு பஸ்டர் பகுதியில் கண்ணிவெடிகளை நீக் குவதற்காக, இறங்கிய காவல்துறையினர் பலர் தங்களது உயிரை இழந்தி ருக்கிறார்கள். அவர்களில் பலர் தங்களது கால்களை இழந்திருக்கிறார்கள். இதுபற்றி மனித உரிமை அமைப்புகள் பேசு வதில்லை என்பது அரசுதரப்பு குற்றச்
சாட்டு. சாலைகளிலும், விவசாய நிலங்களிலும், காடுகளிலும், பொது இடங் களிலும் இதுபோன்ற கண்ணிவெடிகளை மாவோயிஸ்ட்கள் புதைத் திருக்கிறார்கள்.
அங்கே ஆதிவாசி பகுதி களில், ஒரு உள்நாட்டுப் போருக்கான சூழல் நில விக்கொண்டிருக்கிறது. அத னால் தான் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்தும் மாவோயிஸ்ட்கள்,
சாதாரணமாக தாங்கள் அறிவித்துள்ள விடுதலைப் பகுதிகளை, நெருங்கும் இடங்களிலெல்லாம் கண்ணிவெடிகளை புதைத் திருக்கிறார்கள். அதே சம யம் காவல்துறையின் சித் ரவதைகளை எதிர்த்து, 2005ம் ஆண்டு 25 வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் சில தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டலுடன் பதிவு செய்யப்பட்டுள்ள. மனித உரிமைகள் என்ற அடிப்படையான அளவு கோல் மூலம் அந்த வட் டாரம் பார்க்கப்படுமா? 2005ம் ஆண்டு 26 மாவோயிஸ்ட்களும், 48 அரசப்படையினரும், 52 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2006ம் ஆண்டு 117 மாவோயிஸ்ட்களும், 55 அரசப்படைகளும், 189 அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2007ம் ஆண்டு 73 மாவோயிஸ்ட்களும், 182 அரசப்படைகளும், 95 அப்பாவிமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். 2008ம் ஆண்டு 66 மாவோயிஸ்டுகளும், 67 அரசப்படைகளும், 35 அப்பாவி மக்களும் பலியாகியுள்ளனர். 2009ம் ஆண்டு 137 மாவோயிஸ்ட்களும், 121 அரசப்படைகளும், 87 அப் பாவிமக்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலைமை 2010லும் தொடர வேண்டுமா என் பதே நமது கேள்வி.

Wednesday, February 17, 2010

கனடாவிலிருந்து வந்த இயற்கை விஞ்ஞானம்!

இன்று இந்தியா எங்கும் விவாதப் பொருளாகி வருவது, மரபணு மாற்று உணவு நல்லதா, கெட்டதா என்பதே. சமீபத் தில் நாடெங்கிலும் பல நகரங்களில் நடந்து முடிந்த, மலட்டு கத்தரிக் காய் பற்றிய கலந்துரையா டல்கள், சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை, மரபணு மாற்று கத்தரிக்காய்கள் விற்ப னைக்கு அனுமதிக்கப் படுவதை, குறைந்த பட்சம் தள்ளிப் போட்டது. அதே சமயம் மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் அதே மரபணு மாற்றை, கெடுதல் அல்ல என்பதாகக் கூறிய கூற் றும் வெளிவந்தது. இதே ஊடகங்கள் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அர சாங்கத்திற்குள், இரண்டு கருத்துக்கள் என்பதாக எழுதியிருந்தன. இன்ன மும் தீர்க்கப்படாத பிரச்சினையாக, இந்தியா வில் இந்த மரபணு மாற்று விதைகளும், உணவு களும் இருக்கின்றன. அதனால்தான் தங்கள் தலைமேலே, கூர்வாள் தொங்கிக் கொண்டிருக் கிறது என்று இயற்கை விவசாயிகளும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், அறிவியலா ளர்களும் கூறுகிறார்கள். கேரள மாநிலம், கர்நாடக மாநிலம் ஆகியவற்றின் அரசாங்கங் கள் கறாராக மரபணு மாற்று விதைகளை மறுப்பது போல செய்யா விட்டாலும், தமிழக அரசு தற்போதைக்கு அனுமதிக்க முடியாது என்றாவது கூறியுள்ளதே என்ற ஆறுதல் ஒருபுறம். அதே சமயம் விவசாயப் பல்கலைக்கழகங்கள், குறிப்பாக தமிழ்நாட்டி லும், பஞ்சாபிலும் இந்த மரபணு மாற்று விதை களை சந்தையில் இறக்கி விடும் பன்னாட்டு நிறுவனங் களுக்கு, பயன்பாடாக
சென்று கொண்டிருப்பதை கவனிக்காமல் இருக்க முடியாது.
பஞ்சாப் மாநிலம் இந்தியாவில் விவசாய உற்பத்திக்கு பெயர் பெற்றது என்பதாக கூறு கிறார்கள். அந்த பஞ்சாபி லிருந்து பிறந்து 1960ம் ஆண்டு முதல் கனடா நாட்டில் வாழ்ந்து வரும், இயற்கை விஞ்ஞானி டாக்டர் சிவ்சோப்ரா, இந்தியா வந்துள்ளார். இவர் ஹைதராபாத், சென்னை, கொச்சி, மைசூர், பெங்களூரு, புவனேஸ்வரம் ஆகிய நகரங்களுக்கு சென்று தனது கருத்துக்களை தெளித்துக் கொண்டிருக் கிறார். மரபணு மாற்று உணவுகளின் அரசியலும், அதனால் ஏற்படும் சுகாதார தாக்கங்களும் என்பதுதான் இவரது விளக்கத்தின் தலைப்பு. அறிவியல், சமூகம், மதம் பற்றி பல் வேறு வெளியீடுகளை வெளியிட்டுள்ள இவர், கால்நடை மருத்துவம் மற்றும் மைக்ரோ பயாலஜி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
கனடா நாட்டில் எல்லாமே முன்னேறி இருக்கும் என்ற நம் பிக்கை நம்மவர்களுக்கு உண்டு. ஆனால் இந்திய வம்சாவழியான இந்த விஞ்ஞானியின் அனு பவம், மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் விவசாய உற்பத்தி பெருகியதற்கு காரணம், பசுமைப் புரட்சிதான் என்று சில அரசியல்வாதிகளும், சில அதிகாரிகளும் இன்னமும் கீறல் விழுந்த இசைத் தட்டு போல கூறிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் ஆங்கிலேயனுடைய ஆட்சி இருக்கும் போது, இந்தியாவும், பாகிஸ்தா னும் ஒன்றாக ஆளப்பட்ட போது, பஞ்சாப் மாநிலம் விவசாய விளைச்சலில் இயற்கையாகவே, சிறந்து விளங்கியது. அதில் முக்கிய விளைச்சல் பகுதிகள் பாகிஸ்தானுடன் சென்று விட்டன. ஆனாலும் அந்தக் காலக்கட்டத்தில், வெள்ளைக்காரர்கள் நிரந்தரமாக தாங்கள் இந்தி யாவை ஆளப்போகி றோம் என்ற எண்ணத்தில், பஞ்சாப் விளைச்சலை அதிகப்படுத்தினார்கள் என் கிறார் சோப்ரா. அதற்காக நிலமற்ற உழவர்களுக்கு, நிர்ப்பந்தமாக நிலச் சீர்திருத்தம் செய்து, நிலங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள். இலவச மின்சாரம் அனைத்து விவசாயிகளுக்கும் அளித்தார்கள். எந்த ஒரு ஆலை உற்பத்தியும் இல்லாமல், பஞ்சாப் விவ சாயத்தை மட்டுமே சார்ந் திருந்தது. அத்தகைய காரணங்களினால் விளைந்த விளைச்சல், பஞ்சாப் உட்பட இந்தியா முழுமைக்கும் உணவு தந்தது. இப்படியாக பஞ்
சாப் பற்றி நமக்கு ஒரு புதிய வரலாற்றுச் செய்தியை, சோப்ரா அளிக்கிறார்.
ஆங்கிலேயே ஆட்சி யாளர்களது அன்றைய
சதித்திட்டத்தையும்
சோப்ரா அம்பலப்படுத் தினார். இந்தியாவை வணி கத்தின் மூலம் அதிகாரம் செலுத்திய, கிழக்கிந்திய கம்பெனி கடுமையாக ஊழல் செய்யத் தொடங் கினார்கள். அதைக் கட்டுப்படுத்துவதற்காக ஆங்கிலேயே அரசு மெக்காலே பிரபுவை, இந்தியாவிற்கு ஆளுநராக இறக்கிவிட்டது. 1833ம் ஆண்டு மெக்காலே இங்கு வந்தார். இந்தியா முழுவதும் சுற்றிப்பார்த் தார். பிச்சைக்காரர்களோ, திருடர்களோ இந்த பூமி யில் இல்லை என்று அதிர்ச்சியுடன் எழுதினார். இந்தியாவிலிருக்கும் வளத்தையும், மனத்தி
டத்தையும், மரபையும், பண்பாட்டையும் உடைத்து இந்தியர்களின் முதுகெலும்பை முறிக்கவேண்டும் என்று ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எழுதினார். அதற்காக அடிமைக்கல்வியை அறிமுகப்படுத்தினார். 1858ல் மெக்காலே மறைந்தார். 1859ல் ராணி விக்டோரியாவின் தலைமையில் இந்தியா முழுமையான காலனி நாடாக ஆனது. இப்படி ஒரு அரசியல் வரலாற்றை தொகுத்து, அதன் மூலம் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பாக இருந்த, சுயசார்பு பொருளா தாரத்தை எப்படி உடைத் தார்கள் என்று சோப்ரா விளக்குகிறார்.
பருத்தியை விளைச் சல் செய்யுங்கள். ஆனால் இங்கிலாந்தில் கொண்டு போய் நெய்து கொள்கிறோம். இப்படிப் பட்ட கொள்கையுடன் ஆங்கிலேயே ஏகாதிபத் யம், இந்திய விவசாயத்தை தனக்கான உற்பத்திப் பின்னிலமாக ஆக்கியது என்பதே சோப்ரா கொடுக்கின்ற வரைபடம். பருத்தி இந்தியாவின் பாரம்பரிய, சுயமான உற்பத்தி. இந்தியாவை காலனியாக்கிய ஆங்கிலே யர்களுக்கு பருத்தி உற்பத்தி பற்றியும், பருத்தி உடைகள் பற்றியும் தெரியாது. மேற்கிந்திய, கிழக்கிந்திய மொரீசியஸ் நாடுகளுக்கு, இந்திய விவசாயிகளை கூட்டிச் சென்று, பருத்தி உற்பத்தியை அவர்கள் பரவலாக்கினர். இப்படி வரலாற்று நிகழ்வுகளை தொகுக்கின்ற அந்த இயற்கை விஞ்ஞானி, பசுமைப் புரட்சி பற்றி யும், மரபணுக்களை மாற்றி புதிய செயற்கை விதைகளை உருவாக்கும், பன்னாட்டு மூலதன நிறுவனங்கள் பற்றியும், அதன் தாக்கம் பற்றியும் விளக்குகிறார்.
வீரிய விதைகள் அறிமுகப்படுத்தப்படும் போதே, அவற்றினால் ஏற்படும் பூச்சிகளை அழிக்க, அவர்களே தயாரித்து பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனைக்கு தயாரானதை சுட்டிக் காட்டுகிறார். உயிரியல் தொழில் நுட்பம், இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தில், இயற்கை யாகவே 6,000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந் தது என்று கூறுகிறார். இப்போது வந்திருக்கும் மரபணு மாற்று விதைகள் உருவாக்கப்படும் செயற்கை முறைகளை விளக்குகிறார். பாக்டீரியா எனப்படும் குறிப்பிட்ட கிருமியை, குறிப்பிட்ட உயிரினத்திலிருந்து எடுத்து, பால் உற்பத்தியை அதிகப்படுத்த மாட்டுக்கு கொடுப்பதோ, கத்தரிக்காய் உற்பத்தியை அதிகப்படுத்தவோ, பருத்தி உற்பத்தியை அதிகப் படுத்தவோ, அந்தந்த பொருள்களுக் குள் ஊசி மூலம் ஏற்று வதோ, மரபணு மாற்று என்று கூறுகிறார்கள்.
மரபணு மாற்று கத்த ரிக் காய்கள் விளையும் போது, பூச்சிக் கொல்லி மருந்து களுக்கு வேலையே இல்லை என்பது சிலரது வாதம். தானாகவே அந்த மரபணு மாற்று ஊக்கி, பூச்சிகளைக் கொன்று விடுகிறது என்பது அவர்களது விளக்கம். உள்ளபடியே தன்மீது அமரும் பூச்சிகள் மீது, ஒரு பாம்பு தன்னை பாதுகாத்துக் கொள்ள, எப்படி நச்சை கக்குகிறதோ, அப்படி நச்சைக் கக்கி இந்த ஊக்கிகள் (ஹார் மோன்கள்) அனைத்துப் பூச்சிகளையும் கொன்று விடுகின்றன என்பதே
சோப்ரா கொடுத்த விளக்கம். அதனால் பயிருக்கு பயனுள்ள பூச்சிகளும் கூட அழிக்கப்படும் என்பதே விளைவு. ஆகவே இந்த மரபணு மாற்று உணவுகள், எந்த விதத்திலும் இயற்கையான ஆரோக்கிய தன்மை கொண்டவை அல்ல என்பது தெளிவாகிறது.
கனடா நாட்டு நாடாளு மன்றம், மான்சான்டோ என்ற மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்திற்கு, ஆதரவாக நிலை எடுத் தது. பால் உற்பத்தியை அதிகப்படுத்த, மாடுகளுக்கு மரபணு மாற்று ஊக்கிகளை உள்ளே செலுத்தும் முறையை, கனடா நாட்டு அரசாங்க அதிகாரியாக இருந்த
சோப்ரா எதிர்த்திருக்கிறார். பொவைன் வளர்ச்சி ஊக்கி என்று அழைக்கப்படும் மரபணுவை, மாட்டுக்கு செலுத்துவது ஆபத்தானது என்று கனடா நாடாளுமன்றத்தில் வாய்ப்பு கிடைத்தபோது, சோப்ரா ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளார். அதையொட்டி கனடா நாடு தனது அனுமதியை நிறுத்தி வைத்தது. ஆனால் அமெரிக்கா மட்டும் தனது அனுமதியைத் தொடர்ந்தது. இத்தகைய அம்பலப்படுத்தலால்
சோப்ரா அரசு பணியை இழந்தார். தனது பணியை விட, மக்களது ஆரோக்கியமும், இயற் கையான உற்பத்தியும் தான் முக்கியம் என்று உணர்ந்த சோப்ராக்கள், இளைய தலைமுறையில் உருவா கமாட்டார்களா என்று நாம் ஏங்க வேண்டி யுள்ளது.

Tuesday, February 16, 2010

60 ஆண்டுகளாக பற்றி எரியும் நாகர்கள் பிரச்சினை

அனைத்து நாட்டு நாகர் ஆதரவு மையம் என்ற அமைப்பு, நெதர்லாந்து நாட்டில் உள்ள ஆம்ஸ்டர் டாங் நகரில் இருந்து ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் இந்திய அரசு தங்கள் இனமக்கள் மீது மோதல் போக்கை கையாளுவதாக குற்றம் சாட்டியிருந்தனர். அமைதிக்கான பேச்சு வார்த்தைகள், நாகர் புரட்சியாளர்களுக்கும், இந்திய அரசுக்கும் மத்தி யில் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தாலும், அது இழுத்துக் கொண்டே இருக்கிறது. நிபந்தனை யற்ற பேச்சு வார்த்தை என்பதாகத்தான், இரு சாராருக்கும் இடையில் பேச்சுவார்த்தை தொடங் கியது. இந்திய அரசுக் கும், நாகர்களுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தமானது, இரண்டு நாடுகளுக்கு இடையிலானது என்பதாக அந்த அனைத்து நாட்டு அமைப்பு நினைவு படுத்துகிறது. அதாவது நாகர்கள் தங்களை இந்தியாவின் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண் டதே இல்லை. இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை தொடங்கும் போதும், அத்தகைய ஒரு புரிதலை அவர்கள் கொண்டிருக்க வில்லை. தங்களை இந் தியர்கள் என்பதாக, எந்த நாகரும் இதுவரை எண்ணவும் இல்லை. இதை இந்தியாவெங்கும் பல்வேறு வேலை களுக்காக, நடமாடும் நாகர்கள் அனைவருமே தங்களது சிந்தனையாகக் கொண்டுள்ளனர்.
தென்னிந்தியர்கள் வட இந்தியா செல்லும் போதோ, வேறு இடங்களிலோ, நாகர்களை சந்தித்தால், சந்தித்து அவர்களது தேசிய இனப்பிரச்சினையின் மீது அக்கறையுடன் விவாதித்தால், நீங்கள் எப்போது இந்தியாவை விட்டு வெளியே வரப் போகிறீர்கள் என்ற கேள் வியை சாதாரணமாக நாகர் கள் எழுப்புகிறார்கள். அந்த அளவுக்கு பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, இந்தியாவை அவர்கள் புரிந்து வைத்துள்ளார்கள். தங்களுடைய பிரச்சனை கள் மட்டும் அல்லாமல், இந்தியாவிலிருக்கின்ற அனைத்து தேசிய இனங் களும், சுயநிர்ணய உணர் வுள்ளவர்கள் என்பதாக நாகர்கள் எண்ணுகி றார்கள்.
பேச்சு வார்த்தையின் இந்த கட்டத்தில் இந்திய அரசு, இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் பேச்சு வார்த்தை நடத்தப்படவேண்டும் என்று விரும்புகிறது. ஆனால் நாகர்களோ, நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைகள் நடத்தப் படவேண்டும் என்று, முன்பு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள விவ ரத்தை வெளியே கூறி, தங்களது நிலைப்பாட்டை உறுதி செய்கிறார்கள். பேச்சுவார்த்தையின் மூலம் நல்லதொரு தீர்வை எட்டலாம் என நாகர்கள் முயற்சிப்பதாகவும், ஏற் கனவே ஒப்புக் கொண்ட விதிகளை மீறுவதன் மூலம், இந்திய அரசு அத்தகைய பேச்சுவார்த் தையை உடைத்து விட முயற்சிக்கிறது என்றும், நாகர்கள் குற்றம் சாட்டுகி றார்கள். பேச்சு வார்த்தை உடைந்தால், அதற்காக நாகர்கள் மீது குற்றம் கூறக் கூடாது என்றும் அவர் கள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.
இப்போது இருந்து வரும் போர் நிறுத்தம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கிறது. இதுவரை நாகர் தலைவர்களுக்கும், இந்திய அரசுக்கும் மத்தியில் 60வது முறை பேச்சு வார்த்தை நடந்துள்ளது. சென்ற ஆண்டு நாகாலாந்து சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்திய நாட்டின் வரலாற்றில் இல்லாத முறையில், ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு என்ப தாக அந்த தீர்மானம் அழைக்கப்பட்டது. சட்ட மன்றத்தில் இருக்கின்ற, அனைத்துக் கட்சி உறுப்பி னர்களும் ஒரே குரலில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். அதில் நாகா அரசியல் பிரச்சினையின் மீது ஆய்வு செய்ய, ஒரு கூட்டு நாடாளுமன்ற குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதாக எழுதப்பட்டது. பல பத்தாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக் கின்ற இந்தியநாகா அரசியல் பிரச்சினைக்கு, ஒரு நிரந்தர தீர்வை எட்டுவதற்காக தங்களது புதிய நேர்மையான முயற்சியை எடுப்பதாக, இந்திய பிரதமரையும், உள்துறை அமைச்சரையும், அந்த தீர்மானம் பாராட்டியுள் ளது.
மேற்படி செய்தியை மாநிலங்களவை உறுப் பினர் கேகிஹோ சிமோமி, நாடாளுமன்றத்தில், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியில் தெரிவித்தார். அப்போது உள்துறை அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தை என்பது தேக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஆகவே பிரதமர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் தலைமறைவு நாகர் குழுக்களான, ஐசக்முய்வா தலைமையிலான நாகா லாந்து தேசிய சோசலிச கவுன்சிலும், கப்லாங் தலை மையிலான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சிலும் மற்றும் நாகா தேசிய கவுன்சிலும் எந்த ஒரு நாகர்களுக்கான சிறந்த தீர்வையும், பல் வேறு குழுக்களும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் அந்த எம்.பி. கூறினார்.
1950ம் ஆண்டு காலகட்டங்களிலேயே, நாகா எழுச்சி, பிசோ தலைமையில் உருவான நாகா தேசிய கவுன்சில் மூலமாகக் கிளம்பியது. அது சுதந்திரமான, தனி இறை யாண்மை கொண்ட ஒரு நாகா தேசத்தை அடைவதுதான் தங்கள் லட்சியம் என்பதை முன்வைத்தது. அப்போது அஸ்ஸாம் மாநிலத்திற்கு வட்டார நிர்வாகத்தின் கீழ், நாகா மலைகளின் மாவட்டம் என்பது இருந்தது. அத னால் அப்போது கிளம்பிய நாகா எழுச்சியை, உள்ளே நுழைந்த இந்திய ராணு வம் அடக்கி விட்டது. அதனாலேயே நாகா தேசிய கவுன்சிலின் புரட்சிகர உறுப்பினர்கள், தலைமறைவாகச் செல்ல நிர்பந்திக்கப்பட்டனர். அவர்களுடைய தலைவர் பிசோ லண்டனுக்கு தப்பி ஓடினார். கிறித்துவ பாதிரியாரான மைக்கேல் ஸ்காட் பொறுப்பில் பிசோ, லண்டனிலேயே தங்கியிருந்து ஆங்கிலேய நாட்டின் குடியுரிமைப் பெற்று, தொடர்ந்து தன் மக்களுக்கான பிரதிநிதித் துவத்தை, மறையும் வரை தொடர்ந்தார். மிதவாத நாகா தலைவர் சிலுஆவோ தலைமையில் வந்தவர்கள், இந்திய அரசுடன் பேசி தீர்க்க முதன்மை கொடுத்தார்கள். அதனால் 1963ம் ஆண்டு ஜனவரி முதல் நாளே, தனி நாகாலாந்து மாநிலம் உருவானது. அதன் முதல் முதலமைச்சராக சிலுஆவோ பொறுப் பேற்றார். ஆனாலும் நாகா தேசிய கவுன்சில் பெயரில் சில தலைவர்கள் ஆயுதப் போராட்ட நடவடிக் கையை தொடர்ந்தார்கள். அன்றைய கிழக்கு பாகிஸ் தானுக்கும், சீனாவிற்கும் சென்று, கொரில்லா போராட்ட பயிற்சிகள் எடுத்து, ஆயுதங்களையும், தோட்டாக்களையும் பெற்று வந்து தாக்கு தல்கள் நடத்தினார்கள். 1976ம் ஆண்டு இந்திய அரசுடன், நாகர்கள் போர் நிறுத்தம் செய்து வந்தார்கள். அப்போது அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் திரி புராவுக்கு ஆளுநராக இருந்த எல்.பி.சிங் முயற் சியில், சில்லாங் சமாதான ஒப்பந்தம் ஒன்று கையெ ழுத்தானது. அந்த ஒப்பந்தத்தை நிராகரித்த
ஐசக் ஸ்வு மற்றும் துயிங்கலன் முய்வா ஆகி யோர் பிசோ தலைமை யிலான நாகா தேசிய கவுன்சிலில் இருந்து வெளியே வந்து புதிய நாகா புரட்சிகர குழுவை உருவாக்கினார்கள். 1980ம் ஆண்டு அது நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்று பெயர் பெற்றது. ஆயுதப் போராட் டத்தை அது தொடர்ந்து நடத்தியது. அந்த அமைப்பு இரண்டாக உடைந்து, அதில் ஒன்றை கப்லாங் தலைமையேற்றார்.
ஐசக்கும், முய்வாவும் 1995ம் ஆண்டு பாரீஸ் நகரிலும், பிறகு நியூயார்க் நகரிலும், இந்திய பிரதமர் பி.வி.நரசிம்மராவுடன் பேச்சுவார்தையில் ஈடு பட்டனர். 1997ம் ஆண்டு பிப்ரவரியில் சூரிச் நகரில் பிரதமர் தேவகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 2002ம் ஆண்டில் டோக்கியோவில் பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இவ்வாறு 9 ஆண்டுகளாக ஒரு தீர்வு வேண்டி, பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 50 ஆண்டுகளுக்கு மேலாக நாகர்கள் எழுப்பி வரும், சுதந்திரமான தனி இறையாண்மை கொண்ட அரசு என்ற கோரிக்கையை கைவிடுவதோ, அல்லது இந்தியாவிற்கு உட்பட்டு, பெரிய அளவில் சுயாட்சி கொண்ட நாகா மாநிலத்தை உருவாக்குவது என்பதோ, பேச்சு வார்த்தை நிறை வில் காணப்படும். மணிப்பூர், அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களின் பலப் பகுதிகளை, நாகாலாந் துடன் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் எழலாம். 50க்கும் மேற்பட்ட பல்வேறு பாரம்பரிய ஆதி வாசி இனங்கள் அங்கே வாழ்கின்றனர். அங்கு வாழும் மைத்தி இன மக்கள் இந்துக்களாகவும், அனைத்து மலைவாழ் பழங்குடியினர் கிறித்துவர் களாகவும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் நிலப்பிரச்சினையில் மோதல்களையும் கொண் டிருக்கிறார்கள். அந்த இடைவெளியில்தான் இதுவரை இந்திய அரசு தனது அதிகாரத்தை நிலைக்க வைத்துக் கொண் டிருக்கிறது.
இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு வலுவாகவும், மக்கள் செல்வாக்கு மிக்கவர் களாகவும், தங்களுக்கென ஒரு தலைமறைவு அர
சாங்கத்தை நடத்திக் கொண் டிருப்பவர்களாகவும், ஆயுதம் தாங்கிய படை யணியையும், போது மான தளவாடங்களையும் வைத்திருப்பவர் களாகவும், 60 ஆண்டு போராட்ட வரலாற்று அனுபவத்தை பெற்றவர்களாகவும் இருக்கின்ற நாகா புரட்சியாளர்களுடன், இந்திய அரசு ஒரு மரியாதைக்குரிய தீர்வை எட்டுமா என்பதே எதிர் காலத்தை நோக்கி நிற்கும் கேள்வி.

Monday, February 15, 2010

எண்ணெய்க்கான போர், இன அழிப்பானதா?

இலங்கைத் தீவில் நடந்து முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள 4வது ஈழப்போர், சென்ற ஆண்டு மே 3ம் வாரம் முடிவுற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. அந்தப் போரில் 40,000 தமிழ் மக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள் என்று இப்போது ஐ.நா.சபையே உறுதி செய்துள்ளது. போரை நடத்தியவர்கள் சிங்கள பேரினவாத அரசு சக்திகள் மட்டுமல்லாமல், அவர்களுக்கு உதவி செய்த 7 வெளிநாடுகளின் அரசுகளும் என்பதாகவும், பல நேரங்களில் பல சக்திகள் கூறியுள்ளன. இந்தியா, பாகிஸ் தான், சீனா ஆகிய நாட்டின் அரசுகள் தங்களுக்கு போரில் வெல்ல உதவி செய்ததாக, இலங்கை ஆட்சியாளர்கள் பகிரங்கமாகவே நாடாளுமன்றத்தில் கூறி யுள்ளனர். அதில் குறிப்பாக இந்தியாவும், சீனாவும் எதற்காக தமிழருக்கெதிரான இனவாதப் போரில், தங்களை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்ற கேள்வி, பதில் கிடைக்காமலேயே நின்று கொண்டிருக்கிறது.
மேற்கண்ட அண்டை நாடுகளின் அரசுகள், ஆயுதங்களை அளிப்பதும், ராணுவ ஆலோசனைகள் கொடுப்பதும், நேரடியாக களத்தில் இறங்குவதும், உளவுப் பணி மூலம் உதவுவதும் என அந்த இனவாதப் போரில் அங்கம் வகித் தார்கள். அதில் பாகிஸ்தான் தனது விமானிகளை அனுப்பி, அவர்கள் மூலம் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் விமானங்களை, போர்ப் பகுதியில் இயக்கினர். சீன அரசு அதிகமான அளவில் ஆயுதங்களை, இலங்கை அரசுக்கு போர் நேரத்தில் கொடுத்துள்ளது. இந்திய அரசு தனது உளவு செயற்கைக் கோள்கள் மூலமும், தான் அனுப்பிய ரேடார்கள் மூலமும், போராளிகள் பற்றிய நடமாட்டச் செய்திகளை, போர் நடத்திய பேரினவாத சக்திகளுக்கு கொடுத்து உதவியுள்ளது. இந்த அளவுக்கு நியாயமற்ற போர் என்ற உண்மை தெரிந்திருந்தும், எதற்காக பேரார்வத்துடன் அண்டை நாட்டு அர சாங்கங்கள், ஒரு இனவாதப் போரில் ஈடுபட்டார்கள்? இன அழிப்பு என்ற அளவுக்கு அந்தப் போர் இட்டுச் சென் றாலும், இந்த அண்டை நாட்டு அரசர் கள் ஏன் பின்வாங்கவில்லை? அந்த அளவுக்கு இந்த அண்டை நாட்டு அர சாங்கங்களுக்கு ஈழப்போரிலே என்ன ஈடுபாடு?
இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரே காரணத்திற்காக, இந்திய அரசு இந்த இன அழிப்புப் போரில் ஈடுபட்டது என்று சொல்வாருமுண்டு. ஆனால் வேறுசில கேள்விகள் எழுகின்றன. ராஜிவ் காந்தி பொறுப்பிலிருந்த போது, கொழும்பில் அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில், ஒரு சிங்கள சிப்பாய் அவரை துப்பாக்கியின் பின்புறத்தால் தாக்க முயற்சித்த சதி, அனைவரும் அறிந்ததே. அந்த சிங்கள ராணுவ வீரன் மீது, இந்திய அரசோ அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைமையோ, அல்லது சோனியா காந்தி குடும்பமோ எந்தவொரு பழிவாங்கும் நடவடிக்கையையும் எடுக்கவில்லையே ஏன்? அதேபோல ஒரு நிகழ்ச்சிக்காக, ஒரு நாட்டின் அரசு முழுவதும் ஈடுபட்டு, ஒரு இன அழிப்பை நடத்துவதற்கு துணியுமா? அப்படியானால் வேறு ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டுமே? அது என்ன?
ஒவ்வொரு நாட்டின் அரசும், இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலில், தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை ஏதாவது ஒரு வகையில், பெருக்கிக் கொள்ள விரும்புகின்றனர். இதில் நல்ல வழி அல்லது கெட்ட வழி என்ற வேறுபாட்டிற்கே இடமில்லாமல், எல்லா அரசுகளும் நடந்து கொள்கின்றன. ஒவ்வொரு நாட்டு அரசும் தங்கள் நாட்டிற்குள் மக்கள் மத்தியில் வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும், விலைவாசி உயர்வையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காக வெளி யிலிருந்து, ஏதாவது வகையில் நிதி திரட்ட வேண்டியிருக்கிறது. வளராத நாடுகள் அதை அன்னிய நாடுகளிலிருந்து கடனாகப் பெறுகின்றனர். வளர்ந்த நாடுகள் அடுத்த கட்டமாக, தங்களது சுரண்டலை நாடு தாண்டி நடத்துவதற்கு, தருணம் பார்த்து அலைகின்றனர். இதில் 2வது வகை சிந்தனை இந்திய அரசையும், சீன அரசையும் பீடித்துள் ளது. மேற்கத்திய நாடுகள் தங்கள் நாட்டு எண்ணைய் வளங்களை, கைப்பற்ற அனுமதிக்கின்ற இந்த நாடுகள், தங்கள் பங்குக்கு தங்களை விட சிறிய நாடுகளிடம் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு முயற்சி இலங்கைத் தீவில் உள்ள எண்ணெய் வளங்களின் மீது பாய்ச்சப்பட்டது.
புலிகள் இயக்கத்தை முற்றாக அழிக்க வேண்டும் என்ற எண்ணமோ, ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்ய வேண்டும் என்ற சிந்தனையோ இந்திய அரசுக்கு மேலோங்கியிருக்க நியாயமில்லை. மாறாக இலங்கைத் தீவில் குறிப்பாக தமிழர் வாழும் பகுதிகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கக் கூடிய எண்ணெய் வளங்களின் மீது இந்திய அரசுக்கு ஒரு கண் உண்டு.
இலங்கையில் தமிழர்களின் தாயகத்தில் உள்ள வடக்கு மாகாணமான மன்னாரிலும், கிழக்கு மாகாணமான திரிகோணமலையிலும், கடற்கரை ஓரத்தில் எண்ணெய் வளத்திற்கான வாய்ப்புகளை இந்த அரசுகள் முகர்ந்து பார்த்து விட்டன. திரிகோணமலை துறைமுகப் பகுதியில், சீனகுடா என்ற ஒரு இடம் இருக்கிறது. அங்கே எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை தேக்கி வைக்கலாம். இந்தியாவின் இந்திய ஆயில் கம்பெனி நிறுவனம், இந்த இடத்தில் தனது தலைமையகத்தை வைத்துள்ளது. அதில் தேக்கி வைக்கும் பெட்ரோலையும், டீசலையும், 200க்கு மேற்பட்ட பங்குகள் மூலம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வியாபாரம் செய்து வருகிறது. இதேபோல மன்னார் மாவட்டத்தில் எண்ணெய் வளம் அதிகம் கிடைக்கிறது. அங்கு கடற்கரையோரம் கடலுக்கு உள்ளே, 100 ஏக்கர் பகுதியை, இந்திய அரசு எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவதற்காக வாங்கி வைத்துள்ளது. ஓ.என்.ஜி.சி. என்ற எண்ணெய், இயற்கை வாயு கமிஷன், இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள இயற்கையான துறைமுகம், இந்தப் பிராந்தியத்தின் மிக முக்கியமான ஒன்று. உயரமான மலைப்பகுதிகளை அருகிலேயே கொண்ட இந்த உட் துறைமுகம், போர் காலங்களிலும் கப்பல்களை உள்ளே ஒளித்து வைக்க வாய்ப்பான ஓர் இடம். அதனருகே உள்ள உவர் மலையில், இலங்கை ராணுவத் தளம் உள்ளது. அதிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு, கப்பல் படை அனுப்பப்படும். யாழ்ப்பாண கப்பல் சேவையும், ராணுவத்திற்கு வேண்டிய சேவைகளும், இந்த தளத்திலிருந்து கொண்டு செல்லப்படும். ஆகவே உட்துறைமுக வீதியில், மீன்வளம் அதிகமாக கிடைத் தாலும், அதி உயர் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில், மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. துறைமுகம் அருகே யுள்ள மாவாலை என்ற இடத்தில் ஒரு சிமெண்ட் ஆலை இருக்கிறது. அதில் இப்போது சிங்கள குடியேற்றம் நடந்து வருகிறது. கடற்கரையோரத்தில் அதை அடுத்துள்ள புல்மோட்டை என்ற இடத்தில் இலுமினேட் என்ற உயர் ரக தாதுப்பொருள் மண்ணில் கிடைக்கிறது. அங்கே வெளிநாட்டுக் கப்பல்களை மண் எடுக்க அனுமதிக்கும் திட்டத்தையும் இலங்கை அரசு வைத்துள்ளது.
2003ம் ஆண்டு மே 12ம் நாள் வெளியான செய்திப்படி, இந்தியாவின் ஐ.ஓ.சி., சிலோன் பெட்ரோலியம் கார்ப் ரேஷனுக்கு சொந்தமான, திரிகோணமலை குளப்பண்ணையை குத்தகையாகப் பெறுவதற்கு ஒப்பந்தம் போட்டது. அதற்காக ஐ.ஓ.சி. ரூ.200 கோடியை கொடுத்தது. 2002 செப்டம்பர் முதல், 2003 ஆகஸ்ட் வரை 0.48 மில்லியன் டன் விநியோகத்திற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்காக இலங்கை ஐ.ஓ.சி.க்கு 10 ஆண்டுகளுக்கு வணிகத்திற்கான வரிவிலக்கு அளிக்கப்பட்டது. அதன்பிறகு நிலவும் 35% வரியை குறைத்து 15% என்று பெறுவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்கான கருவிகள் கொணர, சுங்கவரி 5 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்யப்பட்டது. மேற்கண்ட ஒப்பந்தத்தை வெற்றிகரமாக்க இந்திய அரசு, அந்த வட்டாரத்தில் அல்லது அருகே உள்ள பகுதிகளில், எந்தவொரு ஆயுதம் தாங்கிய சட்டவிரோத குழுக்களுடைய நடமாட்டமும் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தேவை எழுந்தது.
அதேசமயம் சீன அரசு மன்னார் பகுதியில் எண்ணெய் மற்றும் வாயு கிணறுகளை தோண்ட திட்டமிட்டது. இந்தியாவின் நடமாட்டத்தை சமன் படுத்த, மகிந்தா அரசு சீனாவிற்கு அந்த ஏற்பாட்டை செய்து கொடுத்தது. அந்த பகுதியை 8 பிரிவுகளாகப் பிரித்து, இந்தியாவிற்கு ஒன்றும், சீனாவிற்கு ஒன்றும், மீதி 6 பிரிவுகளை அனைத்து நாடுகளுக்கும் கொடுப்பது என 2007ம் ஆண்டு மார்ச் 6ம் நாள் இலங்கை அரசு அறிவித்தது. 2 மாதங்களுக்குள் சீனா புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன், அந்த பகுதியில் இறங்கியது. இவ்வாறாக இந்த இரு அரசுகளும் தங்களுக்கான எண்ணெய் வயல்களை கைப்பற்ற, மகிந்தாவின் இனவாதப் போருக்கு உதவ வேண்டிய கட்டாயம் எழுந்தது. தந்திரமாக இந்த இரு அரசுகளுக்கும் எண்ணெய் வளத்தை தாரை வார்த்து, அவர்களை தான் நடத்திய இனவாதப் போரில் இலங்கை அரசு ஈடுபடுத்தியது. அதன் மூலம் தனது தமிழின அழிப்புப் போரை தீவிரமாக நடத்தியது. அதேசமயம் 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், ரஷ்யாவையும் இலங்கை அரசு, எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க அழைத்தது. அதனால் தான் எண்ணெய்க்கான இந்தப் போர், ஒரு இன அழிப்பு வேலையை செய்து, சிங்களப் பேரினவாதத்திற்கு உதவி விட்டது என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இந்தியப் பேரரசு, தனது மேலாதிக்க மனோபாவத்துடனும், விரிவாக்க செயல் திட்டத்துடனும், தெற்காசியா எங்கும் அதிகாரம் செய்வதற்கான தன்மைகொண்டது என்பதனால், 2000தின் பத்தாண்டுகளில் எண்ணெய் வளத்தை சுரண்டவும், இந்த இனஅழிப்பு போர் அதற்கு உதவிகரமாக இருந்து விட்டது. என்பதையும் நாம் மறக்க முடியாது. தன்நாட்டிற்கு உள்ளேயே, தேசிய இனங்களின் உரிமையை அடக்கும் ஒரு அரசிடம், நாம் வேறென்ன எதிர்பார்க்கமுடியும்.

Sunday, February 14, 2010

காதலர் தினம் என்றால் என்ன?

இன்று உலகம் எங்கிலும் காதலர் தினம் என்பதாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் எங்கிலும் இந்த நாளை, வாலண் டினா தினம் என்பதாக அழைப்பார்கள். வாலண்டினா என்பது ஒரு கிறித்துவ ஆண் பாதிரியாரின் பெயர். இந்த நாளின் சாராம்சம் காதலைப் போற்றுவது என்பதாகும். அதை சுருக்கமாக நம்மவர்கள் காதலர் தினம் என அழைத்துக் கொள்கிறார்கள். அதைக் கேள்விப்பட்ட இளைஞர்கள், தாங்கள் சுதந்திரமாக எதையும் செய்வதற்கு அனுமதிக்கும் தினம் என்று எடுத்துக் கொள்கிறார்கள். அதனாலேயே நமது நாட்டின் பண்பாடு சீரழிந்து விடுகிறது என்ற கண்டுபிடிப்பின் அடிப்படையில், சிலர் இந்த தினத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். கையில் தாலியை வைத் துக்கொண்டு சிலர் இந்துத்துவாவாதிகள், யாராவது இளைஞர்களாக இருக்கும் ஆண்களும், பெண்களும் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தாலே, அவர்களை நிர்ப்பந்தப்படுத்தி அந்த தாலியைக் கட்டச்சொல்லலாம் என்று அலைகிறார்கள். இது தேவையில்லாத பிரச்சினையை உருவாக்கும் என்று அறிந்ததனால், காவல்துறை அதிகாரிகள் காதலர்களை நிர்ப்பந்தப்படுத்தும் வன்முறை சக்தி களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்கள். மதவாத சக்திகள் நடத்தக்கூடிய ஆர்ப்பாட் டங்களும், போராட்டங்களும், மேற்கத்திய நாட்டிலிருந்து இறக்குமதியான பண்பாடு என்று இந்த தினத்தை வர்ணிக்கிறது. மேற்கத்திய நாட்டிலிருந்து இறக்குமதியான பண்பாட்டில் ஒரு அங்கமான, ஆங்கில நாட்காட்டி கூறும் தேதியைக் குறிப்பிட்டு, தங்களது போராட்டத்தை அவர்கள் அறிவித்துக்கொள்கிறார்கள். மேற்கத்திய பண்பாட்டிலிருந்து இறக்குமதி செய்யப் பட்ட, பேண்ட், சட்டையை போட்டுக் கொண்டு, பல மதவாத சக்திகளும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட போராட் டங்களின் மூலம் அவர்கள் இந்தியாவின் நாட்டுப்பற்று உணர்வை வளர்க்க முடியும் என்றால், மகிழ்ச்சியான செய்தியாக அது இருக்கும்.
இந்து மதத்தின் கடவுளர்களாக அழைக்கப்படும் ஒவ்வொரு தெய்வமும், காதல் செய்துதான் திருமணம் செய்ததாக, நமக்கு இவர்கள் தான் புராணக்கதையை அன்று கூறினார்கள். இந்து மத கோயில் களுக்குச் சென்றால், அங்கு சிலை வடிவில் நிற்கின்ற சிற்பங்கள் எல்லாம், ஆண், பெண் என்பதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த சிற்பங்களும் காதல் செய்வதை நாம் கலை வடிவம் என ரசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். மற்றவர்கள் மீது அன்பு செலுத்துவதையும், பாசம் கொள்வதையும் காதல் என்ற பரந்த வார்த்தையில் புரிந்து கொள்ள, இவர்க ளாலும் முடியவில்லை.
தமிழ்நாட்டில் முற்போக்கான கருத்துக் களுக்கு, பகுத்தறிவு சிந்தனைகளுக்கு, பகலவனாக நிற்கின்ற தந்தை பெரியார் காதலை வரவேற்றுள்ளார். அவர் கூறும் போது, காதலை வரவேற்போம்! அந்தக் காதல், உணர்ச்சிகளால் மட்டுமே, உரு வாகிவிடாது, அறிவார்ந்த காதலாக வேண்டும்.
காதலை அவரவர் உள்ளத்திற்கே விட்டுவிடுவோம். ஆனால் வாழ்க்கைத் துணை விசயத்தில் காதல் போதாது. அறிவு, அன்பு, அனுபவம், பொருத்தம் ஆகிய பல காரியங்களே முக்கியமான தாகும். பழங்காலத்தில் காதலே போது மானதாக இருந்திருக்கலாம். அப் போதைய அறிவுக்கு அவ்வளவுதான் தேவையாக இருந்திருக்கும். இப்போதைய அறிவுத்திருமணம் வாழ்நாள் முழுதும் பொருந்தும் படியாக இருக்க வேண்டும். மனித வாழ்வையும் பிறவிக் குணங் களையும் மேன்மைப் படுத்துவதாக இருக்கவேண்டும்.
மேற்கண்ட கருத்துக்களை தந்தை பெரியார் நமக்கு தந்துள்ளார். அதே போல மக்கள் கவிஞர் இன்குலாப் கீழ்க் கண்டவாறு காதல் பற்றிக் கூறுகிறார்.
காதல் பற்றின் காரணமாக ஆக்கிரமிக்கத் தூண்டுவது அல்ல;
அன்பில் அடிப்படையில் அரவணைக்கத் தூண்டுவது.
குடும்பம் என்ற குறுகிய வட்டத்தில் தேங்குவது அல்ல;
சமுதாயம் என்ற பெருவெளியில் பிரகாசிப்பது.
உடல் உறவு அதற்கொரு தொடக்கம்;
மனிதநேயம் அதன் சிகரம்;
ஆதலினால் காதல் செய்வீர்,
உலகத்தீரே
என்பதாக கவிதை வரிகளில் இன்குலாப் கூறியுள்ளார். இவ்வாறு தமிழர்களுக்கு வழிகாட்டியான தந்தை பெரியாரும், தமிழ் இலக்கியங்களும் தமிழ் பண்பாட்டின் பாரம்பரியத்தை பதிவு செய்துள்ளார்கள். உடன்போதல் என்ற முறை தமிழர்களின் மரபு வழியாக இருந்ததைக் கூட, சில தமிழ் இலக்கியவாதிகள் எடுத்துக் காட்டுகிறார்கள். எது எப்படி இருந்தாலும், இன்று கடைபிடிக்கப்படும் காதலர் தினம் என்பது, கட்டுப்பாடற்ற பண்பாட்டை போதிப்பதற்காக அல்ல. அதே சமயம் மாற்றார் மீது அன்பு செலுத்துவதை அங்கீகரிக்கின்ற தினம். அதனால் தான் இந்த நாளினுடைய வரலாற்றை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
வாலாண்டினா தினம் என்று அழைக் கப்படுகின்ற இந்த காதலர் தினம், கி.பி. 496ம் ஆண்டு ஜெலாசியஸ் என்ற போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டது. அப்போது கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்தார்கள். காதலர்கள் தங்களுக்குள் மலர்களை அளித்துக் கொண்டும், வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொண்டும் இந்த நாளை மகிழ்ச்சியாக கடைபிடித்து வந்தார்கள். இன்றைய நவீன வாலாண்டினா நாள் என்பது இதய வடிவத்தை படமாகப் போட்டு, வாத்துக்களின் படங்க ளைக் காட்டி பரப்பப்படுகிறது. 19ம் நூற்றாண்டிற்கு பிறகு கையால் எழுதப் பட்ட வாலண்டினா வாழ்த்துக்கள், காலப்போக்கில் வாழ்த்து அட்டைகளாக மாறத் தொடங்கின. அமெரிக்காவில் இன்று அதிகமான அளவில் வாழ்த்து அட்டைகள் பரிமாறப்படுகின்றன. இந்த நாளை விடுமுறை நாளாகவும் கடைபிடிக் கிறார்கள்.
கிறித்துவ தியாகிகளை வாலண்டினா என்று அழைத்து வந்த வரலாற்றில், ரோம் நாட்டு வாலண்டினா என்பதுதான் இந்த தினத்தின் வரலாற்றைக் குறிக்கிறது. பாதிரியார் வாலண்டினா என்ற பெயர் பல்வேறு கிறித்துவ தியாகிகளின் பட்டியல்களில் தென்படுகிறது. ஆனாலும் ரோம் நகரைச் சேர்ந்த ஒரு பாதிரியார் பெயர்தான் இந்த தினத்தையொட்டி பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிளாடியஸ் கோத்திகஸ் என்ற இரண் டாவது கிளாடியஸ் மன்னர் ஆட்சியில், மேலே குறிப்பிட்ட பாதிரியாரான புனித வாலண்டினா, மரண தண்டனை விதிக்கப் படுகிறார். கிறித்துவ தம்பதியர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததை, குற்றம் என்று அன்றைய மன்னர் ஆட்சி அறிவித்து, புனித வாலண்டினா என்ற அந்த கிறித்துவ பாதிரியாரை கைது செய்தது. சிறையில் தள்ளியது. கிறித்துவர்களுக்கு உதவி செய்ததாக அந்த நேரத்தில் ரோம் நகரில் கிளாடிய சால் அவர் குற்றம் சாட்டப்பட்டார். அந்த காலத்தில் கிறித்துவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒரு குற்றம் என்பதாக கருதப்பட்டது. அந்தப் பாதிரியாரை கேடயங்களால் அடித்தும், கல்லால் எறிந்தும் கொலை செய்யமுடியவில்லை. அதன் பிறகு பிளாமினியன் வாசல் என்று சொல்லப்படும் இடத்திற்கு வெளியே, காதலை உற்சாகப்படுத்திய அந்த பாதிரியார் புனித வாலண்டினாவை, தலையை வெட்டி மரணதண்டனையை நிறைவேற்றினார்கள். அப்படி மரண தண்
டனை நிறைவேற்றப்பட்ட காலத்தைப் பற்றி பல்வேறு விதமான புள்ளிவிவரங்கள் சொல்லப்படுகின்றன. அது கி.பி. 269 என்றும், 270 என்றும் அல்லது 273 என்றும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமான ரோமன் நாட்டு தியாகிகள் பட்டியல், பிப்.14ந் தேதியை குறிப்பிடும் போது, ஒரே ஒரு புனித வாலண் டினாவைத்தான் குறிப்பிடுகிறது.
கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரபூர்வமான பட்டியலில் 7 தியாகிகள் குறிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் பல்வேறு ஆண்டுகளில் தியாகிகளானவர்கள் என்பதாக அந்த பட்டியல் கூறுகிறது. ஆனாலும் இந்த நாளில் குறிப்பிடப்படும் வாலண்டினா என்ற பாதிரியாரின் செயல்தான் முக்கிய மானது. அதாவது அவர் காதலுக்காக தன்னுயிரையே அர்ப்பணித்தார் என்பது தான், இந்த நாளின் சிறப்பு.
ஆண், பெண் மத்தியிலான அன்பு என்பதை, காதலாக மலர்வதை தடுக்கின்ற சாதி என்ற புற்று நோயும், மதம் என்னும் கொடிய நோயும் புரண்டு கொண்டிருக்கின்ற நமது மண்ணில், இந்த நாளை கொண்டாடுவதன் மூலம், அன்பை உயர்த்திப் பிடிக்கும் பண்பை வளர்த்துக் கொள்வோம்.

Saturday, February 13, 2010

ஒரு ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்டமாகிறது

அஸ்ஸாம் மாநிலத்தின் முழு விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிக் கொண்டிருக்கும் உல்ஃபா என்ற ஒன்றுபட்ட அஸ்ஸாம் விடுதலை முன்னணி, ஆயுதம் தாங்கி போராடி வருகிறது. அதே போல அஸ்ஸாம் மாநிலத்தில் தனி
சுயாட்சி மாவட்டமாக அங்கீகரிக்கப்பட்ட, கரீபி ஆங்லாங் என்ற ஆதிவாசி பகுதியை, விடுதலை செய்வதற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை, அங்குள்ள போராளிகள் அமைப்பு நடத்திக் கொண் டிருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளுடனும் மத்திய அரசு பிப்ரவரி 7ம் தேதியும், பிப்ரவரி 13ம் தேதியும் பேச்சு வார்த்தை நடத்த எடுத்த முயற்சிகள், வெற்றிகரமாக நடந்து வரு கின்றன. இரண்டு நாட்கள் முன்னால் கரீபி லாங்ரீ நோத் காசர் மலைகள் விடு தலை முன்னணி என்ற அமைப்பின் தலைவரான தீபு சங்கியா திமுங், தனது துப்பாக்கிகளை அஸ்ஸாம் முதலமைச்சர் தருண் கோகாய் முன்னிலையில், கவுகாத்தியில் திபு என்ற இடத்தில் அடையாளமாக ஒப்படைத்து, தனது போராளி அமைப்பு ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து மாறிக் கொள்வதை அறிவித்தார். இந்த அமைப்புக்கு கே.எல்.என்.எல்.எஃப். என்று பெயர். இதற்கு முன்பே கருப்பு விதவை என்ற திமா ஹலம் தாவோ காவின் அமைப்பு இதே போல ஆயுதங்களுக்கு விடைகொடுத்து, அர சாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வந்தது. மொத்தத்தில் 412 போரா ளிகள் இவ்வாறாக தங்களது ஆயுதங்களை ஒப்படைத்தனர். அதில் 27 பெண் போராளிகளும் அடக்கம். அவர்கள் மொத்தம் 158 தாக்கும் துப்பாக்கிகளை அந்த விழாவில், அரசாங்கத் திடம் ஒப்படைத்தனர். அப்போது அஸ்ஸாம் முதல்வர், ஆயுதங்கள் பிரச்சனைகளை தீர்க்காது என்றும், இலக்கை அதன் மூலம் அடைய முடியாது என்றும், வழக்கமான அரசியல்வாதிகள் போல, வியாக்யானம் செய்தார்.
கரீபி பழங்குடியினரின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை கையில் எடுத்த கே.எல்.என்.எல்.எஃப். என்ற இந்த அமைப்பு, ஒன்று பட்ட மக்கள் ஜனநாயக தோழமை என்ற அமைப் பிலிருந்து வெளியே வந்த ஒரு கரீபி பழங்குடியினர் போராளி அமைப்பு. இவர்கள் தான் அஸ்ஸாம் மாநிலத்தில், வேலைக்கு வந்திறங்கிய இந்தி பேசும் மக்களைப் படுகொலை செய்தவர்கள். ஏற்கனவே 2002ம் ஆண்டு மே மாதம் யு.பி.டி.எஸ். என்று அழைக்கப்படும் ஒன்றுபட்ட மக்கள் ஜனநாயக தோழமை அமைப்பு, மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தனது ஆயுதப் போராட்டப் பாதை யிலிருந்து விலகிக் கொண் டது. 2004ம் ஆண்டு மே மாதம் கே.எல்.என்.எல்.எஃப். உருவானது. இப்போது 6 ஆண்டுகள் கழித்து, இவர்களும் தங்களது ஆயுதங்களை கைவிட்டு, அரசியல் போராட்டத்திற்கு வந்துள் ளனர். இந்த அமைப்பினர் அவ்வப்போது கொடுத்து வந்த நகர்ந்து செல்லும் தாக்குதல்களால், அந்த வட்டாரத்தில் வெளிச் சக்திகளாகப் போய் இறங்கிய இந்திய ராணுவம், கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. அதே போல உல்ஃபா அமைப்பும் எத்தனை தாக்குதல்களை சந்தித்தாலும், அஸ்ஸாம் மக்கள் மத்தியில் வேரூன்றிய நிலை யிலேயே இருக்கிறது. இந்த இரு போராளி அமைப்புகளுடன் மத்திய அரசை பேச்சுவார்த்தை நடத்த நிர்ப்பந்தம் செய்த பணி, குறிப்பாக அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் தருண் கோகாயால் முன் னெடுக்கப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலத்தில் 1978ம் ஆண்டு வரை, வங்காளிகளின் ஆதிக்கம் இருந்து வந்தது. கல்விச் சாலைகளிலும், அரசாங்க பணிகளிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும், வங்காளிகளே அதிகமாக ஆக்கிரமிப்பு செய்திருந் தார்கள். அஸ்ஸாம் மாநிலத் தினுடைய மக்கள் தங்க ளுக்குரிய பணியிடங்கள் கிடைக்காமல், தத்தளித் தார்கள். அதுதான் 197879 ஆண்டுகளில், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தின் தலைமையில் மக்கள் நடத்திய எழுச் சிப் போராட்டமாக எழுந்தது. அதையொட்டி வங்காளிகள் விரட்டப் பட, அஸ்ஸாம் மாநிலத்த வர்கள் முழுமையாக ஈடுபடும் கட்சிகளும், அமைப்புகளும், இயக்கங் களும் வலுப்பெற்றன. அதுவே சில ஆண்டுகள் கழித்து ஏ.ஜி.பி. என்று அழைக்கப்படும், அஸ்ஸாம் கனபரிஷத் ஆட்சிக்கு வர உதவியது. ஆனாலும் கூட அவர் கள் ஆட்சிக்கு வந்த பிற்பாடு, மத்திய ஆளும் வர்க்கத் தின் ஒரு அங்கமாக ஆகி விட்டார்கள் என்ற குற்றச்
சாட்டிற்கு உள்ளானார் கள். அஸ்ஸாம் மாநி லத்தில் பல்வேறு விதமான பழங் குடிகள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டு மாவட்டங்களில் வசித்து வரும், கரீபி ஆங்லாங் பழங்குடியினர், போர் குணமிக்க அறுதியிடும் தன்மை கொண்ட வர்கள்.
அவர்கள் தங்களு டைய சுயாட்சி உரிமை களை பெறுவதற்கு, ஏ.எஸ்.டி.சி. என்றழைக் கப்படக் கூடிய, சுயாட்சி மாநில கோரிக்கை குழு ஒன்றை அமைத்தார்கள். அந்தக் குழுவினர் நக்சல் பாரி புரட்சியாளர்களால் வழிகாட்டப் பட்டார்கள். அந்த ஏ.எஸ்.டி.சி. சார்பாக நாடாளுமன்றத்திற்கு, காங்கிரஸ் கட்சியையும், ஏ.ஜி.பி. கட்சியையும் எதிர்த்து நின்ற வேட்பாளர் வெற்றி பெற்றார். அதே போல கரீபி ஆங்லாங் பகுதியைச் சேர்ந்த 4 சட்டமன்றத் தொகு திகளுக்கும், ஏ.எஸ்.டி.சி. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இவ்வாறு தேர்தல் முறையின் மூல மாகவும், ஜனநாயக போராட்ட இயக்கங்களின் மூலமாகவும் போராடிப் பார்த்த, கரிபீ ஆங்லாங் பழங்குடி மக்கள் தங்களது விடுதலை லட்சியங்களை அடையவில்லை என உணர்ந்தார்கள். அதன் பிறகு அங்கே உருவானது தான் யு.பி.டி.எஸ். என்ற அமைப்பு. அதுவும் தனது ஆயுதப்போராட்டப் பாதையைக் கைவிட்டப் பிறகு உருவானதுதான் கே.எல்.என். எல்.எஃப். என்ற அமைப்பு. அதுவும் கூட இப்போது தனது ஆயுதப் போராட்டப் பாதையை கைவிட்டுள் ளது.
மேற்கண்ட நிகழ்வு களிலிருந்து நமக்குப் புரிவதெல்லாம், ஆயுதப் போராட்டப் பாதையும், அரசியல் போராட்டப் பாதையும், மாறி மாறி அந்தப் பகுதியில் எடுக்கப் பட்டுள்ளது என்பததான். தமிழ்நாடு தனிநாடு என்ற கோரிக்கையை கைவிடும் போது அண்ணா கூறிய சொற்கள்தான் நினைவுக்கு வருகிறது. தனிநாடு கோரிக்கை இப்போது கைவிடப்பட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்பது தான் அன்று அண்ணா குறிப்பிட்ட செய்தி. அதே போல அஸ்ஸாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மக்கள் இயக்கங்கள் வளர்ந்தன. தேர்தல் அரசியலில் நுழைந்து விட்ட அந்த கட்சி சார்பற்ற மக்கள் இயக்கம், ஒரு அரசியல் கட்சியாக மாறியது. அதன் பிறகு மக்களது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. அதுவே அஸ்ஸாம் முழுமைக்கான விடுதலையை, ஆயுதப் போராட்டம் மூலம் பெறுவ தற்கான அமைப்பை தோற்றுவித்தது. அந்த அமைப்பும் கூட பல்வேறு நிர்ப்பந்த வேலைகளை செய்தாலும், தொடர்ந்து வெற்றி பெற முடிய வில்லை. அதற்குள் அஸ் ஸாம் மாநிலத்திற்குள் வாழுகின்ற பல்வேறு பழங்குடிகள், தங்களது சுயாட்சிக்கான போராட் டங்களை உருவாக் கினார்கள். அதுவே கரீபி ஆங்லாங் பகுதியில், ஜனநாயக இயக்கமாக வளர்ந்து, அதன் மூலம் மாவட்ட சுயாட்சியைப் பெற்றார்கள். அதன் மூலமும் கரீபி பழங்குடி மக்களுக்கான உரிமைகள் கிடைக்காததனால், புதிய அமைப்புகள் தோன்றி, ஆயுதப்போராட்டங் களை நடத்தினார்கள். இப்போது அவர்களும் தங்களது போராட்ட முறையை மாற்றிக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள் ளது.
இதில் அடிப்படையாகப் புரிய வேண்டிய செய்தி ஒன்று இருக்கிறது. அதாவது பழங்குடி மக்களும், சிறிய தேசிய இனங்களும் தங்களது சுயாட்சியையும், சுய அதிகாரத்தையும், உரிமை களையும் நிலவுகின்ற அரசாட்சி அமைப்புக்குள் பெற முடியாமல், திக்கு முக்காடிப் போகிறார்கள். அதன் மூலம் மறுக் கப்பட முடியாத தங்களது நீதியான கோரிக்கை களுக்காக, பல்வேறு போராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டு, உரிமைப் போராட்டத்தை தொடர்கிறார்கள். அதில் அரசியல் போராட்டம், ஆயுதப் போராட்டமாக மாறுவதும், ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்டமாக மாறு வதும் இடையில் நடக்கக் கூடிய வழிமுறையே தவிர, போராட்ட இலக்கை கைவிட்டதாக பொரு ளல்ல. இதுவே நாம் இந்தியாவிலும் கற்றுக் கொண்டிருக்கும் பாடம்.

Friday, February 12, 2010

தென்னிலங்கையில் ஆயுதப் போர் வெடிக்குமா?

இலங்கைத் தீவில் நடந்த முடிந்த அதிபர் தேர்தல், புதிய அணி
சேர்க்கைகளை உருவாக் கிய அதே நேரத்தில், புதிய பிளவுகளையும் உரு வாக்கியுள்ளது. அதிபர் ஆட்சி அல்லது நாடாளு மன்ற ஆட்சி என்ற தளத்தில் அந்த பிளவுகள் வெளிப்பட்டுள்ளன. அதிபராக முதலில் மகிந்த ராஜபக்சே போட்டியிடும் போது, அவர் சந்திரிகாவை ஓரங்கட்டினாலும், ஜனத விமுக்தி பெரமுனாவை தனது கூட்டணிக்கட்சியாக சேர்த்துக் கொண்டார். அப்போது ஜே.வி.பி.க்கு இலங்கை அரசாட்சியை ஒற்றையாட்சி என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் தான் அழுத்தமாக இருந்தது. அதை மகிந்தா ஏற்றுக் கொண்டார். அதையே அவர் தனது தேர்தல் வியூகத்திற்கும் பயன் படுத்தினார். மகிந்தாவை எதிர்த்து ஐ.தே.க. தலை வர் ரணில் விக்ரம சிங்கே அப்போது அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டார். ரணில் அதிகமாக தமிழர் வாக்குகளை எதிர்பார்த்து அந்த தேர்தலில் ஈடுபட் டார். அப்போது வன்னிப் பகுதியில் தமிழ் அர
சாங்கத்தை நடத்தி வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பு வேறு பட்டு சிந்தித்தது. புலிகள் அமைப் பிலிருந்து கிழக்கு மாகாண தளபதி கருணாவையும், கருணாவுடன் 5,000 போராளிகளையும் பிரித்து, புலிகள் அமைப்பை
உடைத்தது ரணில் விக்கிரம சிங்கே தான் என்ற கருத்து, ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆழமாக பதிந்திருந்தது. அதனால் தமிழ் ஈழ ஆர்வலர்களின் விருப்பம், தேர்தலில் ரணிலுக்கு சாத கமாக இல்லை. போரை நடத்திக் கொண்டிருந்த மகிந்தாவும், ஒற்றையாட்சி அரசியலைப் பேசிக் கொண்டிருந்தார். ஆகவே இரண்டு பேருக்குமே வாக் களிக்க முடியாது என்ற நிலையில், ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அந்த அதிபர் தேர்தலைப் புறக் கணித்தார்கள். அதன் காரணமாகவே மகிந்தா வெற்றி பெற்றார். மகிந்தா வின் சர்வாதிகார ஆட்சியை பார்த்தவர்கள், தமிழர்கள் தேர்தலை புறக்கணித்தது தவறு என்றும், அந்த தவறினால் தான் மகிந்தா வெற்றி பெற்றார் என்றும், அந்த தவறை செய்தவர்கள் விடுதலைப்புலிகள் தான் என்றும் விமர்சனம் செய்து வந்தார்கள்.
இப்போது 2வது முறை யாக அதிபர் தேர்தலில் மகிந்தா நின்றார். இந்த முறை அவரை எதிர்த்து பொது வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத் தினார்கள். மகிந்தாவை சென்ற அதிபர் தேர்தலில் ஆதரித்து வேலை செய்த ஜே.வி.பி., இந்த முறை மகிந்தாவை எதிர்த்து பொன்சேகாவை ஆதரித் தது. இப்படிப்பட்ட அணி சேர்க்கை மாற்றம் தென் னிலங்கையில் ஏற்பட்டது என்றால், வடக்கிலும், கிழக்கிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற, தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப் பினர்கள், பொன்சேகாவை ஆதரித்தார்கள். அதனாலேயே தமிழர்கள் வாழும் வடக்கிலும், கிழக்கி லும், கொழும்பிலும், மலையகத்திலும், பொன்சேகாவிற்கே வாக்குகள் விழுந்தன. இதுவும் கூட ஒரு அரசியல் அணி சேர்க்கை என்பதாகவே எடுத்துக் கொள்ளப்படவேண்டும். இப்போது தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் பொன்சேகாவை கைதா அல்லது கடத்தலா என்றே தெரியாத அளவுக்கு, ராணுவ காவல் துறை மூலம் மகிந்தா செயல் பட்டுள்ளார். அதுவே தென்னிலங்கையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்சேகாவிற்கு ஆதர வாக தெருவில் இறங்கி போராடியவர் கள் மீது, மகிந்தா ஆதரவாளர் கள் தாக்கியிருக் கிறார்கள். இத்தகைய போராட்டங் களும், தாக்குதல்களும் தொடரும் என்று தெரி கிறது.
தமிழர்கள் மத்தியில் உலகம் எங்கிலும் ஒரு விவாதம் நடந்து கொண்டி ருக்கிறது. ராஜபக்சே அர சாங்கத்தால், கைது செய் யப்பட்ட பொன்சேகா ஏற்கனவே தமிழருக்கு எதிரான போரில், மோசமாக நடந்து கொண்டதற்கு இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்ப தாக ஒரு கருத்து உலாவிக் கொண்டிருக்கிறது. இந்த கருத்து, அதிபர் தேர்தல் நேரத்திலேயே வெளிவந்த சிந்தனைப் போக்குதான். அதாவது ராஜபக்சேயும், பொன்சேகாவும் போட்டியிடுகின்ற ஒரு தேர்தலில், இருவரை யுமே தமிழர்கள் ஆதரிக்கக் கூடாது என்பதுதான் அந்த கருத்து. இருவரும் சேர்ந்து தான் ஒரு இன அழிப்புப் போரை, தமிழர்கள் மீது நடத்தினார்கள். அந்தப் போரை நடத்துவதற்கான அனைத்து திட்டங் களையும் உருவாக்கி, அந்நிய நாட்டு உதவிகளை யும் வாங்கிக் கொண்டு, அரசியல் முடிவுகளை செய்தது மகிந்த ராஜபக் சேயின் கும்பல் என் பதால், தமிழர்கள் வாக்கு மகிந்தாவிற்கு ஆதரவாக போடப்பட முடியாது. அதே சமயம் மகிந்தாவை எதிர்க்கிறேன் என்ற பெய ரில் நிற்கின்ற பொன்சேகா, நேரடியாக வடக்கு மாகாணத்தில் சிங்களப் படைக்கு தலைமை எடுத்து நின்று, தமிழர்களுக்கு எதிராக போர் புரிந்தார் என்பதனால் அவருக்கும் தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்பதே அந்தக் கருத்து. மேற்கண்ட கருத்துக்கு ஏதுவாக சிவாஜிலிங்கமும், டாக்டர் விக்ரமபாகு கருணா ரத்னேயும் சேர்ந்து நின்று போட்டியிட்டார்கள். அவர்களது பிரச்சாரம் முக்கிய இரு வேட்பாளர் களான, ராஜபக்சேயையும், பொன்சேகாவையும் போர் வெறியர்களாக சித்தரித்தது.
பொன்சேகாவை பொருத்தவரை அவர் எந்த விதத்திலும், தமிழர்களுக்கு சாதகமாக போர் நேரத்தில் சிந்தித்தது இல்லை. அப்பாவி தமிழர்கள் படு கொலையானதற்கும், தமிழ் போராளிகள் மீது ரசாயன குண்டுகளைப் போட்டு, படுகொலை செய்வதற்கும், தமிழ் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளானதற்கும், சிங்கள ராணுவம்தான் பொறுப்பு எனும் போது, அந்த ராணுவத்திற்கு தலைமை தாங்கிய
சரத் பொன்சேகாதான் நேரடியான பொறுப்பு என்ற அழுத்தமான கருத்தை அவர்கள் வெளிப் படுத்துகிறார்கள்.
அதே சமயம் தமிழின அழிப்புப் போர் நடை பெறும் நேரத்தில், ராணு வத் தளபதி சரத்பொன்சேகா, கூறிய வார்த்தை உலக மெங்கிலும் தமிழர்கள் மத்தியிலும், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் பிரச்சினையை கிளப்பியிருந்ததை, இப்போது நினைவு படுத்த வேண்டியிருக்கிறது. அதாவது இலங்கைத் தீவு, சிங்களர்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும், மற்ற வர்கள் அங்கே வாழலாம்; ஆனால் உரிமை கேட்கக்கூடாது என்றும், பொன்சேகா கூறியதை இப்போது நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. அப்படி கூறிய பொன்சேகாவிற்கு, தமிழர்கள் மட்டுமே பெரும்பான்மையாக வாக்களித்திருப்பது கவனிக்கத்தக்கது. அதற்கு காரணமாக அமைந்ததும், அதிபர் தேர்தல் நேரத்தில் பொன்சேகா உதிர்த்த உறுதிமொழிகள்தான். அந்த உறுதிமொழிகளில், தமிழர் பகுதிகளை பாதுகாப்பு பகுதிகளாக அறி வித்திருப்பதை நீக்குவேன் என்றும், ராணுவத்தை அந்த பகுதிகளிலிருந்து திரும்ப பெறுவேன் என்றும், முள்வேலி முகாம்களை முழுமையாக திறந்து விடுவேன் என்றும், கைது செய்யப்பட்டவர்களை போராளிகள் உட்பட விடுதலை செய்வேன் என்றும், கடத்தப் பட்டவர்களில் மரண மடைந்தவர்கள் குடும்பத் திற்கு நட்டஈடு தருவேன் என்றும், கூறிய வாக்குறுதி கள்தான் தமிழர்களை ஈர்த்தது. போர் நேரத்தில் கண்டபடி தமிழர்களுக்கு எதிராகப் பேசிய, பொன்சேகா தேர்தல் நேரத்தில் மாற்றிப் பேசியதுதான் அதி சய நிகழ்வாக நடந்தது.
இப்போது தென்னிலங் கையில் பொன்சேகாவின் பெயரால் கொந்தளிப்பு தொடங்கியிருக்கிறது. இந்த கொந்தளிப்பிற்கு ஒரு வரலாறு உண்டு. ராஜபக்சே குடும்பத்தினர் பொருள் சேர்ப்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள் என்று தென்னிலங்கையில் உள்ள ஏழை சிங்கள மக்கள் எண்ணிப் பொரு முகிறார்கள். ஜனநாயக ரீதியாக செயல்பாடுகள் இல்லை என்ற தாக்கம் தென்னிலங்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அவர்களை துன்புறுத்துகிறது. ஜே.வி.பி. இப்போது கடும் கோபத்தில் இருக்கிறது. அவர்களுடைய
செல்வாக்கு பகுதிகளில், இளைஞர்களும், மக்களும் பெரிய அளவிலான மக்கள் எழுச்சிக்கு, தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜே.வி.பி.யும், ஐ.தே.க.வும் அரசு ஊழியர்களை யும், ராணுவத் தினரையும் நோக்கி கலகம் செய்யும்படி அறைகூவல் விடுகின்றனர். தவறான கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டாம் என்று வெளிப்படையாக கூறுகின்றனர்.
இன்னொரு ஆயுதக் கிளர்ச்சி தென்னிலங் கையில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜே.வி.பி. நடத்திய ஆயுத கிளர்ச்சி, 1971ம் ஆண்டி லும், 80களிலும் தென்னிலங் கையை நிலைகுலைய வைத்தது. அதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்களும், இளம் பெண்களும் ராணுவத்தால் அநியாயமாகக் கொல் லப்பட்டனர். அத்தகைய எழுச்சி மீண்டும் எழலாம் என்ற அறிகுறிகள் தென் படுகின்றன. அதனால்தான் ரஷ்யாவிடம் சென்று 300 மில்லியன் டாலர் பெறு மான ஆயுத உதவியை ராஜபக்சே பெற்றுள்ளார். சிங்கள தேசத்தின் நாட்டுப்பற்றாளர்கள் இந்த முறை எழுவார்கள். சர்வாதிகாரத்திற்கு எதிராக உழுவார்கள். இலங்கைத் தீவிலும் ஒரு ஜனநாயக வெளிச்சம் பிறக்க உதவுவார்கள். இப்படி ஒரு எதிர்பார்ப்பு சில ஜன நாயக உணர்வாளர்கள் மத்தியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

Thursday, February 11, 2010

தமிழில் பாட காஞ்சியில் தடையா?

சமீபத்தில் காஞ்சி மாவட்டத்தில், கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வார் கோவிலுக்குள் தமிழில் இறைவனைப் பாட தடை செய்யப்பட்டது என்ற செய்தி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் இருந்த பார்ப்பனக் குருக்கள், தமிழில் பாட விடாமல் தடுத்திருக்கிறார்கள். இதே போல சென்ற ஆண்டு, சிதம்பரம் நடராசர் கோயிலில் தீட்சிதர்கள், தமிழில் பாடிக்கொண்டு உள்ளே சென்ற ஆறுமுகசாமி என்ற சிவாச்சாரியாரைத் தடுத்து, அடித்து விரட்டியது தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு தான் சிதம்பரம் கோவிலின் தீட்சிதர்கள் பற்றிய தில்லுமுல்லுகள், ஊடகங்கள் மூலம் உலகுக்கு அரங்கேறின. அதன் பிறகுதான் அந்த கோவிலில் தமிழ் பக்தர்கள் போடுகின்ற பணத்தையெல்லாம், உண்டியலில் இருந்து அள்ளிக் கொள்பவர்கள் தீட்சிதர்கள் என்ற செய்தி வெளியே வந்தது. அதையொட்டி தமிழக அரசும் அந்த சிவன் கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வந்தது. கொண்டு வந்த கையோடு அரசே ஒரு உண்டியலையும் பெரியதாக வைத்தது. இது பொறுக்காத தீட்சிதர்கள் அங்கும், இங்கும் ஓடி கடைசியாக நீதிமன்றத்திற்கும் சென்றார்கள். சென்னை உயர்நீதிமன்றமும், தீட்சதர்களின் மண்டையில் குட்டியது. சிதம்பரம் கோயிலை சுற்றியுள்ள நிலங்கள் எல்லாம், தீட்சிதர்களால் பிளாட் போட்டு விற்கப்பட்டது என்ற செய்தி இன்னமும் அம்பலத்திற்கு வரவில்லை. அதற்கான விசாரணைக் குழுவும், அதனாலேயே அரசால் போடப்படவில்லை. இது சைவக் கோயிலில் நடந்த திருவிளையாடல் என்றால், மேற்கண்ட கூரத்தாழ்வார் கோயில் விளையாட்டு, வைணவக் கோயிலில் நடந்த சேட்டை.
சைவமோ, வைணவமோ, அத்தகைய கோயில் களை தங்கள் கைகளுக்குள் பிடித்து வைத்திருப்பது ஒரு சிறிய சமூகம். அவர்கள் இறைவனிடம் நேரடி யாகப் பேசுவார்கள் என்றும், இறைவனின் மொழி கிருந்தம் என்றும், சமஸ்கிருதத்தைத் தெரிந்தவர்கள் தான், இறைவனிடம் பேசமுடியும் என்றும், இன்னமும் நமது தமிழ் பக்தர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் மொழி தமிழ்நாட்டு மக்களின் தாய்மொழி. அப்படி இருக்க தங்கள் தாய்மொழியை மட்டுமே அறிந்த பெருவாரியான தமிழ்மக்கள், கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்றாலும், நீதிமன்றத்திற்கு நீதி கேட்டு அலைந்தாலும், அங்கெல்லாம் தமிழ் பேசப்பட்டால் மட்டும்தான், அவர்களும் அந்த நிகழ்ச்சியில் புரிதலோடு பங்கு கொள்ள முடியும். இது ஏனோ நீதி தேவதைகளுக்கும், கோயில் சாமி களுக்கும் புரியவில்லை. இரண்டு இடங்களிலும் நமது தமிழ் மக்கள், வாய்பேசாத மௌனிகளாக நின்றுவிடுகிறார்கள். அவர்களுக்கும், சாமிக்கும் இடைவெளி அதிகமாகிறது. அவர்களுக்கும், நீதிதேவதைக்கும் இடையில் பெரும் சுவர் எழுப்பப்படுகிறது. இதனால் சிறிது சிறிதாக, சாமி நம்பிக்கை அற்றவர்களாகவும், நீதிமன்றத்தை நம்பாதவர்களாகவும் அந்த தாய்மொழி மட்டுமே தெரிந்த அப்பாவி மக்கள், ஆகிவிடுகிறார்கள்.
அது கூட ஒரு வகையில், இந்த இரண்டு நிறுவ னங்களையும் தங்கள் நலனுக்கு பயன்படுத்த விரும்பும் சக்திகளுக்குப் பயனுள்ளதாகப் போய் விடுகிறது. சிதம்பரம் நடராசர் கோயிலில், தங்கள் சொந்த லாபத்திற்காக தீட்சிதர்கள், தமிழில் பாட அனுமதிக்கவில்லை என்று புரிய முடிகிறது. ஆனால் காஞ்சி கூரத்தாழ்வார் கோயிலில், தமிழில் பாசுரம் பாட மறுக்கப்பட்ட அணுகுமுறை, மேலும் சில கேள்விகளை எழுப்புகிறது. நம்பிள்ளை ராமானுஜ ஆச்சாரியார் என்பவர் தலைமையில் ஆண்டாள் திருப்பாவையைப் பாடிக் கொண்டு, சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஹரி மடத்து பக்தர்கள், கூரத்தாழ்வார் கோயில் மண்டபத்திற்குள் நுழைந் திருக்கிறார்கள். அந்த வைணவக் கோயிலின் முக்கிய குருக்களாக இருக்கின்ற பார்ப்பனர்களான கண்ணன் பட்டாச்சாரியாரும், பார்த்தசாரதி பட்டாச்சாரியரும் அவர்களைத் தடுத்திருக்கிறார்கள், பிடித்து வெளியே தள்ளியிருக்கிறார்கள். தமிழ் பாசுரம் பாடுவதால் ஆச்சாரம் கெட்டு விடும் என்றும் கூறியிருக்கிறார்கள். இது முதலில் தமிழ்நாட்டில், தாய் மொழி தமிழில், ஆண்டவனைப் புகழ்ந்து பாடல் பாடுவதற்கு தடை என்ற மனித உரிமை மீறலாக வருகிறது. அதையும் தாண்டி, கூரத்தாழ்வார் கோயில் என்றால் என்ன என்ற வரலாற்றிற்குள் போய் நாம் பார்க்க வேண்டியுள்ளது.
அருகே இருக்கும் திருப்பெரும்புதூரில் கி.பி. 1017ல் பிறந்தவர் ராமானுஜர். இந்த ராமானுஜர் வைணவ மதத்தில் ஒரு முக்கியத் தூணாகக் கருதப்படுகிறார். அவர் பார்ப்பனர் அல்லாத சாதியினரையும், முப்பிரி நூல் மாட்டிவிட்டு, பார்ப்பனராக மாற்றினார் என்பது வரலாறு. திருநாராயணபுரம் கோயிலில், ராமானுஜர் தாழ்த்தப் பட்ட மக்களை, கோயிலுக்குள் முதன்முறையாக அனுமதித்தார் என்பது புரட்சிகரமான செயலாக, அன்றைய காலத்தில் பார்க்கப்பட்டது. தாழ்த் தப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்து பார்ப்பனர்களாக ஆக்கிய ராமானுஜரின் முதல் சீடராக கூரத்தாழ்வார் இருந்தார். சைவ சமயத்து சோழ மன்னன் இது கண்டு பொறுக்க முடியாமல், ராமானு ஜரை பிடிப்பதற்காக தேடி இருக்கிறான். அப்போது திருநாராயணபுரத்திலேயே 12 ஆண்டுகளை ராமானுஜர் மறைந்திருந்து கழித்திருக்கிறார். சோழ மன்னனின் மறைவிற்குப் பிறகு, அவரது சீடர்கள் வேண்டுகோளுக்கிணங்க, பாதுகாப்பாக ஸ்ரீரங்கம் வந்திருக்கிறார். ராமானுஜரை காட்டிக்கொடுக்கச் சொல்லி, சோழ மன்னன், கூரத்தாழ்வாரை நிர்ப்பந்தித்திருக்கிறான். காட்டிக் கொடுக்க மறுத்த கூரத்தாழ்வாரின் கண்களையும், பெரிய நம்பியின் கண்களையும், மன்னர் உத்தரவுப்படி பிடுங்கி இருக்கிறார்கள் என்ற செய்தி ஊருக்கு திரும்பிய ராமானுஜருக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. கூரத்தாழ்வாரின் மகனுக்கு, ராமானுஜர் பராசரன் என்று பெயர் வைத்திருக்கிறார். அவர்தான் பின்னாளில் அறிவார்ந்த தூணாக, வைணவத்திற்கு உருவாகியிருக்கிறார். அவரை பின்னாளில் பராசரர்பட்டர் என்று அழைத்திருக்கிறார்கள். ராமானுஜர் கி.பி. 1137 வரை உயிர்வாழ்ந்து தனது 120வது வயதில் மறைந்திருக்கிறார்.
அத்தகைய கூரத்தாழ்வாரின் கோயில் என்பது, சாதி மறுப்பு கோயிலாகவும், தாய்மொழிப் பாடல்களை அனுமதிக்கும் கோயிலாகவும் இருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி, அங்கே திருப்பாவை பாடிச்சென்ற போதுதான், பட்டாச்சாரியார்களின் தடை என்ற அடாவடி நடந்திருக்கிறது. திருப்பாவை 12 வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூலாகும். வைணவ பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரதிவ்யப் பிரபந்தத்தின் 473ம் பாடல் முதல் 503ம் பாடல் வரை திருப்பாவைப் பாடல் கள் என்று பெயர்.
அத்தகைய திருப்பாவைப் பாடல்களை பாடி வந்த பக்தர்கள் தான் கூரத்தாழ்வார் கோயிலில் தடுக்கப்பட்டுள்ளனர். இந்தத் தடை பற்றி பாதிக்கப்பட்ட நம்பிள்ளை ராமானுஜ ஆச்சாரியார், அந்த வட்டார வருவாய்த் துறை ஆய்வாளரிடமும், காவல்துறை ஆய்வாளரிடமும், கிராம நிர்வாக அலுவலர்களிடமும் போய் முறையிட்டு இருக்கிறார்கள். அவர்களும் தடை விதித்த பார்ப்பனர்களுக்கு சாதகமாகவே பேசி இருக்கிறார்கள். இந்தச் செய்தியை வாரம் இருமுறை ஏடு வெளியிட, முதல்வரை நிறுவனராகக் கொண்ட நாளேட்டில் தெளிவான கட்டுரையாக எழுதியிருக் கிறார்கள்.
ஆட்சியாளர்கள் விரும்பாவிட்டாலும், அவர்க ளது ஆதரவாளர்கள் ஊடகங்களில் பட்டியலிட்டு அம்பலப்படுத்தினாலும், சாதிய வெறிகளும், தமிழ் மொழி எதிர்ப்பு நடவடிக்கைகளும் இன்னமும் நமது வழிபாட்டுத் தலங்களில் தொடர்கின்றன. இதற்குக் காரணம் என்ன? சமூக ரீதியான வன்முறை என்பது, சட்ட, திட்டங்களுக்கோ, ஆட்சியாளர்களுக்கோ அடங்குவதில்லை. அதை அடக்குவதற்கோ, அகற்றுவதற்கோ, மக்கள்தான் முன்முயற்சி எடுக்க வேண்டும்.